திங்கள், 31 மார்ச், 2014

ஜப்பானிய ஹைகூ ! 100 குறிப்புரையுடன் ! நூல் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

ஜப்பானிய ஹைகூ ! 100 குறிப்புரையுடன் !நூல் ஆசிரியர்  ஈரோடு தமிழன்பன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


விழிகள் பதிப்பகம் !
8/எம் 139, 7 வது குறுக்குத் தெரு ,
திருவள்ளுவர்  நகர் விரிவு  ,
சென்னை .41.
விலை ரூபாய் 100.

தந்தை ஈரோட்டு பெரியாருக்குப் பிறகு  ஈரோடு என்ற ஊரை பெயரோடு சேர்த்துக் கொண்டு ஈரோட்டுக்குப் பெருமை சேர்த்து வருபவர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் .மரபுக்கவிதை, புதுக்கவிதை ஹைக்கூ கவிதை மூன்று பாவும் எழுத வல்லவர். 

ஹைக்கூ திருவிழாவிற்காக சென்னை செல்லும்  போதெல்லாம் விழாவில் நூல் ஆசிரியர்  ஈரோடு தமிழன்பன் அவர்களை சந்திப்பது வழக்கம் .குழந்தை உள்ளம் கொண்டவர் அன்பாக நலம் விசாரித்து விட்டு தொடர்ந்து இயங்கி வருவதற்கு எனக்கு பாராட்டும் தெரிவித்தார்கள் .எனது ஆயிரம் ஹைக்கூ நாளை அவரிடம் வழங்கி வந்தேன் .தமிழ்த்தேனீ  இரா  .மோகன் அவர்களுடன் தொடர்வண்டியில் பயணம் செய்து சென்னை ஹைக்கூ திருவிழாவில் கலந்துகொண்டு தமிழ்த்தேனீ  இரா  .மோகன் ,ஈரோடு தமிழன்பன் இருவர் உரை கேட்டபின் ஹைக்கூ ஈடுபாடு விதை விருட்சமானது .

இந்த நூலை அமெரிக்காவில் உள்ள அவரது இனிய நண்பர் புத்தகக் காதலர் பொள்ளாச்சி நா .கணேசன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருக்கிறார்கள் .தமிழ் ஹைக்கூக்கவிதை வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஜப்பானிய ஹைகூ ! 100 குறிப்புரையுடன்படைத்தது உள்ளார்கள் .

நூல் ஆசிரியர்  ஈரோடு தமிழன்பன் அவர்கள் 80 வயதில் வாழ்நாள் சாதனையாக சரித்திரம் படைத்துள்ளார் .64 புகழ் பெற்ற நூல்கள் படைத்துள்ள கவிஞரின் படைப்பு .ஹைக்கூ கவிதை சென்றியு கவிதை தமிழ்நாட்டில் பரவிட , படைப்பாளர்கள் பெருகிட காரணமானவர். தமிழ் ஹைக்கூ கவிதையின் முன்னோடியாக மட்டுமன்றி தொடர்ந்து படைத்து வரும் படைப்பாளி .

ஜப்பானிய ஹைகூ கவிதையின் ஆசிரியர் பெயர் ,ஆங்கிலத்தில் கவிதை பின் அதன் தமிழாக்கம் அந்த ஹைக்கூ தொடர்பான குறிப்புகள் என்று உள்ளன .நூலின் அட்டைப்படம் உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .இந்த நூலில்  நூறு முத்துக்கள் இருந்தாலும் ஒரு சில முத்துக்களை மட்டும் உங்கள் பார்வைக்கு .
.
யமாசகி சோகன் !

நிலாவே ! நாங்கள் 
உனக்கொரு கைப்பிடி போட்டுவிட்டால் 
என்ன அழகிய விசிறி நீ ! 

ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்கள் இயற்கைப் பாடுவதில் வல்லவர்கள்
என்பதை மெய்பிக்கும்  விதமான ஹைக்கூ நன்று .

 "நிலாவுக்குக் கைப்பிடி போட்டுப் பார்க்கும் கற்பனையில்கிடைக்கிற  கவிதை இன்பத்தை மறுக்கவா முடியும் ."  நூல் ஆசிரியர் கருத்து நன்று ..

இது சரியான ஹைக்கூ அன்று விமர்சித்தவர்களும் உண்டு. ஆனாலும் இந்தக் கவிதை ஹைக்கூ உணர்வைத் தருகின்றது என்பது உண்மை 

கவிதைக்கு பொய் அழகு .இயற்கை ரசிக்க கற்பனைக் கண்ணும் அழகு என்பதை உணர்த்தும் ஹைக்கூ மிக நன்று .இதோ .

அரிகிதா மொரிதகே !

வில்லோ மரங்கள் 
மலையின் முகத்தில் புருவங்கள் 
வரைகின்றன !  

மரங்கள் புருவம் வரையுமா ? என்று கேள்வி கேட்பவர்களும் நம்மில் உண்டு .கவிஞன்   தான் கண்ட இயற்கைக் காட்சியை கற்பனை கலந்து காட்சிப் படுத்தி வாசகனுக்கு கவி விருந்து வைக்கின்றான். இனி ரசித்துப் பார்த்தால் புருவம் போல தெரியும் .

நிஷியாமா சோயின் !

வாழ்க்கை 
ஒரு பட்டாம் பூச்சி போல 
அது என்னாவாயிருந்தபோதும் !

ஒரு பட்டாம் பூச்சி போல வாழ்க்கை வாழ்க்கையை ரசித்து வாழுங்கள் இன்பம் துன்பம் எது வந்தபோதும் இயல்பாய் இருங்கள் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளன .

இசா !

அதோ அந்த உழத்தி
அழும் தனது குழந்தை இருக்கும் 
திக்கில் நடுகிறாள் நாற்று ! 

வயலில் வேலை செய்யும் பெண்ணின் குழந்தை பாலுக்காக பசியோடு அழுகிறது .தாயோ வயலில் நடவு செய்து கொண்டு இருக்கிறாள் .அவள் ஏழை இது போன்ற காட்சி இந்தக் கவிதை படித்தவுடன் வாசகன் மனக் கண்ணில் விரிந்து விடும் .இதுதான் படைத்த இசா அவர்களின் வெற்றி .பகிர்ந்த  நூல் ஆசிரியர்  ஈரோடு தமிழன்பன் அவர்களின் வெற்றி.

சிய்யோ- நி !
பூக்கள் இல்லாமல் 
நீ சுதந்திரமாய்  இருக்கிறாய் 
ஒரு வில்லோ மரம்போல !

இந்த ஹைக்கூ   பூக்கள் இல்லாததற்காக  மரம் வருந்த வில்லை .பணம்  இல்லாததற்காக மனம் வருந்தாதே என்பதாகவும் உணர முடியும் .படைப்பாளி நினைத்து உருவாக்கிய பொருள் தவிர வேறு பொருளும் உள்ளடக்கியத்தான் ஹைக்கூ வின் சிறப்பு .

என்செய் !

என் உடலுக்கு விடைபெறு பரிசு 
அது விரும்பும்போது விடுவேன் 
என் கடைசி மூச்சு !  
.
நம்மில் பலர் சாவு என்று வருமோ என்று அஞ்சி தினம் தினம் செத்து வருகின்றனர் .அவர்களுக்கான ஹைக்கூ இது . சாவு என்றுவந்தால் என்ன ஏற்றுக் கொள்ளும் மன நிலை பெறு.என்பதை உணர்த்தும் விதமான ஹைக்கூ நன்று .  

சீய்ஷி யாமகுச்சி !

சவைத்துச்  சாப்பிட   
பிளம் புளிப்பில் மீண்டும் 
பிறந்தேன் சிறுவனாக !

இந்த ஹைக்கூ கவிதை படிக்கும் வாசகனுக்கு அவனது சிறு வயது மலரும் நினைவுகளை மலர்விக்கும் விதமாக உள்ளது. பாராட்டுக்கள் .

 நூல் ஆசிரியர்  ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய குறிப்புகளை  எழுதாமல் நானும் ஒரு ஹைக்கூ கவிஞன் என்பதால் என் மனதில் பட்ட குறிப்புகளை எழுதி உள்ளேன் .அவர் எழுதியுள்ள குறிப்புகள் மிக நன்று .

 பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்து அணி சேர்க்க வேண்டும்  என்றார்  மகாகவி பாரதியார் .அது போல நூல் ஆசிரியர்  ஈரோடு தமிழன்பன் அவர்கள்  ஜப்பானிய ஹைகூ ! 100 குறிப்புரையுடன் வழங்கி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் கவிஞர்கள்

சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் கவிஞர்கள்

கவிஞர் ஞானபாலன் கைவண்ணத்தில் !

ஞாயிறு, 30 மார்ச், 2014

http://www.noolulagam.com/product/?pid=6802

http://www.noolulagam.com/product/?pid=6802

சிறு துளியில் சிகரம் நூல் ஆசிரியர் : கவிக்கோமான் மன்னை பாசந்தி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. *****

சிறு துளியில் சிகரம் !

நூல் ஆசிரியர் :  கவிக்கோமான் மன்னை பாசந்தி !
      அணிந்துரை  :  கவிஞர் இரா. இரவி. !
*****       கவிஞர் மன்னை பாசந்தி அவர்களின் மூன்றாவது நூலான  சிறுதுளியில் சிகரம் முத்தாய்ப்பாக முத்திரைப் பதிக்கும் விதமாக  வந்துள்ளது. பாராட்டுக்கள். அலுவலகப் பணியோடு இலக்கியப்  பணியும் செய்து வரும் இனியவர். பாசந்தி என்று ஒரு இனிப்பு உண்டு.  இவரும் ஒரு இனிப்பான மனிதர். ஓய்வின்றி படைத்து வரும் படைப்பாளி. சிறுதுளி பெருவெள்ளம், கேள்விப்பட்டு இருக்கிறோம். சிறுதுளியில் சிகரம் வித்தியாசமாக உள்ளது. சிறுதுளியிலும் சிகரம்  உண்டு.   
       இயந்திரமயமான உலகில் இன்று நீண்ட நெடிய மரபுக்  கவிதைகள் படிக்க நேரமும் , பொறுமையும் இருப்பதில்லை. ஆனால்  ஹைக்கூ கவிதைகள் மூன்றே வரிகளில் இருப்பதால் ஆறிலிருந்து அறுபது வரை எல்லா வயதினரும் விரும்பிப் படிக்கிறார்கள். ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். நூலாசிரியர் மன்னை பாசந்தி.  அவரது எல்லா ஹைக்கூ கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச்  சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு. 
       முதல்ஹைக்கூ  கவிதையிலேயே முத்திரை பதித்து விடுகிறார்.   காட்சிபடுத்தும் ஹைக்கூ மிக நன்று.
       குழந்தையின் பாதம்
       கலசத்தின் மேல்
       கோபுர நிழல்.     
உலக ரவுடியாகி விட்ட இலங்கை இராணுவம் தமிழினத்தை  கொன்று குவித்து கொடூரம் நிகழ்த்தி கோரத் தாண்டவம் ஆடியும்   இன்னும் திருந்தாமல் தமிழக மீனவர்களைத் தாக்குவது சுடுவது சிறைப்பிடிப்பது தொடர்கதையாகி வருகின்றது. தட்டிக்கேட்க நாதி  இல்லை. அதனை உணர்த்தும் ஹைக்கூ.
       பரிதவிப்பில்
       மீனவர்கள்
       இலங்கை  அட்டூழியம்!
       திரைஉலகில் முயற்சி செய்து வாய்ப்பு  கிடைக்காமல் சொந்த  ஊர் செல்ல முடிவெடுத்த பொது கவியரசு கண்ணதாசன் மயக்கமா? பாடல் கேட்டு முடிவை மாற்றி திரை உலகில் திரும்பவும் முயற்சித்து மூன்று தலைமுறைக்கும் பாடல் எழுதிய காவியக் கவிஞர் வாலி  பற்றிய ஹைக்கூ நன்று.
       வாலிபக் கவிஞன்
       வாலி தந்த வலி
       வாலியின் மரணம்.
இயற்கையைப் பாடுவதில் ஜப்பானியக் கவிஞர்களை விஞ்சும் வண்ணம் தமிழகக் கவிஞர்கள் படைத்து விடுகிறார்கள் என்பதற்கு சான்று கூறும் விதமான ஹைக்கூ.
      
மழையில்  நனையாத
       இரயில்  பூச்சி
       காத்தது  நாய்குடை.
இன்றைய இளைய தலைமுறையினை கவனத்தில் கொண்டு கடைபிடிக்க வேண்டிய கருத்து. வேகம் விவேகமன்று என்பதை  உணர்த்திடும் ஹைக்கூ நன்று.
       துரித பயணம்
       விரைவில் மரணம்
       வாகன விபத்து.
       பேராசையில் ஆட்டம் போடும் மனிதனைப் பார்த்து ஆடாதடா  ஆடாதடா மனிதா என எச்சரிக்கை செய்வது போல வாழ்வின்  நிலையாமையை உணர்த்தும் வண்ணம் சித்தர்களின் பாடல் போல  உள்ள ஹைக்கூ.
       மனித மரணம்
       நொடியில் சாம்பல்
       மின்சார தகனம்.  
காதல் எப்படி வருகிறது? எதனால் வருகிறது? யாருக்கும்  யாருக்கும் வருகிறது? திட்டமிட்டு வருவதல்ல காதல். எதிர்பாராமல்  நிகழும் விபத்து காதல்.. காதலைப் பாடாத கவிஞர் உண்டோ? இல்லை. நூலாசிரியர் மண்ணை பாசந்தி அவர்களும் காதலைப் பற்றிப் பாடி  உள்ளார் பாருங்கள்.
       எப்படித்தான் வருகிறது
       யூகிக்க முடியுமா
       காதல்.
       காதல் திருமணங்கள் புரிந்தவர்கள் மனமுறிவுக்கும் நீதிமன்றத்தில் வரிசையில் நிற்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இந்தநிலை மாற வேண்டும். காதலித்து கரம் பிடித்து துணையுடன் சண்டைகளின்றி வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று புத்தி சொல்லும்  விதமான ஹைக்கூ.
       முன்னர் இனித்தது
       பின்னர் கசந்தது
       காதலி மனைவியானதும்.     
சில மனிதர்கள் பணம் பணம் என்று அலைகிறார்கள். பணமும்  சேர்த்து விடுகிறார்கள். பணத்தோடு நோயும் சேர்ந்து விடுகின்றன. பிடித்த இனிப்பைக் கூட உண்ண முடியாத அளவிற்கு நோய்  மிகுதியாகி விடுகின்றது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்  என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.
       நோயே இல்லை
       வாழ்ந்தான் ஏழை
       கோடீஸ்வரனாக.
       பல சிந்தனைகளை விதைக்கும் விதமாக வாசகரை  நெறிப்படுத்தும் விதமாக பண்படுத்தும் விதமாக ஹைக்கூ  வடித்துள்ளார்.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் கவிஞர்கள் இரா .இரவி ,கன்னிக் கோவில் இராஜா , திருவை பாபு , ஞானபாலன் ,யாத்விகா ,சாந்தி ஆகியோர் .

சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் கவிஞர்கள் இரா .இரவி ,கன்னிக் கோவில் இராஜா ,  திருவை பாபு , ஞானபாலன் ,யாத்விகா ,சாந்தி ஆகியோர் .

சனி, 29 மார்ச், 2014

பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் சி. விநாயக மூர்த்தி அவர்களின் நேர்முகம் !

பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் சி. விநாயக மூர்த்தி அவர்களின் நேர்முகம் !

மரபுக் கவிதை ,புதுக் கவிதை ,  ஹைக்கூக் கவிதை மூன்று கவிதை களும்  எழுதி வரும் கவிஞர் இனிய நண்பர் அய்யா கவிஞர் சி. விநாயக மூர்த்தி அவர்களின் நேர்முகம் பொதிகை தொலைக்காட்சியில் 31.3.2014 திங்கள் அன்று காலை 7.30 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகின்றது.பார்த்து விட்டு தங்கள் கருத்தைப் பகிர்ந்துக் கொள்ள . 

கவிஞர் சி. விநாயக மூர்த்தி .அலைபேசி  9791562765


83.B.கிழப்பட்டித் தெரு 
திருவில்லிபுத்தூர் .
626125. 


ஒளியின் நெசவு !

நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி .


விமர்சனம்  
கவிஞர் இரா .இரவி.
http://eraeravi.blogspot.in/2012/10/blog-post_11.html

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

வெள்ளி, 28 மார்ச், 2014

தமிழ் மொழி அறிவு வளர்த்துக் கொள்ள

இனிய  நண்பர் விளாங்குடி விநாயக முர்த்தி அவர்கள் தமிழ் மொழி அறிவு வளர்த்துக் கொள்ள உதவும் வகையில் கேள்விகளால் உருவாக்கி உள்ள பதிவைப் பாருங்கள் .உங்களை நீங்களே சோதனை செய்து கொள்ளலாம் . 
.
http://www.arivukadal.com/uploads/files/NEW632295quiz.swf

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி !

ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி !


வியாழன், 27 மார்ச், 2014

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ( சென்றியு )  கவிஞர் இரா .இரவி !
ஊழல் கண்டு 
சினம் கொண்டு 
சிவந்தது வானம் !

தாலாட்டியது 
குளத்து நீரை
தென்றல் !

பயன் அதிகம் 
தங்கத்தை விட 
இரும்பு !

துன்பங்கள் தொடர்கதை 
இன்பங்கள் சிறுகதை 
ஏழைகள் !

வருவதில்லை யாரும் 
வருத்தத்தில் 
வற்றிய குளம் !

குரங்கின் கையில் 
பூ மாலை 
குடிகாரக் கணவன் !

இயந்திரமாகிவிட்ட 
மனிதன் வாக்களிக்க 
இயந்திரம் !

படைப்பதை விட 
பூப்பதுதான் 
நல்ல கவிதை !

நினைவூட்டியது பௌர்ணமி 
அம்மா தந்த 
வெள்ளையப்பம்  !

நம்பமுடியவில்லை 
ஆனால் உண்மை 
ஆடு விழுங்கும் பாம்பு !

வெண்மையின் 
விளம்பரத் தூதுவர் 
கொக்கு !

கல்லறையின் உள்ளறையில் 
நிரந்தரத் தூக்கம் 
ஆடியவர் !

குப்பையில் மின்சாரம் சரி
கண்களில் மின்சாரமுண்டு 
கண்டுபிடியுங்கள் !

கவனக்குறைவு 
சிக்கியது சிறு பூச்சி 
சிலந்தியின் வலையில் !

முகம் பார்க்க 
முடியவில்லை நிலா 
வறண்ட ஆறு !

மார்கழி மாதம் 
வருந்தியது மலர் 
வைத்தனர் சாணியில் !


.

புதன், 26 மார்ச், 2014

இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !

இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு !

தி .க .சி .அவர்களின் மறைவு !  கவிஞர் இரா .இரவி !

பார்த்தவர்கள் ,பழகியவர்கள் ,வாசித்தவர்கள் யாராலும் எளிதில் மறக்க முடியாத எளிமையின் சின்னம் அஞ்சல் அட்டை வழி அன்பு காட்டிய அன்னம் .தி. க. சி . என்றால் திண்ணம் ,கனிவு ,சிகரம் என்று பொருள் .சாகித்ய விருதுக்கும் பெருமை தேடித் தந்தவர் .மூத்த எழுத்தாளர் , யாரையும் காயப்படுத்தாத உயர்ந்த  உள்ளம் .இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு .மாமனிதர் வல்லிக் கண்ணன் போலவே எளிமையாக வாழ்ந்தவர் .எழுத்தாளர் என்ற கர்வம் துளியும் இல்லாத மாமனிதர் .

தினமணியில் கட்டுரை , கடிதம் எழுதியவர் .வளர்ந்த கவிஞர், வளரும் கவிஞர்,  வளர்ந்த எழுத்தாளர்,வளரும் எழுத்தாளர் , என்ற பாகுபாடு இன்றி  அனைவருக்கும் விமர்சனம் வழங்கியவர் .என் நூலுக்கும் விமர்சனம் வழங்கி இருக்கிறார் . கடித இலக்கியத்தில் இமயமாக நின்றவர் .இன்று கடிதங்களே வழக்கொழிந்து விட்டது . 

 "எழுத்தாளர்களுக்கு சமூக உணர்வு முக்கியம் .அது இல்லாதவர்களை நான் மதிப்பது இல்லை ".என்று சொன்னவர்.அய்யா தி .க .சி.  எழுத்துக்கும் , செயலுக்கும் வேறுபாடு இன்றி உண்மையாக மகாகவி பாரதியைப்   போல வாழ்ந்தவர். பலருக்கு பாடமாக வாழ்ந்த  மாமனிதர் .

புதுகை தென்றல் ஆசிரியர் புதுகை தருமராசன் அவர்கள் அய்யா 
தி .க .சி  . மீது அளவற்ற அன்பு கொண்டவர் அவரை சந்திப்பதற்காகவே சென்னையில் இருந்து அடிக்கடி சென்று வருவார். சமீபத்தில் இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன், தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் ஆகியோருடன் சென்று சந்தித்து வந்ததைமடுரை வந்தபோது சொல்லி மகிழ்ந்தார் .புதுகைத் தென்றல்  இதழிலும் செய்தி வெளியிட்டு இருந்தார் ..  

தி .க .சிவசங்கரன் அவர்கள் நடமாடும் நூலகம் .அவ்வளவு அறிவு நினைவாற்றல் மிக்கவர் .படிக்காத நூல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பாகுபாடு இன்றி அனைத்து நூல்களையும் படித்த சிந்தனை சிற்பி . அவர் இறந்த செய்தி அறிந்ததும் . சிங்கள இன வெறியர்களால் யாழ் நூலகம் எரிக்கப் பட்ட கொடுமை என் நினைவிற்கு வந்தது .
.
அய்யா தி .க .சி  . மீது அளவற்ற அன்பு கொண்ட குடும்பத்தினர் மட்டுமல்ல புதுகை மு .தருமராசன் உள்ளிட்ட இலக்கிய நண்பர்களுக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் .

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

வளரி எழுத்துக்கூடம் , முத்தமிழ் மன்றம் இணைந்து நடத்திய பெண்பாக்கள் ! நூல் வெளியீடு ,மகளிர் கவியரங்கம் புகைப்படங்கள் . 2

வளரி எழுத்துக்கூடம் , முத்தமிழ் மன்றம் இணைந்து நடத்திய பெண்பாக்கள் ! 
நூல் வெளியீடு ,மகளிர் கவியரங்கம் புகைப்படங்கள் . 2

புகைப்படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்
-- 


நன்றி ! மாலை முரசு !

நன்றி ! மாலை முரசு !

-- 

ஹைக்கூ ( சென்றியு ​ ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  ( சென்றியு ​ )  
கவிஞர் இரா .இரவி !

ரசிப்பவர்களும் உண்டு 
உண்பவர்களும் உண்டு 
ரோஜா !

ரசனையற்றவனுக்கு  
வெறும் சொற்கள்தான் 
கவிதை !

வண்ணம் மாறவில்லை 
மழையில் நனைந்தும்
மயிலிறகு !

வெண்மை மாறவில்லை 
தீயில் சுட்டும் 
சங்கு !

தாத்தாவோடு சேர்ந்து 
ஓய்வெடுத்தது 
குடை !

மணமான அடையாளம் 
ஆண்களுக்கும் வேண்டும் 
அணியுங்கள்  மெட்டி !  

தோற்றது வாள்
எழுதுகோலிடம்  
ஆட்சி மாற்றம் !

எங்கும் இல்லை 
முற்றும் துறந்த 
முனிவர் !

இறந்தபின்னும் 
உதவியது கன்று 
பால் கரக்க !

மரம் வெட்ட வெட்ட 
மனம் சூடாகும் 
சூரியன் !

வரவில்லை 
வெளிநாட்டுப் பறவைகள் 
வெப்பமயம் !

மரித்த பின்னும் 
மத்தளம் 
மாடு !

உதிர்ந்தபின்னும்
உரம் 
இலை !

விழுந்தபின்னும் 
நதி 
அருவி  !

தீக்காயத்திற்குபின்னும் 
இசை 
புல்லாங்குழல் !

உருக்கியபின்னும் 
ஒளி
தங்கம் !  

சிதைந்தபின்னும் 
சிற்பம் 
கல் !

காய்ந்தபின்னும்
பசுவுக்கு இரை
வைக்கோல் !

இரக்கமின்றிக் 
கொன்றவருக்கும்  இரை
ஆடு ! 

கொக்கிடம் தப்பி 
வலையில் விழுந்தது 
மீன் !

தானாக வரும் 
தானாக மாறியும் 
வானவில் !

விற்றது விளங்காமல் 
வீடு வந்தது 
வளர்த்த  பசு ! 

இசைப்பதாக 
நினைத்துக் கொள்ளும் 
தவளை !

காந்தியடிகள்  உண்டது 
உடலுக்கு நல்லது 
கடலை !

மூன்று அடிகள்  
மூளையில் இடிகள் 
ஹைக்கூ  !

வாசிக்கக் கிட்டும் 
தடையில்லா மின்சாரம் 
ஹைக்கூ  !செவ்வாய், 25 மார்ச், 2014

வளரி எழுத்துக்கூடம் , முத்தமிழ் மன்றம் இணைந்து நடத்திய பெண்பாக்கள் ! நூல் வெளியீடு ,மகளிர் கவியரங்கம் புகைப்படங்கள் .

வளரி எழுத்துக்கூடம் , முத்தமிழ்  மன்றம் இணைந்து நடத்திய பெண்பாக்கள் ! நூல் வெளியீடு ,மகளிர் கவியரங்கம் புகைப்படங்கள் .

வளரி எழுத்துக்கூடம் , முத்தமிழ் மன்றம் இணைந்து நடத்திய பெண்பாக்கள் ! நூல் வெளியீடு ,மகளிர் கவியரங்கம் புகைப்படங்கள் .

வளரி எழுத்துக்கூடம் , முத்தமிழ்  மன்றம் இணைந்து நடத்திய பெண்பாக்கள் ! நூல் வெளியீடு ,மகளிர் கவியரங்கம் புகைப்படங்கள் .

பெண்பாக்கள் நூலை பேராசிரியர் முனைவர் யாழ் .சந்திரா வெளியிட கவிஞர் இரா .இரவி பெற்றுகொண்டார் .தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் ,புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் ,மனிதநேயம் இதழ் ஆசிரியர் பேராசிரியர் எ ,எம் .ஜேம்ஸ் ,அணு அஞ்சல் அட்டை ஆசிரியர் முத்துக் கிருஷ்ணன்,கவிஞர் பன்னீர் செல்வம் ,கவிஞர் பேனா மனோகரன், கவிஞர் மூரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

பெண்பாக்கள் ! தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் ! அலைபேசி 7871548146. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


.
பெண்பாக்கள் !

தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் ! அலைபேசி  7871548146.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வளரி எழுதுக்கூடம் ,32 கீழரத வீதி ,மானாமதுரை .630606.
சிவகங்கைமாவட்டம்.

வெண்பா கேள்விப்பட்டு இருக்கிறோம் .பெண்பாக்கள் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .பெண்கள் பாடி உள்ள பாக்கள்  என்று பொருள் கொள்ளலாம் .எட்டு பெண் கவிஞர்களின் கவிதைகளை வளரி மாத இதழின் ஆசிரியர் திரு .அருணா சுந்தரராசன் தொகுத்து  நூலாக்கி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன .

முகநூலில் கலக்கி வரும் இனிய நண்பர் கவிஞர் பேனா .மனோகரன் அவர்களின் வாழ்த்துரையும் பின் அட்டையில் உள்ளது  மதுரையில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .பேராசிரியர் முனைவர்
யாழ் .சந்திரா வெளியிட கவிஞர் இரா .இரவி நான் பெற்றுக் கொண்டேன் .
.
இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய கவிதைப் போட்டியில்  என்னோடு சேர்ந்து பரிசுப் பெற்ற கவிஞர் பன்னீர்செல்வம் அவர்களின் அணிந்துரை முத்தாய்ப்பாக  உள்ளது .

இந்த நூலில் மலர்மகள் ,சௌந்தரி கணேசன் ,,புதுவை சுமதி செ.சண்முகசுந்தரமீனா ,மு .முருகஜோதி ,சுபஸ்ரீ மோகன் ,
எஸ் .ரெஜினா பானு  , சத்தியபிரியா என 8 பெண் கவிஞர்கள் கவிதைகள் எழுதி உள்ளனர் .எட்டு பேருக்கும் தனி நூல் எழுதும் அளவிற்கு ஆற்றல் இருந்தபோதும் ,எட்டு கவிதாயினிகளிடமும் கவிதை பெற்று தொகுத்து நூலாக்கிய தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் அவர்களுக்கு மீண்டும் ஒரு பாராட்டு.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் கவிஞர்கள் வழங்கி உள்ள நூல் .தந்தை பெரியாருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கியதே பெண்கள்தான்.எலிகளுக்கு விடுதலை பூனைகளால்   கிடைக்காது.பெண்களுக்கு  விடுதலை ஆண்களால் கிடைக்காது.பிள்ளைப்  பெறும் இயந்திரமா பெண்கள் என்று கேட்டவர்  தந்தை  பெரியார் .இந்த நூலை மிகப் பொருத்தமாக தந்தை பெரியாருக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்கள் .

இனிய தோழி கவிதாயினி மலர்மகள் அவர்கள் கனரா வங்கியில் பணியாற்றிக் கொண்டே கவிதைப் பணியும் செய்து வருபவர். என்னுடன் கவியரங்கில் கவிதை பாடியவர் .கவிதைக்காக பாராட்டும் , பரிசும் பெற்றவர் .தினமலர் வாரமலரில் கவிதை எழுதியவர் .அவரது கவிதைகளில் இருந்து பதச் சோறாக சிறு துளிகள் .

அற்புத விடியல் !

பெண்ணே !

உருகி வழிய - நீ
எரியும் மெழுகுவர்த்தி அல்ல !

எரித்து அழிக்க
காய்ந்த சருகும்   அல்ல !

உருக்கி வார்க்கப்பட்ட ஆயுதம் !

பெண்ணின் சக்தியை உணர்த்தும் விதமான வரிகள் மிக நன்று .

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து ஆஷ்திரேலியாவின்  சிட்னியில் வாழும் கவிதாயினி  சௌந்தரி கணேசன் அவர்களின் கவிதைகளில் இருந்து சிறு துளிகள் .

நட்பின் தேவை !

நட்பின் பரிமாணத்தை இரசி
பலத்தையும் பலவீனத்தையும் படி
பார்ப்பதெல்லாம் ஒன்றாகத் தோன்றும்
பாரம் கூடப் பஞ்சாக மாறும்
பாசம் மட்டும் மகிழ்வோடு தங்கும்
நட்புலகம் சங்கீதம் போன்றது  !

நட்பின் மேன்மையை மென்மையாக நன்கு உணர்த்தும் கவிதை நன்று .

புதுவை அரசு  கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் கவிதாயினி புதுவை சுமதி அவர்களின் கவிதைகளில் இருந்து சிறு துளிகள் .

நினைவுகள் !

சிறகுகள் சிறகடித்த
உன் நினைவுகள்
இன்று சிலுவைகளாய் மாறி கனக்கையில்
பாரம் தாங்காமல் வெடித்துச் சிதறும்
என் இதயக் குருதியின் ஓவ்வொரு துளியிலும்
உறைந்திருக்கும்  உன் முகம் !

நினைவுகளின் வலி உணர்த்தும் கவிதை நன்று .

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி  ஆசிரியராகப் பணி புரியும் கவிதாயினி செ.சண்முகசுந்தரமீனா அவர்களின் கவிதைகளில் இருந்து சிறு துளிகள் !

வேண்டாம் இத்தனை பெரிய சின்னம் !

அரையடிக் கம்பை உடைப்பதற்கும் 
அடிமைச் சங்கிலி அறுப்பதற்கும்
அரை நிமிடம் ஆகுமா எனக்கு ?

யானை பேசுவதுபோன்று கவிதை வடித்து உள்ளார்கள் .நல்ல யுத்தி.இந்தக் கவிதையை ஒரு பெண் பேசுவது போலவும் புரிந்து கொள்ளலாம் . 

யோகா ஆசிரியராகக் பணி புரியும் கவிதாயினி மு .முருகஜோதி கவிதைகளில் இருந்து சிறு துளிகள் .

கற்றல் !

அரச இலை முதல் ஆகாய விமானம் வரை
அநேக வினாகளுடன்
என்னிடத்தில் வருகிறான்
எட்டு வயது மகன்
தெரியாது என்று நேர்மையான
பதிலைக்கூட  ஒரு வேளை அவன்
ஏற்றுக் கொள்ளக் கூடும்  !
குழப்பமான பதில்
அவனது மதிப்பிற்குரியோர் பட்டியலில் இருந்து
என்னை நீக்கி விடும் ஆபாயமுள்ளது  .

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காவது  படித்து வைப்பது நல்லது என்கிறார் .

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் வசித்து வரும் கவிதாயினி சுபஸ்ரீ மோகன் கவிதைகளில் இருந்து சிறு துளிகள் .

நட்பா !  காதலா !

நட்பா ? காதலா ? என யோசித்த நான்
நட்புத் தேர்ந்தெடுக்க  !
நீ காதலைத்  தேர்ந்தெடுத்து
விலகிப் போனாய் நட்பை உதறிவிட்டு
என் மனம் மட்டும்
உன் பின்னே சென்று கொண்டிருக்கிறது
நீ இடரும் சந்தர்ப்பத்தில்
உன்னைத் தாங்கி பிடித்துக் கொள்ள
நட்புடன் எப்போதும் நான் .

நட்பை காதல் என்று தவறாகப்புரிந்து  கொள்பவர்களுக்கு புரியவைக்கும்  கவிதை நன்று .

அரசு  மருத்துவத்துறையில் செவிலியராகப் பணி புரிந்து வரும் கவிதாயினி எஸ் .ரெஜினா பானுகவிதைகளில் இருந்து சிறு துளிகள்.

ஆடு அடங்கும் வாழ்க்கையடா !

விலங்கு என்பதை
அறியாமலேயே
அலங்கரிக்கப்பட்டேன்
ஆடிய கால்கள்
அசைவற்றுக் கிடந்தன
பாடிய வாயோ
பலமற்று இருந்தது
வளர்த்தவர்களே
எனக்குப் பெயரிட்டனர்
பிரியாணி என்று
ஆடு அடங்கிய வாழ்க்கையடா !
ஆறடி மனிதரே விந்தையடா !

ஆடி  அடங்கும் வாழ்க்கையடா ! பாடல் கேள்விப்  பட்டு இருக்கும்  ஒரு எழுத்தை மாற்றி ஆடு பேசுவது போல வடித்த கவிதை நன்று

மதுரையில் கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் என்னோடு கவிதை பாடியவர் , முகநூலில் சத்யா என்ற பெயரில் நாள்தோறும் கலக்கி வருபவர் , குஜராத் கவிதாயினி தோழி யாத்விகா மூலம் அறிமுகமான தோழி . நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து இருந்தார்கள் .கவிதாயினி சத்தியபிரியா கவிதைகளில் இருந்து சிறு துளிகள் .

புரிதல் !

என் காதலைச் சொல்ல
நான் கவிதையில்
மெனக்கெடும் போதெல்லாம்
கண்ணடித்துக் காட்டியே
ஆயிரம் கவிதைகளைப்
புரிய வைக்கிறாய் !

விழியில் உருவாகும் காதல் பற்றிய கவிதை நன்று .

எட்டு பெண் கவிஞர்களின் தொகுப்பு .கவிதை அணி வகுப்பு .மிக நன்று .அனைத்துக் கவிதைகளும் எல்லோருக்கும் புரியும் படி எளிதாக உள்ளது .புரியாத இருண்மைக் கவிதைகள் இல்லை .பெண் உடல் மொழி சொல்லும் கொச்சைகளும் இல்லை .தரமாக உள்ள நல்ல கவிதைகள் எட்டு கவிதாயினிகளுக்கும் பாராட்டுக்கள் . தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் .

தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! - கவிஞர் இரா. இரவி !

தமிழ்  இலக்கியத்தில் தன்னம்பிக்கை !

ஔவையின்  ஆத்திசூடியில்  தன்னம்பிக்கை !

- கவிஞர் இரா. இரவி !


      யானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு  தன்னம்பிக்கை.  என்னால்  முடியும்  என்றே   முயன்றால் எதையும்  சாதிக்கலாம்.  மூன்றாவது  கை  தன்னம்பிக்கை.  உருவம்  இல்லாத  உறுப்பு .  உள்ளத்தில் இருப்பதே  சிறப்பு.  எதை  இழந்தாலும், பெற்று  விடலாம்  தன்னம்பிக்கை   மட்டும்  இருந்தால்.

      “உன்னால்  முடியும்  தம்பி” என்றார்  தன்னம்பிக்கை  எழுத்தாளர்  M.S. உதயமூர்த்தி.   “உன்னை பலமானவன்  என்று  நினைத்தால்  பலமானவன்.  உன்னை  நீ  பலவீனமானவன்  என்று  நினைத்தால் பலவீனமாவாய்.  என்னவாக  நினைக்கின்றாயோ  அதுவாகவே  ஆகின்றாய்” என்றார்  விவேகானந்தர்.

உன்னால்  முடியும்  வரை  முயல்வது  அல்ல, நீ  நினைத்த  செயல்  முடியும்  வரை  முயல வேண்டும்  என்றார்  மாமனிதர்  அப்துல்  கலாம்.  “இயங்கிக்   கொண்டே  இருக்க  வேண்டும், விதைத்துக்கொண்டே  செல்ல  வேண்டும்”  என்பார்  முதுமுனைவர்  வெ. இறைஅன்பு. இ.ஆ.ப.

இப்படி  எல்லோரும்  சொல்லும்  தன்னம்பிக்கை  கருத்துக்களுக்கு  ஆணி  வேர்   நம்  தமிழ் இலக்கியங்கள் .   தன்னம்பிக்கை  சிந்தனையின்  சுரங்கமாக  இருப்பது  தமிழ்  இலக்கியம்.

அன்றே  ஔவை  பாடிய  அற்புதமான  ஆத்திச்சூடியில்  உள்ள  அனைத்து கருத்துக்களும், தன்னம்பிக்கை  விதைக்கும்  கருத்துக்கள்  மனிதனை,  பண்பாளனாக, நல்ல மனிதனாக  ஒழுக்கமுள்ளவனாக நேர்மறை சிந்தனையாளனாக மனிதநேயம்  மிக்கவனாக  வெற்றியாளனாக மாற்றிட  உதவுவது  ஆத்திசூடி.

சங்க   காலத்தில்  பல  பெண்பாற்புலவர்கள்  இருந்தாலும்  ஔவையார்  அவர்களுக்கு  சிறப்பிடம் என்றும்  உண்டு.  ஔவையார்  என்ற  பெயரில்  ஒன்றுக்கும்  மேற்பட்டவர்கள்  இருந்த  போதும்  கி.பி. 12ஆம்  நூற்றாண்டில்  சோழர்  காலத்தில்  வாழ்ந்த ஔவையார்  அவர்களால்  பாடப்பட்டது  ஆத்திசூடி, கொன்றை  வேந்தன், மூதுரை , நல்வழி  ஆகிய  நான்கும்  இவரால்  பாடப்பட்டது.

மிக  சுருக்கமான  சொற்களால்  நீதி சொன்ன   ஒப்பற்ற  இலக்கியம்  ஆத்திசூடி.   ஆத்திசூடி படிக்க  மிக  எளிமையாகவும் , இனிமையாகவும்  இருக்கின்ற  காரணத்தினால்  குழந்தைகளுக்கு  இளம்  வயதிலேய கற்பிக்கும்   வண்ணம்  பாடத்தில்  உள்ளது .

புலம்பெயர்ந்து  அயல்நாடுகளில்  வசிக்கும்  உலக  தமிழர்கள்  யாவரும்  தங்கள்  குழந்தைகளுக்கு ஆத்திசூடியை  மறக்காமல்  கற்பிக்கின்றனர்.  காரணம்  ஆத்திசூடியில்  “தன்னம்பிக்கை” விதைக்கும் கருத்துக்கள்  இருப்பதால்  தான்.

ஆத்திசூடி  முழுவதுமே  தன்னம்பிக்கை விதைப்பது.  நேர்மறை சிந்தனையில் நேர்மையாளனாக, வையத்தில் வாழ்வாங்கு  வாழ்பவனாக,  சிறந்த  மனிதனாக  வாழ  உதவும்  ஒப்பற்ற  நூல்  அவ்வையின் ஆத்திசூடி.

ஆத்திசூடி முழுவதும்  தன்னம்பிக்கை  என்ற போதும்  அதில்  மிகவும்  முக்கியமாக  தன்னம்பிக்கை உணர்த்தும்  வைர  வரிகளை  மட்டும்  இங்கே  மேற்கோள்  காட்டி  உள்ளேன்.

அறம்  செய  விரும்பு  :

நல்லது  நினை  என்பது  போல  அறம்  செய்ய  விரும்பு  என்கின்றார்.  விரும்பினால்  தான்  அந்த விருப்பம்  செயலாக மாறும்.  எந்த  செயலாக  இருந்தாலும்  அறம்   சார்ந்ததாக  நல்ல  செயலாக  இருக்க வேண்டும்.  தமிழர்களின்  வாழ்வியல்  முறையில்  ஒன்று  அறவழி  நடத்தல்   அதனால்  அறம்   செய்ய விரும்பு  என்கிறார்  ஔவையார்.

நேர்மையான  வழியில்  நடந்து  அடுத்தவருக்கு  உதவிடும்  உள்ளம்  உடையவர்கள் தன்னம்பிக்கையோடு  வாழ்வார்கள்.  தானும்  சிறப்பாக  வாழ்ந்து தன்னை  சார்ந்து  வாழ்பவர்களையும் சிறப்பாக  வாழ்விப்பார்கள்.  அறம்  செய்ய  விரும்பி   விட்டால்  சிந்தனை,   செயல்,  சொல்  யாவும் அறம்  சார்ந்தே  அமையும்.  அறமற்ற   சிந்தனை,  செயல்,  சொல் அற்றுப்போகும் .  மனிதனை நெறிப்படுத்தி  பண்பாடு  பயிற்றுவிக்கும்   விதமாக  ஔவை  நீதி  நூல்  எழுதி  உள்ளார்கள் ..

ஆறுவது  சினம்  :

“ஒருவன்  கோபத்தோடு   எழுந்தால்  நட்டத்தோடு  அமர்வான் ” என்று  பொன்மொழி  உண்டு. சினத்தை  அடக்க  மட்டும்  கற்று  கொண்டால்  வாழ்வில்  சிறக்கலாம்.  ஒரு  முறை  புத்தரை  ஒருவர் கண்டபடி  ஏசி, திட்டி  இருக்கிறார்.  திட்டி  முடிக்கும்  வரை  எதுவும்  பேசாதிருந்த  புத்தர், நீங்கள் என்னிடம்  ஒன்றை  தருகிறீர்கள், அதனை  நான்  பெறவில்லை  என்றால்   அது  உங்களிடமே  இருந்து விடும்.  அது  போல  தான்  நீங்கள்  திட்டிய   எதையும்  நான்  பெற்று  கொள்ளவில்லை  என்றார். திட்டியவர்  தலை  குனிந்தார். இப்படிதான்   கோபத்தில்  ஒருவர்  நம்மை  திட்டும்  பொது  நாமும் பதிலுக்கு  திட்டினால்   சண்டை  வரும்.  வன்முறை  வரும்.  பேசாமல்  அமைதி  காத்திட்டால்  சண்டைக்கு  வாய்ப்பு  இல்லை.  “பொறுத்தார்  பூமி  ஆள்வார்” என்ற  பழமொழி  உண்டு.  பொறுமையாக இருந்து   கோபம்  தவிர்ப்பதும்  ஒரு  தன்னம்பிக்கையாளரின்  கடமை  ஆகும் .

இயல்வது  கரவேல்  :

கொடுக்க  முடிந்த  பொருளை  ஒளிக்காமல்  கொடு.  நம்மால்  முடிந்ததை  பிறருக்கு  கொடுத்து உதவிடல்  வேண்டும் என்கிறார்  ஔவை.

ஊக்கமது   கைவிடேல்  :

மனவலிமையை கை  விடாதே .  தன்னம்பிக்கை  விதைக்கும்  வைர வரிகள்  இவை.  மனவலிமை தான் தன்னம்பிக்கை.  தன்னம்பிக்கை  உள்ளவனுக்கு  எல்லா  கதவுகளும்  திறந்து   வரவேற்பு  அளிக்கும். தன்னம்பிக்கை  உள்ளவர்  எங்கும்  முத்திரை  பதிக்க  முடியும்.

எண்ணெழுத்  திகழேல்  :

கணக்கையும்  இலக்கணத்தையும்  இகழாமல்   நன்றாக  கற்றுக்  கொள். கணக்கு, இலக்கணம் எனக்கு வராது  என்று  சொல்பவர்களும்  உண்டு.  அவர்களுக்கு  தன்னம்பிக்கை  தரும்  விதமாக  சொன்ன  கருத்து இது.

ஓதுவது  ஒழியேல்  :

எக்காலத்தும் படித்து கொண்டே இரு.  ஒரு  தன்னம்பிக்கையாளர்  எப்போதும்  நல்ல  நூல்களை வாசித்துக்  கொண்டே  இருக்க  வேண்டும்.  படிக்க  படிக்க  அறிவு  வளரும், ஆற்றல்  பெருகும்.

நயம்பட  உரை  :

யாரிடமும்  இனிமையாக  பேசு. சாதனையாளர், வெற்றியாளர்  இவர்களின்  ரகசியம்  என்னவென்று பார்த்தால்  எல்லோருடனும்  இனிமையாக  பேசும்  பண்பு  உள்ளவர்களாக  இருப்பார்கள்.  ஒற்றை  வரியில் ஒளவை  சுருங்க  சொல்லி  விளங்க  வைக்கும்  விதமாக  உயர்ந்த  கருத்துக்களை  மிக  எளிமையாகவும், இனிமையாகவும்  ஆத்திசூடியில்  பாடி  உள்ளார் .

இணக்கமறிந்  திணங்கு  :

நல்ல  குணம்  உள்ளவரோடு  நட்பு  செய். உன்  நண்பன்  யார்  என்று  சொல்  ‘நீ  யார்  என்று சொல்கிறேன்’!  என்பார்கள். அது  போல  நல்ல  நண்பர்களுடன்  பழகினால்  நன்மைகள்  கிட்டும்.  வாழ்க்கை சிறக்கும். வளங்கள்   பெருகும்.

உலகப்பொதுமறை  படைத்த  திருவள்ளுவர்  ஒன்றே  முக்கால்  அடிகளில் சொன்ன  கருத்துக்களை ஒட்டி  பல   கருத்துக்கள்  ஒரே  அடியில்  ஔவை  சொன்ன  ஆத்திசூடியில்  காண்கிறோம்.  ஆணும் பெண்ணும்  சமம்  என்று   இன்று   சொல்கிறோம்.  ஆனால்   அன்றே  திருவள்ளுவர்  என்ற  ஆணுக்கு நிகராக  ஒளவை  என்ற  பெண்ணும்  பாடல்கள்  எழுதி  உள்ளார்  என்பதை   நினைக்கும்   போது பெருமையாக  உள்ளது.  பெண்  இனத்தின்  இமயமாக  ஒளவை  விளங்குகின்றார் .

தந்தை   தாய்  பேண்  :

தாய்  தந்தையரை  மதித்துக்  காப்பாற்று.  இயந்திரமயமான  உலகில்  மனிதனும்  இயந்திரமாக  மாறி பெற்றோரை  பேணாத  காரணத்தால்  தான்  முதியோர்  இல்லங்கள்   பெருகி   வருகின்றன. அவ்வை சொன்ன  வழி    நடந்து  பெற்றோரை  பேணினால்  தான்  முதியோர்  இல்லங்கள்  தேவைப்படாது .

நன்றி  மறவேல்  :

பிறர்  செய்த  உதவிகளை  மறக்காதே.  இதையே  தான்  வள்ளுவர்  ஒன்றே  முக்கால்  அடியிலும் சொல்லி  உள்ளார்.  இன்றைய  ஹைக்கூ   வடிவத்தின்  முன்னோடி  யார்  என்றால்  திருவள்ளுவரையும் அவ்வையாரையும்  கூற  முடியும்.  சுருங்க  சொல்லி  விளங்க  வைத்தல்  என்ற  சூத்திரத்தை உணர்ந்தவர்களாக  இருந்திருக்கிறார்கள். அதனால்தான் இன்றும் நிலைத்து நிற்கின்றனர்.  நூற்றாண்டுகள் கடந்தும்  அவர்கள்  படைப்புகள்  வாழ்கின்றது.

பருவத்தே  பயிர்  செய்  :

‘எந்த  செயலையும்  உரிய  காலத்தில்  செய்’.  இந்த  ஒற்றை  வரியில்   ஓராயிரம்  தன்னம்பிக்கை கருத்துக்கள்  உள்ளன.   எந்த  ஒரு  செயலையும்  நாளை, நாளை  என்று  நாளை  கடத்தாமல்  உடன் உரிய   நேரத்தில்  செயலை  செய்து  முடித்தால்  வெற்றிகள்   குவியும், சாதனைகள் நிகழும், புகழ் மாலைகள்  தோளில்  விழும்.  “உழுகும்  போது ஊர்  வழியே  சென்று  விட்டு  அறுக்கும்  பொது அரிவாளோடு  வந்தானாம்” என்று   கிராமிய   பழமொழி  உண்டு.  இன்றைக்கு  பலரும்  உரிய  காலத்தில், உரிய  செயல் உடன்  செய்யாத  காரணத்தினால்  தான்  வாழ்வில்  தோல்வி  அடைந்து  விரக்தியில்  வாடுகின்றனர்.

இயல்பலாதன  செயேல்  :

நல்லொழுக்கத்திற்கு  மாறாக  நடக்காதே.   இதையே  தான்  வள்ளுவரும்  வலியுறுத்தி  உள்ளார். ஒருவனுக்கு  ஒருத்தி  என்பது   நமது  தமிழர்  பண்பாடு.  ஒழுக்கமுடன்  வாழ்ந்தால்  எய்ட்ஸ்  என்னும் உயிர்க்கொல்லி  நோயே  வராது. ஒழுக்கம்  நமது  பண்பாடு  சார்ந்தது. ஒழுக்கமானவர்களுக்கு சமுதாயத்தில் நன்மதிப்பும்  மரியாதையும் என்றும் உண்டு.  சென்ற இடமெல்லாம் சிறப்பும் உண்டு.  பிறர்  மதிக்கும்படி வாழ்வதும் தன்னம்பிக்கையே.

வஞ்சகம்  பேசேல்  :

உள்ளொன்று  வைத்து  புறமொன்று  பேசாதே.  உள்ளத்தில்  உள்ளதை  அப்படியே  பேச  வேண்டும். நல்லது  நினைக்க  வேண்டும்.  நல்லது  பேச  வேண்டும்.  எண்ணம், பேச்சு, செயல்  யாவும்  நல்லனவாக இருக்க  வேண்டும்.  தன்னம்பிக்கை  வளர்க்க  உதவுவது  இது  போன்ற  பண்பு.

அனந்த  லாடேல்  :

காலையில்  அதிக  நேரம்  தூங்காதே.  இதைத்தான்  பாட்டுக்  கோட்டையான  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், “தூங்காதே  தம்பி  தூங்காதே” என்று  பாடினார்.  பெரிய மனிதர்களை சந்திக்க வேண்டுமென்றால்  காலையில்  சென்றால்தான்  சந்திக்க  முடியும்.  அதற்கு  நாம்  அதிகாலையில்  எழ வேண்டும்.  அதிகாலை  தூக்கம்  என்பது  சோம்பேறிகளின்  பழக்கம்.  சுறுசுறுப்பானவர்கள்,  சாதிக்க வேண்டும்  என்ற  வெறி  உள்ளவர்கள்,  வெற்றியாளர்கள்  அனைவருமே  அதிகாலையில்  எழும்  பழக்கம் உள்ளவர்கள்.  தன்னம்பிக்கையாளர்களின்  முதல்  தகுதி  அதிகாலை எழுவது.  இதைத்தான்   அவ்வை வலியுறுத்தி  உள்ளார்.

குணமது   கை  விடேல்  :

உயர்குணத்தை   எந்த  நிலையிலும்  கைவிடாதே.  நல்ல  குணத்துடன்  என்றும்  நடப்பவர்களுக்கு சமுதாயத்தில்  நன்மதிப்பும், மரியாதையும்  என்றும்  உண்டு .  மேன்மக்கள்  மேன்மக்களே  என்ற  கூற்றுக்கு ஏற்ப  உயர்ந்த  குணத்தை  எந்த  சூழ்நிலையிலும்  கைவிடாமல்  தன்னம்பிக்கையோடு  வாழ  ஔவை கற்று  தருகிறார் .

கேள்வி  முயல்  :

நல்ல  கருத்துக்களை  விரும்பி  கேட்க  முயற்சி  செய்.  நல்ல  கருத்துக்களை  கேட்கும்  போது நமது  குணம்  செயல்  யாவும்  நல்லவையாகவே  இருக்கும்.

செவிகளை  நல்லது  கேட்க  மட்டும்  பயன்படுத்துவது  நல்லது, கெட்டவை  கேட்காமல்  இருப்பது  சிறப்பு.

சான்றோரினத்  திரு

கல்வி , அறிவு, ஒழுக்கம்  நிறைந்தவர்களுடைய  கூட்டத்தில்  எப்பொழுதும்  இரு. அறிவார்ந்தவர்களுடன்  இணைந்தே  இருக்கும்  போது  நமக்கும்  அறிவு  வளரும், ஆற்றல்  பெருகும்.

மூன்றாவது  கையாக  விளங்கும்  தன்னம்பிக்கை :

ஔவையின்  ஆத்திசூடி  உணர்த்தும்  தன்னம்பிக்கை  எழுத  தொடங்கினால்  எழுதிக்கொண்டே போகலாம்.  அந்த  அளவிற்கு  அள்ள  அள்ள  அன்னம்  வரும்  அட்சய  பாத்திரம்  போல   ஆத்திசூடி படிக்கப்படிக்க தன்னம்பிக்கை  கருத்துக்கள்  வந்து  கொண்டே  இருக்கும் .

ஆத்திசூடி என்பது  குழந்தைகள்  படிப்பதற்கு  என்றே   பெரியவர்கள்  படிக்காமல்  இருந்து விடுகிறோம்.  ஆத்திசூடியை  பெரியவர்கள்   அனைவரும்  ஆழ்ந்து  படிக்க  வேணடும்.  ஆழ்ந்து  படித்தால் கவலைகள்  காணாமல்  போகும்.  விரக்திகள்  ஓடி  போகும்.  தாழ்வு  மனப்பானமை தகர்ந்து  விடும். தன்னம்பிக்கை  வளர்ந்து  விடும்.  வாழ்வியல்  நெறி  கற்பிக்கும்  அற்புதம்  ஆத்திசூடி.

இன்றைய தன்னம்பிக்கை எழுத்தாளர்கள், பேச்சாளர்கள்  அனைவருக்கும்  ஆணி வேர்  ஒளவையின் ஆத்திசூடி தான் . ஆத்திசூடியை  ஆழ்ந்து  படித்து  தன்னம்பிக்கையை  வளர்த்துக்  கொள்வோம்.

திங்கள், 24 மார்ச், 2014

வளரி மாத இதழில் பிரசுரமான கவிதை !

வளரி மாத இதழில் பிரசுரமான கவிதை !

லிம்கா சாதனை படைத்த அணு அஞ்சல் அட்டை இதழ்

லிம்கா சாதனை படைத்த அணு அஞ்சல் அட்டை இதழ்

பெண்ணிய நோக்கில் கம்பர் நூல் ஆசிரியர் : முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


பெண்ணிய நோக்கில் கம்பர்  
நூல் ஆசிரியர்     :      முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி.
நூல் விமர்சனம்   :     கவிஞர் இரா. இரவி.
உமா பதிப்பகம், 171, (பு.எண். 8), பவளக்கார தெரு, மண்ணடி, சென்னை – 600 001.  தொலைபேசி : 25215363                    விலை : ரூ.100
******
       நூலின் அட்டைப்படம்  அசோகவனத்து  சீதை  போல  உள்ளது.  உள் அச்சு  வடிவமைப்பு  யாவும் நேர்த்தியாக  உள்ளது.  பதிப்பித்த  உமா  பதிப்பகத்தினருக்குப்  பாராட்டுக்கள்.  நூலாசிரியர்  முனைவர் எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி அவர்கள்  கம்ப இராமாயணத்தை முழுவதுமாக  படித்து  கம்பர்  கடலில்  மூழ்கி முத்தெடுத்து  மாலையாகக் கோர்த்து  வழங்கி உள்ளார்கள்.
       இந்த நூலாசிரியர் பற்றிய தகவல் நூல் எழுதியதன்  நோக்கத்தை பறைசாற்றும் விதமாக உள்ளது. 
       முனைவர்  எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி செந்தமிழ்  மணக்கும்  செட்டி நாட்டில் பிறந்து அயலக மண்ணில் அருந்தமிழ் வளர்ப்பவர்.  ஆய்வுப்  பணிகளை கரும்பென நினைப்பவர். புதியன காணும் புதுமை விரும்பி, அரைத்த மா அரைப்பதில் ஆர்வமற்றவர்.  அஞ்சா நெஞ்சர்.  விருதுகள்  பெற்ற வித்தகர்.  வித்தியாசமான ஆய்வு களங்களை தெரிவு செய்து  புதியன சொலும் வேட்கை மிக்கவர். மலாய் மொழி வல்லவர்.
       பேராசிரியர் முனைவர் தேவதத்தா அவர்களின் வாழ்த்துரை, முனைவர் அரங்கமல்லிகா அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக உள்ளன . 
       கம்ப இராமாயண வரிகளை எழுதி ஆய்வின் முடிவாக பல  கருத்துக்களை  நன்கு பதிவு செய்துள்ளார்கள்.  கம்பர் ஓர் ஆண்  என்பதால் ஆணாதிக்கச் சிந்தனை அவரிடம் அவர் அறியாமலே  இருந்த காரணத்தால் பாத்திரப்படைப்பில் ஆணாதிக்கச் சிந்தனை மிகுதியாக இருந்துள்ளது உண்மை.
       ‘நாட்டின் வளமும் பலமும் பெண்களே’ என்பது கம்பரின்  மதிப்பீடு. இம்மதிப்பீடு காப்பியம் முழுமையும் வெளிப்படுகிறதா? என்பதை  பெண்ணிய  நோக்கில்  எனும்  இயல்  விவாதிக்கிறது ”      எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாத காரணத்தால் கம்பர் மீது  ஈடுபாடு இல்லாமலே இருந்தேன்.  காரணம் அறிஞர் அண்ணாவின்  கம்பரசம்  படித்தவன்.  தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின்  ஒருங்கிணைப்பால் நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில்  வரவேற்புரையாற்றி.  நூலை  ஆழ்ந்து  படித்தேன். நூலாசிரியர் முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி அவர்கள் நெஞ்சில் உரத்துடன், நேர்மை  திறத்துடன் கம்ப இராமாயணத்தை ஆராய்ந்து மனதில் பட்ட  கருத்துக்களை யாரும் எழுதிட அஞ்சிடும் கருத்துக்களை மிகத்  துணிவுடன் எழுதி உள்ளார்கள்.  பாராட்டுக்கள்.
இந்த நூலில் கம்பரின் பெண் பாத்திரங்களை கோசலை, கைகேயி, சுமித்திரை, சீதை, கூனி, சூர்ப்பனகை, திரிசடை, மண்டோதரி, தானியமலி, தாரை, சவரி, தாடகை, அகலிகை என நுட்பமாக ஆய்வு செய்து கட்டுரை வடித்து உள்ளார்கள்.  பாராட்டுகள்.
“நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று வாதிடும்  நக்கீரர் போல கம்பரே ஆனாலும் பெண்களை போகப்பொருளாக  சித்தரித்தது  தவறு தான் என்பதை நன்கு நிறுவி உள்ளார்.   
“பெண் என்பவள் போகப் பொருளாகவும், நுகர்பொருளாகவும்  கம்பர் காலத்திலும், அதற்கு முன்னரும் இருந்துள்ளாள்.  கம்பர்  இந்நிலையை பதிவு செய்துள்ளார்.  அரம்பை  போல்  இன்பமளிப்பவள்  என  ஒரு பெண்  உண்டாட்டுப்  படலத்தில்  வருணிக்கபடுகின்றாள்.  விண்ணுலக இன்பத்தை மண்ணுலகில்  தந்த நாயகியைப் பாடுவது  மட்டுமன்றி பெண்களின் கடைக்கண் பார்வை தவஆற்றல் மிக்க  முனிவரையும் மாற்றி விடும் என்கிறார் கம்பர். இது தவிர பெண்களை  ஞானியராலும் வெல்ல முடியாது என்னும் கருத்தைக் கம்பர் பாடி  உள்ளார். இது ஆணாதிக்கச் சமுதாய வெளிப்பாட்டின் தொடர்ச்சி என்று  கூறுவதில் தவறிருக்க முடியாது.”    
நூலாசிரியர்  முனைவர்  எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி அவர்கள் கம்ப  இராமயணத்தை மறு வாசிப்புக்கு உட்படுத்தும் விதமாகவும் கம்ப  இராமாயணத்தை பக்தியோடு மட்டும் பார்க்காதீர்கள். புத்தியோடு பாருங்கள் என்று விழிப்புணர்வு விதைக்கும் விதமாக எழுதி உள்ளார்.  தமிழ் சொற்களின் சுரங்கம் கம்ப இராமாயணம் என்பதில்  மாற்றுகருத்து இல்லை. அதில் ஆபாச சொற்களும் இருக்கின்றன  என்பதையும் யாரும் மறுக்க முடியாது. இதுவரை வந்த ஆய்வு  நூல்கள் யாவும் கம்பரை வானளாவ புகழும் விதமாகவே வந்தன.  இந்த நூல் ஒன்று தான் பெண்ணியம் என்ற கண்ணாடி அணிந்து  கம்பரை விமர்சிக்கும் விதமாக வந்துள்ளது. ஒரு எழுத்தாளருக்கு, கவிஞனுக்கு மனதில் பட்டதை எழுதும் துணிவு வேண்டும். மகாகவி பாரதிக்கு, பாரதிதாசனுக்கு அந்தத் துணிவு இருந்தது. அந்த  வரிசையில் இந்த நூலாசிரியர் துணிவுடன் மனதில் பட்டதை எழுதி  உள்ளார்.  பாராட்டுக்கள் .
நூலசிரியராகிய  என்  கருத்து  :
       அனுமன்  சீதையை அசோகவனத்தில் கண்டு, இராமனிடம் 21  பாடல்களில் சீதையின் நிலையைக் கூறுகிறான் .      
இப்படி விரிவாக அனுமன் எடுத்துக்கூறியும் சீதையை இராமன்  சந்தேகப்பட்டு அவளை கடுமையான சொற்களால் பேசி எங்காவது  சென்று இறந்து ஒழிவாய் எனவும், அவளை ஒழுக்கக்கேடு  உடையவள் எனவும் கூறுவதற்கு அவனுக்கு எப்படி மனம் வந்தது.  சீதை மீது களங்கம் சுமத்தியது இராமனின் உயர்பண்பு அல்லது உயர்  ஒழுக்கத்திற்கு எவ்வாறு பொருந்தும்?
ஆம்,  இராமன்  சீதையை  தீக்குளிக்க  சொன்னது  குற்றமே  என்பதை  நூலில்  நன்கு  நிறுவி உள்ளார். ஆணாதிக்க  சிந்தனையின்  வெளிப்பாடு  என்பதை  விளக்கி  உள்ளார்.  இந்த  நூல்  படித்த போது  பவானிசாகர்  அரசு  அலுவலர்கள்  பயிற்சிக்கு  நான்  சென்று  இருந்த  போது  நவீன இராமாயணம்  என்ற  தலைப்பில்  நான்  நடத்திய  நாடகம்  நினைவிற்கு  வந்தது.  இராமன்  சீதையை தீக்குளிக்க  சொன்ன  போது  சீதை  சொல்வாள், நீயும்  தான்  பிரிந்து  இருந்தாய் முதலில் நீ தீ குதி . பிறகு நான் குதிக்கிறேன்  என்று  சொல்வது போல வசனம் எழுதி பாராட்டு சான்றிதழ் பெற்றேன்.  இப்படி பல சிந்தனைகளை  விதைக்கும் நல்ல நூல்.      

.

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது