புதன், 31 டிசம்பர், 2014

படித்ததில் பிடித்தது ! மாமனிதர் அப்துல் கலாம் எழுதிய' வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்' கட்டுரை படித்து மகிழுங்கள் .நன்றி . தினமலர் நாளிதழ் !

படித்ததில் பிடித்தது ! மாமனிதர் அப்துல் கலாம்  எழுதிய' வெற்றி மீது வெற்றி  வந்து உன்னைச் சேரும்' கட்டுரை படித்து மகிழுங்கள் .நன்றி . தினமலர் நாளிதழ் !


http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2015/01/01/ArticleHtmls/01012015108003.shtml?Mode=1

1.1.2015 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ராஜ் தொலைக்காட்சி பார்த்து மகிழுங்கள்

1.1.2015 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ராஜ் தொலைக்காட்சி பார்த்து மகிழுங்கள் .பேச்சுக்கச்சேரி நிகழ்ச்சியில் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களுடன் ( கவிஞர் இரா .இரவி ) நானும் பேசி உள்ளேன். பார்த்து மகிழுங்கள் .
தலைப்பு ; இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை போர்க்களமா ? பொற்க்காலமா ?
பொற்க்காலமே ! என்று கவிஞர் இரா .இரவி பேசினார் .
போர்க்களமே ! என்று முனைவர் ஞா. சந்திரன் பேசினார் .
நிகழ்ச்சி இயக்கம் திரைப்பட இயக்குனர் பாஸ்கர் ( அகட விகடம் )


புத்தகம் போற்றுதும்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
*****
மகிழ்வுரை :
முனைவர் யாழ். சு. சந்திரா,இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை,
ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, மதுரை.
*****
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், 
சென்னை-600 17. 
பக்கங்கள் : 224, விலை : ரூ. 150
------------------------------
கவிஞராக அறியப்பட்ட இரவி அவர்களின் இரசிகத் தன்மைக்கான அடையாளம் ‘புத்தகம் போற்றுதும்’. ‘அவ்வுலகம்’ தொடங்கி, ‘கவிதைத்தேன்’ என ஐம்பது நூல்கள் நமக்கு அறிமுகம்!
நூல்கள் அறிமுகத்திற்கு முன்னர் நூலாசிரியர் அறிமுகம் நன்று!
‘கல்விப்பூங்காவில் சிந்தனைப் பூக்கள்!’ எழுதிய  மூ.இராசாராம்இ.ஆ.ப.  அவர்கள் ுற்றுலாத் துறையின் ஆணையாளராக  இருந்தபோது, மிகச்சிறந்த சிந்தனையாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சுற்றுலாத்துறையின் செயலராக இருந்தார்.  இந்த இருவரின் காலம் சுற்றுலாத் துறையின் பொற்காலம்! என்று சொல்லும் அளவிற்கு இருவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளைச் செய்தனர் என்பது விமர்சன நூலில் கூட ஆவணப்பதிவுகள் அமைவதற்கான சான்று!
நூல் விமர்சனம் என்பது நூலைப் படிக்கத் தூண்டுவதாக அமைதல் வேண்டும்.  பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ் என்ற நூலில் வள்ளுவரோடு 224 அறிஞர்கள் ஒப்புமையாக்கப்படுகின்றனர் என்ற கணக்கு வாசகர்களின் வாசிப்பு ஆர்வத்திற்கான் தூண்டில்!
மு.வ. வின் ‘மூவா நினைவுகள்’, ம.ரா.போ. குருசாமி அவர்களின் நூல், நமது வாசிப்பிற்கான விருந்து ஆகும்.  இதனை அடுத்து அமைவது பேரா. பொன். சௌரிராஜன் அவர்களின் ‘மு. வரதராசன்’ வரலாறு படைப்பு குறித்த சாகித்ய அகாடமி வெளியிடும் ‘மு.வ.’ பற்றி முழுமையான சித்தரிப்புக்கு உதவுபவை.
இந்த நூலைப் படித்தவுடன் முதலில் படிக்கத் தோன்றுவது எம்.எஸ். ஸ்ரீலெஷ்மியின் ;பெண்ணிய நோக்கில் கம்பர்’ என்ற நூல்!
திருக்குறள் அழகினை அமைப்பின் அடிப்படையில் விளக்கும் தண்டபாணி தேசிகரின் நூல், எத்தனையோ முறை ஆய்வுகளுக்கு அடிக்குறிப்பாகப் பயன்படுத்திய நினைவு!

நூலாசிரியர் கவிஞர் அல்லவா?  21 கவிஞர்களின் கவிதை நூல்கள்!  கட்டுரைகள் நெடுகினும் பதச்சோறாகக் கவிதைகள்!

பக். 170-ல்,
முக்கியத்துவம் இழந்தது
      மனப்பாடச் செய்யுள்
      திரைப்பாடல்!
பக். 172-ல்,
தபால் செலவில் தடுக்கி
      அலமாரி இடுக்கில் விழுந்தது
      மீண்டும் மீண்டும் கவிதை!
பக். 177-ல்,
பாறையில் உன்
      பெயரை எழுதினேன்
      சிற்பமாகியது கல்!

எல்லாம் சரி!  ‘ஆயிரம் ஹைக்கூ’ பின்னிணைப்புகள், இரவியின் நூலை நமக்கு அறிமுகப்படுத்திகிறது’ ஆனால், இந்த ஐம்பது நூல்களின் பதிப்பு விவரம் பற்றியும் இணைப்பு இருந்திருந்தால், வாசிப்பை நேசிப்பவர்களுக்கு வாய்ப்பாகுமே!  அடுத்த பதிப்பில் கவிஞர் ‘இரவி’ நினைவில் கொண்டால் நன்று!

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

மதுரையில்இலண்டன் புலவர் ,கவிஞர் ,எழுத்தாளர் சிவநாதன் இயற்றிய நாட்டிய நாடகம் நடந்தது.

மதுரையில்இலண்டன் புலவர் ,கவிஞர் ,எழுத்தாளர் சிவநாதன் இயற்றிய நாட்டிய நாடகம் நடந்தது.


மதுரையில் உள்ள லட்சுமி சுந்தரம் அரங்கில் இலண்டன்   தமிழ் அவையம் சார்பிலும் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை சார்பிலும் இலண்டன் சிவநாதன் இயற்றிய நாட்டிய நாடகம் நடந்தது. திருக்குறள்  செம்மல் மணிமொழியன் தொடங்கி வைத்தார் .உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை தனி அலுவலர் முனைவர் க .பசும்பொன், கவிஞர் இரா .இரவி ,கவிஞர் கருப்பையா ,கவிஞர் சுரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் . இலண்டன் நாட்டிய மாணவிகளும் தமிழக நாட்டிய மாணவிகளும் நடனமாடி  நாட்டிய நாடகம் அரங்கேற்றம் செய்தனர் .மிகச் சிறப்பாக நாட்டியமாடிய நாட்டிய மாணவிகளுக்கும் ,நாட்டிய ஆசிரியருக்கும், நாட்டிய நாடக ஆசிரியர் இலண்டன் சிவநாதன் அவர்களுக்கும்  பாராட்டு தெரிவித்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை  தனி அலுவலர் முனைவர் க .பசும்பொன் தலைமையில் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை. பணியாளர்கள் செய்து இருந்தனர் .


.


செவ்வாய், 30 டிசம்பர், 2014

ஆங்கிலப் புத்தாண்டு 2015 வாழ்த்துக்கள்

வலைப்பூ வாசகர்கள்    அனைவருக்கும்  ஆங்கிலப் புத்தாண்டு 2015 வாழ்த்துக்கள் .2015 ஆண்டு நலமாகவும் , வளமாகவும், புகழ் மிக்க ஆண்டாகவும் , பிறருக்கு உதவிடும் ஆண்டாகவும் அமைந்திட நல் வாழ்த்துக்கள் .அன்புடன்  கவிஞர் இரா .இரவி !

தமிழ்இலக்கியக் காட்சிகளை சிற்பமாக வடித்துள்ள கடம்பவனம் அரங்கம் --

தமிழ்இலக்கியக் காட்சிகளை சிற்பமாக  வடித்துள்ள கடம்பவனம் அரங்கம் 
-- 

ஓட்டுனரிடம் சல்மான் கான் புகைப்படம் எடுத்து விட வேண்டுகோள் ! கவிஞர் இரா .இரவி

மதுரையில் தானி ( ஆட்டோ ) வண்டியில் தமிழினப் படுகொலையாளர் ராஜ பட்செவிற்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் சல்மான் கான் புகைப்படம் குழாய் விளம்பரம் இருந்தது .ஓட்டுனரிடம் சல்மான் கான் புகைப்படம் எடுத்து விட வேண்டுகோள் வைத்தேன் .அவரும் தமிழ் உணர்வாளர் நாளை காலை முதல் வேலையாக இந்த விளம்பரத்தை எடுத்து விடுகிறேன் என்றார் . 

நடிகர் சல்மான் கான் திரைப்படங்களை உலகத தமிழர்கள் இனி பார்ப்பதை தவிர்ப்போம்

தமிழினப் படுகொலையாளர் ராஜ பட்செவிற்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் சல்மான் கான் திரைப்படங்களை உலகத தமிழர்கள் இனி பார்ப்பதை தவிர்ப்போம் .

புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் பேராசிரியர் யாழ் சு .சந்திரா ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி. மதுரை .

புத்தகம் போற்றுதும் !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் மதிப்புரை முனைவர் பேராசிரியர் யாழ் சு .சந்திரா 
ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி. மதுரை .


திங்கள், 29 டிசம்பர், 2014

1.1.2015 அன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராஜ் தொலைக்காட்சி

1.1.2015 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ராஜ் தொலைக்காட்சி பார்த்து மகிழுங்கள் .பேச்சுக்கச்சேரி நிகழ்ச்சியில் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களுடன் ( கவிஞர் இரா .இரவி ) நானும் பேசி உள்ளேன். பார்த்து மகிழுங்கள் .
தலைப்பு ; இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை போர்க்களமா ? பொற்காலமா ?

பொற்காலமே !     என்று கவிஞர் இரா .இரவி பேசினார் .
போர்க்களமே !      என்று முனைவர்  ஞா. சந்திரன்  பேசினார் .
நிகழ்ச்சி இயக்கம் திரைப்பட இயக்குனர் பாஸ்கர் ( அகட விகடம் )
31.12.2014 அன்று காலை 7.45 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில்

31.12.2014  அன்று காலை 7.45 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் "இனியவை இன்று" நிகழ்வில் கவிஞர் இரா .இரவியின் புத்தகம் போற்றுதும்
நூல் விமர்சனம் பார்த்து மகிழுங்கள் .மூன்றாம் நாளின் இறுதியாக நிகழ் நாடக மய்யம் வழங்கிய நாடகம் ! கவிஞர் இரா .இரவி !

மூன்றாம் நாளின் இறுதியாக நிகழ் நாடக மய்யம் வழங்கிய  நாடகம் !
கவிஞர் இரா .இரவி !

 28.12.2014 அன்று இரவு நானும் இனிய நண்பர் கவிஞர் சந்திரனும்  கடம்பவனம் சென்றோம் .முதலில் வெளிநாட்டு பெண்கலைஞரின் ஆங்கில நாடகம் நடந்தது .அவரும் மிகச் சிறப்பாக நடித்து கை தட்டல் வாங்கினார் .மூன்றாம் நாளின் இறுதியாக நிகழ் நாடக மய்யம் தியேட்டர் நாடக இயக்குனர் சண்முகராஜா இயக்கிய "போங்கோவின் தேசம்" என்ற அரசியல் நையாண்டி நாடகம் நிகழ்ந்தது.

 ஒலி ஒளி அமைப்பு மிக நன்று .நாடகத்தின் கருத்து , நாட்டில் நடக்கும் ஊழலையும் ,இலவசத்தால் மக்களை வசமாக்கி வாக்குப் பெறும் அவலத்தையும் .அரசியல்வாதிகள் அனைவருமே ஏமாற்றுவோராகவே இருக்கின்றனர் என்ற அவலத்தையும்  உணர்த்துவதாக இருந்தது. வாரிசு அரசியலையும் சாடி முடித்தார். சாமியார்களின் பித்தாலாடத்தையும்   உணர்த்தினார் .

நடிகர்கள் மிகச் சிறப்பாக நடித்தனர் .நாடகத்தின் இயக்குனர் 
திரு .சண்முகராஜா அவர்கள் மிகச் சிறப்பாக இயக்கி இருந்தார். தமிழ்இலக்கியக் காட்சிகளை சிற்பமாக  வடித்துள்ள கடம்பவனம் அரங்கம் முழுவதும் நிரம்பி  மக்கள் இருந்தனர் .யாதவர் கல்லூரி  நாட்டு நலத் திட்ட  மாணவிகள் .அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் , மாணவிகள் பலரும் வருகை தந்து கண்டு களித்தனர் .கர ஒலி தந்து எழுந்து நின்று  பாராட்டினார்கள் .

கடம்பவனம் நிர்வாக இயக்குனர் திரு. கணபதி ,திருமதி சித்ரா கணபதி, இந்த இணையரின் புதல்வர் உள்பட அனைவரும் நாடகத்தை கண்டு களித்தனர்.நாடக விழா நிறைவு விழாவும் சிறப்பாக நடந்தது .

இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் இராமசாமி கை வண்ணத்தில் புகைப்படங்கள் கண்டு மகிழுங்கள் .   

.நிலா 10 ஆம் ஆண்டு குழந்தைகள் புத்தாண்டு விழா அழைப்பிதழ் !

நிலா  10 ஆம் ஆண்டு குழந்தைகள் புத்தாண்டு விழா அழைப்பிதழ் !
புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் அவர்களுக்கு பாராட்டு விழா !

புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் அவர்களுக்கு பாராட்டு  விழா !


ஞாயிறு, 28 டிசம்பர், 2014

முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் தினத்தந்தி நாளிதழ் ஞாயிறு தோறும் எழுதி வரும்

நேர்மையான உயர் அதிகாரி ,சிறந்த சிந்தனையாளர்  முது முனைவர் 
வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள்  தினத்தந்தி நாளிதழ் ஞாயிறு தோறும் எழுதி வரும் உலகை உலுக்கிய வாசகங்கள் படித்து மகிழுங்கள் .

-- 

மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !

மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் குழந்தைகள் , மாணவர்கள் ,பெண்கள் ,பெரியவர்கள், தொகுப்பாளர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் சொன்ன நகைச்சுவைகள் !

 தொகுப்பு கவிஞர் இரா .இரவி !

ஒருவர் ; லட்டுப் போல பொண்ணுப் பார்த்து கட்டி வைத்தியே எப்படி இருக்கா ?
மற்றவர் ;பூந்திப் போல குடும்பத்தை உடைத்து மகனை பிரித்து தனி குடித்தனம்  போய் விட்டாள்.   
----------------------------------------------------------------
நோயாளி ;நீங்க கடைசியா எழுதி உள்ள மருந்து எங்குமே கிடைக்க  வில்லை .
மருத்துவர் ;.எங்குமே கிடைக்காது .அது என் கையெழுத்து .   
----------------------------------------------------------------
செவிலியர் ;அறுவைச்சிகிச்சை செய்யும் நேரத்தில் புத்தகம் படிக்கிறீர்கள் 
மருத்துவர் ;.சிறுநீரகம் எங்கு இருக்கும் என்பது மறந்து போச்சு. புத்தகத்தில் பார்க்கிறேன் .
---------------------------------------------------------------
மருத்துவ் பேராசிரியர் ;ஆண் மருத்துவ மாணவர்கள் மட்டும் இருந்த வகுப்பில் கர்ப்பபையைக்  காட்டி இது என்ன தெரியுதா ? என்றார்.
பலரும் யோசித்தனர் .
மருத்துவ் பேராசிரியர் ; உனக்கும் எனக்கும் இல்லாதது அது என்ன? என்றார் 
மாணவன் ; மூளையா ? என்றான் . 
-------------------------------------------------------------------------------------
10000 ரூபாய் 20000  ரூபாய் செலவு செய்து சுற்றினால் சுற்றுலா என்கின்றனர் .
10 ரூபாய் 20  ரூபாய் செலவு செய்து சுற்றினால் தண்டச்சோறு என்கின்றனர் .
---------------------------------------------------------------------------------------
செவிலியர் ; நாளைக்கு நீங்க அறுவைச் சிகிச்சை செய்ய இருந்த நோயாளி 10 வது மாடியில்   இருந்து குதித்து இறந்து விட்டார் .
மருத்துவர் ; அசச்சோ அவசரப்பட்டு விட்டாரே .
-------------------------------------------------------------------------------
ஜலதோஷம் ஏன் பிடிக்கிறது ?
மூக்கு மேலே இரண்டு  ஐஸ் ( eyes)  இருக்கு அதனால ஜலதோஷம் ஏன் பிடிக்கிறது ?
---------------------------------------------------------------------------
கரும்புச்சாறு எடுக்கும் குடும்பத்தார்க்கு மருமகளாகப் போனது தப்பாப் போச்சு  .
ஏன்?
சக்கையாகப் பிழிந்து வேலை வாங்குகின்றனர் .
--------------------------------------------------------------------------
மருத்துவர் ; உங்க குழந்தையின் எடை நாளுக்கு நாள் குறைந்து வருகிறதே ,உங்க கணவர் எங்க வேலை பார்க்கிறார் .
வந்தவள் ;  ரேசன் கடையில் .  
-------------------------------------------------------------------------
மேங்கோ( mango )  பிரித்தால் என்ன வரும் ?
man go என்று  வரும்  .
------------------------------------------------------------------------
மழை மேகம் பிரிந்தால் என்ன வரும் ?
மழை me  come என்று  வரும்
--------------------------------------------------------------------------
ஒருவர் ; என் மனைவி பல் விளக்கினால்தான் காப்பி தருவேன் என்கிறாள் .
மற்றவர் ; அது பரவாயில்லைங்க என்  மனைவி பாத்திரங்கள்  விளக்கினால்தான் காப்பி தருவேன் என்கிறாள்
------------------------------------------------------------------------
24 மணி நேரமும் திறந்து இருக்கும் கடை எது ?
சாக்கடை .
------------------------------------------------------------------------
அரசர் ;நீங்கள் பாடும் பாடலில்  அரிவாள் ,கத்தி , கம்பு வருகின்றதே ஏன்?
புலவர் ; அரசே நீங்கள்தானே பாடும் பாடலில் பொருள் இருக்க வேண்டும் என்றீர்கள்   .
----------------------------------------------------------------------

 பாலைவனத்தில் காகிதம் கிழிந்தால் ஒட்ட கவலை வேண்டாம் .
ஒட்ட     கம் இருக்கின்றதே  !
-------------------------------------------------------------------------------
அப்பா மகனிடம் ; நாம கிட்ட  இந்த வீடு போக வேறு வீடு உள்ளது அதை விற்க வேண்டும் .பத்திரிகையில் விளம்பரம் கொடு என்றார் .
மகன் என்அப்பாவின் சின்ன வீடு விற்பனைக்கு உள்ளது என்று    விளம்பரம் கொடுத்து விட்டான் .
----------------------------------------------------------------
பேரன் ; சின்ன வீடு என்றால் என்ன   தாத்தா.
 தாத்தா; அது எதுக்கு உனக்கு .
பேரன் ; சும்மா தெரிஞ்சு வைத்துக் கொள்ளலாமேன்னு  கேட்டேன் .
தாத்தா; தெரியாமல் வைத்துக் கொள்வதுதான் சின்ன வீடு .
-------------------------------------------------------------------------
.
நோயாளியை கூட்டிட்டு வரலாமா ?
மருத்துவர் ; கூட்டிட்டு வாங்க ! தூக்கிட்டுப் போங்க !
-----------------------------------------------------------------------
சாப்பிட முடியாத பன் எது ?
ரிப்பன் .
-----------------------------------------------------------------
உங்க அப்பா தினமும்  சீனி டப்பாவை ஏன் திறந்து  பார்க்கிறார்  ?
மருத்துவர் தினமும்  சுகர் செக் பண்ண சொல்லி இருந்தார் .
-------------------------------------------------------------------
கணவன் ; சாமிகிட்ட என்ன வேண்டினாய்?
மனைவி ; அடுத்த பிறவியிலும் நீங்கதான் எனக்கு கணவராக வர வேண்டினேன் .
மனைவி ;சாமிகிட்ட நீங்க என்ன வேண்டினீர்கள் .
கணவன் ; எனக்கு அடுத்த பிறவியே இருக்கக் கூடாது என்று வேண்டினேன் .
----------------------------------------------------------
சொர்க்கத்தில் கணவனையும் ,மனைவியையும் பிரித்து வைத்து இருப்பார்களாமே .
அதுனாலதான் அதன் பெயர் சொர்க்கம் என்கின்றனர் .
--------------------------------------------------------------
மண்டை  உடையாம இருக்க தலைக்கவசம் போடுகின்றனர் .
தலைக்கவசம்  உடையாம இருக்க யாரவது  மண்டையைப் போடுறாங்களா ?
-------------------------------------------------------------
உங்க ஊரில் யாரவது பெரிய மனிதர்கள் பிறந்து இருக்கிறார்களா ?
எங்க ஊரில் யாருமே பெரிய மனிதராகப் பிறப்பதில்லை .எல்லோரும் குழந்தையாகவே பிறக்கின்றனர் .
-----------------------------------------------------------------------
கோழிக்கு முந்திரிப் பருப்புப் போட்டு வளர்த்தாலும் அது முட்டைதான் போடும் .
100 மதிப்பெண் போடாது .
-------------------------------------------------------
என் மனைவி மாதிரி யாரும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்க முடியாது .
 தொலைக்காட்சியைக் கட்டிப் பிடித்து அழுது கிட்டே பார்ப்பாள் .
--------------------------------------------------------------------------
கிளி ஏன் பச்சையா இருக்கு ?
அது பச்சைக்கிளி அதுதான்  பச்சையா இருக்கு .
-------------------------------------------------------------------------
மருத்துவர் ; ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டு வந்து இருந்தால் இவரைக் காப்பாற்றி இருக்கலாம் .
வந்தவர் . விபத்து நடந்தே கால் மணி நேரம்தான் ஆகுது . 
-------------------------------------------------------------------------

ஏன் தண்ணீர் தெளித்து கோலம் போடுகின்றனர் .
கோலம் போட்டு தண்ணீர் தெளித்தால் கோலம் அழிந்து விடும் . 
--------------------------------------------------------------------------------
அடக்கமான பெண் வேண்டும் .
அப்ப நீங்க சுடுகாட்டுக்குதான்  போக வேண்டும் .   
------------------------------------------------------------------------
 கண் மங்கலாகத் தெரியுது கண்ணாடி போடணுமா ? டாக்டர் .
கண்டிப்பா போடணும் நான் மருத்துவர் இல்லை காவலர் .   
-----------------------------------------------------------------
கண் அறுவை சிகிட்சை முடிந்து அந்த நோயாளியிடம் கேட்டனர் அந்த கார் எண் சொல்லுங்க.
கார் எங்க இருக்கு     டாக்டர்.
-------------------------------------------------------

தயாரிப்பாளர் ; வித்தியாசமான கதை இருந்தால் சொல்லுங்க .
இயக்குனர் ; ஒரு பேய் செத்து மனிதனாகப் பிறக்கின்றது .மனித வாழ்க்கை வெறுத்து செத்து  திரும்ப  பேய் ஆகி விடுகிறது .
தயாரிப்பாளர் ;இப்படி எடுத்தால் மக்கள் நம்புவார்களா ?
இயக்குனர் ;ஒரு ஈ  வந்து  பழி வாங்குவதை நம்பினார்கள் படம் ஓடியது .இதையும் நம்புவார்கள் படம் ஓடும் .
-------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் பிரம்பை ஓங்கினார் .அதை மாணவன் பிடித்தான் .ஆசிரியர் சொன்னார் .இந்தப் பிரம்பைப் பிடித்து இருப்பவன் முட்டாள் என்றார் .
அதற்கு மாணவன் ; இந்த முனையா  ?  அந்த   முனையா ? என்றான்
-----------------------------------------------------------------------------
நாட்காட்டி கிழிப்பவனைப்   பார்த்து நாட்காட்டி கேட்டது .என்ன செய்து கிழித்து விட்டாய் என்று என்னை கிழிக்கிறாய் .
-----------------------------------------------------------------------------
அப்பா மகனிடம் பல வேலை சொல்லியும் கேட்காததால் வெறுத்து .உன்னை பெற்றதற்கு ஒரு எருமையை பெற்று இருக்கலாம் என்றார் .
மகன் ; எங்க அம்மாவை கட்டாமல் ஒரு எருமையை கட்டி இருக்க வேண்டும் .
--------------------------------------------------------------------------------


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

சனி, 27 டிசம்பர், 2014

நிகழும் நிகழ் நாடகம்! கடம்பவனத்தில் 27.12.2014.இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் ராமசாமி கை வண்ணத்தில்

நிகழும் நிகழ் நாடகம்! கடம்பவனத்தில் 27.12.2014.

இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் ராமசாமி கை வண்ணத்தில்.கடம்பவனத்தில் நிகழும் "நிகழ் நாடகம்"! சிலகாட்சிகள் .இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் ராமசாமி கை வண்ணத்தில்

கடம்பவனத்தில் 
நிகழும் "நிகழ் நாடகம்"!
சிலகாட்சிகள்

.இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் ராமசாமி கை வண்ணத்தில்


கடம்பவனத்தில் நிகழும் "நிகழ் நாடகம்"! சிலகாட்சிகள்!இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் ராமசாமி கை வண்ணத்தில்

கடம்பவனத்தில் நிகழும் "நிகழ் நாடகம்"! சிலகாட்சிகள்!

.நாடகம்: "ஜீவித்தோ மரித்தோ"
மூலப்பிரிதி: ரவீந்திரநாத் தாகூர்
நடிகை: சீமா பிஸ்வாஸ்
இயக்குனர்: அனுராதா கபூர்
இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் ராமசாமி கை வண்ணத்தில்

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...