சனி, 31 ஆகஸ்ட், 2013

விருதுநகர் வே .வ .வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி தமிழ்த்துறை வெளியிட்டுள்ள செய்யுட்பகுதி நூலில் இடம் பெற்றுள்ள ஹைக்கூ கவிதைகள் .


விருதுநகர் வே .வ .வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி தமிழ்த்துறை வெளியிட்டுள்ள செய்யுட்பகுதி நூலில் இடம் பெற்றுள்ள ஹைக்கூ கவிதைகள் . 
 
நெருப்புதான் பெண் 
அம்மாவிற்கு அடிவயிற்றில் 
மாமியாருக்கு அடுப்படியில் !        கவிஞர் அறிவுமதி !

நடுப்பகல் 
சுடுமணல் 
பாவம் .. என் சுவடுகள் !                  கவிஞர் அறிவுமதி !

.
குளம் 
முகம்  பார்க்கும் நிலா 
குளிக்காமல்  திரும்பினேன் !         கவிஞர் மித்ரா !


மழை  நின்ற பிறகு 
காற்று எழுதியது 
சாரல் கவிதைகள் !                         கவிஞர் மித்ரா !எத்தனை  முறை தோற்றாலும் 
முயற்சிகள் தொடரும் 
கரை தொடும் அலைகள் !              கவிஞர்  அமுதபாரதி !

அந்தக் காட்டில் 
எந்த மூங்கில் 
புல்லாங்குழல் !                                 கவிஞர்  அமுதபாரதி !இருட்டில் நடக்க 
சரியான துணை தான் 
ஒற்றை நிலா !                                 கவிஞர் மு .முருகேஷ் !

வயற்காட்டுப் பொம்மை 
நிமிர்ந்தே நிற்கும் 
கூன்  விழுந்த உழவன் !                கவிஞர் மு .முருகேஷ் !


உடல் ஊனம் 
தகர்த்துவிடும்  
தன்னம்பிக்கை !                             கவிஞர்  இரா .இரவி !

இரவு பகலென  
வறட்சி வெள்ளம் 
விவசாயி வாழ்க்கை !                   கவிஞர்  இரா .இரவி !
தங்க மீன்கள் ! இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

தங்க மீன்கள் ! 

இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் !

திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி .

நல்ல திரைப்படம் பார்த்து அதிக நாட்கள் ஆகி விட்டன .அந்த ஏக்கத்தை தீர்க்க வந்த திரைப்படம் .குடும்பத்துடன் தைரியமாக   செல்லும் படம் .கதையே இல்லாமல் நடிகையின் சதையை நம்பி மட்டும் மசாலாப் படம் எடுக்கும் இயக்குனர்கள் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல படம் .

ஆசிரியர்கள் இரண்டு வகை வல்லினம் மெல்லினம் . வல்லினமாக உள்ள ஆசிரியர்கள் மெல்லினமாக மாற வேண்டும் என்பதுதான் கதை .
இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் அவரே  நடித்துள்ள  படம் .பெண் குழந்தை பெற்ற அப்பாக்கள் அவசியம் பார்த்து நெகிழ  வேண்டிய படம் .பெண் குழந்தை பெறாதவர்களை நமக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என ஏங்க வைக்கும் படம் .அபியும் நானும் படம் போல அப்பா மகள் பாசத்தை வேறு விதமாகக் காட்டிய படம் .  
.
இந்தப்படத்திற்கு தேசிய விருது உறுதி என்று என்னால் அறுதி இட்டுக் கூற முடியும் .அவ்வளவு சிறப்பாக உள்ளது .தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து அழும் என் மனைவியை நான் கேலி செய்து சிரிப்பதுண்டு .எல்லாம் நடிப்பு ஏன் அழுகிறாய் என்பேன் .இந்தப் படம் பார்க்கும்போது பல இடங்களில் நான் கண் கலங்கி விட்டேன் .

பத்துப் பேரை எட்டி உதைக்கும்  சண்டைக் காட்சிகள் இல்லை. வன்முறை இல்லை குத்துப்பாட்டு   இல்லை ,கவர்ச்சி நடிகை இல்லை வழக்கமான திரைப்பட சூத்திரம் எதுவுமின்றி மிக இயல்பாக துணிவாக இயக்கி நடித்து உள்ளார் ராம் .

பிஞ்சுக் குழந்தைகளை கசக்கிப் பிழியும் ஆங்கிலப் பள்ளிகளின் முகத் திரை கிழித்து உள்ளார் .ஆங்கிலப் பள்ளி மோகத்தால் நடக்கும் பொருளாதாரப் பிரச்சனை  , குடும்பப் பிரச்சனை  அனைத்தையும் படத்தில் காட்டி உள்ளார் . 

கல்யாணி என்ற பாத்திரத்தில் இயக்குனர் ராம் .அவர் மகள் செல்லம்மாளாக நடித்துள்ள குழந்தை நடிக்கவில்லை  வாழ்ந்து  காட்டி உள்ளது . தாய் வேடத்தில் நடிகை ரோகினி ,அவரது தந்தை , மனைவியாக   ,பள்ளி  ஆசிரியர்கள்  அனைவருமே மிக நன்றாக நடித்து உள்ளார்கள் .

இசைஅமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் தந்தை இளையராஜாவை  மிஞ்சும் அளவிற்கு இசை அமைத்து உள்ளார் .தொடர் வண்டி  போகும்  காட்சியில்   தொடர் வண்டியே  திரையரங்கின் உள்ளே வந்து விட்டதோ என்று என்னும் விதமாக உள்ளது பின்னணி இசை .

தாத்தா பேத்தியை  மகிழுந்தில் வா என்று அழைக்க பையை மட்டும் கொண்டு போ என்று கொடுத்து விட்டு அப்பாவுடன் மிதிவண்டியில் செல்லும் செல்லம்மாள்  படம் பார்த்து விட்டு வந்தபின்னும் மனதில் நிற்கிறாள் .

தாத்தா அப்பாவை அடித்ததும் அப்பா கோபித்துக் கொண்டு கொச்சின் சென்றதும் மகள் செல்லம்மாள் , அப்பாவை நினைத்து ஏங்கும் தவிப்பு திரைச் சித்திரம் . 
 
பாட்டி  மகள் ஆஸ்திரேலியாவில் இருந்து   வருவதால் மகள் வழிப் பேரன் புகைப்படம் இல்லை என்று வருத்தப்படுவாள் என்று மகன் வழி  பேத்தி செல்லம்மாள் புகைப்படம் அவிழ்த்து  வைப்பது கண்டு  மனம் வாடும் செல்லம்மாள்.

அப்பாவிடம் விளம்பரத்தில் வருவது போன்ற நாய் வாங்கித் தாப்பா என்று கேட்கும் மகள் .அந்த நாயின் விலை 22500.மகள் கேட்டதால் எப்படியாவது வாங்கித்  தர உழைக்கிறான் .விளம்பரத்தைப் பார்த்து  கேட்பதையெல்லாம் வாங்கித் தரலாமா ? என்று கேலி பேசுகிறாள் சகோதரி .

குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று பெற்றோர்களுக்கு உணர்த்தும் படம் .பெற்றோர்களும் திருமணம் ஆன  மகனின் உணர்வுகளுக்கு  மதிப்பு அளியுங்கள் என்று உணர்த்தும் படம் .
ஆங்கிலப் பள்ளியில்  படிப்பே வரவில்லை என்று திட்டி விரட்டிய குழந்தை அரசுப்பள்ளியில்  கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெறுகின்றது .குறை குழந்தைகளிடம் இல்லை கசக்கிப் பிழியும் ஆங்கிலப்பள்ளிகளிடமே உள்ளது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .

காதலித்து மனம் முடித்த  மனைவியைவிட  மகளை மிகவும் நேசிக்கும் தந்தையின் கதை இது .திரையரங்கை விட்டு வெளியே   வந்தபின்னும் படத்தின் பாதிப்பு மனதை விட்டு அகலவில்லை .இதுதான் இயக்குனர் ராமின் வெற்றி .

சுவரோட்டில் உள்ள வாசகங்கள் யாவும் உண்மை .

அம்மாவோ ,மனைவியோ ,அக்காவோ ,தங்கையோ எல்லோரும் மகள்களுக்கு அப்புறம்தான் .

இறந்தபின்னும் அப்பாக்கள் கதாநாயகனாக வாழ்வது மகள்களின் மனதில் மட்டும்தான் .


இயக்குனர் ராம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இந்தப்படத்தை உங்களைத் தவிர வேறு எந்த நடிகர் நடித்து  இருந்தாலும் சொதப்பி இருப்பார்கள்.நிங்கள் மிக நன்றாக நடித்து இயக்கி இருப்பதற்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .


அனைவருக்கும் வேண்டுகோள் இந்த திரைப்படத்தை குடும்பத்துடன்  திரையரங்கில் சென்று பார்த்து வெற்றிப் படமாக்குங்கள் .இந்தப்படம் வெற்றி பெற்றால்தான் ராம் போன்ற இயக்குனர்கள் தொடர்ந்து இது போன்ற நல்ல படம் எடுக்க முன்  வருவார்கள் .தேசிய விருது உறுதி .மக்கள் விருதையும் வழங்குங்கள்

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

தமிழன் அன்றும் இன்றும் ! கவிஞர் இரா .இரவி !

தமிழன் அன்றும் இன்றும் !          கவிஞர் இரா .இரவி !

குளிரால் நடுங்கிய மயிலுக்கு இரக்கக் 
குணத்துடன் போர்வை வழங்கிய பேகன்  ஒரு தமிழன் !முல்லைக்  கொடிப்  படர பயணித்தத்  தேரை  
மனம் உவந்து வழங்கி பாரி ஒரு தமிழன் !

ஆராய்ச்சி மணி அடித்த பசுவுக்கு 
அன்புடன் நீதி வழங்கிய மனுநீதிச் சோழன்  ஒரு தமிழன் !

சந்தோசம் இழந்து தவித்த புறாவிற்கு 
சதையை அறுத்துத் தந்த சிபிசக்கரவர்த்தி ஒரு தமிழன் !

தமிழ் தமிழர் என்ற சொற்களின்றியே உலகப்பொதுமறையாக்கி 
தமிழுக்குப் பெருமை சேர்த்த திருவள்ளுவர்   ஒரு தமிழன் !

நூற்றாண்டுகள்  கடந்தும் நிலைத்து நிற்கும் கல்லணை 
நிறுவி இன்றும்  நிலைத்து நின்ற கரிகாலன் ஒரு தமிழன் !

உலகம் வியக்கும் வண்ணம் சிற்பங்களுடன் மதுரையில் 
உன்னத மீனாட்சி கோவில் கட்டிய பாண்டியன் ஒரு தமிழன் !

கோபுரத்தின் நிழல் விழாமல் பெரிய கோவிலைக் 
கட்டி  எழுப்பிய இராஜராஜ சோழன் ஒரு தமிழன் !

தவறான நீதி கோவலனுக்கு வழங்கியதற்காக 
தன்  உயிரையே மாய்த்த  பாண்டியன் ஒரு தமிழன் !

முரசுக்கட்டிலில் அயர்ந்து உறங்கிய புலவர்க்கு 
மன்னன் சாமரம் வீசிக் காற்று வழங்கியது ஒரு தமிழன் !

நடிகைக்குக் கோவில் கட்டி மோசமான வரலாறு படைத்து  
நாட்டிற்குத் தலைக்குனிவைத் தந்தவன்  ஒரு தமிழன் !

அரிதாரம் பூசும் நடிகரை எல்லாம் கடவுள் என்றும் 
அவதாரப் புருசன் அழைப்பவன் என்றும் ஒரு தமிழன் !

நடிகரின் கட்அவுட்டிற்கு பாலபிசேகம் செய்து மகிழும் 
ரசிகனும் இன்றைய ஒரு தமிழன் !

திரையரங்கில் பிடித்த நடிகரின்  திரைப்படம் பார்க்கும்போது 
திரையரங்கிலேயே  சூடம் ஏற்றிக்  காட்டுபவனும் ஒரு தமிழன் !

பிடித்த நடிகரின் திரைப்படம் வெளிவராததற்காக 
பிடித்த உயிரையே மாய்த்தவன் இன்றைய ஒரு தமிழன் !

தொல்லைக்காட்சியாகிவிட்ட தொலைக்காட்சியில் நேரத்தை 
தொலைத்துவிட்டு வாடி நிற்பவனும் ஒரு தமிழன் !

மதுக்கடையில் மதுக் குடித்து மயங்கி 
மண்ணில் விழுந்தக் கிடப்பவனும்  ஒரு தமிழன் !

ஆங்கிலவழிக் கல்வியில் பயின்று முடித்துவிட்டு 
அன்னைத் தமிழில் பேச வராது என்பவனும் ஒரு தமிழன் !

தந்தையின் பெயரான முன்எழுத்தை  ஆங்கிலத்திலும் 
தன்  பெயரைத் தமிழிலும் எழுதுபவன் ஒரு தமிழன் !

பேசுகின்ற பேச்சில் ஆங்கிலச் சொற்களைக்  கலந்து 
பைந்தமிழைக் கொலை செய்து வருபவனும் ஒரு தமிழன் !

தாய்மொழி தமிழில் பேசத் தெரிந்தும் அரைகுறையாக
தமிழர்களிடையே ஆங்கிலத்தில் பேசுபவனும் ஒரு தமிழன் !

தன்னம்பிக்கையின்றி மூட நம்பிக்கையான சோதிடத்தை நம்பி 
தன்மானம் இழந்து ஏமாந்து வருபவனும் ஒரு தமிழன் !

பித்தலாட்டக்காரன் என்று   தெரிந்தே சாமியாரிடம் 
பணத்தைப்  பறி  கொடுப்பவனும்  ஒரு தமிழன் !

வந்தவர்களை எல்லாம் வலமாக வாழ் வைத்துவிட்டு 
வாழ்க்கையைத் தேடி புலம்பெயர்பவனும்  ஒரு தமிழன் !

பசித்திருக்கும் தாய் தந்தை மறந்து கோவிலில்
பணத்தைப்    போடுபவனும் ஒரு தமிழன் ! 

தமிழினத்தை ஈழத்தில்  படுகொலைகள்  செய்தபோதும் 
தமிழகத்தில் வேடிக்கைப் பார்த்தவனும்  ஒரு தமிழன் ! 

தமிழனின் நிலையை அன்றும் இன்றும் பாருங்கள் 
தமிழா உன் நிலையை மாற்று !தமிழரின் பெருமையை நிலை நிறுத்து !    
.

தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் நூல் வெளியீட்டு விழா !

தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்   நூல்   வெளியீட்டு  விழா !

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களிடமிருந்து அறிமுக நூல் - 2 திருக்குறள் நூலை கவிஞர் இரா .இரவி  பெற்றுக் கொண்டார் . நூல்   வெளியீட்டு  விழா புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் மதுரையில் மணியம்மை தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது .

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை ! நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை !

நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வைகை வெளியீடு ,6/16 புறவழிச் சாலை ,மதுரை .18.

நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் அவர்கள் ( த .மு .எ .க .ச .)  தமிழ்நாடு  முற்போக்கு  எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில  கௌரவத் தலைவராக இருந்து கொண்டு தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .நாடு அறிந்த நல்ல எழுத்தாளர் ,பேச்சாளர் .

புத்தகத் திருவிழாக்களில் புத்தகங்கள் நிறைய விற்கின்றன என்று மனம் மகிழ்கிறோம் .ஆனால் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் என்ன? என்று பார்த்தால் ஜோதிடம் , வாஸ்து , ராசி   பலன் ,சமையல்   புத்தகங்கள் என்கின்றனர் .வருத்தமாக உள்ளது .இது போன்ற பகுத்தறிவை விதைக்கும் புத்தகங்கள் அதிகம் விற்றால்தான் சமுதாயம் சீர்படும் .இந்த  நூல்  3 பதிப்புகள் வந்துள்ளன என்பது ஆறுதலானது .

மூட நம்பிக்கைகளிலிருந்து நம் மக்களை விடுவிக்க வேண்டிய அவசியம் உள்ளது .அந்த நோக்கத்தை நேரிவேற்றும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்ட உண்மைகளை மிகத் துணிவுடன் பதிவு செய்துள்ளார் .

16 கட்டுரைகள் உள்ளன .மூட நம்பிக்கைகளை  தகர்க்கும் விதமாக உள்ளன .ஜோதிடம் என்பது கற்பிக்கப்பட்ட  கற்பனை என்பதை நன்கு விளக்கி உள்ளார் .நம்பிக்கையும்  மூட நம்பிக்கையும் ,ஜோதிடம் ஒரு அறிவியலா ? பேய்களை நம்பாதே ! பிஞ்சிலே வெம்பாதே !, எத்தனை  பூசைகள்  எத்தனை   யாகங்கள் ஏன் ஒழியவில்லை வறுமை ? இப்படி கட்டுரைகளின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றன . 

நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் !
பகுத்தறிவினால் சோதித்து அறியபடாதது நம்பிக்கை .சோதித்து அறிய வாய்ப்பு இருந்தும் அப்படிச் செய்யாமலேயே ஒன்றை உண்மை என நினைப்பது மூடநம்பிக்கை .

காலவதியாகிப்போன நம்பிக்கைகளைக் கட்டிக் கொண்டு அழுதால் சமுதாயம் நாறிப் விடும் .என்று எச்சரிக்கை செய்துள்ளார் . 

ஜோதிடம் ஓர் அறிவியல் என்று கதை விடுகிறார்கள் .இவர்கள் கொடுக்கிற கணக்குகளைப் போட்டுப் பார்த்து கிடைக்கிற பலன்கள்  சரியாக இல்லை என்றாலோ  கணக்குப் போட்டவர்க்கு - ஜோதிடருக்கு -கடவுள் அருள் இல்லை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள் .ஜோதிடம் ஓர் அறிவியல் என்பது மக்களை ஏமாற்றி இதன்பால் இழுக்க சிலர் போடும் நாடகமே .

இன்னொரு வேடிக்கை நோக்குங்கள் ,ஜோதிட சாஸ்திரத்தில் வரும் ஒன்பது கிரகங்களில்  சந்திரனும் ஒன்று .ஆனால் உண்மையில் சூரியனை மட்டும் சுற்றி வரும் கிரகம் அல்ல சந்திரன் .மாறாக பூமியைச் சுற்றி வரும் ஒரு  துணைக்கிரகம்  அது . 

ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை என்பதை அறிவியல் விளக்கங்களுடன் எழுதி உள்ளார்கள் .படிக்க அறிவு பிறக்கும் . 

 ஜோதிடம்  என்பது அறிவியல் அல்ல ! அறிவை இழந்தவர்களின் நம்பிக்கை ! என்பதை மெய்ப்பிக்கும் நூல் .அனைவரும்  வாங்கிப் படித்து மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .
இந்த நூல் படிக்கும்போதே நான் எழுதிய ஹைக்கூ கவிதைகள் நினைவிற்கு வந்தன .அதுதான் படைப்பாளியின் வெற்றி .

நான் எழுதிய ஹைக்கூ !

சொல்லவில்லை 
எந்த சோதிடரும் 
சுனாமி வருகை !

மடக்கட்டங்களால்  
மனக்கட்டிடம் தகர்ப்பு 
சோதிடம் !

பரணியில்   பிறந்தவன் 
தாரணி ஆள்வான் 
கையில் திருவோடு !

வானவியலின் அடிப்படையில் ஜோதிட சாஸ்திரம் அமைத்திருப்பதாகச் சொல்வது பெரும் பித்தலாட்டம் .வானவியலின்சில உண்மைகளைப் 
பெயருக்கு வைத்துக் கொண்டு நட்சத்திரங்களைக் கூறு போட்டு ஒரு மாயக் கோட்டையை எழுப்பி விட்டார்கள் .மனிதர்களைப் பொய் மான் வேட்டையாட வைத்து விட்டார்கள் .கிரகங்களிலும் சாதி வேறுபாடு விதைத்துள்ள ஜோதிட பித்தலாட்டத்தை அறிவியல் கருத்துக்களுடன்  தோலுரித்துக்  காட்டி உள்ளார் . 

  கணினி யுகத்திலும் மக்கள் ஜோதிடம் நம்புவது  மடமை .

ஜோதிடம் சொல்கிறார் ,குறி சொல்கிறார்  என்று மக்கள் குவிந்து ஆசாமிகளை சாமியாக்கி மோசம் போகும் அவலம் தினசரி  செய்தாகி விட்டது .வேதனை .எல்லாம் அறிந்த ,தெரிந்த சாமியாருக்கு   தன்  அறையில்  இருந்த கேமிரா தெரியாமல் போனது ஏன் ? என்று மக்கள் சிந்திப்பது இல்லை . 

தொலைக்காட்சித் தொடர்களிலும் ,திரைப்படங்களிலும் ஜோதிடம் உண்மை என்பது போல காட்டி மக்களை முட்டாளாக்கி பணம் சேர்த்து வருகின்றனர் . பத்திரிகைகள்   மக்களுக்கு  அறிவைப் புகட்டுவதை விடுத்தது  ராசி பலன் எழுதி முட்டாள்தனத்தைப்  புகட்டி வருகின்றனர் .ராசிபலன் எழுதி பணம் சேர்த்து வருகின்றனர்.பொறுமையாக ஒரு  நாள் எல்லா ராசி பலனையும் படித்துப் பாருங்கள்  ஒன்றில் எழுதியதே மற்றொன்றில் எழுதி இருப்பார்கள் .

வாய்பிடுங்கி சாமர்த்தியத்தால்தான் ஜோதிடர்களின்   ஏமாற்றுப் பிழைப்பு நடக்கின்றது .என்பதை உரையாடல்களுடன் உணர்த்தி உள்ளார் .

செவ்வாய் வெறுவாய்  என்று சொல்லிவிட்டார்கள் .தமிழ்நாட்டில் செவ்வாயன்று எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் நடத்தப்படுவதில்லை .சனிக் கிழமைக்கும் கிட்டத்தட்ட இந்த கதிதான் .

எல்லாக்  கிழமையும் நல்ல கிழமைதான் என்ற எண்ணம் வரவழைக்கும் நூல் இது .கெட்ட நாள் என்று எதுவுமில்லை என்று உணர்த்தும் நூல் இது .

முகராசி சகுனம் பார்க்கும் மூட நம்பிக்கைகளையும் விளக்கமாக எழுதி சாடி உள்ளார் .புத்திப்  புகட்டி உள்ளார் .பகுத்தறிவுச் சிந்தனையை விதைத்து உள்ளார் .

பிஞ்சிலே வெம்பாதே என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய வைர வரியை தலைப்பாகக் கொண்டு , பேய்களை நம்பாதே ! பிஞ்சிலே வெம்பாதே !,கட்டுரை  சிறப்பாக உள்ளது .

எண் ஜோதிடம் ,ஏடு   ஜோதிடம்,கிளி ஜோதிடம்,கண் திருஷ்டி ,பூ போட்டுப் பார்த்தல் ,குறி கேட்டல் என்று நீண்டு கொண்டே போகிறது .என்கிறார் .

தற்போது அறிவியல் கண்டுப்பிடிப்பான கணினியையும் ஜோதிடத்திற்கு பயன்படுத்தும் அவலம் . கணினியிலும் ஜோதிடம் பிரசுரம் இப்படி மூட  நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது .
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன்னது போல எதையும் ஏன் ? எதற்கு ? எதனால் ?எப்படி ? என்று கேட்கத் தொடங்கினால்   மூட  நம்பிக்கை முற்றுப்பெறும் .இந்த நூல் பகுத்தறிவைப் பரப்பும் நூல் .மூட  நம்பிக்கை ஒழிக்கும் நூல் .நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

.

புதன், 28 ஆகஸ்ட், 2013

புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

புகையிலைக் கேட்டை ஒழி !

தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வெளியீடு மின்னல் தமிழ்ப்பணி ,பொதிகை மின்னல் மாத இதழ் !
விலை ரூபாய் 60.

' மதுக்கடைகளை மூடு '  என்ற தலைப்பில் கவியரங்கம்  நடத்தி   அதனை  நூலாக வெளியிட்டார்கள் .அதனைத் தொடர்ந்து ,
'புகையிலைக் கேட்டை ஒழி' என்ற தலைப்பில் 31.5.2013 அன்று புகையிலை ஒழிப்பு தின இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்ட கவிதைகள் ,உரைகள் தொகுத்து நூலாக்கி சமுதாயத்திற்கு பயன் தரும் விதமாக வழங்கி   உள்ளார்கள் பொதிகை மின்னல் மாத இதழ்  ஆசிரியர் கவிஞர் வசீகரன் .

விழாவில் ஆற்றிய உரைகளில் இருந்து சிறு துளிகள் .

கவிஞர் கார்முகிலோன் உரை ; 

பள்ளிச் சிறுவர்கள் கூட  புகைக்கத் தொடங்கிவிட்டார்கள்  .நவ நாகரிக யுவதிகள் ,புகைக்கிறார்கள் .ஆணும் பெண்ணும் சமம் என்று காட்ட எத்தனையோ நல்ல வழிகள் உள்ளனவே ! உயிர் பறிக்கும் புகையிலையை உபயோகிகத்தான்  வேண்டுமா ? 

கவிஞர் ஜெயபாஸ்கரன் ; 

எனக்கு நானே ஏற்றுக் கொண்ட உறுதி மொழியின் அடிப்படையில் மிகப்பெரிய மனப்போராடதிற்குப்   பிறகு மன உறுதியோடு நான் இதை விட்டொழிக்க முடியவில்லை என்றால் நீ பிறந்ததற்கு பயனே இல்லை .என்கிற மன உறுதியுடன்  , அந்த சிகரெட்டை நான் கடைசியாக தூக்கிப்  போட்டு மிதித்தேன் .

கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ;

நம்முடிய தமிழ்ச் சமூகத்தில் கேடு பயக்கின்ற அல்லது நம்மை மதிமயக்கம்   செய்கின்ற போதைப் பொருகள்கள் குடும்பத்தை மட்டும் சீரழிக்கவில்லை , இந்தநாட்டையும் சீரழிக்கிறது .

மாதா டிரஸ்ட் திரு .கிருஷ்ணமூர்த்தி  ;

புகையிலை புகைக்கும் வடிவமாக இன்றைய இளைஞர்களை   அடிமைப்படுத்திக் கொள்கிறது .நண்பர்கள் சகவாசம் , ஒருமுறை  எழுத்துப் பார்ப்போமே என்ற நப்பாசை ,தீய சகவாசங்களால் தொடங்கும் பழக்கம் வாழ்நாள் முழுவதும் பாடாய் படுத்துகிறது .


தொகுப்பாசிரியர்  கவிஞர் வசீகரன் ;
 
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதுதான் எல்லோருடைய் ஆசையாகவும் இருக்கிறது .ஆனால் ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகளைச்  சொன்னால் மட்டும் ஏன்தான் சிலர்க்குப் பிடிக்காமல் போகிறது என்பது தெரியவில்லை .
புற்று தந்திடும் புகையிலை ;
பற்று வைத்திடல் சரியிலை ;


புகையிலை உடல்நலத்தின் பகையில்லை !கவிஞர் அருகோ !

புற்றுநோயை  இந்நாட்டில் புகஅழைத்த   புகையிலை    ;
கட்டுடலைச்  சீர்குலைத்துக் கரியாக்கும் பகையில்லை 
தொட்டுவிட்டால் விடமறுக்கும் தொந்தம்  மிகு விசவலை 
தொல்லைகளை   எல்லையின்றித் தொடரவைக்கும் நச்சிலை   

புகை நமக்குப் பகை ! கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன் .

இம்மென்று பிறர் காக்கும் காப்பு என் செய்யும் ?
நம்நலத்தை நாம்தானே பேணவேண்டும் 
தம் அடித்துத் தரம்கெட்டுப்  போகலாமா ? 
போம் என்றே புகைதனை ஒழித்துவிடல் நன்றேயன்றோ !

ஒரு புகையாளியின் வாக்குமூலம் ! கவிஞர்  தமிழ் இயலன் !

புகையிலைத் தயாரிப்பு 
நிறுவனங்களை இழுத்து மூடினால் 
இழுத்து மூட ஏற்பாடு செய்தால் 
கழுத்துப் போய்விடுமா  உங்களுக்கு ?

நூலில் உள்ள கவிதைககள்  கருத்துக்கள்  யாவும் மிக நன்று .விழிப்புணர்வு விதைக்கும் விதமாக உள்ளன .பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு எழுதி உள்ளேன் .நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள் .புகைக்கும் பழக்கும் உள்ள உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் பரிசளித்து மகிழுங்கள் .புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த நூலை ஆழ்ந்து படித்தால் உறுதியாக புகைப்பதை விட்டு விடுவார்கள் என்று உறுதி கூறலாம்  .

மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மின்னல் துளிப்பா !

நூல் ஆசிரியர்  கவிஞர் மன்னை பாசந்தி !

நூல் விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி !

யாழினி வெளியீடு 30/8 கன்னிக்கோவில்  முதல் தெரு ,அபிராமபுரம் ,சென்னை .600 018. விலை ரூபாய் 20.

திறனாய்வுச் செம்மல் எம் .எஸ் .தியாகராஜன் அவர்களின்   அணிந்துரை நூல்  ஆசிரியர்  கவிஞர் மன்னை பாசந்தி அவர்களின் தன்னுரை ,பதிப்பாளர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் பதிப்புரை ,நூல் முகப்பு அட்டை உள்  அச்சு வடிவமைப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .

.படிக்கின்ற வாசகரையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கு மட்டுமே உண்டு .இந்த நூலைப் படிக்கும் வாசகர் படித்து  முடித்ததும் ஹைக்கூ எழுதி விடுவார் என்று அறுதி இட்டுக்
கூறலாம்  .கருப்பு தின்னக்கூலி   வேண்டுமா ?  ஹைக்கூ படிக்க யோசனை வேண்டுமா ? படிக்கப்  படிக்க சிந்தனை மலர்விக்கும் ஹைக்கூ கவிதைகள் நூலில் உள்ளன .

மூன்றாவது வரியில் விடை இருக்கும் .வாசகர் நினைக்காத விடை இருக்கும் .நுட்பமான ஹைக்கூ இது .

கொட்டும் மழை
நனையவில்லை
கனவு !

திருநங்கைகள்  வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டம் மிக அதிகம் .அதனை உணர்த்திடும் ஹைக்கூ ஒன்று மிக நன்று .

ஆணுமில்லை பெண்ணுமில்லை
அங்கீகாரமுமில்லை
அரவாணி (   திருநங்கைகள்  )

சாலையில் பலர் கவனக் குறைவுடன் செல்பேசியில் பேசிக் கொண்டே நடந்து விபத்தை சந்திக்கும் நிகழ்வைக்  காட்சி படுத்தும் ஹைக்கூ .

அலைபேசியோடு நடந்தான்
விழுந்தான்
படுகுழியில் !

சாமியார் என்ற பெயரில் மோசடிகள் செய்யும் ஆசாமிகள் பெருகி விட்டார்கள் .மக்களும் விழிப்புணர்வு இன்றி  ஏமாறும் அவலுமும் தொடர்கின்றது .சாமியாராக இருக்கத் தகுதி அற்ற , முகத்திரை கிழிக்கப்பட்ட ஆசாமியெல்லாம் தொலைக்காட்சியில் தோன்றி அறிவுரை சொல்லும் அவலம் நம் நாட்டில் அரங்கேறி வருவது கொடுமை .

வேலியைத் தாண்டாமலே
பயிரை மேய்ந்திடும்
போலிச் சாமியார்  !

படைப்பாளிக்கு படைப்பு எண்ணம் எப்போது  வரும் என்று சொல்ல முடியாது .எப்போதும் வரலாம் .வரும்போது குறித்து வைத்துக் கொள்வார்கள் .தூக்கம்  வராமல் சிந்திக்கும் போதும் ஹைக்கூ வரும் .உணர்ந்து எழுதியுள்ள ஹைக்கூ .
     
தூக்கம்   இல்லை
துளிர்விட்டது
துளிப்பா !

சாப்பாட்டை சண்டையிட்டு வயிறு முட்ட சாப்பிட்டு வருகின்றனர் . இரவு தூக்கமிழந்து  தவிக்கின்றனர் . அதிகம் சாப்பிடுவது   உடல்நலனுக்கு கேடு என்பதை உணர்த்திடும் ஹைக்கூ நன்று .மிக எளிமையான சொற்கள் மூலம் எல்லோருக்கும் எளிதில் புரியும் விதமாக எழுதி இருப்பது சிறப்பு .

அளவான சாப்பாடு
நிறைவான தூக்கம்
ஆரோக்கியமான வாழ்வு !
.
மனிதநேயம் மறந்து மனிதர்கள்  விலங்காக  மாறி
சாதியின் பெயரால் , மதத்தின் பெயரால்  மோதி உயிரை இழக்கும் மடமையைச் சாடி வடித்த ஹைக்கூ நன்று .

உயிரே
உன் விலை என்ன ?
சாதிக் கலவரம் !

தடுக்கி விழுந்தால் மதுக்கடை.  மாணவர்கள்  குடிக்கும் அவலம் .மாணவர்கள் பிறந்த நாளை மாறி மாறி மதுக்கடையில் குடித்துக் கொண்டாடும் புதிய கொடிய பழக்கம் தொற்றிக் கொண்டது.இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது .மனித நேய ஆர்வலர்களின் நெஞ்சம் பொறுக்கவில்லை .குடியின் கேடு உணர்த்தும் ஹைக்கூ ஒன்று .

குடும்பமே
குட்டிச்சுவர்
குடிப்பழக்கம் !

ஈழத்தில் நடந்த படுகொலைகளை நெஞ்சம் என்றும் மறக்காது .போர்க்  குற்றவாளிகள் தண்டிக்கப்படும் நாளே தமிழர்க்கு திருநாள் .ஈழத்துயரை நினைவூட்டும் ஹைக்கூ  .

பிறந்து வளர்ந்த இடம்
பிணக்காடனது
 ஈழப் படுகொலை !

பலர் படித்தவர்களாக இருக்கிறார்கள் ஆனால் பகுத்தறிவைப் பயன்படுத்துபவராக  இல்லை .மூட நம்பிக்கையில் மூழ்கித்  தவிக்கிறார்கள் .பகுத்தறிவு இன்றி படிப்பறிவு இருந்தும் பயன் இல்லை என்பதை உணர்த்தும் ஹைக்கூ .

படித்தறிவைவிட
பகுத்தறிவு
சமுதாய  முன்னேற்றம் !

இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் உள்ளன .நூல் ஆசிரியர்  கவிஞர் மன்னை பாசந்திஅவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .

அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அறிமுக நூல் - 2

திருக்குறள் !

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வெளியீடு புரட்சிக்கவிஞர்  மன்றம் ,75.வடக்கு மாசி வீதி .மதுரை .625001.அலைபேசி 9443710219.
விலை ரூபாய் 20.

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் 
விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் உள்ள வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் ஒருவர் .மிகச் சிறந்த தமிழறிஞர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதர் .பண்பாளர் .இவர் சினம்  கொண்டு யாருமே  பார்த்து இருக்க முடியாது . எழுத்தாற்றலும்   பேச்சாற்றலும்   மிக்கவர் .மாதம் தோறும் புரட்சிக்கவிஞர்  மன்றத்தில் உரையாற்றி நூலை வெளியிட்டு வருகிறார்கள் .

மிகச் சிறந்த தமிழ்ப்பணியை செய்து வருகிறார்கள் .இளைய சமுதாயத்திற்கு தமிழைக் கொண்டு சேர்க்கும் பணி . அறிமுக நூல் - 1 தொல்காப்பியத்தை தொடர்ந்து அறிமுக நூல் - 2 திருக்குறள் அடுத்து ஆற்றுப்படை இப்படி 50 க்கும் மேலான தமிழ் இலக்கிய அறிமுக நூல்கள் வர உள்ளன .

இந்த நூலை மிகச் சிறப்பாக வடிவமைத்து , வெளியீட்டு விழா நடத்தி குறைந்த விலையில் 20 ரூபாயில் வெளியிட்டு வரும் புரட்சிக்கவிஞர்  மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் . 

ஒரு பக்கம் ஊடகங்களில்  தமிழ்க்கொலை நடக்கின்றன .தமிழர்களின் இல்லங்களிலும் , உள்ளங்களிலும் தமிழ் குறைந்து வருகின்றது .தமிழ் வழிக் கல்விக்கு மூடு விழா நடத்தி ஆங்கில வழிக் கல்விக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கும் நிலை .தமிழ் ஆர்வலர்களுக்கு வேதனை .வெந்த புண்ணில் வேல் பாய்வதாக தமிழ்நாட்டில் நிகழ்வுகள் இருந்தாலும், புண்ணுக்கு மருந்தாக உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் தமிழன் .இலக்கண இலக்கியங்கள் நிறைந்த மொழி தமிழ் மொழி என்பதை பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .இந்த நூல் படித்தால் உலகின் ஒப்பற்ற இலக்கியமான  திருக்குறள் தமிழ் மொழியில் உள்ளதற்காக உலகில் உள்ள ஓவ்வொரு தமிழரும் தமிழராய்ப்   பிறந்ததற்காக பெருமை கொள்ளும் விதமாக நூல் உள்ளது . 

தமிழாசிரியர்கள் , தமிழ் மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் .வினா விடையில் நூலின் நடை மிக நன்று .படிக்கும் அனைவருக்கும் எளிதில் புரியும் விதமாக நூல் உள்ளது .திருக்குறள் தொடர்பான ஐயம் நீக்கும் விதமாக நூல் உள்ளது .

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் மிக இனிமையானவர் ,எளிமையானவர் அவர் எழுத்தும் அவர் போலவே இனிமையாகவும் , எளிமையாகவும்  உள்ளன . நூல்ஆசிரியர் குழந்தை  உள்ளம் கொண்டவர் இந்த நூல் படித்தால் குழந்தைகளுக்கும் புரியும் விதமாக எழுதி உள்ளார்கள் .

திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் விதமாக பல் நூல்கள் வந்தபோதும் இந்தநூலிற்கு  இணையாக ஒரு நூல் இல்லை என்றே சொல்லலாம் .தமிழர்களின் இல்லங்களில் இருக்க வேண்டிய நூல் .நாம் வாங்கி படிப்பது மட்டுமன்றி நமது நண்பர்களுக்கும் பரிசளித்து மகிழ வேண்டிய நூல் .40 பக்கங்கள் மட்டுமே உள்ள கை அடக்க  நூல் .படிக்கத் தொடங்கினால் தொடர்ந்து படித்து முடித்து விடுவோம் .

பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ .

திருக்குறள் என்பதன் பொருள் விளக்குக .

குறள் யாப்பால் அமைந்த நூல்   'குறள் ' என்றே வழங்கப்பட்டது .அதன்   அருமையும் பெருமையும்    கருதிய பின்னவர்கள்  'திரு' என்றும் அடைமொழியைச் சேர்த்துத் திருக்குறள் என்றனர் .

உலகப்பொது மறையாகும் திருக்குறள் எனதை தொலைநோக்கு சிந்தனையுடன் பொருத்தமாக நூலின் பெயரிலேயே திரு சேர்த்து சிறப்பித்து உள்ளனர் என்பதை உணர முடிந்தது .

அறம் பொருள்  இன்பம் எனப்  பிறர் கூறினாலும் திருவள்ளுவர் அறம் பொருள்  காமம் என்று முப்பால் பெயர் சூட்டியது ஏன் ?

 அறம் பொருள்  இன்பம் என முறை வகுத்த தொல்காப்பியர் " இன்பம் என்பது  எல்லா உயிர்க்கும் பொதுவானது ' என்றார் .ஆனால் திருவள்ளுவர் ஆறறிவுடைய மாந்தர்க்கே  நூல் செய்தலால் ,மற்றைய உயிர்கள் கொள்ளும் இன்பம் போல் இல்லாமல் என்றும் வளர்வதாய் நிலை பெறுவதாய் முறைமையுடையதாய் அமைந்த நிறை இன்பத்தைக் காமம் என்றார் .எனெனில் ,தொல்காப்பியரே ' கமம் நிறைந்தியலும் ' என்றார் .ஆதலால்  கமம் - காமம் ஆயிற்று .
.
மனிதர்களின் ஒழுக்கம் சார்ந்த நிறை இன்பான காமம் என்ற  நல்ல   சொல்லை கொச்சையாக்கி  விட்டோமே என்று வருந்தும்படியான புதிய விளக்கம் .

தவம் ,வாய்மை என்பவற்றின் பொருள்கள் எவை ?

தவம் என்பது அவரவர்க்குரிய  கடமைகளைச் செவ்வையாகச்  செய்தலும் ,தம் துயர் தாங்கிக் கொண்டு ,பிற உயிர்களுக்குத் துயர் செய்யாமையுமாம் .
வாய்மை என்பது எவருக்கும் எத தீமையும் வராத சொல்லைச் சொல்லுதல் ஆம் ,பிறர்க்கு நன்மை பயக்குமாயின் அப்பொழுது சொல்லும் பொய்யும்  கூட  வாய்மைச் செயலைச் செய்ததாகக் கொள்ளப்படும் .என்றாலும் பொய் மெய்யாகி  விடாது .பொய் 
பொய்யேயாம்  .

மேடையில்   சிலர் பேசா விட்டாலும் பேசியதாகக் கருதி என்பார்கள் .ஆனால் அவர்கள் பேசவில்லை என்பதே உண்மை .அது போல பிறருக்குத் தீங்கு இல்லாத பொய் மெய்யாகக் கருதலாம் ஆனால் மெய்யாகி விடாது .பொய் மெய்யாகி  விடாது .பொய் 
பொய்யேயாம்  .என்ற முடிப்பு மிக நன்று .

நட்பு என்பது என்ன ?
நட்பு ;
நல்ல நட்பு வளர்பிறை போல வளரும் என்றும் பழகப் பழக நூல் நயம் போல் சிறக்கும் என்றும் உடை இழந்தவன் கை ஓடிக் காப்பது போல் உதவுவான் என்றும் .
மகிழ்வதற்கு மட்டுமன்றி இடித்துக் கூறித் திருத்துவதற்கும் நட்பு துணிவாக நிற்கும் "என்றும் நட்பினைப் பற்றி வள்ளுவர் கூறுகிறார் .

நட்பின் இலக்கணத்தை திருவள்ளுவர் சொன்னதை வழிமொழிந்து எழுதிய விளக்கம் மிக நன்று .நண்பன் தவறு செய்தால் எடுத்துச் சொல்லி திருத்துபவனே உண்மையான நண்பன் .இதை இன்றைய இளைய தலைமுறையினர்  புரிந்து கொள்ள வேண்டும் .
திருக்குறளின் நுட்பத்தை ,விளக்கத்தை ,சிறப்பை ,அருமை, பெருமையை எளிய வினா விடை நடையில் எழுதியுள்ள நல்ல நூல் .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களுக்கும்  வெளியீட்டாளர் பி .வரதராசன் அவர்களுக்கும்  பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்களின் தமிழ்ப்பணி .

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

இலக்கிய இணையர்க்கு வரவேற்பு !


.இலக்கிய இணையர்க்கு  வரவேற்பு !

தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் , தமிழ்ச் சுடர் முனைவர் நிர்மலா மோகன் இலக்கிய இணையர்  அமெரிக்க  நாட்டு இலக்கியப்பயணம் முடித்து மதுரை வந்த போது விமான நிலையத்தில் வரவேற்பு  நடந்தது  .புரட்சிக் கவிஞர் மன்றத்தின்  தலைவர் பி .வரதராசன் ,மணியம்மை தொடக்கப் பள்ளியின் முதல்வர் அமுது ரசினி இருவரும் 
பொன்னாடைப்     போர்த்தி ,   புரட்சிக்கவிஞர்  மன்றம் வெளியிட்ட தமிழா அறிஞர் இரா .  இளங்குமரனார் நூல்களை வழங்கி  வரவேற்றனர் .கவிஞர் இரா .இரவி பொன்னாடைப்   போர்த்தி வரவேற்றார் .   புகைப்படங்கள்  இனிய நண்பர் இசக்கி கை வண்ணத்தில் .

தாளம் பண்பலை சர்வதேச இணைய வானொலியின் 11 வது ஆண்டு விழா !

தாளம் பண்பலை சர்வதேச இணைய  வானொலியின் 11 வது ஆண்டு விழா !

.

தாளம் பண்பலைசர்வதேச இணைய  வானொலியின் 11 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு நேரலை  நிகழ்வில் கவிஞர் இரா .இரவி மதுரையில் உள்ள  வானொலி நிலையத்திற்கு  நேரடியாகச் சென்று கலந்து  கொண்டார் .

26.8.2013 அன்று இரவு 9.30 மணி முதல் 11.30 மணி வரை ஒலிபரப்பானது .அறிவிப்பாளர் சசிக்கா உடன்  உரையாடினார் . பல  நாடுகளில் இருந்து  நேயர்கள் தொலைபேசி வாயிலாக கலந்து கொண்டு கேள்விகள் கேட்டனர் .

கவிஞர் இரா .இரவி தாளம் பண்பலை வானொலியின் 11 வது ஆண்டு வாழ்த்துக்  கவிதை சொல்லி தொடங்கினார் .பார்வையற்றவர்கள்  , நூல்கம்  , மது போன்ற தலைப்புகளில் கவிதை வாசித்தார் .ஹைக்கூ கவிதைகளும் வாசித்தார் .ஹைக்கூ தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்தார் .நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்ததாகப்     பாராட்டி  பன்னாட்டு நேயர்கள் மின்   அஞ்சல் அனுப்பி உள்ளனர் .அடிக்கடி  இதுபோன்ற நிகழ்ச்சி நடத்திட வேண்டுகோள் விடுத்துள்ளனர் ..

நிகழ்ச்சி ஏற்பாட்டை இனிய  நண்பர்கள் அறிவிப்பாளர்  ஸ்ரீ ,ராஜ்குமார் செய்து இருந்தனர் .


.
தாளம் வானொலிக்கு வாசித்த வாழ்த்துக் கவிதை !

உலகத்தமிழர் வானொலி தாளம் ! கவிஞர் இரா .இரவி !

உலகத்தமிழர் வானொலி தாளம் ! 
உலகத்தமிழர் நேசிப்பு  தாளம் ! 

தாளம் வானொலி கேட்டிட 
தாளம் போடும் மனசு !

தாளம் வானொலி கேட்டிட 
குதூகலம் ஏராளம் தாராளம் !

செய்திகளை முந்தித் தருவது தாளம் !
செவிகளில் தேனை வார்ப்பது தாளம் !

திரைப்படம் வெளிவருமுன்னே  முந்தி  
தாளம் ஒலிபரப்பும் பாடல்கள் !

தேமதுரத் தமிழோசை தேசமெங்கும் 
தித்திக்க வழங்கி மகிழும் தாளம் !

குயிலினும் இனிய குரல்வளம் 
கொண்டவர்களின் அறிவிப்பு இனிப்பு !

வெல்லத்தமிழ்   என்றும் வாழும் உண்மை 
பிள்ளைத் தமிழ் போல இனிக்கும் தாளம் !

வெற்றிகரமாக  பத்தாண்டுகளைக்  கடந்து 
விவேகமாக பதினோராம் ஆண்டில் தாளம் !

தாளத்தின் வயதோ பதினொன்று !
தாளத்தின் தமிழ்ப்பணியோ  நூற்றாண்டு  !

மனக்காயம் பட்ட நெஞ்சங்களுக்கு மருந்தாக 
மனக்காயம் ஆற்றிடும் பாடல் தரும் தாளம் !

புலம் பெயர்ந்த தமிழர்களின் இல்லங்களில் 
புத்துணர்ச்சித் தந்திடும் ஒப்பற்ற தாளம் !

குறிப்பாக ஈழத்தமிழர்களின் செல்லப்பிள்ளை 
குதூகலம் வாரி வழங்கிடும்   தாளம் !

ஆதவனைப் போலவே ஓய்வின்றி உழைத்து 
இருபத்திநான்கு மணி நேரமும் ஒலிக்கும் தாளம் !

இணையங்களில் இருக்கும் இனிய நேயர்களின் 
இதயத்திலும் செவியிலும் ஒலிக்கும் தாளம் !

வேறு பணிகள் செய்து கொண்டே 
இடையூறு  இன்றி ரசிக்கலாம் தாளம் !

இரவுப் பணி  புரியும் பணியாளர்களுக்கு 
இன்னிசை நல்கிடும் இனிய தாளம் !

பணி முடித்து வந்து ஓய்வெடுப்பவர்களுக்கு 
பாடல்கள் இசைத்து வசப்படுத்தும்  தாளம் !

ஈழத்து நிகழ்வுகளை உலகத்து  நிகழ்வுகளை
இந்தியாவின்  நிகழ்வுகளை தமிழகத்தின் நிகழ்வுகளை

உடனுக்குடன் செய்தியாக  வாசிக்கும்  தாளம் !
ஒருபோதும் ஓயாது ஒலித்திடும் தாளம் !

வானொலிகளில் சிறந்தது தாளம் வானொலி !
வானொலி நேயர்களின் நேயர் விருப்பம் தாளம் !

கேட்டு மகிழுங்கள் தாளம் வானொலி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கவிஞர் இரா .இரவி இலக்கியப் பணிக்காகப் பெற்ற விருதுகள் பார்த்து மகிழுங்கள் !


கவிஞர் இரா .இரவி இலக்கியப் பணிக்காகப்   பெற்ற விருதுகள் பார்த்து மகிழுங்கள் !


.http://www.eraeravi.com/home/awards.html


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 8 வது புத்தகத் திருவிழா !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 8 வது புத்தகத் திருவிழா !


30.8.2013 முதல் 9.9.2013 வரை

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

நூலக விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள் .

நூலக விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள் .

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச் சுடர் முனைவர் நிர்மலா மோகன் இலக்கிய இணையரின் அமெரிக்கா நாட்டு இலக்கியப்பயணம் .நூலக விழா புகைப்படங்கள்
பார்த்து மகிழுங்கள் .

நூலக விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச் சுடர் முனைவர் நிர்மலா மோகன் இலக்கிய இணையரின் அமெரிக்கா நாட்டு இலக்கியப்பயணம்
நூலக விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள் 

நூலக விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச் சுடர் முனைவர் நிர்மலா மோகன் இலக்கிய இணையரின் அமெரிக்கா நாட்டு இலக்கியப்பயணம் நூலக விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள் 

நூலக விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள் .

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச் சுடர் முனைவர் நிர்மலா மோகன் இலக்கிய இணையரின் அமெரிக்கா நாட்டு இலக்கியப்பயணம் .நூலக விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள் .


https://plus.google.com/photos/110027845625097257696/albums/5916428980...

ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள் 3 ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன்! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள் 3 !

நூல் ஆசிரியர் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன்!

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வசந்தா பதிப்பகம் ,புதிய எண் 26,குறுக்குத் தெரு ,சோசப் குடியிருப்பு ,ஆதம்பாக்கம் ,சென்னை .6000088. தொலைபேசி 044-22530954.
விலை ரூபாய் 120. 

மரபுக்கவிதைகள் எழுதுவதில் வல்லவர் நூல் ஆசிரியர் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன் . மரபு மட்டுமல்ல  புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் முப்பாவும் எழுதும் ஆற்றல் மிக்கவர் .பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி .
.
இந்த நூல் மரபுக்கவிதை விருந்தாக உள்ளது .மரபுக்கவிதை மறக்கமுடியாத கவிதை ,மனதில் பதியும் கவிதை .மரபுக்கவிதைக்கு இணை மரபுக்கவிதை மட்டுமே .கவிதை உலகில் நிலவு மரபுக்கவிதை .நட்சத்திரங்கள் புதுக்கவிதை .நிலவிற்கான  மதிப்பு தனிதான் .பலரால் புதுக் கவிதைகள் எழுத முடியும் .ஆனால் மரபு நன்கு அறிந்த சிலரால் மட்டுமே மரபுக்கவிதை எழுத முடியும் .அந்த சிலரில் சிகரமானவர் நூல் ஆசிரியர் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன்.

நேரம் செலவழித்து  மரபுக்கவிதை படித்தால் படிக்கும் வாசகருக்கும் மரபுக்கவிதை பற்றிய புரிதல் கிடைக்கும் . மரபுக்கவிதை சொற்க் களஞ்சியமாக  இருப்பதால் பல புதிய சொற்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் வாய்க்கும் .இந்த நூலும் சொற்க் களஞ்சியமாக  உள்ளது .பாராட்டுக்கள் .தமிழன்னைக்கு அணி சேர்க்கும் விதமாக உள்ளது .

256 பக்கங்கள்  உள்ளன .   .அணிந்துரை ,ஆசிரியர் என்னுரை மடல்கள் என 40 பக்கங்கள்  உள்ளன .  மீதம் 216 பக்கங்கள் கவிதைகள்  உள்ளன இந்த மரபுக்கவிதைகள் உள்ளன .மரபுக்கவிதை நேசர்களுக்கு இந்த நூல் வரம் .

வாழ்வியல் பாடம் சொல்லித் தரும் ஒப்பற்ற திருக்குறளின் சிறப்பை நன்கு உணர்த்தும் கவிதை ஒன்று .

சுருக்கமுடன் முன்னேற  வழிகள் கேட்டேன் 
தூக்கத்தில் கேட்டாலும் சொல்வேன் என்றார் ;

திருக்குறளைக் கொண்டுவந்து கையில் வைத்தார் ;
தேடுகின்ற  முன்னேற்றம்  தெரியும் என்றார் ;

இருக்குமிடம் தெரியாமல் இருந்து விட்டேன் ;
எடுத்தெடுத்துக் படிக்கின்றேன் ! வியந்து போனேன் 

உருக்கமுடன் வள்ளுவனார் பாடம் சொன்னார் 
உள்ளத்தில் பதியவைத்தேன் !உயரம் ஆனேன் ! 

எங்கும்   தமிழ்  ! எதிலும்   தமிழ் !  என்று  முழங்கி விட்டு நடைமுறையில் எங்கும் இல்லை தமிழ் எதிலும் இல்லை தமிழ் என்ற இழி  நிலையைச்  சாடும் விதமான கவிதை மிக நன்று .தமிழனுக்கு தமிழ் உணர்வு தரும் கவிதை .  
.
ஊர்ப்பெயர்கள் தமிழாய் மாற்றுக !

உன்பெயரும் தமிழில்லை ! நீவாழ்  கின்ற 
ஊர்ப்பெயரும் தமிழில்லை ! உலவு கின்ற 

உன்தெருவில் தமிழில்லை ! ஏனில்  லை ? நீ   
ஒருநாளும் கேட்டதில்லை ! புளிப்போம் உப்பும் 

உன்உணவில் மறக்காமல் வைத்துக் கொண்டாய் 
உன்வாயில்  தமிழ்ச்சொல்லை வைத்த துண்டா ?

உன்னழகு குன்றாமல் நடக்கின் றாயே  !
ஊர் நடுவே தமிழிங்கே சிதைய லாமா ?

தமிழர்களின் அடையலாம் தமிழ் .தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான் .தமிழ் வீழ்ந்தால் தமிழனும் வீழ்வான் என்பதை உணர்த்தும் கவிதைகள் ஏராளம் .

தலை  குனிந்த தமிழன் !

தமிழை வீட்டின் வெளியே 
தள்ளி வைத்துச் சென்றவன் !

தமிழன் என்று சொல்லித் 
தலை குனிந்து நின்றவன் !

இலக்கிய இமயம் மு .வ பற்றிய கவிதை மிக நன்று .

மூதறிஞர் நம்மு .வ .முன்னேற்றம் செந்தமிழர் 
காதினிலே ஓதிக் கடமைசெய்தார்  - ஆதலினால் 
எந்நாளும் எஞ்சில் இருக்கின்றார் ; நூற்றாண்டு  
நன்னாளை போற்றுவோம் நன்கு !

கல்லை மலராக்கும் கட்டுரைகள் தீட்டியவர் 
சொல்லைப் பழமாக்கி ஊட்டியவர் ;-இல்லை 
அவர்போல என்றுரைக்கும் ஆற்றல் உடையார் 
எவரும் வணங்கும் எழுத்து !

இப்படி  நூல் முழுவதும் படிக்கப் படிக்க இனிக்கும் தேன்சுவை கவிதைகள் .கவிதைக்கனிகளின் தோட்டம் .நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன்!அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கவிஞர் இரா .இரவி எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூல் விரைவில் வெளிவர உள்ளது .

கவிஞர் இரா .இரவி எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூல் விரைவில் வெளிவர உள்ளது .

கவிஞர் இரா .இரவி எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூல் விரைவில் வெளிவர உள்ளது .வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வருகின்றது .தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் மற்றும் சிறந்த சிந்தனையாளர் எழுத்தாளர் முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் அணிந்துரைகளுடன் வருகின்றது . வடிவமைப்பு கவிஞர் கன்னிக் கோவில்  இராஜா .

.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

தாளம் பண்பலை பன்னாட்டு வானொலியின் 11 ஆம் ஆண்டு விழா

தாளம் பண்பலை பன்னாட்டு வானொலியின் 11 ஆம் ஆண்டு   விழாவை முன்னிட்டு நாளை திங்கள் இரவு நேரலையில் கவிஞர் இரா .இரவி   நேயர்களுடன் உரையாடுகின்றார். கவிதை சொல்கின்றார் 

-- 
http://thaalamnews.com/
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

தாளம் பண்பலை பன்னாட்டு வானொலியின் 11 ஆம் ஆண்டு விழா

தாளம் பண்பலை பன்னாட்டு வானொலியின் 11 ஆம் ஆண்டு   விழாவை முன்னிட்டு நாளை திங்கள் இரவு நேரலையில் கவிஞர் இரா .இரவி   நேயர்களுடன் உரையாடுகின்றார். கவிதை சொல்கின்றார்

--
http://thaalamnews.com/
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

நூல் வெளியீட்டு விழா !

நூல் வெளியீட்டு விழா !

வண்டாடப் பூ மலர ! நூலை   கலைமாமணி கு ஞானசம்பந்தன் அவர்கள் வெளியிட கவிஞர் இரா .இரவி பெற்றுக் கொண்டார் .உடன் நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ,புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன்  .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.com/home/detail.php?id=256&cat=nl
.

மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் எல் . சுப்ரமணியன் பரிசுத் தொகை வழங்கி பாராட்டினார்

தமிழ்நாடுஅரசு தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் எல் . சுப்ரமணியன் பரிசுத் தொகை வழங்கி பாராட்டினார் உடன் தமிழ்வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர் முனைவர் க .பசும்பொன் ,உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் இரா .இரவி .

புகைப்படங்கள் புகைப்படக் கலைஞர் சிவகுமார் கை வண்ணத்தில் .
.

மதுரைக்கு வந்த பீகார் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ( மதிப்பீட்டுக்குழு ) வரவேற்பு

மதுரைக்கு  வந்த பீகார் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 
( மதிப்பீட்டுக்குழு  ) வரவேற்பு 

மதுரைக்கு  வந்த பீகார் சட்டமன்ற உறுப்பினர்களை   ( மதிப்பீட்டுக்குழு  )  ு சுற்றுலாதுறை  மற்றும்   தொல்லியல்துறையின்  சார்பில் வரவேற்று திருமலை மன்னர் அரண்மனை சுற்றிக் காண்பிக்கப் பட்டது .மாவட்ட சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் உதவி சுற்றுலா அலுவலர்கள் இரா .இரவி , சிவகுமார்   , தொல்லியல்   துறை உதவி இயக்குனர் நாக கணேசன் ,உதவிப் பொறியாளர் ஒளிமாலிக் ,தொல்லியல் அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

புகைப்படங்கள் உதவிப் பொறியாளர் ஒளிமாலிக்  கை வண்ணத்தில் .
.

சனி, 24 ஆகஸ்ட், 2013

அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அருவி !

கவிதை இலக்கிய காலாண்டிதழ் 

 இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !செல் 9600898806

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தனி இதழ் 25 .ஆண்டு சந்தா 100.
14.நேரு பஜார் ,திமிரி .632512.ஆற்காடு வட்டம் ,வேலூர்  மாவட்டம்  .

கவிதை கவிதை கவிதை தவிர வேறொன்றுமில்லை சொல்லும் வகையில் முழுக்க   முழுக்க   கவிதைகள் மட்டுமே .முத்தமிழ்    போல ,முப்பால் போல , முக்கனி போல   மரபுக் கவிதை , புதுக் கவிதை , ஹைக்கூ கவிதை மூன்று  வகைப்பாவும்   உள்ளன . பாராட்டுக்கள் .ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் அவர்களின் கடின உழைப்பை உணர முடிகின்றது .128 பக்கங்கள் உள்ளன .102 பக்கங்கள் கவிதைகள் . 26 பக்கங்கள் நூல் விமர்சனங்கள்,  மடல்கள் உள்ளன . படித்து விட்டு தூக்கிப்போடும் சராசரி இதழ் அல்ல இது .பாதுக்காப்பாக வைத்து இருந்து , கவிதையின்  மீது காதல் வரும் நேரமெல்லாம் எடுத்துப் படிக்கும் நூல் இது .

.94 கவிஞர்களின்    பெயர் செல் எண்ணுடன் பிரசுரம் செய்து படைப்பாளிகள்  ஒருவர்க்கு ஒருவர்  தொடர்பு கொள்ள வசதியாக பாலமாக உள்ள்ளார் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் .கவிதைகளைத்    தேர்ந்தெடுத்து பிரசுரம் செய்து இருப்பதால் படிக்க மிகச் சுவையாக உள்ளன . நூலில் உள்ள அனைத்துக்  கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு . 
 மரபுக் கவிதை மனதில் தங்கும் கவிதை .தமிழன் பெருமையை, அருமையைப் பறை சாற்றும் கவிதை .நூலின் அட்டையில் உள்ள இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் ! கவிதை மிக நன்று

முனைவர் ஆலந்தூர் கோ .மோகனரங்கன் .

பொன்கொடுத்தால் நிறைந்திடுமா நெஞ்சம் ? கொஞ்சம் 
புதுவாழ்வில் தமிழிருக்க  வேண்டா  மா ? சொல் ! 

கண்கொடுத்தால் போதாது ! சுவைப்ப  தற்குக்   
கரும்புதந்தால்  போதாது !வையம் ஆளும் 

மண்கொடுத்தால் போதாது ! வனப்புமிக்க 
மாளிகையும் போதாது ! தமிழ்தான் வாழ்வில் 

பெருஞ்செல்வம் என்றுணர்ந்து புரிப்போமே !

 தேர்தல்அவலம்   பற்றி வென்ற  வேட்பாளர்களின்  நிலை பற்றி உணர்த்தும் கவிதை ஒன்று மிக நன்று .

சுவாமி .இராமானுஜம் பெங்களூர் 

பரிவும் பாசமும் இனிப்பாய் வரும் 
தேர்தல் முடிந்த மூன்றாம் நாள் 

முனியனையும்  கலியனையும் 
காமாட்சியையும் மீனாட்சியையும் 

யார் நீ !என்று கேட்பார் .இதுதான் வழக்கம் !
இருப்பினும் அடுத்தமுறையும் வருவார் 

அன்புடன் வரவேற்பது நமது பழக்கம் 
மறப்பது நமது மாண்பு .
மறதி     வாழ்க !

திண்ணைகள் அழிந்து வரும்  காலத்தில் திண்ணையை நினைவூட்டும் கவிதை .

பாவலர் கருமலைப்பழம்  நீ  . சென்னை .39.

ஓரிரு கிராமங்களில் இன்றும் 
ஆயிரம் கதைகளைச் 
சொல்லிக் கொண்டிருக்கின்றன 
திண்ணைகள் .

பிள்ளைகளின் ஆடுங்களமாய்  ,
பாடுங்களமாய் ,

வெட்டிப்  பேச்சுகளின் அரங்கமாய் ,
முதியோர்களுக்கு படுக்கை விரிப்பாய் 

பூனைக்கும் நாய்க்கும்  
இளைப்பாறல் இடமாய் ...

இன்பம்  பகிந்து கொண்டால் இரட்டிப்பாகும் .துன்பம் பகிந்து கொண்டால் பாதியாகும் .இந்த உண்மை அறியாமல் பலர் துன்பத்தை பகிர்வதே இல்லை .அதனை உணர்த்தும் கவிதை .

கவிஞர்  கா .ந .கல்யாணசுந்தரம் .

ஆம் 
பிறரிடம் பகிரப்படாத 
துன்பங்களுடன்  எனது 
மனமும் முன்வரிசையில் 
அமர்ந்திருக்கிறது .

பாரம் சுமப்போர் போட்டியில்  
கலந்துகொள்ள 
தோள்களின் தோழமையோடு !

பறவைகள் பேசுவது போன்ற கவிதை மூலம் கவிஞர் நம்முடன் பேசும் கவிதை நன்று  .
 
கவிஞர் சோ .சரவணபவா .திமிரி .

நாங்கள்  வண்ணத்தோடு  மட்டுமே 
வாழ்கிறோம் .
வருணத்தோடு   இல்லை .

சாதி சாத்திரம் 
எங்களிடம் கிடையாது .

எங்கள் காதலால் 
எந்த ஊரும் எரியாது .

நல்ல வேளை 
நாங்கள் மனிதர்களாக 
பிறக்கவில்லை .

அப்படி பிறந்திருந்தால் 
விண்ணைத் தொடும் சிறகுகள் 
முளைக்காமல் போயிருக்கும் ... !  

மீசை மீது ஆசையில்லா  ஆண்  இல்லை .ஆணின் மன உணர்வை படம் பிடித்துக் காடும் கவிதை நன்று .

கவிஞர் பொன் குமார் .சேலம் .

அம்மா  இறந்தபோது 
காரியத்திற்காக மழிக்கப்பட்டது .
அம்மா இல்லாததை விடவும் 
அதிகமாகவே   கவலையளித்தது 
முகத்தில் இல்லாத   மீசை !

பிறந்த மண் பாசம் எல்லோருக்கும் உண்டு .பிறந்த மண்ணைப்  பிரியும் வலி சொல்லில் அடங்காது .கிராமிய மொழியில் ஒரு கவிதை மிக இயல்பாக உள்ளது .

கவிஞர் பாரியன்பன்  . குடியாத்தம்  .

இப்ப என் மவன் மேல்படிப்புக்கு 
குடும்பத்தோட எல்லோருமா டவுனுக்கு குடியிறுக்க 

எம் பொண்டாட்டி சொல்றா 
ஒறவைக் கூட பிரின்சிரலாம் சொந்த ஊரைப் பிரியிறது 
ரொம்ப கஷ்டம்டா மவனே !  

எனது ஹைக்கூ கவிதைகளும்    நூலில் இடம் பெற்றுள்ளன . ஹைக்கூ கவிதைகள் யாவும் மிக நன்று . சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

அமுதபாரதி  . சென்னை .

ஒவ்வொரு கணத்தையும்  
உணர்த்துகிறது 
ஓடும் கடிகாரம் !

இரா .தயாளன் .திருவாய்நல்லூர் .

எறும்புகள் தூக்கி செல்கிறது 
வண்ணத்துப்பூச்சியின்   
இறுதி ஊர்வலம் !

கவிஞர்  ஆரிசன்  கீழக் கொடுங்காலூர்  .

இறந்தவர் கொடை 
மரணத்திலும் உயிர்பெற்றது 
கண்கள் ! 

நூல் முழுவதும் கவிதைகள் உள்ளன .வாசகனை சிந்திக்க வைக்கின்றன . இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் 
 ந .சீனிவாசன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .தமிழ்த் தேனீ  முனைவர் இரா  .மோகன்  - முனைவர் நிர்மலா மோகன் இலக்கிய இணையர்  நல்லிதழ் விருது .அருவிக்கு - பொதிகை மின்னல் தமிழ்ப்பணி  வழங்கி சிறப்பித்துள்ளது .விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் . 

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது