இடுகைகள்

June, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவியரசு கண்ணதாசன் கவிஞர் இரா .இரவி

படம்
கவியரசு கண்ணதாசன் கவிஞர் இரா .இரவி

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து
எட்டாத உயரம் உயரந்தவன் நீ

கவியரசு பட்டத்திற்கு முற்றிலும்
குவலயத்தில் பொருத்தமானவன் நீ

நான் நிரந்தரமானவன் என்று அறிவித்து
நிரந்தரமாக மக்கள் மனதில் நிலைத்தவன் நீ

உன் பாடல் ஒலிக்காத வானொலி இல்லை உலகில்
உன் பாடல் ஒலிக்காத வானொலி வானொலியே இல்லை

ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினரும்

அன்போடு ரசிக்கும் பாடல் உன் பாடல்

எனக்குப் பிடித்த மதம் தாமதம் என்றுரைத்து
சினம் கொண்ட அவையைச் சிரிக்க வைத்தவன் நீ

படைத்தவன் யார் ?என்பது முக்கியம் அல்ல
படைப்பைப் பாருங்கள் என்று அறிவுறுத்தியவன் நீ

உனக்கு இணையான ஒரு கவிஞன்
உனக்கு அடுத்து யாருமில்லை என்பதே உண்மை

உனக்கு நிகர் நீ மட்டுமே தான்
உன்னை விஞ்சிட எவருமில்லை உலகில்

தொகைக் குறிப்பிடாதக் காசோலைத் தந்தபோதும்
தொகைக் குறிப்பிட ஆசைப் படாதவன் நீ

பணத்திற்காக ஏங்கும இந்த உலகில்
பணத்திற்காக ஏங்காத நல்லவன் நீ

செருக்கோடு இருந்த திரை உலகில் பலரின்
செருக்கை அகற்றிய கவிஞன் நீ

கண்ணதாசனே உன் இயற்ப பெயர் முத்தையா
கற்கண்டென நீ வடித்த பாடல்கள் தமிழின் சொத்து ஐயா

எங்கு நீ கற்றாய் இத்தனை வித்தை
இனிய பாடல்கள் …

மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் ,சிறப்புக் கவியரங்கம் நடைப்பெற்றது

படம்
மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் ,சிறப்புக் கவியரங்கம் நடைப்பெற்றது .கவிமாமணி சி வீரபண்டியத் தென்னவன் தலைமை வகித்தார் .கவிஞர் இரா .இரவி வரவேற்றார் .திருவள்ளுவர் கழகத்தின் செயலர் சுப .இராமசந்திரன் முன்னிலை வகித்தார். கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,இராசி. பாண்டியன் .இராமப் பாண்டியன் ,ரேவதி ,இரா .இரவி உள்ளிட்டோர் கவிதை பாடினார்கள்

கண்ணகி நீதி கேட்ட மதுரையில் எழுச்சி

படம்
கண்ணகி நீதி கேட்ட மதுரையில் எழுச்சி

26.6.2011 மாலை6 மணிக்கு

உலக மனித சித்திரவதை எதிர்ப்பு நாளை முன்னிட்டு ஈழத்தில்உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ,சென்னை செல்ல வாய்ப்பு இல்லாதவர்களுக்கு மதுரையில் தமுக்கம் ,தமிழன்னை சிலை அருகில் ஈழத்தமிழர் கூட்டமைப்புகள்
மதுரை, சார்பில் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு அனைத்து அமைப்புகள் சார்பாக பெருமளவில் கலந்து கொண்டு எழுச்சி முழக்கம் இட்டனர் .பொறியாளர் தளபதி, பாண்டியன் ,தமிழ் கூத்தன்,செந்தில் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்து இருந்தனர் .கவிஞர்கள் இரா .இரவி ,பொன் விக்ரம் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர் .நாம் தமிழர், ம .தி .மு .க ,தமிழர் தேசிய பொதுவுடைமை ,பெரியார் தி .க உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் .குழந்தைகள் ,பெண்கள், முதியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .உலக மகாக் கொலைகாரன் ராஜபட்சே உடனடியாகத் தூக்கில் இடப்பட வேண்டும். சேனல் 4 கொடூர காட்சியில் கண்டக் காட்சிகளுக்கு நீதி வேண்டும் .போர் குற்றவாளிகள் உடனடியாகத் தண்டிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப் பட்டது

மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் ,சிறப்பு கவியரங்கம் நடைப்பெற்றது

மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் ,சிறப்பு கவியரங்கம் நடைப்பெற்றது .கவிமாமணி சி வீரபண்டியத் தென்னவன் தலைமை வகித்தார் .கவிஞர் இரா .இரவி வரவேற்றார் .திருவள்ளுவர் கழகத்தின் செயலர் சுப .இராமசந்திரன் முன்னிலை வகித்தார் .கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,இராசி. பாண்டியன் .இராமப் பாண்டியன் ,ரேவதி ,இரா .இரவி உள்ளிட்டோர் கவிதை பாடினார்கள்

கவிஞர் இரா .இரவி நேர்முகம் பார்த்து மகிழுங்கள்

படம்
29.6.2011அன்று புதன் கிழமை காலை 8 மணி முதல் 9மணி வரை கலைஞர் தொலைக்காட்சியில் சந்தித்த வேளை நிகழ்ச்சியில், கவிஞர் இரா .இரவி நேர்முகம் பார்த்து மகிழுங்கள் . கவிதை ,ஹைக்கூ ,இலக்கியம் ,இணையம் ,சமூகவிழிப்புணர்வு ,மனிதநேயம் தொடர்பான கருத்துக்களை விளக்கி உள்ளார் நேர்முகம் காண்பவர் .திரு .ரமேஷ் பிரபா

All About eraeravi.com - Website Valuation report

மதுரையில் கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா நடைபெற்றது

படம்
மதுரையில் தியாக தீபம் பேரவை சார்பில் கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா நடைபெற்றது .பாலு தலைமை தாங்கினார் .மனிதத் தேனீ சொக்கலிங்கம் சிறப்புரை ஆற்றினார் .கவிஞர் இரா .இரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தமிழா தமிழா சொல் கவிஞர் இரா .இரவி

படம்
தமிழா தமிழா சொல் கவிஞர் இரா .இரவி

தமிழா தமிழா சொல் தினமும் நீ
தரணியில் பேசுவது தமிழா சொல்

உலகின் முதல் மொழி தமிழ் உணர்
உலக மொழிகளின் தாய் தமிழ்

ஊடகத்தில் நாளும் நடக்குது தமிழ்க்கொலை
உலகமே பார்த்துச் சிரிக்குது தமிழின் நிலை

நாளிதழ் வானொலி தொலைக்காட்சி அனைத்திலும்
நாளும் சிதைக்கின்றனர் நல்ல தமிழை

அழகு தமிழில் அம்மா இருக்கையில்
ஆங்கிலத்தில் மம்மி என்றழைக்கும் மடமை

அற்புதத் தமிழில் அப்பா இருக்கையில்
ஆங்கிலத்தில் டாடி என்றழைக்கும் கொடுமை

தமிழோடு பிற மொழி கலந்து
ப் பேசுவது பிழை
தமிழை தமிழாகப் பேசிட நீ பழகு

ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ் கலந்து
ஆங்கிலேயன் என்றும் பேசுவதில்லை

தமிழன்தான் தமிழ் பேசும்போது
தமிங்கிலம் பேசி உளறுகின்றான்

இரு கரம் குவித்து வணக்கம் சொல்
ஒரு கரம் தூக்கி குட்மோர்னிங் நிறுத்து
--

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeraviஇறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண்தானம்செய்வோம் !!!!!

செயலாற்ற முடியாத செயலர் பான் கி மூன்

படம்
செயலாற்ற முடியாத செயலர் பான் கி மூன்
கவிஞர் இரா .இரவி

ஐ. நா. மன்றத்தின் பொதுச் செயலர் இவர்

செயல்படாத செயலருக்கு இரண்டாம் வாய்ப்பு

எதிர்ப்பு போட்டியின்றி ஏகமனதாகத் தேர்வு
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் எதிர்த்து இருப்பேன்

இலங்கைக் கொலைகாரனை இன்றுவரை
எதுவுமே செய்யாதச் செயலர் இவர்

தட்டிக் கேட்க அதிகாரம் இருந்தும்
தட்டிக் கேட்க தயங்குபவர் இவர்

அமெரிக்காவின் கைப் பாவையாக ஐ .நா .மன்றம்
ஐ நா மன்றத்தின் கைப் பாவையாக பான் கி மூன்
உலகின் மிகப் பெரிய பதவியில் இருக்கும்
உலகின் மிகச் சிறிய நபர் இவர்

இலங்கைக்கு எதிராக உலகமே குரல் தந்தும்
இன்று வரை உருப்படியாக எதுவும் செய்யாதவர்

முதல் முறையில் முத்திரைப் பதிக்காதவருக்கு
இரண்டாம் முறை வாய்ப்பு வழங்கியது தவறு

உலகமகாக் கொலைகாரன் ராஜபட்ஜேவை
உடனடியாகத் தூக்கிலிடு அல்லது பதவி விலகிடு

செயலாற்ற முடியாத செயலர் செயலராய் இருக்கும்
செயலற்ற ஐ. நா. மன்றத்தை இழுத்து மூடுங்கள்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடைப்பெற்றது.

படம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடைப்பெற்றது.வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார். வாசகர் வட்டத்தின் தலைவர் ராஜராஜன் வரவேற்றார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .கலைஇலக்கியப் பெருமன்றத்தின் மதுரைத் தலைவர் கவிஞர் மு .செல்லா ,தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .கவிஞர்கள் பேனா மனோகரன் .இரா கல்யாண சுந்தரம் ,ஜோதி மகாலிங்கம் ,விஸ்வநாதன் ,குமுதம் ஆறுமுகம் ,யமுனா ரகுபதி உள்ளிட்டோர் தன்னம்பிக்கை
தொடர்பான கவிதை படித்தனர் .சம்பத் நன்றி கூறினார்

பட்டிமன்றத்தில் கவிஞர் இரா.இரவி - MySpace-Themes.info - Honda Civic Video Library

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

காவிரி போல
அரசியலானது
கல்வி

இனிமையானது
உற்றுக்கேளுங்கள்
ஓடும் நதியின் ஓசை

பெண்ணைவிட
ஆணே அழகு
மயில்

முடிந்தது சந்திப்பு
தொடர்ந்தது அதிர்வு
நினைவலைகள்

பிரித்தது இலைகளை
மரத்திலிருந்து
காற்று

குளத்தின் உயரம் கூட
தானும் வளர்ந்தது
தாமரை

உண்மையை விட
போலிகள் பொலிவாக
செயற்கைச் செடிகள்

கோலத்தை விட
கோலமிட்டவள்
கொள்ளை அழகு

தோற்றத்தை விட
குரல் அழகு
குயில்

சம்மதித்தனர்
வரதட்சணை
க் குறைக்க
சொத்து வரும் என்பதால்

வா வை விட
ஏ பொருந்தும்
வேலை வாய்ப்பு அலுவலகம்

வருட வருமானம் லட்சத்தில் அன்று
மாத வருமானம் லட்சத்தில் இன்று
நிம்மதி ?
பலன் இல்லை
பெயர் மாற்றுவதால்
எண்ணம் மாற்று

பலவீனம்
பறை சாற்றுதல்
சோதிடம் பார்த்தல்

மாதா பிதா
குரு
மனைவி

கோபத்தைக் குறைக்கும்
இதயத்தை இதமாக்கும்
இலக்கியம்

முக்காலமும் வாழ்பவர்
எக்காலமும் வாழ்பவர்
திருவள்ளுவர்

தமிழ் என்ற சொல்லின்றி
தமிழுக்கு மகுடம் சூட்டியவர்
திருவள்ளுவர்

தமிழன் என்ற சொல்லின்றி
தமிழினத்திற்கு பெருமை சேர்த்தவர்
திருவள்ளுவர்

உலகின் முதல்மொழி
மொழிகளின் தாய்மொழி
தமிழ்

இலக்கண இலக்கியங்களின்
இனிய சுரங்கம்
தமிழ்

யுகங்கள் கடந்தும்
இளமை குன்றாதது
தமிழ்

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி

நீங்காத நினைவு கவிஞர் இரா .இரவி

படம்
நீங்காத நினைவு கவிஞர் இரா .இரவி
திருப்பதிக்கு
பல மணி நேரம் பயணித்து
சில நொடிகள் மட்டும்
தரிசித்து மகிழும்
பக்தனைப் போல
பல மணி நேரம் பயணித்து
சில நொடிகள் மட்டும்
தரிசித்து மகிழ்ந்தேன் நான்
சில நொடிகள் மட்டுமே
நிகழ்ந்த சிறு சந்திப்பு
சில ஆண்டுகள் நீ டித்து
இருக்கும் நீங்காத நினைவு

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeraviஇறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண்தானம்செய்வோம் !!!!!

முப்பாலின் ஒப்பரவு கவிஞர் இரா.இரவி

படம்
முப்பாலின்ஒப்பரவுகவிஞர்இரா.இரவிஇந்தஉலகில்பிறந்தமனிதர்கள்யாவரும்சமம். பிறப்பால், நிறத்தால், தொழிலால், மொழியால், இனத்தால்ஏற்றத்தாழ்வுஇல்லைஎனஅறிவித்தஇலக்கியம்திருக்குறள். மனிதன்மனிதனுக்குச்சொன்னவாழ்வியல்நூல்திருக்குறள். திருக்குறளின்பெருமையைஉலகம்உணர்ந்துவிட்டது. ஆனால்தமிழர்கள்தான்இன்னும்சரியாகஉணரவில்லை. தடாகத்தில்மிதக்கும்தாமரையின்மணத்தைதூரத்தில்இருக்கும்வண்டுகள்உணர்ந்துதாமரையைத்தேடிவருகின்றனர். ஆனால்தடாகத்தின்உள்ளேஉள்ளதவளைகள்தாமரையின்மணம்அறியாமல்கத்துகின்றன. இந்தத்தவளைகளைப்போலவேபலதமிழர்கள்திருக்குறளின்பெருமையைஅறியாமலேஇருக்கின்றனர்.ஒருபிச்சைக்காரர்தினமும்பிச்சைஎடுத்துகாலம்கழித்துவந்தாராம். அவர்இறந்தபின்அந்தஇடத்திலேயேஅவரைப்புதைத்துவிடலாம்என்றுதோண்டியபோது, மிகப்பெரியபுதையல்இருந்ததாம். தன்காலுக்குஅடியில்புதையல்இருப்பதுதெரியாமலேபிச்சைஎடுத்துகாலம்கழித்துகாலமானார். அதுபோலநமதுதிருக்குறள்என்றபுதையல்நம்மிடம்இருப்பதைஉணராதசிலதமிழர்கள்பிறமொழிஇலக்கியங்களைஉயர்வானதுஎன்றுபெருமைபேசிக்காலம்கழித்துவருகின்றனர். திருக்குறளுக்குஇணையானஒருநூல்இந்தஉலகில்இதுவரைவரவில்லை, இனிவரப்போவதும்இல்லை. ஒப்பற்றஇந்தநூலைதேசியநூ…

பூ நுகரும் காலம்

இலக்கியங்களும் ஹைக்கூ கவிதைகளும்!கவிஞர் இரா.இரவியுடன் ஒரு நேர்காணல்

படம்
இலக்கியங்களும் ஹைக்கூ கவிதைகளும்!கவிஞர் இரா.இரவியுடன் ஒரு நேர்காணல்

http://seasonsalivideo.blogspot.com/2011/04/blog-post_19.html

படித்ததில் பிடித்தது

படம்
ஹைக்கூ- ச.சந்திரா

உயிரிருக்கும்வரை உழைக்கும்
உன்னத ஆயுதம்
எழுதுகோல்!

விதிமுறைக்கு மட்டுமே
கட்டுப்படும் அஃறிணைப்பிறவி
திறவுகோல்!

திறப்புவிழாவின் கதாநாயகன்!
தையற்காரனின் மூலதனம்!
கத்தரிக்கோல்!

கவிஞர் இரா .இரவி கவிதைகள்

கவிஞர் இரா .இரவி கவிதைகள்

http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=194606

All About eraeravi.com - Website Valuation report

All About kavimalar.com - Website Valuation report

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


அமாவாசை நாளில்
நிலவு
எதிர் வீட்டுச் சன்னலில்

கடல் கரைக்கு
அனுப்பும் காதல் கடிதம்
அலைகள்...

மரபுக் கவிதை
எதிர்வீட்டு சன்னலில்
என்னவள்...

உயிரற்ற பொருளையும்
தாக்கியது வைரஸ்
கணினி

ஒலியைவிட ஒளிக்கு
வேகம் அதிகம்
பார்வை போதும்
விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு

முகம் பார்க்க வேண்டும்
என்னவளே உன்
முகத்தைக் காட்டு....

மானம் காக்கும் மலர்
வானம் பார்க்கும் பூமியில்
பருத்திப்பூ

வண்ணம் மாற வில்லை
மழையில் நனைந்தும்
வண்ணத்துப்பூச்சி

வண்ணம் மாறியது
கட்சி தாவியது
அந்தி வானம்

கோடை மழை
குதூகலப் பயணம்
திரும்புமா? குழந்தைப்பருவம்.

சாலையில் கவனம்
வழியில் மரணக்குழி
செய்தியாகி விடுவாய்

சந்திரன் அல்லி
நான் அவள்
காதல்

புத்தாடை நெய்தும்
நெசவாளி வாழ்க்கை
கந்தல்

தோற்றத்தை விட
குரல் அழகு
குயில்

ஏக்கத்தில் குழந்தை
உயரத்தில் பஞ்சுமிட்டாய்
வான் மேகம்.

ஆயத்தம்
டயர் வண்டி ஓட்டி
நாளைய விமானி

பிறரின் உழைப்பில்
பிரகாசிக்கும்
சோம்பேறி
முதலாளி


பறிக்க மனமில்லை
அழகாய் மலர்ந்தும்
விதைத்தது அவள்

பறக்காமல் நில்
பிடிக்க ஆசை
பட்டாம்பூச்சி


--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
w…

கவிஞர் இரா .இரவி படைப்புகள் படித்து மகிழுங்கள்

கவிஞர் இரா .இரவி படைப்புகள் படித்து மகிழுங்கள்

http://www.eelamwebsite.com/?p=12620

http://www.eelakkural.com/index.php?option=com_content&view=category&id=34&Itemid=14

http://www.tamilthottam.in/t16527-topic

http://www.tamilthottam.in/f16-forum

http://www.noolulagam.com/product/?pid=3996

http://www.noolulagam.com/product/?pid=3997

http://www.koodal.com/poem/tamil/writers.asp?author-name=Ravi
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண்தானம்செய்வோம் !!!!!