இடுகைகள்

October, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிஞர் இரா.இரவி

படம்

7ஆம் அறிவு திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
7ஆம் அறிவு
இயக்குனர் முருகதாஸ்

நடிப்பு   சூர்யா
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படத்தின் ஆரம்பத்தில் யார்  யாருக்கோ நன்றி என்று வருகின்றது .இந்த தலைப்பில் ஏழாவது அறிவு என்று  பல வருடங்களுக்கு முன்பே நூல் எழுதிய நூல் ஆசிரியர் முனைவர் இறை அன்புவிற்கு நன்றி என்று எழுத மறந்து விட்டனர் .

சூரியாவின் நடிப்பை, உழைப்பைப் பாராட்டலாம் .தமிழ் தமிழர் என்று உயர்வான வசனங்கள் வருகின்றது .பாடல் ,இசை ,சண்டை ,ஒளிப்பதிவு என தொழில் நுட்பங்களைப் பாராட்
லாம் .

வாழைப் பழத்தில்   ஊசி ஏற்றுவது போல  சுருதி பேசும் வசனத்தில். ரிசர்வேசன் ,ரேகம்டேசன் ,கரப்சன் இதனால்தான் திறமை உள்ளவர்கள் வெளிநாடு சென்று விடுகிறார்கள் .இயக்குனர் முருகதாசின் கஜினி படம் வெற்றி பெற்றாலும்  கூட அது     (ச ய்கோ )ஒரு மன நோயாளி கதைதான். அந்தப்படமும் எனக்கு
ப் பிடிக்காத படம்தான் .ரேகம்டேசன் ,கரப்சன்சரி .ரிசர்வேசன் என்ற சொல் தேவையற்றது .

இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி அதை யாரும் எதிர்க்க கூடாது.  இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால் முருகதாஸ் போன்றவர்கள் படித்து இருக்க முடியாது .அதை உணரவேண்டும் இயக்குனர் .ரிசர்வேசன் என்ற அந்த வரியை படித்தில்…

மதுரை திருமால்புரம் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் தீபாவளி புத்தாடைகள் வழக்கும் விழா நடைபெற்றது

படம்
மதுரை திருமால்புரம் அகவிழி பார்வையற்றோர்  விடுதியில் தீபாவளி புத்தாடைகள்  வழக்கும் விழா நடைபெற்றது .விடுதி நிறுவனர்  பார்வையற்ற
மனித நேய மாமணி பழனியப்பன் வரவேற்றார் .விடுதி மாணவ மாணவியரின் இன்னிசை நிகழ்ச்சி நடைப் பெற்றது .   கவிஞர் இரா .கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார் ,கவிஞர் இரா .இரவி முன்னிலை உரையாற்றினார் .தணிக்கையாளர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார் .ஹலோ பண்பலை தொகுப்பாளர் திரு .ஜான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார் .  

கடம்பவனம் நிர்வாக இயக்குனர் திருமதி .சித்ரா கணபதி நேர்முகம் பார்த்து மகிழுங்கள் .நேர்முகம் காண்பவர் திரு .ரமேஷ் பிரபா

படம்
நன்றி www.tamilauthors.com

கடம்பவனம் நிர்வாக இயக்குனர் திருமதி .சித்ரா கணபதி நேர்முகம்  பார்த்து மகிழுங்கள் .நேர்முகம் காண்பவர் திரு .ரமேஷ்   பிரபா


http://www.tamilauthors.com/video%20link/kadampavanam01.html

http://www.tamilauthors.com/video%20link/kadampavanam02.html

http://www.tamilauthors.com/video%20link/kadampavanam03.html

http://www.kadambavanam.in/
--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

பொன்னகை விட
பெண்களுக்கு அழகு
புன்னகை

வானில் மேகங்கள் எனும்
சிக்கிமுக்கி கற்களின் உரசல்
மின்னல்

மனிதனின்
முதல் நவீனம்
மொழி

வடிவானவள்
அழகானவள்
வடிவம்

காது இல்லாத பாம்பிடம்
முட்டாள் ஊதுகிறான்
மகுடி

அழிவிற்கு
வழி வகுக்கும்
ஆயுதம்

பணக்கரார்களின்
பாசக்கார நண்பன்
வைரம்

இன்றைய மனிதர்கள்
மறந்துவிட்ட ஒன்று
தர்மம்

மனிதனின் பயனுள்ள
கண்டுபிடிப்பு
கருவி

உணர்ச்சி வயப்படாமல்
அறிவு வயப்பட்டு எடுப்பது
யுத்தி

ஏழைகளின் வீட்டிற்கு
தேவையில்லை பூட்டு
கதவு

மின் தடை தவிர்க்க சில யோசனைகள் .கவிஞர் இரா .இரவி

படம்
மின்  தடை  தவிர்க்க சில யோசனைகள் .கவிஞர் இரா .இரவி

வணிக நிறுவனங்கள் தரமான பொருள் வழங்குவதில் ,விலை குறைவாக வழங்குவதில் ஆரோக்கியமான போட்டி காட்டலாம் .அதை விட்டுவிட்டு ஆடம்பர மின் விளக்குகள் போடுவதில் போட்டிப் போடுவது அறிவார்ந்த செயல் அன்று .தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் இந்த மின் விளக்குப் போட்டி நட
க்கின்றது .இதனை ஒழிக்க வேண்டும் .

வணிக நிறுவனங்களில் குறிப்பாக  ,ஜவுளிக் கடைகள்  ,  தங்க ஆபரணக் கடைகளில்   போட்டி போட்டுக் கொண்டு கடைகளின் முன்பு மின்சார வண்ண விளக்குகளை  வாரி இரைத்து உள்ளனர் .
தேவையற்ற ஆடம்பரம் இது .மின்கட்டணம் அவர்கள் செலுத்தினாலும் மின்சாரம் விரயம் தேசிய விரயம்.

தேவையற்றவைக்கு மின்சாரம் செலவானால் தேவைக்கு இருக்காது .
ஆடம்பரத்திற்கு   மின்சாரம் செலவானால் அவசியத்திற்கு இருக்காது
தடுப்போம் தடுப்போம் மின்சார விரயம் தடுப்போம் .
மின்சாரத்தின் அவசியத்தை உணர்த்துவோம் .

சோலார் மின்சாரம் நாட்டில் நடைமுறைப் படுத்துவோம் .
அயல்   நாடுகளில் வீடுகளில் சோலார் மின்சாரம் சேமித்து அரசாங்கத்திற்கு விற்பனை செய்கின்றனர் .
சோலார் மின்சாரம் விழிப்புணர்வு பரவலாக்கப் பட வேண்டும் .
பெரிய நிறுவனங்…

மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி

படம்
மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு    ம .ரா .போ.

நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி


மிகுதியான சுவை நாக்கிற்கு லஞ்சம் போன்றது .

உறக்கம் என்பது என்ன ? உழைத்த   உடம்பை பழுதுபார்பதற்கு  உரிய ஏற்பாடு அது.

எளிமையும் சிக்கனமும் தொடர்பு உள்ளவை.
ஆடம்பரமும் திருட்டும் தொடர்பு உள்ளவை  .

உடம்புக்கோ மனதுக்கோ தீங்காக உள்ள எந்த இன்பத்தையும் ஒதுக்க வேண்டும் .

பணவேட்டையைச் சமூகத்திலிருந்தே   ஒழிக்க வேண்டும் .அதற்க்கு உரிய நெறியில்அரசியலை அமைக்க   வேண்டும் .

குடியாட்சி என்ற பெயரால் குழுவாட்சியே இருக்கிறது .

தமிழ் மொழி நல்ல மொழிதான் ,ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா ?    

தமிழரிடையே பொதுவாகப் பிரிக்கும்   ஆற்றல் வளர்ந்து விட்டிருக்கிறது.
பிணைக்கும் ஆற்றல் வளரவில்லை .

நெருக்கடியில் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியமா ?
அன்பு மனதை ஆதரிக்க வேண்டும் .
ஆணவ மனத்தைக் கைவிட வேண்டும் .

வாழ்க்கையில் பலர் கெடுவதற்குக் காரணம் விதிகளைப் பற்றி எண்ணாமல் ,விதி விலக்கானவர்களைப் பற்றி எண்ணுவதேயாகும்.

இலக்கியக் கல்வி  பயன்பட வேண்டுமானால் இலக்கியத்தை முதலில் உணர்ந்தறிய வேண்டும் .பிறகு ஆய்ந்தறிய வேண்டும் .

உள்ளத்து உணர்வின் ஆழம…

ஹைக்கூ கவிஞர் இரா .இரவியின் பல்சுவை விருந்து !

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ                 கவிஞர் இரா .இரவி

மனமெனும் நீதிமன்றத்தில்
மன சாட்சியே
நீதிபதி

ஆசைகளைக் குறைத்தால்
காணமல் போகும்
கவலை

கதை அளப்பவர்களின் 
கட்டுக் கதை
வாஸ்து

ஒன்றில் எழுதியது  மூன்றில்
நான்கில்  எழுதியது எட்டில்
ராசிபலன்கள்

குறை உடலில்
நிறை மனதில்
மாற்றுத்திறனாளிகள்

உயிர்காப்பான்
தோழன்
தலைக்கவசம்     

இன்றைய அமைச்சர்
நாளைய சிறைவாசி
அரசியல்

மேல் பார்த்தால் பொறாமை
கீழ் பார்த்தால் ஆறுதல்
வாழ்வியல்

கொலைகாரனையும்
கொடூரமானவனையும்   
நேசிப்பவள் தாய்

ஆபாசம் ஊறுகாய் அன்று
ஆபாசம் சாப்பாடு இன்று
திரைப்படங்கள்

கூடியது  அன்று
கூட்டுகின்றனர் இன்று
கூட்டம் 

வன்முறை போதிக்கும்
போதி மரங்கள்
திரைப்படங்கள்

ஒரே குட்டையில்
ஊறிய மட்டையில்
சின்னத்திரை பெரியத்திரை

பார்த்தீனியமாகத் திரைப்படங்கள்
குறிஞ்சிமலராக எப்போதாவது
நல்ல படங்கள்  

உயிருள்ளவரை
ஒட்டியே இருக்கும்
பிறந்தமண் நேசம்

தொடக்கம் பீர்
முடிவு பிராந்தி வாந்தி
இளைஞர்கள்

உளவியல்
மனம் செம்மையானால்
வாழ்க்கை செம்மையாகும்

நினைத்தது நடக்கும்
நல்லது   நினைத்தால் 
நல்லது நடக்கும்

கவிஞர் இரா .இரவி நேர்முகம் பார்த்து மகிழுங்கள்

படம்

தீபாவளி ஏது ? கவிஞர் இரா .இரவி

படம்
தீபாவளி ஏது  ?  கவிஞர் இரா .இரவி

அதிகாலை எழுந்து குளித்து முடித்து
புத்தாடை அணிந்து பலகாரம் சாப்பிட்டு
குடும்பத்துடன்  மகிழ்ந்து
வெடி வெடித்து தீபாவளி கொண்டாடுகின்றனர் .

தீபாவளி முதல் நாள் கடைத்தெருவின்
வீதிகளில் பொதுமக்கள் விட்டெறிந்த
வீண் குப்பைகளைக்  கூட்டிப் பெருக்கும்  
துப்புரவுத் தொழிலாளிகளுக்கு
தீபாவளி ஏது  ? 

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கவிஞர் இரா .இரவி

http://uktamilnews.blogspot.com/2011/07/blog-post_4632.html

எழுத்தாளர் (Author) - கவிஞர் இரா. இரவி() » பக்கம் - 1 » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

பேராசிரியர் , முனைவர் ச .சந்திரா நேர்முகம் கண்டு மகிழுங்கள். நேர்முகம் காண்பவர் திரு .ரமேஷ் பிரபா

படம்
நன்றி
www.tamilauthors.com
பேராசிரியர்  , முனைவர் ச .சந்திரா நேர்முகம் கண்டு மகிழுங்கள். நேர்முகம் காண்பவர் திரு .ரமேஷ்   பிரபா 


http://www.tamilauthors.com/video%20link/S.Chandira01.html

http://www.tamilauthors.com/video%20link/S.Chandira02.html


http://www.tamilauthors.com/video%20link/S.Chandira03.html

சுட்டும் விழி நூல் விமர்சனம்முனைவர் யாழ் சு .சந்திரா

படம்
சுட்டும் விழி    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

நூல் விமர்சனம் .
குடியரசுத் தலைவரின் விருதுப் பெற்ற முனைவர் யாழ் சு .சந்திரா,
பேராசிரியர்,மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரி .

சுட்டும் விழியின் மின்னல்கள்

 ஹைக்கூ கவிஞர் என்றே இலக்கிய உலகில் அறியப்படும்  கவிஞர் இரா .இரவியின் பதினோராவது நூல் சுட்டும் விழி இந்த நூல்தான், தலைப்பிலேயே ஹைக்கூ வைப் பெறாத இரவியின் ஹைக்கூ நூல்! ஆனால் ,புத்தகத்துள் ஹைகூக்கள் குவியல் .
ஹைக்கூ வின் தோற்றத்தைப் பேசும் அறிஞர்கள் அவை ஜப்பானிய தன்கா,ரெங்கா  கவிதைகளில் இருந்து பிறந்தவை என்பர் .ஜப்பானிய மொழி   
ஹைகூவின்பிதாமகன்களாக மார்ஷிவோ பாஸோ,யோஷா பூஷான் ,கொபயாகஷி இன்ஷா ,மாஷஒகாஷிகி  ஆகிய நால்வரையும் குறிப்பிடுவர். அவர்களுள்
பாஸோ ஹைகூவின்  பிதாமகன் ஆவார் .எழுதும்போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும்  ஒரு மயிரிழை கூட  இடைவெளி இருக்கக் கூடாது .உன் மனதை நேரடியாகப் பேசு ....எண்ணங்களைக்   கலையவிடாமல் நேராகச் சொல் .என ஹைக்கூவின் ஆன்மாவைத் தொடும் வித்தையைச்   சுட்டுவார்.அந்த வித்தை இரவிக்கு இயல்பாக உள்ளது .   

இனிமையானது
உற்றுக் கேளுங்கள்
நதியின் ஓசை

என்ற நதியின் ஓசை ,கவிதை…

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ   கவிஞர் இரா .இரவி

வேண்டாம் தீபாவளி
சாகவில்லை நரகாசூரன்
வாழ்கிறான் இலங்கையில்

காக்கவில்லை கடவுள்
சாலை ஓவியரை
மழை

விலைவாசி ஏற்றம்
ஏழைகள் திண்டாட்டம்
தீபாவளி

மாளிகைக் குழந்தையை
ஏக்கத்துடன் பார்த்தது
குடிசைக் குழந்தை

 சின்னமீன் செலவு
சுறாமீன் வரவு
அரசியல்

ஆசையால் அழிவு
தூண்டில் புழுவால்
உயிரிழந்த மீன்

தோன்றின் புகழோடு
தோன்றுக
வானவில்

படித்ததில் பிடித்தது

நன்மையாய் விடியட்டும் நாளை!கவிதாயினி T.கார்த்திகாதீபாவளி தட்டுகிறதுகதவுகளே திறந்து கொள்ளுங்கள்! சரவெடி எழுப்புது இமைகளே விழித்துக் கொள்ளுங்கள் ! சில்லென்ற நீரும் எண்ணெய்   தலையும் சிரிக்கிறதே உடல் நடுக்கத்தைப் பார்த்து சமையல் அறையும் சமைக்கின்ற கைகளும் ஓய்வின்றி இயங்கிடுதே காலையில் கோவில் மணி இசைத்திட கலர் கலர் ஆடையில்  கூடிடும் கூட்டத்தில்  நீ எங்கே சகியே! மல்லிகை மலரின்  வாசமாய்  என்  அருகில் நீயிருக்க நானெங்கே கண்மணியே!  கூரை வீட்டிலும் சென்று திரும்பும் தென்றலே என் வாழ்த்துக்களை நண்பர்களிடம் எடுத்துச்செல்லுங்கள்! உண்மையான இதயங்களுக்கு நன்மையாய் விடியட்டும் நாளை!

தாளம் சர்வதேச வானொலியின் நேரலை நிகழ்ச்சியில் கவிஞர் இரா. இரவி,முது நிலைத் தமிழாசிரியர் ஞா. சந்திரன்

படம்
தாளம் சர்வதேச வானொலியின் நேரலை நிகழ்ச்சியில்     கவிஞர் இரா. இரவி,முது நிலைத் தமிழாசிரியர் ஞா. சந்திரன்

http://www.thaalamradio.com/www.eraeravi.comwww.kavimalar.com இணையங்களின் ஆசிரியர் ,
www.eraeravi.blogspot.comwwww.eraeravi.wordpress.com வலைப்பூக்களின்   ஆசிரியர் கவிஞர் இரா .இரவி பங்குபெறும் நேரலை நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் .கவிதைகள் ,ஹைக்கூ ,கட்டுரை ,நூல் விமர்சனம் பற்றிய இலக்கிய கலந்துரையாடல் ,நேயர்கள் தொலைபேசி வழி பங்குபெறும் நிகழ்ச்சி . 26.10.2011   இந்திய நேரம் மாலை 6.30 மணி முதல் 8.30வரை இலக்கிய நிகழ்வு .
கவிஞர் இரா .இரவி,முது நிலைத் தமிழாசிரியர் ஞா. சந்திரன் இருவரும் பங்குபெறும் நகைச்சுவை கலந்துரையாடல். இந்த நிகழ்ச்சி 26.10.2011   இந்திய நேரம் இரவு 10.30மணி முதல்12.30 மணி வரை  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து நேரடியாக ஒலிப்பரப்பாகின்றது.கேட்டு மகிழுங்கள் .   நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செ…

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – கவிஞர் இரா.இரவி

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – கவிஞர் இரா.இரவிhttp://www.sivajitv.com/aalayam-tholuvatha-nuulagam-selvatha.html

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

மூவா நினைவுகள் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
மூவா நினைவுகள்

நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி

விஜயா பதிப்பகம் ,கோவை  விலை ரூ 40

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மு .வ .நூற்றாண்டு நினைவு சிறப்பு வெளியீடாக வந்துள்ளது .முகப்பு அட்டையில் மு .வ .அவர்களின் புகைப்படம் சிறப்பாக உள்ளது .ஆசிரியப் பெருந்தகை வழி காட்டும் நாயகர் மு .வ .வுக்கு நூற்றாண்டுக்காணிக்கை தந்துள்ளார் .
நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி .

மு .வ வின் மாணவர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி .நூலில் தெளிந்த நீரோடை போன்ற நடையில்19 கட்டுரைகள்   எழுதி உள்ளார் .
ஆசிரியன்  ஓர் அற்புதமான சொல் ஆசு +சிரியன் = குற்றங் குறைகளை  ஓடச் செய்பவன் .என்று இச்சொல்லுக்கு விளக்கம் சொல்வார்கள் .இந்த விளக்கத்தை இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .   

மு .வ .வின் மாணவர் நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி  ,ஆசிரியர் மு .வ. அவர்களுக்குச் செய்தச் சிறப்பாக   நூல் உள்ளது இது போன்ற ஆசிரியர் மாணவர் உறவு இன்று காண முடிய வில்லை .

 எங்களின்  ஆசிரியர் மு .வ .அவர்கள் நன்னூல் வழி அறிமுகப்படுத்தப்படும் அத்தனை இலக்கணங்களுக்கும் முற்றிலும் பொருத்தமான ஒரு பெருந்தகை.இந்த வ…

முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப .அவர்களின் பட்டிமன்ற உரையிலிருந்து – (தொகுப்பு - கவிஞர் இரா.இரவி)

படம்
முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப .அவர்களின் பட்டிமன்ற உரையிலிருந்து – (தொகுப்பு - கவிஞர் இரா.இரவி)

மிகச்சிறந்த சிந்தனையாளரும் ,மிகச்சிறந்த எழுத்தாளரும், மிகச்சிறந்த பேச்சாளருமான செயலர் திரு.வெ.இறையன்பு
இஆப., அவர்கள், மிகச்சிறந்த பட்டிமன்ற நடுவர் என்பதை பறைசாற்றும் விதமாக
இருந்தது. தெளிந்த நீரோடை போல பேசக்கூடியவர்.மிகவும் இயல்பான. யாரையும்
காயப்படுத்தாத. தரமான நல்ல நகைச்சுவைகளைச் சொல்லி பட்டிமன்றத்தை மிகவும்
உயிரோட்டமாக நெறிப்படுத்திச் சென்றார்கள்.
மிகவும் சிரிப்பாக
த் தொடங்கி, விமானம்
மெல்ல மெல்ல மேலே சென்று பறப்பதைப் போல அறிவார்ந்த பல தகவல்களை வழங்கி.
நுட்பமான உரையை தீர்ப்பில் சொல்லி, ஒரு பட்டிமன்றம் எப்படி? இருக்க வேண்டும்
என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக இருந்தது.வருகை தந்த பார்வையாளர்கள் ஒருவர்
கூட எழுந்து செல்லவில்லை. அனைவரையும் தனது அறிவார்ந்த பேச்சாற்றலால் கட்டிப்
போட்டு விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு சிறப்பாகவும,அருமையாகவும்,
பயனுள்ளதாகவும் இருந்தது.

அறிவு விரிவு பெற பெரிதும் தேவை படிப்பா? வாசிப்பா? என்ற தலைப்பில் மிகச்சிறந்த
சிந்தனை பட்டிமன்றம் நடந்தது. ப…

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பட்டி மன்றம்

படம்
மதுரை ,மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வாழ்வின் வரம் நூல்களா ? நண்பர்களா ? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது . தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன்  நடுவராக இருந்தார்.  வாழ்வின் வரம்  நூல்களே ! என்று முனைவர் நிர்மலா மோகன் ,கவிஞர் இரா .இரவி வாதிட்டனர் .வாழ்வின் வரம்  நண்பர்களே ! என்று நகைச்சுவைத் தென்றல் கா .முத்து இளங்கோவன் ,முனைவர் பட்ட ஆய்வு மாணவி சங்கீத் ராதா வாதிட்டனர். விழாவிற்கான  ஏற்பாட்டை பேராசிரியர்   முனைவர் நம் .சீனிவாசன் செய்தார் .கல்லூரியின் செயலர் ,பொருளாளர், முதல்வர் ,பேராசிரியர்கள் ,மாணவ மாணவியர் கலந்துக்கொண்டனர் .

துளிப்பாக்கள் இரா .இரவி

படம்
துளிப்பாக்கள்   இரா .இரவி

பயமின்றி வழங்கிடுக குருதி
ஆபத்து ஒன்றுமில்லை உறுதி
விபத்தில் காயம் பட்டவர் உடன்
உயிர் பிழைக்க உதவிடும் குருதி
பாதித்தவருக்கு வராது இறுதி

சம்பவமாக இருக்கலாம் பிறப்பு
சரித்திரம் ஆகட்டும் இறப்பு
சாதனை படைக்கட்டும்சிறப்பு
வள்ளுவரின் வாக்கு நெருப்பு
வாழ்வாங்கு வாழ்வதே பொறுப்பு

அன்று பெருகியது ஏற்றுமதி
இன்று பெருகியது இறக்குமதி
பயன்படுத்தவில்லை நல்மதி
நாடாள்வோர் தவறை மிதி
உள்ளூர் தொழிலாளியை மதி

வேண்டாம் பெண்ணே பொன்னகை
போதும் உனக்கு புன்னகை
ஊடக விளம்பரம் பார்த்து
ஊடல் கொள்ளாதே கண்ணே
உன்னைவிட உயர்ததல்ல பொன்னகை

--


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

இன்றைய அரசியல் கவிஞர் இரா .இரவி

படம்
இன்றைய அரசியல்    கவிஞர் இரா .இரவி

வீட்டின் கூரையில்  ஏறி தீ வைப்பவன்தான்
வாய்த்த பிள்ளைகளில் மிக நல்லவன் .

இன்றைய அரசியல் நிலைமையும்
இப்படித்தான்.

யாருமே சுத்தமில்லை அரசியலில்
இருக்கும் அசுத்தத்தில்
குறைந்தப்பட்ச அசுத்தம்
தேர்வாகின்றது .

தந்தை பெரியார் சொன்னது
முற்றிலும் உண்மையானது .
அரசியல் இன்று
அயோக்கியர்களின் புகலிடமானது .  


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

போதைகள் பலவிதம் . ஒவ்வொன்றும் ஒரு விதம் கவிஞர் இரா .இரவி

படம்
போதைகள் பலவிதம் . ஒவ்வொன்றும் ஒரு விதம்        கவிஞர் இரா .இரவி

போதை எங்கும் எதிலும் போதை
குடி மகனுக்கு மது போதை
காமுகனுக்கு மாது போதை
மக்களுக்கு தொலைக்காட்சி போதை
பெண்களுக்கு தொடர் போதை
அரசியல்வாதிக்கு பண போதை
அதிகாரிக்கு பதவி போதை
படைப்பாளிக்கு புகழ் போதை
படிப்பாளிக்கு கல்வி போதை
போதை தெளிந்தால்
பாதை   சிறக்கும்

விமர்சனம் முனைவர் ச.சந்திரா திருவில்லிப்புத்தூர்.

படம்
20.10.2011- வியாழன் அன்று ஜெயாத்தொலைக்காட்சி நிறுவனம்  காலைமலர் நிகழ்வில் ஒளிபரப்பிய  முனைவர் நிர்மலாமோகன் அவர்களது பேட்டி
விமர்சனம் முனைவர்  ச.சந்திரா
         திருவில்லிப்புத்தூர்.

உரையிடையிட்டப் பாட்டுடைச் செய்யுள் (சிலப்பதிகாரம்) கேள்விப்பட்டிருக்கிறோம்.உரையிடையிட்டப் பாட்டுடை நேர்காணல்?- கேள்விப்பட்டோம்! ஆம்!20.10.2011- வியாழன் அன்று ஜெயாத்தொலைக்காட்சி நிறுவனம்  காலைமலர் நிகழ்வில் ஒளிபரப்பிய  முனைவர் நிர்மலாமோகன் அவர்களது பேட்டி  உரையும் இசையும் கலந்த இனிய நிகழ்ச்சி எனலாம்.சாகாவரம் பெற்ற சங்கத்தமிழ்ப்பாடல்கள் முதல் இளைஞர்களின் மனதில் சங்கமிக்கும் இன்பத் திரையிசைப்பாடல்கள் வரை சரளமாய்ப்  பாடியபடியே  உரையாடியதில் இவரது இசைத்திறன் புலனாகியது.தனது இருபத்தேழு வருட தமிழாசிரியப்பணி அனுபவத்தை இருபத்தேழு நிமிடங்களில் தொகுத்து வழங்கியது கரும்பைப் பிழிந்து கன்னல்தமிழ்ச் சாறாக்கி, நம்  கரத்தில் தந்ததுபோல் இருந்தது.வகுப்பறையில், பாகற்காயாய்க் கசக்கும் இலக்கணத்தை,திரைபடப்பாடல் ஒப்புமை வழி வெல்லப்பாகாய் உருமாற்றி மாணவர்க்கு அளித்ததில் பேராசிரியது உளவியல்திறன் புலப்படுகிறது.அக்கால ஆண்டாளின் திருப்…

பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர்

மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வெளியீடு   விழா குழுவினர்
தாமு நகர் ,கோவை
விலை 100ஓவியர் ம .செ. வரைந்த மு வ .ஓவியம் முகப்பு அட்டையில் மிகச் சிறப்பாக உள்ளது .மலரின் உள்ளே முதல் பக்கத்தில்  மு .வ .அவர்களின் கையொப்பத்துடன்  புன்னகை சிந்தும்  மு வ .புகைப்படம் உள்ளது .மலர்க்குழு திருபெ.சிதம்பரநாதன் அவர்களின் அணிந்துரை அழகுரையாக
உள்ளது .

இலக்கிய இமயம் மு. வ . பற்றிய கட்டுரைகள்   கவிதைகள் 18 அறிஞர்கள் எழுதி உள்ளனர் .மு வ .வின் படைப்புலகம் கட்டுரைகள் ,மு வ .வின் வாழ்க்கைக் குறிப்பு ,மு .வ .வின் படைப்புப் பணி என மலர் அற்புதமாக மலர்ந்து உள்ளது .இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் வசிக்க வேண்டிய நூல் .

இளைய தலைமுறையினர் உணரவேண்டிய மிகச் சிறந்த ஆளுமையாளர் மு .வ .மு .வ .எனும் சான்றோர் என்ற முதல் கட்டுரையில் டாக்டர்   அருட்செல்வர் நா .மகாலிங்கம் குறிப்பிடும் முத்தாய்ப்பான  வரிகள் .

மு .வ . எவரஸ்ட் சிகரம் போல உயர்ந்ததற்கு பல காரணங்கள் உண்டு .அவருடைய தமிழ்ப்புலமை ,பன்மொழிப்புலமை ,பிற நாடுகள் சுற்றுப்பயணம், படைப்புப்புலமை ,இவற்றையெல்லாம் அவரை உயர்த்துவதற்கு உ…

20.10.2011 அன்று காலை 8.15 மணிக்கு ஜெயா தொலைக்காட்சி காலைமலர் நிகழ்ச்சியில் முனைவர் நிர்மலா மோகன் நேர்முகம் ஒளிப்பரப்பாகின்றது

படம்
20.10.2011 அன்று காலை 8.15 மணிக்கு ஜெயா தொலைக்காட்சி காலைமலர் நிகழ்ச்சியில்,மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வுப் பெற்ற        முனைவர் நிர்மலா மோகன் நேர்முகம் ஒளிப்பரப்பாகின்றது .15 நூல்களின் ஆசிரியர்,100 க்கும்  மேற்பட்ட கட்டுரைகள் எழுதியவர், பல்வேறு விருதுகளும் ,பரிசுகளும் பெற்றவர் .பட்டி மன்றப்   பேச்சாளர் .பன்முக ஆற்றலாளர் முனைவர் நிர்மலா மோகன்.பட்டி மன்ற நடுவர் தமிழ்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் மனைவி  முனைவர் நிர்மலா மோகன் நேர்முகம் ஒளிப்பரப்பாகின்றது.  பார்த்து மகிழுங்கள்

வளர்பிறை , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

படம்
வளர்பிறை , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

மூல நூல் ஆசிரியர். கவிக்கடல் இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம் : கவிஞர் இளவல் ஹரிஹரன் எம்.காம்.பி.எல் 

அட்டைப்படத்தில் உள்ள மெல்லிய கோடுகளே நம் கண்முன் கவிக்கடல்
இரவீந்திரநாத் தாகூரை கொண்டு வந்து விடுகின்றது. நூலின் பெயர் தான்
வளர்பிறை. ஆனால் முழு நிலவாக கவிதை விருந்து வைத்துள்ளார்.தமிழாக்கம்
செய்த கவிஞர் இளவல் ஹரிஹரன் இவர் பரப்பரப்பான பத்திரத் துறையில்
பதிவாளராக பணிபுரிந்து கொண்டே கவிதைகள் பல எழுதி, பாரதிதாசன் விருது
உள்பட பல பரிசுகள் பெற்றவர். பழகுவதற்கு இனிமையானவர் முதன் முதலில்,
“வெளிச்சத்தை வெளிக் கொணருவோம்” என்ற தொகுப்பு நூலின் மூலம், நான் உள்பட
பல கவிஞர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த கவிஞர். சங்கம் வைத்து தமிழ்
வளர்த்த மதுரைக்காரர்.

மகாகவி பாரதியின் கூற்றை மெய்பிக்கும் வண்ணம் பிறமொழி இலக்கியங்களை
மொழிபெயர்த்து தமிழுக்கு கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியில் வெற்றி
பெற்றுள்ளார். நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த
வங்கக்கவி இரவீந்திரநாத் தாகூரின்,காலத்தால் அழியாத கல்வெட்டுக் கவிதைகளை
அழகு தமிழில் மொழிபெயர…

தெருவோரத்தில் யாரோ கவிதாயினி T.கார்த்திகா

படம்
தெருவோரத்தில் யாரோ  கவிதாயினி T.கார்த்திகா
மனம் என்பது
சில கனவுகளையும், நினைவுகளையும் சுமக்கின்ற... சேமிப்புகிடங்குகள்! இந்த கிடங்கில் கண்ணீரை மட்டும் நிரப்பியது யாரோ? காயமான இடத்தில் கல்லெறிந்ததும்  யாரோ? நினைவை  பசியாக்கி உணவை  கனவாக்கி உயிரோடு  விளையாடுது  இந்த விதி! நிலைஏதும்   புரியாமல் ஊமையானது மதி! வாழ்க்கைப்பயணம்     வறுமை பாதையின் மேல் புதிராய் தொடரப்போவதை உணர்ந்துதானோ... குப்பைத்தொட்டியிலிருந்து   கதறி அழுகிறது கைக்குழந்தை! பெயருக்குப்பின்னால்   பட்டத்தை எழுதலாம். பெயராககிப்போன அநாதை பட்டத்தை எழுதக்கூட கற்கவில்லை பள்ளிசென்று!    உண்மையில் எங்கள் படைப்பு இறைவன் செய்த பிழை!  

படித்ததில் பிடித்தது

படம்
மயக்கத்தில் ஒரு இரவு!  கவிதாயினி T.கார்த்திகா  என் விழியோடு உறக்கம் கதை பேசும் நேரம்! ஊதக்காற்று வீசி உடல் நடுங்கிய உலகம்! இரவுப்போர்வைக்குள் ஒளிந்து சொக்கி நிற்கும் பொழுது.. வெள்ளிமீன்கள் உலவிடும் வான்குளத்திலே.. என் மொட்டைமாடி நிலா  காய்ந்திடக் கண்டேன்! புதிதாய் நானமைத்த தோட்டத்துப் பூச்செடிகள்  இதழ்மூடி இரவோடு  மயங்கிடக் கண்டேன்!  முகிலினங்கள்... மோதிமோதி மோகத்தில் கசிகின்ற சாரல் மழையும் சங்கீதம் பாடுது! அந்த மந்தகார மயக்கத்தில் மங்கையின் முகத்தில் சிவந்திருக்கும் பருவைபோல் பூமேலே மழைத்துளி உறவாடுது! இந்த மெளனமான நடுசாமத்தில்... என் வளையோசை ரகசியமாய் சிரிக்கிறது! அதனிடம், இவள் ரசித்ததை கூறும் முன்னே பொழுதும் ஏனோ விடிந்தது!

படித்ததில் பிடித்தது

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். 

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன…

முயற்சி திருவினையாகும் பொய்த்ததோ ?கவிஞர் இரா .இரவி

படம்
முயற்சி  திருவினையாகும்
பொய்த்ததோ ?
கவிஞர் இரா .இரவி

முயற்சி  திருவினையாகும்
பொய்த்ததோ ?
ஆதவனைத் தொட்டுவிடத் 
துடிப்பது முறையோ ?


டால்பின் மீனே உன் பெயரில்
உயரம் இருப்பதால்
இந்த முயற்சியோ ? 

தன்னம்பிக்கை இருக்கலாம்
தவறு இல்லை .
மூட நம்பிக்கை
தவறு என்பதை உணர் .
ஆதவனை
த் தொடும் முயற்சியில்
மேகத்தை
த் தொட்டுவிட்டாய்

தாய் அன்பிற்கு தரணியில் நிகரேது ?

படம்
தாய் அன்பிற்கு தரணியில் நிகரேது ?

தாய் அன்பிற்கு தரணியில் நிகரேது ?
அய்ந்து  அறிவு ஜீவன்
குரங்கான போதும்
பனித்துளிகள் குட்டிக் குரங்கிற்குப்
படாமல் பாதுகாக்கும் தாயுள்ளம் .

பாசம் காட்டும் பரவசம்
பார்த்தபோது என்வசம்
இல்லை என் உள்ளம் .

குரங்கில் இருந்து மனிதன்
வந்தது உண்மைதான்
இந்தக் குரங்கைப் பார்த்ததும்
எந்தன் தாய்ப் பாச்ம்
நினைவிற்கு வந்தது .

தன்னலமற்ற தாய் வாழ்க !
தரணியில் நிகரற்ற  தாய் வாழ்க!       


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

எலிகளே கவனம் கவிஞர் இரா .இரவி

படம்
எலிகளே கவனம்  கவிஞர் இரா .இரவி

பூனை கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகம்   இருண்டு விடாது   .

எலியைத் தேடித் தேடி அலைந்த
அலுப்பால் வந்த உறக்கமோ ?
உறக்கதிலும் சிரிப்பா ?
கண்டது சுவையான கனவோ ?

எலிகளே ஓடி விடுங்கள்
பூனை விழித்தால்
இரையாகி விடுவீர்கள் .

சைவப் பூனை உலகில் இல்லை
பூனைகள் திருந்துவதில்லை
எலிகளே கவனம்  

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

ஆண்கள்தான் அழகு கவிஞர் இரா .இரவி

படம்
ஆண்கள்தான் அழகு கவிஞர் இரா .இரவி

ஆண்கள்தான் அழகு
அகிலத்திற்குப்  பறை சாற்றிடும் 
ஆண் மயிலே !

உன் தோகையை
புத்தகத்தில் வைத்து விட்டு
காத்திருந்து ஏமாந்த  காலம்
நினைவிற்கு வந்தது .

வானவில்   வர்ணத்தை
தோகையில் வைத்து
இருப்பதால்தான் !

வானில் மேகம் வந்ததும்
மழையின் வருகைக்கு
வரவேற்பு  நடனம்
ஆடுகின்றாயோ ?     


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

படித்ததில் பிடித்தது

படம்
படித்ததில்   பிடித்தது

ஹைக்கூவிற்குள் ஹைக்கூ -  முனைவர் .ச.சந்திரா

முக்கனியின் சுவை! மூவர்ணக் கொடியின் மிடுக்கு! ஹைக்கூ!
மூன்றுமணிநேரப் படம் திருத்தாததை மூன்று வரிகள் திருத்திவிடும்! ஹைக்கூ!
வாசிப்போரை நேசிக்கவைக்கும்! படிப்பாளியைப் படைப்பாளியாக்கும்! ஹைக்கூ!
தமிழன்னையின் இளையபுதல்வி! சிற்றிதழின் சிநேகிதி! ஹைக்கூ!
முதலிரு வரிகள் புதிர்தொடுக்கும்! இறுதி வரி புதிர்விடுக்கும்! ஹைக்கூ!
பறவையில் குயில்குக்கூ இனிமை! இலக்கியத்தில் இனிமை ஹைக்கூ!
சுருங்கச் சொல்லி விளக்கியது ஔவையின் ஆத்திச்சூடி அன்று! இன்று ஹைக்கூ!
சமகாலம் பாடும்! சமூக இழிநிலை சாடும்! ஹைக்கூ!
சொல்லும்போது இதழ் ஒட்டாது! மனதில் இனிதாக ஒட்டும்! ஹைக்கூ!
முத்தான இருவரிகள்! முத்தாய்ப்பாய் கடைசி வரி! ஹைக்கூ!

www.tamilauthors.com இணையத்தில் படைப்புகள் படித்து மகிழுங்கள்

படம்

கவிஞர் இரா. இரவி, மதுரை அவர்களின் படைப்புகள்

கவிஞர் இரா. இரவி, மதுரை அவர்களின் படைப்புகள்


கவியரசு கண்ணதாசன் ஹைக்கூ
மாற்றம் வேண்டும்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஹைக்கூ
உலகுக்கு உணவு தரும் உழவர்கள்
தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள்
திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்
காதல் ஹைக்கூ
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் கவிதை
ஹைக்கூ
கவியரசு கண்ணதாசன் ஹைக்கூ
எட்டயபுரத்து பாரதி இன்று இருந்திருந்தால்
வாழ்க பெருங்கவிக்கோ
சட்டம் - II
மறையவில்லை முத்துக்குமார்
மாற்றம் வேண்டும்
தமிழுக்கு செம்மொழி பெற்றுத் தந்த திருக்குறள்
அவள் அவன்
தொ(ல்)லைகாட்சிப்பெட்டி
எதிரி ஹைக்கூ
கோடி நன்மை ஹைக்கூ
சட்டம் - I கவிதை
சுந்தர இலங்கை ஹைக்கூ
ராஜ பட்சே கவிதை
தன்னம்பிக்கை சிந்தனைகள் - பா.விஜய் (தொகுப்பு-இரா.இரவி)
மலர் சூட    ஹைக்கூ
சக்தி மிக்கது   ஹைக்கூ
அன்புள்ள அம்மாவுக்கு கவிதை
கண் தானம்   ஹைக்கூ
நெஞ்சு பொறுக்க வில்லை     ஹைக்கூ
புதிய   ஹைக்கூ
மின்மினி   ஹைக்கூ
அறிவுப்புதையலே…!கவிதை
பொங்குமே வாழ்வு கவிதை
தோல்வி இல்லை கவிதை
மாற்றுத் திறன் படைத்தோரின் மனசுகவிதை
தமிழா நீ பேசுவது தமிழா கவிதை
ஒழுக்கமே உயர்வு தரும் கவிதை
பார்வையற்றவர்கள் கவிதை
அறிவுப்புதையலேகவிதை
சாதனை கவிதை
தமிழர் உயிர் மட…