ஞாயிறு, 31 டிசம்பர், 2017
சனி, 30 டிசம்பர், 2017
வெள்ளி, 29 டிசம்பர், 2017
" கவிக்கோ அப்துல் ரகுமான்" விருதை கவிமாமணி சி வீரபாண்டியத் தென்னவன் அவர்களும் வழக்கறிஞர் கவிஞர் பாண்டியராஜனும் வழங்கினார்கள்
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் நடந்த ஐம்பெரும் விழாவில் கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ கவிதைகள் பற்றி கருத்துரை வழங்கிமைக்கும் , ஹைக்கூ கவியரங்கத்தில்
ஹைக்கூ கவிதை வாசித்தமைக்கும் பாராட்டி"
கவிக்கோ அப்துல் ரகுமான்" விருதை கவிமாமணி சி வீரபாண்டியத் தென்னவன்
அவர்களும் வழக்கறிஞர் கவிஞர் பாண்டியராஜனும் வழங்கினார்கள்.
வியாழன், 28 டிசம்பர், 2017
ஆளுமை வளர்க்க ஆத்திசூடி! நூல் ஆசிரியர் : தம்பியண்ணா (ஆ. விசுவநாதன்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
ஆளுமை வளர்க்க ஆத்திசூடி!
நூல் ஆசிரியர் : தம்பியண்ணா (ஆ. விசுவநாதன்)
நூல் ஆசிரியர் : தம்பியண்ணா (ஆ. விசுவநாதன்)
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
102, வக்கீல் புதுத் தெரு, மதுரை-625 001.
1, P.S.G. கோவிந்தசாமி நகர், காமராஜர் சாலை, கோவை-15.
அலைபேசி : 99948 66277, 89402 70901.
பக்கம்: 96 விலை : ரூ. 30 (தனிப்பிரதி)
1, P.S.G. கோவிந்தசாமி நகர், காமராஜர் சாலை, கோவை-15.
அலைபேசி : 99948 66277, 89402 70901.
பக்கம்: 96 விலை : ரூ. 30 (தனிப்பிரதி)
******
நூல் ஆசிரியர் திரு.
விசுவநாதன், பழகுவதற்கு இனிமையானவர், இன்சொல் மட்டுமே எப்போதுமே பேசுபவர்.
தன்னம்பிக்கை வாசகர் வட்டத்திற்கு வந்து தன்முன்னேற்றப் பயிற்சி வழங்கியவர்.
தம்பியண்ணா என்ற புனைப்பெயரில் வடித்துள்ள கையடக்க நூல்.
இந்நூல் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் மனிதத் தேனீ
இரா. சொக்கலிங்கம் வெளியிட்டு மகிழ்ந்தார்கள்.
நூலிலிருந்து சிறு துளிகள் :
‘அன்பு
உருவமற்ற உணவு’ : உணவு நிறத்தால், மனத்தால்,
சுவையால், தட்பவெப்பத்தால், அடர்த்தியால் ஐந்து புலன்களுக்கும் மகிழ்ச்சி தருவது
போல. நம் அன்பிற்கு உரியவரை பார்ப்பது, அவர் சொல் கேட்பது, அவருடன் பேசுவது, அவரது
அருகாமை என எல்லா புலன்களுக்கும் அன்பு மகிழ்ச்சி தருகிறது. உண்ணத்தகாத (கருகிய,
அழுகிய, பழைய) உணவு போல அன்பிலும் சந்தேகம், அதீத சார்பு என ஒவ்வாத உரிய
பொழுதில், உரிய விதத்தில் பகிர்ந்து
மகிழ்வோம்! உருவமில்லாதது அன்பு.
உண்மை தான். உருவத்தை உருக்குலையாமல் காப்பதும்
அன்பு தான். அன்பின் அவசியத்தை, நேர்மையை நன்கு எடுத்துக்காட்டுடன் விளக்கி
உள்ளார். இது போன்ற வாழ்க்கைக்கு பயனுள்ள
வாழ்வியல் கருத்துக்கள் உள்ளன. நூலினைப் படித்துப் பார்த்து சிந்தித்து நம்மை
செம்மைப்படுத்திக் கொள்ள, செதுக்கிக் கொள்ள, சீர்படுத்திக் கொள்ள உதவிடும் நல்ல
நூல். நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்,
வாழ்த்துக்கள்.
ஆசையை ஒழுங்கு
செய்வோம் : பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன்ன வழியில் என்ன? ஏன்? எப்போது?
எங்கே? எத்தனை? எப்படி? யார்? என்ற கேள்விகளால் ஆசையை ஒழுங்கு செய்யலாம் என்று
எழுதி உள்ளார்.
ஒழுங்கற்ற ஆசை தான் பேராசை. இந்த பேராசை தான் அழிவிற்கு
வழிவகுக்கும் என்பதை உணர்ந்து, ஆசையை ஒழுங்கு செய்ய வலியுறுத்தியது சிறப்பு.
இன்றே நன்று : வாழ்க்கையில் நாளை, நாளை என்று நாளைத்
தள்ளாமல், இன்றே முயற்சி செய்வது நல்லது என்று விளக்கி உள்ளார்.
ஈடுபடுமுன்
இசைபடுங்கள் : ஒரு செயலை வேண்டா வெறுப்பாக செய்யாமல் ஈடுபாட்டுடன் செய்வது நல்லது என்பதை
உணர்த்தி உள்ளார்.
உரிமைக்குள்
கடமை : எளிய
எடுத்துக்காட்டுகளுடன் கருத்துக்களை விதைத்து உள்ளார்.
ஊக்குவித்தலே
உண்மையான உதவி :
பணம், பொருள் கொடுத்து உதவ முடியாத நிலையில் உள்ளவர்கள் குறைந்தபட்சம் நல்ல
சொல்லால் ஊக்குவித்தலே உதவி என்று உணர்த்தி உள்ளார்.
எளிமை எளிதல்ல : மிகையாகக் காட்டிக் கொள்ளும்
ஆற்றலை எளிமையாக இருக்கப் பயன்படுத்துங்கள். எளிமை இனிமை தரும் என்கிறார்.
ஏன் , என்ன? யார்? எப்படி? எந்த ஒரு
பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். இது போன்ற கேள்விகள் எழுப்பினால் கிடைக்கும்
விடைகள் தீர்வாக அமையும் என்பதை விளக்கி உள்ளார்.
ஐந்து ஐந்தாக
இருக்கட்டும் :
பையன் உணவு எடுத்துச் சொல்ல மறந்து விட்டான் 5% தான். இதன் விளைவாக கோபம்
கொண்டு மனைவியுடன் சண்டையிடுதல், தாமதமாகுதல் இப்படி தொடர்ச்சியாக 95% பதட்டத்தால் நடந்து
விடுகிறது. ஆகவே எதிலும் பதட்டப்படாமல்
நிதானமாக சிந்தித்து தீர்வு காண வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார்.
ஒப்பிடுதல்
ஒப்புக் கொள்ளுதல் : நாம்
ஒவ்வொருவரும் தனித்தன்மை ஆனவர்கள். பிறரோடு ஒப்பிட்டு வருந்த வேண்டாம், கவலை கொள்ள
வேண்டாம் என்பதை எளிமையாக எழுதி உள்ளார்.
ஓங்கி செய்க,
உணர்ந்து செய்க : எப்போதும் சரியானதை செய்கிறோம் என
உணர்கின்றோமோ, அப்போது தான் ஓங்கிச் செய்யும் மனநிலை வரும். முதலில் உன்னை நம்பு
என்கிறார்.
கட்டுப்படாமல்
இருக்க கட்டுப்படுத்தாமல் இருப்போம் : “உண்மையான தேவை கட்டுப்படுதலோ, கட்டுப்படுத்தலோ அல்ல,
பரஸ்பர பங்களிப்பே.
ஆம், உண்மை தான், நம் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த நாம்
விரும்புவதில்லை. அதுபோலவே நாமும் பிறர் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது
சிறப்பு என்பதை நன்கு விளக்கி உள்ளார்.
காலம் கருதுக : காலம் தவறாமை சிறந்த குணம்
எனினும் பயனாக்குதல் அதைவிட சிறப்பு. காத்திருக்கும் நேரத்தையும், பயனுள்ளதாக்க
முடியும் நல்ல நூல் படிக்கலாம்.
கிண்டலை கிரியாஊக்கி
ஆக்குவோம் :
கவனமாக பார்த்தால் சில தவிர்க்க வேண்டியது இருக்கும். அதை மட்டும் தவிர்த்து விட்டு நம் பணியை
ஓங்கிச் செய்வோம். கிண்டலை முழுமையாக புறக்கணித்து விடாமல், அதிலும் நம்மை
செம்மைப்படுத்திக் கொள்ள பயன்படும் சொற்கள் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
என்கிறார்.
கீழ் எவை
தெளிவோம் :
தேர்ந்தெடுக்கும் நூல்கள் பொழுது போக முதலில் கீழான ரசனைக்கு உட்பட்டால் நம் தரம்
மேலும் தாழும். தரமான நல்ல நூல்களை
மட்டுமே வாசிக்க வேண்டும். தரமற்ற நூல்களை தள்ளி வையுங்கள் என்று விழிப்புணர்வு விதைத்து
உள்ளார்.
குறைகளின் மீது
குறைவான கவனம் :
உண்மை தான். குறை உள்ள மனிதர்கள் உண்டு.
அந்தக் குறை பற்றியே கவலையோடு வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்காது. பதச்சோறாக சில மட்டும் மேற்கொள் காட்டி
உள்ளேன். இதுபோன்ற பல பயனுள்ள கருத்துக்கள் நூல் முழுவதும் உள்ளன.
வேண்டாததை
வேண்டாம் என்போம் :
தேவையற்றதை நீக்கியே ராக்கெட் மேலே செல்கிறது.
சுமை குறைய பயணம் இனிமை ஆகிறது.
வீணாக பொருட்களை வாங்க வேண்டாம்.
பயனற்ற உணவைத் தவிர்ப்போம். கடனை நிராகரிப்போம். தேவையற்ற பழக்கங்களுக்கு
வேண்டாம் எனச் சொல்ல பழகுவோம்.
இப்படி வாழ்வில் பயன்படக்கூடிய நல்ல கருத்துக்கள் நூல் முழுவதும்
உள்ளன. பாராட்டுக்கள்.தங்கைக்கோர் குழந்தை (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : எழுத்தாளர் உஷா முத்துராமன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
தங்கைக்கோர் குழந்தை (சிறுகதைகள்)
நூல் ஆசிரியர் : எழுத்தாளர் உஷா முத்துராமன்!
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
மணிமேகலை பிரசுரம் தியாகராயர் நகர் சென்னை 600017.
விலை 50 ரூபாய்
******
எழுத்தாளர் உஷா முத்துராமன் அவர்கள் திருநகரில் வாழ்ந்து வரும் இல்லத்தரசி.
முகநூலில் நல்ல கவிதைகள் படைத்து வரும் கவிதாயினி. காலை வணக்கத்தை கவித்துவத்துடன் வழங்கி வரும்
தோழி, மதிப்புரைக்காக இந்நூலை அனுப்பி இருந்தார்.
நூலை தனது பெற்றோருக்கு மட்டுமன்றி மாமனார், மாமியாருக்கும்
காணிக்கையாக்கி நன்றியைப் பதிவு செய்துள்ளார்.
கணவர் முத்துராமன், மகள் ராதிகா வைத்தியநாதன், பேரன் வருண்சுந்தரம் வரை அனைவருக்கும்
காணிக்கையாக்கி உள்ளார்.பல்வேறு இதழ்களில் பிரசுரமான சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .
எழுத்துலகில் தனி முத்திரை பதித்து வருபவரும், புதிய தலைமுறை
கல்வி வார இதழில் மிக நுட்பமான அறிவியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து
வருபவருமான என் முகநூல் நண்பர் எழுத்தாளர் ராஜேஸ்குமார் அவர்களின் அணிந்துரையும், எழுத்தாளர்
தேவிபாலாவின் வாழ்த்துரையும் மிக நன்று.
நூலின் தலைப்பிலான முதல் கதையே, “தங்கைக்கோர்
குழந்தை” சிந்தனை விதைக்கும் விதமாக உள்ளது. தன் தங்கைக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மையை
அறிந்து தனக்குப்பிறந்த இரட்டைக் குழந்தையில் ஒன்றை மனைவியின் சம்மதத்துடன்
தங்கைக்குத் தத்துக் கொடுக்கும் பாசமிக்க அண்ணன் கதை . மனிதாபிமானம் விதைக்கும் சிறந்த
சிறுகதை.
‘பார்வைகள்’ என்ற கதை, கண் தானம்
விழிப்புணர்வு விதைக்கும் கதை. விபத்தின் போது இறந்துவிட்ட ஓட்டுனரின் கண்
முதலாளிக்கு வைக்கப்பட்டு பார்வை வந்ததும், ஓட்டுனர் கடைசியாக ஆசைப்பட்ட நாகூர்
தர்காவிற்கு ஓட்டுனர் குடும்பத்துடன் சென்று கண்டுகளிப்பதை மிக நெகிழ்ச்சியுடன்
எழுதி உள்ளார். தீயுக்கும், மண்ணிற்கும்
இரையாகும் விழிகளை மனிதர்களுக்குத் தாருங்கள் என்ற விழிப்புணர்வை விதைத்தது
சிறப்பு.
‘தவிப்பு’ என்ற சிறுகதையில்
தன்னை சரியாக கவனிக்காமல் இருக்கும் பெற்றோரை கவனிக்க வைத்து பணத்தை விட பாசம்
பெரிது என உணர்த்திடும் யுத்திக்கு பாராட்டுக்கள்.
‘ஒரு நிமிட சபலம்’ என்ற
சிறுமி நிவேதா அப்பா, அம்மாவிற்குள் சண்டை வராமல் சமாளித்துப் பேசும் அறிவாளியாக
இருக்கிறாள். பிறர் பணத்தின் மீது ஆசை கூடாது என்ற அறநெறிக் கருத்து விதைத்து உள்ளார்
‘வாழ்க்கை’ என்ற சிறுகதையில்
கணவன் மனைவியிடம் ஆணாதிக்கம் செலுத்தக் கூடாது மனைவியும் கணவனை எடுத்து எறிந்து பேசக்கூடாது
என்ற கருத்தை வலியுறுத்தியது சிறப்பு.
‘காலச் சக்கரம்’ என்ற
சிறுகதையில் மாமியார், மருமகள் சண்டை புரிதல் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருப்பதை
சுட்டிக்காட்டி எழுதியது சிறப்பு.
‘கல்யாணம் யாருக்கு?’ என்ற சிறுகதை எள்ளல்
சுவையுடன் உள்ளது. மகனுக்குப் பெண்
பார்க்க வந்த இடத்தில் தந்தை மாப்பிள்ளை ஆகிறார்?
‘திட்டம் நிறைவேறியது’ என்ற
சிறுகதையில் மனிதாபிமானம் மிக்க மாமியாராகக் காட்டி இருப்பது சிறப்பு,
விருவிருப்பாக இருந்தது.
‘அம்மாவின் ஆசை’ என்ற சிறுகதையும், விழிகள்
தான விழிப்புணர்வு விதைக்கின்றது.
‘திருவிழான்னு வந்தா’
சிறுகதை, இளம் விதவை மறுமணத்தின் அவசியத்தை உணர்த்தியது.
‘முற்றுப்புள்ளி’ என்ற சிறுகதை,
இரண்டு குழந்தைகள் போதும், முற்றுப்புள்ளி வைத்திடுவோம் என்று குடும்பக்
கட்டுப்பாடு விழிப்புணர்வு விதைத்தது.
‘இரக்கம் இறங்குகிறது’ என்ற
சிறுகதை, முன்கூட்டி பணம் தந்து உதவியவருக்கு வேலையை முடித்துக் கொடுத்து உதவாமல் இருக்கும் தொழிலாளியின் சுயநலத்தைக்
காட்டியது.
‘மாற்றம்’ என்ற சிறுகதை அலுவலகப்
பணியாளர்களிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது.
‘தர்மம்’ என்ற சிறுகதை வீட்டுக்கு
வந்து விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு
உதவுவதும் மனிதநேயம் என்று வலியுறுத்துகிறது.
‘பாசமுள்ள எறும்புகள்’ என்ற
சிறுகதை, குழந்தைகளைத் திட்டாமல் அன்பு செலுத்தினால், அடம்பிடிக்காமல் அமைதியாக வளரும் என்ற கருத்தை விளக்கியது.
‘காதல் பரிசு’ என்ற சிறுகதை, அக்காவைக்
கொன்றவனை காதலிப்பது போல நடித்து கொலை செய்யும் கதை.திருப்பங்களுடன் துப்பறியும் கதை போல எழுதி உள்ளார்.
‘இதுவும் ஒரு பட்ஜெட் தான்’
சிறுகதை, வேகாத வெயிலில் எரிவாயு சிலிண்டர் கொண்டு வருபவர்களுக்கு சிறிய ஊக்கத்
தொகை தருவது தவறில்லை என்பதை உணர்த்தியது.
‘இப்படித்தான் இருக்கணும் பொம்பளே’ என்ற சிறுகதை, கணவன் மனைவி புரிதலை
உண்டாக்கியது. யாரையும் மட்டமாக எண்ணக்
கூடாது என்ற எண்ணத்தையும் விதைத்தது.
‘அம்மா வந்தாள்’ என்ற
சிறுகதை, அம்மாவின் ஆசைக்காக காதலியை மறந்து, அம்மா சொன்னவளை மணமுடித்து அவள் நோயால் இறந்துவிட பழைய காதலியை சந்தித்து
மணமுடிக்கும் கதை.
‘அரசியல் புரிந்தது’ என்ற
சிறுகதை அரசியல் பற்றி விளக்கம் சொல்லியது.
கணவன் மனைவி இல்வாழ்க்கையில் ஒப்பீடு செய்தது.சிறப்பு .
‘தீக்குளிப்பு’ என்ற சிறுகதை
தலைவருக்காக தீக்குளிக்கும் தொண்டனுக்கு அறிவுரை வழங்கி தீக்குளிப்பதைத் தடுத்து
நல்அறிவுரை வழங்கி உள்ளார்.
‘கட்டாய ஓய்வு’ என்ற சிறுகதை, கட்டாய
ஓய்வு வழங்கப்பட்டாலும் ஓய்வாக வீட்டில் இருக்காமல் ஏதாவது ஒரு வேலை செய்து வாழ
வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது.
‘காதல் விளக்கம்’ என்ற
சிறுகதை, சாதி, மத வேறுபாடு பார்க்காமல் மகளின் நல்ல காதலை அங்கீகரிக்க வேண்டும்
என்று உணர்த்தியது.
‘பகடைக்காய்’ என்ற சிறுகதை வெளிநாட்டில்
வேலை பார்த்தால் கவனமாக இருக்க வேண்டும், கடத்தலுக்கு பயன்படுத்திட பொருள்
கொடுத்தால் வாங்கக்கூடாது என்ற விழிப்புணர்வு விதைத்தது.
ஒவ்வொரு சிறுகதையிலும் ஒரு நல்ல செய்தி சொல்லி இருக்கும்
எழுத்தாளர் கவிஞர் உஷா முத்துராமனுக்கு பாராட்டுக்கள்.
183ஆம் பக்கம் சேகருக்கு என்பது சேருக்கு என்று உள்ளது, அடுத்த
பதிப்பில் திருத்தி விடுங்கள்.
நகைச்சுவை துணுக்குகளை சற்று விரிவுபடுத்தி சிறுகதை என்று பலர்
எழுதி வருகின்றனர். ஆனால் எழுத்தாளர், கவிஞர் உஷா முத்துராமன் அவர்கள் 25
சிறுகதைகளிலும் வாழ்க்கையை நெறிப்படுத்தும் அறநெறிக் கருத்துக்களை,மனிதநேயத்தை ,இரக்க உணர்வை விதைத்து
உள்ளார், பாராட்டுக்கள்.புதன், 27 டிசம்பர், 2017
ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கவிஞர் K. விஸ்வநாதன், அலைபேசி : 94882 44051
ஹைக்கூ உலா !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் :
கவிஞர் K. விஸ்வநாதன், அலைபேசி : 94882 44051
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.
தியாகராய நகர், சென்னை-600 017.
தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com பக்கம்120. விலை : ரூ. 80.
******
ஹைக்கூ உலாவுக்கு என் அன்பு மடல் உலா!
கவிதை உலகில் சுருங்கப் படித்து
சிறந்த கருத்து சொல்வதில் வல்லவர்
சிறந்த கருத்து சொல்வதில் வல்லவர்
கவிஞர்
இரா. இரவி !
கடுமையான உழைப்பும் சிறந்த சிந்தனையும்
இனிய முகமும் உள்ள இன்சொல் வேந்தர்
இனிய முகமும் உள்ள இன்சொல் வேந்தர்
கவிஞர்
இரா. இரவி !
ஆர்வம் மிக்கவர் ஹைக்கூ எழுதுவதில்
உயர்ந்த சிந்தனையை மூன்று வரியில் தந்தவர்
உயர்ந்த சிந்தனையை மூன்று வரியில் தந்தவர்
கவிஞர்
இரா. இரவி !
எம் போன்ற பாமரனையும் பதப்படுத்தி
கவிஞர் ஆக்கி அழகு பார்ப்பவர்
கவிஞர் ஆக்கி அழகு பார்ப்பவர்
கவிஞர்
இரா. இரவி !
எதிலும் துணிவுடன் ஹைக்கூ எழுதி
தன்னம்பிக்கை வளர்க்கும் தீர்க்கதரிசி
தன்னம்பிக்கை வளர்க்கும் தீர்க்கதரிசி
கவிஞர்
இரா. இரவி !
ஜப்பானியர்க்கு நிகராக ஹைக்கூவில்
தமிழர் தலை நிமிர கவிதை எழுதியவர் கவிஞர் இரா. இரவி !
தமிழர் தலை நிமிர கவிதை எழுதியவர் கவிஞர் இரா. இரவி !
இயற்கையை வென்றான் எடிசன்
இயற்கையை ரசிப்பவன் கவிஞன்
இயற்கையின் சொந்தம் உழவன்
இதற்கெல்லாம் ஏகலைவன்
இயற்கையை ரசிப்பவன் கவிஞன்
இயற்கையின் சொந்தம் உழவன்
இதற்கெல்லாம் ஏகலைவன்
சூரியன் (இரவி) !
மரம் உலகுக்கு எவ்வகையில் உதவுகிறது
மனிதர்க்கு உணர்த்தியது உம் ஹைக்கூ
மனிதர்க்கு உணர்த்தியது உம் ஹைக்கூ
பல வண்ண மலர்கள் பறிக்க அல்ல
பார்த்து ரசிக்க, என்ன உயர்ந்த சிந்தனை!!!
பார்த்து ரசிக்க, என்ன உயர்ந்த சிந்தனை!!!
பறவைகள் பலவிதம்
இயற்கையின் வளம்
இக்கவிதை ஒருவிதம்.
இயற்கையின் வளம்
இக்கவிதை ஒருவிதம்.
“சாதி வெறி பண்புகளை அழிக்கும்
மத வெறி குலங்களை அழிக்கும்
வறட்டு கௌரவம் விடு – “வாழ்” – “வாழ் விடு”
உரத்த சிந்தனை.
மத வெறி குலங்களை அழிக்கும்
வறட்டு கௌரவம் விடு – “வாழ்” – “வாழ் விடு”
உரத்த சிந்தனை.
மகிழ்ச்சி அளிக்கும் மது, வாழ்வை அழிக்கும்
குடிகேடிக்கும், அரசுக்கும் சவுக்கடி உம் ஹைக்கூ.
குடிகேடிக்கும், அரசுக்கும் சவுக்கடி உம் ஹைக்கூ.
சோதிடம் என்பது திடமில்லை
சோ(SO) சோதிடம் பொய்யே
நிரூபணம் உம் கவிதை !
சோ(SO) சோதிடம் பொய்யே
நிரூபணம் உம் கவிதை !
ஜல்லிக்கட்டு சரியான மல்லுக்கட்டு
ஜனங்களின் நாடிதுடிப்பு உம் கவிதை !
ஜனங்களின் நாடிதுடிப்பு உம் கவிதை !
அரசியலை அம்பலமாக்கியது
உம் அருமையான ஹைக்கூ !
உம் அருமையான ஹைக்கூ !
“மனிதன் எனில் தலைகுனிவான்”
தேர்தல் நிலை உணர்த்தியது உம் ஹைக்கூ.
தேர்தல் நிலை உணர்த்தியது உம் ஹைக்கூ.
தேர்தல் அறிக்கை கானல் நீர்
உணர்த்தியது உம் ஹைக்கூ.
உணர்த்தியது உம் ஹைக்கூ.
அறம் பற்றி உம் திறம்
அருமை! மகிழ்ச்சி!!!
அருமை! மகிழ்ச்சி!!!
உழவர் நிலை அவலம்
உணர்த்தியது உம் கவிதை
உணர்த்தியது உம் கவிதை
கவலைக்கு மருந்து உம் கவிதை
தானத்தில் சிறந்தது நிதானம் (மூதுரை)
அதனினும் சிறந்தது உறுப்பு தானம்
இரவியின் ஹைக்கூ ‘சிறப்பு’.
தானத்தில் சிறந்தது நிதானம் (மூதுரை)
அதனினும் சிறந்தது உறுப்பு தானம்
இரவியின் ஹைக்கூ ‘சிறப்பு’.
அறியப்பட வேண்டிய செய்தி
கண்ணீர் கொணர்ந்த வரிகள்
அம்மா ஹைக்கூ !
கண்ணீர் கொணர்ந்த வரிகள்
அம்மா ஹைக்கூ !
மனித நேயம் மறக்காதிருக்க
அருமையான ஹைக்கூ.
அருமையான ஹைக்கூ.
முதல் காதல், காலம் முடியும் வரை
காலத்திற்கும், காதலுக்கு கனக்கச்சிதம்
உம் கவிதை.
காலத்திற்கும், காதலுக்கு கனக்கச்சிதம்
உம் கவிதை.
காதல் கொண்டவரின் மனதைக் காட்டும்
கண்ணாடிக் கவிதை ‘என்னவள்’
மனிதனின், அன்பின் முதல் மொழி
முத்தம்.
கண்ணாடிக் கவிதை ‘என்னவள்’
மனிதனின், அன்பின் முதல் மொழி
முத்தம்.
‘கலாம்’க்கு இணை பெருந்தலைவர்களில் ஒருவருமில்லை
காணப்போவதும் இல்லை.
காணப்போவதும் இல்லை.
அஞ்சாமையோடு சமரசம் ஆகாத வீரர்க்கு
வாழ்த்துக்கள் (இன்குலாப்)
வாழ்த்துக்கள் (இன்குலாப்)
தொலைக்காட்சி – தொல்லைக்காட்சியாகியது
உண்மை உணர்த்தும் கவிதை!
உண்மை உணர்த்தும் கவிதை!
அலைபேசியின் அல்லல் உணர்த்தும்
அருமையான கவிதை!
அருமையான கவிதை!
வல்லவன் சம்பாதித்து, வட்டிக்காரன் வாழ்ந்தான்
காட்டியது, ‘கந்துவட்டி’ கவிதை.
காட்டியது, ‘கந்துவட்டி’ கவிதை.
தங்களின் உதிரிப்பூக்கள் ஹைக்கூ கவிதைகள்
தங்களின் அறிவின் வெளிப்பாடு “ஹைக்கூ உலா”
பதினேழாம் புத்தகம் பதியம் போட்டு பல நூறு ஆகட்டும்.
படித்தேன், பரவசமானேன், பாராட்டத் துடித்தது என் மனம்.
தங்களின் அறிவின் வெளிப்பாடு “ஹைக்கூ உலா”
பதினேழாம் புத்தகம் பதியம் போட்டு பல நூறு ஆகட்டும்.
படித்தேன், பரவசமானேன், பாராட்டத் துடித்தது என் மனம்.
எளிமையான வார்த்தைகளில் வலிமையான கருத்துகள்
சொல்வது உங்கள் தனித்தன்மை, வாழ்க வளர்ச்சியுடன் ...
சொல்வது உங்கள் தனித்தன்மை, வாழ்க வளர்ச்சியுடன் ...
வளர்க உம் புலமை
வழி நடத்தட்டும் ”தமிழ்க்கடவுள்”
வளமோடு வாழ்வீர் பல்லாண்டு ...
வழி நடத்தட்டும் ”தமிழ்க்கடவுள்”
வளமோடு வாழ்வீர் பல்லாண்டு ...
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
இன்சொல் பேசினால்
சொர்க்கமாகும்
இல்லம் !
மது விலையேற்றம்
குடிமகன் !
அளவிற்கு மிஞ்சினால்
அலைபேசியும்
நஞ்சுதான் !
போதையின்
வகையில் சேர்ந்தது
அலைபேசி !
அலைபேசியும்
நஞ்சுதான் !
போதையின்
வகையில் சேர்ந்தது
அலைபேசி !
நன்மையும் உண்டு
தீமையும் உண்டு
இணையம் !
தீமையும் உண்டு
இணையம் !
நம்பாதீர்
லாட்டரி அறிவிப்பு
அலைபேசியில் !
லாட்டரி அறிவிப்பு
அலைபேசியில் !
ரகசியமாகவே
ரகசிய குறியீடு
தலைச்சுமையை விட
கனத்தது மனச்சுமை
ஏழைக்கு !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !
யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக நான் எனக்காக நீ உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...

