செவ்வாய், 31 மே, 2016

பெங்களூருவில் இன்று மலர்ந்த மலர்கள் 1.6.2016. படங்கள் கவிஞர் இரா .இரவி !

பெங்களூருவில் இன்று மலர்ந்த மலர்கள் 1.6.2016. படங்கள் கவிஞர் இரா .இரவி !மின் அஞ்சல் வழி வந்த தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மின் அஞ்சல் வழி வந்த தகவல் ! கவிஞர் இரா .இரவி !
-- 

.வணக்கம்.

தமிழ்நாடெங்கும் உள்ள பல தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் உயரிய நோக்கோடு, கரூர் வள்ளுவர் கல்லூரியில் தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பாளர்களின் கூட்டம் 29.05 2016 ஞாயிறு அன்று நடைபேற்றது.
இதில் தமிழ்நாடு தமிழ்ச்சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும், திருக்குறளை கட்டாயப் பாடமாக்கவேண்டும் என்ற மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவை விரைந்து செயல்படுத்த் அரசை வலியுறுத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பல சான்றோர் பெருமக்களும் அறிஞர் பெருமக்களும் கலந்துகொண்டனர். தமிழை உயர்த்தும் உயர்ந்த நோக்கில்,இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் குறள் மலைச்சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
நன்றி. வணக்கம்.

அன்புடன்
பா.இரவிக்குமார்
நிறுவனர், குறள் மலைச் சங்கம்
சென்னை.
9380277177
9382677177
9543977077

மேலும் விபரங்களுக்கு
please search in google ' thirukkural klavettukal '.
thieukkural kalvettukal blogspot.com.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

தினமணி இணையம் தந்த தலைப்பு ! கவிதையின் டைரி! கவிஞர் இரா .இரவி !


தினமணி இணையம் தந்த தலைப்பு !

கவிதையின்  டைரி! கவிஞர் இரா .இரவி !

காதல் அரும்பியதும் கவிதை வந்தது 
கவிதை வந்ததும் காதலியின் பாராட்டு !

பாராட்டைக் கேட்டதும் கவிதைகள் கொட்டியது 
பாடல்கள் முழுவதும் காதலால் நிரம்பியது ! 

கவிதையில் காதல் இருக்கலாம் தவறில்லை 
கவிதை முழுவதும் காதலென்பது தவறென்றனர் !

சமுதாயத்தின் பக்கம் பார்வை திரும்பியது 
சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் பிறந்தது ! 

புதுக்கவிதையிலிருந்து ஹைக்கூவிற்குப்  பயணம் 
புதுப்பாதை என்பதால் வரவேற்பு அதிகம் !

சொந்தமாக கவிதை நூல்கள் வெளியீடு 
சொற்பமாக ஆயிரம் பேர் மட்டும் படிப்பதால் !

சிலலட்சம் பேர் படிக்க  வைக்க வழி சிந்திப்பு 
சில நாட்களில் கவிமலர் இணையம் உதயம் !

உலக அளவில்  கவிதைகள் சென்று அடைந்தன
உலகம் முழுவதும் நல்ல  நட்புகள் கிடைத்தன !

ஆயிரம் ஹைக்கூ  நூல் அழகாய் மலர்ந்தது 
அடுத்தபதிப்பும் வானதியில் விரைவாய் வந்தது !

கவிதை மட்டும்தான் வருமா ? கேள்வி வந்தது 
கவனம் மதிப்புரை எழுதுவதில் விழுந்தது !

புத்தகம் போற்றுதும்  மதிப்புரை பூத்தது   
புத்தகம் பார்த்ததும் மனம் பூரித்தது !

தினமணியின் கவிதைமணி கவனம் ஈர்த்தது 
தித்திக்கும் தலைப்பு வாராவாரம் தந்தது !

குடத்து விளக்காக இருந்த கவிஞர்களை 
குன்றாது விளக்காக ஒளிர்ந்திட வைத்தது !

கவிதைபாட மேடையின்றி வருந்துவோருக்கு   
கவிதையை இணையத்தின் மூலம் பரப்பியது !

