இடுகைகள்

October, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரத்த தானம் வழங்கியமைக்கு வழங்கிய சான்றிதழ் .

படம்
" அகவிழி " பார்வையற்றோர்  விடுதி மற்றும் அரசு ராஜாஜிமருத்துவமனையும் இணைந்து  5  வது ஆண்டு ரத்ததானம் மற்றும்  விழிதான விழிப்புணர்வு   முகாம் மற்றும்  நடைபெற்றது .விடுதியின் நிறுவனர் எம் .பழனியப்பன் மற்றும் கவிஞர் இரா .இரவி இருவரும்  5  வது ஆண்டாக ரத்ததானம்  வழங்கி தொடங்கி வைத்தனர் . ரத்த தானம்  வழங்கியமைக்குவழங்கிய சான்றிதழ் .

" அகவிழி " பார்வையற்றோர் விடுதி மற்றும் அரசு ராஜாஜிமருத்துவமனையும் இணைந்து 5 வது ஆண்டு ரத்ததானம் மற்றும் விழிதான விழிப்புணர்வு முகாம் மற்றும் நடைபெற்றது

படம்
" அகவிழி " பார்வையற்றோர்  விடுதி மற்றும் அரசு ராஜாஜிமருத்துவமனையும் இணைந்து  5  வது ஆண்டு ரத்ததானம் மற்றும்  விழிதான விழிப்புணர்வு   முகாம் மற்றும்  நடைபெற்றது .விடுதியின் நிறுவனர் எம் .பழனியப்பன் மற்றும் கவிஞர் இரா .இரவி இருவரும்  5  வது ஆண்டாக ரத்ததானம்  வழங்கி தொடங்கி வைத்தனர் . மாமன்ற உறுப்பினர்கள் திரு ஜீவானந்தம் ,திரு .புதாகீர் இருவரும் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் . " அகவிழி " பார்வையற்றோர்  விடுதி மாணவ மாணவியரும் ,மதுரை புதூர் பகுதி வாழ் இளைஞர்களும், பொது மக்களும் பெருமளவில் கலந்துக் கொண்டு ரத்ததானம் வழங்கினார்கள் .டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று அரசு ராஜாஜிமருத்துவமனை ரத்ததான ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார் .கவிஞர் இரா .கல்யாண சுந்தரம் அவர்களின் முயற்சியில் செண்பகம் மெட்டல் அதிபர் திரு லிங்கமணி அவர்கள் நன்கொடையாக 7  வது ஆண்டாக வழங்கிய புத்தாடைகளை அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவ மாணவியருக்கு கவிஞர் இரா .இரவி வழங்கினார் .  அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர்
( பார்வையற்ற )திரு எம் .பழனியப்பன் .உடன்
இருந…

வாழ்த்துரை வழங்கினார்கள்

படம்
மாமன்ற உறுப்பினர்கள் திரு ஜீவானந்தம் ,திரு .புதாகீர் இருவரும் கலந்துக் கொண்டு மாமன்ற உறுப்பினர்கள் திரு ஜீவானந்தம் ,திரு .புதாகீர் இருவரும் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் .கவிஞர் இரா .கல்யாண சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார்.

கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்

படம்
" அகவிழி " பார்வையற்றோர்  விடுதி மற்றும் அரசு ராஜாஜிமருத்துவமனையும் இணைந்து  5  வது ஆண்டு ரத்ததானம் மற்றும்  விழிதான விழிப்புணர்வு   முகாம் மற்றும்  நடைபெற்றது .விடுதியின் நிறுவனர் எம் .பழனியப்பன் மற்றும் கவிஞர் இரா .இரவி இருவரும்  5  வது ஆண்டாக ரத்ததானம்  வழங்கி தொடங்கி வைத்தனர் . " அகவிழி " பார்வையற்றோர்  விடுதி நிறுவனர் எம் .பழனியப்பன் அவர்களை
கவிஞர் இரா .இரவி
பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்

தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களை நடுவராகக் கொண்டுபட்டிமன்றம் நடைபெற்றது .

படம்
மதுரை திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோயில் குட முழுக்கு விழாவை முன்னிட்டு பட்டிமன்றம்  நடைபெற்றது .பட்டிமன்றத்தை வழக்கறிஞர் சிவா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் .  தமிழ்ச்சுடர், முனைவர் நிர்மலா மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு , வாழ்க்கை சிறக்கப் பெரிதும் தேவை  குணமே ! என்று கவிஞர் இரா .இரவியும் ,கவிமுரசு ச .திருநாவுக்கரசும்  வாதிட்டனர் .பணமே ! என்று நகைச் சுவைத் தென்றல் முத்து இளங்கோவனும் சொல்லின் செல்வி திருமதி சங்கீத்  ராதாவும் வாதிட்டனர்.வாழ்க்கை சிறக்கப் பெரிதும் தேவை குணமே  ! என்று நடுவர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் தீர்ப்பு வழங்கினார்கள் . திருப்பரங்குன்றம் பகுதி வாழ் மக்கள் பெருமளவில் வருகை தந்து சிறப்பித்தனர் .

அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவ மாணவியருக்கு புத்தாடைகள்

படம்
கவிஞர் இரா .கல்யாண சுந்தரம் அவர்களின் முயற்சியில் செண்பகம் மெட்டல் அதிபர் திரு லிங்கமணி அவர்கள் நன்கொடையாக 7  வது ஆண்டாக வழங்கிய புத்தாடைகளை அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவ மாணவியருக்கு கவிஞர் இரா .இரவி வழங்கினார் .உடன்  நிறுவனர் ( பார்வையற்ற )
திரு எம் .பழனியப்பன்
.

ஊழலோ ஊழல் ! கவிஞர் இரா .இரவி .

படம்
 ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி .

அரசியலில் ஊழல் !
அரிசியிலும் ஊழல் !

ஆற்றுமணலில் ஊழல் !
செம்மண்ணிலும்  ஊழல் !

ஆயுதத்தி
ல்ஊழல் !
ராணுவத்திலும்  ஊழல் !

நிதித்துறையில் ஊழல் !
நீதித்துறையிலும் ஊழல் !
நிலத்தில் ஊழல் !
நிர்மானத்திலும்ஊழல் !

தொலைபேசியில் ஊழல் !
தொலைக்காட்சியிலும்  ஊழல் !


கல்லில் ஊழல் !பாறையிலும்  ஊழல் !

நிலக்கரியில் ஊழல் !
நிலத்தடி நீரிலும் ஊழல் !

விளையாட்டில் ஊழல் !
கிரிக்கெட்டிலும் ஊழல் !

மருத்துவத்தில் ஊழல் !
மருத்
துவக்கல்லூரியிலும்  ஊழல் !

காவல்துறையில் ஊழல் !
உளவுத்துறையிலும் ஊழல் !


சுகாதாரத்தில் ஊழல் !
சுடுகாட்டிலும் ஊழல் !

உதவித்தொகையில்ல்ல்ஊழல் !
உன்னத ஆசிரியர்களும் ஊழல் !

ஹைக்கூப் போட்டி அறிவிப்பு

படம்
ஹைக்கூப்  போட்டி அறிவிப்பு

காதல் ! கவிஞர் இரா .இரவி .

படம்
காதல் !         கவிஞர் இரா .இரவி .

நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும்  மெய்
காதல் !

தன்னை மறந்து
துணையை நினைக்கும்
காதல் !   

அனுபவம்  இனிமை
நினைத்திட இனிக்கும்
காதல் !   

காவியம் தொடங்கி
கணினி வரை இன்பம்
காதல் !   

ஒரே அலைவரிசையில்
இரண்டு மனங்கள்
காதல் !   
மூளையின் மூலையில்
இட ஒதிக்கீடு
காதல் !

உயிர் உள்ளவரை
ஒட்டியிருக்கும் நினைவு
காதல் !

அகத்தில் தோன்றி
முகத்தில்  மலரும் காதல் !

சிறகுகள் இன்றி
வானில் பறக்கலாம்
காதல் !

சிந்தைக்கு வழங்கிடும் 
புதுத்தெம்பு
காதல் !

கர்வம் தந்து
கர்வம் தகர்க்கும்
காதல் !

விழிகளில் தொடங்கி
மூளையி
ல் முடியும் காதல் !

ஈடு இணையற்றது
இணையோடு இணைப்பது
காதல் !

வென்றால் இன்பம்
தோற்றால் துன்பம்
காதல் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

படம்
ஹைக்கூ           கவிஞர் இரா .இரவி .
முட்டாளை அறிவாளியாக்கும்
அறிவாளியை மேதையாக்கும்
சுற்றுலா !
அறிவுறுத்த   வேண்டியுள்ளது
மனிதனாக வாழ
மனிதனை !

மண்ணுக்கு அருகில் இருந்ததால்
அதிக இனிப்பு
அடிக்கரும்பு !

மெய்ப்பன்  இன்றியே
இல்லம் வந்தன
ஆடுகள் !

களங்கமானது 
மனிதனின் கால் பட்டதால்
நிலவு !

வாழ்க்கை முரண்பாடு
பணக்காரனுக்கு பசி இல்லை
ஏழைக்கு பசி தொல்லை !

அறிந்திடுங்கள்
சோம்பேறிகளின் உளறல்
முடியாது நடக்காது தெரியாது !

சாதிக்கின்றனர்
கைகள் இன்றி
கைகள் உள்ள நீ !

வாழ்க்கை இனிக்கும்
கொடுத்ததை மறந்திடு
பெற்றதை மறக்காதிரு !

கவனம் தேவை
சிக்கல் இல்லை
சிந்தித்துப் பேசினால் !

விரல்களால் தெரிந்தது
விழிகளில் உலகம்
இணையம் !

உணர்த்தியது
பசியின் கொடுமை
நோன்பு !

வக்கிரம் வளர்க்கும் 
வஞ்சனைத் தொடர்கள்
தொலைக்காட்சிகளில் !www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

படம்
ஹைக்கூ   கவிஞர் இரா .இரவி .
கற்பனைதான்
கல்வெட்டானது
தேவதை !
கிடைக்காததற்கு ஏங்குவது
கிடைத்ததை உணராதது
பலரின் வாழ்க்கை !

ஏழு வண்ணங்களில்
எண்ணம் கவரும் வில்
வானவில் !

பிரிந்து
பின் சந்தித்தால்
சுவை அதிகம் !

நாட்டு நடப்பு நேற்றைய நவீனம்
இன்
றைய நவீனமன்று !

பெயர் பொறிப்பவர்கள்
உணருவதில்லை
மரத்தின் வலி !

காயம் இல்லை
மரத்திலிருந்து விழுந்தும்
இலை !  

மரமானதற்கு 
வருந்தியது
சிலுவை மரம் !

தந்திடுவீர்
தானத்தில் சிறந்தது
உடல் தானம் !

அசலை வென்றது
நகல்
செயற்கைச் செடி !

பசிபோக்கும்
அட்சயப் பாத்திரம்
அவள் முகம் !

உணர்த்தியது
பொதுவுடைமை
செம்பருத்திப் பூ !

மூளையின்
முடங்காத முயற்சி
எண்ணங்கள் !

இதயத்தை இதமாக்கும்
கோபத்தைக் குறைக்கும்
இனிய இசை ! 


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

படம்
ஹைக்கூ    கவிஞர் இரா .இரவி .

ஆசைப்பட்டது காளான்
ஆசையை வெறுத்த
புத்தரின்  உயிர் !


அடைந்தான்  பரவசம்
சுனாமியில் தொலைந்த மகன்
கண் முன்னே !


இயற்கையை நேசிக்க
இதமாகும்
இதயம் !


இருக்கட்டும் தூய்மையாக
இரண்டும்
அகமும் புறமும் !

தேவையில்லை
ஏழைகளின் வீட்டிற்கு   
பூட்டு !

பெண்களுக்கு அழகு
பொன்னகையை விட
புன்னகை !

வான் மேக
சிக்கி முக்கி உரசல்
மின்னல் !

மனிதனின்
முதல் நவீனம்
மொழி !

முட்டாள்
மகுடி
துகிறான்
காதில்லாப்  பாம்பிடம் !

அழிவிற்கு

வழி வகுக்கும்
ஆயுதம் !

உணர்ச்சி வசமின்றி
அறிவுவசம் எடுப்பது
உத்தி !

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இளையராஜா அவர்களுக்கு இறுதி வேண்டுகோள் !

படம்
இளைராஜா  அவர்களுக்கு இறுதி வேண்டுகோள் !

இந்த நிமிடம் வரை ஈழத் தமிழர் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்காத இளை
ராஜா அவர்கள் இனியாவது கண்டனம் செய்யும் விதமாக மாவீரர்கள் தினம் நடக்கும் மாதத்தில் நடத்த உள்ள இசை நிகழ்ச்சியை தள்ளி வைத்து தமிழர் என்பதை நிருபிக்கட்டும் .பிடிவாதம் வேண்டாம் .சிந்தித்துப்  பார்த்து தள்ளி வையுங்கள் .விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை உணருங்கள் . சிங்களரின் இன உணர்வு  அழிக்கும் பணிக்கு  துணை போக வேண்டாம் .இளைராஜா அவர்கள் சிறந்த இசைமேதை .ஆனால் சிறந்த மனிதர் என்று பெயர் எடுக்க கடைசி வாய்ப்பு .உங்களிடம் இல்லாத பணமா ? ஒரு மாதம் கழித்து சென்றாலும் பணம் தருவார்கள் .

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

படம்
மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

படம்
மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

படம்
மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .கவிஞர் இரா .கல்யாண சுந்தரம்முன்னிலை  உரையாற்றினார்  . திரு .ஜோதி மகாலிங்கம் ,
திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிமுரசு வா . மு .சே. திருவள்ளுவர் அவர்கள் "முயற்சி திருவினையாக்கும்" என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .ஆசிரியர்கள் பீட்டர் ,ரூபி பீட்டர் ஆகியோர் தன்னம்பிக்கை கருத்துக் கூறினார்கள் .
திரு.ஜோ .சம்பத்   நன்றி கூறினார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர்   பலர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தார்.

கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர்உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

படம்
கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் அவர்கள் மதுரை  தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் "முயற்சி திருவினையாக்கும்" என்ற தலைப்பில்ஆற்றிய உரை .

தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
.
இன்று தன்னம்பிக்கை பயிற்சி என்றால் ஏதோ மேல் நாட்டில் பரவலாகப் பேசப்படும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுபவர்க்கும் புரியாமல் , அதை கேட்பவர்களுக்கும் புரியாமல் ஏதோ சந்திர மண்டலத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகின்றனர் .நம்மவர்களும் தன்னையும் , தன் மொழியையும் அறியாததால் பணத்தைச் செலுத்தி புரியாதந்திலேயே  உழல்கின்றனர். வாழ்வின் பெரும்பகுதி சோதிடம் ,வாசுத்து,சகுனம் அனைத்திற்கும் செலவழித்து பின் தன்னம்பிக்கை பயிற்சி என ஆங்காங்கே அல்லலுருகின்றனர்.        

மதுரை  தன்னம்பிக்கை வாசகர் வட்டம் இத்தகவல்களை அறிந்ததால்தான்  "முயற்சி திருவினையாக்கும்" என்ற தலைப்பை கவிஞர் இரா .இரவி வழங்கி உள்ளார். ஐயன் திருவள்ளுவரின் குறட்பாவிலிருந்து தலைப்பை வழங்கி உள்ளத்திலிருந்து    தன்னம்பிக்கைக்கும் வாழ்க்கைக்கும் பொய்யாமொழியார் வழங்கிய கருத்துக்கள் நாம் அறிந்துகொண்டாலே வாழ்வில் வெல்லலாம் .

முயற்சி திருவினை…

படித்து மகிழுங்கள் .

படம்
http://eluthu.com/index.php  எழுத்து . காம் இணையத்தில் கவிஞர் இரா .இரவியின்( 452 ) படைப்புகள் படித்து மகிழுங்கள் .படித்தவர்கள் எண்ணிக்கை  87516

http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://eluthu.com/nanbarkal/eraeravi.html

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#resp

தன்னையே கொல்லும் சினம் ! கவிஞர் இரா .இரவி .

படம்
தன்னையே கொல்லும் சினம் !      கவிஞர் இரா .இரவி .
தன்னையே கொல்லும் சினம் இனி
தன்னை உணர்ந்து தவிர்த்திடு சினம்

குடும்பங்
களின் முதல் எதிரி சினம்
குற்றவாளி ஆகிடக் காரணம் சினம்

இழப்பை ஏற்படுத்துவது சினம்
அழிவை ஏற்படுத்துவது சினம்

குடு
ம்பங்கள் பிரிந்திடக் காரணம் சினம்
குழந்தைகள் வாடிடக் காரணம் சினம்

மதியை இழந்தால் வருவது சினம்
மதியை இழக்காமல் இருக்க வேண்டும் தினம்

கொன்று விடும் உன்னை கொடியது சினம்
காக்க வேண்டும் பொறுமை வராது சினம்

சினத்தால் சீர
ழிந்தோர் நாட்டில் கோடி
சினம் விடுத்து அன்பு செய் வருவார் நாடி

சினத்தின் தொடக்கம் அழிவில் முடியும்
சிந்தனையின் தொடக்கம் சீராக அமையும்
பகுத்தறிவைப் பயன்படுத்தினால் வராது சினம்
பண்பாடு காத்திட்டால் வராது சினம்

உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு  சினம்
உலகப்பொதுமறை ஓதுவது தவிர்த்திடு சினம்
இன்னா செய்தாரை திருக்குறள் வழி நடந்தால்
இந்த வையகம் முழுவதும்   அமைதி நிலவும் .

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#resp…

குழந்தை ! கவிஞர் இரா .இரவி .

படம்
குழந்தை !                  கவிஞர் இரா .இரவி .

உள்ளது உள்ளபடி
உரைக்கும் காந்தி
குழந்தை !

உடைந்தது பொம்மை
உடைந்தது மனசு
குழந்தை !

செல்வங்களில்
உயர்ந்த செல்வம்
குழந்தை !

உலகின் முதல் மொழி
உன்னதமான மொழி
குழந்தை !

குழல் யாழ்
வென்றது
குழந்தை !

கவலை நீக்கும்
இன்பம் தரும்
குழந்தை !

பிழையாகப் பேசினாலும்
பேசுவதே அழகு
குழந்தை !

கருவில் உருவான
விசித்திர விந்தை
குழந்தை !

சாதி மத பேதம்
அறியாதது

குழந்தை !

சிரிப்புக்கு இணையான
பூ உலகில் இல்லை
குழந்தை !

அச்சம் தவிர் ! நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

படம்
அச்சம் தவிர் !

நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

வெளியீடு மின்னல் கலைக் 
கூம் .எல்டாம்ஸ் சாலை ,சென்னை .18  செல் 9841436213.

நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு அவர்கள் "பாவேந்தர் பணிச்செல்வர் "  விருது பெற்றவர் .நங்க நல்லூரில்  பாரதி ,பாரதிதாசன் கவிதை அமைப்பை நிறுவி ஆண்டுதோறும் பாரதி விழா நடத்தி வருபவர். இலக்கிய ஆர்வம் மிக்கவர் .சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் கலந்து கொள்வதில் முன்னணியில்  இருப்பவர் .எல்லோருடனும் அன்பாக  பழகிடும் நல்லவர் . சென்னையில் நடந்த விழாக்களில் சந்தித்து  உரையாடி உள்ளேன் .மின்னல் கலைக்  கூத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது. பாராட்டுக்கள் ."எளிமையின் சின்னம்" திரு .நல்லகண்ணு அவர்களின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது .

மகாகவி பாரதியின்  வைரச் சொல்லான   " அச்சம் தவிர் " நூலின் தலைப்பு மிக நன்று .நூலில் பல்வேறு தலைப்புகளில் உரத்த சிந்தனையுடன் கவிதை எழுதி நூல் படிக்கும் வாசகர்களை உரக்க சிந்திக்க வைத்துள்ளார் .உள்ளத்தில்  உள்ளது கவிதை என்பது போல மனதில் பட்டதை துணிவுடன் கவிதையாக்கி உள்ளார் …

உலக படைப்பாளிகள் விபரம் .

படம்
அக்கினிக்குஞ்சு இணையத்தில் உலக படைப்பாளிகள் விபரம் .

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=category&id=305&Itemid=542

தமிழ் ஆதொர்ஸ்  இணையத்தில் உலக படைப்பாளிகள் விபரம்


http://www.tamilauthors.com/5.html

http://www.tamilauthors.com/writers/india/Era.Ravi.html

படித்ததில் பிடித்தது ! ஹைக்கூ பேராசிரியர் ,கவிஞர் கி .மணிவண்ணன் பாண்டிச்சேரி

படம்
படித்ததில்  பிடித்தது !

ஹைக்கூ  பேராசிரியர் ,கவிஞர் கி .மணிவண்ணன் .பாண்டிச்சேரி 


உயர் நிலைக்கு
சிறந்த  வழி
இல்லறம் !

விண்ணைத் தொடலாம்
நவசக்தி அறிந்தால்
மனோசக்தி !

முக்கியமானது
நவரசங்களில்
அன்புரசம் !

ஆனந்த வாழ்க்கை
அடிப்படை
அறிவியல் சாமியம் ( FORMULA )

மனதில் ஹைக்கூ
வாக்கில் கவிதை
செயலில் காவியம் !

அருகே இருப்பது மனம்

பழகினால்
அழகோ அழகு !

மெய்ஞானக்  கண்டுபிடிப்புகள்
கணிதமுறை ஆகும் காலம்
பொற்காலம் !

மெய் ஞானம் முதலாளி
விஞ்ஞானம்
தொழிலாளி !

கோடி நன்மை ஞானம்
கோடான கோடி நன்மை
மெய் ஞானம் !

ஒன்பது வாசல்
உடம்பிற்குள்
எண்பது கலைகள் !

கலைவாணியிடம்  பெற்றது 
சென்றது களவானியிடம் 
திருடுபோனது !


சமுதாயத்தின்
களைகளைக்  களைய
தேவை ரகளை !

சிலகாலம் பொறுமை
நன்மை
பலகாலம் !

தோல்வியை  ஏற்றால்
அடுத்து
உறுதி
வெற்றி !


செய்யாதே
கரிசனம்
தோல்விக்கு !


அவள்
செந்தமிழ்
தேன்மொழியா (ல்) ( ள் ) (ழ் )

வேலை கொடு
அறிவுக்கு
பகுத்தறிவிற்கு !

மாற்றான் . நடிப்பு சூர்யா . இயக்கம் கே .வி .ஆனந்த் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
மாற்றான் .
நடிப்பு சூர்யா .
இயக்கம் கே .வி .ஆனந்த் .

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
.
ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் சூர்யா.இரட்டை வேடத்தில் மிக நன்றாக நடித்துள்ளார் .முழுக்க முழுக்க சூர்யா படம் .
இரட்டை வேட படபிடிப்பு தொழில் நுட்பத்தைப்  பாராட்டலாம் .இது போன்ற ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்கதையில் உருவான சாரு லதா படம் முந்திக் கொண்டது . படம் மிக நீளமாக் உள்ளது .இடைவேளை வரை படம் நன்றாக உள்ளது .இடைவேளைக்குப் பின் படத்தில் இடைவெளி விழுகின்றது .சூர்யாவின் தந்தையாக நடித்துள்ள வில்லன் நன்றாக நடித்துள்ளார் .அம்மாவாக தாரா நடித்துள்ளார் .

கதாநாயகி காஜல் அகர்வால் ரசிய மொழிபெயர்ப்பாளராகவும் .பாடலுக்கு ஆடவும் வந்து போகிறார் .நடிக்க வாய்ப்பு இல்லை .இதற்கு முன் வந்த இரட்டை வேடங்கள் படங்களில் இருந்து  மாறுபட்டதாக உள்ளது. தொழில் நுட்பம்  மிக நேர்த்தி .


திரைபடத் துறையினர் ரூம் போட்டு யோசிப்பார்கள் என்பதும் உண்மைதான் போலும் .தேவை இல்லாமல் ரசியாவை வம்பிற்கு  இழுத்து உள்ளனர் .1992 ஆண்டு நடந்த விளயாட்டுப்  போட்டிகளில் வென்றவர்கள்  ஊக்க மருந்து உண்டு வென்றார்கள் என்று   குண்டு தூக்கிப் போட…

மது ! கவிஞர் இரா .இரவி .

படம்
மது !      கவிஞர் இரா .இரவி .

கண்மூடி குடிக்கின்றாய்
விரைவில் கண் மூடுவாய்
மது !  

உள்ளே போனதும்
உன்னை இழப்பாய்
மது !  

இரண்டும் அழியும்
பணம் குணம்
மது !  

இறங்க இறங்க
இறங்கும் உன் மதிப்பு
மது !  

குடலை அரிக்கும்
உடலை வருத்தும்
மது !  

மனக்கட்டுப்பாடு இருந்தால்
மனம் நாடாது
மது !  

மற்றவர்கள்
து என துப்புவார்கள்
மது !  

உழைப்பை வீணடிக்கும்
இறப்பை விரைவாக்கும்
மது !  

குற்றவாளியாக்கும்
சிறைக்கும் அனுப்பும்
மது !  

சூது ஆடுவாய்
சொத்து இழப்பாய்
மது !  

மாது வெறுப்பாள்
துணையை இழப்பாய்
மது !  


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

படம்
ஹைக்கூ       கவிஞர் இரா .இரவி .

விடுதலை கேட்டவர்களை
வீதியில் நிறுத்தியது
இலங்கை !

சுதந்திரம் கேட்டவர்களை
சோகத்தில் ஆழ்த்தியது
இலங்கை !

குடும்பங்களைச்  சிதைத்து
கோரத்தாண்டவம்  ஆடியது

இலங்கை !

தண்ணீர்த் தீவை
ண்ணீர்த் தீவாக்கியது
இலங்கை !

ஆணவத்தின்  உச்சம்
திமிரின் எச்சம்
இலங்கை !

மனிதாபிமானம் மறந்து
விலங்கானது
இலங்கை !
தமிழருக்கு வழங்கிய நிதி
சிங்களருக்குப்  பயன்படுத்தும்
இலங்கை !

குரங்கின் கையில்
பூ மாலையாக தமிழர்
இலங்கை !

பாலுக்கு பூனை காவல்
தமிழ
ருக்கு சிங்களர் காவல் இலங்கை !

நாய் வால் என்றும் நிமிராது
குணம் என்றும் மாறாது 
இலங்கை !

மன்னிக்க மாட்டார் புத்தர்
மவ்னி
களான புத்தப்பிச்சுகளை இலங்கை !

வணங்க  வேண்டாம்  புத்தரை
புத்தரின் வேண்டுகோள்
இலங்கை !

புத்தரின் போதனை மறந்து
எலும்பு வாங்கி பயனேது
இலங்கை !

என்று விடியும்
ஏக்கத்தில் தமிழர்
இலங்கை !

புறத்திற்கு போடலாம் முள்வேலி
அகத்திற்கு ?
இலங்கை !
ரத்த வெறியனுக்கு
ரத்தினக் கம்பளம்
இந்தியா !

எழுத்து ! கவிஞர் இரா .இரவி .

படம்
எழுத்து !        கவிஞர் இரா .இரவி .

( பொதிகை  மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு  )

அறிந்தது மனதில் நின்றது
அறியாத
து அறிய வைத்தது 
 எழுத்து !
-------------------------------------
மனிதனின் வளர்ச்சிக்கும்
சாதனைக்கும் காரணம்
எழுத்து !
------------------------------------
இல்லாத  உலகம்
நினைக்கவே அச்சம் !
எழுத்து !

-------------------------------------------
திருவள்ளுவரை
உலகிற்கு
க் காட்டியது
எழுத்து !
---------------------------------
அறிஞர்க
ள் கவிஞர்கள்
எழுத்தாளர்கள் மூலப் பொருள்
எழுத்து !
-------------------------------------------
-----------------------------------------------
ஒலி வடிவம் வரி வடிவமானது

நாகரீகத்தின் தொடக்கம் மொழியின் உச்சம்
எழுத்து !
----------------------------------------------
தோன்றாமல்  இருந்திருந்தால்
ஆதிவாசியாகவே இருந்திருப்பான்
எழுத்து !
---------------------------------------------
அறிவு வளரவும் ஆள் வளரவும் 

உதவியது எழுத்து !------------------------------------------
பார்வையற்றவர்களும்
தடவி உணரும் உன்னதம்

எழுத்து !
------------------------------------------
ஆற்றலையும் வீரத்தைய…

இந்தியக் கலை வரலாறு ! நூலாசிரியர்கள் ,பேராசிரியர்கள் DR.M. சாலமன் பெர்னாட்ஷா , P.முத்துக்குமரன் .. விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

படம்
இந்தியக் கலை வரலாறு !

நூலாசிரியர்கள் ,பேராசிரியர்கள் DR.M. சாலமன் பெர்னாட்ஷா , P.முத்துக்குமரன் .
.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நியு செஞ்சுரி புக்  ஹவுஸ் . விலை ரூபாய் 350.

பேராசிரியர் DR.M. சாலமன் பெர்னாட்ஷா பற்றி அறிவேன் .இவர் சிறந்த மனிதர் முனைவர்  வெ.இறையன்பு அவர்களின் இனிய நண்பர் .சந்தித்து உரையாடி இருக்கிறேன் .நிறை குடம் தளும்பாது என்பதற்கு இலக்கணமானவர் .மிகவும் அமைதியான நல்ல மனிதர் .அறியாத துறை இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைத்து துறையும் அறிந்த வல்லுநர் . அவர் பேராசிரியர் P.முத்துக்குமரன்அவர்களுடன் கூட்டணி வைத்து உருவாக்கி உள்ள அற்புத நூல் .கலைக் கூட்டணி தந்துள்ள "இந்தியக் கலை வரலாறு ! "ஆறு போல் படிக்கும் வாசகர்களின் உள்ளங்களில் பாய்கின்றது .நியு செஞ்சுரி புக்  ஹவுஸ் நிறுவனத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது .

இந்தியாவில் புகழ் பெற்று விளங்கும் குடைவரைக் கற் கோவில்கள் ,குகைக் கோயில்கள் ,மலைக் கோவில்கள் அவற்றின் சிற்பச் சிறப்புக்கள் ,கோயில் நிர்மாணித்த மன்னர்களின் விபரங்கள், கலையின் வளர்ச்சி ,வேறுபாடு ,நுட்பம் போன்ற தகவல்களுடன் தகவல் களஞ்சியமாக ,வரலாற்றுப் பொக்க…

ஒளியின் நெசவு !நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
ஒளியின் நெசவு !

நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.செல் 9791562765


விமர்சனம் 
கவிஞர் இரா .இரவி.

ஈஸ்வரி புத்தக நிலையம் .ஆண்டாள் கோயில் சன்னதி .ஸ்ரீவில்லிபுத்தூர் .  விலை ரூபாய் 60.

ஒளியின் நெசவு ! பெயரே கவித்துவமாக சிந்திக்க வைக்கின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி நெசவு செய்யும் குடும்பத்தில் பிறந்த நெசவாளி .பாட்டாளியின் பாட்டு இந்நூல் .சின்னச் சின்ன இழைகள் கொண்டு  துணி நெய்வது போல நல்ல நல்ல சொற்கள் கொண்டு பட்டாடை போல பாட்டாடை நெய்துள்ளார்.மரபுக்கவிதைக்கு என்றும் மதிப்புண்டு .  மரபுக்கவிதைக்கு நிகர் மரபுக்கவிதைதான் என்பதை பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .தமிழ்த்தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்களின் மதிப்புரை மதிப்பு மிக்க உரையாக,மதிப்புக் கூட்டும் உரையாக  உள்ளது .

எட்டு நூல்கள் எழுதிய கவிஞரின் ஒன்பதாவது படைப்பு இந்நூல் .நவரத்தினமாக ஒளிர்கின்றது .முதல் கவிதையே முத்திரைக் கவிதையாக உள்ளது .

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் !
---------------------------------------------------------
பொதிகை தோன்றியவள் ,மதுரை
ன்றியவள்
புதுமைக் காவியங்கள் ஏந்தினாள் - வளர்
பதியின் வைகைதனில் நீந்த…

யாதும் ஊரே ! நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

படம்
யாதும்  ஊரே !

நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

தமிழ்மணி புத்தகப் பண்ணை .281திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை .சென்னை .5. 
விலை ரூபாய் 150.

அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு கட்டமைப்பு அனைத்தும் மிக அருமை .பாராட்டுக்கள் .நூலின் உள்ளே மின்னூர் சீனி வரைந்துள்ள பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் ஓவியம் அற்புதம் .

வணிகவியல் பட்டதாரியான நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் படித்த படிப்பிற்கு  ஏற்ற ஒரு வங்கி வேலை வாங்கி சராசரி மனிதனைப் போல வாழாமல் ,தந்தையின் வழியில் தமிழ்ப்பணி மாத இதழை  41 ஆண்டுகளாக தொய்வின்றி நடத்தி வருவது சாதனை .நல்ல உள்ளத்திற்கு எடுத்துக்காட்டு . 

திரைப்பட நடிகர், நடிகை கவர்ச்சிப் படங்கள் இன்றி இதழ் நடத்துவது பாராட்டுக்குரியது . நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் இரா. மோகன்அவர்கள் குறிப்பிட்டார்கள் .ஒருவர் கையில் உள்ள பணத்தை விரைவில்    கரைக்க வேண்டும் நிபந்தனை .சீட்டு விளையாண்டார் தோற்காமல் வென்றார் .குதிரை   மீது கட்டினார் அதுவும் வென்றது .ஒரு இதழ் தொடங்கினார் பணம் முழுவதும் கரைந்ததாம் .இது நகைச் சுவை அல்ல உண்மை .…

மு. வ .கருவூலம் நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
மு. வ .கருவூலம்

நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன்

வானதி பதிப்பகம் . 23.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை .17  .  விலை   80
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


நூல் ஆசிரியர் மு .வ அவர்களின் மாணவர் முனைவர் மோகன் என்ற நிலை உயர்ந்து , முனைவர் மோகனின் குரு மு .வ. என்ற நிலைக்கு வளர்ந்து விட்டார் .குருவை மிஞ்சிய சீடராக 82 நூல்கள் எழுதி விட்டார் .விரைவில் சதம் அடித்து விடுவார் .தான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம்  ! என்ற நோக்கில் இலக்கிய ஆளுமை மு .வ .என்ற கடலில் முத்து எடுத்து ,முத்து மாலை தந்துள்ளார் .நாள் ஒரு சிந்தனை என்ற விதமாக வருடம் முழுவதற்குமாக 365 சிந்தனைகள் நூலில் உள்ளது .

சிறந்த சிந்தனையாளர் ,நேர்மையான அதிகாரி ,முனைவர் வெ.இறையன்பு அவர்களின் சிந்தனையை இது போன்று தொகுத்து வழங்கி  உள்ளார். அந்த நூலின் வெற்றியைத் தொடர்ந்து மு .வ .வின் சிந்தனைகளைத்  தொகுத்து உள்ளார் . முனைவர் வெ.இறையன்பு அவர்கள், நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் பற்றி குறிப்பிட்டது முற்றிலும் உண்மை .முனைவர் மோகன் அவர்களின் உயரத்தை விட அவர் எழுதிய நூல்களை அருகில் அடுக்கினால் அவரை விட உயரமாக  இருக்கும்.  மதுரை…