இடுகைகள்

April, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புகைப்படங்கள் ; இனிய நண்பர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்

படம்
புகைப்படங்கள் ; இனிய நண்பர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்.

தமிழறிஞர் இரா. இளங்குமரனார் உரை!
தலைப்பு : நூல் !
நாள் : 26-04-2015 விழா ஏற்பாடு;
திரு. வரதராசன், புரட்சிக்கவிஞர் மன்றம்.

வரவேற்புரை கவிஞர் இரா .இரவி !
தலைமை ;திரு. வரதராசன்,
தொடக்கவுரை பேராசிரியர் பாலசுப்பிரமணியன்   ,
சிறப்புரை தமிழறிஞர் இரா. இளங்குமரனார்,
நன்றியுரை  திரு.பாலசுப்பிரமணியன் .எழுத்தர் (ஒய்வு )
30.4.2015 இன்று இரவு 10 மணிக்கு( மதுரை )அகில இந்திய வானொலியில் பட்டிமன்றம் கேட்டு மகிழுங்கள்

படம்
30.4.2015 இன்று இரவு 10 மணிக்கு( மதுரை )அகில இந்திய  வானொலியில் பட்டிமன்றம் கேட்டு மகிழுங்கள் .நடுவர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் .நானும் பேசி உள்ளேன் . வாய்ப்பு உள்ளவர்கள் கேட்டு மகிழுங்கள் .
 நன்றி .கவிஞர் இரா .இரவி

இரவில் ஒளிரும் நிலவு ! கவிஞர் இரா .இரவி !

படம்
இரவில் ஒளிரும் நிலவு ! கவிஞர் இரா .இரவி !

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரம் இரவில் ! கவிஞர் இரா .இரவி !

படம்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரம் இரவில் ! கவிஞர் இரா .இரவி !

கலைமாமணி ஏர்வாடியாரின் கவிதை உறவு மே மாத இதழில்இனிய நண்பர் , எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
கலைமாமணி  ஏர்வாடியாரின் கவிதை உறவு மே  மாத இதழில்இனிய நண்பர் , எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் பற்றி  மனத்தில் பதித்தவர்கள் பகுதியில்  பதிந்துள்ளார் .விரைவில் வெளி வர உள்ளது .

அகவிழி பார்வையற்றோர் விடுதி இன்னிசைக் குழுவிற்கு நீதியரசர் பாராட்டு . .

படம்
-- http://www.agavizhi.in/html/

அகவிழி பார்வையற்றோர் விடுதி இன்னிசைக் குழுவிற்கு நீதியரசர் பாராட்டு . .

முனைவர் புலவர் வை .சங்கரலிங்கம் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வான " கந்தர்வன் காலடித் தடங்கள் " நூல் வெளியீட்டு விழா

படம்
முனைவர் புலவர் வை .சங்கரலிங்கம் அவர்களின் முனைவர் பட்ட  ஆய்வான  " கந்தர்வன் காலடித் தடங்கள் " நூல் வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது .பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தி வந்தேன்.

சுழற்ச் சங்கத்தில் ஹைக்கூ பற்றி கவிஞர் இரா .இரவி சிறப்புரை

படம்
சுழற்ச்  சங்கத்தில்   ஹைக்கூ பற்றி கவிஞர் இரா .இரவி சிறப்புரை


பாரதிதாசனுக்கு இணை ஒருவர் உள்ளார் ! கவிஞர் இரா .இரவி !

படம்
பாரதிதாசனுக்கு இணை ஒருவர் உள்ளார் ! கவிஞர் இரா .இரவி !


புரட்சிக் கவிஞர் என்றால் பாரதிதாசன் !
பாரதிதாசன் என்றால் புரட்சிக்கவிஞர்! தந்தை பெரியாரின் புரட்சிக்கருத்துக்களை
தனது பாடல்களில் வடித்துக் காட்டியவர்! தமிழ் ஆசிரியராகப் பணியினைத் தொடங்கியவர்!
தமிழ் ஆசு கவியாக வாழ்வில் உயர்ந்தவர்! கொள்கையில் குன்றாக என்றும் நின்றவர்!
குணத்தில் அன்பின் சிகரமாகத் திகழ்ந்தவர்! கனக சுப்புரத்தினம் என்ற இயற்பெயரை பாரதிக்காக
பாரதிதாசன் என்று மாற்றிய உண்மைச்  சீடர்! பாரதிதாசன் ஆத்திசூடி அழகாக வடித்தவர்!
பாரினில் அனைவரும் விரும்பிடும் பாடல் படைத்தவர்! பாடல்களால் பரவசம் படிப்பவர்களுக்குத் தந்தவர்!
பார் போற்றும் பாடல்கள் புனைந்தவர்! பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்தவர்!
பகுத்து உணர பாடலால் உணர்த்தியவர்! தமிழ் இன உணர்வை கவிதையில் ஊட்டியவர்!
தமிழுக்காக குரல் தந்த புதுவைக் குயில் அவர்! ‘இருண்ட வீடு’ தந்து ‘குடும்ப விளக்கு’ ஏற்றி
‘எதிர்பாராத முத்தம்’ தந்து ‘அழகின் சிரிப்பு’க் கண்டவர்! ‘தமிழச்சியின் கத்தி’யை ‘பாண்டியன் பரிசாக’த் தந்தவர்!
‘குயில்’ ‘இசையமுது’ ‘குறிஞ்சித் திட்டு’ வடித்தவர்! ‘பெண்கள் விடுதலை’யை ‘பிசிராந்தையார்’க்கு யாத்தவர்…

வெளிநாடு செல்வது தொடர்பாக சென்னைக்கு புறப்பட்ட கலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்களை வழி அனுப்பிய போது எடுத்த படம் .உடன் இனிய நண்பர் வெங்கடேஷ்

படம்

நாளை ஹைக்கூ குறித்து பேசுகிறேன் . இனிய நண்பர் திரு .இராம மூர்த்தி அழைத்தார்

படம்
நாளை ஹைக்கூ குறித்து பேசுகிறேன் . இனிய நண்பர் திரு .இராம மூர்த்தி அழைத்தார் .

படத்திற்கு நச் வரிகள் ! நன்றி .தினகரன் நாளிதழ் !

படம்
படத்திற்கு நச் வரிகள் ! நன்றி .தினகரன் நாளிதழ் !
ஆடி அடங்கும் வாழ்க்கை
ஆறடி மட்டுமே உனக்கு
ஆட்டம் நிறுத்து !
மண்ணுக்கு இரையாகும்
மானிடா
மண் ஆசை எதுக்கடா ?
கோடீசுவரனாக இருந்தாலும்
கடைசியாக உனக்கும்
ஆறடிதான் !
வருவதில்லை
நோய்கள்
உழைப்பாளிக்கு !
வியர்வை சிந்தி உழைப்பவனை
வானம் பன்னீர் சிந்தி
வாழ்த்தும் !
சோர்ந்து விடாதே
கொஞ்சம் தோண்டு
வந்துவிடும் தண்ணீர் !
முயற்சி திருவினையாக்கும்
முற்றிலும் உண்மை
கிட்டும் புதையல் !

நன்றி .மாலை முரசு மாலை நாளிதழ்

படம்
நன்றி .மாலை முரசு மாலை நாளிதழ் !

தமிழறிஞர் இரா. இளங்குமரனார் உரை தலைப்பு : நூல் ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி நாள் : 26-04-2015 விழா ஏற்பாடு; திரு. வரதராசன், புரட்சிக்கவிஞர் மன்றம்

படம்
தமிழறிஞர் இரா. இளங்குமரனார் உரை தலைப்பு : நூல் !
தொகுப்பு : கவிஞர் இரா. இரவி நாள் : 26-04-2015 விழா ஏற்பாடு;   திரு. வரதராசன், புரட்சிக்கவிஞர் மன்றம்
*****        நூல் நிலத்தை அளக்கப் பயன்படும். செங்கல் அடுக்கும் போது சமம் பார்க்க பயன்படும். ஒழுங்குபடுத்துவது, செம்மைப்படுத்துவது நூல்.  மாந்தரை செம்மைப்படுத்துவது எதுவோ? பண்படுத்துவது எதுவோ? அதுவே நூலாகின்றது.  நூல் ஒன்று கீழே இருந்தால் மிதிபடக் கூடாது என்கிறோம்.  காரணம் சான்றோர் எழுத்திற்குத் தரும் மதிப்பு.  பல பொருள்களில் பயன்படுவது நூல்.
       நூல் எழுதுவதற்கே ஒரு பா இருந்தது நூற்ப்பா என்றனர்.  ஆசிரியரிடம் இருந்த நூலிற்கு ஆசிரியப்பா என்றனர்.  அகவல் போல ஓசை எழுப்பும் பாடலை அகவல் பா என்றனர்.  சின்நூல் சமணசமயத்தினருடையது, நன்னூல் சமணர்களுடையது.  தென்னூல் தஞ்சை பாலசுப்பிரமணி எழுதியது.  இந்நூல் புலவர் குழந்தை இயற்றியது.  பின்னர் தான் நூல் என்பது பொதுப்பெயர் ஆனது.  வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தவர், இங்கு வந்து தமிழ் கற்று தமிழில் நூல்கள் வடித்தார்.  சமணர்கள், கிறித்தவர்கள், சைவர்கள், வைணவர்கள் அனைவருக்கும் சமயம் கடந்த பொதுச்சொல்லாக நூல் ஆனது…

மாமதுரைக் கவிஞர் பேரவை விழா .கவியரங்கத் தலைமை கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் . புகைப்படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ. கார்த்திகேயன் கை வண்ணத்தில்

படம்
மாமதுரைக் கவிஞர் பேரவை விழா  .கவியரங்கத் தலைமை கவிமாமணி சி .வீரபாண்டியத்  தென்னவன் .    புகைப்படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர்   ரெ. கார்த்திகேயன் கை வண்ணத்தில்

முதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் சிறப்புரை குமுதம் வார இதழில்

படம்
முதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் சிறப்புரை குமுதம் வார இதழில்

நன்றி . தினமணி நாளிதழ் !

படம்
நன்றி . தினமணி  நாளிதழ் !

வாழ்க பல்லாண்டு ! கவிஞர் இரா .இரவி

படம்
வாழ்க பல்லாண்டு !  கவிஞர் இரா .இரவி
இயற்கையின் காட்சி  இனிய மனதிற்குள் ஆட்சி !
மலையை முத்தமிடத்  துடிக்கும் மேகங்கள் !
கம்பீரமான மலைகள்  காட்சிக்கு இனிமை !
ஒய்யாரமாகத்   தோன்றும்  ஓங்கி வளர்ந்த  மரங்கள் !
ஓய்வு எடுக்க அழகிய  ஓட்டு  வீடு !
வண்ண மலர்கள்  பூத்து இருக்கும்  வனப்பு மிகு தோட்டம் !
இருப்பை உணர்த்தும்  இலைகள் இனிமை !
தூரிகையால் ஓவியம் வடித்த  ஓவியன் வாழ்க பல்லாண்டு ! .

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் மாதந்திர விழா

படம்
புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் மாதந்திர விழா நடந்தது. கவிஞர் இரா .இரவி வரவேற்றார் . புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் தலைமை வகித்தார் . அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தொடக்க உரையாற்றினார் . தமிழ் அறிஞர் இரா . இளங்குமரனார் நூல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் . தமிழக அரசுப் பணியில் எழுத்தராகப் பணி புரிந்து ஒய்வு பெற்ற பாலசுப்பிரமணியன் நன்றி சொன்னார் . புரட்சிக் கவிஞர் மன்றத்தினர் பலரும் வருகை தந்து சிறப்பித்தனர் .

இனியாவது திருத்திடு மனிதா ! கவிஞர் இரா .இரவி !

படம்
இனியாவது திருத்திடு மனிதா ! கவிஞர் இரா .இரவி !

இயற்கையை நீ சிதைக்கச் சிதைக்க
இயற்கை உன்னைச் சிதைக்கும் ! ஆற்று மணலை தினமும்
அளவின்றி கொள்ளையடிப்பதை நிறுத்து ! மலைகளை வெடி வைத்து தகர்த்து
மலை போல பணம் குவிப்பதை நிறுத்து ! நிலத்தடி நீரை மின் கருவிகள் முலம் உறிஞ்சி
நிர்மூலம் ஆக்குவதை நிறுத்து ! பொறுமையின் சின்னமான
பூமியின் பொறுமையை சோதிப்பதை நிறுத்து ! பூகம்பம் வந்தால் நீ தாங்க மாட்டாய்
பூமியை இயற்கையை மதித்து நட ! இனியாவது திருத்திடு மனிதா !
இனியாவது இயற்கையை நேசிக்கப் பழகு !

மாமதுரைக் கவிஞர் பேரவை விழா புகைப்படங்கள்

படம்
மாமதுரைக் கவிஞர் பேரவை விழா புகைப்படங்கள்