சனி, 31 டிசம்பர், 2011

எழுத்தாளர் ,கவிஞர் ,இணையத்தின் ஆசிரியரை சென்னை புத்தகத் திருவிழாவில் சந்தித்து மகிழுங்கள்

இனிய நண்பர், எழுத்தாளர் ,கவிஞர்  www.tamilauthors.com  இணையத்தின் ஆசிரியர்  கனடா  திரு அகில், சென்னை வந்துள்ளார் .சென்னை புத்தகத் திருவிழாவில் தொடக்கம் முதல் இறுதி நாள் வரை ,வம்சி பதிப்பகத்தின் கடை எண்கள் 313& 314  நேரடியாக சந்தித்து மகிழலாம் ,
கனடா திரு.அகில் எழுதிய கூ டுகள் சிதைந்த போது என்ற சிறுகதை தொகுப்பு நூல் .வம்சி பதிப்பகத்தின் வெளியீடாக வருகின்றது .சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கி மகிழுங்கள் .வம்சி பதிப்பகத்தின் கடையில் நூல் கிடைக்கும்.
கவிஞர்கள் எழுத்தாளர்கள் தங்களைப் பற்றிய விபரங்களை http://www.tamilauthors.com/5.html  இணையத்தில் ஆவணப் படுத்த தந்து மகிழலாம். அவரது தொடர்பு மின்னஞ்சல் editor@tamilauthors.com    சென்னை செல்  எண்  8056110556

வெள்ளி, 30 டிசம்பர், 2011

சமாதானம் கவிஞர் இரா .இரவி

சமாதானம்               கவிஞர் இரா .இரவி

அமைதிக்குக் காரணம் சமாதானம்
அறிவுக்கு இலக்கணம் சமாதானம்

அழிவை தவிர்க்கும் அற்புத வழி சமாதானம்
அன்பை வளர்க்கும் நல் மொழி சமாதானம்

வன்முறை தவிர்க்கும் ஆயுதம் சமாதானம்
நன்மறை வளர்க்கும் வழி சமாதானம்

பகுத்தறிவைப் பயன்படுத்திட சமாதானம்
பண்பு வளர்க்கும் நுட்பம் சமாதானம்

விட்டுக் கொடுக்க வைப்பது
சமாதானம்
கெட்டுப் போகவிடுவதில்லை   சமாதானம்

நடந்த கொடியவைகளை மறக்கடிக்கும்
சமாதானம்
நடப்பதை நல்லதாக்கும் உடன்பாடு சமாதானம்

உடன்பாட்டுச் சிந்தனையின் வெளிப்பாடு சமாதானம்
உடன் பட்டு ஒற்றுமையை  உருவாக்கும் சமாதானம்

மோதி வீழ்வது விலங்கின் குணம்
மோதாமல்  இணைவது  மனித மனம்

சாத்தியமே எங்கும் 
சமாதானம்
சத்தியமே உணர்த்தும்
சமாதானம்
 
விதி விலக்குகள் சில உண்டு
வீணர்கள் சிலர் உண்டு


சில  மனிதவிலங்குகளிடம் மட்டும்
சமாதானம் சாத்தியம் இல்லை

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

WISH U HAPPY NEW YEAR


புதன், 28 டிசம்பர், 2011

அவர்தான் கலைவாணர்

அவர்தான் கலைவாணர்

நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன்
செல் 9842593924  cholanagarajan@gmail.com

தழல் பதிப்பகம் மதுரை .விலை 50

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மக்களை சிரிக்கவும் ,சிந்திக்கவும் வைத்த மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன்    வாழ்க்கை வரலாறு ,அவர் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகள் ஆய்வு செய்து ,
தொகுத்து நூலாக வழங்கி உள்ளார்  நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன்.என் .எஸ் .கிருஷ்ணன் திரைப்படங்களில் பாடிய பாடல்களை மேடையில் பாடி  என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களின் புகழ் பரப்பி வருபவர் நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன்..அவரது நிகழ்ச்சியை கண்டு களித்து  உள்ளேன் .மிகச் சிறப்பாக  இருக்கும் .இந்த நிகழ்ச்சியின் வெற்றியின் காரணமாக என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய நூல்களை படித்து ,கேட்டு, 
அறிந்து ,ஆய்ந்து இந்த நூலை எழுதிஉள்ளார் .

அறிஞர் வ .ரா அவர்கள் .மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன் பற்றி சொன்ன வைர வரிகளுடன் நூல் தொடங்குகின்றது .தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் .
பேராசிரியர் ,எழுத்தாளர் அருணன் அற்புத அணிந்துரையில்  தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார் .உண்மைதான் மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன் தமிழகத்தின் சார்லி சாப்ளின்தான் .பொது வுடைமைவாதியான  நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன் சிறுவனாக இருந்தபோதே என் .எஸ் .கிருஷ்ணன் அவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு பகுத்தறிவுப் பாதைக்கு வந்ததாக குறிப்பிடுகிறார் .

காசிக்குப் போனா கரு உண்டாகும் என்ற
காலம் மாறிப்போச்சு ..
,
உடுமலை நாராயண கவியின் வைர வரிகளுக்கு உயிர் வழங்கியவர் என் .எஸ் .கிருஷ்ணன் என்ற தகவலையும் உடுமலை நாராயண கவி பற்றிய தகவலையும் நன்குப் பதிவு செய்துள்ளார் .என் .எஸ் .கிருஷ்ணன் அவர்கள் நடித்த  100 படங்களின் பெயரைப் பட்டியலிட்டு நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார் .

 என் .எஸ் .கிருஷ்ணன் ஆரம்ப  காலத்தில் நாடக சபாக்களில் சோடா, கலர் விற்கும் வேலை பார்த்து கொண்டே ஒரே நேரத்தில் விற்பனையும் , நாடக நடிகருக்குகான பயிற்சியும் பெற்றுள்ளார் என்ற தகவல் நூலில் உள்ளது .
சிறந்த அவதானி செய்கு தம்பி பாவலர் என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களை நன்கு அவதானித்து தொலைநோக்குச்  சிந்தனையுடன்  அவர் அன்று சொல்லிய சொற்கள் அப்படியே நடந்தது அவர் வாழ்க்கையில் .

நம் நாஞ்சில் நாட்டு இளைஞன் கிருஷ்ணன் வருங்காலத்தில் மாமேதை ஆகப்  போகிறான் .இவனுடையல் புகழால் நம் நாஞ்சில் நாடு மட்டுமல்ல தமிழ்நாடே பெருமை அடையப் போகிறது .

தன்னுடைய முதல் படத்திலேயே வாதாடி ,போராடி ஒரு தனித்த உரிமையைப் பெற்றார் .என்ற தகவல் உள்பட பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளது .என் .எஸ் .கிருஷ்ணன்  அம்மையாரிடம்   காதலிக்கும் தனக்குபோது தனக்கு திருமணம்  ஆகவில்லை என்று பொய் சொல்லி விடுகிறார் .பின் நாளில் உண்மை தெரிந்து மதுரம் கேட்க ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய் என்கிறார்கள் .நான் ஒரே ஒரு பொய்தானே சொன்னேன் என்று சொல்லி சமாளித்த தகவல் நூலில்  உள்ளது .

வீட்டிற்கு திருட வந்த திருடனை அடிக்காமல் சாப்பாடுப் போட்டு, திருடுவது குற்றம் உழைத்து சம்பாதிக்க வேண்டும் .தொழில் செய்து பிழைத்துக் கொள். என்று சொல்லி முதலாக வைத்துக் கொள் ! என்று பணமும் கொடுத்து அனுப்பிய கலைவாணரின் மனித நேயம் படித்து வியந்துப்போனேன்  .

வருமான வரி அதிகாரி இவர் நன்கொடை தருவது உண்மைதானா ?என்று சோதித்துப் பார்க்க மாறுவேடத்தில் ஏழையாக  வந்து  உதவி கேட்டபோது ,வந்தது வருமான வரி அதிகாரி என்று அறியாமல் உதவ முன் வந்த கலைவாணர் கொடை உள்ளம் கண்டு நெகிழ்ந்து ,
உனக்கு யாரைய்யா கிருஷ்ணன் என்று பெயர் வைத்தது ? உனக்கு கர்ணன் என்றுதான் பெயர் வைத்திருக்கணும்.என்றார் செய்திப் படித்து கலைவாணரின்  உதவும் பண்பை இன்றைக்கு கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்கள் கடைப்பிடிக்க முன் வர வேண்டும் .மக்களிடம் இருந்துப் பெற்றப் பணத்தை மக்களுக்கே வழங்கியதால்தான் கலைவாணர் இன்றும் ,இறந்தபின்னும் மக்கள் மனங்களில் வாழ்கிறார் .

  கர கர கரவென சக்கரம் சுழல்
கரும்புகையோடு வருகிற ரயிலே !

அந்நியர்கள் நம்மை ஆண்டது அந்தக் காலம்
நம்மை நாமே ஆண்டு கொள்வது இந்தக் காலம்
மனுசனை மனுஷன் ஏய்ச்சுப் பொழச்சது
அந்தக்காலம் அது அந்தக்காலம்!

இப்படி பல்வேறு பாடல்கள் படிப்பவர்களுக்கு கலைவாணர் அவர்கள் பற்றிய  மலரும் நினைவுககளை மலர்வித்து 
நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன் வெற்றிப் பெறுகின்றார். பாராட்டுக்கள்


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


திங்கள், 26 டிசம்பர், 2011

ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்

ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்

நூல்ஆசிரியர் ,பேராசிரியர் எ .எம் .ஜேம்ஸ் manithaneyajames@hotmail.com  செல் 9790128232

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

பதிப்பகம் காவ்யா சென்னை. விலை 500

நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் மதுரை யாதவர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வுப் பெற்று ,மனிதநேய மாத இதழ் நடத்தி வருபவர் .இதழில் எழுதி வந்த வள்ளுவர் முன்மொழிந்தார்   உலக அறிஞர்கள் வழிமொழிந்தார்கள். என்ற தொடர் கட்டுரையின் தொகுப்பு இந்நூல். உலகப் பொது மறையான திருக்குறளுக்கு மகுடம் சூட்டும் விதமாக நூல் வந்துள்ளது . உலக அறிஞர்ககள் யாவருக்கும் மூலவராக நமது திருவள்ளுவர் திகழ்ந்துள்ளார் .என்பதை உணர்த்தும் விதமாக இந்நூல் வந்துள்ளது .பாராட்டுக்கள் .

மொழி, நாடு ,சமயம் ,இனம் ,காலம் என்ற எல்லைகளைக் கடந்து திருவள்ளுவர் ,உலக மானுடத்திற்கு உவந்து உரிமைச் செல்வமாக வழங்கிச் சென்றுள்ள பரம்பரைச் சொத்துதான் திருக்குறள் .ஆங்கிலக் கட்டுரையாளர் திரு .ஜோசப் அடிசன் கருத்துடன் நூல் தொடங்குகின்றது .மதுரை ஆதீனம் ஆசியுரை மிகச் சிறப்பாக உள்ளது .மதுரைப் பேராயர் ,குன்றக்குடி  பொன்னம்பல அடிகளார் ஆகியோர் வாழ்த்துரை முத்தாய்ப்பாக உள்ளது.

திருக்குறள் நாள்தோறும்  நாம்  அசைபோட்டுச் சீரணிக்க வேண்டிய நூல் என்று நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் உண்மைதான் நம் வாழ்க்கைச் சிறக்க வழி காட்டுவது திருக்குறள் .கர்னல் முனைவர் க.திருவாசகம் ஆங்கிலத்தில் மிக நன்றாக அணிந்துரை வழங்கி உள்ளார் .தமிழறிஞர் தமிண்ணல் ,கவிவேந்தர் கா .வேழவேந்தன்   தமிழ்த்தேனீ இரா .மோகன் ஆகியோரின் அணிந்துரை அற்புதமாக உள்ளது. நூலிற்கு வளம் சேர்ப்பதாக  உள்ளது .  

காவ்யா சண்முக சுந்தரம் அவர்களின் பதிப்புரை மனதில் பதியும் உரையாக உள்ளது .நூலில் முதலில் திருக்குறள் அடுத்து மிக எளிய தெளிவுரை அடுத்து உலக அறிஞர்கள் அந்த திருக்குறளுக்கு பொருத்தமாக சொன்ன கருத்து ஆங்கிலத்தில் ,அடுத்து அதன் மொழி பெயர்ப்பு தமிழிலும் மிக சிறப்பாக எழுதி உள்ளார் .நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் .

நூல்  ஆசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது .பல்வேறு மலர்களில் இருந்து  தேனீ  தேன் எடுப்பது போல பல்வேறு நூல்களில் இருந்து திருக்குறள் தொடர்பான கருத்தை சேகரித்து அதனை அதற்க்கு பொருத்தமான திருக்குறளோடு பொருத்தி மிகப்பெரிய ஆய்வு நடத்தி உள்ளார் .
பல்வேறு அறிஞர்களின் கருத்தை படித்து தெளிந்து திருக்குறளோடு ஒத்து வரும் கருத்தை தொகுத்து நூலாக வழங்கி உள்ளார் .மேல் நாட்டு அறிஞர்கள் சேக்க்ஷ்பியர் ,போப் ,மில்டன் ,வால்டர் ,ஜான்ஜெய்  ,ஜியோ ,மேக்டோனால்டு , தாம்சன் ,ஹீல்ஸ் ,இராபர்ட்சென் ,ஜெரேமை  டெய்லர்,  பெளரிங் ,ஷ்டிரட்ஸ்   ,டேனியல் வெப்ஷ்டர் ,டுபின் ,ரோஜர்ஸ் ,சீசரோ   ,சேரன் ,அடிசன் ,பென், ஜனாதன் எட்வர்ட்ஸ் ,ஜியார்ஸ்  எலைட்,சுவீடன் பர்க் இப்படி 224 அறிஞர்களின் கருத்தை மேற்கோளாகக் காட்டி உள்ளார் .

நம் நாட்டில் வாழ்ந்த அறிஞர்கள் கவியரசர் இரவீந்திர நாத் தாகூர் ,அன்னை தெரசா ,சுவாமி சித்பவானந்தா கருத்துகளும் இந்நூலில் உள்ளது. ஒவ்வொரு நூலைப் படிக்கும் போதும் திருக்குறளை ஒட்டிய கருத்து எங்கு ? உள்ளது என்று தேடிக் கண்டுப்  பிடித்து அதற்க்கு பொருத்தமான திருக்குறளோடு பொருத்திக் காட்டி உள்ளார் .நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் அவர்களுக்கு தமிழ் ,ஆங்கிலம் இரண்டு மொழியிலும் நல்ல புலமை இருப்பதால் ,மகாகவி பாரதியாரின் கருத்துப்படி தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வண்ணம் நூலை  வடித்து உள்ளார் . 

அறிஞர்களின் அறிஞர் திருவள்ளுவர் ,உலக நூல்களின் சிகரம் திருக்குறள் .என்று ஆய்வின் மூலம் ஆணித்தரமாக நிருபித்து உள்ளார் .நூல் ஆசிரியர் .இந்த நூலை மைய அரசுக்கு அவசியம் அனுப்பி வைக்க வேண்டும் .உலகப் பொது மறையான திருக்குறளை இன்னும் தேசியநூலாக அறிவிப்பதற்கு தயங்குவதன் காரணம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது .இந்நூலை பார்த்து விட்டாவது திருக்குறளை தேசியநூலாக அறிவிக்க வேண்டும் .

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கண்
நீர் பூசல் தரும்.

புகழ்ப்பெற்ற இந்த  திருக்குறளுக்கு நோபல் நாயகன் ,மிகச் சிறந்த கவிஞர் ,ஓவியர், கவியரசர் தா
கூரின்  உயந்த கருத்தை பொருத்தி உள்ளார் .
நாம் அன்பு செலுத்துபவர் யாராயினும் ,அவரில் நமது சொந்த ஆன்மா மிக ,மிக உச்சமான உயர்ந்த அன்பு உணர்வுடன் ஒன்றி இருப்பதைக் காண்கிறோம் .
தாகூரின் கருத்தை மிக எளிதாக நுட்பமாக தமிழில் மொழி பெயர்த்துள்ளார் .நூல்ஆசிரியர் பேராசிரியர் எ .எம் .ஜேம்ஸ் ஏற்கனேவே தாகூரின்  கீதாஞ்சலியை தமிழில் மொழி பெயர்த்தவர் .

நன்றி மறப்பது நன்றன்று நன்ற
ல்லது
அன்றே மறப்பது நன்று
.

மிகப் பிரபலமான இந்த திருக்குறளுக்கு சரண் என்ற அறிஞரின் கருத்தை இணைத்துள்ளார் .
ஒருவரிட
மிருந்து  ஒரு உதவியைப் பெற்றவன் அதை எப்போதும் மறக்கக் கூடாது .உதவியை வழங்கியவன் அதை நினைவில் வைக்கக் கூடாது .

நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னாவாம் இன்னா செயின்  .

என்ற இந்த திருக்குறளுக்கு ரோஜாஸ் என்ற அறிஞரின் கருத்தை ஒப்பிட்டு உள்ளார் .
நாம் எதிரி என்று சந்தேகப் படாமலிருக்கும் நபர்தான் மிக மிக ஆபத்தான எதிரி .
முனைவர் பட்ட ஆய்வாளர்களை விஞ்சும்  வண்ணம் மிகப் பெரிய ஆய்வு செய்து நூலை படைத்துள்ளார் .இவருக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி பாராட்ட வேண்டும் என்பது என் விருப்பம் .நூல் ஆசிரியர் இது வரை எழுதிய நூல்களில் மிகச் சிறந்த நூலாக இந்த நூல் வ
ந்துள்ளது   .பாராட்டுக்கள் .    

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

இனி கவிஞர் இரா .இரவி

இனி             கவிஞர் இரா .இரவி

சாதி மத மோதலை இனி ஒழித்திடுவோம்
சகோதர உணர்வுடன் அனைவரும் சங்கமிப்போம்

மூடநம்பிக்கைகளுக்கு முடிவுரை எழுதிடுவோம்
பகுத்தறிவு சிந்தனைக்கு வழி வகுத்திடுவோம்

வன்முறைக்கு நிரந்தர விடுமுறை தந்திடுவோம்
நன்
மறை நம் திருக்குறள்  வழி எந்நாளும் நடந்திடுவோம் 

சோம்பேறித்தனத்திற்கு   விடை கொடுத்திடுவோம்
சுறுசுறுப்பை எப்போதும் துணைக் கொள்வோம்

ஒய்வுக்கு ஒய்வு தந்து நாளும் உழைத்திடுவோம்
ஒப்பற்ற வெற்றிகளைத் தொடர்ந்துப் பெற்றிடுவோம்
மனிதநேயத்தை மறக்காமல் நினைவில் வைப்போம் மனிதனை மனிதனாக என்றும் மதித்து நடப்போம்

வறுமை ஏழ்மை இல்லாது ஒழித்திடுவோம்
வளமை செழுமை நிலைத்திட பாடுபடுவோம் 

தூக்குத் தண்டனை எனும் அரக்கனைத் தூக்கிலிடுவோம்
துயர நிகழ்வுகள் இனி இல்லாது செய்திடுவோம்

பெண்களுக்கு சம உரிமை உண்மையில் தந்திடுவோம்
பெண்களை அடிமைப்படுத்தும் மடமைகளை அகற்றிடுவோம் 

உலக மகா ரவுடி என்றாலும் பாடம் புகட்டுவோம்
ஒற்றுமையுடன் அனைவரும் குரல் கொடுத்திடுவோம்

அநீதி உலகில் எங்கும் நடக்காமல் தடுத்திடுவோம்
நீதியை நிலை நாட்டிட நாளும்  உழைத்திடுவோம் 

   


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

புகைப்படங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழா புகைப்படங்கள் பார்த்து மகிழுங்கள்

மதுரையில் நடைப்பெற்ற சாகித்ய அகதமி விழாவின்  வெற்றிகாக  சிறப்பான ஒத்துழைப்பு நல்கியமைக்கு நீதி அரசர் பாஷா கவிஞர் இரா .இரவிக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார் .உடன் முனைவர் இரா .மோகன் ,வரதராசன் ,இந்திரா சௌந்தரராஜன் உள்ளனர்

மதுரையில் சாகித்ய அகதமி விழா


மதுரையில் சாகித்ய அகதமி விழா

வெள்ளி, 23 டிசம்பர், 2011

திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி

திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி


முல்லைப் பெரியாறு ணை இன்னும்
ஆயிரம் வருடங்கள்
ஆயுள்   கொண்டது

அதிகம் படித்த மாநிலமாக இருந்தால் போதுமா ?
அறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா ?

கேழ்வரகில் நெய் வடிகின்றது என்றால்
கேட்போரின் மதி எங்கே போனது ?

பென்னிகுக் என்ற மாமனிதனின் மூளையால்
பண்டைத்தமிழர் உழைப்பால் உருவானது

யார் அணையை யாரடா உடைப்பது ?
யார் உனக்கு அதிகாரம் தந்தது?

உச்ச நீதி மன்றம் சொன்னதை கேட்க மறுத்தால்
உச்சி மண்டையில் கொட்ட வேண்டி வரும்

ஆரஜக கேரளா அரசை கலைக்
வேண்டி வரும்
அன்பாக சொல்கிறோம் அறிந்து கொள் !

சபரி மலை வரும் தமிழர்களை தாக்குகின்றாய் !
பழனி மலை வரும் மலையாளிகளை மனதில் வை !

அணையின் நிலைத்த ஆயுளுக்காக வைத்த துளையில்
அங்கு வடியும்  நீரை கசிவு என்று பொய் உரைக்கிறாய் !
  
 

அணை எந்தக் காலமும் உடையாது உணர்ந்திடு !
அப்படியே உடைந்தாலும் மேல் நோக்கி பாயாது!

புதிய அணை கட்டும்  எண்ணத்தை அகற்றிவிடு !
பழைய அணையின் நீரின்  உயரத்தை   உயர்த்திவிடு !

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிகின்றாய் !
எறிந்த கல் திரும்பி வந்தால் என்னாகும் ?

மல்லாக்கப் படுத்துக்  கொண்டு  எச்சில் துப்புகின்றாய் !
துப்பிய எச்சில்உனக்கே திரும்பும் அறிந்திடு !

இடைத்தேர்தல் வெற்றிக்காக நாடகம் ஆடுகிறாய் !
என்பது இன்னும் புரியவில்லை கேரளா மலையாளிகளுக்கு

மிக மலிவான அரசியல் நடத்தும் மடையனே !
மிக விரைவில் திருந்திடு அல்லது திருத்தப்படுவாய்!

பொய்யை  திரும்பத் திரும்பசொன்னாலும் மெய்யன்று 
பொய் கெட்டிக்காரன் சொன்னாலும் எட்டு நாளைக்குதான்

பலமாக  உள்ள அணையை உடைக்க திட்டம் தீட்டி
பணம் கொள்ளை அடிக்க காணும் கனவு பலிக்காது

கேரளத்து அரசியல்வாதிகளின் சுய நலத்திற்கு
கேரளா மக்களே இரையாகி விடாதீர்கள்

அரிசி பருப்பு மாடு என உங்களுக்கு உண்பதற்கு
அனைத்தும் வழங்கிடும்  தமிழகத்திற்குத் துரோகம் செய்யாதீர் !

அன்று தமிழகத்தின் எல்லைகளை  இழந்தோம்
அன்று தானம் தந்த இடத்தி
ல் தமிழரைத் தாக்குகின்றனர் !

ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டிய  கதையாக
ஒண்டக் கொடுத்த இடத்தில தமிழரை அடிக்கின்றனர் 

தமிழன் ஏமாளியாக இருந்த காலம் மலை ஏறிவிட்டது
தமிழன் விழித்து விட்டான் மலையாளியே திருந்திவிடு

இழித்தவாயனாக  இருந்த காலம் முடிந்து விட்டது
இனி காரியவாதி ஆகிவிட்டது தமிழினம்

அணையை உடைக்கும் எண்ணத்தை கைவிடு
உடைக்க நினைத்தால்
உதை படுவாய் உறுதி !
  
பத்மனாப புர கோயில் நகைகள் யாவும்
பழைய தமிழக மன்னர்கள் வைத்தது

உடனடியாக நகைகள் அனைத்தையும்
உரிமையாளரான தமிழகத்திடம் தந்துவிடு !

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையானது
கேரளாவின் புதிய  அணை கட்டும் முயற்சி 

அன்னம் இட்ட கையை முறிக்க நினைக்கிறாய்!
திருப்பி அடித்தால் தாங்க மாட்டாய் !

எட்டு நாட்டு ராணுவத்தையே எதிர்த்தவன் தமிழன்
எங்கள் முன் நீயெல்லாம் சிறு தூசி ஊதி
டு வோம் !
 
பொறுத்தது  போதும் பொங்கி எழு !என்று
பொங்கி எழுந்து விட்டது எம் தமிழினம் !

அடங்கி விடு ஒடுங்கி விடு இல்லை என்றால்
அடக்கப் படுவாய் ஒடுக்கப் படுவாய் !

கொட்டக் கொட்டக் குனிந்த காலம் முடிந்தது
கொட்டும் கரம் முறிப்போம் நாங்கள் !

அண்டை நாட்டுக் காரன் கூட தண்ணீர் தரும்போது
அண்டை மாநிலத்தான் மறுக்கின்றான்

மத்திய அரசோ கேரளத்தை ஆளுவது தன் கட்சி என்பதால்
மவுனமாக  வேடிக்கை பார்க்கின்றது 

எச்சரிக்கை எச்சரிக்கை திருந்திவிடு !
திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !

திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்
மதுரை யாதவர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வுப் பெற்று ,மனிதநேய மாத இதழ் நடத்தி வரும் ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் அவர்களின் ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்  நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் .நூல்  ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் மதுரை ஆதினம் ,மேயர் ,பேராயர் ,நிர்மலா மோகன் ,மணி மொழியன் ,கவிஞர் இரா .இரவி ,மனித நேய மன்றத்தின் பொறுப்பாளர்கள் .

புகைப்படங்கள்
மதுரையில்  சாகித்ய அகதமி சார்பில் நடைப்பெற்ற மகளீர் மன்ற நிகழ்வு புகைப்படங்கள்   தலைமை முனைவர் நிர்மலா மோகன்

வியாழன், 22 டிசம்பர், 2011

நானும் அவளும் கவிஞர் இரா .இரவி

நானும் அவளும்           கவிஞர் இரா .இரவி

ஊர்வன பறப்பன அனைத்தும் உண்பவன் நான்
ஊருகாய் காய் மட்டுமே அசைவம் உன்னாதவள் அவள்

கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவன் நான்
கல் கண்ட இடமெல்லாம் விழுந்து வணங்குபவள் அவள்

தொலைக்காட்சித் தொடர்களை வெறுப்பவன் நான்
தொலைக்காட்சித் தொடர்களை விரும்புபவள் அவள்

தமிழ் இல்லாத கர்னாடக இசை விரும்பாதவன் நான்
 தமிழ் இல்லாத கர்னாடக இசை விரும்புபவள் அவள்

இரவு நேரத்தில் வெளிச்சம் வேண்டாம் என்பவன்   நான்
இரவு நேரத்தில் வெளிச்சம் வேண்டும் என்பவள் அவள்

இலக்கியத்தை விரும்பி கரும்பென ருசிப்பவன் நான்
இலக்கியத்தை எனக்கு எதற்கு ?என்பவள் அவள்

ஆலயச் சுற்றுலா அறவே பிடிக்காத  நான் 
ஆலயச் சுற்றுலா அடிக்கடி  பிடிக்கும் அவள்

இயற்கைச் சுற்றுலா மிகவும் பிடிக்கும் நான் 
இயற்கைச் சுற்றுலா பிடிக்கவேப்  பிடிக்காத அவள்

எங்களுக்குள் பத்துப் பொருத்தம் இருப்பதாகச் சொன்ன
எங்கள் ஊர்   சோதிடன் எங்கு தேடியும் கிடைக்க வில்லை

வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா மட்டுமல்ல
வஞ்சி அவளும் நானும் தான்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

புதன், 21 டிசம்பர், 2011

கவிதை வாசிப்புப் புகைப்படங்கள்
மதுரையில் சாகித்ய அகதமி விழாவில் கவிதை வாசிப்புப் புகைப்படங்கள் ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா .மோகன்  கவிஞர்கள் இரா .இரவி ,அ. வே.   சாந்தி குமாரசாமிகள் ,கா .கருப்பையா ,பத்மாவதி தாயுமானவர்

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...