மின் தடை தவிர்க்க சில யோசனைகள் .கவிஞர் இரா .இரவி

மின்  தடை  தவிர்க்க சில யோசனைகள் .கவிஞர் இரா .இரவி

வணிக நிறுவனங்கள் தரமான பொருள் வழங்குவதில் ,விலை குறைவாக வழங்குவதில் ஆரோக்கியமான போட்டி காட்டலாம் .அதை விட்டுவிட்டு ஆடம்பர மின் விளக்குகள் போடுவதில் போட்டிப் போடுவது அறிவார்ந்த செயல் அன்று .தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் இந்த மின் விளக்குப் போட்டி நட
க்கின்றது .இதனை ஒழிக்க வேண்டும் .

வணிக நிறுவனங்களில் குறிப்பாக  ,ஜவுளிக் கடைகள்  ,  தங்க ஆபரணக் கடைகளில்   போட்டி போட்டுக் கொண்டு கடைகளின் முன்பு மின்சார வண்ண விளக்குகளை  வாரி இரைத்து உள்ளனர் .
தேவையற்ற ஆடம்பரம் இது .மின்கட்டணம் அவர்கள் செலுத்தினாலும் மின்சாரம் விரயம் தேசிய விரயம்.

தேவையற்றவைக்கு மின்சாரம் செலவானால் தேவைக்கு இருக்காது .
ஆடம்பரத்திற்கு   மின்சாரம் செலவானால் அவசியத்திற்கு இருக்காது
தடுப்போம் தடுப்போம் மின்சார விரயம் தடுப்போம் .
மின்சாரத்தின் அவசியத்தை உணர்த்துவோம் .

சோலார் மின்சாரம் நாட்டில் நடைமுறைப் படுத்துவோம் .
அயல்   நாடுகளில் வீடுகளில் சோலார் மின்சாரம் சேமித்து அரசாங்கத்திற்கு விற்பனை செய்கின்றனர் .
சோலார் மின்சாரம் விழிப்புணர்வு பரவலாக்கப் பட வேண்டும் .
பெரிய நிறுவனங்களின் மொட்டை மாடிகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் சேகரிக்கும் சோலார் திட்டத்தை முன்பு மழை  நீர் சேகரிப்பு திட்டம், சட்டம் போல
சோலார் சேகரிப்பு கட்டாயம் ஆக்க வேண்டும்
வீணாகப்போகும்    சூரிய ஒளி மூலம்  மின்சாரம் எடுப்போம்
பூமி வெப்ப மயமாதலையும் தடுப்போம் .
சுற்று சுழல் மாசு படாமல் தடுப்போம்
மத்திய அரசிடமிருந்து மானியம் பெற்று சோலார் திட்டத்தை விரிவுப் படுத்த வேண்டும்

உடனடியாக ஒரு அறிவிப்பு   செய்ய வேண்டும் .

எல்லா நிறுவனங்களும் முகப்புப்  பகுதியில் அளவிற்கு அதிகமாக உள்ள மின் விளக்குகளை அகற்றவேண்டும் .
குறிப்பிட்ட நாட்களுக்கு அகற்றத் தவறினால் அரசாங்கமே மின் வாரிய ஊழியர்கள் மூலம் ஆடம்பரமான தேவையற்ற விளக்குகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு செய்தால் குடிமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு மின்சாரம் தடையின்றி வழங்கலாம் .
மின் தடை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது .

--

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்