வெள்ளி, 30 ஜூன், 2017

மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள மெய் வழிச் சாலை ஆலயம் !படங்கள் கவிஞர் இரா .இரவி !

மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள மெய் வழிச்  சாலை ஆலயம் !படங்கள் கவிஞர் இரா .இரவி !
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழிகள்.

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழிகள்.

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழிகள்.

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழிகள்.

வெளிச்ச விதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : குறள் ஒலி –மாத இதழ் பெங்களூரு ஜுன் 2017.

வெளிச்ச விதைகள்
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி


மதிப்புரை : குறள் ஒலி –மாத இதழ் பெங்களூரு  ஜுன் 2017.

வெளிச்ச  விதைகள்  !

வெளியீடு ;வானதி   பதிப்பகம்  !

190  பக்கம் .  விலை ரூபாய்  120.
23. தினதயாளு தெரு 
தியாகராயர் நகர் 
சென்னை 600 017.
பேச  044- 24342810 /  24310769
மின்  அஞ்சல்  vanathipathippakam@gmail.com
*******
      பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ், என்பது பழமொழி.  நூலாசிரியருக்கு இதுவும் பதினாறாவது தான்.  ஆம் இந்நூல், இவரது பதினாறாவது படைப்பு.  துளிப்பாவில் நீச்சலடிக்கும் பெரிய மீன்களில் இவரொரு சுறாமீன்.  ஆம். இணைய அஞ்சலைத் திறந்தால் இவரது துளிப்பா தான் வரவேற்கும்.  அந்த அளவிற்கு துளிப்பாவில் தோய்ந்தவர்.  அந்த வகையில் ‘வெளிச்ச விதைகள்’ அதே துளிப்பாக்களால் மலர்ந்த மலர்.  மலரின் மணக்கும் சில பாவரிகள் :

      ‘மாதா பிதா குறு மொத்தம் மனைவி !
      மனித வாழ்வில் பெருந்துணை பெண்கள்’ 
;
இப்படி குடும்பத்தின் ஆணிவேராக விளங்கும் இல்லத்தரசியைப் பாடுகிறார்.

      ‘தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழி இல்லை,
      தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழி மொழியே இல்லை’

ஆகா, தமிழுக்கு இதைவிட பெருமை வேறென்ன வேண்டும்.

      நிலவைப் பாடும் போது ;

      ‘உன்னைப் பாடாத கவிஞர் இல்லை
      உன்னைப் பாடாதவர் கவிஞரே இல்லை’ ;

- ஆம், நிலவைப் பார்க்காதவர்களும் இல்லை, நிலவைப் பாடாதவர்களும் இல்லை.

      அறிஞர் அப்துல் கலாம் அவர்களைப் பாடும் போது ;

      ‘முதற்குடிமகன்களின் முதற்குடிமனானவர்
      மொத்தக் குடிமகன்களின் உள்ளம் வாழ்பவர்’

என ஒன்பது பெருந்தலைப்புகளில் எண்ணிய கருத்துகளை எண்ணாமல் வழங்கியுள்ளார் கவிஞர்.

      வாசகர்களே, ‘வெளிச்ச விதைகள்’ உங்களுக்காக கவிஞர் விதைத்துள்ளார்.  இதனை நீங்கள் வாங்கி உங்கள் உள்ளங்களில் விதைத்தால் தான் நாளை இதுபோன்ற நிழல் தரும் மரங்களும், செடிகளும் மலர்களோடு பூத்துக் குலுங்கும். வாங்கிப் படித்து மகிழுங்கள்.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

வியாழன், 29 ஜூன், 2017

சின்னச்சின்னக்கதைகள்! இரா .இரவி !

சின்னச்சின்னக்கதைகள்!   இரா .இரவி !
கொள்ளி போட பெற்ற மகன் ஈமச்சடங்கை கணினியில் பார்த்து அழுதான் அமரிக்காவில்
உனக்காக உயிரையே தருவேன் என்ற காதலன் அவன் திருமண அழைப்பிதழ் தந்தான்
தாய்ப்பால் தரவேண்டியவள் கள்ளிப்பால் தந்தாள் தான் பட்ட கஷ்டம் தன் மகள் அடைய, வேண்டாம் என்று
அழுக அழுக பள்ளியில் சேர்த்தேன் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு செல்கிறான் மகன்
பட்டம் வாங்கி விட்டு கனவு கண்டவன் டாஸ்மார்க்கில் பிராந்தி விற்கிறான்
இறந்த பின்னும் இயற்கையை ரசிதுப்பார்தான் விழிக்கொடை தந்தவன்

பெண்ணே அழாதே பெண்ணே !கவிஞர் இரா .இரவி

பெண்ணே அழாதே பெண்ணே !   கவிஞர் இரா .இரவி

பெண்ணே அழாதே பெண்ணே !
அழப் பிறந்தவள் அல்ல நீ
ஆளப் பிறந்தவள்.நீ
பெண்ணாகப் பிறந்ததற்கு
கவலை கொள்ளாதே நீ
கர்வம் கொள் நீ
பெருமை கொள் நீ
அடிமை விலங்கை
அடித்து நொறுக்கு
அற்புதச் சிறகை
விரித்துப் பற.
கொட்டக்கொட்ட
குனிந்து போதும்
கொட்டும் கரம்
முறித்திடு நீ
இனி வெங்காயம்
நறுக்கும் போது கூட
அழவேண்டாம் .
இனி வெங்காயம்கூட
நறுக்க வேண்டாம் .
விழிகளில் கண்ணீர் நிறுத்து
இதழ்களில் புன்னகை ஏந்து
--

சிந்திக்க சில வரிகள் ! கவிஞர் இரா .இரவி

சிந்திக்க சில வரிகள் ! கவிஞர் இரா .இரவி
வெள்ளை வேட்டியைவாயில் வைத்து
சிகரெட் புகையை ஊதுங்கள் வேட்டியில்
கருப்பாக கறை படியும் .அந்தக் கறை
எத்தனை முறை துவைத்தாலும் ,
வெளுத்தாலும் போகாது .அது போலதான்
நுரையீரலிலும் கறை படிந்து நோய் பெருகும் .
சிகரெட்புகைத்து விட்டு படுத்தால்தான்
தூக்கம் வரும் என்பார் ஒரு நண்பர் ..
இரவுப் பணி புரியும் ஒரு நண்பர் .
சிகரெட் புகைத்தால்தான் தூக்கம்
வராமல் வேலை செய்ய முடியும் என்பார்.
மனம்தான் காரணம் ஒரே சிகரெட்
ஒருவருக்கு தூக்கம்
ஒருவருக்கு விழிப்பு எப்படித் தரும் .?
சிந்தியுங்கள் சிகரெட் விடுங்கள்

கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா .இரவி !

கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா .இரவி !
மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்
தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள்
இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள்
இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள்
புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள் ஆசிரியர்கள்
புரியாததைப் புரிய வைக்கும் புனிதர்கள் ஆசிரியர்கள்
கற்களை சிலைகளாக செதுக்குவது ஆசிரியர்கள்
களிமண்களை பொம்மைகளாக வடிப்பது ஆசிரியர்கள்
முட்டாள்களையும் அறிவாளிகள் ஆக்குவது ஆசிரியர்கள்
முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுபவர்கள் ஆசிரியர்கள்
மாணவர்களை குழந்தைகளாக நினைப்பது ஆசிரியர்கள்
மாணவர்களை மாவீரர்களாக மாற்றுவது ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விதைப்பது ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு எழுச்சியை ஊட்டுவது ஆசிரியர்கள்
ஆயிரம் விளக்குகளை ஏற்றும் அகல்விளக்கு ஆசிரியர்கள்
அறிவொளி ஏற்றிடும் அற்புத ஒளி ஆசிரியர்கள்
இந்தியாவே போற்றும் நல்மனிதர் அப்துல்கலாம்
இனியவர் அவர் போற்றுவது ஆசிரியர்கள்
பணிவுகள் பயிற்றுவிப்பது ஆசிரியர்பணி
பணிகளில் சிறந்த பணி ஆசிரியப் பணி
.

விடியவில்லை என்றவனே ! கவிஞர் இரா .இரவி!

விடியவில்லை என்றவனே !
கவிஞர் இரா .இரவி!

விடியவில்லை என்றவனே
விடிந்தும் நீ எழவில்லை
விழித்துப்பார் இளைஞனே
விடிந்தது விளங்கும்
கடிகார முள்ளைப்பார்
களைப்பின்றி ஓடுவதைப் பார்
சோம்பேறித் தனத்தை விடுத்து
ஓய்வின்றி உழைக்கப்பார்
எதிர் காலத்திற்குச் சேமிக்கும்
எறும்பின் சுறுசுறுப்பைப்பார்
மலர்களில் தேனை
எடுத்துச் சேமிக்கும் தேனீயைப்பார்
சுறுசுறுப்பாக மாறிப்பார்

லிமெரைக்கூ ) கவிஞர் இரா.இரவி!

லிமெரைக்கூ )
கவிஞர் இரா.இரவி!

கண்களுக்கு விருந்து சிலை
காண்போரை வியப்பில் ஆழ்த்தி விடும்
சிற்பியின் நுட்பமான கலை!

குறுகியது இளையோர் உள்ளம்
இமயம் முதல் குமரி வரை
பெருகுது முதியோர் இல்லம்!

நிகரற்ற உறவு அன்னை
உயிர் உள்ளவரை மறக்காதே
உயிராய் வளர்த்தாய் உன்னை

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
அம்பு இல்லா வில்லுக்கும்
மதிப்புண்டு
வானவில் !

பிரிய மனமில்லை
பிரித்தது காற்று
மரத்திலிருந்து இலை !

நதி நடந்ததால்
பளபளப்பானது
கூழாங்கல் !

சுமை அல்ல
உயர உதவும்
சிறகு !

பேசும் பேச்சை விட
வலிமையானது
மவுனம் !

பஞ்ச பூதங்களை
கொள்ளையடிக்கும் பூதம்
மனிதன் !

எடுத்தால் திருட்டு
நாமாக வழங்கினால்
வரதட்சணை !

முக நூலில் ஹைக்கூ போட்டி

 https://www.facebook.com/photo.php?fbid=1922038048060968&set=gm.307551209704241&type=3&theater

.
இனியவரீர்,, அனைவருக்கும் வணக்கம் பாவலர்களே
------------------------------------------------------
***********
*#தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நாளைய 30/6/17----1/7/17 நாளாம் போட்டி கவிதையின் #தலைப்பு_#மூங்கிலிலே_காற்றிசைக்கும்_காற்றலை
#நாளைய நடுவராக #கவிஞர்_இரா .இரவி அவர்கள் சிறப்பான ஹைக்கூ கவிதைகளை தேர்வு செய்வார்கள்
தங்களது # ஹைக்கூ கவிதைகளை ஒரே பின்னூட்டத்தில் பதிவிடுங்கள், வெற்றிக்கவிதைக்கான சிறப்பான சான்றிதழ் முகநூலில் வெளியிடப்பட்டு கௌரவிக்கப்படும்

# படத்திற்கேற்ற_ஹைக்கூ_வீதம்_எழுதலாம்_ஒரே_பின்னுட்டத்தில்
போட்டி விதிமுறைகள்
#####################
1. ஒருவர் #இரண்டு_ஹைக்கூ வீதம் எழுதலாம் ஒரே பின்னுட்டத்தில்
2.சான்றிதழில் பதிவதற்கான #நிழல்_படம் இங்கு இணைக்கவும்...உங்கள் விருப்பம்....படம் இல்லாவிட்டால் கவிதை தேர்வாகாது
3.#நிபந்தனைகளுக்கு ஏற்ப அமையாத ஹைக்கூ கவிதைகள் போட்டிக்குசேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.
4.எழுத்துப்பிழை இல்லா கவிதைகளுக்கு சான்றிதழ் கிடைக்கப்பெறும்
5..கவிதைப் போட்டி மாலை_6.00_மணியுடன் 1--7--17 முடிவுறும்
— J K Balaji மற்றும் 46 பேர் உடன்.

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது