புதன், 29 டிசம்பர், 2010

ஹைக்கூ இரா .இரவி

http://www.shivanimathur.com/images/paintings/Dream_girl_L.jpg
ஹைக்கூ இரா .இரவி

பொய் மட்டுமே மூலதனம்
அமோக வருமானம்
அரசியல்

தொட்டில் முதல் சுடுகாடு வரை
தொடரும் கொடிய நோய்
லஞ்சம்

வறுமை ஒழியவில்லை
வளங்கள் இருந்தும்
கருப்புப்பணம்

ஏழை மேலும்ஏழையானது போதும்
விரைவில் வேண்டும்
மாற்றம்

பிரதமரால் அன்று
கோடீஸ்வரர்களால் இன்று
மந்திரி பதவி

அளவு சுவை
இரண்டும் பெரிது
அவள் இதழ்கள்

இதழ்கள் பேசவில்லை
விழிகள் பேசின
மொழி பெயர்தது மனசு

ஏமாளிகள் உள்ளவரை
எமாற்றுவோருக்குப் பஞ்சமில்லை
சாமியார்கள்

திரும்புகின்றது
கற்காலம்
மின்தடை

அனைத்தும் அறிவோம் என்றவர்
அறியவில்லை கேமிரா
சாமியார்

உபதேசம்
பிரம்மச்சரியம்
சல்லாபத்துடன்

கோடிகள் குவிந்தும்
பட்டினியாகவே
கடவுள்

தங்கத்தின் ஆசை
விதிவிலக்கல்ல
கடவுள்களும்

வயது கூடக் கூட
அழகும் கூடியது
அவளுக்கு

செவ்வாய், 28 டிசம்பர், 2010

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

http://behindwoods.com/Gallery/Actress/Manisha/Manisha11.jpg
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

மூளை மரணம்
பயன்பட்டது பலருக்கு
உடல் தானம்

இருவருக்கு விழியானான்
இறந்தவன்
விழி தானம்

உணர்த்தியது
நிரந்தரமற்றது அழகு
வானவில்

இனிது இனிது
தமிழில் இனிது
அவள் பெயர்

விஞ்ஞானிகளின் ராக்கெட்டை
வென்றது
சிவகாசிச்
சிறுவனின் ராக்கெட்

விலைவாசி ஏற்றம்
ஊதியத்தில் இல்லை மாற்றம்
வேதனையில் தனியார் பணியாளர்கள்

ஆயிரம் பேரிலும்
தனியாகத் தெரிந்தது
அவள் விழிகள்

விலை மதிப்பற்றது
விவேகமானது
அன்பு

மலரும் நினைவு
வளரும் கனவு
அவள் முகம்

சனி, 18 டிசம்பர், 2010

விலங்காக மாறும் மனிதர்கள் கவிஞர் இரா .இரவி

விலங்காக மாறும் மனிதர்கள் கவிஞர் இரா .இரவி

சேர்ந்து வாழும் விலங்குகள்
மோதி வீழும் மனிதர்கள்


சுனாமி அறிந்த விலங்குகள்
சுனாமி அறியாத மனிதர்கள்


பொது நலத்துடன் விலங்குகள்
சுய நலத்துடன் மனிதர்கள்


சாதி இல்லா விலங்குகள்
சாதி பார்க்கும் மனிதர்கள்


சதி அறியாத விலங்குகள்
சதி அறிந்த மனிதர்கள்


மனிதாபிமானத்தோடு விலங்குகள்
விலங்காபிமானம்மின்றி மனிதர்கள்


மனிதனாக மாறும் விலங்குகள்
விலங்காக மாறும் மனிதர்கள்


நூல்கள் பற்றி அறிய அற்புதமான இணையம் பார்த்து மகிழுங்கள்

நூல்கள் பற்றி அறிய அற்புதமான இணையம்
பார்த்து மகிழுங்கள்
http://www.noolulagam.com/

நூல்கள் பற்றி அறிய அற்புதமான இணையம் பார்த்து மகிழுங்கள்

நூல்கள் பற்றி அறிய அற்புதமான இணையம்
பார்த்து மகிழுங்கள்
http://www.noolulagam.com/

திங்கள், 13 டிசம்பர், 2010

சிந்தையில் ஹைக்கூ இரா .இரவி

Infotainment" href="http://keralites.net/" target="_blank"> Fun & Info @ Keralites.net
சிந்தையில் ஹைக்கூ இரா .இரவி


பெரிய மீன்கள்
சின்ன மீன்களைத் தின்றது
அரசியல்

இலவசங்களால்
வசமாக்கி திருடினர்
மூளையை

மாற்றுங்கள் பெயரை
தொலைக்காட்சி அன்று
தொல்லைக்காட்சி என்று

பதக்கங்கள் பெற்றும்
பெருமை இல்லை
மேடையில் கொலைபாதகன்

நிதிக்கு அதிபதியானால்
சில நீதிபதியும்
உன் வசம்

இயக்கையைச் சிதைக்க
மனித இனம் சிதைந்தது
சுனாமி

பெண்கள் இட ஒதிக்கீடு
உள்ஒதிக்கீடு இருக்கட்டும்
மன ஒதிக்கீடு தருக

பெரிய மனிதர்களிடமும்
சின்னப்புத்தி வளர்க்கும்
சின்னத்திரை


குழந்தைகளுக்குக் கொடுக்கும்
குச்சி மிட்டாய்
வாக்களிக்கப் பணம்

கோடிகள் கொள்ளை அங்கே
வறுமையில் தற்கொலைகள் இங்கே
வலிமையான பாரதம்

முதலிடம்
பெண்களை அழவைப்பதில்
தொலைக்காட்சிகள்

பித்தலாட்டம்
மூலதனம்
ராசிக்கல் சோதிடம்

விளக்குமாறுக்கு பட்டுக்குஞ்சம்
ஆபாச நிகழ்ச்சிகளுக்கு
செந்தமிழ்ப்பெயர்

வேதனையிலும் வேதனை
போகப் பொருளாகச் சித்தரிப்பதை
பெண்களே ரசிப்பது

குடியால் கோடிகள்
குடிமகன் தெருக்கோடியில்
குடு்ம்பம் நடுத்தெருவில்

நல்ல முன்னேற்றம்
சீருடையில் மாணவன்
மதுக் கடையில்

என்று தெளியுமோ
போதையில் பாதை மாறிய
தமிழன்

விளைநிலங்களும்
மின்சாரமும் இலவசம்
வெளிநாட்டவர்க்கு

விரைவில் கிட்டும்
உலக அளவில் முதலிடம்
ஊழல்

கொடிகளை விட
கோடிகளே முக்கியம்
அரசியல்

சமாதானமானார்கள்
சண்டையிட்டப் பெற்றோர்கள்
குழந்தையால்

முந்தைய சாதனையை
முறியடித்தனர் அரசியல்வாதிகள்
மெகா ஊழல்

யாரும் வாங்காமலே
மலர்ந்தன பூக்கள்
வாடினாள் பூக்காரி
யார் அழகு ?

Bala Vinothயார் அழகு ? கவிஞர் இரா .இரவி

அருவி அழகா ?

அவள் அழகா ?

அவள் விழிகள் அழகா ?

நடந்தது பட்டிமன்றம்

அருவி நீர் வீழ்ச்சி

அவள் பார்வையோ மலர்ச்சி

இதழ்கள் இனிய கள்

அருவியை விட அவளே

கொள்ளை அழகு

தீர்ப்பானது

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

சின்னச்சின்னக்கதைகள் இரா .இரவி

Infotainment" href="http://keralites.net/" target="_blank"> Fun & Info @ Keralites.net

சின்னச்சின்னக்கதைகள் இரா .இரவி

-கொள்ளி போட பெற்ற மகன் ஈமச்சடங்கை கணினியில் பார்த்து அழுதான் அமரிக்காவில்

உனக்காக உயிரையே தருவேன் என்ற காதலன் அவன் திருமண அழைப்பிதழ்
தந்தான்

தாய்ப்பால் தரவேண்டியவள் கள்ளிப்பால் தந்தாள் தான் பட்ட கஷ்டம் தன்
மகள் அடைய, வேண்டாம் என்று

அழுக அழுக பள்ளியில் சேர்த்தேன் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு செல்கிறான் மகன்

பட்டம் வாங்கி விட்டு கனவு கண்டவன் டாஸ்மார்க்கில் பிராந்தி விற்கிறான்

இறந்த பின்னும் இயற்கையை ரசிதுப்பார்தான் விழிக்கொடை தந்தவன்

புதிய ஹைக்கூ இரா .இரவி

AmazingPhotoraphyofNaturalScenery12.jpg

--

புதிய ஹைக்கூ இரா .இரவி

வளர்த்திட்ட மண்ணிற்கு
நன்றி சொன்னது மரம்
பூ உதிர்த்து

மழை நின்ற பின்னும்
மழை
மரத்திலிருந்து

இயற்கையில் செயற்கை
சிகைத் திருத்தமென
செடித் திருத்தம்

பொறாமை கொள்ளவில்லை
மரத்தைப் பார்த்து
புற்கள்

வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கின்றது
தாஜ்மஹால்

பார்ப்பதில்லை
காதல் காட்சி
அவளையே ஞாபகப்படுத்துவதால்

நீளமான கூந்தல்
எங்கு பார்த்தாலும்
அவள் நினைவு

பெரிய சோகத்தையும்
நொடியில் அழிக்கும்
அவள் புன்னகை

மறக்க நினைத்தாலும்
முடிவதே இல்லை
அவள் முகம்

நல்ல கவிதைகள்
நூலாகுமுன் இரையானது
கரையானுக்கு

புவி ஈர்ப்பு விசை நியூட்டன்
விழி ஈர்ப்பு விசை
காதலர்கள்

மதங்களை விட
மிகவும் உயர்வானது
மனிதம்

பிரிவால் துடி துடித்தது
அறுபட்ட
பல்லியின் வால்

சிந்தைகளை
சிதைத்து
கேளிக்கைகள்

சென்னைகன்னிமாரா நூலக அரங்கில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் பங்கு பெற்றவர்களின் ஒரு பகுதி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12cd90d2987b422f&attid=0.6&disp=inline&realattid=file5&zw

சென்னை ஹைக்கூ திருவிழாவில் கவிப் பேரருவி ஈரோடு தமிழன்பன் கவிஞர் இரா .இரவியின் ஹைக்கூ திறமையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி விருது வழங்கிப் பாராட்ட

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12cd90d2987b422f&attid=0.2&disp=inline&realattid=file1&zw

சென்னை ஹைக்கூ திருவிழா

சென்னை ஹைக்கூ திருவிழாவில் கவி பேரருவி ஈரோடு தமிழன்பன் முனைவர் ராமகுருநாதன்
ஹைக்கூ கவிஞர்கள்அமுத பாரதி,மித்ரா ,மு.முருகேஷ் ,,புதுவைத் தமிழ்நெஞ்சன்,புதுவைசீனு தமிழ்மணி,
இரா .இரவி,கன்னிகோயில் ராஜா ,வசீகரன் ,மரியா தெரசா ,சுடர் முருகையா ,மயிலாடுதுறை இளையபாரதி,
நந்தவனம்சந்திர சேகரன் ,பரிமளம் சுந்தர் மற்றும் பலர்

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12cd9123244efe7e&attid=0.1&disp=inline&realattid=file0&zw

சனி, 11 டிசம்பர், 2010

சென்னை ஹைக்கூ திருவிழா

சென்னை ஹைக்கூ திருவிழாவில் ஹைக்கூ ஆற்றுப்படை
நூல் வெளியீடு முனைவர் ராமகுருநாதன் நூல் ஆசிரியர்
இரா .இரவி ஹைக்கூ கவிஞர்கள்புதுவைத் தமிழ்நெஞ்சன் கன்னிகோயில் ராஜா ,வசீகரன் ,மரியா தெரசா
மற்றும் பலர்
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12cd90fd7bb99401&attid=0.1&disp=inline&realattid=file0&zw

சென்னை ஹைக்கூ திருவிழா

சென்னை ஹைக்கூதிருவிழாவில் கவி பேரருவி ஈரோடு தமிழன்பன்
முனைவர் ராமகுருநாதன் ஹைக்கூ கவிஞர்கள்அமுத பாரதி , மித்ரா ,


இரா .இரவி ,கன்னிகோயில் ராஜா ,வசிகரன் ,சுடர் முருகையா ,பரிமளம் சுந்தர்
மற்றும் பலர்
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12cd904923e78f3b&attid=0.1&disp=inline&realattid=file0&zw

மதுரையில் நடந்த மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா புகைப்படங்கள்

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12cd618141d248e8&attid=0.5&disp=inline&realattid=f_ghkoakji4&zw

மதுரையில் நடந்த மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா புகைப்படங்கள்

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12cd618141d248e8&attid=0.6&disp=inline&realattid=f_ghkoanlb5&zw
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12cd618141d248e8&attid=0.3&disp=inline&realattid=f_ghkoa75b2&zw

மதுரையில் நடந்த மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா புகைப்படங்கள்

மதுரையில் நடந்த மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா புகைப்படங்கள்
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12cd618141d248e8&attid=0.1&disp=inline&realattid=f_ghko9olr0&zw
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12cd618141d248e8&attid=0.2&disp=inline&realattid=f_ghko9wcf1&zw

புதன், 8 டிசம்பர், 2010

ஹைக்கூ ஆற்றுப்படை நூலாசிரியர் :இரா.இரவி விமர்சனம் :ச.சந்திரா

ஹைக்கூ ஆற்றுப்படை நூலாசிரியர் :இரா.இரவி விமர்சனம் :ச.சந்திரா


ஹைக்கூ சாலை :
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறுத்துவதே ஆற்றுப்படை என்பர்.துளிப்பா என்றால் என்னவென்றே அறியாதோரை அறியச் செய்வதோடு அவர்களை ஹைக்கூ சாலையில் நிரந்தரமாக பயணிக்க வைக்கும் வல்லமை இரா.இரவியின் ஹைக்கூ ஆற்றுப்படை எனும் நூலுக்கு உண்டு. எனவே இப்பெயர் இந்நூலுக்குப் பொருத்தமான ஒன்றே !
தமிழன்னைக்கு மாலை :
அமுதபாரதி முதலாக தேவகிமைந்தன் ஈறாக உருவாக்கிய முத்துக்களை , கவிஞர் இரா.இரவி தன் சொல்லிழைகளால் திறனாய்வு மாலையாகத் தொடுத்து தமிழன்னைக்குச் சூட்டி அழகு பார்த்திருக்கிறார்.துளிப்பா என்பது இரா.இரவியின் இரத்தத்தில் கலந்த ஒன்றாக இருக்குமோ என்று எண்ணி அதிசயிக்கும் அளவிற்கு அவர் இந்த மூன்று வரிகளுக்குள் மோகம் வைத்திருப்பதை இந்நூலின் வழி உய்த்துணர முடிகிறது.அவர்தம் இலக்கிய பயணத்தில் அதிகம் பயன்படுத்திய சொல் ஹைக்கூவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் போன்றோரின் கணிப்பு.
நதியோட்டம் :
கோவிலுக்குள் நுழையும் கோபுர வாயிலாய் நூலாசிரியரைப் பற்றியும் ,நூலின் தன்மை குறித்தும் சொல்லிக்கொண்டே ,திறனாய்வுக் கோட்டைக்குள் நுழையும் இலாவகம் கவிஞர் இரா.ரவிக்கே உரியது.இலக்கியம் ந்ன்கு கற்றோர் பயன்படுத்தும் செந்தமிழ் வார்த்தை களை தம் திறனாய்வின்போது அவர் உபயோகிப்படுத்தும்விதம் நம்மையெல்லாம் ஆச்சிரியப்படவைக்கும்.இந்நூலில் வாசித்துணர்ந்த விமர்சனங்கள் ,சுட்டிக்காட்டிய மேற்கோள்கள் திறனாய்வாளரின் சமூக அக்கறையை ,மூட நம்பிக்கை எதிர்ப்பை ,சாதி மத இன மொழி பேத மறுப்பை வெளிப்படுத்தும்விதமாக உள்ளன.
உதாரணத்திற்கு ஒன்றிரண்டு :
" கொடி கொடுத்தீர் !
குண்டூசி தந்தீர் !
சட்டை ?" (புதுவைத் தமிழ்நெஞ்சன் )
ம.ஞான சேகரன் கவிதை :
" தேள் கொட்டியது
கணியனை
குறி சொன்ன நேரம் !"
தீண்டாமையை மறுக்கும் ஒரு கவிதை :
" தொடருது மனக்கவலை
அறுபதாம் ஆண்டு விடுதலை நாளிலும்
தொங்குவது இரட்டைகுவளை "
அகலமா ? ஆழமா ?
இலக்கியத்தின் உட்புகுந்து அதனை முழுமையாய் அனுபவிக்கும் உணர்வு உடையவரும் ,நுண்மாண் நுழைபுலம் மிக்கவரும் மட்டுமே ஒரு சிறந்த திறனாய்வாளராக இருக்க முடியும்.மேற்கூறிய கூற்றிற்கு இரா.இரவிபொருத்தமானவர்தான் என்பதை இந்த ஹைக்கூ ஆற்றுப்படை நூல் நன்றாகவே நிரூபணம் செய்கின்றது.சமூக நல்லெண்ணமும் ,அழகியல் உணர்வும் ,மரபு போற்றும் தன்மையும் திறனாய்வாளருக்கு வேண்டிய இன்றியமையாத பண்புகளாகும்.இவையும் இரவி அவர்களுக்கு பொருந்தி வருகிறது.இவரது விமர்சன நோக்கு சமுத்திரம் போல் ஆழ்ந்தும் ,மைதானத்தைப் போல் படர்ந்தும் ,அம்பைப் போல் கூர்மையாகவும் இருப்பதை நூல் முழுமையும் வாசித்துப் பார்த்தால் உணர முடியும்.
அறிவியலா ? இலக்கியமா ?
ரோஜாவை இதழ் இதழாய்ப் பிரித்துப் பார்த்துச் செய்யும் ஆய்விற்கு அறிவியல் ஆராய்ச்சி எனப் பெயர். அதுவே ஒற்றை ரோஜாவை உற்றுநோக்கி அதில் இலயித்து அதனைக் குறித்து உணர்வுப்பூர்வமாக எழுதினால் அதற்கு இலக்கிய ஆராய்ச்சி எனப் பெயர்.ஹைக்கூ குளத்தில் மலர்ந்த தாமரை, அல்லி ,குவளை போன்ற பல்வேறு பூக்களை கவிஞர் இரா.இரவிஉற்றுநோக்கி உணர்ந்ததன் விளைவுதான் இந்த ஆற்றுப்படை நூல் .படைப்பாளி எவ்விதமாக உணர்ந்து எழுதினானோ அது சிதையாமல்,அதன் வெளிப்பாடாக விமர்சனம் இருப்பின் அதுவே சிறந்த திறனாய்வு.இவ்விதமாய் எழுதுவது கவிஞர் இரா.இரவிக்கு கை வந்த கலையாக இருக்கிறது.
அதிசயமும் ஆச்சர்யமும் :
ஒரே வாசிப்பில் ஒப்பற்ற 26 நூல்களின் உணர்வோட்டத்தைச் சொல்லிவிடுகின்றார் இரவி அவர்கள். திறனாய்வின்போது சுட்டிக்காட்டியிருக்கும் ஹைக்கூ கவிதைகளும் ,அவற்றிற்கு அவர் தந்துள்ள விளக்கங்களும் அருமை.சின்னஞ்சிறு வாக்கியங்களாக மொழிநடை இருப்பதனால் வாசிப்போர்க்கு விமர்சனம் எளிதில் புரிந்தும் விடுகிறது.இலக்கியத்தை முழுமையாக கற்றறிந்தவரும் இப்படி திறனாய்வு செய்ய இயலுமா என அதிசயவைக்கிறது இவரது ஜப்பானிய-தமிழ் ஹைக்கூ நூல் விமர்சனம் (முனைவர் பட்ட ஆய்வேடு)
மனதார......
இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் ஹைக்கூ திலகம் இரா.இரவியின் பத்தாவது மைல்கல்லான ஹைக்கூ ஆற்றுப்படை நூல் அவரை கவிதை உலகிலிருந்து திறனாய்வு உலகத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றது.இந்த மாற்றம் கவிஞர் இரா.இரவி இலக்கிய வானில் மென்மேலும் சுடர்விடுவதற்கு உறுதுணை புரியும்.படிப்பாளியை படைப்பாளியாக்கும் இந்த ஆற்றுப்படை நூல் இன்னும் பல துளிப்பா கவிஞர்களை இலக்கிய உலகிற்கு தரும் என்பதில் எவ்வித ஐயமும் உண்டோ ?கவி சூரியன் இரா.இரவி அவர்களுக்கு என்போன்ற ஹைக்கூ பிரியர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது