இடுகைகள்

July, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நல்ல மனிதர்களுக்கு மரணம் இல்லை உண்மை ! கவிஞர் இரா .இரவி

படம்
நல்ல மனிதர்களுக்கு மரணம் இல்லை உண்மை ! கவிஞர் இரா .இரவி

இறந்தால் ஊர் அழ வேண்டும் என்றாய் நீ
இறந்தாய் உலகமே அழுதது உனக்காக !

குடும்பத்தில் ஒருவர் இருந்து விட்டது போல்
குவலயமே கண்ணீர் வடித்தது உனக்காக !

எங்கு பாரத்தாலும் உந்தன் உருவப்  படங்கள்
எங்கு கேட்டாலும் உன்னைப் பற்றிய பேச்சு !

கைரேகையில் எதிர்காலம்  பார்த்து காலம் கழிக்காதே
கைகளற்றவர்களுக்கும் எதிர்காலம் உண்டு என்றாய் !

சோதிடம் பார்த்து சோர்ந்து போகாதே
சுறுசுறுப்பாய் வாழ்க என்று அறிவுறுத்தினாய் !

வறுமையில் வளர்ந்திட்ட போதும் என்றும்
வசதிகளுக்கு ஆசைப்படாத புத்தன் நீ !

தூக்குத் தண்டனையை என்றும் விரும்பியதில்லை
தூக்குத் தண்டனை நீக்கிடக் குரல் தந்தாய் நீ !

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்
என்று இலக்கணம் வகுத்துச் சென்றாய் !

தலைக்கனம் என்றுமே வந்ததில்லை உமக்கு
தலைமையில் இருந்தபோதும்  எளிமையில் நீ


மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்று
மனிதர்களை மதித்து நடந்து காட்டினாய் நீ !

மதங்களை விட மனிதமே பெரிது என்று
மதவாதிகளுக்கு புரிய வைத்தாய் நீ !

குடும்பத்தினரைக் கூட குடியரசுத்தலைவர் மாளிகையில்
கூட வைத்துக் கொள்ளாதவன் புனிதன்  நீ !

கர்மவீரர் காமராசர் போலவே…

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே விற்கும் கலை நயம் மிக்க முறுக்குகள் ! கவிஞர் இரா .இரவி !

படம்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே விற்கும் கலை நயம் மிக்க முறுக்குகள் ! கவிஞர் இரா .இரவி !


வாசகர் மடல் ! நன்றி தினமலர் நாளிதழ் !

படம்
வாசகர் மடல் !
நன்றி  தினமலர்  நாளிதழ் !


படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! நன்றி தினமலர் நாளிதழ் !

படம்
படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
நன்றி  தினமலர்  நாளிதழ் !


மாமனிதர் அப்துல் கலாம் ! ! கவிஞர் இரா .இரவி ! நன்றி மதுரை மணி மாலை நாளிதழ் !

படம்
மாமனிதர் அப்துல் கலாம் ! ! கவிஞர் இரா .இரவி !
நன்றி  மதுரை மணி   மாலை நாளிதழ் !


கவிச்சூரியன் மின் இதழ் படித்து மகிழுங்கள் ! கவிஞர் இரா .இரவி !

படம்

இனிய இறையன்பு புதுமையான கேள்வி -பதில் பகுதி !

படம்
இனிய இறையன்பு புதுமையான கேள்வி -பதில் பகுதி !  அறிவார்ந்த , ஆற்றுப்படுத்தும், நெறிப்படுத்தும் பதில்கள் படித்து மகிழுங்கள் . நன்றி புதிய தலைமுறை வார இதழ்.
அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவர்களின் நண்பர்கள் தின விழா அழைப்பிதழ் !

படம்
அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவர்களின் நண்பர்கள் தின விழா அழைப்பிதழ் !

இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் !

படம்
இணையங்களில்  இலக்கியம் படித்து மகிழுங்கள் !


சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சாதனை நாயகர் அப்துல் கலாம் அவர்களுக்கு ஒட்டப்பட்ட இரங்கல் சுவரொட்டிகள் ! அலைபேசி வழி எடுத்த படங்கள் . கவிஞர் இரா .இரவி .

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில்
சாதனை நாயகர் அப்துல் கலாம் அவர்களுக்கு
ஒட்டப்பட்ட இரங்கல் சுவரொட்டிகள் !
அலைபேசி வழி எடுத்த படங்கள் . கவிஞர் இரா .இரவி .

மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !

படம்
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !

படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர் !
பாரதமே கண்ணீர் வடிக்க சோகத்தில் ஆழ்த்தியவர் !

‘தமிழன் என்று சொல்லடா’ நாமக்கல்லார் வைர வரிகளுக்கு
தரணியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் !

பணத்தாசை துளியும் இல்லாத நேர்மையாளர் !
பணத்தாசைக்கு மயங்காத தூய மனதாளர் !

யாரையும் குறை சொல்லாத உதடுகள் பெற்றவர் !
யாரையும் நேசிக்கும் அன்பு உள்ளம் கொண்டவர் !

நதிகளை தேசியமயமாக்கிட குரல் கொடுத்தவர் !
நாளும் மாணவர்களிடம் தன்னம்பிக்கை விதைத்தவர் !

தீவில் பிறந்து தீபமாய் அறிவில் ஒளிர்ந்தவர் !
திருக்குறளை ஆழ்ந்து படித்து நின்றவர் !

மனிதநேயத்தின் மறு உருவமாக வாழ்ந்தவர் !
மனிதரில் புனிதராக சிறந்து வாழ்ந்தவர் !

அக்கினிச் சிறகுகள் விரித்து வானில் பறந்தவர் !
பணியாளர்களிடம் பண்போடு யாவரையும் நேசித்தவர் !

நேரம் தவறாமையை வாழ்வில் கடைபிடித்தவர் !
நேரத்தை என்றும் மதித்து நடந்தவர் !

குடியரசுத்தலைவர் பதவியில் முத்திரை பதித்தவர் !
குடியரசுத்தலைவர்களில் முன்மாதிரியாக இருந்தவர் !

அறிவியல் அறிந்த அறிஞராக வாழ்ந்தவர் !
அறிவில் சிறந்த சான்றோராக வாழ்ந்தவர…

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சாதனை நாயகர் அப்துல் கலாம் அவர்களுக்கு ஒட்டப்பட்ட இரங்கல் சுவரொட்டிகள் ! அலைபேசி வழி எடுத்த படங்கள் . கவிஞர் இரா .இரவி .

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில்
சாதனை நாயகர் அப்துல் கலாம் அவர்களுக்கு
ஒட்டப்பட்ட இரங்கல் சுவரொட்டிகள் !
அலைபேசி வழி எடுத்த படங்கள் . கவிஞர் இரா .இரவி .