இடுகைகள்

May, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெரியாரைப் பற்றி பேரறிஞர்கள்! -- 1 நன்றி .தமிழ் ஓவியா !

படம்
பெரியாரைப் பற்றி பேரறிஞர்கள்! -- 1     நன்றி .தமிழ் ஓவியா !

எங்கள் நட்பு என்றும் குறையாது. கவர்னர் - ஜெனரல், திரு.சி. இராஜகோபாலாச்சாரியார் எழுபதாவது ஆண்டு விழாவுக்கு, தில்லி 22-11-1948
சீரார் ஈ.வெ.ரா. அவர்களுக்கும், எனக்கும் உள்ள அக நகும் நட்பு யார் என்ன சொன்ன போதிலும் என்றும் குறையாது.

                                                                            -----------------------இராஜகோபாலாச்சாரி
**************************************************************************************

பெரியார் நீடு வாழ்க!
தமிழ்ப் பேராசிரியர் உயர் திரு. மறைமலை அடிகளார் அவர்கள்.
சாதி, சமயப் பூசல்களை யொழித்து, "எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி யிரங்கி"த் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன் மக்கட்குரிய உண்மைக் கொள்கையாயிருந்தும், முப்பத்தைந்தாண்டுகட்குமுன், சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கிய காலையில், அதனை எதிர்த்தும், என்னைப் பகைத்தும், எனக்குத் தீது செய்தவர்கள் சைவரிற் கற்றவர்களே. அஞ்ஞான்று எனக்குதவியாய் நிற்றற்கு எவருமில்லை. பின்னர், பெரியார் திரு. ஈ.வெ.ரா. …