இடுகைகள்

July, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி

படம்
ஹைக்கூ – கவிஞர் இரா.இரவிஏவுகணை சோதனை வெற்றி
விலைவாசி குறைப்பில் தோல்வி
இந்தியா
அறிவு விளக்கை அணைத்து விட்டு
அணையா விளக்கு
காமராசருக்கு
தூரத்தில் தர்ம தரிசனம்
அருகில் நடப்பது
அதர்ம தரிசனம்
இலஞ்சம் ஒழிப்பவரே
இலஞ்சம் வாங்கி கைது
காவல்துறை
ஏறும் விலைவாசி
இறக்கிட யோசி
மக்கள் விருப்பம்
அன்று ஊறுகாய்
இன்று சாப்பாடு
திரைப்படங்களில் ஆபாசம்
நாட்டில் ஓடியது
தேனும் பாலும்
திருப்பதிக்கு தங்கக் கோபுரம்
பேச ஆரம்பித்தனர்
மதுவிலக்கு
அருகில் தேர்தல்
வெற்றி பெற்றன
ஊடகங்கள்
பண்பாட்டுச் சீரழிப்பில்
போதித்தன
மிருக குணம்
தொ(ல்)லைக்காட்சித் தொடர்கள்
குடிபோதையில்
குடும்பத்தலைவன்
தள்ளாடும் குடும்பம்
வந்தாரை வாழ வைத்தே
வீடு இழந்தவன்
தமிழன்
கூழ் இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
வாழ்க இந்தியா
சக நடிகர் கைது
கண்டிக்காத திரைஉலகம்
சுயநலவாதிகள்

விந்தை மனிதர்கள்

படம்
விந்தை மனிதர்கள்


நூல் ஆசிரியர் : கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

நூலின் அட்டைப்பட ஓவியம் சிறப்பாக உள்ளது. நூல் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் நாடறிந்த நல்ல பேச்சாளர். எழுத்து ஆற்றலும் வரும் என்று நிரூபித்து உள்ள நூல் இது. இந்நூலிற்கு சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, கலைமாமணி முனைவர் கு. ஞானசம்பந்தன் பெண்ணிய எழுத்தாளர் அ.வெண்ணிலா ஆகியோரின் அணிந்துரை அழகு சேர்க்கின்றது. ஒவியர் ஸ்ரீரசா அவர்களின் ஓவியங்கள் நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
இயந்திமயமாகி விட்ட காலத்தில் மனித மனங்களும் இயந்திரமாகி விடுகின்றது. இயல்பான நிலைக்குத் திரும்ப இது போன்ற நகைச்சுவை விதைக்கும் நூல்கள் உதவுகின்றன. செம்மலர் இதழில் பிரசுரமானவற்றை தொகுத்து நூலாக வழங்கி உள்ளனர். நல்ல முயற்சி, பாராட்டுக்கள்.
கிராமத்து மனிதர்களை படம்பிடித்து, கிராமிய மொழியிலேயே வடித்து உள்ளார். ‘பாவாடை ராசு” முதல் கட்டுரை இவர் பற்றி, ‘ராசு அண்ணன் சட்டை போட்டிருந்து யாரும் பார்த்ததில்லை. அவர் கல்யாணத்தின் போது ஒரே ஒரு நாள் சட்டை போட்டிருந்ததாகவும், தாலி கட்டிய உடனேயே உடம்பெல்லாம் அரிக்கிற…

காலந்தோறும் கண்ணதாசன்

படம்
காலந்தோறும் கண்ணதாசன்
நூல் ஆசிரியர் : திரு.கே.ஜி.இராஜேந்திரபாபு
நூல் விமர்சனம் : கவிஞர். இரா. இரவி

புதுகைத் தென்றல் வெளியீடாக புதுகைத் தென்றல் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. நூல் ஆசிரியர் திரு. கே.ஜி. இராஜேந்திர பாபு வரலாற்று சிறப்பு மிக்க பச்சையப்பன் கல்லூரி மாணவர். பாரத மாநில வங்கியில் பணிபுரிந்து வருபவர். பட்டிமன்றப் பேச்சாளர், பன்முக ஆற்றலாளர், புதுகைத் தென்றல் இதழில் மாதா மாதம் ஆவலுடன் படித்த கட்டுரை என்றாலும் முழுமையாக நூலைப் படிக்கும் போது கவியரசு கண்ணதாசனின் பிம்பம் உயர்கின்றது. இந்நூலிற்கு தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் முத்திரை பதிக்கும் அணிந்துரை அழகு சேர்க்கின்றது. திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்கள் தனது வாழ்த்துரையில் நூலாசிரியரக்கு முனைவர் பட்டம் வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளார். புதுகைத் தென்றல் இதழாசிரியர் புதுகை தருமராசன் அவர்களின் மகிழ்வுரை மனதைத் தொடுகின்றது. கவியரசு கண்ணதாசனின் அரிய புகைப்படங்கள் அழகு சேர்க்கின்றன. கவியரசு கண்ணதாசன் பற்றிய மிகச்சிறந்த அவணமாக நூல் உள்ளது.
நூலின் ஆரம்ப வரிகளிலேயே கவியரசு கண்ணதாசனின் …

மனிதமன சோதனை தோல்வி – கவிஞர் இரா.இரவி

படம்
மனிதமன சோதனை தோல்வி – கவிஞர் இரா.இரவி
ஏவுகணை சோதனை வெற்றி
மனிதமன சோதனை தோல்வி
வல்லரசு ஆவது இருக்கட்டும்
நல்லரசு ஆக முற்படட்டும்
விலைவாசி குறைக்க வழி அறியவில்லை
வறுமையை ஒழிக்க முறை தெரியவில்லை
அரசியல்வாதிகளின் ஊழல் ஒழியவில்லை
அரசியல் வாரிசு சண்டை முடியவில்லை
தாரை வார்த்த கட்சத்தீவை மீட்கவில்லை
தரம் கெட்ட சிங்களனை ஒடுக்கவில்லை
அன்பு அறியாத மாநிலங்களைத் திருத்தவில்லை
அணைகட்டத் துடிக்கும் கேரளாவைத் தடுக்கவில்லை
காவிரி மறுக்கும் கர்னாடகத்தை கண்டிக்கவில்லை
பாலாற்றை விசமாக்கும் ஆந்திரத்தை எதிர்க்கவில்லை
எரிவாயு விலை உயர்வை நிறுத்தவில்லை
எரிபொருள் பெட்ரோல் விலை குறைக்கவில்லை
படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கவில்லை
படிக்கக் கல்வி இலவசமாகக் கிட்டவில்லை
மதுவிலக்கு நாட்டில் எங்கும் அமுலாகவில்லை
மது குடித்து வீட்டில் நடக்குது பெரும் தொல்லை
விளைநிலங்களை பன்னாட்டினர் அடித்தனர் கொள்ளை
விவசாயி விவசாயம் செய்ய வழியே இல்லை
குடிதண்ணீர் விலைக்கு வாங்கும் அவலநிலை
குடிமக்களுக்கு அடிப்படை தேவை பூர்த்தியாகவில்லை

இதயத்தில் ஹைக்கூ

படம்
இதயத்தில் ஹைக்கூ

தமிழ் ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகள்இனிய நந்தவனம்வழங்கிய மதிப்புரை ; ( - - - - - - / பீர்முகம்மது)


ஹைக்கூ திலகம் எனப் பட்டம் பெற்ற கவிஞர் இரா.இரவியின் ஏழாவது ஹைக்கூ தொகுப்பு நூல் "இதயத்தில் ஹைக்கூ ". வினைபுரியும் வீரிய விதையாய் என்ற தலைப்பில் மு.முருகேஷ் அணிந்துரையும், ஹைக்கூவுக்கு அமுதென்று பேர் என்ற தலைப்பில் இரா.மோகன் அவர்கள் அணிந்துரையும் சிறப்பு. ஒவ்வொரு கவிதைக்கும் படங்கள் வைத்து கவிதையா, புகைப்படக் கண்காட்சியா என வியக்க வைக்கிறது 72 பக்கத்தில் 434 ஹைக்கூ கவிதைகளும். "அவள் நினைவலைகளில் நான், என் நினைவலைகளில் அவள் காதல் அலைவரிசை" என்ற கவிதையும், "இதழ் சொல்லும் விழிகள் சொல்லாது பொய்" என்ற காதல் ரசனைமிக்க வரிகள், "இனிக்கவில்லை வாழ்க்கை, கரும்பு நட்டத்தில் நட்டம்" என்ற விவசாயிகளின் கவலையின் வெளிப்பாடு, "அப்பா மது போதையில், அம்மா தொலைக்காட்சி போதையில், வாழ்க்கைப் போராட்டம் நடைபாதையில்" என சீரியல் மோகத்தை விளக்குகிறார். மது…
படம்
கவிதை அல்ல விதை
கவிதை அல்ல விதை

தமிழ் ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகள்சிகரம்வழங்கிய மதிப்புரை ; ( - - - - - - / சந்திரா மனோகரன்)


கவிஞர் இரா.இரவியின் இலக்கியப் பயணத்தில் இது எட்டாவது மைல் கல் என்று அவரே தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அவருடைய இணையதளமான 'கவிமலர் டாட் காம்' -ல் பார்த்த இலட்சக்கணக்கான வாசகர்கள் பாராட்டிய கவிதைகளே இவை என்பது இன்னும் சிறப்பு. வித்தகக் கவிஞர் பா.விஜய் மற்றும் தமிழறிஞர் தமிழண்ணல் ஆகியோரின் அற்புதமான அணிந்துரைகள் இந்நூலினை மேலும் மெருகூட்டுகின்றன. 'ஹைக்கூவின் மறுபெயர்தான் இரவி' என்ற தமிழண்ணலின் பாரட்டுக்கு முற்றிலும் பொருத்தமானவர் தான் இந்நூலாசிரியர்.

தனது முதல் கவிதை குறளுக்கு அர்ப்பணம், தொடர்ந்து பாரதி (குடும்ப அட்டையில் 'எச்' முத்திரை குத்தியிருக்கமாட்டான், ஏன் தெரியுமா? / இன்றும் அவனது வருமானம் / அய்யாயிரத்திற்கும் கீழ்தான் இருந்திருக்கும். - பக்கம் 14 ) அப்புறம், பாரதிதாசன், நேதாஜி, காமராஜர், தெரசா என்று ... கவிதைத் தோரணம் நீளுகிறது. கலாம…

பார்த்தாலே வீரம் பிறக்கும்

படம்
பார்த்தாலே வீரம் பிறக்கும்
பார்வையில் அர்த்தம் இருக்கும்
பதுங்கிப் பின் பாயும்
பூனைகள் ஓடி ஒளியும்
ஆலை இல்லாத ஊரில்
இலுப்பைப் பூ சர்க்கரை
புலி இல்லாத காட்டில்
நரியின் நாட்டாண்மை
அழிந்து வரும் இனம் என்பர்
அழிந்து விட வில்லை
இந்தியாவின் தேசிய விலங்கு புலி
அஞ்சல் தலைகளிலும் புலி
குள்ள நரிகளை விரட்ட
காட்டுப் புலி ஒன்று போதும்
இரா .இரவி

சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன்

படம்
நூல் ஆசிரியர் : முனைவர் நிர்மலா மோகன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

நூலின் அட்டைப்படம் வித்தியாசமான இயற்கைக் காட்சியாக உள்ளது. மதுரை செந்தமிழ் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டே, இலக்கியத் துணையாக மட்டுமின்றி இல்லத் துணைவராக இருக்கும் முனைவர் இரா. மோகன் அவர்களுடன் பட்டிமன்றங்களிலும், கருத்தரங்குகளிலும், உரையாற்றி, முத்திரை பதித்து வரும் முனைவர் நிர்மலா மோகன் உரையாற்றிய 7 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. தமிழ் இலக்கியத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக உள்ளது.
சங்க இலக்கியம் என்றால் கற்றறிந்த புலவர்களுக்கு மட்டுமே விளங்கும். நமக்கு விளங்காது என்று விளங்கிக் கொள்ளவும் பலர் முயற்சி செய்வதே இல்லை. ஆனால் சங்கத்தமிழ் எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக, மிக எளிமையாகவும், இனிமையாகவும் எழுதி உள்ளார்கள். நூலாசிரியர் திருமதி. நிர்மலா மோகன் காதலித்து முனைவர் இரா. மோகன் அவர்களின் கரம் பிடித்து, காதல் திருமணத்தின் இலக்கணமாக வாழந்து வரும் மணி விழா கண்ட தம்பதியர்கள். நல்ல குறுந்தொகையில் உள்ள உலகப்புகழ் பெற்ற பாடலின் விளக்கம் மிக அருமை.
யாயும் ஞாயும் யாரோ கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளி…

விலங்காக மாறும் மனிதர்கள்

படம்
சேர்ந்து வாழும் விலங்குகள்
மோதி வீழும் மனிதர்கள்
சுனாமி அறிந்த விலங்குகள்
சுனாமி அறியாத மனிதர்கள்
பொது நலத்துடன் விலங்குகள்
சுய நலத்துடன் மனிதர்கள்
சாதி இல்லா விலங்குகள்
சாதி பார்க்கும் மனிதர்கள்
சதி அறியாத விலங்குகள்
சதி அறிந்த மனிதர்கள்
மனிதாபிமானத்தோடு விலங்குகள்
விலன்காபிமானம்மின்றி மனிதர்கள்
மனிதனாக மாறும் விலங்குகள்
விலங்காக மாறும் மனிதர்கள்

இரா .இரவி

மலர்களின் ராஜா அழகிய ரோஜா

படம்
மலர்கள் ஆயிரம் உண்டு
உனக்கு நிகர் உண்டோ?
காதல் உணர்த்தும் மலர் நீ
காதலர் போற்றும் மலர் நீ
ஏற்றுமதி ஆகும் மலர் நீ
ஏற்றம் மிக்க மலர் நீ
வனப்பு மிக்க மலர் நீ
வஞ்சியர் விரும்பும் மலர் நீ
முள்லில் மலர்ந்த மலர் நீ
முல்லையை வென்ற மலர் நீ
கன்னியர் விரும்பும் மலர் நீ
காளையர் விரும்பும் மலர் நீ
புத்துணர்வு விரும்பும் மலர் நீ
புதுத் தெம்பு தரும் மலர் நீ
இரா .இரவி


தமிழராகப் பிறந்ததற்கு பெருமை கொள்வோம்

படம்
தமிழராகப் பிறந்ததற்கு பெருமை கொள்வோம்

SUN என்ற ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் உள்ள சொற்கள்

sun
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/

infosys நாராயணமூர்த்தி, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

படம்
infosys நாராயணமூர்த்தி, நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


நூல் ஆசிரியர் : திரு.என்.சொக்கன்


1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்போசியஸ் நிறுவனம் ரூ.10,000 முதலீட்டுடன் தொடங்கி, இப்போது ரூ10,000 கோடி வருமானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணமான திரு.நாராயணமூர்த்தியின் வரலாற்றை திரு.என்.சொக்கன் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.இளைய தலைமுறை படித்து உணர வேண்டிய சிறந்த நூல்.

உழைத்து உயர வேண்டும், இலட்சியம் அடைய வேண்டும் என்ற தேடல் வேட்கை உள்ளவர்களுக்கு வழிகாட்டும் விதமாக நூல் உள்ளது. திரு.நாராயணமூர்த்தியின் அப்பா ஆசிரியர் என்பதால் அவர் சராசரி தந்தையாக மட்டும் இல்லாமல் ஆசிரியரகாவும்,பலவற்றை புகட்டினார். குழுவாக இசைக்கும் சிம்பொனி பற்றி தந்தை விளக்கியதன் விளைவாக, பின்னர் அந்த விதை, கணிப்பொறி உலகில் ஒரு சிறந்த குழு மனிதராக, குழு வேலை என்ற யுத்திக்கு உதவியது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தின் 4 வது இடம் பெற்றதற்காக தந்தை பாராட்டவில்லை. முதல் மூன்று இடங்கள் என்னாச்சு? என்றார்,அடுத்த பொதுத் தேர்தலில் மாநிலத்தில் மூன்றவாதாக வந்தார். அப்போதும் அவர் தந்தை…

நூலின் பெயர் : ஆகாயச்சிறகுகள் ,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

படம்
நூலின் பெயர் : ஆகாயச்சிறகுகள் ,நூல் விமர்சனம் : கவிஞர்
இரா.இரவி
நூல் ஆசிரியர் : எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி
நூலின் அட்டைப்படம் அற்புதமாக உள்ளது. நூலை தமிழக ஜனநாயக மாதர் சங்கத்தை
நிறுவியவர்களில் முக்கியமானவரான கே.பி. ஐhனகியம்மாளுக்கு காணிக்கையாக்கி
இருக்கின்றார். நூலாசிரியர் மேலாண்மை பொன்னுசாமி அதிகம் படிக்காதவர். ஆனால்
சாகித்ய அகதெமி பரிசை வென்றவர். ஆவருடைய பெயரில் மேலாண்மை இருப்பதால் இவர்
மேலாண்மை படித்தவர் என்று தவறாக எண்ணி விடக் கூடாது. “ மேலாண்மறை நாடு “ என்பது
அவர் ஊர் பெயர் அதன் சுருக்கமே மேலாண்மை ஆகும். இவரது வெற்றிக்கு காரணம் மக்கள்
மொழிலேயே நாவல் எழுதுவது தான் இவரது தனிச்சிறப்பு. இவரது கதையை பெரிய அறிஞர்கள்
முதல் சாதாரண பாமரர் வரை யார் படித்தாலும் எளிதில் புரியும் எளிய நடை.
நூல் ஆசிரியர் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி கதை சொல்லும் விதத்தில் வாசகர்
மனதில் காட்சிப்படுத்தி உண்மை நிகழ்வை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி
விடுகின்றார். நாவலின் கதாநாயகன் பால்ச்சாமி, பொதுவுடைமை சிந்தனையில்
ஈடுபாட்டுடன் நூல் ஆசிரியர் இருப்பதால் தன் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளை
கோர்த்து கதையாக வடித்து உள…

அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிக

அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதி

இரா.இரவி யின் படைப்புகள் பிற இணையங்களில்

இரா. இரவி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து

இரா. இரவிகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் “சிகரம் தொட்ட சிந்தனைகள் “ * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

படம்
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் “சிகரம் தொட்ட சிந்தனைகள் “ * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

* நூல் ஆசிரியர் : டாக்டர் செல்வின் குமார்


நூலின் அட்டைப் படத்தில் ஒபாவின் உரையாற்றும் புகைப்படும் நம்மை வரவேற்கின்றது. நூலாசிரியர் தமிழ்க்குரிசில் முனைவர் எஸ்.செல்வின்குமார் உலகத் தமிழர் பல்கலைக்கழகத்தை அமெரிக்காவின் நிறுவி பல்லாண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதால், ஒபாமாவின் சிந்தனைகளை நன்கு உள்வாங்கி, கருத்துக் கருவூலமாக சிந்தனை பெட்டகமாக நூலை வழங்கி உள்ளார்.

வெற்றியின் மீது வேட்கை உள்ள அனைவரும் படிக்க வேண்டி அற்புத நூல் நூலின் அளவு மட்டுமல்ல, உள்ளே உள்ள கருத்துக்களும் பெரியது தான். ஒபாமா 1961ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4ம் நாள் பிறந்தவர் என்று தொடங்கி, அமெரிக்க அதிபர்களின் சிந்தனை துளிகளைத் தொகுத்து மிகச் சிறப்பாக எழுதி உள்ளார். நூல் ஆசிரியர் முனைவர் செல்வின் குமார். அமெரிக்காவில் பல ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கை இந்த அரிய நூல் படைக்க உதவியாக இருந்துள்ளது.

பராக் ஒபாமா இரண்டு வயது குழந்தையாக இருக்கும் போதே அவரது பெற்றோர்கள். விவாகரத்து செய்து கொண்டனர் என்ற தகவல் தொடங்கி, பல்வேறு தகவல்கள் நூ…

மனிதனைத் தேடி , நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி

படம்
மனிதனைத் தேடி , நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் : கவி வேந்தர் மு.மேத்தா-
நூலின் அட்டைப்படத்தில் புதுக்கவிதையின் தாத்தா கவிஞர் மேத்தா-வின் புகைப்படம் அலங்கரிக்கின்றது. “மனிதனைத் தேடி ” கவிதை நூலின் தலைப்பு இன்றைக்கு மிகப்பொருத்தமாக உள்ளது. மேல்நாட்டு அறிஞர்கள்,”கையில் விளக்குடன் மனிதனைத் தேடுகின்றேன்” என்று தேடுவதைப் போல,இன்றைக்கு மனிதாபிமானமிக்க மனிதனாக வாழக்கூடிய நல்ல மனிதனை,தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாக பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது.
மனிதம் மறந்து,சாதிமதக் கலவரத்தில் ஈடுபட்டு,வன்முறை வளர்க்கும் மனித விலங்குகளை,மனிதனாக்கும் விதமாக கவிதைகளைப் படைத்து உள்ளார் கவிஞர் மு.மேத்தா,21.03.1999 அன்று எழுதிய கவிதையில் இணையம் பற்றியும்,மின்னஞ்சல் பற்றியும் குறிப்பிட்டு உள்ளார் தொலைநோக்கு சிந்தனையாளர் கவிவேந்தர் மு.மேத்தா. மு.மேத்தா என்றால்,புதுக்கவிதையின் முன்னோடி என்று பொருள். நூலில் அணிந்துரை,என்னுரை என்ற பெயரில் பக்கங்களை விரையம் செய்யாதல் நேரடியாக கவிதைகளை அச்சிட்டு உள்ளனர்.
வெளிநடப்பு
ஆயுதம…

தமிழ்க்களஞ்சியம் 10000 * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

படம்
தமிழ்க்களஞ்சியம் 10000 * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
* நூல் ஆசிரியர் : நகைச்சுவை அருவி விளாங்குடி விநாயகமூர்த்தி


“தமிழ்க் களஞ்சியம்” என்ற பெயருக்கு ஏற்றபடி உண்மையிலேயே தமிழ்க் களஞ்சியமாக உள்ளது. உண்மையிலேயே 10,000 வினா விடைகள் உள்ளது. வரிசையாக சோதனை செய்து பார்த்தேன். என்சைக்ளோபீடியா போல உள்ளது. மாணவர்களுக்கு மட்டமல்ல, தமிழ் ஆர்வலர்களுக்கும் பயனளிக்கும் அற்புத நூல். தமிழின் பெருமையை பறைசாற்றும் விதமாக உள்ளது. படித்து முடித்தவுடன் தமிழனாகப் பிறந்ததற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளும் விதமாக உள்ளது.
10,000 கேள்விகளையும், அதற்கான சரியான விடைகளையும், நூல் ஆசிரியர் விளாங்குடி விநாயகமூர்த்தி தொகுத்ததை எண்ணிப் பார்க்கவே வியப்பாக உள்ளது. பட்டிமன்ற நடுவராக, தொலைக்காட்சிகளில்; நகைச்சுவை அருவியாக, பள்ளி ஆசிரியராக, தனி முத்திரை பதித்தவர், நூல் ஆசிரியராகவும் சிறப்பான முத்திரை பதித்து உள்ளார். பாராட்டுக்கள். இந்நூலை படித்த மாணவர்கள் வெல்வது உறுதி.

இதில் உள்ள எத்தனை கேள்விகளுக்கு நமக்கு விடை தெரிகின்றது ? என்று நம்மை நாமே சோதித்துக் கொள்ள உதவுகின்றது. நமக்கு விடை தெரியாத கேள்விகள் ப…

நினைவில் நீ , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

படம்
நினைவில் நீ , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


தொகுப்பாசிரியர் : கவிஞர் மணிமேகலை நாகலிங்கம்
“இந்நூல் உணர்வுகளை புரிந்து கொள்ளும் உயரிய உள்ளங்களுக்கு” என்று காணிக்கை செய்துள்ளார். உண்மை தான் மனைவி இறந்த வீட்டிலேயே மறுமணத்திற்கு பெண் தேடும் மாப்பிள்ளைகள் மலிந்து விட்ட காலம் இது. ஆனால் எங்கோ பிறந்து, வளர்ந்து, வந்து, கணவன், குழந்தைகள் என தியாக வாழ்க்கை வாழ்ந்து மறைந்த மனைவியின் நினைவாக கவிஞர் மணிமேகலை நாகலிங்கம் தொகுத்து உள்ள ஹைக்கு கவிதை நூல். முன்னனி ஹைக்கூ கவிஞர்களின் தலா மூன்று கவிதைகள் நூலில் உள்ளது. தலா ஒரு ஹைக்கூ மட்டும் தங்களின் ரசனைக்காக எழுதி உள்ளேன்.
என்னைப் பொருத்தவரை ஒரு பெண் இளம் வயதில் விதவையானால் அவளுக்கு மறுமணம் அவசியம். ஆனால் ஓர் ஆண், குழந்தைகள் இருக்கும் போது மனைவி இறந்து விட்டால், மறுமணம் செய்யாமலே அவரின் நினைவாகவே வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை. குழந்தைகளுடன் ஒரு தந்தை மறுமணம் செய்யும் போது குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகின்றது. தந்தையின் மறுமணத்தின் காரணமாக அல்லல்பட்ட குழந்தைகள் எண்ணிலடங்காதவை.என் வாழ்வில் நடந்த உண்மை. என் தாத்தா மறுமணம் செய்து…

www.tamilauthors.com இணையத்தில் கவிஞர் இரா. இரவி, மதுரை அவர்களின் படைப்புகள்

கைக்குட்டைக்குள் தொலைந்த வானம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

படம்
கைக்குட்டைக்குள் தொலைந்த வானம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


நூல் ஆசிரியர் : கவிஞர் துளிர்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
நூலின் தலைப்பைப் போலவே அட்டைப்படமும் வித்தியாசமாக உள்ளது. இந்நூல் தாய்க்கும், தமிழுக்கும் என்று காணிக்கையாக்கி, தாய்ப்பற்றையும், தமிழ்ப்பற்றையும் பறைசாற்றியுள்ளார் நூலாசிரியர் கவிஞர் துளிர். மாற்றுத் திறன் உடைய சகோதரர் கவிஞர் துளிர், கவிஞர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளர் என்பதையும் பதிவு செய்தார். தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் பட்டிமன்ற நடுவர் க.சின்னப்பா அவர்களின் அணிந்துரை முத்திரை பதிக்கின்றது. திரைப்படப் பாடலாசிரியர் விவேகா, புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் மா.ஜெயராஜ் ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது.நூலின் தலைப்பிற்கான கவிதை இதோ!கடித்த கடலை மிட்டாயிலும்
மடித்த கைக் குட்டையாலும்
ஒவ்வொரு
அம்மாவின் கைக் குட்டையாலும்
அந்த அழகான வானம் திருடப்பட்டிருக்கிறது.இருட்டு இதிகாசம்உறக்கத்தில் எழு! ஏழுதுகோலால் உழு!
கவிதையைத் துடைத்து காகிதத்தில் படைஇப்படி இவர் இளமைக் காலத்தில், காகிதத்தில் படைத்த படைப்புகளை…

கவிமுகில் கவிதைகள்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

படம்
கவிமுகில் கவிதைகள்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில்கவிஞர் கவிமுகில் அவர்களின் புகைப்படம் தாங்கி,அட்டைப்படமே அற்புதமாக

உள்ளது பின் அட்டையில் உடலால் மறைந்தாலும் பாடல் வரிகளால் வாழ்ந்து
கொண்டிருக்கும் கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் அணிந்துரை சுருக்கமும் அழகு
செய்கின்றது.உலகத்தரம் வாய்ந்த அச்சு நூலை கையில் எடுத்தாலே வாங்க வேண்டுமென்ற
ஆவலைத் தூண்டும் வண்ணம் வடிவமாக அமைக்கப்பட்ட நூல் கவிதை ரசிகர்கள் அனைவரும்
படிக்க வேண்டிய சிறந்த நூல்.

”வெறுங்கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்து மூலதனம்”என்ற வரிகளால். உலகம்
முழுவதும் அறியப்பட்ட கவிஞாயிறு தாராபாரதியின் சீடர் கவிஞர் கவிமுகில்.தனது
குருவின் பெயரில் அறக்கட்டளை நிறுவி, சிறந்த ஹைக்கூ கவிதை நூல்களுக்கு
விருதுகள் வழங்கி தனது நூல்களின் வெளியீட்டு விழாவையும் சென்னையே வியந்து
பார்க்கும் வண்ணம் மிக பிரமாண்டமாக நடத்தினார்கள்,விழாவிற்கு நானும் சென்று
எனது இதயத்தில் ஹைக்கூ நூலிற்கு தாராபாரதி விருது பெற்று வந்தேன்.விழாவில்
ஆசிரியர் கி.வீரமணி கவியருவி ஈரோடு தமிழ்பன், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
என பலரும் இலக்கிய உரை …

மதகுப் பலகைகள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

படம்
மதகுப் பலகைகள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமதி

நூலின்அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது. நன்றி புதுச்சேரித் தோழர்களுக்கும் புலம் பெயர்ந்த தோழர்களுக்கும் என ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. சிறுகதை ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது இன்று சிறுகதை நசிந்து விட்டதோ? என்று எண்ணுமளவிற்கு சுருங்கிவிட்டது. ஒரு நிமிடக் கதை, அரை நிமிடக் கதை, அஞ்சல் அட்டைக் கதை என சுருங்கி நகைச்சுவைத் துணுக்ககை கதை என்று சொல்லும் காலத்தில் சிறுகதை எப்படி? எழுத வேண்டும் என இலக்கணம் கூறுவது போல இந்நூல் வந்துள்ளது. நூல் ஆசிரியர் கவிமதி துபாயில் வாழ்ந்தாலும் தனது குழந்தைப் பருவத்து நிகழ்வுகளை உணர்வுகளை சிறுகதையாக்கி இருக்கிறார்கள். 21 சிறுகதைகள் இந்நூலில் உள்ளது. ஒவ்வொரு சிறுகதையையும் ஒருவரியில் சொல்வதென்றால், 1) கும்பகோணம் தீ விபத்து நினைவூட்டுவது 2) உலகமயம் தாராளமயம் காரணமாக அடையாளத்தை தொலைத்தது, 3) பண்பாட்டுச் சீரழிவு செய்வோருக்கு சவுக்கடி 4) பேராசை பெருநஷ்டம், நஷ்டத்திலும் சில நன்மை. 5) இனிமையான இலங்கைக் தமிழ் பேச்சு கற்கண்டு தோற்றுப் போச்சு 6) பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கு கன்னத…

ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

படம்
நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகலைவன்
ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

அட்டைப்படமே அற்புதமாக உள்ளது. ஊனமுற்றவர்களின் எழுச்சிக்காக பாடுபடும் திரு.சிதம்பரநாதன், எளிமையின் சின்னமாகத்திகழும், மதுரையின் பெருமைகளில் ஒன்றாக விளங்கும் எழுத்தாளர் திரு.கர்ணன் புகைப்படங்கள் நூலின் அட்டைப்படத்தை அலங்கரிக்கின்றது.பின் அட்டையில் மதுரையில் ஊனமுற்றவர்களின் உயர்வுக்காக உழைக்கும் அமுதசாந்தி முதல் மரண காணா விஜய் வரை எட்டு பேரின் புகைப்படமும் சிறப்பாக உள்ளது.

நல்ல வடிவமைப்பு குடத்து விளக்காக இருந்த ஊனமுற்ற சாதனையாளர்கள் 10 பேரை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட செய்திடும் முயற்சியில் நூல் ஆசிரியர்

கவிஞர் ஏகலைவன் வெற்றி பெற்றுள்ளார். நூலாசிரியர் புகைப்படம் நூலின் அட்டையில் இல்லை. வருங்காலங்களில் வெளியிடும் நூல்களில் நூல் ஆசிரியர்

புகைப்படமும் இடம் பெறட்டும். ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற வேட்கை உள்ள 10 நபர்களின் சாதனைகளைப் படம்பிடித்து காட்டி உள்ளார்.

மாமனிதர் அப்துல்கலாம் அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்து இருப்பது சிறப்பு. கனவு காணுங்க…

அறிவுக்கோர் ஆவணம் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

படம்
அறிவுக்கோர் ஆவணம் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் : பொன்.குலேந்திரன்


“அறிவுக்கோர் ஆவணம்” நூலின் பெயர் மட்டுமல்ல காரணப்பெயர் என்றே கொள்ளலாம். உண்மையிலே அறிவுக்கோர் ஆவணமாக நூல் திகழ்கின்றது. தகவல் களஞ்சியமாக ஆவணப்படுத்த வேண்டிய அற்புத நூல். இந்நூலிற்கு பெருங்கவிக்கோ தனது வைர வரிகளால் கவிதையால் வாழ்த்துரை வழங்கி இருப்பது நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. அறிஞர் சாமி அப்பாத்துரையின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது. முத்திரை பதிக்கின்றது.

இன்றைக்கு உலக அளவில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையதளம் அதிகம் உள்ள மொழி தமிழ் மொழி உலக அரங்கில் இந்தப் புகழை தமிழுக்கு தேடித்தந்தவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள். தமிழ் உயர்தனிச் செம்மொழியாக அறிவித்துள்ள நாளில் உலக அளவில் இணையத்தின் மூலம் தமிழை உயிர்த்தெழ வைத்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்றால் மிகையன்று. உலகில் உள்ள பெரும்பாலான தமிழ் இணையதளங்களை இயக்குபவர்கள். நடத்துபவர்கள் இலங்கைத் தமிழர்கள் சொந்த மண்ணில் உரிமைக்கு போராடிக் கொண்டும் இணையம் நடத்துகின்றனர். குடும்ப சூழ்நிலை காரணமாக புலம் பெயர்ந்த போது…

உறவில் சலனம் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

படம்
உறவில் சலனம் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் : திரு. எக்ஸ்.பி.ஒய்ட்


ஊடகங்களின் தாக்கத்தால்,உலகமயத்தால்,பண்பாட்டுச் சீரழிவால் இன்று நீதிமன்றங்களில் மணமுறிவு வழக்குகள் குவிந்து உள்ளது. உறவில் சலனம் வருவதால்தான் மண முறிவுகள் பெருகுகின்றன. உளவியல் ரீதியாக உறவில் சலனம் வராமல் இருக்க என்ன வழி என்பதை மிகச் சிறப்பாக விளக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர் திரு.எக்ஸ்.பி.ஒய்ட்.

நூலாசிரியருக்கு இது இரண்டாவது நூல். இன்றைய சூழ்நிலையில் பலருக்கும் தேவையான நல்ல கருத்துக்கள் அடங்கிய நூல் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த தமிழ்ப்பண்பாட்டை வலியுறுத்தும் நூல். அட்டைப்படம் அற்புதம், மிக நேர்த்தியான வடிவமைப்பு. முதல் நூலில் இருந்த குறைகளை எல்லாம் நீக்கி விட்டு மிக நிறைவாக வந்துள்ள நூல். நூலை வடிவமைத்த அரிமா.திரு.ஆர்.என்.முத்து அவர்களுக்கு மறக்காமல் நன்றி கூறி உள்ளார் ஆசிரியர்.

நிலை உயரும் போது பணிவு வந்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்

இப்படி புகழ்பெற்ற வைர வரிகளை எல்லாம் மேற்கோள் காட்டி, குடும்ப உறவு பற்றி நன்கு விளக்கி உள்ளார்.இந்நூலிற்கு அணிந்துரை வழங்கி உள்ள மதுரை வானொலியின் தலைமை நிக…

கல்வி வள்ளல் கலசலிங்கம் வாழ்க்கை வரலாறு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

படம்
கல்வி வள்ளல் கலசலிங்கம் வாழ்க்கை வரலாறு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

* நூல் ஆசிரியர் : எஸ்.எம்.நயினார் பி.காம்.,


உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர் கல்வி வள்ளல் கலசலிங்கம் புகைப்படம் முன் அட்டைப்படத்தை அலங்கரிக்கின்றது. பின் அட்டையில் அவரது குடும்பத்தினர் புகைப்படமும் உள்ளது. ஒரு சிலரின் வரலாற்றைப் படிக்கும் போது நமக்குள் சக்தி பிறக்கும். மண்ணில் பிறந்தோம், இறந்தோம் என சராசரி வாழ்க்கை வாழாமல், பிறந்தோம், சாதித்தோம் என சாதனை வாழ்க்கை வாழத் தூண்டுகோலாக இந்த நூல் உள்ளது. நூலாசிரியர் எஸ்.எம். நயினார் பாராட்டுக்குரியவர். கல்வி வள்ளல் கலசலிங்கம் வாழ்க்கை வரலாறு அறிந்து, உள் வாங்கி, உணர்ந்து எழுதி உள்ளார். நூல் படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்து, இரசாயண மாற்றத்தை நிகழ்த்துகின்றது. அது தான் நூலின் வெற்றி.ள பட்டுக்கோட்டையின் பாடல் வரியான �அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொள்ளும் மனிதர்கள்� அவசியம் படித்துத் திருந்த வேண்டிய அற்புத நூல்.

உழைப்பால் உயர்ந்தவரின் வரலாற்று நூலிற்கு, உழைப்பால் உயர்ந்த டாக்டர் நல்லி …