வெள்ளி, 28 பிப்ரவரி, 2014
வியாழன், 27 பிப்ரவரி, 2014
விதையின் விருட்சம் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !
அலைபேசி 9025459174.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
யாழினி 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் ,சென்னை .18. விலை ரூபாய் 50.
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு உள்அச்சு ,பொருத்தமான ஓவியங்கள் யாவும் மிக நன்று .நூல வடிவமைத்து வெளியிட்ட கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கு முதல் பாராட்டு .நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் அவர்கள் நூலை பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பதற்கு அடுத்த பாராட்டுக்கள் .
தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி மன்னை பாசந்தி அவர்களின் அணிந்துரையும் , திரு .பாமா மனோகரன் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளன .
தமிழ் மொழியின் அருமை ,பெருமை உலகம் அறிந்துள்ளது .ஆனால் தமிழ்நாட்டு தமிழர்கள்தான் தமிழ் மொழியின் அருமை , பெருமை அறியாமல் இருக்கிறார்கள் .தமிழின் பேரறுமை உணர்த்தும் கவிதை அருமை .
தமிழ்மொழி !
தித்திக்கும் தேன் மொழியாம் !
எட்டுத்திக்கும் சுவைதத மொழியாம் !
அவனியெல்லாம் நிறைந்த மொழியாம் !
தமிழன்னை மடியில் தவழ்ந்த மொழியாம் !
சாகுபடி செய்யும் விவசாயிகள் நஞ்சுண்டு சாகும்படியான வேதனை நிகழ்வுகள் தொடரும் அவலம் .அண்டை மாநிலங்களில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் காரணத்தால் வயலுக்கு நீர் இன்றி கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் .வாடிய பயர்களைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலாராக விவசாயிகள்.
உழுவதா ? தொழுவதா ?
நாங்கள் ..
தினமும் செல்லும் காசைத்தான்
விதைக்கிறோம் .பூமியில் !
ஆனால் அறுவடையின்போது
அவை செல்லாகாசாகி விடுகிறது
உழவனின் சந்தையில் !
தீவிரவாதம் பற்றிய வரிகள் சிந்திக்க வைக்கின்றன. அரசியல்வாதிகளின் ஊழலையும் சாடுகிறது .
தீரா வாதம் ! தீவிரவாதம் !
பெற்ற சுதந்திரத்தை ஏனோ ,
சிந்திக்காமல் கொடுத்து விட்டனர்
சில சதிகாரர்களின் கையில் !
அதனால்தான் ஏனோ
தீவிரவாதம் தீரா வாதமாக
வழி நெடுககெங்கும் வாழ்ந்து வருகிறது !
மனித குல வரலாற்றில் மன்னிக்க முடியாத கொலை பாதக செயல் புரிந்த இலங்கை கொடூரனை கண்டிக்காதவர்கள் மனிதநேயம் அற்றவர்கள் .ஒவ்வொரு படைப்பாளியும் ஈழத்திற்காக குரல் கொடுக்க வேண்டியது கடமை .தனித்தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்பதை உலகம் உணர்ந்து விட்டது .நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன்அவர்களும் குரல் கொடுத்து உள்ளார் .
அப்பாவித் தமிழ்மக்கள் !
தன மனைவியை கவர்ந்ததற்கே
இலகையை அழித்தான் இராமன் அன்று .
ஒரு இனம் அழிக்கப்பட்டும்
வேடிக்கைப் பார்க்கிறது உலகம் இன்று !
சித்தர்கள் போல வாழ்க்கை தத்துவம் ,நம்பிக்கை விதைக்கும் வாழ்வியல் வரிகள் நூலில் நிரம்ப உள்ளன .பாராட்டுக்கள் .
பயணம் அறியா பாதை !
தோல்வி என்பது இடர் அல்ல !
வெற்றி பாதைக்கு வழி வகுக்கும் சுடர் !
வறுமை என்பது தொடர்கதையல்ல - அது
வாழ்க்கைப் பக்கத்தில் வந்துபோகும் !
எது கவிதை என்பதற்கான மிகச் சரியான விளக்கம் இன்னும் யாராலும் எழுதப்பட வில்லை என்பதே உண்மை . நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் அவர்கள் எது கவிதை என்பதற்கு விளக்கம் சுவையாக எழுதி உள்ளார் .
கவிதை !
சிதறிக் கிடக்கும்
சொற்களை எடுத்து
வார்த்தையாய் வடித்து
வரியாகத் தொடுத்து
எதுகையோடு மோனையும் சேர்த்து
அணியோடு நகையையும்
சுவையையும் கலந்து
அறுசுவையாக படைப்பதே கவிதை !
பலர் முதலில் காதல் கவிதை எழுதி விட்டு அதோடு நின்று விடுகின்றனர் . வெறும் காதல் மட்டும் எழுதாமல் சமுதாயம் பற்றியும் எழுதியவர்கள்தான் தொடர்ந்து எழுதி வருகிறார்கள் .காதல் கவிதை இவரும் ஊறுகாய் போல கொஞ்சமாக ரசிக்கும்படி எழுதி உள்ளார் .
அழகோவியத்தால் ஒரு காவியம் !
அவள் நினைவை
அடி மனதில் புதைத்தாலும்
மீண்டும் முளைத்து விதையாய்
என் மனதில் பல விழுதாய் !
காதலித்தவர்கள் மட்டும் .உணரும் உணர்வை படம் பிடித்துக் காட்டி உள்ளார்
நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் அவர்களுக்கு இந்நூல் மூன்றாவது நூல் .முத்திரை பதிக்கும் நூலாக உள்ளது .கவிதை வரிகள் படிக்கும் வாசகர் மனதில் விதையாய் விழுந்து பின் விருட்சம் போன்ற நினைவுகளை வரவழைத்து வெற்றி பெறுகின்றன. எண்ண அலைகளை எழுப்பி வெற்றி பெறுகின்றன. நாவலும் எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
புதன், 26 பிப்ரவரி, 2014
அன்பென்ற மழையிலே ! நூல் ஆசிரியர் கவிஞர் நா .முனியசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
அன்பென்ற மழையிலே !
வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 35. செல் 9944391668
kavignareagalaivan@gmail.com
பதிப்பாளர் இனிய நண்பர் ஏகலைவன் அவர்களின் பதிப்புரையில் நூல் ஆசிரியர் கவிஞர் நா .முனியசாமி அவர்களைப் பற்றி எழுதிய வரிகள் அவருக்கு உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில் , சிந்தனையில் குறை இல்லை என்பதை பறை சாற்றும் விதமாக உள்ளன .
பதிப்பாளர் இனிய நண்பர் ஏகலைவன் அவர்களின் பதிப்புரையில் நூல் ஆசிரியர் கவிஞர் நா .முனியசாமி அவர்களைப் பற்றி எழுதிய வரிகள் அவருக்கு உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில் , சிந்தனையில் குறை இல்லை என்பதை பறை சாற்றும் விதமாக உள்ளன .
" இளம் படைப்பாளியான நூல் ஆசிரியர் கவிஞர் நா .முனியசாமி அவர்களின் முதல் கவிதை நூலான அன்பென்ற மழையிலே !அன்பின் பெருமைகளையும் , உலகியலின் அருமைகளையும் எடுத்தியம்பும் நல்ல நூலை எங்கள் வாசகன் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டு அவரின் அளப்பரிய திறமைகளை உலகறியச் செய்வதில் அகமகிழ்கிறோம் ."
கவிஞர் ஆங்கரை பைரவி அவர்களின் அணிந்துரை நன்று .சில துளிகள் உங்கள் பார்வைக்கு .
"எறும்புகள் குளிக்கும் படித்துதுறைதான் .இந்தத் தூறல் பெரு மழையாகி நம் எல்லோரையும் நனைக்கும் அதற்கான ஆர்வம், முயற்சி கவிஞரிடம் இருக்கிறது .வாழ்த்துகிறேன் நானும் ."
போர் இன்றி உலகம் மிக மிக அமைதியாக இருக்க வேண்டும் என்பதே மனிதநேய ஆர்வலர்களின் விருப்பம் . நூல் ஆசிரியர் கவிஞர் நா .முனியசாமி விருப்பமும் அமைதிதான் .
யுத்தம் இல்லாத
ரத்தம் சிந்தாத
உலக வாழ்வினை
அன்பில் மலர்ச் செய்..
அனைத்தையும் மகிழச் செய்
அமைதியாய் வாழச் செய்
இதற்கென
இனியதைச் செய்திடு
எப்போதும்
தப்பேதும் இல்லாது .
மனிதன் உயர் திணை என்ப்று உயர்வாக எண்ணுகிறோம் .ஆனால் சில மனிதர்கள் சில நேரங்களில் விலங்கை விட மோசமாக நடந்து கொள்வதைக் காண்கிறோம் .
இயற்கையில்
வேறுதுவும்
உன்னைப் போல
இன்னொரு உயிரை
அழிக்க நினைப்பதில்லை .
அழச்செய்வதில்லை .
உயர்ந்த படைப்பான
நீ மட்டும் ஏன்
இந்த இழிந்த
செயலைச் செய்கிறாய் ?
.உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழிந்து வரைந்த கவிதை நன்று .
இனியவற்றை
எல்லாவற்றிக்கும்
பகிர்ந்து கொடு .
அதில்தான்
மணக்கிறது
மனிதப்பண்பாடு !
இரும்பு கூட பயன்படுத்தாவிட்டால் துரு பிடித்துவிடும் .மனிதன் உழைக்க வில்லை என்றால் மனிதனே அன்று என்று உணர்த்தும் கவிதை நன்று .
உண்மையான
உழைப்பில்தான்
உன்னதமான
வாழ்வு மலர்கிறது .
கடமையை நேசிக்க சொல்லும் விதம் அருமை .
கடமையில் இன்றிய இளைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டிய வைர வரிகள் . ஹைக்கூ வடிவில் நன்று .
கடமையில்
காதல் கொள்
காவியமாகும் வாழ்வு !
ஊழல் செய்யும் ஊழல்வாதிகள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள் நன்று.
இழிவான
செயல்களால்
மகிழ்வான
வாழ்வைப் பெற முடியும்
என எண்ணுபவர்களே
முட்டாள்களில்
முதன்மையானவர்கள் !
முயற்சி திருவினையாக்கும் திருக்குறளை மெய்பிக்கும் விதமான வரிகள் நன்று .
இடைவிடாது
முயற்சி செய்வோர்
அடைய முடியாதது
எதுவுமில்லை உலகில் !
வாழ்க்கை என்றால் இன்பம் துன்பம் உண்டு .சாலை என்றால் மேடு பள்ளம் உண்டு .வாழ்வியல் கருத்துக்களை சித்தர் பாடல் போல தத்துவம் போல நன்கு எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .
முட்களுக்கு நடுவே
ரோஜா மலர்வது போல
வருத்தங்களிலுடேதான்
வாழ்க்கை மலர்கிறது
அழகாய் !
மொத்தத்தில் கவிதைகள் நேர்மறை சிந்தனை விதைக்கும் விதமாக அன்பை போதிக்கும் விதமாக மனிதநேயம் கற்பிக்கும் விதமாக அற்புதமாக உள்ளது .
நூல் ஆசிரியர் கவிஞர் நா .முனியசாமி அவர்களுக்கு பாராட் டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள் .
சோகச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
தேவிஸ் பதிப்பகம் ,தேவிஸ் வில்லா , சித்தாரல் அஞ்சல். கன்னியாகுமரி .629151. விலை ரூபாய் 40.
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் அவர்கள் குமரி மாவட்டம் நெய்யூர் இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் .பரபரப்பான கல்லூரிப்பணி ,கல்விப்பணி இவற்றுடன் கவிதைப்பணியும் புரிகின்றார் .பாராட்டுக்கள் .நூலின் அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று . ஈழ சோகம் , பஞ்சாப் குண்டு வெடிப்பு ,சுனாமி என சோகச் சுவடுகள் புகைப்படங்களுடன் அட்டைப்படம் உள்ளது .அச்சு நேர்த்தியாக உள்ளது .கவிதைகளின் இறுதியில் கவிதை பற்றிய விமர்சனங்களும் உள்ளன .வித்தியாசமான பதிப்பு .நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர்
ஆர் .டேவிட் ராஜ போஸ் அவர்கள் ஆங்கிலப் பேராசிரியாராக இருந்தபோதும் உலகின் முதல் மொழியான தமிழ் மீது பற்றுக் கொண்டு தமிழ்க் கவிதை வடிப்பதற்கு முதல் பாராட்டுக்கள் .உதவிப் பேராசிரியர் முனைவர் சி .கணேஷ் அணிந்துரை மிக நன்று .நூல் ஆசிரியர் தன்னுரையில் கவிதை குறித்த விளக்கம் நன்று .
மனிதநேய மாண்பாளர்கள் ,இரக்க குணம் உள்ள யாராலும் சகித்துக் கொள்ள முடியாத கொடுமைகள் ஈழத்தில் சிங்கள இராணுவத்தால் நடத்தப் பட்டது .அவர்களை மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது. தமிழ் இன அழிப்பை நடத்திய கொடூரன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் விருப்பம்.இன்று கூட ஈழத்தில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள் கிடைப்பதாக செய்தி படித்தேன்
இன்று வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு சேரவில்லை .இது போன்று நட்ட ஈடு தர முன் வராத இரசியாவின் ஆபத்தான கூடங்குளம் அணு மின் நிலையத்தை அவரசமாக திறந்துள்ளனர். இதற்காகவும் பின்னர் வருத்த வேண்டி வரும் . இடிந்தகரை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் .தமிழகத்தை ஆபத்தை சோதித்துப் பார்க்கும் மாநிலமாக மாற்றி வருகின்றனர் . இது போன்ற சிந்தனைகளை விதைத்து கவிதை .
ஈழம் குறித்த கவிதை நன்று .
ஈழமே என் தமிழ் இனமே !
கண்ணீர் துளிபோன்று
தண்ணீர் சூழ்ந்த
குட்டித்தீவு
இலங்கை !
அதை எட்டிப் பார்த்தால்
நடுங்குதே
நாடி நரம்புகள் !
சிங்கள சிப்பாய்கள்
சீறிப் பாய்ந்தனர்
தமிழன் நிழல் மீதில் !
தெருவெல்லாம்
ரத்த ஆறு !
செடி கொடிகளில்
இளம் பிஞ்சுகளின்
இரத்த துளிகள் !
போபால் விச வாயுவால் பல உயிர்கள் மடிந்தன .பல உயிர்கள் சிதைந்தன .இந்த கொடுமைக்குக் காரணமான கொடியவன் ஆன்டர்சனை தனி விமானத்தில் தப்பிக்க விட்ட செயலை மன்னிக்கவும் மறக்கவும் முடியாது .
போபால் .. விசப்புகைகூடாரம் !
கார்பைடு என்ற விசக் கூடாரம்
கக்கித் தள்ளிய விசப் புகையால்
அமெரிக்க நாட்டின் ஆன்டர்சன்
அதிகாரப் பிடியில் கார்பைடு
எமனின் தூதுவன் வேடமிட்டு
எல்லா உயிரையும் கவ்விக் கொண்டான் !
பள்ளிக்குழந்தைகளின் உயிரைக் கொன்று குவித்த மறக்க முடியாத கும்பகோணம் தீ விபத்து பற்றியும் கவிதை வடித்துள்ளார்மிக நன்று .
கும்பகோணம் குரல்கள் !
கூனிக் குறுகிப் போனாய் !
உன் பூந்தொட்டத்தில்
பூத்து நறுமணம்
வீசி தென்றலசைவில்
அலைந்தாடிய
எங்கள் இளம் மொட்டுக்களை
மண்ணோடு மண்ணாய்
சாம்பலாக்கி விட்டாயே !
இயற்கையை மனிதன் இரக்கமின்றி சிதைக்கச் சிதைக்க இயற்கை பொங்கி எழுந்து வந்து சுனாமியாக சிதைத்தது.ஆனால் மனிதன் இன்னும் திருந்தாமல் மலைகளை தகர்ப்பது ,மணல்களை கொள்ளை அடிப்பது ,மரங்களை வெட்டி வீழ்த்துவது ,பாலிதீன் பைகள் பயன் படுத்துவது .சுற்றுச் சுழல் மாசு படுத்துவது தொடர்கதையாகி தொடர்கின்றது .சுனாமி பற்றிய கவிதை நன்று .
அழுதிட ஆளில்லை !
பண்டிகை நாட்களாம்
கிறிஸ்மஸ் நாட்களில்
கொண்டாட்டம் முடிந்தபின்
திண்டாட வைத்தாயே !
விரைந்திட்ட எங்களையே
மடித்து சுருட்டினாயே !
மயான உன் அலைதனிலே !
சோகச் சுவடுகள் கவிதைகள் மனதில் மறக்காமல் வடுக்களாக உள்ள முக்கிய நிகழ்வுகளின் சோகத்தை உணர்த்தி மறக்க முடியாத கவிதை வடித்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
விடுபட்ட இதழ்களைத் தேடும் மடல் எண் 1
விடுபட்ட இதழ்களைத் தேடும் மடல் எண் 1
இதழ் பெயர் = தென்றல்
ஆசிரியர் பெயர் = கவிஞர் கண்ணதாசன்
தமிழம் வலையில் பாதுகாக்கப்பட்டவை
4/44 (மே 31 1958),
4/46 (மே 31 1958),
4/48 (சூன் 14 1958),
5/2 (சூன் 28 1958),
5/3 (சூலை 5 1958),
5/6 (சூலை 26 1958), என்கிற 6 தென்றல் இதழ்கள்
படவடிவக்கோப்புகளாக்கப்பட்டுள் ளன.
ஏ3 அளவுள்ள (இரண்டு ஏ 4 அளவுள்ள) இந்த இதழ்கள்
யாரிடமாவது இருந்தால் அருள்கூர்ந்து தகவல் தரவும்.
அவற்றை படவடிவக்கோப்புகளாக்குவதுடன், அவற்றைப்
படியெடுத்து தாங்கள் அனுப்பிய இதழ்களுடன்
உங்களுக்கே அனுப்பி விடுகிறேன்.
அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாக்கும் இச்செயலுக்கு
இதழ்களை அனுப்பி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
அன்புடன்
பொள்ளாச்சி நசன், தமிழம்.வலை (http://www.thamizham.net)
இதழ் பெயர் = தென்றல்
ஆசிரியர் பெயர் = கவிஞர் கண்ணதாசன்
தமிழம் வலையில் பாதுகாக்கப்பட்டவை
4/44 (மே 31 1958),
4/46 (மே 31 1958),
4/48 (சூன் 14 1958),
5/2 (சூன் 28 1958),
5/3 (சூலை 5 1958),
5/6 (சூலை 26 1958), என்கிற 6 தென்றல் இதழ்கள்
படவடிவக்கோப்புகளாக்கப்பட்டுள்
ஏ3 அளவுள்ள (இரண்டு ஏ 4 அளவுள்ள) இந்த இதழ்கள்
யாரிடமாவது இருந்தால் அருள்கூர்ந்து தகவல் தரவும்.
அவற்றை படவடிவக்கோப்புகளாக்குவதுடன், அவற்றைப்
படியெடுத்து தாங்கள் அனுப்பிய இதழ்களுடன்
உங்களுக்கே அனுப்பி விடுகிறேன்.
அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாக்கும் இச்செயலுக்கு
இதழ்களை அனுப்பி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
அன்புடன்
பொள்ளாச்சி நசன், தமிழம்.வலை (http://www.thamizham.net)
haiku Poems In English Version. poet R.RAVI
haiku Poems In English Version. poet R.RAVI
http://www.kavimalar.com/vh/index.htm Sun in the East Celestial Engineer surveys the EarthSUN/APPOLLO Rewedding of Widowed Sky the very next day
Crescent Moon
Sea change of holy vessel to a Beggar’s bowl- Degree Certificate Washerman made Identity marks on the Blue Shawl of Sky Stars Abstract Commodities available Fairness & Justice for cost! Fair price shop One Look! One Stroke Thousand Shocks Love My PEN loves her more will write it only on her. Valiant gradmother chased a tiger Hevis are chasenby cockroaches !Todays Tamil women Preliminary Training for Weight-lifting forced upon KidsNursery Schools Love is a catalyst shaving Bill saved &Bank Balance Boosted Love to Save Heavy showers! former at cheers Trader are tearsRainFall Regular Full Attendance School Children Cheerful free noon meals offered! Nutricious feeding to goat not for Mercy but for Flesh!Kindness to goat Paddy fields “Upgraded” Sky-seraper Buildings Air only to EatTomorrow’s food Bus on road stopped a while! Passenger made cold!Street vender feld warmBus halted! Father and son found in same “Q” Employment Exchange. Vivid illustration’s establishing Darwin’s Theory.Politicians Self Immolation By the Martyr! The candle Squeezed & crushed But pleased to Bestow Fragrance!Sandal paste Hit Worst Still yields sweet fruits Noble Drum!Drum of Music Ink Mark on finger poverty mark in life election rewards Ink Mark Oh! Dew Letter From Moon to Lily Lover.Mail Day of Polling! Miracles happen! Even Resurrection!Resurrection Round Sears of Burn Sweet Music is Born Oh flute. Sun star at envy! My lady looks & Lotus buds open!Sun at Envy Cat as throphe Broken house fell on the foreteller Experience & Enjoy Feel & Reel Wondrous Love Given the Grow never stolen Novel Treasure .Knowledge/Wisdom Bured by whores Affairs in Despair AIDS is Crux! No Sleep! No Worries! Look Like Deaf & Dumb! Oh! In Love! Science! Please invent a tool To read the human mind! Blue cloth torn off! Sky too Poor! Oh stars!Stars of Sky Street Lights function Roads are trim/neat Election Announced! They are made Not in Heaven But in purses Marriages Himalaya outdone By heap of applications From job hunting lads.New mountain Purchased by Dowry A sincere husband Even to a Dead body Utility of Degree certificate useless to secure job But fruitful to achieve dowry Kitchens of Have-nots permanent free motels for rats & cats
Peral Gained!
Single Dive! Won Her Love! Scientifi Inventions foul smelling supesrtitions Television Serials | Busy bee yesterday lazy Ass today Television is the cause Only Ups No DownsCost of Commodities Price SpiralHelps her wear saree! Not her life partner! Show case lady Doll!! from cradle to cemetery never ending omnipresence& Unjust omnipotenceBRIBERY None is common Everyone is Royal the day of polling Enjoy one holiday To choose five-year slavery with Torture & Worry.Election Everyone is noble Only while asleep Sleep Mother nature frowns earth Baby weeps! Tempest Day! Mother Earth in total wrath All Children Tremble Earthquake happens novel “BODHI” Treeeducates on enrolement”education is waste” Employment Exchange The Speaker of SKY Assembly Moon! Who will stitch Long blue cloth! Torn! Oh stars! New (Eighth) wonder Our MLA is Visible at our town! It is certain! Omission of "Un"-Prefix! Fair preice Shops! Grief & Worry Vanished away! She looked at me Seated in my room I Travelled the Globe! Internet No Car festival! No More Mutiry! Deity Prayed for!God Prayed! She also! Another Algebra alive! Hard to Understand Hard Miser! Ourel Shylock! Before falling in love! Under Measure! Uppor Cot Fair Price Shop! Saved over months Plundered in hours Sweet honey! Moons are Twins! One in Sky! Another my Lady Love Pair of Bees Inside a Full Moon! Eyes of the Lady! Sweet Verse Written on Sky paper by Nature PoetRainbow Unusually loving & Helpful Politicians! Elections approached! Pope addressed "Love message" from behind bullet proof cage! Harvest of Forests Trees Slain Pray for Rain!Where is Rain Wonders Can happen Miracles be Experienced Simple faith! Shrine for a cine actress Worship a film actor Tamilians are "Rational" World Rejoiced Moon in Broad daylight! Elegant lady appeared! Better Architect! Fine structure at cheap cost! The swallow!New Engineer Equal rights - afterwards! Rights for Birth needed at once! -Female infantsRight Sought! Dead stock harvest Poor farmerdelevered "Plots for sale!"Housing Site Injestive meted Rewedding denied! to young widows! No Investment! Only Huge Gains! Business is politics! Worst hit But no Pains! Eye shafts of Lady! |
ஹைக்கூ திருவிழா !
ஹைக்கூ திருவிழா
நாள் ; 30. 03.2014 ஞாயிறு காலை 10.30 மணி முதல் மாலை 4.00 வரை
இடம் ; சந்திரசேகரர் திருமண மண்டபம் ,
( மேட்லி சாலை -பாலம் அருகில், மேற்கு மாம்பலம், சென்னை. 33
காலை நிகழ்ச்சிகள்
ஹைக்கூ நூல்கள் வெளியீடு
கவியரங்கம்
கருத்தரங்கம்
உணவு இடைவேளை
மாலை நிகழ்ச்சிகள்
கவியரங்கம் - 2
சிறப்புச்சொற்பொழிவு
கலந்து கொள்வோர்
திரு விக்ரமன்
ஈரோடு தமிழன்பன்
இரா.மோகன்
அமுதோன்
லிங்குசாமி
சந்திரசேகரன்
அமுதா பாலகிருஷ்ணன்
கவிமுகில்
இரா. இரவி
இலக்கிய வீதி இனியவன்
தருமராசன்
மு.முருகேஷ்
வெண்ணிலா
வசீகரன்
மயிலாடுதுறை இளையபாரதி
கன்னிக்கோயில் ராசா
பாரதி வசந்தன்
தமிழ்ச்செல்வன்
மற்றும் பலர்
மற்றவர்க்கும் தெரியப்படுத்துக ஆலோசனை தருக.
.
தகவல் பேராசிரியர் முனைவர் இராமகுருநாதன்
செவ்வாய், 25 பிப்ரவரி, 2014
அற்புதம் அம்மா வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
சத்தியவான் உயிரை எமனிடம் போராடி !
சாவித்திரி மீட்ட கதை புராணக் கற்பனை !
நீதி மன்றத்தில் மகன் உயிருக்காக போராடி!
நீதிபெற்றாள் அற்புதத் தாய் உண்மை நிகழ்வு !
தமிழச்சி புலியை முறத்தால் விரட்டினாள் அன்று !
தமிழச்சி தூக்குக் கயிற்றை அறுத்தாள் இன்று !
குற்றமற்ற மகன் பேரறிவாளன் மீது தவறாகக்
குற்றம் சுமத்தி தூக்கிலிடுவதைத் தடுத்தார் !
ஏளனம் கேலி வசவுகளைப் புறக்கணித்து !
எப்படியும் மகன் உயிர் காக்கப் போராடினார் !
முயற்சி திருவினையாக்கும் வள்ளுவர் வாக்கு !
முற்றிலும் மெய்யென மெய்பித்தார் இங்கு !
என்று போகுமோ ? என் உயிர் என்று !
என்றும் வருந்திய மகனின் உயிர் காத்தார் !
அற்புதமான அம்மாவைப் பெற்றிட்ட காரணத்தால் !
அநியாயமாகப் போக வேண்டிய உயிர் காக்கப்பட்டது !
துஞ்சாமல் நடத்திய அன்னையின் போராட்டம்
தூக்குக் கயிற்றைத் தூக்கி தூர எறிந்தது !
கொலைக் குற்றவாளிகள் அல்ல இவர்கள் !
கொலைக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் !
கொலை செய்யத் தூண்டியவர்களுக்கு !
தண்டனை அதிகம் சட்டம் சொல்கிறது !
கொலை செய்யத் தூண்டியவர்கள் !
தண்டனை பெறாத விசித்திர வழக்கு !
ஒரு பக்கம் மட்டும் பார்ப்பது மடமை
இரு பக்கமும் பார்க்க வேண்டியது கடமை !
நீதியரசர் சதாசிவம் வாழ்க பல்லாண்டு !
நீதி தந்து உயிர்கள் காத்த உத்தமர் வாழ்க !
உலகில் ஒப்பற்ற உறவு அன்னை என்பதை !
உலகிற்கு உணர்த்திய அற்புதம் அம்மா வாழ்க !
திங்கள், 24 பிப்ரவரி, 2014
சனி, 22 பிப்ரவரி, 2014
வியாழன், 20 பிப்ரவரி, 2014
முக நூலில் படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி .ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
.ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
==============================
1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !
யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக நான் எனக்காக நீ உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...

