வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

தேவகானம் . நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


தேவகானம் .

நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நேசனல் பதிப்பகம் , 2.வடக்கு உசுமான் சாலை .தியாகராயர் நகர் ,சென்னை  .17  விலை ரூபாய்  120


கவிக்கோ என்றாலே  பெயர் சொல்லாமலே அனைவருக்கும் விளங்கும் அப்துல் ரகுமான் என்று .கவிதை உலகில் , இலக்கிய உலகில் அனைவரும் அறிந்த ஆளுமை மிக்க கவிஞர் .சமரசங்களுக்கு இடமின்றி கொண்ட கொள்கையில் இன்று வரை உறுதியாக இருக்கும் கவிஞர் .அவரிடம் நீங்கள் ஏன் ? திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை .என்று கேட்டனர் .அதற்கு அவர் தந்த பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது ."அம்மி கொத்த சிற்பி எதற்கு ? " உண்மைதான் பல சிற்பிகள் சிற்பி என்பதை மறந்து சிலைகளே செதுக்குவதில்லை அம்மி மட்டுமே கொத்திக்  கொண்டு இருக்கின்றனர். .நாடறிந்த நல்ல கவிஞரின் நூல் இது .

 
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு இறை நம்பிக்கை உண்டு .ஆனால் கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கை அவருக்குப் பிடிக்க வில்லை .படைப்பாளியின் உள்ளக் குமுறலை கவிதையில் காண முடிகின்றது .அவருக்கு சாகித்ய அகதமி விருது கிடைத்தபோது மதுரையில் அவருக்கு தமிழ்த்தேனீ  இரா மோகன் அவர்கள் பாராட்டு விழா ஏற்பாடு செய்து இருந்தார்கள்.அந்த விழாவில் தான்  கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களை சந்தித்தேன் .அன்று முதல் தொலைபேசி வழி  அவர் அன்பு தொடர்கின்றது .தமிழ்த்தேனீ  இரா மோகன் அவர்களின் மணி விழா மலருக்கு கவிதை கேட்டதும் அனுப்பி வைத்தார்கள் .சிறந்த கவிஞர் என்பதையும் தாண்டி, இனிமையான மனிதர். கவிக்கோ என்ற செருக்கு என்றும் இல்லாதவர் . 
நூலில் உள்ள அவர் கவிதைகளில் பதச் சோறாக சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு .

உருவ மற்ற ஈசனுக்கு
உருவம் வைக்கும் பேதையே !
உருவம் ஈசற் குண்டேனில்
ஒன்னு தானே இருந்திடும்
உருவம் ஆயிரங்கள் ஏன் ?
உலகினில் படைப்புக்கே
உருவ முண்டு படை
த்தவற்கு
உருவம் இல்லை இல்லையே !


சித்தர்களின் பாடலான
நட்ட கல்லைத் தெய்வ மென்று
நாலு புட்பம் சாத்தியே
என்ற வரிகளை மேற்கோள் காட்டி 
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  அவர்கள் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் .நவீன சித்தராக நூலில் கவிதைகள் எழுதி உள்ளார் .எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோதும் ,அவரது கவி நயம் கண்டு வியந்து படித்தேன் .கவிதைகள் படி தேன் என்றால் மிகை அன்று .

பக்தர்கள் கடவுளிடம் எனக்கு நீ இவைகளைக் கொடு .பதிலுக்கு நான் இவைகளை உனக்குச் செய்கிறேன் என்று பேரம் பேசும் பிராத்தனையை சாடும் விட்டிஹமாக ஒரு கவிதை இதோ !

என்னை நான் கொடுக்கிறேன்
எனக்குனைக் கொடு எனப்
பன்னி உன்னைக் கேட்பது
பண்டமாற்று அல்லவோ
பின்னை ஆழ்ந்த பக்தியில்
பேரம் பேசல் நியாயமா ?
உன்னை நீகொ  டுப்பது 
உனது கடமை அல்லவோ ?


கடவுளிடம் வேண்டுகிறேன் என்ற பெயரில் கத்தி கூச்லிட்டு பஜனை செய்யும் முறையையும் வேண்டாம் என்று வலியுறுத்தும் கவிதை ஒன்று .

மவ்னமே ஆதியாம்
மவ்னமே அந்தமாம்
மவ்னமே இறைமொழி
மவ்னமே பரவசம்
மவ்னமே பெருந்தவம்
மவ்னமே பெருவரம்
மவ்னமே மகத்துவ
மகேசனின் முகவரி .


ஆன்மிகத்தில் எந்த மதமாக இருந்தாலும் ஆர்பாட்டம் ,ஆரவாரம் வேண்டாம் அமைதி போதும் என்கிறார் கவிக்கோ .கடவுளின் பெயரால் சண்டை சச்சரவுகள் வேண்டாம் என்கிறார் .கவிதையின் மூலம்.

முன்னர் நூல்கள் ஆயிரம்
முயன்று  கற்றும் பயனிலை
பின்னர் கோயில் ஆயிரம்
பூசை செய்தும்
பயனிலை
தன்னை வருத்தி நான்
தவங்கள் செய்தும்
பயனிலை
என்னை நான் இழந்தனன்
கிடைத்த
ன்என் ஈசனே !

நீட்டலும் மழித்தலும் வேண்டாம் என்ற திருவள்ளுவரின் திருக்குறளின் குரலை  வழி மொழியும் விதமாக எது ? உண்மையான பக்தி என்பதற்கு ,விளக்கம் சொல்லும் விதமாக கவிதைகள் உள்ளது .
நூல் முழுவதும் தத்துவ கருத்துக்கள் நிறைய உள்ளது .ஆன்மிக வாதிகள் அனைவரும் படித்து தெளிய வேண்டிய நூல் இது .


ஆன்மிகம் என்ற பெயரில் ஏமாற்றும் போலிகளின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் கவிதைகள் உள்ளது .பாராட்டுக்கள் .கடவுள் மனிதனை காப்பதை விட இன்று போலி மனிதர்களிடம் இருந்து கடவுளை காக்க வேண்டி உள்ளது என்று எள்ளல் சுவையுடன் கவிதை வடித்துள்ளார் .

மனிதன்  தன்னை  மீட்அம்
மகேசன் தோன்று  வான் எனப்
புனித நூல்கள் கூறிடும்
புனைக  தைகள் கேட்டன
ன்
மனிதன் கையில் சிக்கிய
மகேசன் தன்னை மீட்பதே
புனித மான ப
ணியெனப்
புகலு வேஎன் தோழரே ! 

உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம் .ஏற்றத்தாழ்வு வேண்டாம் .மத பேதம் வேண்டாம் என்று வலியுறுத்தும் கவிதை  .

முந்து வானம் காற்று நீ
மூண்ட  நீரும் பூமியும் உந்து மீன் பறப்பன
ஊர்வன நடப்பன

இந்து முஸ்லிம் கிறித்து யூதன் 
என்று ரைப்பதில்லையே
இந்த மக்கள் மட்டும்
ஏன் ?இந்து முஸ்லிம் என்கின்றார் .

எதனைக் கண்டான் மதங்களைப் படைத்தான் என்ற கவியரசு கண்ணதாசனின் வைர வரிகளை வழிமொழிந்து எழுதி உள்ளார் .

தூங்கு கின்ற மானுடர்
தூங்கிடா  உனக்கென
ங்குப் பள்ளி எழுச்சியாம்
இசையைப் பாடி நிற்கிறார்
ஏங்கிப் பாடும் இவர்களுக்கு
க்
கிதுவும் ஓர் உறக்கமே
ஓங்கும் அன்பி னாய் ! இவர்
உறக்கம் யாவும் நீக்குவாய் ! 

  நல்ல நாள் ,கெட்ட நாள் எதுவுமில்லை .நேரம் காலம் பார்க்க வேண்டியதில்லை என்று பகுத்தறிவு போதிக்கும் விதமாக ஒரு கவிதை .

நாள்களும் கோள்களும் 
நாய கன்கைப்
பந்துகள்
நாள்களும் கோள்களும் 
நம்மைப் போல அலைவன
நாள்களும் கோள்களும் 
நமை யலைப்ப தில்லையே 
நாள்களும் கோள்களும்
நல்ல நல்ல நல்லவே !

நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு இறை நம்பிக்கை இருந்தபோதும் மதங்களின் பெயரால் மோதல்கள் வேண்டாம் .வீண் சடங்குகள் வேண்டாம் ஆர்பாட்டம் வேண்டாம் என்று கவிதைகள் மூலம் உணர்த்தி மனித நேயம் கற்பித்துள்ளார் .பாராட்டுக்கள் .கவிக்கோ கவிக்கோ என்பதை கவிதைகளால் நிருபித்து உள்ளார் .   

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

இலங்கை நட்பு நாடாம் கவிஞர் இரா .இரவி

இலங்கை நட்பு நாடாம்                           கவிஞர் இரா .இரவி

இந்தியாவிற்கு இலங்கை நட்பு நாடாம்  சரி
இந்தியாவிற்கு தமிழ்நாட்டுத் தமிழர் பகைவர்களா ?

தினந்தோறும் தமிழக மீனவர்களைத் தாக்குகின்றான்
தமிழர்களைக்  கொல்கிறான் சிறைப் பிடிக்கிறான்

மீனவர்கள் நாள்தோறும் செத்துப் பிழைக்கின்றனர்
மனம் போன போக்கில் வன்முறை புரிகின்றான் ஈழத்தில் தமிழினத்தையே கூண்டோடு  அழித்தவன்
ஈனப்பிறவியான  சிங்களன் இவர்களுக்கு நண்பனாம்

சீனாவின் நண்பன் இந்தியாவிற்கும் நண்பனா ?
சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்று !

சீனாவோடு சேர்ந்து இந்தியாவையும் தாக்குவான்
சிங்களன் அன்று உணர்வாய் சிங்களம் குணம் !

உலகமகா ரவுடிக்கு ராணுவப் பயிற்சியாம் !
உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மடையர்கள் !

தமிழின விரோதி இந்தியாவிற்கு நண்பனாம் !
தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியர்கள்தானே ?

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி இன்புறும்
வீணர்கள் திருந்த வேண்டும் மறுத்தால் திருத்தப் படுவாய் !

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும்
இழி செயலை உடனே நிறுத்திடுக !எதையும் தாங்கும் இதயம் உண்டு தமிழருக்கு
இதனைத் தாங்கும் இதயம் இல்லை எங்களுக்கு !
கொடியவன் கொடூரன் கொலைகாரன் சிங்களனை
கூசாமல் சொல்கிறாய் நண்பன் என்று !


பாம்புக்குப் பால் வார்க்காதே ! என்று
பாரதப் பிரதமருக்கு எதனை முறை சொல்வது !

திருப்பி அனுப்புவதும் திரும்ப அனுமதிப்பதும்
தவறு செய்வதும் வாடிக்கையானது !


பேராயக் கட்சியின் முடிவுரையை எழுதுகிறார்கள்
பேராயக் கட்சியினரே எழுதிக் கொள்கிறார்கள் !


தமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும்
தானாகவே வீழ்வதற்கு வழி தேடி வருகின்றனர்
!

ஊழலின் மொத்த உருவமாக பேராயக்கட்சி
உலக மகா  உழல் கண்டு உலகம்  சிரிக்கின்றது
!

--

சனி, 25 ஆகஸ்ட், 2012

வயசு 18. திரைப்படம் விமர்சனம்

வயசு 18

இயக்கம்
திரு . R.பன்னீர் செல்வம்

திரைப்படம் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


மன நோயாளி கதை .ரேனுகுண்டா என்ற திரைபடத்தை இயக்கிய திரு . R.பன்னீர் செல்வம் அவர்களின் அடுத்த படைப்பு .பிறக்கும் போதே மன நோயாளியாக பிறப்பது மிகச் சிலர் .ஆனால் மன நோயாளியாக சமுதாயத்தால் ஆக்கப்படுவது பலர் .மன நோயுக்கு  மருந்து அன்புதான் .வன்முறை அல்ல என்று போதிக்கும் படம் .

மகன் மீது பாசம் பொழியும் நல்ல தந்தை .குட்டிக் கதைகள் ,நிலவு,நட்சத்திரம் , காடு என்று சொல்லி வளர்க்கும் சிறந்த தந்தை .வீட்டில் எபோதும் சண்டையிடும் அம்மா .மிகவும் பொறுமையான தந்தை .கல்லூரி நண்பனிடம்  தொடர்பு உள்ள அம்மாவின் நிலை கண்டு அதிர்ந்த அப்பா தூக்குப் போட்டு தற்கொலை  செய்து கொள்கிறார்  .மனம் பாதித்த சிறுவன் மன நோயாளி ஆகின்றான் .அவனிடம் அம்மா அன்பு காட்டாமல் அடித்து, சூடு வைத்து துன்புறு
த்துகின்றார்.   

கல்லூரி நண்பர் திருமணம் செய்யாமலே அம்மாவுடன் வந்து ஒரே  வீட்டில் தங்குகிறார் .மன நோய் முற்றுகின்றது .நாய் குரைப்பதை பார்த்து மன நோயாளி நாயை பார்த்து நாயைப் போலவே குரைத்து சண்டை போடவும் நாய் பயந்து ஓடி விடுகின்றது .நண்பன் மருத்துவனைக்கு அழைத்து செல்கிறான் .அங்குள்ள் மருத்துவர் ரோகினி மனித நேயத்துடன் செயல் படுகின்றார் .மருத்துவர் ரோகினி பாத்திரம் மிகச் சிறந்த பாத்திரம் .மனதில் நிற்கும் பாத்திரம்.மன நோயாளி பெயர் கார்த்திக்.அவன்  நண்பனிடம் கார்த்திக் அம்மாவை வந்து என்னை பார்க்க சொல்லுங்கள் என்று பெயர் முகவரி அட்டை கொடுத்து அனுப்புகின்றார் .அம்மாவோ கொடுத்த அட்டையை குப்பையில் வீசுகிறார் .மருத்துவர் ரோகினி வீட்டிற்கு அம்மாவை நேரில் பார்த்து மகனின் மன நோயின் தன்மை குறித்து எச்சரிக்க வந்த போதும் அவற்றை காது கொடுத்து கேட்காமல் மருத்துவரை அவமதித்து அனுப்புகின்றார் . நோய்  முற்றுகின்றது .பாம்பை பார்த்து பாம்பு போல மாறி உஷ் உஷ் என்கிறார் .கடிக்கிறார் .காளையை பார்த்து காளை போல முட்டி தள்ளுகிறார் .வண்டை பார்த்து வண்டு போல புரள்கின்றார் .மன நோயாளியாக வரும்   கதாநாயகன் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .தேசிய விருது கிடைப்பது உறுதி என்று அறுதி இட்டுச்  சொல்லலாம் .

மன நோயாளி என்பது தெரியாமலே வெளி ஊரில் இருந்து புதிதாக வந்த பெண் அன்பு செலுத்துகின்றார் .பத்து மணிக்கு இங்கு வா என்று அவள் சொன்னதும் அந்த இடத்திலேயே மறு நாள் பத்து மணி வரை காத்து இருக்கிறார் .பேருந்தில் அவளிடம் சிலுமிசம் செய்த ஆசாமியை துரத்தி சென்று அடிக்கிறார் .ஒரு தலையாகவே அவளை மனதிற்குள் காதல் செய்கிறார்..
மன நோயாளியின் நண்பனாக வரும் மன நோயாளி நண்பன் பாத்திரம் மிக நன்று .காதல் தோல்வி  அடைந்த மன நோயாளி அவர் அடிக்கடி காதல் வாழ்க ! என்று சொல்லிக் கொண்டே ,மன நோயாளி நண்பனின் காதலுக்கு உதவுகின்றார் .காதலியை கடத்து உதவுகிறார். மன நோயாளிகள் கார் ஓட்ட அனுமதி  இல்லை .உரிமம் வழங்குவது இல்லை .அவர் படம் முழுவதும் பலகாட்சிகளில் கார் ஓட்டுவது காவலர்கள் காரை மிஞ்சி ஓட்டுவது ,காவலர் கார்களை விபத்துக்கு உள்ளாக்குவது நம்பும் படியாக இல்லை . காட்டுக்கு அழைத்து செல்கிறார் .பல உதவிகள் செய்து மனதில் நிற்கிறார் .அவர் பேசும் வசனங்கள் மிக நுட்பம் .

மன நோயாளி பாத்திரத்தை சில விலங்குகளுக்கு இணையாக காட்டி இருபது மிகையாக உள்ளது . மன நோய் முற்றி  ம்மாவை கொலை செய்து விடுகிறார் .அம்மாவின் கல்லூரி நண்பனை தாக்குகின்றார் .பிறகு கொன்று விடுகின்றார் . காவல் ஆய்வாளர் பிடிக்க செல்கிறார் அவரையும் காவலர்  முன்னிலையில் கல்லை தூக்கி போட   முனையும் பொது காலை பிடித்து கெஞ்சவும் விட்டு விடுகிறார்.  இந்தக் காட்சியை பார்த்த காவலர் சக காவலர்களிடம் காவல் ஆய்வாளர் கெஞ்சியதை நடித்து காட்டுகிறார் .மற்றொரு முறையும் இது போன்று நடக்கின்றது ,நல்ல நகைச் சுவை காட்சிகள் .திரை அரங்கில் கை தட்டுகின்றனர் .காவல் ஆய்வாளரும் நன்றாக நடித்து உள்ளார் . 

மருத்துவர் ரோகினி பேசும் வசனங்கள் மிக நன்று .வயது மகன் வீட்டில் இருக்கும் பொது பெற்றோர் மிக ஒழுக்கமாக வாழ வேண்டும் ஒழுக்கம் தவறினால், குழந்தைகளின் வாழ்க்கை பாழாகும்  .ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ் பண்பாட்டின் படி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் .என்ற நல்ல செய்தி சொல்லும் படம் .மன நோயாளிகளிடம் அன்பு காட்டுங்கள் என்று மனித நேயம் உணர்த்தும் படம் .இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .படம் பார்க்கும் பொது நிஜ நிகழ்வை பார்ப்பது போன்ற உணர்வை தந்தது .இயக்குனரின் வெற்றி .பாடல்கள் யாவும் நன்று. கவிஞர்கள் நா .முத்துக்குமார் ,யுகபாரதி எழுதி உள்ளனர்  .திருநங்கைகள் பாடும் பாடலான ஆணும் இல்லை பெண்ணும் இல்லை பாடல்
திருநங்கைகளின் மன வலியை உணர்த்துகின்றது .வரலாற்று சிறப்பு மிக்க மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் எடுக்கப் பட்ட பாடலும் ,பாடல் படபிடிப்பும் மிக நன்று .கதா நாயகியும் நன்றாக நடித்து உள்ளார். மொத்தத்தில் மனித நேயமும் ,ஒழுக்கமும் கற்பிக்கும் படம் இது .பாராட்டுக்கள் .


--

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

பார்த்தால் சிணுங்கி !நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர். விமர்சனம் கவிஞர் இரா .இரவி

பார்த்தால் சிணுங்கி

நூல் ஆசிரியர்  கவிஞர் தபூ சங்கர்.   thabushankar@yahoo.com

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விலை ரூபாய் 70

விஜயா பதிப்பகம் 20.ராஜ வீதி ,கோவை .
1 .தொலைபேசி  2394614

கவிஞர் தபூ சங்கர் அவர்கள் காதல் கவிதைகளின் மூலம் காதலர்கள் இடையே பிரபலமாகி ,காதல் பரிசாக இவரது நூலே பரிசளித்து  வருகின்றனர் காதலர்கள்.அதனால்தான் இவரது நூல்கள் குறுகிய காலத்தில் அடுத்த பதிப்புகளும் வெளி வந்து கொண்டு இருக்கிறது . காதலர்கள் காதலுக்கு அடுத்த படியாக, நேசிப்பது தபூ சங்கர் கவிதைகள் என்றால் மிகை அன்று .அட்டைப்பட வடிவைப்பு ,கட்டமைப்பு, அச்சு என அனைத்தும் மிக நேர்த்தியாக உள்ளது .நூலை பார்த்ததும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் விதமாக உள்ளது. பதிப்பித்த விஜயா பதிப்பகதாருக்கு பாராட்டுக்கள் .நூலின் பெயரே சிந்திக்க வைக்கின்றது .தொட்டால் சிணுங்கி கேள்வி பட்டு இருக்கிறோம் ."பார்த்தால் சிணுங்கி "வித்தியாசமாக உள்ளது .காதலித்தவர்களுக்கு இதன் பொருள்  நன்கு விளங்கும் . திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் நா .முத்துக் குமார் அவர்களின் அணிந்துரை அழகுரையாக உள்ளது .காதலர் தின பரிசாக இந்த நூலை வழங்கலாம் என்று பரிந்துரை செய்து முடித்துள்ளார் . 

 மரங்கள் அசைய வில்லை  என்றால் காற்று வர வில்லை என்று நினைப்போம் .இது சாதாரண பார்வை .மரங்கள் அசைய வில்லை  என்றால் கவிஞர் தபூ சங்கரின் காதல் பார்வை என்னவெண்டு கவிதையில் பாருங்கள் .
நூலின்  முதல் கவிதையே காதல் உணவுடன் தொடங்குகின்றது .

உங்கள் வீதியில் மரங்கள்
அசைய வில்லை  என்றால்
அங்கே
எங்கோ ஒரு காதல்
புழுங்கிக் கொண்டிரு
க்கிறது   என்று அர்த்தம் .

காதலியை புகழ்வது காதலன் கடமைகளில் ஒன்று .மிக அதிகமாக புகழ்ந்தாலும் ஏற்றுக் கொள்வாள் காதலி .கவிஞர் தபூ சங்கர்  காதலியை புகழும் அழகு தனி அழகு .தனி நடை .

ஒரு வருட
உலக அழகிகளே
ஒதுங்கி நில்லுங்கள்
ஆயுள் கால
உலக அழகி
வருகிறாள் .

இன்றைய இளம் பெண்கள் இன்று அவ்வளவாக அணிவதே இல்லை .ஆனால்  கவிஞர் தபூ சங்கர் காதலி அணியும் வழக்கம் உள்ளதை பார்த்தால் வடித்த கவிதை இது .

கொலுசு
வளையல்
பூ
இதெல்லாம்
உன் அழகுபரப்புச்
செயலாளர்கள் .

கொள்கை 
பரப்புச் செயலாளர்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம் .அழகுபரப்புச் செயலாளர்கள் இப்போதுதான் கேள்விப்  படுகிறோம். வித்தியாசமான சிந்தனை .பாராட்டுக்கள் .
காதலி அமைதியானவள் ஆனால் அவளது அழகோ மிகவும் ஆர்ப்பாட்டமானது என்பதை எப்படி ? எழுதுகிறார் பாருங்கள் .

நீ ரொம்ப  ரொம்ப
அமைதியான
பெண்தான்
ஆனால்
உன் அழகுதான்
அடங்கப் பிடாரி .

 
"இமைக்காமல் பார்க்கும் போட்டியில் என்னை வென்றவள் அவள் "என்று நான் எழுதிய கவிதையை நினைவூட்டிய கவிதை ஒன்று .

கண்கள்
கூசாமல்
சூரியனைப் பார்ப்பதற்கு
க் கூ  
கண்ணாடி உதவுகிறது .
ஆனால்
உன்னைக்
கண்கள்
கூசாமல் பார்க்க
எதுவுமே
உதவுவதில்லை .

காதலி தந்த ஒன்றை மிக சாதரணமானதாக இருந்தாலும் அதை பத்திரப் படுத்துவது காதலன் கடமை .அந்த வகையில் ஒரு கவிதை. படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவை மலர் விக்கும் விதமாக ஒரு கவிதை .

பேருந்தில்
நீ எனக்காக
எடுத்துக் கொடுத்த
பயணச்சீட்டு
இன்னும்
பயணித்துக்
கொண்
டிருக்கிறது.

நூல் முழுவதும் காதலர்களுக்கு அவரவர் மலரும் நினைவுகளை மலர்விக்கும் கவிதைகள் ஏராளமாக உள்ளது.

இந்த உலகம்
எத்தனையோ
சர்வாதிகாரிகளைப்
பார்த்திருக்கிறது
ஆனால்
உன்னை மாதிரி ஒரு
சர்வ அழகுக்காரியை
இப்போதுதான்
பார்க்கிறது .

காதலியை 
சர்வாதிகாரி என்று சொல்ல வருகிறாரோ என்று எதிர்பார்த்து ஏமாந்தேன் .என்பதே உண்மை .சர்வ அழகுக்காரியை என்று எழுதி வியப்பில் ஆழ்த்தி விட்டார் நூல் ஆசிரியர்  கவிஞர் தபூ சங்கர் .

காதலன் கனவு காண்பது இயல்பு .அதனை உணர்த்தும் கவிதை .

தினமும்
நான் தூங்கிய
உடனேயே
என் கனவில்
வந்து  விடுகிறாயே
நான் எப்போது
தூங்குவேன் எண்டு
நீ எங்கிருந்து
கவனிக்கிறாய் .


காதலியிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு வேண்டுகோள் வைக்கிறார் பாருங்கள் .

நீ என்னை
காதலிக்கக்
கூ
வேண்டாம்
உன் தோழிகளில்
ஒருத்தியிடமாவது
அவன் என்னைக்
காதலிக்கிறா
ன் தெரியுமா
என்று
ஒரே ஒருமுறை சொல்
அது போதும் .

இப்படி நூல் முழுவதும் அட்டை முதல் அட்டை வரை காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதைகள் வடித்துள்ளார் .விமர்சனம் எழுத மேற்கோள் காட்ட எனக்குப் பிடித்த கவிதைகளை மடித்து அடையாள படுத்தினேன் .கடைசியில் எல்லாம் பக்கமும் மடித்து விட்டேன். பிறகு   மறு முறை படித்து மிகவும் சிரமப்பட்டு சிலவற்றை தவிர்த்து  எழுதி உள்ளேன் .

நூல் ஆசிரியர்  கவிஞர் தபூ சங்கர் நூலை படித்து முடித்தவுடன் நாமும் காதல் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்து விடும் .சில நாட்களில் நானும்  காதல் கவிதை எழுதி  இணையத்தில்பதிப்பித்து விடுவேன் . கவிஞர் தபூ சங்கர் காதலர்களை மட்டும் மகிழ்விக்க வில்லை .கவிஞர்களையும் மகிழ்வித்து இளமையாக இருக்க சிந்திக்க உதவுகின்றார் கவிதைகள் மூலம் . பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .

நூல் ஆசிரியர்  கவிஞர் தபூ சங்கர் அவர்களிடம் சிறிய வேண்டுகோள் .காதல் கவிதைகள் மட்டுமே எழுதி வருகிறீர்கள் . உங்களுடைய கவித் திறமையை சமுதாய விழிப்புணர்வு கவிதைகள்  எழுதவும் பயன் படுத்துங்கள்

 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


வியாழன், 23 ஆகஸ்ட், 2012

நூலகர் தின விழா

நூலகர் தின விழா

மதுரையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் I.A.S , I..P.S, I.R.S தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ( குடிமை ) நூலகப் பிரிவை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அவர்கள் தொடங்கி வைத்தார்கள் .நூலகர் தின விழாவும் நடைபெற்றது .

மதுரையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் I.A.S , I..P.S, I.R.S தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ( குடிமை ) நூலகப் பிரிவை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அவர்கள் தொடங்கி வைத்தார்கள் .நூலகர் தின விழாவும் நடைபெற்றது .

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

இதழ்கள் முகவரிகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி

இதழ்கள் முகவரிகள் !   தொகுப்பு  கவிஞர் இரா .இரவி  

தன்னம்பிக்கை
டாக்டர் .க .கலைச்செல்வி
79.திவான் பகதூர் சாலை ,
ஆர் .எஸ் .
புரம் ,
கோவை . 641002
செல் 9842232550
மின்னஞ்சல் thannambikkaimagazine@gmail.com
------------------------------
---------------------------------
பொதிகை மின்னல்
திரு .வசீகரன்
118.எல்டாம்ஸ் சாலை
சென்னை .18

செல் 9841436213
மின்னஞ்சல் pothigaiminnal@yahoo.co.in
-----------------------------------------------------------------
மின்னல் தமிழ்ப்பணி
118.எல்டாம்ஸ் சாலை
சென்னை .18

செல் 9841436213
மின்னஞ்சல் pothigaiminnal@yahoo.co.in
------------------------------------------------------------------
மின்மினி
கன்னிக்
கோவில்   ராஜா
30/8.கன்னிக்கோவில் முதல் தெரு
அபிராம புரம்
சென்னை .18

செல் 9841236965
மின்னஞ்சல் minminihaiku@gmail.com
---------------------------------------------
மனிதநேயம்
பேராசிரியர் எ.எம் .ஜேம்ஸ்   
16.மெய்ப்பன் 2 வது தெரு
ஞானஒளிவு புரம்
மதுரை .16
செல் 9790128232
மின்னஞ்சல் manithaneyajames@hotmail.com
-----------------------------------------------------------

ஏழைதாசன்
திரு .எஸ் .விஜயகுமார்
அடப்பன் வயல் 8
ஆம் வீதி
புதுக்கோட்டை
.
செல் 9790407068
--------------------------------------------------------------
புதிய உறவு
திரு மஞ்சக்கல் உபேந்திரன்
அனுபமா
5.மூன்றாவது குறுக்குத் தெரு 
எழில் நகர்
அரும்பார்த்தபுரம் B.O
வில்லியனூர் S.O
புதுச்சேரி .605110
செல் 9442251512
---------------------------------------------------------------------தமிழ்ப் பணி
திரு வா. மு. சே .திருவள்ளுவர்
பழைய எண் 12   புதிய  எண் 31சாய் நகர் இணைப்பு
சின்மயா நகர்
சென்னை .92
செல் 9841046898
மின்னஞ்சல்  thiruvalluar@yahoo.co.in
---------------------------------------------------------------------------
கவிதை உறவு
கலை மாமணி ஏர்வாடி எஸ் .ராதா கிருஷ்ணன்
420 E.மலர் காலனி
அண்ணா நகர்  மேற்கு
சென்னை
செல் 9444107879
மின்னஞ்சல் kavithaiuravu@yahoo.com
----------------------------------------------------------------------------------
புதுகைத் தென்றல்
திரு .புதுகை தருமராசன்
24.திருநகர்
முதன்மைச்  சாலை
வடபழனி
சென்னை
செல் 9841042949

---------------------------------------------------------------------
சிந்தனையாளன்
திரு .வே .ஆனைமுத்து
19.முருகப்பா தெரு (மாடி )
சேப்பாக்கம்
சென்னை
தொலைப்பேசி  044.28522862
---------------------------------------------------
நாளை விடியும்
திரு .பி .இ.ரெ.அரசெழிலன் ,
7.ஆ .தமிழ்ச்சுடர் இல்லம்
ஏறும்பீஷ்வரர்    நகர் ,
மலைக்கோயில்
திருவெறும்பூர்
திருச்சிராப்பள்ளி .620013

மின்னஞ்சல் naalaividiyum@gmail.com
----------------------------------------------
தமிழ்வாசல்
திரு .அடைக்க
ல்ராஜ் 
60 .L.I.G.காலனி
முதல் மாடி
மாநகராட்சி பூங்கா அருகில்
அண்ணா நகர்
மதுரை .20
செல் 960038871
மின்னஞ்சல் thamilvaasalmonthly@gmail.com
----------------------------------------------------------------------------
ஆனந்தஜோதி
கவிஞர் மீரா. சுந்தர்
2470.தெற்கு ராஜ வீதி
புதுக்கோட்டை  622001
மின்னஞ்சல் aanandajothi2010@gmail.com
-----------------------------------------------------------------------------
தேமதுரத்தமிழோசை
திரு .தமிழாலயன்
தமிழாலயம்
1-1/13 பெரியார் நகர்
மதுரை .18
செல் 9442626610
---------------------------------------------------------------------------------
கிழக்கு வாசல் உதயம்
உத்தமசோழன்
525.சத்தியா இல்லம்
மடப்புரம் - 614715
திருத்துறைப்
பூண்டி
செல் 9443343292
மின்னஞ்சல் kizhakkuvaasal@gmail.com
-----------------------------------------------------------------------------------
தேசிய வலிமை
திரு .வே .சுவாமிநாதன்
431.எம் .வரிசை வகை
எல்லீஸ் நகர்
மதுரை .10
செல் 999433550

--------------------------------------------------------------------------------------
கவி ஓவியா
கவிஞர் மயிலாடுதுறை இளைய பாரதி
96.யூனியன் கார்பைடு காலனி
3 வது தெரு ,
கொடுங்கையூர்
சென்னை .118
செல் 9840912010
மின்னஞ்சல் kaviooviya@gmail.com
-------------------------------------------------------------------------
மாணவன்
இரா .க .பிரகாசு
78.அழகிரி நகர்
திருவாரூர் .610001
செல் 9865972207

----------------------------------------------------------------------
தமிழர் பெருமை
ஞ்ற்பேழை  எண் 2985
டாடாபாத்
கோவை  . 641012
செல் 9940716376
--------------------------------------------------------------------
தொடரும்
கண்ணன் அச்சகம்
நாடார் பேட்டை
சிங்கம்புணரி .630502

 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

--

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !
   

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !
   

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம்    நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை  உரையாற்றினார்  . திரு .ஜோதி மகாலிங்கம் , திரு .ராமமூர்த்தி ,
திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன்
திரு .சரவணன்,  திரு.கார்த்திகேயன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம்,சிவ முருகன்  ஆகியோர் தன்னம்பிக்கை தொடர்பான கவிதை வாசித்தனர் .வருமான வரித்துறையின் ஆய்வாளர் திரு .சந்துரு என்ற சந்திரசேகர் அவர்கள் " மூன்றாவது கை தன்னம்பிக்கை " என்ற தலைப்பில் ,ராஜாஜி எழுதிய மகாபாரதத்தில் இருந்து அபிமன்யுவின் தன்னம்பிக்கை குறித்து விரிவாக விளக்கி , தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .திரு. தினேஷ் நன்றி கூறினார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர்   பலர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

தமிழை இழிவுபடுத்தி எழுதிய ஆர் .நாகசாமிக்கு தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களின் மறுப்புரையும் விளக்கமும் . தொகுப்பு கவிஞர் இரா .இரவி

தமிழை இழிவுபடுத்தி எழுதிய ஆர் .நாகசாமிக்கு தமிழறிஞர்  தமிழண்ணல் அவர்களின் மறுப்புரையும்  விளக்கமும் .

தொகுப்பு   கவிஞர் இரா .இரவி 

விழா ஏற்பாடு திரு பி .வரதராசன் .புரட்சிக் கவிஞர் மன்றம். மதுரை


 " MIRRAR OF TAMIL AND SANSKRIT " என்ற நூலில் ஆர் .நாகசாமி நஞ்சை கக்கி உள்ளார் .

அவர் எழுதிய நூலுக்கு மறுப்பு எழுதி வருகிறேன் விரைவில் ஆங்கிலத்தில்  வெளிவரும். இணையங்களிலும் இடம் பெறும் .

உலகிற்கே உழவை கற்பித்த  தமிழருக்கு உழவு தெரியாது .வங்காள தேசத்தவர்தான் உழவு கற்றுக் கொடுத்தார்கள் என்று எழுதி உள்ளார்  .

திரு .வி .க . சொல்வார்கள்  "குப்பையை கிளறினால் தும்பும்  தூசியும் கிளம்பும் .கண்ணை கெடுத்து விடும்  ."அது போல அவர் எழுதி உள்ள நூல் முழுவதும் குப்பை .ஆர் .நாகசாமிக்கு தமிழ் புலமையும் இல்லை சமஸ்கிருத புலமை இல்லை என்பதை நிருபிக்கும் விதமாக இந்த நூல் உள்ளது .
அவ
ருக்கு  மறுப்பு எழுத  இந்தக்  குப்பையை படிக்கின்றேன் .

தொல்காப்பியம் இலக்கண நூல் எனபது உலகம் அறிந்த உண்மை .ஆனால் ஆர் .நாகசாமி தொல்காப்பியம் இலக்கண நூல் அல்ல என்கிறார் .நடன சாஸ்திர நூல் என்கிறார் .சிலப்பதிகாரத்தை பொய்யாக புனைந்த நூல் என்கிறார் .அவரே எட்டாவது இயலில் சிலப்பதிகாரம் கற்பனை என்று சொல்லி விட்டு பத்தொன்பதாவது இயலில் வரலாற்றுச் சான்றை குறிப்பிட்டுள்ளார் .அவர் கருத்தில் அவரே முரண் பட்டு விட்டு .நூலில் சான்றுகளுடன் யாரும் மறுக்க தயாரா ? என்று தமிழர்களைப்  பார்த்து  சவால் விட்டுள்ளார் .

  தமிழ் மொழி ஒரு வட்டார மொழி சமஸ்கிருதத்தால் செம்மொழியானது என்று பச்சைப் பொய் எழுதி உள்ளார் ." தமிழ் மொழி பிற மொழிகளில் இருந்து மிக விரைவாக கடன் பெற்று ,பெற்ற கடனை தன்னுள் கரைத்து செம்மொழி தகுதி பெற்றது ".என்கிறார் .ஆர் .நாகசாமி சமஸ்கிருதமும் பரத முனிவரின் நடன சாஸ்திர நூல் மட்டுமே படித்துள்ளார் .வேறு இலக்கியங்கள் படிக்க வில்லை . தொல்காப்பியமும் சரியாக படிக்காமல் நுனிப் புள் மேய்ந்துள்ளார்.தொல்காப்பியத்தில்100 கொள்கைகள் உண்டு . அகம் புறம் என்பதே வடசொல் என்கிறார் .இவ்வளவு மோசமாக யாருமே எழுத மாட்டார்கள் .இப்படி எழுதி விட்டு முதன் முறையாக நானே எழுதி உள்ளேன் என்று மார் தட்டி உள்ளார் .முழு முட்டாள்தனமாக எழுதி விட்டு எல்லோரையும் முட்டாள் ஆக்கப் பார்க்கிறார். 

சேரன் செங்குட்டுவன் வரலாறு உலகம் அறிந்த உண்மை .கற்பனை என்கிறர் .தமிழ் இலக்கியத்தை தமிழ் பண்பாட்டை ஒழுக்கத்தை நெறியை கொச்சைப் படுத்தி உள்ளார் .எல்லாமே கற்பனை என்கிறார் .புனையப்பட்டது என்கிறார் .

இலங்கை  கஜ மன்னன் கண்ணகி வரலாறு அறிந்து விட்டு அவளுக்கு இலங்கையில் கோயில் கட்டினான் என்ற வரலாறு உள்ளது .

வட மொழிக்கு செம்மொழி தகுதி கிடைக்க
க் காரணம் நம் தமிழ் மொழி.இந்த உண்மையை மறைத்து தமிழுக்கு செம்மொழி தகுதிக்குக் காரணம் வட மொழி என்று கூசாமல் போய் எழுதி உள்ளார் .
    
உலகம் என்ற தமிழ் சொல்லைத்தான் கடன் பெற்று வட மொழியில் லோகம் என்றார்கள் .இந்தியில் லோக் என்று ஆனது .இப்படி பல சொற்களை உதாரணம் சொல்ல முடியும் .4 ஆம்  நூற்றாண்டு  காலத்தில் சமஸ்கிருதத்தில் அணி நலன்கள் இல்லை .7ஆம்  நூற்றாண்டில் தான் அணி நலன்கள் சமஸ்கிருதத்தில் வந்தது .

உவமா ,தீவகம், ரூபகம் இந்த அணி நலன்கள் .இவை சமஸ்கிருதத்தில் தமிழுக்கு வந்தது என்கிறார் .

உவமை என்ற தமிழ்ச் சொல்லை திருடி
சமஸ்கிருதத்தில் உவமா என்றனர் .
தீ என்பது தமிழ்
ச் சொல் அதைத் திருடி சமஸ்கிருதத்தில் தீவகம் என்றனர் .
ரூபம்
என்பது தமிழ்ச் சொல் அதைத் திருடி சமஸ்கிருதத்தில் ரூபகம் என்றனர் .

இயைபு  தான்
யமகம் என்று சொல்லாமல் ,யமகம் என்பது இயைபு ஆனது என்கிறார் .தமிழர்கள் இனியும் துங்காமல் விழித்து எழ வேண்டும் .உலகின் முதல் மொழியான தமிழ் மொழியை  இழிவு படுத்தி எழுதி உள்ள ஆர் .நாகசாமி போன்ற்வர்களுக்கு சான்றுகளுடன் தக்க பதில் தர வேண்டும் .பரப்புரை செய்ய வேண்டும் . --

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ   கவிஞர் இரா .இரவி

சூரியனால் எடுத்ததை
சுத்தமாக்கி பொழிந்தது
வானம் !

எங்கு விழுவோம்
என்பது தெரியாது
மழைத்துளி !

நினைவூட்டியது
சூரியனை
சூரியகாந்தி !

கரிசல் காட்டில்
வெண்மை மலர்ச்சி
பருத்திப்பூ !

ரசிக்க
சுவாசிக்க 
மரம் !

மொழிக்கு முந்தியது
ஓசை
இசை !

இசைகளின்
தாய்
தமிழிசை !

மெய்பிக்கப்பட்ட உண்மை
சேய்கள் மற்ற மொழிகள் 
மொழிகளின் தாய் தமிழ் !

இலக்கண இலக்கியங்களின்
இனிய சுரங்கம்
தமிழ் !


லட்சங்களைத்  தாண்டும்
சொற்களின் மொத்தம்
தமிழ் !


தமிழருக்குப் புரியவில்லை
அன்னியருக்குப் புரிந்தது
முதல் மொழி தமிழ் !

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

அழகு எல்லாம் அழகு அன்று ! கவிஞர் இரா .இரவி .

அழகு எல்லாம் அழகு அன்று ! கவிஞர் இரா .இரவி .

அழகு எல்லாம் அழகு அன்று
அழகற்றது எல்லாம் அழகற்றது அன்று !

அழகு அழகற்றது என்பது எல்லாம்
அனைவரும் கற்பித்த கற்பிதங்களே !

அழகை ஆராய்ந்து நோக்கினால் 
அழகில் உள்ள குறை தெரியும் !

அழகற்றதை ஆராய்ந்து நோக்கினால் 
அழகற்றதில் உள்ள அழகு தெரியும் !

வெள்ளைதான் அழகு என்று அன்றே
வெள்ளை அறிக்கை வாசித்ததின் விளைவு !

கருப்பு  அழகற்றது என்று அன்றே
கருப்பசாமியும் சொன்னதன் விளைவு !

அவனுக்கு அழகானது எனக்கு அழகற்றது
எனக்கு அழகானது அவனக்கு அழகற்றது !
அழகினால் ஆபத்தும் உண்டு
அழகற்றதால் ஆபத்து இல்லை !

கிடைக்காத அழகிற்கு ஏங்காதே
கிடைத்ததில் அழகை காண் ! 


அழகு ஆளுக்கு ஆள் வேறுபடும்
அழகு என்றும் நிரந்தரம் அன்று !

அழகு என்பது நிறத்தில் இல்லை
அழகு என்பது குணத்தில் உள்ளது 
 

மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி

மகாகவி பாரதி !     கவிஞர் இரா .இரவி 

எழுதியபடி வாழ்ந்தவன்
வாழ்ந்தபடி எழுதியவன்
மகாகவி பாரதி !

புதுமைக்கும்
மரபுக்கும்
பாலம் அமைத்தவன்
மகாகவி பாரதி !

விடுதலை விதையை
விருட்சமாக வளர்த்தவன்
மகாகவி பாரதி !

மற்றவரை மதித்தவன்
சுயமரியாதை மிக்கவன்
மகாகவி பாரதி !

வறுமையிலும் செம்மை
ஏழ்மையிலும் நேர்மை
மகாகவி பாரதி !

பா   ரதம்  செலுத்திய
பாக்களின் சாரதி
மகாகவி பாரதி !

பெண் விடுதலைக்கு
போர்முரசு கொட்டியவன்
மகாகவி பாரதி !
வாழ்வில் ஆசைப்பட்டவன்
பேராசைப்படாதவன்
மகாகவி பாரதி !

மூடப் பழக்கங்களுக்கு
மூடு விழா நடத்தியவன்
மகாகவி பாரதி ! 

பகுத்தறிவைப் பயன்படுத்தி
பாடல்கள் புனைந்தவன்
மகாகவி பாரதி !

அழியாத பாடல்கள்
அகிலத்திற்கு வழங்கியவன்
மகாகவி பாரதி !

வெள்ளையர்களை 
விரட்டிய
காரணிகளில்  ஒன்றானவன்
மகாகவி பாரதி !

வாழ்ந்த காலம் முப்பத்தொன்பது
பாடல்களின் காலம் பல
நூற்றாண்டு 
மகாகவி பாரதி !  

மொழிகள் பல பயின்றவன்
தமிழே சிறப்பு அறிவித்தவன்
மகாகவி பாரதி !


 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி

வேண்டும் விடுதலை !  வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி

வேண்டும் விடுதலை !  வேண்டும் விடுதலை !
வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு 
விடுதலை !

பன்னாட்டு ராணுவத்தால் படை தொடுத்தவனோடு
பகை மறந்து வாழ்வது இனி சாத்தியமில்லை !  

நாட்டு மக்களையே காட்டுமிராண்டித்தனமாக அழித்த 
நயவஞ்சகனோடு இணக்கம்
இனி சாத்தியமில்லை !

மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற கொடியவனை
மகாத்துமா  இருந்தால்
கூட மன்னிக்க மாட்டார்  !

கொன்றது போக எஞ்சியோரை சிறைப்பிடித்து
முள்வேலியில்  இட்டவனோடு வாழ்வது சாத்தியமில்லை ! 

ஜாலியன் வாலாபாக் படுகொலையை  விட கொடியது
சிங்களப்படை ஈழத்தில் நடத்திய  படுகொலைகள் !

நாட்டு மக்களின் மீது குண்டு  மழை  பொழிந்தவனை 
நாட்டின் அதிபராக மதிக்க மனம் வருமா ?

வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களையும்
வஞ்சகமாகக் சுட்டவனை மன்னிக்க  முடியுமா ?

மூப்பென்றும் பிஞ்சென்றும் பெண்னென்றும் பாராமல் 
மூர்க்கமாக அழித்தவனை மதிக்க முடியுமா ? 

தமிழ் இனத்தையே அழித்தது இலங்கைப் படை
தன் மக்களையே ஒழித்தது இலங்கை அரசுப்படை !
     
கொலை பாதகம் புரிந்த கொடியவர்களுடன்
கூடிவாழுங்கள் என்று போதிக்கும் மூடர்கள் !

இனவெறி பிடித்த சிங்களப்படை  மிருகங்களோடு
இணைந்து  வாழ்வது இனி இயலவே இயலாது !


இறையாண்மை என்ற பூச்சாண்டி காட்டி
இலங்கை இரண்டாகாது  என்கின்றனர் !

அய் .நா. மன்றமே மவுனம் போதும் !
அநியாயம் புரிந்தவனுக்கு தண்டனை கொடு !

தெற்கு சூடான் உதயமானது தனி நாடாக !
தமிழ் ஈழமும் உதயமாகட்டும் 
தனி நாடாக !

ஈழக்கொடி பறக்க வேண்டும் அய் .நா. மன்றத்தில்
ஈழத்தூதுவர் அலுவலகம் திறக்க வேண்டும் இந்தியாவில்  !
 

இலங்கையை உடன் இரண்டாக்கு ஈழத் தமிழர்களை ஒன்றாக்கு !
இனியும் சிங்களரோடு
ஒன்றாக வாழ்வது சாத்தியமில்லை !
 

சிங்களரும் தமிழரும் இனி இணைந்து வாழவே  முடியாது !
சிந்தித்துப் பார்த்து பிரித்து வைப்பதே இருவருக்கும் நன்மை

ஒன்றுபட்ட இலங்கை என்று சொல்லு
வது வெட்டிப்பேச்சு
ஒருபோதும் இனி ஒத்துவராது உணருங்கள் !

ஈழத்தில் குடி புகுந்த சிங்களரை வெளியேற்றுங்கள்
ஈழத்தில் வாழ்ந்த தமிழர்களை குடி அமர்த்துங்கள் !


இரண்டுபட்ட இலங்கை என்று ஆக்குவதே
இரண்டு இனத்திற்கும் பாதுகாப்பு அறிந்திடுங்கள் !


ஈழம் ஈழத் தமிழருக்கு உடன் கிடைத்தாக வேண்டும்
ஈழத்தில் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும் !

உலகத் தமிழர்களே உரக்கக் குரல் கொடுங்கள்
உதயமாகட்டும் ஈழத்தில் தமிழரின் தனி நாடு !


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

புதன், 8 ஆகஸ்ட், 2012

மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் ! நூல் ஆசிரியர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் !

நூல் ஆசிரியர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின்.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

குமரன் பதிப்பகம் , 19.கண்ணதாசன் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை.17.   விலை ரூபாய்  60 .
  

தன்னம்பிக்கை நூல்கள் என்றதும் நம் நினைவிற்கு உடன் வருவது எழுத்தாளர் மெர்வின்.பெரிய மீசைக்காரர் .குழந்தை உள்ளத்திற்கு சொந்தக்காரர் .இவரது நூல்கள் பல படித்து தன்னம்பிக்கை பெற்றவன் நான் .சமீபத்தில் இந்த நூலை அவரே எனக்கு அனுப்பி இருந்தார் .மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் ! என்ற ந்த நூல் மிகச் சிறப்பாக உள்ளது .நாம் அறிந்த மேதைகள் பற்றி நாம் அறியாத பல தகவல்கள் நூலில் உள்ளது .எழுத்தாளர் மெர்வின் அவர்கள் பல மேதைகளின் வாழ்க்கை வரலாற்று நூல்களை படித்து ,சுவைத்து ,அறிந்து ,ஆராய்ந்து  பழச்சாறாக வழங்கி உள்ளார். பாராட்டுக்கள். 

காந்தியடிகள்  அவர்களின் அகிம்சை குணம் வந்தது எப்படி என்ற கேள்விக்கு அவரே அளித்த பதில் நூலில் உள்ளது .
 
"நான் பள்ளியில் படித்தபொழுது ஒரு குஜராத்திப் பாடல் என் உள்ளத்தில் பதிந்தது .ஒருவன் உனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தால் அதற்குப் பதிலாக நீ அவனுக்கு தண்ணீர் கொடுக்கிறாய் .இதில் ஒன்றும் இல்லை .தீமைக்கு மாறாக நன்மை செய்வதில் தான் அழகு உண்டு .என்னும் கருத்துள்ள வாக்கியம் இது. பிறகு
யேசுவின் மலைப் பிரசங்கம் என்னை ஆட்கொண்டது ."

காந்தியடிகள் தொட
ங்கி வாலஸ் வரை பல மேதைகளின் வெற்றி ரகசியங்கள் நூலில் உள்ளது .
"மன வலிமையே பலம்" என்று சொன்ன விவேகானந்தர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு !

விவேகானந்தர்  வீட்டு வாசலில் நின்ற  போது கந்தலான துணி அணிந்து வந்த ஒரு துறவி "நீ உடுத்தியிருக்கும் துணிகளை எனக்குத் தருவாயா ? என்று கேட்டதும் உடன் தன்னுடைய ஆடைகளை கழற்றித்  துறவியிடம் தந்து விட்டார் .இந்த அன்பு உள்ளம் தான் அவரை பிற்காலத்தில் அன்பு உருவாக் காட்சி அளிக்க காரணமாக இருந்தது .

இப்படி சுவையான புதிய தகவல்கள் நூலில் உள்ளது .நம்மை நாம் செம்மைப் படுத்திக் கொள்ள வாழ்வியல் நெறி போதிக்கும் அற்புத நூல் இது .
எழுத்தாளர் மெர்வின் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
எழுத்தாளர் மெர்வின் அவர்கள் பல வருடங்களுக்கு முன்  மதுரை வந்து இருந்த போது இனது கவிதை நூல்களை படித்து விட்டு  பாராட்டி விட்டு .எதிர் மறை கருத்து  இருந்த ஒரு சில கவிதைகளைச் சுட்டி விட்டு , இனி வரும்காலங்களில் எதிர்மறை சிந்தனை தவிர்த்து எழுதுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள் .அவர் அன்று சொன்ன ஆலோசனையை இன்று வரை கடைபிடித்து வருகிறேன் .இந்த நூலிலும் ,அவரது எந்த நூலிலும் எதிர்மறை கருத்துக்களை காண முடியாது .

வாழ்க்கையில் யார் ? யார் ? என்னென்ன எதிர்மறை வார்த்தைகளை சொன்னார்களோ அதன் படியே தான் அவர்களுக்கு நடந்திருக்கிறது .
யாரவது சுடுவார்கள் என்றார் காந்தியடிகள். அவர் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. .எனவே யாரும்   எதிர்மறை சொற்கள் பயன் படுத்தாமல் இருந்தால் நன்மை உண்டு .

ஆடம்பரமாக ஆடை அணிந்து பணத்தை விரையம் செய்பவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக உள்ள ஒரு நிகழ்வு .

அலெக்சாண்டர் எப்பொழுதும் தமது மிகக் கீழான அலுவலர் போலவே எளிமையான உடைகளியே அணிந்து கொள்வார் .என்ற தகவல் நூலில் உள்ளது .


காதல் அன்றும் ,இன்றும் ,என்றும் சுகமானதுதான் .நெப்போலியன் காதலியின் கடிதத்தை சட்டைப் பையிலேயே வைத்து இருப்பாராம் .அவர் காதலிக்கு  எழுதிய கடிதத்தில்  , "  எனக்கு சோர்வு ஏற்படும்போது காதலியின் கடிதத்தை எடுத்து படித்தவுடன் சோர்வு பறந்துவிடும் ,புத்துணர்ச்சி உடலெல்லாம் பரவும் ,அப்புறம் பசியாவது தாகமாவது .துன்பம் என் நண்பன் .அதை நான் வெறுக்க மாட்டேன் ." இவ்வாறு எழுதி உள்ளார் நெப்போலியன் .

முதுமை பருவத்தில் திருமணம்  செய்து கொண்ட ஒரு நீதிபதி சொல்கிறார் ."இத்தகைய மனைவி கிடைக்க இவ்வளவு காலம் காத்திருந்தது நல்லது என்று மகிழலாம் .அல்லது அவளது பண்புகள் எனக்குப் பிடிக்காதவைகளாக இருந்தால் ,இன்னும்  கொஞ்ச காலம்தானே இவளுடன் வாழ்க்கை நடத்தப் போகிறோம் என்று மன அமைதிப் பட்டுக் கொள்ளலாம் ." துன்பத்திற்கு துவளாத மன பக்குவம் போதிக்கும்  கருத்துக்கள் உள்ளது .

ஆண்ட்ரு ஜாக்சனுக்கு திருமணதிற்கு முன் எழுத படிக்க தெரியாது .அவரது மனைவி அவருக்கு  எழுத படிக்க கற்றுக் கொடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கும் துணை நின்றார் .சர்ச்சில் அதிர்ச்சியான நிகழ்சிகள் நடக்கும் போது தன் மனைவியிடம் சென்று அறிவுரை கேட்டு புதுத் தெம்புடன் தன் பணியைத்  தொடர்வார் .இப்படி பெண்மையின் மேன்மை உணர்த்தும் தகவல்கள் உள்ளது .

பாபர் 26 வயதில் பகைவர்களால் சூழப் பட்டிருந்தார் .அவரது அரியணை மயிரிழையில் சலாடிக்  கொண்டிந்தது .அப்பொழுது தன் நிலையை உணர்த்தார் .இனிமேல் மதுக் கோப்பையைத் தீண்டுவதில்லை என்று உறுதி மேற்கொண்டார் .எடுத்த உறுதியில் இறுதி வரை உறுதியாக இருந்தார் .    இப்படி மதுவிலக்கு பற்றிய தகவலும் உள்ளது .

ராக்பெல்லர் சொன்ன கருத்து ஒன்று .இதோ !
"உழைப்பை நிறுத்தி விட்டால் உடலும் மனமும் சீர் கேட்டு விடும் ."எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய வைர வரிகள் இது .

காந்தியடிகள் பற்றி நிறைய  தகவல் உள்ளது .நேரு அவர் தந்தைக்கு எழுதிய கடிதம் உள்ளது .மர்மக்கதை மன்னர் வாலஸ் தமது கற்பனை தடைபடாமல் இருக்க தேநீர் அருந்திக் கொண்டே இருப்பார் .

ஒரு சில தகவல்கள் தவிர மற்ற எல்லா தகவல்களும் புதியவை .புத்துணர்வு தருபவை .மகாகவி பாரதியார் ,அறிஞர் பெர்னாட்ஷா  ,ரூஷ்வெல்ட் உள்ளிட்ட பல மேதைகளின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் உள்ளது .இந்த நூலை படித்து முடித்தவுடன் பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை  நாமும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் தரும் அற்புத நூல் .நூல் ஆசிரியர் எழுத்தாளர் மெர்வின்அவர்களுக்கு பாராட்டுக்கள் .சிறந்த நூலை சிறப்பாக பதிப்பித்த குமரன் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் 

--


--

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

நினைவாற்றல் மேம்பட வழி ! நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நினைவாற்றல் மேம்பட வழி !

நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வெளியீடு ; தன்னம்பிக்கை ,79. திவான் பகதூர் சாலை ,ஆர்.எஸ் .புரம் ,கோவை.641002. விலை ரூபாய் 20 . info@thannambikkai.net

நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் அவர்கள் பன்முக ஆற்றலாளர் .அவருடைய  நூல்கள் பல படித்து உள்ளேன் .மதுரையில் அவர் உரை கேட்டு இருக்கிறேன் .பழகுவதற்கு இனிமையானவர் .இவர் கோபப்பட்டு யாருமே பார்த்து இருக்க முடியாது .
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகப் பேராசிரியர் ,நாடறிந்த அறிவியல் தமிழ் எழுத்தாளர் ,கவிஞர் ,ஆற்றல் மிக்க பேச்சாளர் ,தொண்டறம் புரியும் கால்நடை மருத்துவர் .அவர் எழுதிய   நினைவாற்றல் மேம்பட வழி ! அய்ந்து பதிப்புகளைக்  கடந்து வந்து வந்து விட்டது .தன்னம்பிக்கை பதிப்பாக வருகின்றது .தன்னம்பிக்கை மாத இதழின் வாசகர் நான் .மதுரை தன்னம்பிக்கை வாசகர் வடத்தின் செயலராக இருந்து மாதம்தோறும் பயிலரங்கம் நடத்தி வருகின்றோம் .தன்னம்பிக்கை நூலில் விலை என்பதற்குப்  பதிலாக  மூலதனம் என்று இருக்கும் .இந்த நூலும் மூலதனம்தான் .மிகச் சிறந்த நூல் இது .இந்த நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது .படித்து முடித்தவுடன் நூல் ஆசிரியர் டாக்டர்
பெரு .மதியழகன் அவர்களை உடன் செல்லிடப்பேசியில் அழைத்துப் பாராட்டினேன் . 
அவர் சொன்னார் இந்த நூல் இருபது வருடங்களுக்கு முன்பு எழுதியது என்று .ஆனால் இந்த நூல் இன்று எழுதியது போல இருந்தது .இன்றைக்கும்  மட்டுமல்ல என்றைக்கும் பொருந்தும் விதமாக இருந்தது . 
எனக்கு ஞாபக மறதி உள்ளது .நினைவாற்றல் எனக்கு இல்லை என்று சொல்லும் அனைவரும் படிக்க வேண்டிய பயனுள்ள நூல் .குறிப்பாக மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல் .
நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் அவர்கள் நினைவாற்றல்
பற்றி ஆய்வு செய்து எழுதிய நூல் இது . நூலில் மாணவர்கள் படிக்க தொடங்கும் முன் மனதை சம நிலைக்குக் கொண்டு வரும் பயிற்சி நூலில் உள்ளது .நூலிலிருந்து சில துளிகள் உங்கள் பார்வைக்கு .
" இந்த அறிவு யுகத்தில்    ஒருவரின் ஒப்பரிய செல்வமே நினைவாற்றல்தான் .போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் எதைச் சாதிப்பதற்கும்
நினைவாற்றல் வேண்டும் .நமது அறிவின் அளவுகோல் நினைவாற்றலே."

நினைவாற்றலின் முக்கியத்துவம் உணர்த்துகின்றது  நூல் .
நினைவாற்றல் காரணமாகத்தான் பலர் தேர்வில் உயர்ந்த மதிப்பெண் எடுக்க முடிகின்றது. நேர்முகத்தேர்வில் வெறி பெற முடிகின்றது .பேச்சாளர் திறம்படப் பேசி கைதட்டல் வாங்கக் காரணம் நினைவாற்றல்.ஆகவே எல்லா வெற்றிக்கும் ,சாதனைக்கும் துணை நிற்பது நினைவாற்றல்.அதனை வளர்த்துக் கொள்ள வழி சொல்லும் நூல் இது .

நினைவாற்றலுக்கு அடிப்படைகள் கற்றல் ,நினைவிலிருத்தல்,மீட்ழைத்தல்  ,மீட்டறிதல் பற்றிய விளக்கங்கள் மிக நன்று .இவற்றை கடைப்பிடித்தால்  நினைவாற்றல் மேம்படுவது உறுதி என்று அறுதி இட்டுக் கூறலாம் .

நினைவாற்றல் மேம்பட கவனம் அவசியம் .எதையும் நாம் உற்று நோக்கினால் மனதில் பதியும் . நினைவாற்றல் மேம்பட எளிமையான மனப்பயிற்சி நூலில் உள்ளது .நினைவாற்லும்  உடலோம்பலும் என்ற தலைப்பில் உணவுப் பழக்கம் பற்றி மிகச் சிறப்பாக எழுதி உள்ளார் .மூச்சுப்பயிற்சி பற்றி விரிவாக எழுதி உள்ளார் .உறக்கம் பற்றி சுகாதாரம் பற்றி  மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்.தேர்வு பயம் போக்குவது எப்படி ? பயிற்சியும் ,முயற்சியும் நூலில் உள்ளது .

முத்தாய்ப்பாக நூலில் உள்ள உத்வேகம் தரும் ஒரு கவிதை இதோ !
முடியும் நம்மால்
முடியும்
முயன்று பார்த்தல்
முடியும்

நொடியும்
சிற்சில நொடியும்
நொடிந்து சோர்ந்திடாமல்

கடினமாய் உழைத்தால்  வெற்றி
கையில் வந்து படியும்

மடியும் இன்னல் மடியும்
மறுநொடி யினிலே மடியும்  !

வெற்றிக்கான வழி சொல்லும் நூல் இது .எந்த ஒரு செயலையும் விரும்பி செய்யும் போது பலன் உறுதி. படித்தல் ,கேட்டல்,பேசுதல் ,உண்ணுதல் உறங்குதல் எப்படி எந்த ஒரு செயல் செய்யும் போதும் கஷ்டப்பட்டு செய்யாமல் இஸ்டப்   பட்டு செய்தால் வெற்றி உறுதி என்பதை உணர்த்திடும் உன்னத நூல் இது .நல்ல நூல் படித்தால் என்ன பயன் என்பதை உணர்த்தும் நூல் . நூல் ஆசிரியர் டாக்டர்
பெரு .மதியழகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

பூரண மது விலக்கு வந்தால் பெண்கள் மகிழ்வார்கள் .நாடு நலம் பெறும் .கவிஞர் இரா .இரவி

பூரண மது விலக்கு வந்தால் பெண்கள் மகிழ்வார்கள் .நாடு நலம் பெறும் .கவிஞர் இரா .இரவி

பூரண மது விலக்கு வந்தால், நாடு நலம் பெறும் .கள்ளச் சாராயம் வந்து விடும்  என்று பூச்சாண்டி காட்டுவதை நிறுத்துங்கள் .குஜராத்தில் பூரண மது விலக்கு அமுலில்  உள்ளது .சட்டத்தை ,தண்டனையை கடுமையாக்கினால்  கள்ளச் சாராயம் ஒழித்து விடலாம் .முதல்வர் வசம் தான் காவல் துறை உள்ளது .இன்று குடியால் நாட்டில் கொலை, கொள்ளை என குற்றங்கள்  பெருகி விட்டது .பள்ளி மாணவன் சீருடையோடு சென்று குடிக்கிறான் .ஆசிரியர் குடிக்கின்றார்.பேராசிரியர் குடிக்கின்றார்,கணிப்  பொறியாளார்  குடிக்கின்றார் . வாகன ஓட்டுனர்கள் குடித்து விட்டு வந்து வாகனம்  ஓட்டி விபத்து ஏற்படுகின்றது .உயிர்கள் பலியாகின்றது .இரு சக்கர  வாகனத்தில்  சென்று மதுக்கடையில் மது அருந்தி  விட்டு வந்து குடி போதையில் .இரு சக்கர  வாகனத்தை ஓட்டி   விபத்து நேர்கின்றது .இன்று நடக்கும் குற்றங்ககளில்  80 % குடி போதையின் காரணமாகவே நடக்கின்றது என்று ஆய்வு சொல்கின்றது .குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் உயிருக்கும் கேடு என்பது முற்றிலும் உண்மை .மது விலக்கு உடனடி தேவை !மது விலக்கு வந்தால் பெண்கள் மகிழ்வார்கள் .--
--

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

நண்பர்கள் ! கவிஞர் இரா.இரவி

நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி

கோடிப் பணத்தை விட
உயர்ந்தவர்கள்
நண்பர்கள் !  

சொத்துக்களை விட
சிறந்தவர்கள்
நண்பர்கள் !  

துன்பம் என்றால்
திரண்டு விடுவார்கள்
நண்பர்கள் !  

துயரத்தின் போது
தோள் கொடுப்பவர்கள்
நண்பர்கள் !  

எதுவும் செய்வார்கள்
எதையும் இழப்பார்கள்
நண்பர்கள் !  

குடத்து விளக்கான நம்மை
குன்றத்தில் வைப்பார்கள்
நண்பர்கள் !

கூட்டமாகக் கூடி
கூத்துக் கட்டுவார்கள்
நண்பர்கள் !

நேரம் செல்வதை
மறக்கடிப்பவர்கள்
நண்பர்கள் !

புண்பட்ட மனதிற்கு
மருந்தாவர்கள்
நண்பர்கள் !

வாழ்வின் இருள் நீங்க
வழிகாட்டி ஒளி தருவார்கள்
நண்பர்கள் !

தவறான பாதை சென்றால்
தட்டிக் கேட்பவர்கள்
நண்பர்கள் !

எதிரிகளை அடக்குவார்கள்
பகைவர்களை பயப்படுத்துவார்கள்

நண்பர்கள் !

ஏணியாக இருப்பார்கள்
தோணியாக  வருவார்கள்
நண்பர்கள் !

காதலுக்கு துணை நிற்பார்கள்
காதலி கரம் பிடிக்க உதவுவார்கள்
நண்பர்கள் !

உயிருக்கு உயிரானவர்கள்
என்றும்  மறக்கமுடியாதவர்கள்
நண்பர்கள் !
 
--

வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன் ! கவிஞர் இரா .இரவி

வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன் !
கவிஞர் இரா .இரவி

உயிர் காப்பான் தோழன் உண்மை
உயிர் கொடுத்தும் காப்பான் நண்பன்


அம்மா அப்பா மனைவிக்குச் சொல்லாத ரகசியம்
அன்பு நண்பனுக்குச் சொல்லலாம் காப்பான்

சொந்த பந்தம் பணம் பார்த்து பழகும்
சொந்த நண்பன் மனம் பார்த்து பழகுவான்

நமக்கு ஒரு சோகம் என்றால் உடன்
நம்மைத் தேடி வரும் ஆறுதல் நண்பன்

நமக்கு ஒரு கவலை என்றால்
நம் கவலையைத் தீர்ப்பவன் நண்பன்

நம் கண்ணில் கண்ணீர் வழிந்தால்
நமக்காக துடைக்க கரம் நீடுபவன் நண்பன்

நம் வளர்ச்சி கண்டு பெருமை கொள்வான்
நம் மகிழ்ச்சி கண்டு பூரிப்பான் நண்பன்

போட்டி வந்தால் விட்டுக் கொடுப்பான்
போட்டியில் இருந்து விலகிடுவான் நண்பன்

தியாகம் செய்த நண்பன் உண்டு
துரோகம் செய்தவன் நண்பனே அல்ல துரோகி

சாதனைக்குத் துணை நிற்பான் நண்பன்
சோதனையை தூர விரட்டுவான் நண்பன்

பணத்தைப் பெரிதாக நினைக்காதவன்
பண்பில் சிறந்த பாசக்கார நண்பன்

நண்பனை யாரும் இகழ்ந்தால் துடிப்பான்
நண்பனின் பெருமையைப் பேசும் நண்பன்

நாம் செய்த சிறு உதவி மறக்க மாட்டான்
நமக்கு அவன் செய்த பேருதவி மறந்திடுவான் நண்பன்

மறக்க முடியாதவன் நண்பன்
மறக்கக் கூடாதவன் நண்பன்

வருடத்தில் ஒரு நாள் மட்டுமல்ல நினைவு
வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன்
--

சனி, 4 ஆகஸ்ட், 2012

மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மதுபானக் கடை

இயக்கம் திரு .கமலக்கண்ணன்

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வழக்கமான திரைப்பட மசாலா இல்லாமல் மிக இயல்பாக யதார்த்தமாக பாடமாக்கி உள்ளார்
.திரு. கமலக்கண்ணன்.இவரை மற்றொரு பாலாஜி சக்திவேல் என்றே சொல்லலாம் .படத்தில் கோடிகள் தியம் பெறும்  நடிகர்கள் இல்லை .கோடிகள் தியம் பெறும் நடிகைகள் இல்லை .புகழ்ப்பெற்ற நகைச் சுவை நடிகர்  இல்லை.வெளி நாடு செல்ல வில்லை .டுயட் பாடல் இல்லை . எந்த பிரமாண்டமும்  இன்றி பிரமாதமாக இயக்கி உள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள் .சமீபத்தில் வந்த எல்லா திரைப்படங்களிலும்   மதுபானக்  கடையில் மது அருந்தும் காட்சி கட்டாயம் இருக்கும் .ஆனால் இந்தப் படமோ மொத்தப் படமும்,   மதுபானக்   கடையிலேயே நடக்கின்றது .படம் தொடங்கும் போதே "இந்தத் திரைப்படத்தில்  கதை என்று இருப்பதாக நீங்கள்  கருதினால்,அது உங்களுடைய கற்பனை "வித்தியாசமாக உள்ளது .அதேபோல் படத்தில் பெரிய கதை ஒன்றும் இல்லை .ஆனால்    
மதுபானக்   கடையில் குடிமகன்கள் நடத்தும் கூத்து  படம் முழுவதும் காட்டி உள்ளார் .

படத்தின் பெயரைப் பார்த்து விட்டு
குடிக்கு எதிராக கவிதை ,கட்டுரை எழுதி வரும் நாம் இந்தப் படத்திற்குபோக வேண்டுமா ? முதலில்  என்று யோசித்தேன் .பின்  என்ன சொல்கிறார் என்று போய் பார்ப்போம் என்று போய் பார்த்தேன் .
ஆனால் படத்தில் குடியின் பாதிப்பை மிக ஆழமாக சொல்லாவிட்டாலும் , மதுபானக்   கடையில் நடக்கும் திருவிளையாடல்களை தோலுரித்துக் காட்டி உள்ளார் .மதுபானக்  கடை திறக்கும் முன் காத்திருக்கும் குடிமகன்கள் ,திறக்க தாமதமானதால் கடிந்துகொள்ளும் குடிமகன்கள்.கடை அடைக்கும்  நேரத்தில் மது கேட்கும் குடிமகன்கள்,கடை அடைத்தபின் கூடுதல்  விலைக்கு விற்றல்.போலியான சரக்குகளை விற்கும் அவலம் .
 
மதுக்கடையில் அமர்ந்து மது குடிப்பவர்களுக்கு விற்கும் உணவு  சமைப்பவர் காய்கறி அழுகிப் போய் உள்ளது என்று சொல்ல ,"குடிகார நாய்களுக்குதானே சும்மா போடு "என்று சொல்கின்றார் முதலாளி .பள்ளி ஆசிரியரே மது குடிக்க வரும் அவலம் .தங்கள் ஆசிரியர் வந்து இருப்பதைப் பார்த்து பதுங்கி வந்து சீருடையை  கழற்றிவிட்டு சென்று  மாணவர்கள் பீர் வாங்கிகுடிக்கும் அவலம் .  கல்லூரி  மாணவர்கள் நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை மதுக்கடையில் மது அருந்தி கொண்டாடும் அவலம் .தன் நிலத்தில் மதுக் கடை நடப்பதை பார்த்து பைத்தியமான ஒருவர் . மதுக்கடையில் வேலை பார்த்துக் கொண்டே முதலாளியின் மகளை காதலிக்கும் ஒருவன் .இது வேண்டாம் ஆபத்து என்று தடுக்கும் சக தொழிலாளி .ஒரு குடிமகன் குடிக்க வந்தால் குடித்து முடித்து விட்டு வெளியே செல்லாமல் வசனம் பேசும் அவரைக் ண்டு நடுங்கும் மதுக்கடைபணியாளர்கள் .பெரிய குடிகாரனையே பயமுறுத்தும் மற்றொரு குடிமகன் .காதலில் தோல்வியுற்று முதன்முறையாக பீர் குடித்து விட்டு சொல்லும் கவிதை நன்று .வசனம் எழுதியவருக்கு பாராட்டு .

என்னை இறந்துவிடு என்று சொல்
மறுபடியும் பிறந்து விடுவேன் .ஆனால்
மறந்துவிடு என்று மட்டும் சொல்லாதே
இருந்தும் இறந்து விடுவேன் ! 


குடிமகன் சொல்லும் வசனம் "நாம தள்ளாடினால்தான் கவர்மென்ட்  ஸ்டேடியா  இருக்கும் .நாம் ஸ்டேடியாயிட்டா  கவர்மென்ட் தள்ளாடிரும் "
அரசாங்கம்  வருமானம் ஈட்ட ஆயிரம் வழிகள் உண்டு   .மதுபானக் கடை வருமானம் அவமானம்.என்பது என் கருத்து. 
"ஆலயமணி  அடித்தால் சத்தம் ஆல்க்ககால் மணி அடித்தால் யுத்தம் "    
நாட்டுநடப்பை குடியால் குடி அழியும் உண்மையை அப்பட்டமாக படமாக்கி உள்ளார்.படம் அல்ல பாடம் வழக்கமாக சொல்வார்கள் இந்தப் படத்திற்கு பொருந்தும் .இந்தப் படம் பார்த்து விட்டு குடி மகன்கள் திருந்தினால்    அது இயக்குனரின் வெற்றி .மறந்து வந்த நமக்கு மதுபானக் கடை யை நினைவு படுத்தி விட்டாரே என்று குடிக்க செல்லும் குடிமகன்களை திருத்த வேண்டும் என்றால் மதுபானக் கடைகளை  மூட வேண்டும் .
துப்புரவுத் தொழிலாளி 
மதுபானக் கடையில் தண்ணீர் கேட்டதற்கு அவரிடம் தீண்டாமை பேசும் குடிமகனைப் பார்த்து கோபப் பட்டு அவர் பேசும் வசனம் கைதட்டல் பெறுகின்றது .எதோ எதுக்கோ இயந்திரம் கண்டு பிடித்தவர்கள் பிய்  மூத்திரம் அள்ள ஏன்டா? கண்டு பிடிக்க வில்லை .நாங்களும் உங்களை மாதிரி மனுஷன் தானே. கஷ்டப் படுகிறோம் . இது வரை மனிதநேயம் .மிக நெகிழ்வான வசனம். பாராட்டுக்கள் .
துப்புரவுத் தொழிலாளி கெட்ட வாடை பொறுக்க  முடியாமல் குடிக்கிறார்கள் என்று நியாயப்படு
த்துவதுப்  போல உள்ளது .குடி யார் ? குடித்தாலும் தவறுதான்.குடி குடியை கெடுக்கும் என்பது முற்றிலும் உண்மை. குடி நாட்டுக்கும்   வீட்டுக்கும்  உயிருக்கும் கேடு என்பதை அனைவரும் உணர வேண்டும் .எழுத்தில் படிப்பதோடு நின்று விடாமல் குடிக்காமல் இருந்து  கடைபிடிக்க வேண்டும் .ஒரு ஆய்வில் சொன்ன தகவல் 80 %குற்றங்கள் மது போதையால்தான்  நடக்கின்றது .ஒரு காவலர் சொன்ன தகவல் சனி ஞாயிறு வந்து விட்டாலே குடி தொடர்பான சண்டைகளே  அதிகம் .

தொழிலாளிகள் பற்றிய பாடல் மிக நன்று .இந்தப் பாடலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் தலைவர்,எழுத்தாளர்  பொன்னீலன் பாராட்டி இருந்தார் .

மதுபானக் கடை இன்று திருவிழாக் கடை போல கூட்டம் கூடுகின்றது  .ஆசிரியர் ,மாணவன் ,அப்பா, மகன் ஒரே கடையில் குடிக்கும் அவலம் நடக்கின்றது.குசராத்து போல தமிழகத்திலும் முழுமையான மது விலக்கு மட்டுமே ,நம் குடிமகன்களை திருத்த முடியும் .வெட்டுக் குத்து 
குத்துப்பாட்டு ,கவர்ச்சி நடனம் ,துப்பாக்கி சூடு,வன்முறை ,ஆபாசம் இன்றி துணிவுடன் படம் இயக்கிய இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இவரைப்  பார்த்து மசாலாப்பட இயக்குனர்கள் திருந்த வேண்டும் .சமுதாயத்திற்கு பயனுள்ள கருத்து சொல்ல முன் வர வேண்டும் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

பகுத்தறிவு சிந்தனைக்கு ! கவிஞர் இரா .இரவி

பகுத்தறிவு சிந்தனைக்கு !  கவிஞர் இரா .இரவி
இரண்டு கைகளை தலை மேல் வைக்க கூடாது வைத்தால் அப்பா அம்மா இறந்து போவார்கள் .என்பார்கள் .இறுதிச் சடங்கின் போது குடியானவர்  இரண்டு கைகளை தலை மேல் வைக்க சொல்வார் .அதனால் ,சாதரணமாக இரண்டு கைகளை தலை மேல் வைக்க கூடாது என்பது மூட நம்பிக்கை.

சாப்பிடும் முன் இலையில் தண்ணீர் தெளிப்பது இலையை சுத்தம் செய்ய ஆனால் சிலர் சிந்திக்காமல் இரவில் சாப்பிடும் போது 
இலையில் தண்ணீர்   தெளிக்க கூடாது என்பது மூட நம்பிக்கை.

சனிக் கிழமை யாரவது இறந்தால் துணை பிணம் கேட்கும் என்பது
மூட நம்பிக்கை.இதற்காக வீணாக கோழியை கழுத்து அறுத்து பாடையில் போட்டு விடுவார்கள் .  

உயரம் குறைவான  நிலையில் குனிந்து போகாமல் முட்டி விட்டு நிலை தட்டி விட்டது .உட்கார்ந்து போங்கள் என்பார்கள் .

பூனை எலியை பிடிக்க ஓடும் .பூனை குறுக்கே போனால் நாம் வெளியே  போகக் கூடாது என்பது மூட நம்பிக்கை.
அந்தக்காலத்தில் மின் விளக்கு இல்லாத காலத்தில் ஊசி இரவில் விற்க மாட்டார்கள் .காரணம் தவறி கிழே விழுந்தால் எடுப்பது சிரமம் என்பதால், ஆனால் இன்றைக்கு மின் விளக்குகள் வந்து விட்ட காலத்திலும் சிலர்  ஊசி இரவில் விற்க மாட்டார்கள் மூட நம்பிக்கை .

மயில் இறகு குட்டி போடும் என்பார்கள் .மூட நம்பிக்கை .

பரீட்சை  எழுதும் பொது விடைத்தாளில் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவார்கள் .போடு வந்த பழக்கத்தில் அரசு தேர்வில் பிள்ளையார் சுழி போட்டால் திருத்துவோருக்கு நான் யார் என்று  அடையாளம் காட்ட போட்டதாக கருதி விடுவார்கள் .அரசு தேர்வில் பிள்ளையார் சுழி போடக் கூடாது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது