செவ்வாய், 23 நவம்பர், 2010

ஓநாய் சைவம் பேசுகிறது

ஓநாய் சைவம் பேசுகிறது
தமிழினத்தையே பூண்டோடு அழித்து விட்டு
நடந்தது நடந்ததாக இருக்கட்டும் என்கிறான்
நாட்டு மக்களைக் கொன்று குவித்து விட்டு
நாட்டை வளமாக்குவோம் என்கிறான்
தடை செய்யப் பட்ட விசக் குண்டுகளால்
தமிழினத்தை கரு அறுத்து விட்டு யோக்கியன் என்கிறான்
பன்னாட்டுப் படைகளுடன் தன்நாட்டு மக்களை
தரை மட்டம் ஆக்கிவிட்டு சைவம் என்கிறான்
பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என்றும்
பாராமல் கொன்றுவிட்டு உத்தமன் என்கிறான்
எதிரி நாடுகள் கூட போர் விதி கடைப் பிடிப்பர் தன் நாட்டு
மக்களையே போர் விதி மீறிக் கொன்றவன் நல்லவன் என்கிறான்
பஞ்சமாப் பாதகங்கள் அனைத்தும் புரிந்து விட்டு
பாவம் நான் என்று நடித்து ஏமாற்றுகிறான்
இரண்டாம் ஹிட்லரான இவன் இன்று
உலக அரங்கில் உத்தமப் புத்திரன் நான் என்கிறான்
சிரித்தே கழுத்தை அறுக்கும் நயவஞ்சகன்
சீனாவோடும் கூட்டு வைத்து வெகுளி நான் என்கிறான்
ஆலயம் பள்ளி மருத்துவமனை என்றும் பாராமல்
அனைத்தின் மீதும் குண்டு போட்டவன்அப்பாவி என்கிறான்
அடப் பாவி நீயாடா அப்பாவி
அகில உலகக் கொடூரன் நீயடா
மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது
மாற்றம் உனக்கும் உண்டு பொறுத்திரு

ஓநாய் சைவம் பேசுகிறது கவிஞர் இரா .இரவி

eventsimg
அன்னை தெரசா -கவிஞர் இரா.இரவி

அன்னை தெரசா -கவிஞர் இரா.இரவி


கல்கத்தா வீதிகளில் விடுதிக்காக

கைஏந்தி சென்றார் அன்னை

உமிழ்ந்தான் ஒரு வியாபாரி

உமிழ்ந்தது எனக்குப் போதும்

விடுதியில் உள்ள தொழு நோயாளிகளுக்கு

விரும்பியதைக் கொடு என்றார்

காலில் விழுந்து வணங்கினான்

கடையில் இருந்து உமிழ்ந்தவன்

“இன்னா செய்தாரை”திருக்குறள் வழி

இனிதே வாழ்ந்து காட்டிய அன்னை

நோபல் பரிசுக்கே நோபல்பரிசு தந்தவர்

நேயம் மிக்க தன்னலமற்ற தாய்

இறந்த பின்னும் வாழ்பவர்கள் சிலர்

சிலரிலும் சிகரமானவர் தெரசா

பெண் இனத்திற்கு பெருமை சேர்த்தவர்

பெண்ணின் மேன்மையை உணர்த்தியவர்

பிறருக்காக வாழ்ந்திட்ட மாதா

பண்பில் சிறந்திட்ட பிதா

அயல்நாட்டில் பிறந்திட்ட போதும்

அனைவரின் உள்ளத்திலும் வாழ்பவர்

மனித நேயம் கற்பித்த மனிதம்

மனிதருள் மாணிக்கமாக ஒளிர்ந்த புனிதம்

அன்பின் சின்னம் அன்னை தெரசா

பண்பின் சிகரம் அன்னை தெரசா

திங்கள், 22 நவம்பர், 2010

பெண்ணே அழாதே பெண்ணே

EMO (4).gif
பெண்ணே அழாதே பெண்ணே

அழப் பிறந்தவள் அல்ல நீ
ஆளப் பிறந்தவள்.நீ
பெண்ணாகப் பிறந்ததற்கு
கவலை கொள்ளாதே நீ
கர்வம் கொள் நீ
பெருமை கொள் நீ
அடிமை விலங்கை
அடித்து நொறுக்கு
அற்புதச் சிறகை
விரித்துப் பற.
கொட்டக்கொட்ட
குனிந்து போதும்
கொட்டும் கரம்
முறித்திடு நீ
இனி வெங்காயம்
நறுக்கும் போது கூட
அழவேண்டாம் .
இனி வெங்காயம்கூட
நறுக்க வேண்டாம் .
விழிகளில் கண்ணீர் நிறுத்து
இதழ்களில் புன்னகை ஏந்து


சிந்திக்க சில வரிகள்

large_131127.jpg

வெள்ளை வேட்டியைவாயில் வைத்து
சிகரெட் புகையை ஊதுங்கள் வேட்டியில்
கருப்பாக கறை படியும் .அந்தக் கறை
எத்தனை முறை துவைத்தாலும் ,
வெளுத்தாலும் போகாது .அது போலதான்
நுரையீரலிலும் கறை படிந்து நோய் பெருகும் .

சிகரெட்புகைத்து விட்டு படுத்தால்தான்
தூக்கம் வரும் என்பார் ஒரு நண்பர் ..
இரவுப் பணி புரியும் ஒரு நண்பர் .
சிகரெட் புகைத்தால்தான் தூக்கம்
வராமல் வேலை செய்ய முடியும் என்பார்.
மனம்தான் காரணம் ஒரே
சிகரெட்
ஒருவருக்கு தூக்கம்
ஒருவருக்கு விழிப்பு எப்படித் தரும் .?
சிந்தியுங்கள்
சிகரெட் விடுங்கள்

புதன், 17 நவம்பர், 2010

குருவி பறப்பதை கணினியிலாவது பாருங்கள் இரா .இரவி

fly (20).gif

குருவி பறப்பதை
கணினியிலாவது பாருங்கள்


சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
சேதி தெரியுமா ?பாடியது அக்காலம்


சிட்டுக்குருவி எங்காவது
பார்த்திர்களா ?கேட்பது இக்காலம்


குருவிக் கூட்டை களைத்தால்
பாவம் என்றார்கள் அன்று


பாவம் கூட கட்டிட
குருவிகள் இல்லை இன்று


அறிவியல் வளர்ச்சியால்
அற்புதப் பறவைகள் வீழ்ச்சி


செல்கள் பெருகப் பெருக
குருவிகள் அழிந்தது


புறாவிற்காக தன் தசை
தந்த மன்னன் சிபி அன்று

சமாதானப்புறாவையே
சமைத்துச் சாப்பிடும் சிபிகள் இன்றுதிங்கள், 15 நவம்பர், 2010

மலர்வது அழகு

c.gif
மொட்டு மலர்வது அழகு
மலர்ந்த பின்னோ அழகோ அழகு
ஒவ்வொரு மலரும்
ஒவ்வொரு அழகு
ஒரு மலரோடு
மற்ற மலரை ஒப்பிடாதீர்கள்
இரா .இரவி

ஞாயிறு, 14 நவம்பர், 2010

தமிழ் எங்கள் உயிருக்கு மேல் கவிஞர் இரா .இரவி

http://www.shtyle.fm/dynimg/otr/94/F0/40235156.jpg

தமிழ் எங்கள் உயிருக்கு மேல் கவிஞர் இரா .இரவி

தமிழுக்காக உயிர் நீத்த வரலாறு உண்டு
தமிழை உயிருக்கு மேலாக மதிப்பது நன்று

மற்றவர்களுக்கு உயிர்தான் மேல்
மறத் தமிழனுக்கோ தமிழ்தான் மேல்

தமிழருக்கு ஒரு தீங்கு என்றால் உடன்
தரணியில் முதல்க்குரல் தமிழன் குரலாக இருக்கட்டும்

தமிழைப் பழிப்பவர்களை நாங்கள்
தாயே தடுத்தாலும் விடமாட்டோம்

உலகின் முதல்மொழி நம் தமிழ் மொழி
உலகின் முதல் மனிதன் பேசியது தமிழ்மொழி

அனைத்து மொழிகளின் தாய் தமிழ்மொழி
ஆராய்ச்சி அறிஞர்களின் முடிவான முடிவு

இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ்மொழி
எண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழ்மொழி

உலகப் பொதுமறையை வழங்கியது தமிழ்மொழி
அவ்வையின் ஆத்திச்சூடியை அருளியது தமிழ்மொழி

பாரதியின் புதிய ஆத்திசூடியை தந்தது தமிழ்மொழி
பாவேந்தரின் குடும்பவிளக்கை ஏற்றிறயது தமிழ்மொழி

பாவலர்களை தரணிக்குத் தந்து மகிழ்ந்தது தமிழ்மொழி

தேவ மொழிக்கும் மூத்தது எம் தமிழ்மொழி
தேவநேயப் பாவாணர் கூற்று முற்றிலும் உண்மைதமிழின் மகுடமான திருக்குறளுக்கு
தேசியநூல் என்ற மகுடத்தை சூட்டியே தீருவோம்.

வெள்ளி, 5 நவம்பர், 2010

துட்டு கவிஞர் இரா .இரவி

துட்டு கவிஞர் இரா .இரவி

தூண்டில் புழுவாகத் துட்டு
வாக்காளன் என்ற மீனுக்கு
உறவுகளில் விரிசல்
காரணம் துட்டு
நல்லவன் தீயவன்
ஆகிறான் காரணம் துட்டு
காதலும் அழிந்து விடுகிறது
காரணம் துட்டு

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது