இடுகைகள்

September, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பற ... பற ... நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

படம்
பற ...  பற ...  
நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வெளியீடு மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை தேனாம்பேட்டை ,சென்னை .18.விலை ரூபாய் 30. தொலைபேசி 9841436213.
இனிய நண்பர் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்கள் பொதிகை மின்னல் மாத இதழ் ஆசிரியர் .பல படைப்பாளிகள் இதழ் தொடங்கியதும் படைப்பதில் தொய்வு வரும் .ஆனால்  இவரோ  படைப்பு , பத்திரிக்கை என்ற இரண்டு குதிரையிலும் லாவகமாக பயணிப்பவர் .ஆற்றல் மிக்கவர் .சிறந்த பண்பாளர் .மனித நேயம் மிக்கவர் . மதுக் கடைகளை மூடு என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தி கவிதைகளை தனது மின்னல் கலைக்கூடம் சார்பாக நூலாக வெளியிட்டவர் .புகையிலை ஒழிப்போம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தி கவிதைகளை மின்னல் கலைக்கூடம் சார்பாக நூலாக வெளியிட்டவர் .சமுதாய ஈடுபாடு உள்ளவர் .
பற ...  பற ... என்ற நூலின் தலைப்பே பறவைகளை நினைவூட்டி விடுகின்றது .நூல் முழுவதும் பறவைகள் ! பறவைகள்  ! பறவைகள் ! பற்றிய ஹைக்கூ கவிதைகள் படிக்கும் வாசகனுக்கு சிறகுகள்  முளைக்க வைக்கின்றன .அட்டைப்பட வடிவமைப்பு .உள்  அச்சு,பறவைகள்  புகைப்படங்கள் என யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .பாராட்டுக…

ஆய்வு நூலின் அறிமுக விழா !

படம்
ஆய்வு நூலின் அறிமுக விழா !

மதுரை மணியம்மை மழலையர் பள்ளி கலா மண்டபத்தில் 29.9.2013 ஞாயிறு அன்று நடைபெற்ற இலங்கைத் தமிழ் எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் "தலைநகரில் தமிழ் நாடக அரங்கு" ஆய்வு நூலின் அறிமுக விழா பேராசிரியர் தி.சு.நடராசன் தலைமையில் நடைபெற்ற பொழுது, எழுத்தாளர் பன்னீர் செல்வத்திற்குப் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் வழங்கினார். படத்தில் உடன் இருப்பவர்கள் பேராசிரியர் தி.சு.நடராசன், கவிஞர் இரா.ரவி ஆகியோர்.

பேரா.இராம சுந்தரம் [மேனாள் தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகம் - வார்சா ப.க.கழகம்],கவிஞர் பேனா மனோகரன் ,கவிஞர் கண்ணதாசன் ,பேரா.போத்திரெட்டி, மேனாள் அமெரிக்கன் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் ஆகியோருடன் சோழநாகராஜன், ஓவியக் கவிஞர் ஸ்ரீரசா[முகநூலில் சுப்ரமணியம் ரவிக்குமார்],கவிஞர் சி.பன்னீர்செல்வம்,எழுத்தாளர் அர்சியா ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்

நூல் வெளியீட்டு விழா

படம்
மதுரை மணியம்மை தொடக்கப் பள்ளியில் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் எழுதிய திருமுருகாற்றுப் படை  நூல்  வெளியீட்டு விழா நடந்தது . கவிஞர் இரா .இரவி நூலை பெற்றுக் கொண்டார். உடன் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர்
திரு . பி .வரதராசன் உள்ளார் .ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுந்தர மகாலிங்கம் திருக்குறளைப்  பாடி ஆடினார் .

உன் உதட்டுச் சாயத்தால் ! நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

படம்
உன் உதட்டுச் சாயத்தால் ! 
நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
கற்பகம் புத்தகாலயம் !4/2 சுந்தரம் தெரு .தியாகராயர் நகர் .சென்னை 600017.விலை ரூபாய் 40. தொலைபேசி 044-24314347. மின்னஞ்சல்  info@karpagamputhakalayam.com
நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களின் முந்தைய நூல் " அவசரமாய் ஒரு காதலி தேவை "இந்த நூலின் பெயர் உன் உதட்டுச் சாயத் தால் ! நூலின் பெயர் போலவே கவிதைகளும் வித்தியாசமாக உள்ளன .நூலில் உள்ள புகைப்படங்கள் ,முன் பின் அட்டை ,உல் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூல் வெளியிட்ட  கற்பகம் புத்தகாலயத்திற்கு பாராட்டுக்கள் . . வாசகர்களுக்கு காதல் கவிதைகள் மேடும் சலிப்பதே இல்லை. நிலவை ரசிப்பதுபோல காதல் கவிதைகளையும் ரசிக்கலாம். படிக்கும் வாசகனுக்கு மலரும் நினைவுகளாக அவரவர் காதல் நினைவுகள் மலர்ந்து விடும் .காதல் கவிதை எழுதுவதில் காதலர்களிடையே புகழ் பெற்றவர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின்  பாணிபோல இவரும்  எழுதிஉள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம் . நல்ல தமிழ்க் கவிதை எழுதுபவருக்கு நல்ல …

மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் அவர்களின் வாழ்த்து மடல் .

படம்
இனிய நண்பர் 
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் தலைவர் 
மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் அவர்களின் வாழ்த்து மடல் .


சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு !

படம்
சங்கம்   வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு !

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையம் வந்த சுற்றுலாப் பயணிகளை   வரவேற்று இனிப்பு  , தொப்பி , மதுரையில் உள்ள சுற்றுலாத்தலங்கள்  பற்றிய வண்ணப் புகைப்படங்கள் கையேடு , மாவட்ட சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் ,உதவி சுற்றுலா அலுவலர் இரா .இரவி ,மற்றும்  டிரவல்  கிளப்  பொறுப்பாளர்களும்    கலந்து கொண்டனர் .மதுரைக்கு வருகை தந்த  திரு எ  .வி .எம் .சரவணன் அவர்களையும் வரவேற்றனர் .
புகைப்படங்கள் இனிய நண்பர்  (G.R.T) திரு .
வெங்கடேஷ் கை வண்ணத்தில்

மதுரையில் உலக சுற்றுலா தின விழா ! தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் மதுரையில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது .மதுரையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கல்லூரி மாணவ மாணவியருக்கு சுற்றிக் காட்டும் விதமாக பாரம்பரிய நடைப்பயணத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் இல .சுப்பிரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்

படம்
மதுரையில் உலக சுற்றுலா தின விழா !

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில்  மதுரையில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது .மதுரையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கல்லூரி மாணவ மாணவியருக்கு சுற்றிக் காட்டும் விதமாக பாரம்பரிய நடைப்பயணத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் இல .சுப்பிரமணியன் கொடி  அசைத்து தொடங்கி  வைத்தார்கள்

மதுரையில் உலக சுற்றுலா தின விழா !

படம்
மதுரையில் உலக சுற்றுலா தின விழா !

மதுரையில் உலக சுற்றுலா தின விழா !

படம்
மதுரையில் உலக சுற்றுலா தின விழா !

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில்  மதுரையில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது .மதுரையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கல்லூரி மாணவ மாணவியருக்கு சுற்றிக் காட்டும் விதமாக பாரம்பரிய நடைப்பயணத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் இல .சுப்பிரமணியன் கொடி  அசைத்து தொடங்கி  வைத்தார்கள் . தானம் அறக்கட்டளை திரு பாரதி மற்றும் வழிகாட்டிகள் கலந்து கொண்டனர் .திருப்புவனம்  கருப்பையா குழுவினரின் மேல தாள இசையுடன் ஊர்வலம் வந்தது .

மதுரையில்  உள்ள  முன்னணி வழிகாட்டிகள்  சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவல்களை விரிவாக எடுத்து இயம்பினர் .ஊர்வலம் மீனாட்சி பூங்காவில் இருந்து தொடங்கி  மீனாட்சி கோவில் வழியாக நகரா மண்டபம் ,புது மண்டபம் ,விட்டவாசல்,தேர்கள்,விளக்குத்தூண்  ,
பத்துத்தூண்,வழியாக சென்று  திருமலை மன்னர் அரண்மனை சென்று சேர்ந்தது .தொல்லியல் மண்டல உதவி இயக்குனர் கணேசன் அரண்மனை வரலாறு கூறினார் .மாவட்ட சுற்றுலா அலுவலர்
க .தர்மராஜ் தலைமையில் உதவி சுற்றுலா அலுவலர்கள்
இரா .இரவி ,சிவகுமார் ,உமாதேவி , ஜெயந்தி ,பணியாளர்கள் பி .ஜே .ஆண்டனி ,நீலமேகம் ,தேவநாதன் ,மாரிமுத்த…

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி !
தொட்டில் கட்டில்  மூங்கில்  வாழ்க்கை !
மருமகள் உடைத்தால்  பொன்குடம்  உடையுமா பொன்குடம் !
பசி ஏப்பத்தில் மக்கள்  புளி ஏப்பத்தில் அரசியல்வாதிகள் !  
மணலை கயிறாகத் திரிப்பர்  வானத்தை வில்லாய் வளைப்பர்  அருகில் தேர்தல்   !
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்  நல்லவனுக்கு தேவையில்லை  ஆயுதம் !
கறுப்புக் கோழி   இட்டது  வெள்ளை  முட்டை !
வெற்றிக்கனி  ஈட்டிட ஆயுதம்  முயற்சி !
சாதனைக்கு  வழி  விடாமுயற்சி !
குடிகாரனின்      உயிர் குடித்தது  மது !
வேகத்தின் குறியீடு  விரயமில்லா  ஆற்றல்   கொம்பில்லாக் குதிரை !
என் முதுகு  எனக்குத் தெரியும்  கண்ணாடியில் !
நம் உள்ளம்  நமக்குத் தெரியும்  நம்மை உணர்ந்தால்  !

இன்று 24.9.2013. தி இந்து தமிழ் நாளிதழில் வந்த பொது அறிவுத் தகவல்களை வைத்து எழுதிய புதுக்கவிதை .

படம்
இன்று 24.9.2013. தி இந்து தமிழ் நாளிதழில் வந்த பொது அறிவுத் தகவல்களை வைத்து எழுதிய புதுக்கவிதை .   
என்னவளே  !  கவிஞர்   இரா .இரவி !
என்னை எறும்பாக்கியவள்  நீ  ! ஆம் உன்னால்  தூங்காத  எறும்பு ஆனேன் ! எறும்பு  தூங்குவதில்லை ! உன்னைக் கண்ட நாள் முதலாய்  நானும் தூங்குவதே   இல்லை  ! எறும்பு ஒய்வது இல்லை  நானும் ஓயவில்லை ! ---------------------------------------------- மரங்கொத்தி பறவை மரத்தை  ஒரு நொடியில் 20 முறை கொத்தும் ! மனம்  கொத்தி  பறவையான  நீ  ஒரு நொடியில் 100 முறை கொத்துகின்றாய் ! அலகால்  கொத்தும் பறவை அது ! அழகால் கொத்தும்  பாவை நீ  -------------------------------------------------- .தலை துண்டிக்கப்பட்டாலும்  ஒன்பது நாள் உயிர் வாழும்  கரப்பான் பூச்சி ! நம் உறவு துண்டிக்கப்பட்டால்  நிமிடத்தில் என் உயிர் பிரியும் ! எந்தன் உயிர்  உந்தன் உறவில் உள்ளது .  -------------------------------------------------- ஒரு நத்தையால்  மூன்று  ஆண்டுகள் தூங்க  முடியும்  ! என்னவளே நீ என்னோடு  இருந்தால் என்னாலும்  முடியும் ! கவலையின்றி கட்டி அணைத்து  தூங்கிக்  கொண்டே இருக்கலாம் ! -----------------------…

6 மெழுகு வர்த்திகள் ! நடிப்பு ; ஷாம்

படம்

ஆயிரம் ஹைக்கூ நூலிற்கு இனிய நண்பர் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் விமர்சன மடல்

படம்
ஆயிரம் ஹைக்கூ நூலிற்கு இனிய நண்பர் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் விமர்சன மடல்

6 மெழுகு வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

படம்
6 மெழுகு  வர்த்திகள் !
நடிப்பு ; ஷாம் ,  பூனம் கௌர்  !
இயக்கம் ;துரை 
இசை ;ஸ்ரீகாந்த் தேவா !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நடிகர் ஷாம் நல்ல நடிகர் என்பதை வெளிப்படுத்தி உள்ள படம் .ராம் என்ற பத்திரமாகவே மாறி உள்ளார் .தாடி வளர்த்து ,கண்களை வீங்க வைத்து தன்னை மிகவும் வருத்தி நடித்து உள்ளார் .இனிவரும் காலம் கதாநாயகியோடு பாட்டுப்பாடி மட்டும் நடித்து வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து . 2 ஆண்டுகள் கஷ்டப்பட்டு நடித்து உள்ளார். பாராட்டுக்கள் .கதாநாயகி பூனம் கௌரும்  நன்றாக நடித்து உள்ளார் . . கணினி பொறியாளர் தம்பதிகளின் மகன் கெளதம் .வயது  6.பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி விட்டு  கடற்கரைக்கு   செல்கின்றனர். மகன் கெளதம் தொலைந்து  விடுகிறான் .குழந்தைகளைப்  பிச்சை எடுக்க பயன்படுத்தும்  கும்பல் கடத்தி விடுக்கிறது .கெளதமை தேடி அலைகிறார் ஷாம்.
காவல் நிலையம் செல்கிறார் .பயன் இல்லை .துப்பு கிடைத்து ஆந்திரா செல்கிறார் .அங்கிருந்து கெளதமை வேறிடம் கொண்டு சென்று விட்டார்கள் என்று அறிந்து போபால் செல்கிறார்,மும்பை  செல்கிறார் .கல்கத்தா செல்கிறார் .எப்படியும் மகனை மீட்பது என்ற உறுதியுடன் பயணித்து கட…

ஆயிரம் ஹைக்கூ நூல் விமர்சனம் இனிய நண்பர்,கவிஞர் பொன் .குமார் .சேலம்

படம்
ஆயிரம் ஹைக்கூ நூல் விமர்சனம் 
இனிய நண்பர்,கவிஞர் பொன் .குமார் .சேலம்

ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

படம்
ஒரு வானம் இரு சிறகு ! 
நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! கவிதா வெளியீடு .த  பெ .எண் 6123.  8.மாசிலாமணி தெரு , பாண்டி பஜார் , தியாயராயர் நகர் , சென்னை   600017.தொலைபேசி 044-24364243.
நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள் நாடு அறிந்த நல்ல கவிஞர் .புதுக்கவிதை  தாத்தா என்று செல்லமாக  அழைக்கக் கூடிய கவிஞர் .கவிவேந்தர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் .தமிழ்த்தேனீ இரா .மோகன் ,தமிழ்ச்சுடர் நிர்மலா  மோகன் , நான் மற்றும் பட்டிமன்ற அணியினரும் சென்னை சென்றபோது  கவிவேந்தர் மு .மேத்தா இல்லம்  சென்று இருந்தோம் .இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தார்கள் .பெரிய கவிஞர் என்ற பந்தா துளியும் இல்லாதவர் கவிவேந்தர் மு .மேத்தா .அவரை பலமுறை சந்தித்து இருக்கிறேன். அலைபேசியிலும் பேசி இருக்கிறேன் .நல்ல மனிதர் .பிறகுதான் கவிஞர் .கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள்தான் எல்லோரும் புதுக்கவிதை எழுதிட வழியை திறந்து  விட்டவர் .அவருடைய நூல் படித்து கவிஞர் ஆனவர்கள் உண்டு .
நூலில் உள்ள எல்லாக் கவிதைகளும் பிடித்து இருந்தாலும் ,பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !
சூரிய சந்த…

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ  ( சென்ரியூ  ) கவிஞர் இரா .இரவி !

உளியால் செதுக்குமுன்  மனத்தால் செதுக்கினான்  சிற்பி !
அழியாமல் இருந்தது  நீரில் வரைந்த  ஓவியம்  புகைப்படம் !
ஒளிருவதில்லை  தீட்டும்முன்  வைரம் !
வருந்துவதில்லை  நிறத்திற்காக   காகம் !
முட்டையில் இருந்து  கோழி மட்டுமல்ல  சேவலும் வரும்  !
சின்ன மீன் போட்டு  சுறா மீன் பிடிப்பு  அன்பளிப்பு !
கிணறுதான்  கடல்  தவளைக்கு  !
உதட்டில் தேன்  உள்ளத்தில் தேள்  அரசியல் !
நிறைய கேள் பார்  குறைவாகப் பேசு  ஒன்றுதான் வாய் !
நீச்சுத் தெரியாமலே  மிதந்தது  குளத்தில் நிலா !  
குடிகாரனுக்கு எதிரி  வெளியில் இல்லை உள்ளே  நாக்கு !
காண்பதும் பொய்  சுற்றுவதாகத் தோன்றும்  சுற்றாத சூரியன் !
எரிந்தது விளக்கு  எண்ணை திரி இன்றி  மின்ம்னி !
ஒரு எலும்பு இல்லை  பல நரம்பு உண்டு  நாக்கு !
உணர்த்தியது  நிலையாமையை  உதிர்ந்த இலை !  

ஆயிரம் ஹைக்கூ நூலிற்கு இனிய நண்பர் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் விமர்சன மடல்

படம்
ஆயிரம் ஹைக்கூ நூலிற்கு இனிய நண்பர் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் விமர்சன மடல்

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ  ( சென்ரியூ  ) கவிஞர் இரா .இரவி !

இலை குலை   தந்தும்
வெட்டினான்  வாழையை
திருமணம் !


கண்ணில் தெரிவதில்லை
கடல் நீரில்
உப்பு !

பூனையிடம்
சிக்கிய எலியாக
மக்கள் !

ஊரெல்லாம் பிரபலம்
வீட்டில் இடி
படைப்பாளி !

கொடியது
வாதத்தை விட
பிடிவாதம் !

சின்னத் திருட்டு சிறை
பெரியத் திருட்டு குளு  குளு அறை
ஊழல் !

போக்குவரத்துக்கு நெரிசல்
வானத்திலும் வந்தது
விமானம் !

கையில் ஜெபமாலை
கண்ணில் காமம்
சாமியார் !

கிணற்றில்  தள்ளி
கல்லையும் போடுகின்றனர்
விலைவாசி !

ருசிதான்
வேப்பம் பழமும்  
காகத்திற்கு  !

அடங்கு
வீரியத்தை விட
காரியம் பெரிது !
.
கத்தரிக்காய் வாங்கினால்
பூசணிக்காய் இலவசம்
ஏமாற்று வணிகம் !

கட்டுப்படுத்தும்
கால் விலங்கு
மனைவி !

விவசாயத்தின்
ஒரு அங்கம்
களை எடுப்பு !

தானியம் தராவிட்டாலும்
அழகுதான்
பசும்புல் !  
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

.கொஞ்சல் வழிக் கல்வி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

படம்
.கொஞ்சல் வழிக் கல்வி !

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . thabushankar@yahoo.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விஜயா பதிப்பகம் .20 ராஜ வீதி கோவை .விலை ரூபாய் 70. தொலைபேசி ; 2394614.
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்கள் காதல் கவிதைகள் எழுதியே புகழ் அடைந்து  விட்டார் .இவருடைய நூல் என்றால் விஜயா பதிப்பகத்தாரும் தனி கவனம் செலுத்தி, கட்டி அட்டை ,அழகிகளின் புகைப்படங்கள் ,உள்  அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூலை பார்த்தாலே வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் வண்ணம் வடிவமைப்பு .காதலர்கள் நேசிப்பது காதல் .காதலர்கள் பரிசளிப்பது தபூ சங்கர் நூல்கள் .இப்போதெல்லாம்  காதலர்கள் காதலிக்கு காதல் கடிதம் தருவதில்லை .தபூ சங்கர் நூலையே காதல் கடிதமாகத் தருகிறார்கள் .அந்த அளவிற்கு புகழ் பெற்று விட்டது .இந்த நூல் குறுகிய நாட்களில் நான்கு பதிப்புகள் வந்து விட்டன . ' அஞ்சல் வழிக் கல்வி '  என்று எல்லோராலும் அறியப்பட்ட சொல்லில் முதல் எழுத்தான அ எடுத்து விட்டு கொ என்று எழுதி 'கொஞ்சல் வழிக் கல்வி'என்று  வித்தியாசமாக எழுதி வெற்றி பெறுகின்றார் 
.
திரைப்படத்திற்கு ஆங்கிலச்சொல் கலப்பின்றி …

ஆயிரம் ஹைக்கூ♥ நூல் ஆசிரியர் ! இரா.இரவி♦ நூல் விமர்சனம் ! ஞா.சந்திரன்

படம்
ஆயிரம் ஹைக்கூ♥

நூல் ஆசிரியர் ! கவிஞர்இரா.இரவி♦

நூல் விமர்சனம் ! 
ஞா.சந்திரன்! முதுநிலைத் தமிழாசிரியர் !புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி ,மதுரை .♦

இந்நூலை படிக்க படிக்க இனிக்கிறது.படித்து முடித்தப் பிறகு மனம் இந்நூலை மட்டுமே நாடுகிறது.இலவசமாக தமிழ்வழிக்கல்வி கொடுத்தும் ஆங்கிலத்தையே மக்கள் நாடுவதை''

கூலி கொடுத்தும்
கரும்பு தின்ன மறுக்கின்றனர்
தமிழ்வழிக்கல்வி"

ஏழைகள் தூரத்திலும்;காசு உள்ளவர்கள் கடவுள் காலடியில் நின்று வணங்க கோயிலில் அனுமதிப்பதை

"கடவுளின் முன்
அனைவரும் சமம்
சிறப்பு தரிசனம்?".

நம் நாட்டை சுற்றி கடல் மட்டும் இல்லை கடனும் இருக்கிறது என்பதை,

"அரசுக்கு
சளைத்தவனல்ல குடிமகன்
கடன் பெறுவதில்"....

என்பது போன்ற ஹைக்கூ கவிதைகள் சமுதாய சரவெடிகளாக வெடிக்கின்றன.சுற்றலா அலுவலர் இரவி
சுற்றி வளைக்காமல் மனதில் பட்ட கருத்துக்களை மனதைச்சுட்ட கருத்தக்களை நேரடியாக வௌிக்காட்டியுள்ளார்.இந்நூலில் இருப்பது 'ஹைக்கூ கவிதைகள் அல்ல;ஹைடெக் கவிதைகள்".

தொடரட்டும் உம் கவி பணி♥
வாழ்த்துகள்♦நட்புடன் ஞா.சந்திரன்♥

துளிப்பா நாளிதழ் 19.9.2013

படம்
துளிப்பா நாளிதழ் 19.9.2013

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ  ( சென்ரியூ  ) கவிஞர் இரா .இரவி !
விலை ஏற ஏற  ரத்த  அழுத்தம் ஏறியது  பெட்ரோல் ( எரிபொருள்  )
வாக்குக் கேட்டு வரட்டும்  வைப்போம் வேட்டு  சினத்தில் மக்கள் ! 
எங்கும் ஊழல்  எதிலும் ஊழல்  மக்களாட்சி !
மாறியது ஆத்திச்சூடி   படிப்பதை விட  பிச்சை எடுப்பது மேல் !
வெறுத்தார்கள் தங்கம்  தமிழ்நாட்டுப் பெண்கள்  கனவு !
துண்டு விழுந்தது  திட்டமிட்டதில்  குடும்பச் செலவு ! 
பெரிய யானையை மிரட்டியது  சிறிய எறும்பு  காதில் நுழைந்து !
கருவுருமுன்  பெயர் வைத்தார்கள்  பிரதம வேட்பாளர் அறிவிப்பு !
விழி வழி  இன்பம்  காண்பது சுகம்  மலரும் மொட்டு !
கூந்தலின் மணம் இயற்கையா ? செயற்கையா ? இருக்கட்டும்  செயற்கையாக மனம் !
இடம் பெற்றார்  வரலாற்றில் அசோகர்  மரம் நட்டதால் !
சொல்லியது அனுபவம்  தோலின் சுருக்கம்  தாத்தா !
குடை இருந்தும்  பயனில்லை  பெரு  மழை ! 
வருங்கால சந்ததிகளின்  வளமான வாழ்வுக்கு  மழை நீர் சேமிப்பு !
பார்வையற்றோரிடம்  திருடுபவன்    கொடூரன் !

-- 

துளிப்பா நாளிதழ் 18.9.2013

படம்
துளிப்பா நாளிதழ் 18.9.2013

வடிகால்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

படம்
வடிகால்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் 41.பி .சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஷ்டேட் ,அம்பத்தூர் ,சென்னை .600098.விலை ரூபாய் 50. தொலைபேசி 044- 26359906.
நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி அவர்கள் உதவி கல்வி அலுவலராக இருந்து ஒய்வு பெற்றவர் .பின்னர் ஊர் மக்களால் ஊராட்சி மன்ற தலைவராக்கப்பட்டு அதையும் திறம்பட நடத்திக் காட்டியவர் .அதிர்ந்து பேசாத மென்மையான  சுபாவம் என்றாலும்  எடுத்ததை முடித்துக் காட்டும் நெஞ்சுறுதி துணிவு மிக்கவர் .  என்று நூலின் அணிந்துரையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் இரா .காமராசு எழுதி உள்ளார் .பதிப்பகத்தார் உரையும்  மிக நன்று .நூல் ஆசிரியர் தன்னுரையில் கவிதைகள் வாழ்க்கை அனுபவத்தின் வெளிப்பாடு உணர்ந்த  உணர்வின்  வெளிப்பாடு  என்று எழுதி உள்ளார்கள். கவிதைகளைப் படித்து விட்டு நூல் ஆசிரியரை செல்லிடப்பேசியில்   அழைத்துப் பாராட்டினேன் .வாழ்வில் சந்தித்த சோகங்கள், அனுபவங்கள் ,கவலைகள் அதிகம் என்றார்கள் .உண்மையை கவிதையாய் வடித்ததால் கவிதைகள் படிக்க மிக நன்றாக உள்ளன .  . சங்க காலத்தில்…