வெள்ளி, 29 நவம்பர், 2013

குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் 
வாழ்க்கைக் குறிப்புகள் !

( மழலைச் சுவடுகள் தொகுதி -5 )

தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் !
இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர்  கன்னிக்கோவில் இராஜா !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


மலர் பதிப்பகம் ,எண் 5.ஆண்டியப்பன் தெரு ,முதல் சந்து ,பழைய வண்ணாரப் பேட்டை ,சென்னை 600021.பேசி 9884711802. விலை ரூபாய் 70.
.
கவிமாமணி இளையவன் அணிந்துரை மிக நன்று .வரவேற்பு வாயிலாக உள்ளது .குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் மிகவும் குறைவு .அவர்களை இனம் கண்டு பேசி ,பாடல்கள் வாங்கி மிகவும் சிரமப்பட்டு  50 கவிஞர்கள் முகவரி ,அலைபேசி எண்கள் , பெற்ற சிறப்புகள் அவர்கள் எழுதிய பாடல்கள் யாவும் நூலில் உள்ளன.

தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம், இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர்  கன்னிக்கோவில் இராஜா இருவரின் கடின உழைப்பை  உணர  முடிகின்றது . குழந்தை இலக்கிய பாடல்கள் எழுதுவோரின்  தொகுப்பு நூல் .

குழந்தைகள் பாடல்களுக்கு சிறப்பிடம் என்றும் உண்டு .இந்த நூல் படித்தபோது குழந்தைகள் பாடல்கள் நாம் எழுத வில்லையே நாமும்  எழுதி இருந்தால் இந்த நூலில் இடம் பெற்று இருக்கலாம் என்று மனம்  வருந்தினேன் ..முன்பு இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர்  கன்னிக்கோவில் இராஜா அவர்கள்  ராஜா என்ற பெயரில் உள்ள கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து நூல் வெளியிட்டார். அப்போது நம் பெயரில் இராஜா இல்லியே என்று வருந்தினேன் . 

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் 50 கவிஞர்கள் விபரமும் , பாடலும் உள்ளன .குழந்தைப் பாடல்கள் தேவைப்படுவோர் இவர்களைத் தொடர்பு கொள்ள வசதியாக நூல் உள்ளது .பாடல்கள் நெறி புகட்டும் விதமாக உள்ளன .அடுத்த பாட திட்டம் தயாரிக்கும் போது இந்த நூல் பாடல்களைப்  பயன்படுத்தலாம் . 

வருங்காலத்தில் வருவோரும் படைப்பாளிகள் பற்றி அறிந்து கொள்ள ஆவணப் படுத்தப்பட்ட அற்புத நூல் .தொண்டு உள்ளத்துடன் தொகுத்த ஆசிரியர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் . 
பாடல்கள் மிக மிக எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளன. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பயன்படும் கருத்துக்கள் 

நவீன உலகில் குழந்தைகளை நன்கு வளர்த்திட இந்த நூல் உதவும். இந்த நூலை வாங்கி குழந்தைகளின் பிறந்த நாளின் போது பரிசளித்து படிக்க வைத்தால் தமிழும் தமிழ் நெறியும் அறிந்திட வாய்ப்பாகும்.
அனைத்துக் கவிஞர்கள் பாடல்களும்  சிறப்பாக இருந்தாலும் 
பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .இதோ !

அன்பை வலியுறுத்தும் பாடல் மிக நன்று .

அன்பு செலுத்து கண்ணே ! கவிஞர் வே .அருணாதேவி!

அன்பு என்ற ஒன்றினால்    .
அகில உலகைச் சுற்றலாம் !

பண்பு கூட இருந்திடின் 
பாரில் எல்லாம் கற்கலாம் !

எண்களை எழுதி அதோடு கருத்தும் விதைக்கும் உத்தி மிக  நன்று  .

காந்தி போல உயரு ! கவிஞர் அழகுதாசன் !

ஒன்று இரண்டு சொல்லு !
உண்மை பேசி வெல்லு !

மூன்று நான்கு  சொல்லு !
உடலால் உறுதி கொள்ளு !

ஆங்கிலத்தில் வணக்கம் நன்றி சொல்லி வரும் குழந்தைகளுக்கு தமிழ்ப் பற்று விதைக்கும் பாடல் நன்று .

தமிழ் வணக்கம் ! கவிஞர் எழிலன்  ( வாசல் )

வணக்கம் என்றே சொல்லு - தம்பி !
வண்ணத் தமிழது தெரிந்தே நீ  
வணக்கம் என்றே சொல்லு !

மாதா பிதா குரு என்பதை வரிசைப்படுத்தி எழுதிய பாடல் நன்று .

நால்வர் ! கவிஞர் கருவை மு .குழந்தை !

தன்னலம் அற்றவர் அன்னை !
சான்றாண்மை மிக்கவர் தந்தை !

பன்னலம் தருபவர் ஆசான் !
பலனெதும் கருதா நேயர் ( நண்பர் )

இனிக்கும் நா ! கவிஞர்  கன்னிக்கோவில் இராஜா !

நூல் நூல்  - சிறந்த நூல் !
ஐயன் தந்த - குறள்  நூல் !

பெயர் பெயர்  - என்ன பெயர் !
நா இனிக்கும் - தமிழ்ப்பெயர் !  

தொல்லைக்காட்சியாகி விட்ட தொலைக்காட்சியை பெற்றோர்கள் பார்ப்பது மட்டுமன்றி குழந்தைகளையும் பார்க்க வைத்து பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சு விதைத்து வரும் அவலம் சுட்டும் பாடல் நன்று .
ஓடியாடி விளையாடு ! கவிஞர் கார்முகிலோன் !

உடலும் உள்ளமும் உறுதி கொள்ளவே !
ஓடியாடியே நாளும் விளையாடு !

தொல்லை தந்திடும்  தொலைக்காட்சி நிகழ்வை !
தொடர்ந்து பார்ப்பதை துணிந்து தடை போடு !

தமிழ் எழுத்தோடு கருத்தும் கற்பிக்கும் பாடல் நன்று !

அறிவாய் தம்பி !கவிஞர் இரா பன்னீர் செல்வம் !

அன்பும் கருணையும் மனிதநேயம் !
ஆற்றலும் உழைப்பும் மனிதவளம் !

இன்முகம் வாழ்த்தும் வளம் தரும் !
ஈகையும் மன்னிப்பும் நலம் தரும் !

தமிழ் மொழி இன்று ஊடக மொழியால் சிதைக்கப்பட்டு அது பேசும் மக்களையும் தோற்றி விட்டது .தமிங்கில மொழி எங்கும் பேசி வருகின்றனர் .இந்த நூல் படித்தால் குழந்தைகளுக்கு தமிழ் மொழி மீதான அன்பு பிறக்கும் .ஆங்கிலம் கலந்து பேசுவதை மறக்கும் .

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ( சென்றியு )   கவிஞர் இரா .இரவி !

முகத்தின் 
ஒளி
புன்னகை !

நோய் நீக்கும் 
மருந்து 
உழைப்பு !

உடலை உருக்கும் 
நோய் 
கவலை !

அறிந்திடுக 
அதிக உணவு 
குறைந்த வாழ்வு !

பயன்படுத்தாவிட்டால் 
துருப்பிடிக்கும் 
இரும்பும்  மூளையும் !

ஆடையாக இருந்தது 
ஆபரணம் ஆனது 
கல்வி !


வரைந்தார்  ஓவியம் 
கைகளின்றி 
வாயால் !
 

கொடுத்தால் 
குறையாமல் வளரும் 
கல்வி !

அமைதியாக்கியது
ஆர்பாட்ட எண்ணங்களை 
தியானம் ! 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கவிதைச்சாரல் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

கவிதைச்சாரல் !
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ 
முனைவர் இரா .மோகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர், சென்னை .600017.விலை ரூபாய் 100.

மின்னஞ்சல்vanathipathippagam@gmail.com


நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் தமிழ் கூறு நல்லுலகம் போற்றும் வண்ணம் தொடர்ந்து தமிழன்னைக்கு அணி சேர்க்கும் வண்ணம் சளைக்காமல் ஓய்வின்றி நூல்களை எழுதி வருகிறார் .

அவர்க்கு வாய்த்த நல்  பதிப்பகம்  வானதி பதிப்பகம் .244 பக்க நூலை ரூபாய் 100 விலையிட்டு மலிவாகவும் , தரமாகவும் , மிக நேர்த்தியாகவும் பதிப்பித்து உள்ளனர் .பாராட்டுக்கள் .
விமர்சனத்திற்காக நூல் வெளியிடும் முன்பே எனக்கு நூலை வாடிக்கையாக வழங்கி வருகிறார்கள் .பெருமையாகக் கருதுகின்றேன் .

இனிய நண்பர் எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் அணிந்துரை மிக வித்தியாசமாக உள்ளது .அணிந்துரை படித்தவுடன் அவரை அலைபேசியில் அழைத்துப் பாராட்டினேன் .பிறகுதான் நூல ஆசிரியரைப் பாராட்டினேன் .திரு .இந்திரா சௌந்தர்ராஜன்  ஆன்மிக வாதி என்பதால் நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன்அவர்களுக்கு பெரியாழ்வார் என்ற பட்டமே வழங்கி உள்ளார் .4 மணி நேரம் நூல் முழுவதும் படித்து விட்டு அழகுரையாக அணிந்துரை எழுதி உள்ளார் .இந்த நூலை கவிவேந்தர் பாரதிக்கு காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம் .

 மகாகவி பாரதியார் ,புரட்சிக்கவிஞர்  பாரதிதாசன் ,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்று புகழ் மிக்க கவிஞர்கள் மட்டுமன்றி புகழ் பெற வேண்டிய ,வாழும் கவிஞர்களான்  பிரதாப் ,ஜெயபாலன் ,விநாயக  முர்த்தி  ,கோவிந்தர் ராஜன் உள்ளிட்டோர்  படைப்புகளை யும் ாரபட்சமின்றி சமநிலையில்  ஆய்ந்து , அறிந்து கட்டுரை வடித்து உள்ளார்கள் . 

மொத்தம் 20 கவிஞர்களின் கவிதைகளின் ஆய்வுக் கட்டுரைகள் அற்புதம் .அருமை .கவிஞர்களுக்குப் பெருமை .
கவிதை அலைவரிசை ,கவிதைக்  களஞ்சியம் வரிசையில் தற்போது கவிதைச்சாரல் ! வந்துள்ளது .இலக்கியத்தில் கவிதைக்கு தனி இடம் என்றும் உண்டு .இந்த நூல் படித்தால்  இலக்கியத்தில் கவிதைக்கு  சிறப்பிடம் தருவீர்கள் என்பது உண்மை .மழைச்சாரல் பிடிக்கும் மனசுக்காரர்கள்  அனைவருக்கும் இந்த  கவிதைச்சாரல் நூல் பிடிக்கும் என்று அறுதி இட்டுக் கூறலாம்  . 

இதயத்தை இதமாக்கும் விதமாக உள்ளது நூல் .கவலை இருந்தால் இந்த நூல் படித்தால் காணமல் போகும் .நூல் வாங்கிப் படித்துப் பாருங்கள் .உண்மை என்பதை உணருவீர்கள் . மகாகவி பாரதியாரின் நல்லதோர் வீணை செய்தே கவிதையை வரி வரியாக ஆராய்ந்த விதம் அருமை .கவிதை எழுதிய போது  பாரதியாருக்கு தோன்றாத கருத்துக்கள் எல்லாம் நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ 
முனைவர் இரா .மோகன்அவர்களுக்குத் தோன்றி உள்ளன .மகாகவி பாரதியார் இருந்தால் இந்த நூல் படித்தால் மனம் மகிழ்வார்  பெருமை கொள்வார்  .

பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !

நித்தம் நவம்  எனச் சுடர் தரும் உயிர் !

' நவம்  '  ' சுடர் ' என்னும்  இரு சொற்கள் மீதும் பாரதிக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு .சுவை புதிது , பொருள் புதிது  ,வளம் புதிது , சொற் புதிது ,சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை 
( ப 276) எனத் தம் கவிதையைச் சுட்டுவார் அவர் .அது போல ' சுடர் மிகு அறிவைக் குறிப்பிடுவதும் மனங்கொளத்தக்கதாகும் 
.
மு .வ .வின் செல்லப்பிள்ளை மோகன் என்பது உண்மை . புரட்சிக்கவிஞர்  பாரதிதாசன் அவர்களைப் பற்றிய கட்டுரை தொடங்கும்போது புரட்சிக்கவிஞர்  பாரதிதாசன்  பற்றி இலக்கிய இமயம் மு .வரதராசனார் எழுதிய கருத்தோடு தொடங்கி  உள்ளார் .
ஒரே ஒரு நூலில் 20 கவிஞர்களின் படைப்பை ஆய்வு செய்து நூலாக வழங்கி உள்ளார் .20 நூல்கள் படித்த திருப்தி ஒரு நூலில் கிடைத்து  விடுகின்றது .

புரட்சிக்கவிஞர்  பாரதிதாசன் , மனிதனின்  ஆணவத்தை   அகற்றி வாழ்வியல் கற்பிக்கும் விதமாக எழுதி உள்ள கவிதை மேற்கோள் காட்டி இருப்பது சிறப்பு .  

எத்தனை பெரிய வானம் ;
எண்ணிப்பார் உனையும் நீயே ;
இத்தரை கொயாப்பிஞ்சு ;
நீ அதில் சிற்றெ றும் பே ; 
அத்தனை பேரும்  மெய்யாய் ;
அடிப்படித் தானே மானே   ?
பித்தேறி மேல் கீழ் என்று ;
மக்கள் தாம் பேசல் என்னே ?    ( ப 37 )

பக்க எண்களுடன் மிக நுட்பமாக எழுதுவதில் தமிழ்த் தேனீக்கு நிகர் தமிழ்த் தேனீ அவர்கள்தான் . நாமக்கல் கவிஞர் வெ .இராமலிங்கம் பிள்ளை கவியாற்றலை உண்ர்த்தும் கட்டுரை மிக நன்று  .

சொல்வது எல்லார்க்கும் சுலப மாகும் 
சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் கொஞ்சம் 
எல்லையின்றி நீதிகளை எழுதுவார்கள் 
எழுதியதை பிறருக்கே தமக்கென் றெண்ணார்  !

இந்தக்கவிதை படித்ததும் எனக்கு எழுதியபடி வாழாத  அரசியல்வாதிகள் நினைவிற்கு வந்தனர் .நாமக்கல் கவிஞர் அன்று பாடியது இன்றும் பொருந்துவதாக உள்ளது .

கவிதை எழுதுபவன் கவிஞன் அல்ல கவிதையாக வாழ்பவனே கவிஞன் .என்ற பாரதியின் வரிகளும்  நினைவிற்கு வந்தன .ஒன்று படிக்கும்போது அது தொடர்பான மற்றொன்று வாசகர்க்கு நினைவிற்கு வருவதே நூல் ஆசிரியர் வெற்றி எனலாம் .

கட்டுரைக்கு தலைப்பு எப்படி என்பதை   நமக்கு கற்பிக்கும் விதமாக தலைப்புகள் உள்ளன .

தமிழ் சூடி தந்த தகைசால் கவிஞர் வ .சு .ப மாணிக்கம் .
அவரது கவிதை ஒன்று !

தமிழ் சூடி வழிபாடு செய்வாய் குழந்தாய் !
தாய்மொழி தவறாது கற்பாய்  குழந்தாய் !
திருக்குறள் கண்போலத் தெளிவாய் குழந்தாய் !
தீமைகள் மனத்திலும் தீண்டாய்  குழந்தாய் !

இந்தக் கவிதைப் படித்தபோது அவர் எழுதிய கவிதை குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அறிவுறுத்தும் விதமாகவே உள்ளது .  !

கவிஞர் வ .சு .ப மாணிக்கம் அவர்களின் கவிதைகளைப் படித்து இராத இளைய சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தி  உள்ளார்கள் . பாராட்டுக்கள் .

மதுரையின் பெருமைகளில் ஒன்றாகத் திகழும் கவிஞர்  பிரதாப் அவர்களின் கவி ஆற்றலை புலப்படுத்தும் கட்டுரை மிக நன்று. கவிஞர்  பிரதாப் அவர்கள் ஆங்கில மொழி நன்கு அறிந்தவர் 'மாஸ்டர்  வழிக்காட்டி' என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் அவர் தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து எழுதிய கவிதை மிக நன்று .

அடடா தமிழா உன்மொழி தேன் 
அப்படி இருக்க ஆங்கிலம் ஏன் ?
விடடா பிறமொழி பேசுதல் வீண் 
விந்தைத் தமிழே உயர்ந்த தென்பேன் !   

ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் ,ஈழத்துக் கவிஞர்  ஜெயபாலன் எழுதியுள்ள ஹைக்கூ ஒன்று போதும் உலகம் முழுவதும் பரந்து  வாழும் ஒட்டு மொத்த   ஈழத் தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கவிதை .

எல்லைகள் நூறு  தாண்டினாலும் 
என்னைச் சூழ எரிகிறதே 
யாழ் நூலகம் !

பேச்சு , எழுத்து இரண்டு வெவ்வேறு துறையிலும் வெற்றிக் கொடி நாட்டி வரும் அவர்களுக்கு பாராட்டுக்கள் .நீங்கள் வாழும் மதுரையில் நாங்களும் வாழ்வது  எங்களுக்குப் பெருமை .  

புதன், 27 நவம்பர், 2013

மதுரையில் உயர் நிலை கருத்தரங்கம் !

மதுரையில் உயர் நிலை கருத்தரங்கம் !

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் உயர் நிலை கருத்தரங்கம் மதுரையில்  நடைபெற்றது . தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை செயலர் முனைவர் 
மூ  இராசாராம் இ.ஆ .ப . ,மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் இல  சுப்பிரமணியன்  இ .ஆ .ப ,தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர்  முனைவர் க . பசும்பொன் ,கவிஞர் இரா .இரவி மற்றும் பேராசிரியர்கள் ,தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர் . 

மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா அழைப்பிதழ்

மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் மதுரை மாவட்ட மைய நூலகத்தில்
மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா அழைப்பிதழ்


ஏழைதாசன் இதழில் ஹைக்கூ --

ஏழைதாசன் இதழில் ஹைக்கூ 


செவ்வாய், 26 நவம்பர், 2013

தன்மானத் தமிழன் பிறந்த நாள் ! கவிஞர் இரா .இரவி !

தன்மானத் தமிழன் பிறந்த நாள் !  கவிஞர் இரா .இரவி !

உன்னுடைய பிறந்த நாள் என்பது !
ஒடுக்கப் பட்டவர்களின் உரிமை நாள் !

தம்பி என்று இன்று ஒலித்தாலே போதும்
தரணி முழுவதும் அறியும் உன்னை ! 

தம்பி என்ற தமிழ்ச் சொல்லிற்கு இன்று
தன்னிகரில்லாப் பெருமை வந்தது !

விடுதலைக் காற்றைச்  சுவாசிக்க வைக்க 
வேங்கைகளை உருவாக்கிய வீரன் நீ !

கடவுளை வணங்காத நாத்திகர்களும்
கடவுளாக வணங்கிடும் வீரன் நீ !

ஏன் ? என்றால் சிறைவாசம் என்றிருந்தபோது 
ஏன் ? என்று தட்டிக் கேட்ட வீரன் நீ !

தமிழன் கறி கிடைக்குமென்ற சிங்களனுக்கு
தலையில் தட்டி  அறிவு புகட்டிவவன் நீ !

பாலியல் வன்முறை புரிந்த சிங்களனுக்கு
பாடம் புகட்டி பயம் காட்டியவன் நீ !

சிங்கள இராணுவத்தின் அராஜக
சின்னப் புத்திக்கு வேட்டு வைத்தவன் நீ !

வாலாட்டி வந்த சிங்கள மந்திகளின்
வாலை ஒட்ட  நறுக்கியவன்   நீ !

கொட்டக் கொட்டக் குனிந்த தமிழருக்கு
கொட்டும் கரம் முறிக்கக் கற்றுத்  தந்தவன் நீ !

ஆதிக்க சக்திகள் அடிமைப் படுத்தியபோது
அடங்க மறுத்து அத்து மீறியவன் நீ !

அடவடியான  அயோக்கியர்களிடம் சரிவராது
அகிம்சை வழி உணர்த்தியவன் நீ !

வான் வழிப்   படைகள்  அமைத்து
வாய்ச்சொல் வீரர்களின் வாயடைத்தவன் நீ  !

முப்படைகள் நிறுவி ஆட்சி நடத்தி
முத்தமிழை வளர்த்து வந்தவன் நீ !

தமிழர்களுக்கு பொற்க்கால ஆட்சியை
தமிழ் ஈழத்தில் தந்த மன்னவன் நீ !

தமிழர்களின் வீரத்தை பெருமையை
தரணிக்கு பறைசாற்றியவன் நீ !

தன் மக்களுக்காக தன்னலமாக வாழாமல்
தமிழ் மக்களுக்காக வாழ்ந்து வருபவன் நீ!

குடும்பத்தை என்றும் பெரிதாக எண்ணாமல்
குடும்பமாக தமிழ் இனத்தை எண்ணுபவன் நீ !

மக்களுக்காக தன் மக்களை இழந்தாய்
மக்களுக்காகவே வாழ்ந்து வருகின்றாய் நீ !

பதவி ஆசைகள் பலர் காட்டியபோதும்
பல் இளிக்காத கொள்கையாளன் நீ !

பணத்தாசைகள் சிலர் காட்டியபோதும்
பண்பு மாறாத அன்பாளன் நீ !

மிரட்டல்களுக்கு என்றும்  அஞ்சாமல்
முடிந்தமட்டும் மோதிய வீரத்திலகம் நீ !

உலக அளவில் தமிழன் என்றால் வீரன் என்று
உணர்த்தி பகைவர்களுக்கு அச்சம் தந்தவன் நீ !

கொண்ட கொள்கையில் குன்றாக நின்று
குடிகொண்டாய் தமிழர்களின் உள்ளங்களில் நீ !

எட்டு நாடுகளின் படைகளை துணிவுடன்
எதிர்த்து நின்ற புறநாநூற்றுத்தமிழன் நீ !

காட்டிக் கொடுத்த கருணாவால் வந்தது துன்பம்
குறுக்கு வழியில் சதி செய்தது வெற்றியன்று !


இறந்து விட்டதாக சிலர் சொல்கிறார்கள்
உலகத்தமிழர்கள் உள்ளங்களில் வாழ்கிறாய் நீ !

புரட்சியாளர்கள் என்றுமே சாவதில்லை
புரியவில்லை இன்றும் சிலருக்கு !

இன்று இல்லாவிட்டாலும் நாளை
ஈழம் மலரும் யாராலும் தடுக்க முடியாது !

ஈழத்தின் ஒவ்வொரு துகள் மண்ணும்
இனியவன் உன் பெயர் சொல்லும் !

சனி, 23 நவம்பர், 2013

ஹைக்கூ தோப்பு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசி ! நூல்விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ தோப்பு !

நூல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசி !

நூல்விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தாய் வெளியீடு 42/45, இராஜாங்கம் மத்திய  வீதி ,
வடபழனி ,சென்னை ,26.

விற்பனை உரிமை நூலாக்கம் .பாரதி புத்தகாலயம் 421,அண்ணா சாலை ,தேனாம் பேட்டை .சென்னை ,18,
 விலை 60


ஹைக்கூ கவிதை என்பது வாசகர்களுக்கு கனி போன்றது .ஒரு கனியே இனிக்கும் சுவைக்கும் .இந்த நூல் கனிகளின் தோப்பாக ஹைக்கூ தோப்பாக வந்துள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசி அவர்களின்   உழைப்பில் உருவான தோப்பு .இந்த தோப்பில் வாசகர்கள் இளைப்பாறலாம் ,இனிய காற்றை சுவாசிக்கலாம் .சிந்திக்கலாம் ,இனிய கருத்துக்களை உணரலாம் .எழுத்தாளர் ச .,தமிழ்செல்வன் அவர்களின்  அணிந்துரை மிக நன்று .அட்டைப்படங்கள் உள் புகைப்படங்கள். அச்சு யாவும் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர் பாரதி புத்தகாலயத்தினர் .பாராட்டுக்கள் .

ஜப்பானிய ஹைக்கூ வடிவத்தை உள்வாங்கிக் கொண்டு தமிழ் மண்ணிற்கேற்ப ஹைக்கூ வடிப்பதில் ஒரு கூட்டம் சிறப்பாக உருவாகி விட்டது .தமிழகத்தில் இலக்கியத்தில் ஒரு தாக்கத்தை ,அதிர்வை ஏற்படுத்தி வருகின்றனர் .ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு யுத்தி .வாசகர் நினைத்தது அல்லாமல் வேறு சொல்வதும் ஒரு யுத்தி ,அந்த வகையில் அமைந்த ஹைக்கூ நன்று .

எவ்வளவு இரை வைத்தாலும்
முட்டைதான் போடுகின்றன
கோழிகள் !

இன்னா செய்தாரை திருக்குறளை வழிமொழிந்து வடித்த ஹைக்கூ சிந்திக்க வைக்கின்றது.

கல்லால் அடித்தும்
கோபம் இல்லை
சிணுங்கிச் சிரிக்கும் குளம் !

கறிக்கடைக்கு செல்லவே பயப்படும் மனிதர்கள் உண்டு. ஆனால் சிறு பூச்சி பெரிய கத்தி கண்டு அஞ்சுவதில்லை என்பதை பார்த்து , உணர்ந்து வடித்த ஹைக்கூ ஒன்று .

வெட்டுக்கத்தி
பயமின்றி உட்கார்ந்திருக்கின்றன
கறிக்கடை ஈக்கள் !

இன்று ஆசிரியர்மானவர் உறவு சரியில்லை .முன்பு தந்த  மதிப்பு ,மரியாதை  இப்போது ஆசிரியர்களுக்கு கிடைக்க வில்லை .ஆசிரியர்களில் சிலர் மதிக்கும் படி நடப்பதுமில்லை .மாணவர்களில் சிலர் ஆசிரியர்களை கொலை செய்யும் அளவிற்கு மோசமாகி விட்டனர் .ஆசிரியர்கள் முன் மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ .

இலை கிள்ளிய 
மாணவனுக்குத் தண்டனை
மரத்தில் குச்சி ஒடிக்கும் ஆசிரியர் !

ஆணாதிக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது .ஆண்  குழந்தைக்கு சிறு வயதிலேயே ஆணாதிக்கம் விதைத்து  விடுகின்றனர். ஆணாதிக்கம் பற்றி வித்தியாசமாக சிந்தித்து காட்சிப் படுத்திய  ஹைக்கூ நன்று .

காட்டுக்குள்ளும் ஆணாதிக்கம்
சோளக்காடுகளெங்கும்
ஆண் பொம்மைகள் !


நூல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசி அவர்கள் திரைத்துறையில் திரைப்படப் பாடல் ஆசிரியராக வலம் வருகிறார் என்ற தகவலும் நூலில் உள்ளது ,

நம் நாட்டில் மக்கள்தொகை பெருகுவது  போலவே .முதியோர் இல்லமும் பெருகி வருவது பெருமை அல்ல சிறுமை. முதியோர் இல்லத்தில்  உள்ள தாயின் பாசத்தை படம் பிடித்துக் காட்டும் ஹைக்கூ நன்று .

பத்திரமாய் வைத்திருக்கிறாள்
மகனின் புகைப்படத்தை
தாயொருத்தி முதியோர் இல்லத்தில் !

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது .தங்கம் மீதான் ஆசையும் வளர்ந்து வருகிறது .நாட்டில் கொலை கொள்ளை வன்முறைகளும் பெருகி வருகிறது .தங்கம் விலை  உயர்வு ஏழைகளுக்கு  எரிச்சலைத் தருகின்றது .பலருக்கு திருமணங்கள் தங்கத்தால் தடை பட்டுள்ளது .ஏழைகளின் மன உணர்வை உணர்த்தும் ஹைக்கூ ஒன்று .

ஏழைச் சிறுவர்கள்
வாங்குகிறார்கள்
மோதிர அப்பளம் !

சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன .ஹைக்கூ ரசிகர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் பிடிக்கும்.வாங்கி படித்துப் பாருங்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசிஅவர்களுக்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள் ,.

உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்வளர்ச்சி சிக்கல்களும் தீர்வுகளும் கருத்தரங்கம் நடைபெற்றது .

உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்வளர்ச்சி சிக்கல்களும் தீர்வுகளும் கருத்தரங்கம் நடைபெற்றது .

வெள்ளி, 22 நவம்பர், 2013

உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு வேண்டுகோள்

உலகத்  தமிழ்ச் சங்கத்திற்கு வேண்டுகோள்

தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி !

தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள்  ! கவிஞர் இரா .இரவி !

அன்பு நெறி அழித்து 
வம்பு வெறி வளர்க்கின்றன  
தொடர்கள் !
.

இரண்டு மனைவிகள் 
எல்லா நாயகனுக்கும் 
தொடர்கள்  !

பார்த்திடச்   சலிக்கின்றனர் 
பார்த்த முகங்களே  
தொடர்கள்  ! 

பழி தீர்க்கும் படலம் 
பயிற்றுவிககும் பள்ளி 
தொடர்கள்  !   

நல்ல செய்தி கொஞ்சம் 
கெட்ட  செய்தி அதிகம் 
தொடர்கள் !

விளைவித்தது 
குடும்பத்தில் குழப்பம் 
தொடர்கள் !

மாமியார் மருமகள் 
சண்டைப்  பயிற்சிக்கூடம் 
தொடர்கள் !

அரைத்த மாவையே அரைத்து 
அலுப்புத் தட்ட வைக்கும் 
தொடர்கள் !

வழக்கொழிந்து வருகின்றன 
வழக்கமான பணிகள் 
தொடர்கள் !

நியாயப்படுத்தி வருகின்றன 
குற்றங்களை 
தொடர்கள் !

வருகிறது எரிச்சல் 
பேசியதையேப்  பேசுகின்றன
தொடர்கள் !

பொறுமையைச்   சோதித்து 
எருமையாக்கி விடுகின்றன 
தொடர்கள் !

நிலை நிறுத்தி வருகின்றன 
பெண்ணடிமைத்தனத்தை 
தொடர்கள் !

கேப்பையில் நெய் என்கின்றன 
பார்ப்போரை முட்டாளாக்குகின்றன  
தொடர்கள் ! 
  
ஒழுக்கம் சிதைத்து 
ஒழுங்கீனம் விதைக்கின்றன 
தொடர்கள் ! 

பண்பாட்டைச் சீரழித்து 
பலவீனம் வளர்க்கின்றன 
தொடர்கள் ! 

நல்லவர்களையும் 
கெட்டவராக்குகின்றன 
தொடர்கள் ! 

கூசாமல் கலக்கின்றன  
மனசில் மாசு 
தொடர்கள் ! 

வீட்டிற்குள்  வந்து 
வேதனை தருகின்றன 
தொடர்கள் !

வீரத் தமிழர்களை 
வேடிக்கைத் தமிழராக்கின 
தொடர்கள் !

பிஞ்சு நெஞ்சங்களில் 
நஞ்சு விதைக்கின்றன  
தொடர்கள் !

நெடுந்தொடர்கள் என்று 
நெடுந்துன்பம் தருகின்றன 
தொடர்கள் !

பெண்களை  அடிமையாக்கின 
ஆண்களும்   அடிமையாகினர்  
தொடர்கள் !

வசனத்தொல்லை  மட்டுமல்ல 
விளம்பரத்  தொல்லை வேறு 
தொடர்கள் !

தயாரிப்பவர்களுக்கு இலாபம் 
பார்ப்பவர்களுக்கு நட்டம் 
தொடர்கள் !

விவேகமானவர்களையும் 
வீணாக்கி விடுகின்றன 
தொடர்கள் !


பார்ப்பவர்களுக்குக் கற்பிக்கின்றனர் 
பத்தாம் பசலித்தனம்  
தொடர்கள் !

மூடநம்பிக்கைப் பரப்பி 
முட்டாளாக்குகின்றன   
தொடர்கள் !

போராட்டம் நடத்தி இருப்பார் 
பெரியார் இருந்து இருந்தால் 
தொடர்கள் !

நெஞ்சு பொறுக்கவில்லை 
மனிதநேயர்களுக்கு 
தொடர்கள் !

முற்றுப்புள்ளி வையுங்கள் 
முன்னேறும் சமுதாயம் 
தொடர்கள் !

வியாழன், 21 நவம்பர், 2013

தினமணி நாளிதழில்

தினமணி நாளிதழில்

மதுரையில் காந்தி தேசம் நூல் அறிமுக விழா !

மதுரையில் காந்தி தேசம் நூல் அறிமுக விழா !

குவளைகள் நன்கொடையாக வழங்கினார் .

திரு ராஜேந்திரன் அவர்கள் தன்னம்பிக்கை   வாசகர் வட்டம் நடைபெறும்  சிபி கல்லூரிக்கு தேநீர் ஊற்றும் குவளைகள் நன்கொடையாக  வழங்கினார் 
.

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்    பயிலரங்கம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்    பயிலரங்கம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்    பயிலரங்கம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்    பயிலரங்கம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !


மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்
பயிலரங்கம் நடைப்பெற்றது. தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர்எ .எஸ்.ராஜராஜன் வரவேற்றார் .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார்.
ஒருங்கினைப்பாளார் 
திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .
திருவாளர்கள் ஜோதி மகாலிங்கம்  C.ராஜேந்திரன் , இராம மூர்த்தி ,ஆ . முத்து  கிருஷ்ணன் ,சரவணன், பிரபுராம்
வாழ்த்துரை .வழங்கினார்கள். விஞர் கே .விஸ்வநாதன்
  தன்னம்பிக்கை தொடர்பான கவிதைவாசித்தார் . மன நலம் சற்று குன்றினாலும் மன வளம் குன்றாத
ஜோ .சம்பத் குமார் பிறந்த நாள் கொண்டாப் பட்டது .

திரு .ஹுசைன் இஷ்டப்பட்டு படிப்பது எப்படி என்ற தலைப்பில்
தன் முன்னேற்றப்    பயிற்சி அளித்தார். தொடந்து படித்துக்   கொண்டே இருக்காமல் 50 நிமிடங்கள் படித்து விட்டு பின் முடி வைத்து 10 நிமிடங்கள் படித்ததை சிந்தித்துப் பார்த்து படித்தால் ,சிந்தையில் பதியும் .படிக்க இடம் முக்கியம் தொலைக்காட்சி  அருகே அமர்ந்து படிப்பதை தவிர்த்து  விடுங்கள் .தனி அறையில்  கவனமுடன் படித்தால் பயன் பயக்கும் .படிப்பது தொடர்பாக பல்வேறு பயனுள்ள தகவல்கள் தந்து பயிற்சி அளித்தார் .
    
கவிஞர் இரா .கல்யாண சுந்தரம் நன்றி கூறினார் . மதுரை தன்னம்பிக்கைவாசகர் வட்டத்தினர்  கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .


-

புதன், 20 நவம்பர், 2013

மதுரை மாவட்ட மைய நூலகம் தேசிய நூலக வார விழா பட்டிமன்றம் புகைப்படங்கள்

மதுரை மாவட்ட மைய நூலகம் தேசிய நூலக வார விழா பட்டிமன்றம் புகைப்படங்கள் 

மதுரை மாவட்ட மைய நூலகம் தேசிய நூலக வார விழா பட்டிமன்றம் புகைப்படங்கள்

மதுரை மாவட்ட மைய நூலகம் தேசிய நூலக வார விழா பட்டிமன்றம் புகைப்படங்கள் 

மதுரை மாவட்ட மைய நூலகம் தேசிய நூலக வார விழா பட்டிமன்றம் புகைப்படங்கள்

மதுரை மாவட்ட மைய நூலகம் தேசிய நூலக வார விழா பட்டிமன்றம் புகைப்படங்கள் 

மதுரைத் திருவள்ளுவர் கழகம் விழா அழைப்பிதழ் !

மதுரைத் திருவள்ளுவர் கழகம் விழா அழைப்பிதழ் !

தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் நூல் வெளியீடும் மேல் ஆய்வும் விழா அழைப்பிதழ் !

தமிழ் அறிஞர் இரா  இளங்குமரனார்     நூல் வெளியீடும் மேல் ஆய்வும் விழா அழைப்பிதழ் !

தமிழ்த் தேனீ ,முனைவர் இரா மோகன் அவர்களின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ் !

தமிழ்த் தேனீ ,முனைவர் இரா மோகன் அவர்களின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ் !

செவ்வாய், 19 நவம்பர், 2013

மதுரை யாதவா கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் ( ஒய்வு ) மனித நேயம் மாத இதழின் ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் !

மதுரை யாதவா கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் ( ஒய்வு ) மனித நேயம் மாத இதழின் ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் !

மனித நேயம் மாத இதழில் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய கட்டுரை .

மனித நேயம் மாத இதழில்  தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய கட்டுரை .

புதிய உறவு மாத இதழில் பாவேந்தரின் மைந்தர். மன்னர் மன்னன் அவர்கள்

புதிய உறவு மாத இதழில் பாவேந்தரின் மைந்தர்.  மன்னர் மன்னன் அவர்கள்

புதிய உறவு மாத இதழில் நூல் விமர்சனம்

புதிய உறவு மாத இதழில் நூல் விமர்சனம்

மிளகு மற்றும் கற்றாழையின் மருத்துவ குணங்கள் ! நன்றி வேளாண்மை செய்திக் கதிர் !

மிளகு மற்றும் கற்றாழையின் மருத்துவ குணங்கள் ! நன்றி
வேளாண்மை செய்திக் கதிர் !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...