ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

நூலின் பெயர்:அவ்வுலகம்

நூலின் பெயர்:அவ்வுலகம்


நாவல் ஆசிரியர்:டாக்டர் வெ.இறையன்பு I.A.S.

மதிப்புரை:முனைவர் ச.சந்திரா

கோபுர நுழைவாயில்:

இலக்கியநாயகன் பாலைநிலம் கடந்து வாகைசூடியது சங்ககாலம்!புதினநாயகன் மரணவாயிலின் நிலையைக் கடந்துசெல்ல உதித்தது அவ்வுலகம்!சமூகத்தைப் பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலக்கவைக்கும் சீரிய நோக்கத்தில்,விரிந்ததோர் பார்வையுடன் படைப்புக்களை வழங்குவதில் இறையன்புக்கு நிகர் அவர்மட்டுமே!பழமையிலிருந்து வேறுபட்டும்,மாறுபட்டும் இவ்வுலக இணைப்பிற்கும்,மறுவுலக பிரவேசித்தலுக்கும் இடையேயான பயணத்தை எடுத்துரைக்கும் இந்நாவல் ஆசிரியரின் முத்தான மூன்றாவது நாவல்!

உருவமா?பிம்பமா?

மொழிகளற்ற,காலபேதம் உணர இயலாத,பெயர் எனும் அடையாளம் தொலைக்கப்பட்டதும் மறுக்கப்பட்டதுமான ஓர் உலகில் உருவமற்று உலவும் பிம்பங்களின் கதையே அவ்வுலகம்! வெளியுலகில் ,இல்லறத்தில் -என தனக்குள் சுயமுரண்பாடு கொண்ட தலைமைக் கதாப்பாத்திரமும்,துணைக்கதாப்பாத்திரங்களும் நதியும்,கிளைநதிகளுமாய் பிரவாகம் எடுத்து கடலோடு கலப்பதும், கலக்கும்முன் அவர்களது ரிஷிமூலம் கண்டறிவதுமே இந்நாவலின் உள்ளடக்கம்.சதைப்பிண்டம் என்பது முதற்பிறப்பாய் இருக்க, மனிதத்தை உணரும் மறு இருப்பாய் அவ்வுலகவாசிகள் நடமாட,மரணத்திற்குப்பிறகும் மனிதவாழ்வு முற்றுப்பெறுவதில்லை என்பதனை உலகிற்கு சொல்லவந்த நூலே இந்நாவல் எனலாம்.

சொர்க்கமா?நரகமா?

அவ்வுலகம் ஓர் அபூர்வமான உலகம்!அங்கு ஒருமுறை சந்தித்தவரை இன்னொருமுறை சந்தித்தல் இயலாது!அங்கிருப்போர் உண்ணலாம்!உறங்க முடியாது!பார்க்கலாம்;பேசலாம்;வாய்விட்டு அழமுடியாது!பூவுலகில் வாழ்ந்தபொழுது இருளில் பொதிந்திருந்த அவர்களின் பொய்மைகளெல்லாம் இங்கு வெளிச்சமிட்டுக் காட்டப்படும்!வாழ்ந்தவர் மாய்வதும்,மாய்ந்தவர் எழுவதுமாய், இருத்தலில் இல்லாதிருத்தலும், இல்லாமையில் இருத்தலுமாய்,அந்நியப்படுதலும் அன்னியோன்யப்படுதலுமாய்,கட்டமைப்பும் கட்டவிழ்ப்புமாய் ,பிரிதலும் பிரித்தலுமாய் மொத்தத்தில் சுகமும் சோகமுமாய் நாவலின் கதை நயமாய் நகர்கின்றது.

இரத்த ஓட்டம்:

'வாழ்வதற்கே வணங்காதபொழுது சாவதற்கு கடவுளை வணங்கவேண்டுமா?'-என்று வினவும் நாத்திகவாதியான காளிதாஸுடன் துவங்கும் கதை,'கடவுள் மாத்திரம்தான் நான் கேட்டதைத் தரமுடியும்'-என்று பதிலளிக்கும் ஆத்திகவாதியின் வாழ்க்கைக்குறிப்புடன் முடிய,இடையிடையே மகாபாரதக் கிளைக்கதைகளாய் பல்வேறு பாத்திரங்கள் நடமாட, இவ்வனைவரும் எவ்விதமாய் மரணநிலையை எதிர்கொள்கின்றனர் என்பதை ஆசிரியர் சொல்லிச்செல்லும் பாங்கு அற்புதம்!விரும்புகின்ற எல்லாவற்றையும் செய்கின்ற இடமாக மண்ணுலகம் இருக்க,யாருக்கு என்ன விருப்பமோ அவற்றைச் செய்யவிடாது தடுக்கும் ஒரு விசித்திர உலகமாக 'அவ்வுலகம்' இருக்கின்றது.உணர்வுப்பகிர்தல் மறுக்கப்பட,வெறும் எண்ணப்பகிர்தலுடன் வரையறுக்கப்பட்ட பகுதியில் உலவுகின்ற வாழ்வே அவ்வுலக வாழ்வு!

மேடுகளும் பள்ளங்களும்:

அவ்வுலகத்தில் வெளிச்சத்திற்குள் இருளும் ,இருளுக்குள் வெளிச்சமும் புலப்படுகின்றது.அசைவது அசையாதிருக்கின்றது.அசையாதது அசைகின்றது.இவ்வுலகில் யானையாய் இருந்தவர் அவ்வுலகில் பூனையாய் பதுங்குகிறார்.கேட்க முடியாதோர்க்கும் செவி திறக்கின்றது.பார்க்கமுடிந்தவர்க்கோ பார்வை பறிபோகின்றது.விட்டுப்போனது தொடர்கின்றது.தொடர்ந்து வந்ததோ விட்டுப்போகின்றது.புத்தகங்கள் உயிர்பெற்று உலாவுகின்றன.அத்தோடு உயிலிலும் இடம்பெறுகின்றன.வார்த்தைகளை உபதேசிக்க வாய் திறந்தாலோ குருதி வழிகின்றது!கண்ணீரோ விழிகளிலிருந்து வழிய மறுக்கின்றது.

கல்வெட்டு வாசகங்கள்:

தலைமைக் கதாப்பாத்திரமான திரிவிக்ரமன் தனக்குத் தானே வினவிக்கொள்வதும் விடையளித்துக் கொள்வதுமான பகுதி(ப.137-141) தர்க்கநெறி சார்ந்த,அனைவரும் உய்த்துணரவேண்டிய உன்னத பகுதி.

* முடியாதவனின் கடைசி ஆய்தம் பொறாமை(ப.140)

* நல்லபடியாக மரணித்தவனே நல்லபடியாக வாழ்ந்தவன்(ப.124)

*மரணம் என்பது ஒரே நிகழ்வு அல்ல!பல சின்ன நிகழ்வுகளின் ஒட்டுமொத்த தொகுப்பு.

*நாத்தை மிதிச்சால் அது நல்ல பயிராய் வளருமா?(ப.110)

*பகிர்ந்து கொள்கின்ற போதுதான் நொய்யரிசிகூட நெய்யரிசி ஆகும்.(ப.50)

மனதார...

வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் எது வேண்டுமானாலும் ஒன்றுபோல் நிகழலாம்;மரணம் என்பது மட்டும் ஒருவரிலிருந்து மற்றவர்க்கு வேறுபடும்;அம்மரணத்தை எதிர்கொள்வதும் ஒருவரிலிருந்து மற்றவர்க்கு மாறுபடும் என்பதனை எடுத்துரைக்க வந்த நூலே டாக்டர் இறையன்பு அவர்களின் 'அவ்வுலகம்'.இந்த மண்ணுலகில் நிறைவேற்றவேண்டும் என்று எண்ணியதை தயக்கமின்றி சாதித்துவிடுங்கள்!இதன்பின் 'அவ்வுலகம்' மட்டுமல்ல! எவ்வுலகம் சென்றாலும் அதற்கான வேகத்தடைகள் எழும்பிக்கொண்டே இருக்கும் என்று வாசகர்க்கு சொல்ல வந்ததே இந்நாவல்.ஏக்கமும் தாக்கமுமாய்,துள்ளலும் துவளலுமாய் தன் எழுத்துக்களை கருத்தாக்கம் செய்யாமல்,தத்துவமும் தார்மீகமுமாய்- இவ்வுலகம் மட்டுமல்லாது மறு உலகத்திற்கும் வழிகாட்டியிருக்கும் நூலாசிரியர் டாக்டர் வெ.இறையன்பு அவர்களின் இலக்கியப்பணி சிறக்க என்போன்ற ஆர்வலர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!



--

நன்றி

அன்புடன்

கவிஞர் இரா .இரவி



www.eraeravi.com

www.kavimalar.com

www.eraeravi.wordpress.com

www.eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://en.netlog.com/rraviravi/blog

இறந்த பின்னும்

இயற்கையை ரசிக்க



கண் தானம் செய்வோம் !!!!!

சனி, 11 பிப்ரவரி, 2012

மாணவன் ! கவிஞர் இரா .இரவி


மாணவன் !              கவிஞர் இரா .இரவி

ஆசிரியருக்கு அஞ்சிய காலம் அன்று
ஆசரியர்
கள் அஞ்சும் காலம் இன்று

ஆசிரியரை வணங்கிய காலம் அன்று
ஆசிரியரைக் கொலை செய்யும் காலம் இன்று
மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்
தெய்வத்திற்கும் முன்பாக குருவை வைத்தார்கள்

மாணவர்களே ஆசிரியர்களை மதியுங்கள்
மதித்து நடந்தால் உலகம் உங்களை மதிக்கும்


மாணவனை
க் கொலைகாரனாக மாற்றும்
திரைப்பட வன்முறைக
களை நிறுத்துங்கள் !

ஆங்கிலப் பள்ளிகளின் கெடு பிடிகள்
பிஞ்சு நெஞ்சங்களில் வன்முறை நஞ்சு

மாவட்ட ஆட்சியரின் ஆய்வில்
மதுக்
கடையில்  சீருடையோடு மாணவன்

தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழைக் கற்பியுங்கள்
இந்தி சமஸ்கிருதம்
வகுப்புகளை உடன் மூடுங்கள்

நிறுத்தப்பட்ட நீதி போதனை வகுப்பை
அனைத்து  பள்ளிகளிலும்  உடன் தொடங்கிடுக !
மிக நல்ல மாணவன் நாளை
மிகச் சிறந்த ஆசிரியராவான் !

கற்க கசடற கற்றபின்
அயல்நாடு செல்லாதிருக்க ! 

ஏன் ? எதற்கு ? எப்படி ?
என்று  கேட்க    சிறக்கும் மாணவன்


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

வியாழன், 9 பிப்ரவரி, 2012

சுட்டும் விழி” விமர்சனம் குகன் கண்ணன்

சுட்டும் விழி”   விமர்சனம் குகன் கண்ணன்

http://guhankatturai.blogspot.in/2012/02/blog-post_09.html 

கவிதை விரும்பாத வாசகன் கூட தன்னையும் அறியாமல் வாசிக்கும் கவிதை ஹைக்கூ கவிதையாக தான் இருக்கும். ஐந்து நோடிக்கு மேல் எடுத்துக் கொள்ளாத வாசிப்பு. ஒரு பக்க கட்டுரை ஏற்ப்படுத்தும் பாதிப்பு, நருக்கென்று கருத்து என்ற போன்ற பெருமை ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு. இன்று, ட்விட்டரில் பலர் 140 எழுத்துக்களில் தங்கள் கருத்தை சொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால், நூற்றாண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் திருக்குறளிள் இரண்டடியில் சொல்லியிருக்கிறார். ஜப்பானில் மூன்றடியில் கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.

ஜப்பானில் தோன்றிய 'ஹைக்கூ' தமிழ் கவிதை சூழலில் பலர் முயற்சித்து வருகிறார்கள். தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் என்று பட்டியலிட்டால் அதில் கவிஞர் இரா.ரவி அவர்கள் பெயர் கண்டிப்பாக இருக்கும். அவர் எழுதிய எல்லா புத்தகங்களும் ஹைக்கூ கவிதையாக இருக்கும். அல்லது ஹைக்கூ பற்றிய கட்டுரை, விமர்சன நூலாக இருக்கும். ஹைக்கூ கவிதையில் தன் முழு கவனத்தை செலுத்தி வருபவர். அவர் எழுதிய 11வது நூல் தான் “சுட்டும் விழி”.

போதுவாக, நான் நூல் விமர்சனம் செலுத்தினால் அந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த வரிகளை குறிப்பிடுவேன். ஆனால், இந்த நூலில் எனக்கு பிடித்த கவிதையை குறிப்பிட சொன்னால் 64 பக்கங்கள் கொண்ட கவிதையில் 40 பக்கங்களுக்கான கவிதையை குறிப்பிட வேண்டியதாக இருக்கும். அந்த அளவுக்கு பல கவிதைகளில் நருக்கென்ற கருத்தோடு முடித்திருக்கிறார்.


உழைப்பாளியின் ரத்தம்
உறிஞ்சிக் குடிக்கும்
டாஸ்மார்க்
*
பன்னாட்டு நிறுவனங்களால்
கொள்ளை போனது
பச்சை வயல்
*
வேகமாக விற்கின்றது
நோய்பரப்பும் குளிர்பானம்
வருத்தத்தில் இளநீர்.
இயற்கையை அழித்து
செயற்கை மரங்கள்
நகரங்கள்


மேல் குறிப்பிட்ட கவிதைகளில், மூன்றாவது வரியில் இதயத்தை துழைக்கும் அம்பை ஒழித்து வைத்திருக்கிறதா அல்லது நம்மை குத்தும் குற்றவுணர்வா என்ற யோசிக்க வைக்கும் வரிகள்.

சமக்கால அரசியலை கேலி செய்யும் நாவலோ, சிறுகதையோ வருவது மிகவும் குறைவு. ஆனால், சமக்கால அரசியலை பகடி செய்யும் கவிதைகள் ஏராளமாக வந்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக கீழ் காணும் கவிதைகளை படித்து பாருங்கள்.

எண்ணங்களால் அன்று
எண்ணிக்கையால் இன்று
கூட்டனி !
*
திரும்புகின்றது
கற்காலம்
மின்தடை
*
காவிரி போல்
அரசியலானது
சமச்சீர் கல்வி
*
உயராத கூலி
உயரும் விலைவாசி
வேதனையில் ஏழைகள்.
**

இந்த புத்தகத்திற்கு “சுட்டும் விழி” என்ற தலைப்பு மிக பொருத்தாமாத அமைந்திருக்கிறது. காரணம், ஒவ்வொரு கவிதையும் நாம் படித்த முடித்த பின் நம்மை சுடாமல் இருப்பதில்லை.

மருத்துவ குறிப்பு சொல்லும் கவிதை,
மூளைச்சாவு
பயன்பட்டது
உறுப்புதானம்


ஈழ தமிழர்களுக்கு நம்பிக்கைக் கொடுக்கும் கவிதை,
அணையப்போகும் விளக்கு
சுடர்விட்டெரியும்
இலங்கைக் கொடூரன்.


வரலாற்றை பதிய வைக்கும் கவிதை,
மூடநம்பிக்கை
முற்றுப்புள்ளியாக்கியது
ஈரோட்டு மை.


ஒரு கவிதை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் இன்னொரு கவிதை நம்மை தாக்க தயாராக உள்ளது.

ஹைக்கூ கவிதைகளுக்கு தலைப்பு தேவையில்லை என்ற மரபில் இந்த புத்தகமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று கவிதைகள் சமூகத்தைப் பற்றியதாக இருந்தால், அடுத்த கவிதை 'ஈழம்' பற்றியதாக உள்ளது. இல்லை என்றால் 'காதல்' பற்றியதாக உள்ளது.
சமூகம், அரசியல், காதல் என்று வகைப்படுத்தி கவிதைகளை வரிசைப்படுத்தியிருக்கலாம்.


கவிதை வாசிப்பு ஆர்வம் இல்லாத வாசகர்கள் வாசிக்க வைக்கும் கவிதை நூலாக இருக்கிறது "சுட்டும் விழி".


--

தேநீர்க் கோப்பையோடு கொஞ்சம் ஹைக்கூ

தேநீர்க் கோப்பையோடு  கொஞ்சம் ஹைக்கூ

புகழ்ப் பெற்ற ஓவியர் மதுரை சு .சு சுந்தரம் அவர்களின் கை வண்ணத்தில் கவிஞர் இரா .இரவி

புகழ்ப் பெற்ற  ஓவியர் மதுரை சு .சு சுந்தரம் அவர்களின் கை வண்ணத்தில்
கவிஞர் இரா .இரவி

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

எது ? காதல் ! கவிஞர் இரா .இரவி

எது ? காதல்  !                 கவிஞர் இரா .இரவி

காதலர் தினம் மட்டும் நினைப்பதல்ல காதல்
காதலர் உயிர் உள்ளவரை நினைப்பதே காதல்

ஒற்றை ரோசாவில் முடிவதல்ல காதல்
பிறவி முழுவதும் தொடர்வதே காதல்
பரிசுப் பொருட்கள் பகிர்ந்து கொள்ளுதல்ல காதல்
ஒருவரை
ஒருவர்   புரிந்து கொள்வதே காதல்

கடற்கரையில் பேசுவது மட்டுமல்ல  காதல்
காலம் முழுவதும் இணைந்து    இருப்பதே காதல்

காதலர்கள் கூடிக் களைவது அல்ல காதல்
களையாமல் நிலைத்து இருப்பதுவே காதல்

உடல் தீண்டல் மட்டுமல்ல காதல்
உள்ளத் தீண்டலே உண்மைக் காதல்

புத்தாடை வழங்குவது அல்ல காதல்
புரிந்து புத்துணர்வு வழங்குவதே காதல்

உயிரை விடுவது அல்ல காதல்
உயிர் உள்ளவரை போராடுவதே காதல்

இன்பத்தை மட்டுமே எதிர்பார்ப்பதல்ல காதல்
துன்பத்தையும் ஏற்றுக் கொள்வதே காதல்


லாப நட்டக் கணக்கு பார்ப்ல்ல காதல் 
கஷ்டம் நஷ்டம் பாராததே
காதல்

காமத்தால் வருவது அல்ல காதல்
காலத்தால் என்றும் அழியாததே
காதல்

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன முன்னேற்றப் பயிலரங்கம்

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன முன்னேற்றப் பயிலரங்கம்