வாராவாரம் கவிதைப் பசிப் போக்கியது !
வண்டமிழ் வளர்க்கும் தினமணிக்கு பாராட்டு !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

என் சித்தி சுலோச்சனா ரங்கராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்

மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள  தமிழ்நாடு விடுதியில்  வரவேற்பாளராக 1980 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து  31.5.2015 இன்று வரை மிகச் சிறப்பாக பணியாற்றி ,பணி நிறைவு பெற்றுள்ள என் சித்தி சுலோச்சனா ரங்கராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள் .பிரிவு பாராட்டு விழா படங்கள் .பாராட்டிய மேலாளர் திரு டேவிட் அவர்களுக்கு நன்றி
படங்கள் அனுப்பிய  மாமா திரு .செ.இராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.
திங்கள், 30 மே, 2016

நன்றி தினமணி இணையம்

நன்றி தினமணி இணையம்
முகப்பு > கவிதைமணி
காகிதக் கப்பல்: கவிஞர் இரா .இரவி
By dn
First Published : 28 May 2016 12:34 PM IST
பெரியோர்களுக்கு காகிதம்
சிறுவர்களுக்கு கப்பல்
காகிதக் கப்பல் !
மழைக்காகக் காத்திருந்து
கைகளால் செய்து விடுவது சுகம்
காகிதக் கப்பல் !
சுனாமி பயம் இல்லை
மாலுமி இல்லாத பயணம்
காகிதக் கப்பல் !
சாதாக்கப்பலும் உண்டு
கத்திக்கப்பலும் உண்டு
காகிதக் கப்பல் !
மழை இல்லாவிடினும்
தேங்கிய நீரிலும் விடுவதுண்டு
காகிதக் கப்பல் !
செய்து கொடுத்தும்
சிறுவன் முகத்தில் மலர்ச்சி
காகிதக் கப்பல் !
கூடவே பயணிக்கும்
குழந்தையின் மனசும்
காகிதக் கப்பல் !
செய்யத் தெரியாது என்றால்
சிரித்திடுவார்கள் சிறுவர்கள்
காகிதக் கப்பல் !
மழை விட்டபின்
தொடங்கும் பயணம்
காகிதக் கப்பல் !
நாளைய மாலுமியின்
இன்றைய முன்னோட்டம்
காகிதக் கப்பல் !
முக்கியமான காகிதத்தில் செய்து
அடிவாங்கிய அனுபமுண்டு
காகிதக் கப்பல் !

31.05.2016 இன்று பிறந்தநாள் காணும் முக நூல் தோழி திருமதி.தேவிரவி அவர்களுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் . கவிஞர் இரா .இரவி !

31.05.2016 இன்று  பிறந்தநாள் காணும் முக நூல் தோழி  திருமதி.தேவிரவி அவர்களுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் . கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

கர்னாடகா வாழ் தமிழ்க் குடும்பங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையா அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் பெங்களூருவில் நடந்தது .

கர்னாடகா வாழ் தமிழ்க் குடும்பங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையா அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் பெங்களூருவில் நடந்தது .திரு இராஜா ,திருமதி ரேவதி சுப்புலட்சுமி உள்ளிட்ட அணியினர் பேசினார்கள் .ரூபாய் 500 ,ரூபாய் 1000 நுழைவுக் கட்டணத்துடன் நடந்தது . படங்கள் கவிஞர் இரா .இரவி !


ஞாயிறு, 29 மே, 2016

பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றாகிய அல்சூர் ஏரி ! படங்கள் கவிஞர் இரா .இரவி

பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றாகிய அல்சூர் ஏரி ! படங்கள் கவிஞர் இரா .இரவி
பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றாகிய அல்சூர் ஏரி அருகே உள்ள பீரங்கிகள் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றாகிய அல்சூர் ஏரி அருகே உள்ள பீரங்கிகள் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !


பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றாகிய அல்சூர் ஏரி வாயில் அருகே விற்பனையாகும் கலைப் பொருட்கள் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றாகிய அல்சூர் ஏரி வாயில் அருகே விற்பனையாகும் கலைப் பொருட்கள்  ! படங்கள் கவிஞர் இரா .இரவி !பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த கவியரங்கில் "தமிழா தமிழான இரு" என்ற தலைப்பில் கவிஞர் இரா .இரவி கவிதை வாசித்தார்

பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில்  நடந்த கவியரங்கில்  "தமிழா தமிழான இரு" என்ற தலைப்பில் கவிஞர் இரா .இரவி கவிதை வாசித்தார்.நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் உள்ளிட்ட பல கவிஞர்கள் கவிதை பாடினார்கள் .
தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது