செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பெண் கவிஞர் இரா. இரவி

பெண் கவிஞர் இரா. இரவி

பெண் இல்லையேல்
நீயுமில்லை
நானுமில்லை
ஊருமில்லை
உலகுமில்லை
பெண் பிறந்தால்
பேதலிப்பதில்
நியாயமில்லை
பெண் என்ன?
ஆண் என்ன?
பெண்ணே
இல்லாத
உலகத்தில்
வாழமுடியுமா?
உங்களால்...
எல்லோருமே
ஆண் பெற்றால்
எவர்தான்
பெண்பெறுவது
ஆணைப்
பெற்றதால்
அவதிப்பட்டவர்
கோடி
பெண்ணைப்
பெற்றதால்
பெருமையுற்றவர்
கோடி
மணமானதும்
மறப்பவன் ஆண்!
மணமானாலும்
மறக்காதவள்
பெண்!
ஓருபோதும்
வருந்தாதே
பெண்ணிற்கு.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

அன்னை தெரசா-கவிஞர் இரா.இரவி

அன்னை தெரசா-கவிஞர் இரா.இரவி

அன்பின் முகவரியே! தொண்டின் இமயமே!
மனிதருள் மாணிக்கமே! மாசில்லாத்தங்கமே!
மண்ணில் தெரசாவே! மகத்தான தாயே!
தியாகத்தின் உருவமே! சேவையின் சிகரமே!
தொழுநோயாளிகளின் புகலிடமே!தன்னலமற்ற தியாகச்சுடரே!
தள்ளாத வயதிலும் தளராத தேனீயே!
ஆதரவற்ற அனாதைகளின் இன்பத்தோணியே!
மனித நேயம் மறைந்திட்டஇயந்திர உலகில்
மனிதநேயம் உணர்த்திட்ட இனிய உள்ளமே!
உன்னை நோபல் பரிசு கௌரவப்படுத்தவில்லை
உன்னால் நோபல் பரிசு கௌரவப்பட்டது
வாழ்க்கையில் சிலர் தியாகம் செய்வதுண்டு
வாழ்க்கையே தியாகம் செய்தது தெரசா மட்டுமே!
இறப்பு என்பது உன் உடலுக்கு
இறப்பு இல்லை உன் புகழுக்கு
அன்னைக்கு இணை அகில உலகிலும் இல்லை.
அன்னைக்கு இணை அன்னை தெரசா மட்டுமே!
-

மரம் - கவிஞர் இரா.இரவி

மரம் - கவிஞர் இரா.இரவி

மரம்


[ Sun, Sep 26, 2010, 10:10 am ]

கெட்ட காற்றை
உள்வாங்கி
நல்ல காற்றை
வெளியிடும் மரம்
நல்ல காற்றை
உள்வாங்கி
கெட்டகாற்றை
வெளியிடுபவன்
மனிதன்
கழிவுநீரை
உள்வாங்கி
நல்ல இளநீர்
தருவது மரம்
நல்ல நீரை அருந்தி
கழிவு நீரை
கழிப்பவன் மனிதன்
உயர்ந்தவன்
தாழ்ந்தவன்
பாகுபாடின்றி
உயர்ந்த
நிழல் தருவது மரம்
உயர்ந்தவன்,
தாழ்ந்தவன்
பாகுபாட்டுடன்
உதிரம் சிந்துபவன்
மனிதன்
மரமெனநிற்காதே என
மனிதரைத் திட்டி
மரத்தை அவமதிக்காதே!
மானிடனே
இப்போது சொல்
மரம் பெரிதா?
நீ பெரிதா?

பெண் விடுதலை கவிஞர் இரா. இரவி

எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது
பெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காது
மண் புழவாய்ப் நெளிந்தது போதும்
பெண் புலியாய்ப் புறப்படு நாளும்
புழுவைக்கூட சீண்டினால் சீற்றம் வரும்
பெண்ணே! உனக்கு சீற்றம் எப்போது வரும்
கொட்டக் கொட்ட குனிந்தது போதும்
புராணப்புளுகை நம்பியது போதும்
புதுமைக்கருத்தை ஏற்றிட வேண்டும்
ஆண்கள் என்பதால் ஆணவம் கொள்வதும் ஏன்?
பெண்கள் என்பதால் அடிமைப்படுத்துவதும் ஏன்?
அடிமை விலங்கைத் தகர்த்திடல் வேண்டும்
அற்புதச்சிறகை விரித்திடல் வேண்டும்
ஆணுக்குள்ள சுதந்திரம் பெண்ணுக்கும் வேண்டும்
அர்த்தமற்ற சுதந்திரம் யாருக்கு வேண்டும்
புதியதோர் உலகம் செய்திடல் வேண்டும்
புதுமைப் பெண்கள் அதனை ஆள வேண்டும்


-


உறவுகளின் சிகரம் தாய் - கவிஞர் இரா.இரவி

உயிரினங்களின் முதல் மொழியே
ஒப்பற்ற அம்மா நீயே
உலகிற்கு அறிமுகம் செய்தாய்
உலகம் போற்றும் உறவு தாய்
உறவுகள் ஆயிரம் உண்டு
உயர்ந்த அன்னைக்கு இணை ஏது?
பத்துத்திங்கள் என்னுயிர் வளர்த்தாய்
எட்டி உதைத்தாலும் சிரித்தாய்
எண்ணி எண்ணிப் பூரித்தாய்
பால் நிலவைப் பார்த்திட வைத்தாய்
பால் சோறோடு பண்பையும் ஊட்டிய தாய்
தாலாட்டித் தூங்கிட வைத்தாய்
தன் தூக்கத்தை மறந்தாய்
நோயுற்ற போது துடித்தாய்
நோய் நீங்கிட மருந்தளித்தாய்
தாய்மொழியோடு தன்மானமும் பயிற்றுவித்தாய்
தன்னிகரில்லாப் பாசமும் பொழிந்தாய்
பசியோடு பசியாற வைத்தாய்
புசிப்பதை ரசித்துப்பசியாறிய தாய்
தியாகத்தின் திரு உருவம் தாய்
தரணியில் பேசும் தெய்வம் தாய்

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் விழா

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12b4d137b0cdc3fb&attid=0.8&disp=inline&realattid=f_gejmeo8z7&zw

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் விழா

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் விழா

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12b4d137b0cdc3fb&attid=0.7&disp=inline&realattid=f_gejmel086&zw
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12b4d137b0cdc3fb&attid=0.9&disp=inline&realattid=f_gejmjscl8&zw

சாகித்திய அகதமி படைப்பாளிகளுடன் ஒரு பொன் மாலைப் பொழுது

சாகித்திய அகதமி படைப்பாளிகளுடன் ஒரு பொன் மாலைப் பொழுது
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12b4d137b0cdc3fb&attid=0.2&disp=inline&realattid=f_gejm4sb71&zw
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12b4d137b0cdc3fb&attid=0.4&disp=inline&realattid=f_gejmc4pf3&zw

சாகித்திய அகதமி படைப்பாளிகளுடன் ஒரு பொன் மாலைப் பொழுது

சாகித்திய அகதமி படைப்பாளிகளுடன் ஒரு பொன் மாலைப் பொழுது
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12b4d137b0cdc3fb&attid=0.6&disp=inline&realattid=f_gejmc9ac5&zw
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12b4d137b0cdc3fb&attid=0.3&disp=inline&realattid=f_gejm4u4a2&zw
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12b4d137b0cdc3fb&attid=0.5&disp=inline&realattid=f_gejmc7bl4&zw


https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12b4d137b0cdc3fb&attid=0.1&disp=inline&realattid=f_gejm4ou70&zw

மனதில் ஹைக்கூ நூலின் ஆசிரியர் : இரா.இரவிநூல் விமர்சனம் :முனைவர் ச.சந்திரா

நூலின் பெயர் : மனதில் ஹைக்கூ
நூலின் ஆசிரியர் : இரா.இரவி
நூல் விமர்சனம் :முனைவர் ச.சந்திரா
கோபுர நுழைவாயில் :
உலகம் மூன்று ; கணிக்கும் காலம் மூன்று; ;சுவையூட்டும் கனி மூன்று ;உலகப்பொதுமறையின் பால் மூன்று ;அரும்பெருந் தமிழ் மூன்று ; ஆற்றல்சால் வேந்தன் மூன்று என புகழின் உச்சத்தை எட்டிய அனைத்துமே ' மூன்று' எனும் உயரிய எண்ணாக வடிவெடுக்க,அதில் துளிப்பா மட்டும் விதிவிலக்கா என்ன ? மூன்றே வரிகளில் முத்தான கருத்துக்களை வாசகர் மனதிற்குள் புகுத்தும் சக்தி கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு உண்டு என்பதனை நிரூபணம்செய்ய வந்த நூலே 'மனதில் ஹைக்கூ'
ஆதியோடு அந்தமும் :
கடிகாரம் முதல் கணினி வரை ,பூசணிக்காயிலிருந்து பொக்ரான் வரை ,சம்மட்டி தொடங்கி சந்திராயன் வரை,காந்திதாசன் முதல் கண்ணதாசன் வரை, வாடும் ரோஜாமுதல் வாடாமல்லி வரை,அரேபியா முதல் ஆகாயம் வரை அலசி ஆராய்கிறது 64 பக்கங்களையுடைய மனதில் ஹைக்கூ எனும் அற்புத நூல்.
இதயப்பகுதி :
ஹைக்கூ திலகம் இரா.இரவியின் இந்நூலில் சமூக அத்துமீறல்கள் அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டப்பட்டிருக்கின்றது.மூடநம்பிக்கைகளின் ஆணிவேர் கிள்ளி எறியப்படுகின்றது.தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் வரைமுறையற்ற ஆதிக்கம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இயற்கை இடையிடையே வந்து நலம்விசாரித்து விட்டு போகின்றது.பாசமும்நேசமும் பாங்காய் பண் பாடுகிறது. தன்னம்பிக்கை ஆங்காங்கே
பளிச்சிடுகின்றது.ஒரு சமூக சீர்திருத்தவாதியின் ஒட்டுமொத்த பணியை செய்வதற்கு ' ஹைக்கூ' எனும் அஸ்திரத்தை கவிஞர் இந்நூலில் பயன்படுத்தியுள்ளார

இரத்த ஓட்டம் :
இந்த கவிதை தொகுப்பில் அஞ்சல் பெட்டி அழுகின்றது.தொலைக்காட்சிப்பெட்டி தொற்று நோய் பரப்புகின்றது.கைபேசி கதற வைக்கின்றது.அல்லி கூம்புகின்றது.பட்டாசு பற்றி வெடிக்கின்றது.பாம்பு இரை தேடுகின்றது.குப்பை கூட தத்துவம் பேசிச்செல்கின்றது.மொத்தத்தில் கற்கால கோடாரி முதல் தற்கால கணினி வரை கருவாக உருமாற்றியிருக்கிறார் கவிஞர்.
நவரத்தின குவியல் :
பழமொழியை காலத்திற்கு ஏற்றாற் போல் புதுமொழியாக மாற்றுவது என்பது கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு கை வந்த கலை.
குஞ்சுகள் மிதித்து
கோழிகளுக்கு காயம்
முதியோர் இல்லம்.
நகைச்சுவை கவிதை :
மேலிருந்து குதித்தான்
மரணம் இல்லை
நீச்சல் குளம்.
'நச்'-என்று ஒரு கவிதை:
பாஸ் மார்க் வாங்கியும்
கிளாஸ் பாட்டிலுடன் வேலை
டாஸ்மாக் .

இளைஞர்களுக்கு ஓர் இலவசக்கவிதை :
மூளைப்புற்று நோய்
முற்றிலும் இலவசம்
செல்பேசியுடன் !
சொல் விளையாடல் கவிதை :
காசு கரியானது தீபாவளி
கரி காசானது
நெய்வேலி.
சமூகத்தை படம்பிடித்து காட்டும் கவிதை :
உலகெல்லாம் உறவு
பக்கத்து வீடு பகை
மனிதன்.

மனதார ...
ஒன்பதாவது மைல்கல்லை எட்டி, ஹைக்கூ இலக்கிய உலகிற்கு 'மனதில் ஹைக்கூ' எனும் ஒப்பற்ற நூலை வழங்கியிருக்கும் கவி சூரியன் இரா.இரவியின் பெயரும் புகழும் அலைகடல் தாண்டி அகிலம் முழுவதும் ஒலிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

திங்கள், 13 செப்டம்பர், 2010

தமிழண்ணல் பாராட்டினார்

மலர் ஆசிரியர்கள் கவிஞர் இரா .இரவி ,
முனைவர் வனராசாஇதயகீதன் ஆகியோரை
தமிழண்ணல் பாராட்டினார்
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12b0b3ec0a8b2a37&attid=0.3&disp=inline&realattid=f_ge1czb6a2&zw

முனைவர்கள் மோகன் நிர்மலா மோகன் மணிவிழா மலர் வெளியீடு

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12b0b3ec0a8b2a37&attid=0.1&disp=inline&realattid=f_ge1czb5u0&zwபுதுகைத் தென்றல் ஆசிரியர்
புதுகை மு .தருமராசன் ,
தமிழ் மாருதம்ஆசிரியர்
சாம்பசிவனார் ஆகியோருக்கு
முனைவர்கள் மோகன் நிர்மலா மோகன்
அறக்கட்டளை சார்பில்விருது வழங்கப்பட்டது .https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12b0b3ec0a8b2a37&attid=0.2&disp=inline&realattid=f_ge1czb5u1&zw

: இலங்கை - தமிழர்களுக்கே சொந்தம் - மறுக்க முடியாத சரித்திர உண்மைகள்!

அந்த காலத்து விடுதலையில்......
இலங்கையின் பூர்வீக குடிமக்கள்
தமிழர்களே! சிங்களர்களல்லர்!!
இலங்கை - தமிழர்களுக்கே சொந்தம் - மறுக்க முடியாத சரித்திர உண்மைகள்!

சிங்களர்கள் வங்காளத்திலிருந்து தமிழர்களுக்குப் பின்னர் குடியேறியவர்களேயென்று இலங்கை சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.
இலங்கை சேதத்தின் புராதனக் குடிகள் தென் னிந்தியத் தமிழர்களே யன்றி சிங்களர்களல்ல. இந்த உண்மையை நிரூபணம் செய்வதற்கு சரித்திர ஆதாரங்கள் மலிந்து கிடக்கின்றன. டாக்டர் ஜி.ஸி.மெண்டிஸ் என்பவர் தாம் வரைந்துள்ள இலங்கை சரித்திரமும் உலக சரித்திரமும் என்ற நூலில் இலங்கையின் பூர்வீக மக்கள் வேடர்களே யென்றும், கி.மு. 543 ஆம் ஆண்டில் வந்த சிங்களர்கள் இலங்கைக்கு அந்நியர்களாகவே யிருந்தார்களென்றும் திட்டமாகச் சொல்லியி ருக்கிறார். அதே புத்தகத்தின் 14 ஆம் பக்கத்தில் சிங்களர்களின் வருகைக்குச் சுமார் ஆயிரம் வரு டங்களுக்கு முன்னதாகவே ஆரியத் தமிழர்கள் இலங்கைக்கு வந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதுபோல் திரு.கீஜர் என்னும் பிரபல சரித்திர ஆராய்ச்சியாளர் தம் முடைய மகா வம்சத்தில் பின்வருமாறு தெரி வித்திருக்கிறார்:-
இலங்கையின் பூர்வீகக் குடிகள் நாகர்களும் யக்ஷர்களுமே, சிங்களர்களின் வருகைக்கு முன் னால் இவ்விரு வகுப்பைச் சேர்ந்த மன்னர்களும் இலங்கையை ஆண்டு வந்தார்கள். அந்த அரசர் களுள் மணியக்கிகா, மஹேதரன், குலோதரன் ஆகிய நாக வம்சத்து மன்னர்களும், குவினி, மஹாகல சேனன் ஆகிய யக்ஷ வம்சத்து மன்னர் களும் குறிப்பிடத்தகுந்தவர்கள். கி.மு.543 ஆம் வரு டத்திற்கு முன்பு வரை சிங்களவர்கள் இலங்கைக்கு அந்நியர்களாகவே இருந்தார்கள்.
நாகர்களும் யக்ஷர்களும் யார்?
நாகர்கள் என்ற பதத்திற்கும், யக்ஷர்கள் என்ற பதத்திற்கும் முறையே சர்ப்பங்களை பூஜிப்பவர் கள் பிசாசங்களைப் பூஜிப்பவர்கள் என்று பொருள். இலங்கையிலிருந்த புராதனத் தமிழர் கள் சர்ப்பங்களையும் பிசாசங்களையும் பூஜை செய்பவர்களாக இருந்து அது காரணமாக இப் பெயர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடும். தவிர பண்டைக் காலத்து திராவிடர்களிற் பொரும்பாலோர் வேட்டையாடுவதையே ஜீவன மாகக் கொண்டிருந்தார்கள்.
சிங்களர் சரிதை என்ன கூறுகிறது?
ஆகையால், வேடர்களென்ற பெயரும் அவர் களுக்கு உண்டாயிற்று. இந்த அபிப்பிராயத்தை திரு.ஜான் எம்.செனிவிரத்னா என்ற பிரபல சரித் திர நூலாசிரியர் தம்முடைய சிங்களர் சரிதை என்ற புத்தகத்தில் ஆதரிக்கிறார். அவரும் வித்யானுகூல லங்கா இதிகா சபா என்ற நூலின் ஆசிரியரான திரு.டப்ளியூ.எம்.பெரே ராவும் இலங்கை புராதனக் குடிகளாகிய நாகர், யக்ஷர், வேடர் ஆகியோர்களைப் பற்றி பின்வருமாறு எழுதியிருக்கின்றார்.
நாகர், யக்ஷர்,வேடர்ஆகியோர் திராவிட வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மணிக்கீகா, மஹோ தரன், குலோதரன், குவினி, ராவணன், மஹாகல சேனன் முதலான திராவிட மன்னர்கள் சிங்கள வர்களின் வருகைக்கு முன்னால் இலங்கையை ஆண்டு வந்தவர்கள் அய்ரோப்பியர்கள் அபிப்பிராயம்
மேற்படி ஆதாரங்களைத் தவிர டாக்டர் கால்டுவெல், டாக்டர் ஜி.யு.போப்முதலான அய் ரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் இவ்வாறே கூறியிருக்கின்றார்கள். தமிழர் என்ற தமிழ்ப் பதத்திற்கு திராவிடர் என்பது சமஸ்கிருத மொழிபெயர்ப்பென்றும் ஆகையால் இலங்கை யின் பூர்வீகக் குடிகளான திராவிடர்கள் தென் னிந்தியத் தமிழர்களே யென்றும் அவர்கள் ஊர்ஜிதம் செய்திருக்கின்றனர்.
லங்கையைத் திராவிடர்களே ஆண்டார்கள்
சந்திரசேகர பாவலரின் இராமாயண ஆராய்ச்சி (இரண்டாம் பாகம்) புரொபசர் எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளையின் இலங்கைச் சக்கரவர்த்தி இராவணன், திரு.வி.பி சுப்பிர மண்ய முதலியாரின் இராமாயண உள்ளுரை திரு.என்.எஸ்.கந்தையா பிள்ளையின் தமிழகம் ஸ்ரீஜத் சிவானந்த சரஸ்வதியின் மத விசாரணை அகஸ்திய மகா முனிவரின் அகஸ்தியர் இலங்கை ஸ்வாமி வேதாசலத்தின் மாணிக்க வாசர் சரிதை மாணிக்கநாயனாரின் நாவணாசனம் தேவாரம், திருவாசகம் முதலான நூல்களிலும் இதே அபிப்பிராயம் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டிருப் பதை நாம் காணலாம்.
திராவிட நாகரிகம் பரவியிருந்தது
சிங்களவர்களின் வருகைக்கு முன் இலங்கை யிலிருந்த திராவிடர்களின் நாகரிகம் உச்சஸ் தானத்தையடைந்திருந்தாதாயும் மேற்படி நூல்கள் சாற்றுகின்றன. இதை திரு.ஜான். எம்.செனிவிரத்னாவும் தமது சிங்களர் சரிதை என்ற புத்கத்தில் ஆதரித்து எழுதியிருக்கிறார். இலங்கையை ஆண்ட முதல் சிங்கள மன்னனால் விஜயன் மஹாகல சேனன் என்ற திராவிட மன்ன னிடமிருந்து தான் சிங்காதனத்தைப் பெற்ற னென்பது மேற்படி சரித்திர ஆசிரியர்களின் திட் டமான அபிப்பிராயம். அதோடு இலங்கையை ஆண்ட கடைசி மன்னரும் (கண்டி மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கா) தமிழர்தானென்பதை திரு. பிளேஸ் ஊர்ஜிதம் செய்கிறார்.
புராதனத் தமிழர்கள் கால்நடையாகவே வந்தார்கள்
இலங்கையின் புராதனக் குடிகள் தமிழர்களே யென்பதற்கு இது வரையில் அநேக சரித்திர ஆதா ரங்களை எடுத்துக்காட்டினோம். அதே சரித்திர நூல்களில் இந்தியத் தமிழர்கள் முதன் முதலாக இலங்கைக்கு யெப்படி வந்தார்களென்பதும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. திரு.அய்.ஸி. மெண் டஸ் என்பவர் தமது இலங்கை சரிதமும், உலக சரிதமும் என்ற நூலின் மூன்றாவது பக்கத்தில் இது விஷயமாக எழுதியிருப்பதாவது:
இலங்கையின் புராதனக் குடிகளான தென் னிந்தியத் தமிழர்கள் கப்பல்களின் மூலமாகவோ அல்லது படகுகளின் மூலமாகவோ இலங்கைக்கு வரவில்லை. அவர்கள் கால்நடையாகவே இலங் கையை வந்தடைந்தார்கள். அவர்கள் வந்த காலத்தில் இலங்கை தேசம் ஒரு தனித் தீவாக இல்லாமல் இந்தியாவோடு இணைக்கப்பட்டு இந்தியாவின் ஒரு நாடாக இருந்தது. இந்தியா விற்கும் இலங்கைக்கு மிடையிலுள்ள கடலில் இப்பொழுது சிதறிக்கிடக்கும் ஆதாம்பாலம் (தற்போது ராமர்பாலம் என்று கதைக்கப்படும் பகுதி) என்பது அக்காலத்தில் உண்மையான நிலப் பாதையாகவே இருந்தது. அதன் மூலமாகத்தான் தென்னிந்தியாவிலிருந்தே வேடர்கள் இலங் கைக்கு நடந்து வந்தார்கள்
முன்னர் இலங்கை கடலினால் பிரிக்கப்படவில்லை
மேற்படி அபிப்பிராயம் திரு.பி.குணசேகரா வின் ராஜாவளி வித்யானாகூல இலங்கா இதிகாசயா மாணிக்க வாசகர் சரிதைஸர் ஸ்காட் எலியட்டின் மறைந்து போன தீவுகள் முத லான மற்றும் பல நூல்களிலும் ஆதரிக்கப்பட்டி ருக்கின்றது தவிர, ஈழநாடு எனப்படும் இலங்கை யும் பாண்டியநாடு, சோழநாடு, சேரநாடு (மலை யாளம்) முதலான பிரதேசங்களும் கடலினால் இடையில் பிரிக்கப்படாதிருந்தன வென்பதை அநேக அய்ரோப்பிய ஆசிரியர்களும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.
எனவே, மேற்படி ஆதாரங்களிலிருந்தும் (1) இலங்கையின் பூர்வீகக் குடிகள் இந்தியத் தமிழர் கள் தான்.(2) அவர்கள் வசித்து வந்த நாட்டில் சிங்களர்களே குடியேறினார்கள். 3. சிங்களர்களின் வருகைக்கு முன்னால் இலங்கை தேசம் தமிழ் மன்னர்களின் ஆட்சியிலேயே இருந்தது. 4. அக் காலத்தில் இலங்கை வாசிகளின் (இந்தியத் தமி ழர்களின்) நாகரிகம் உச்சஸ்தானத்தை அடைந்தி ருந்தது. 5.கி.மு 543 ஆம் வருடத்திற்கு முன்வரை தமிழர்கள் வாழ்ந்து வந்த இலங்கைக்கு சிங்கள வர்கள் அந்நியர்களாகவே இருந்தார்கள் என்னும் விஷயங்கள் மறுக்க முடியாத சரித்திர உண்மை களாகப் புலப்படுகின்றன. (செட்டி நாடு)
- விடுதலை, 19.12.1936
தகவல்: சிங்.குணசேகரன்

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

தந்தை பெரியார் சொன்னபடி திரைப்படம் சமுதாயத்தைப் பிடித்த பெரு நோயாகப் பெருகி வருகிறது

இன்று மாலை ஒரு 7.30 மணியளவில் சன் பிக்சர்ஸ் வெளியிடும் எந்திரன் ட்ரைலர் வெளியீட்டு விழா நிகச்சியை காண நேரிட்டது. பார்க்கும் பொழுதுதான் எனக்கு இப்படி ஒரு கேள்வி தோன்றியது. நிகழ்ச்சி ஒளிபரப்பிய சன் நிறுவனம் இதை ஒரு சாதனை என்பது போலவும் மொத்த தமிழ் நாட்டுக்கே ஒரு விழா என்பதாகவும் காட்டினார்கள். கோவிலில் வைத்து பூசை, யானையில் ஊர்வலம், பாலாபிசேகம், பட்டாசுகள், நடனங்கள் என ஆயிரக்கணக்கில் தான் சம்பாதித்த பணத்தை தண்ணியாக செலவழிக்கும் இளைய சமுதாயத்தை காண நேர்ந்தது.இதெல்லாம் எதற்காக ரஜினி எனும் தனி மனிதனும் அவரை வைத்து பணம் பண்ணுபவர்களுக்கும் இலவச விளம்பரம் தரவே தான் உழைத்து சம்பாதித்த பணத்தை மேல் சொன்ன வழிகளில் வீணடிக்கிறது இளைய சமுதாயம். இதனால் அவர்களுக்கு நல்ல வருமானம், நல்ல விளம்பரம் என நிறைய கிடைக்கிறது. இவர்களுக்கு என்ன கிடைக்க போகிறது. நல்ல வருமானம் வராது என்றால் யாரேனும் நடிப்பர்களா.. இல்லை படம் தான் எடுப்பார்களா... இவர்கள் ஏன் இப்படி முட்டாள்களாக இருக்கிறார்கள். என்னைக்காவது ஒரு ஏழைக்கு உணவு தந்ததுண்டா... தவிக்கும் ஒரு குழந்தையின் தாயிக்கு பால் வாங்கி தந்ததுண்டா... வீணாக வெடித்து புகையாகும் பட்டாசுக் காசை ஒரு சிறுவனின் படிப்புக்கு செலவழித்தது உண்டா...இதையெல்லாம் தவிர்க்க என்ன வழி... அவர்களால் உங்களுக்கு என்ன பயன்... அவர்களால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது.

சினிமா என்பது ஒரு வியாபாரம். அதுவும் தமிழ் நாட்டில் நன்றாக பணம் கொழிக்கும் என்பதை ஹாலிவுட் நிறுவனங்கள் கூட அறிந்த உண்மை. அப்படி இருக்கையில் உங்களின் சொந்த பணத்தை செலவழித்து இதை எல்லாம் செய்ய வேண்டிய தேவை என்ன.. நம்மை சுற்றி இருக்கும் எவ்வளவோ தேவை உள்ளவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு ஏதாவது செய்யலாம் இல்லையா...

ஒரு சில படித்த மக்களையும் காண முடிந்தது இந்த கூட்டத்தில்... இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ... இந்த மாநிலமும் இந்த மக்களும் என்று திருந்தப் போகிறார்கள்... மிகவும் கவலையான ஒரு விசயமாக தோன்றியதால் பகிர்ந்து கொண்டேன்.


பிரார்தனைகளுடன்...
M.I.B
தந்தை பெரியார் சொன்னபடி
திரைப்படம் சமுதாயத்தைப் பிடித்த
பெரு நோயாகப் பெருகி வருகிறது

நடிகரும் ,தயாரிப்பாளரும் கோடிகள்
ஈட்டப் போகும் திரைப் படத்திற்கு,
ரசிகன் பெற்றோர் தந்த பணத்தில்
நடிகரின் கட் அவுட்டிற்கு
பாலபிசேகம், பீர் அபிசேகம் ,
மாலைகள் ,வெடிகள் இட்டு
பணத்தை விரயம் செய்யும்
பகுத்தறிவைப் பயன்
படுத்தாத மடையர்களின்
தலையில் குட்டு வைத்ததற்கு
மிக்க நன்றி .தந்தை பெரியார் சொன்னபடி
திரைப்படம் சமுதாயத்தைப் பிடித்த
பெரு நோயாகப் பெருகி வருகிறது
கவிஞர் இரா .இரவி

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

நூலின் பெயர் :திரும்பி வர மாட்டாயோ ? ,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

நூலின் பெயர் :திரும்பி வர மாட்டாயோ ? ,நூல் விமர்சனம் : கவிஞர்
இரா.ரவி
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12adb31e964446df&attid=0.1&disp=inline&realattid=f_gdo10zew0&zw

நூல் ஆசிரியர் : கவிஞர் ந.பாண்டுரங்கன்

“பிள்ளைகளின் தோள்கள்”என்ற சிறுகதை தொகுப்பு நூலை வெளியிட்டு இலக்கிய உலகின்
பாராட்டினைப் பெற்ற நண்பர் கவிஞர் ந.பாண்டுரங்கன் அவர்களின் இரண்டாவது படைப்பு
“”திரும்பி வர மாட்டாயோ ? என்ற கவிதை நூல். முதலில் அவர் கவிஞர் பிறகு தான் எழுத்தாளர்.
இவரது முதல் நூல் வெளியீட்டு விழாவில் நான் கேட்டுக் கொண்*ட* படி கவிதை நூலை
வெளியிட்டவருக்கு முதல் நன்றி

நிறைய வாசிப்பவர்,நூல்களை நேசிப்பவர், நூலக அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு
பெற்றாலும் இலக்கியப் பணியிலிருந்து என்றும் ஓய்வு பெறாதவர். தொடர்ந்து
இயங்கிக் கொண்டே இருக்கும் படைப்பாளி. மிகச்சிறந்த மரபுக்கவிஞர். இந்த நூலில்
மரபும் உள்ளது. புதுக்கவிதையும் உள்ளது. சோறாக மரபும், ஊறுகாய் போல
புதுக்கவிதையும் உள்ளது. தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர் படுகொலைகள் கண்டு
கொதித்தோம் நாம். கவிஞர் ந.பாண்டுரங்கன் வரிகள் இதோ!

*தமிழச்சி கண்ணீர்*
*
*

*இதயம் எரிகிறது – தமிழ்
ஈழம் எரிவதனால்
கலங்கிவிடு தமிழரின் நிலைதனைக் கண்டும்
கண்ணீர் ரத்தம் வடிவதைக் கண்டும்*

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் செந்தமிழை உயிருக்கு மேலாகப் போற்றுபவர். அந்த
வரிசையில் கவிஞர் ந.பாண்டுரெங்கனும் போற்றுகின்றார்.

*தமிழே வேண்டும்*
*
*

*தமிழில் தான் எல்லோரும் பேச வேண்டும்
தமிழில் தான் எல்லோரும் பாட வேண்டும்
தமிழில் தான் வழிபாடு நடத்த வேண்டும்
தமிழ் வாழ்க முழக்கமே தழைக்க வேண்டும்.*
*

*

*ஆலயத்தில், நீதிமன்றத்தில், அலுவலகங்களில் எங்கும் எதிலும் தமிழே என்ற நிலை வர
வேண்டும். ஆலயத்தின் உள்ளே தமிழை மறுப்பவர்களை ஆலயத்தை விட்டே அகற்ற வேண்டும்.*

“பேரருங்காடு” என்ற தலைப்பில் உள்ள கவிதை மரபுக் கவிதையின் மூலம்
அழகிய வனத்திற்கே வாசகர்களை அழைத்துச் சென்று காட்சிப்படுத்தி பிரமிக்க
வைக்கின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் ந.பாண்டுரங்கன்.

வளரும் கவிஞர்கள் அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய நூல் இது. சொற்களஞ்சியமாக
கவிதைகள் உள்ளது. “என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில், ஏன்? கையை ஏந்த வேண்டும்
பிறமொழியில்” என்பதைப் பறைசாற்றிடும் விதமாக பிறமொழி கலப்பின்றி அழகு தமிழில்
அற்புதமாக கவிதைகள் வடித்துள்ளார். சிலர் புதுக்கவிதை என்ற பெயரில் ஆங்கிலச்
சொற்கள் கலந்து எழுதி தமிழை சிதைத்து வருபவர்கள் இந்த நூலைப் படித்துப்
பார்த்து திருந்த வேண்டும்.

சந்த நயங்களுடன் சொற்கள் நடனமாடுகின்றன. அல்லி, மல்லி, சொல்லி, வல்லி, வெல்லம்,
உருவம், உள்ளம், வெல்லும், நிற்கும், கற்கும், காணும்,நாணும், பெருகும்,
உருகும்,உருவம்,உலவும், இந்தச் சொற்கள் யாவும் காவிரி வெள்ளம் என்ற ஒரே ஒரு
கவிதையில் இடம் பெற்றுள்ளவை. ஓரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல சொல்லி
உள்ளேன். நூல் முழுவதும் எவ்வளவு இனிமையான சொற்கள் இருக்கும் என்பதை கற்பனை
செய்து பாருங்கள். கருத்துக்களும் சமூகத்தை நெறிப்படுத்தும் விதமாக உள்ளது.

*பொங்குக*
*
*

*நாட்டின் தெருக்களிலே – ஊழல்
நாற்றச் செயல்பாடு
பாட்டுப் புலவரெல்லாம் – இதைப்
பாடத் தயங்குவதேன்*.

படைப்பாளிகளுக்கு நிறைய வேலை உள்ளது, தயங்காமல் பாடுங்கள் என கவிஞர்களுக்கு
ஊக்கம் கொடுக்கும் விதமாக கவிதை உள்ளது. பாராட்டுக்கள். அரசியல்வாதிகள் கூவத்தை
சுத்தம் செய்து கொள்ளும் முன்பு அவர்களை சுத்தம் செய்வதுநல்லது . பல்லாயிரம்
ஆண்டுகள் ஆன போதும் உலகின் முதன்மொழியான தமிழ்மொழிக்கு பல்வேறு எதிர்ப்புகளும்.
சிதைவுகளும்,துரோகங்களும் வந்த போதும் அழியாமல் நிலைத்து நிற்கும் அற்புதத்
தமிழுக்கு அணி சேர்க்கும் விதமாக இந்நூல் வந்துள்ளது.

கவிதை படிப்பது,சுகமான அனுபவம் மரபுக்கவிதை படிப்பது சுகமோ சுகம். சொற்கள்
நடந்தால் வசனம்,சொற்கள் நடனமாடினால் கவிதை,கவிஞர் ந.பாண்டுரங்கனிடம் சொற்கள்
களிநடனம் புரிந்து உள்ளன. அன்னைத் தமிழுக்கு அணி சேர்க்கும் விதமாக இந்நூல்
வந்துள்ளது. தொடர்ந்து இதுபோன்ற தரமான நூல்களை வழங்கிட வாழ்த்துக்கள்.

*இந்நூலில் தமிழ்ப்பற்று உள்ளது. தத்துவக் கருத்துக்கள் உள்ளது.
எதுகை,மோனை,இயைபு என இலக்கணங்களும் உள்ளது. கவிதைகளின் தலைப்புகளே ஆடல்,
புகழின் கோலம், கல்லறைச் சாசனம், பயணம்,தனித்தன்மை, கொள்கை மாறாத கோழிகள்,
ஆள்வினை கொள்க, தமிழச்சி கண்ணீர் இப்படி சிந்திக்க வைக்கின்றன.*

கவிதை ரசிகர்களுக்கு கற்கண்டு இந்நூல். கவிதை நந்தவனத்தை சுற்றி வந்த இன்பத்தை
தருகின்றது. வாங்கிப் படித்துப்பாருங்கள். உண்மையை நீங்களே உணருவீர்கள்.
...

பத்திரிக்கைச்செய்தி

பத்திரிக்கைச்செய்தி
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12adb31a4f8bc49b&attid=0.1&disp=inline&realattid=f_gdo10kkm0&zw

கவிஞர் பார்வையில் ஆசிரியர்

http://thesamnet.co.uk/wp-content/uploads/2009/09/radhakir.jpg
கவிஞர் பார்வையில் ஆசிரியர்

மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்
தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள்
இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள்
இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள்
புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள் ஆசிரியர்கள்
புரியாததைப் புரிய வைக்கும் புனிதர்கள் ஆசிரியர்கள்
கற்களை சிலைகளாக செதுக்குவது ஆசிரியர்கள்
களிமண்களை பொம்மைகளாக வடிப்பது ஆசிரியர்கள்
முட்டாள்களையும் அறிவாளிகள் ஆக்குவது ஆசிரியர்கள்
முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுபவர்கள் ஆசிரியர்கள்
மாணவர்களை குழந்தைகளாக நினைப்பது ஆசிரியர்கள்
மாணவர்களை மாவீரர்களாக மாற்றுவது ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விதைப்பது ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு எழுச்சியை ஊட்டுவது ஆசிரியர்கள்
ஆயிரம் விளக்குகளை ஏற்றும் அகல்விளக்கு ஆசிரியர்கள்
அறிவொளி ஏற்றிடும் அற்புத ஒளி ஆசிரியர்கள்
இந்தியாவே போற்றும் நல்மனிதர் அப்துல்கலாம்
இனியவர் அவர் போற்றுவது ஆசிரியர்கள்
பணிவுகள் பயிற்றுவிப்பது ஆசிரியர்பணி
பணிகளில் சிறந்த பணி ஆசிரியப் பணி

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது