இடுகைகள்

July, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சன்னலோர இருக்கை இனிதாக்கியது பயணத்தை  இயற்கை ரசிப்பு !
பயணிக்கிறது  வகுப்புகளுடன்  தொடர்வண்டி !
எல்லோரும் பார்க்க  குளிக்கின்றன மலர்கள்  மழை ! 

எறிந்தான் கல்  குளத்து நீரில்  உடைந்தது நிலா !
காற்றால் ஓடி  தருகின்றது மின்சாரம்  காற்றாடி !
எடிசன் பிறக்காவிடில்  இன்றும் இருட்டுதான்  உலகம் !
காண்பதும் பொய் மலையை முத்தமிடும்  மேகம் !
ஏர் உழுத  வலி தங்கியதால்  நல்ல விளைச்சல் !
குப்பைக் கூட  மக்கினால் உரம்  மனிதன் ?

அழகாக இருந்தும்  பயன்பாடு இல்லை  விசிறி வாழை !
பாறைகள் தகர்ப்பு  மணல்கள் கொள்ளை  மற்றுமொரு சுனாமி !
ஒவ்வொன்றும் ஒருவிதம்  இலைகள் பலவிதம்  இயற்கையின் அற்புதம்  !
கிராமத்து  முரண்  நிறமோ கருப்பு  பெயரோ வெள்ளாடு !
அழிவிற்கான  முதற்படி  ஆணவம் !
சாதனைக்கு  முதற்படி அடக்கம் !
சினத்தின் போது பேச்சை விட சிறந்தது  மவுனம்  !
கட்டுப்படுத்தாவிடின்  விளைவுகள் விபரீதம்  சினம் !
படித்தப் பெண்களும்  விதிவிலக்கல்ல  பொன் ஆசை !
யாரும் வளர்க்காமலே  வளர்ந்து விடுகின்றன  எருக்கம் செடிகள் !
மன்னர் ஆட்சி மண்சண்டை  தொடர்கின்றன  மக்கள் ஆட்சியிலும் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .…

நூல் வெளியீட்டு விழா !

படம்
நூல் வெளியீட்டு விழா !
நூல் ஆசிரியர் ஹரி தியாகராஜன் ,செயலர் தியாகராசர்   கல்லூரி
வெளியீடு வானதி பதிப்பகம்
அணிந்துரை தமிழ்த் தேனீ இரா .மோகன் !
வெளியிட்டவர்  சொல்லின்   செல்வர் சுகி சிவம்.


உலக உத்தமர் கலாம் 10 வது பதிப்பு வந்துவிட்டது

படம்
உலக உத்தமர் கலாம் 10 வது பதிப்பு வந்துவிட்டது .
மதுரை வடக்குமாசி வீதியில் படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி !

படம்
மதுரை வடக்குமாசி வீதியில் படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி !

வானம் என் வாசலில் ! நூல் ஆசிரியர் பா .கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நன்றி . புதிய உறவு மாத இதழ் !புதுவை !

படம்
வானம் என் வாசலில் !

நூல் ஆசிரியர் பா .கிருஷ்ணன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நன்றி . புதிய உறவு மாத இதழ் !புதுவை !
படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி !

படம்
படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 31.7.2016 இன்று மலர்ந்த மலர்கள் ! படங்கள் கவிஞர் இரா .இரவி

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 31.7.2016 இன்று மலர்ந்த மலர்கள் ! படங்கள் கவிஞர் இரா .இரவி.படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

படம்
மாட மாளிகையில்
கோடிகள் பணம் இருந்தும்
தூக்கமின்றித் தவிக்கும் பணக்காரன் !
ஏழ்மையிலும் வெறுமையிலும்
வறுமையிலும் சாலையிலும்
நிம்மதியான தூக்கம் ஏழை !
கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! சூலை – 31. தீரன் சின்னமலை நினைவு தினம் ! ப.கண்ணன்சேகர். திமிரி.

படம்
படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

சூலை – 31. தீரன் சின்னமலை நினைவு தினம் !

 ப.கண்ணன்சேகர். திமிரி. பேச : 9894976159.
கொங்குநாட்டு சீமையில் கொடிக்கட்டிப் பறந்திட்ட
     கோட்டையில் அரசனாம் கொள்கையின் தீர்த்தகிரி!
பொங்கிடும் கடலென போர்களத்தில் சுழன்றிட
      புறமுதுகை காட்டியே புரண்டது வெள்ளைநரி!
தங்கிட வந்தவன் தாய்நாட்டை தனதாக்க
      தரங்கெட்ட வெள்ளையனுக்கு தடவினான் முகக்கரி!
சிங்கத்தின் குகைக்குள்ளே செருக்கோடு சென்றிடும்
      சிறுமதி வெள்ளையர்க்கு சிதைந்தது முகவரி!

இந்திய விடுதலை எண்ணத்தில் கொண்டிட
       இரவுபகல் பாராது எழுச்சியினை வென்றது!
சிந்திய குருதியும் சிதைந்திட்ட உயிர்களும்
       சிறைக்கதவு முழுமையாய் சரித்திரம் சொல்லுது!
வந்திட்ட சுதந்திரம் வரம்பெற்று வரவில்லை
        வடித்திட்ட கண்ணீரால் வலியினைக் கொண்டது!
சிந்தனை செய்திடு சிறந்திடும் தாய்நாடு
         சிறாரின் மனதிலும் சிறப்புற பதிவிடு!

ஓடாநிலை தீர்த்தகிரி ஓடவைக்க வெள்ளையரை
      உரிமையோடு குரலினை உரக்கவே எழுப்பினான்!
வாடாத தமிழகத்தின் வரிவசூல் செல்வதை
      வீரமிகு சின்னமலை வெகுண்டு எதிர்த்திட்டான்!
நாடாளும் வெள்ளையர் நாள்தோறும் தீரன…

முக்கோண முக்குளிப்பு நூல் ஆசிரியர் : சந்திரகௌரி சிவபாலன் (ஜெர்மனி) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

படம்
முக்கோண முக்குளிப்பு
நூல் ஆசிரியர் : சந்திரகௌரி சிவபாலன் (ஜெர்மனி)www.gowsy.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வெளியீட்டாளர் : ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்,  பக்கங்கள் : 194.
*****        முகநூல் தோழி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள்,  நான் எழுதும் நூல் விமர்சனங்களை இணையத்தில் படித்து விட்டு என்னுடைய முகவரியை பெற்று இந்த நூலைஜெர்மனியில் இருந்து அனுப்பி இருந்தார்கள்.  புலம்பெயர்ந்த வலி மிகுந்த வாழ்க்கையிலும் தமிழுக்காக தமிழ் இலக்கியத்திற்கே நேரம், பணம் செலவழித்து நூல் வெளியிடுவது குறித்து முதல் பாராட்டு.        நூல் ஆசிரியர் சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் இந்நூலை பெற்றோருக்கு காணிக்கையாக்கி உள்ளார்.  அருமையான கவிதையும் எழுதியும் உள்ளார்.  அதில் இருந்து சில துளிகள்.   “என்னுள் வாசம் செய்து, எனக்குள் ஓர் எழுத்தாளனை,  எனக்குள்  ஒரு வைத்தியனை,  எனக்குள் ஓர் உழைப்பாளியை,  எனக்குள் ஒரு தாய்மையை, எனக்குள் ஒரு பகுத்தறிவாளியை ;  எனக்குள்  ஒரு சிந்தனைவாதியை  எனக்குள் நான் எல்லாமாய் வாழ  அச்சாணியானவர்களே!        இக்கவிதையின் நூலாசிரியரின் பன்முக ஆற்றலும் அதற்கு முழுமுதற் காரணமானவர்கள், பெற்றோர்கள் என்பதையும் உணர்…

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் எழுதிய"இலக்கியத்தில் மேலாண்மை "நூல் அறிமுக விழா

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் எழுதிய"இலக்கியத்தில் மேலாண்மை "நூல் அறிமுக விழா .
தமிழ்ப் பேராசிரியருக்கு செம்மொழி ஆளுமை விருது ! பாராட்டுகள்

படம்

சேலம் இயற்கைக் காட்சிகள் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
சேலம் இயற்கைக் காட்சிகள் .படங்கள் கவிஞர் இரா .இரவி !