வெள்ளி, 30 நவம்பர், 2012

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

ஹைக்கூ  !                கவிஞர் இரா .இரவி .

நிமிர்த்த முடியாது
படுத்திருக்கும் ஏணி
தண்டவாளம் !
துணைவனை இழந்தவளுக்கு
துணையானது
பூ வியாபாரம் !


நன்றி தொலைக்காட்சி
களின்
விளம்பர இடைவெளிக்கு
கிடைத்தது உணவு !

கண்களால் காண்பதும் பொ
ய்
மரங்கள் நகர்ந்தன
சன்னலோரப் பயணத்தில் !

காகத்தின் அறியாமையில்
பிறந்தன
குயில்கள் !

விருந்தினர் வருவதாக
கரைந்த காகம்
விருந்தானது !

ஹைக்கூ கவிதைகளின்
விளம்பரத் தூதுவர்கள்
அணில்கள் !

இன்றும் தொடரும்  புராணம்
ஞானப்பழச் சண்டை 
சகோதரர்களிடையே !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

வியாழன், 29 நவம்பர், 2012

உலகத் திருக்குறள் பேரவையின் சார்பில் முப்பெரும் விழாக்கள் நடைபெற்றது .

உலகத் திருக்குறள் பேரவையின் சார்பில் முப்பெரும் விழாக்கள் நடைபெற்றது .
உலகத் திருக்குறள் பேரவையின் சார்பில் முப்பெரும் விழாக்கள் நடைபெற்றது .
உலகத் திருக்குறள் பேரவை மலேசியக் கிளை தொடக்க விழா,

மலேசியத் தமிழாசிரியர்களுடன் ஓர் இனிய சந்திப்பு ,
பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா .மோகன் அவர்களின் "இனியவை நாற்பது" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

 புதுக்கவிதையின் தாத்தா மேத்தா,முனைவர் நிர்மலா
மோகன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .
 
கவிஞர் இரா. இரவி நூல் ஆசிரியர்தமிழ்த்தேனீ இரா .மோகன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்திப் பாராட்டினார்.   மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு .பெ .ராஜேந்திரன் தலைமையில் வருகை தந்த  மலேசியத்தமிழாசிரியர்கள் அனைவருக்கும் விழாவிற்கு தலைமை வகித்த ,திருக்குறள் செம்மல்
மணி மொழி
யனார் பொன்னாடை போர்த்திப் பாராட்டி, நூல் வழங்கி ,இரவு விருந்து வழங்கி வழி அனுப்பி வைத்தார் .

குறையொன்றுமில்லை ...!நூல் ஆசிரியர் கம்பம் புதியவன்.விமர்சனம் கவிஞர் இரா .இரவி

குறையொன்றுமில்லை ...!

நூல் ஆசிரியர் கம்பம் புதியவன்   செல் 994200080277 மின் அஞ்சல் mpputhiyavan@gmail.com

விமர்சனம் கவிஞர் இரா .இரவி


வெளியீடு சொல்லங்காடி 2/35 அறிஞர் அண்ணா சாலை,தெரு மாட வீதி ,திருவொற்றியூர் ,சென்னை .19 sollangadi@gmail.com
விலை ரூபாய் 50
.

குறையொன்றுமில்லை நூலின் தலைப்பை படித்தவுடன் நம் நினைவிற்கு இசைஅரசி எம் .எஸ் .சுப்புலட்சுமி பாடிய பாடல் நினைவிற்கு வந்தது. மிக நல் தலைப்பு .அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று .மண் வாசனை இயக்குனர் இமயம் பாரதிராஜா ,கல்வித் துறை இணை இயக்குனர்,இனியவர் ,முனைவர் இராம .பாண்டுரங்கன் ஆகிய இருவரின் அழகிய வாழ்த்துரையும் ,தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்களின் அற்புத அணிந்துரையும் நூலின் சாரத்தை பிழிந்து வழங்கி உள்ளார்கள் .
போதிமரம் என்ற முதல் நூல் தந்த நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் அவர்களின் இரண்டாவது படைப்பு குறையொன்றுமில்லை.இந்த நூலிலும் குறையொன்றுமில்லை எல்லாம் நிறைதான் .இவரது ஹைக்கூ கவிதைகளை பல்வேறு சிற்றிதழ்களில் படித்து ரசித்து உள்ளேன் .பிரசுரம் செய்த சிற்றிதழ்களுக்கு மறக்காமல் நன்றியை  பதிவு செய்துள்ளார் .நூலாக வாசித்தபோது கூடுதல்  மகிழ்ச்சி .

எந்த ஒரு கவிஞரும் அம்மாவை பாடாமல் இருப்பதில்லை .இவரும் அம்மாவை பாடி உள்ளார் .

துயரமே
துயரப்ப
ட்டது
சுமைதாங்கி அம்மா !
ஏழை ,பணக்காரன் ,கருப்பு ,வெள்ளை, தாழ்ந்தவன் , உயர்ந்தவன் , என்ற எந்தவித ஏற்றத் தாழ்வும் இன்றி மனிதநேயத்தோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை நம் கைகள் மூலம் விளக்குகின்றார் .

குட்டை நெட்டை
செயலில் ஒற்றுமை
விரல்கள் !
தீபாவளி பண்டிகை வரும் முன்பே ஏழைகளுக்கு கவலையும் வந்து விடும் .கந்து வட்டிக்காரர்களுக்கு மகிழ்ச்சி பொங்கி விடும் .கடன் வாங்கி குடும்ப உறுப்பினர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டிய நிலைமை குடும்பத் தலைவருக்கு வந்து  விடும் .இந்த தீபாவளி பண்டிகை ஏன் ? தான் வருகிறதோ ? என்று நொந்து நூலாகி விடுகின்றனர் ஏழைகள் .

மனதில் இருட்டு
கையில் வெளிச்சம்
கடன் காசில்
தீபாவளி !

கணினி யுகத்திலும் சாதி மாறி ,மதம் மாறி காதலித்து திருமணம் புரிந்தால் வெட்டு, குத்து ,கலவரம், வன்முறை நினைத்து பார்த்தால் வேதனையே மிஞ்சும் .அயல் நாடுகளில் இது போன்ற செய்தியால் கேள்விப்பட்டால் சிரிப்பார்கள் .

விவசாயத்தில் வரவேற்பு
வீட்டில் எதிர்ப்பு
கலப்புத் திருமணம் !

தந்தை பெரியார் சொல்வார்
கலப்புத் திருமணம் என்று சொல்வதே தவறு என்று .மனிதனுக்கும் மிருகத்திற்கும் நடந்தால்தான் கலப்புத் திருமணம்.சாதி மறுப்புத் திருமணம் ! மத மறுப்புத் திருமணம் ! என்பதே சரி .

நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் இயற்கையை ரசித்தும் ஹைக்கூ வடித்துள்ளார் .காரணம் கம்பம் ஊர் இயற்கையின்  பொக்கிசம் .

ஆண்டுக்கொருமுறை
ஆடை  மாற்றும்
இலை உதிர் காலம் !


அரசியல்வாதிகள் தங்கள் கட்சி வென்று  ஆளும்  கட்சியாகி விட்டால்   கட்சிக்கரை வேட்டி தினமும் கட்டுவார்கள் தோற்று விட்டால் கட்சிக்கரை வேட்டி ட்டுவதை நிறுத்தி விடுவார்கள் .இதனை கவனித்து ஒரு ஹைக்கூ .

குப்பையில்
 
கரை வேட்டிகள்
ஆட்சி மாற்றம் ?

பாவாடை,  தாவணி நம் தமிழ்ப்   பண்பாட்டு உடை .மிக மிக அழகாக இருக்கும் .ஆனால் அந்த ஆடை அணியும் நல்ல  பழக்கம் வழக்கொழிந்து  வருகின்றது.இன்று நாகரீகம் என்ற பெயரில் அழகு படுத்துகிறோம் என்று அழகையும் ,ஆடையையும் குறைத்து கொள்கின்றனர் .இது பற்றி கருத்து சொன்னால் பெண் சுதந்திரம் என்று கொடி  பிடிக்கின்றனர் . .

நாகரீக் காற்றில்
காணாமல் போனது
பாவாடை தாவணி !
சில தலைவர்கள் தொன்றகளைத் தூண்டி விட்டு விட்டு தான் சுகமாக இருந்து கொள்வார்கள் .சிந்திக்காத தொண்டனோ வெட்டியும்
குத்தியும் வன்முறையில் ஈடு பட்டு தண்டனை பெறுவார்கள் .இன்றும் நாட்டில் நடக்கும் அரசியல் அவலத்தை உற்று நோக்கி எழுதிய ஹைக்கூ ஒன்று .
ரெல்லாம் கலவரம்
தலைவர்கள் பத்திரமாய்
முதல் வகுப்பில் சிறையில் !

ஆனால் இன்று சில
தலைவர்கள் சிறைக்கும் செல்வது இல்லை  குளு குளு அறையில் இருந்து அறிக்கை, கடிதம் மட்டும் அனுப்புவார்கள் .

ஒரு நடிகர் ஒரு நடிகையை காதலிப்பார் .அதே நடிகர் பின் மற்றொரு நடிகையை காதலிப்பார். நடிகர் முதலில் காதலித்த நடிகை மற்றொரு நடிகரை காதலிப்பார் .இது போன்ற செய்திகள் தான் பல ஊடகங்களுக்கு தலைப்பு செய்தியாக இருக்கும் .கொலை கொள்ளை வன்முறை செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும்  அவலத்தையும் உணர்த்தும் ஹைக்கூ .

மின்னலை விடவும்
வேகம்
பரபரப்புச் செய்தி !
சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூல் ஆசிரியர் கம்பம் புதியவன்  அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .சமுதாயத்தில் விழிப்புணர்வை  ஏற்படுத்துங்கள் .

செவ்வாய், 27 நவம்பர், 2012

மாவீரர்களுக்கு வீர வணக்கம் ! கவிஞர் இரா .இரவி .

மாவீரர்களுக்கு வீர வணக்கம் !       கவிஞர் இரா .இரவி .
மாவீரர்கள் நினைவைப் போற்றுவோம்
மாவீரர்கள்  கனவை நிறைவேற்றுவோம் !
இங்கு தமிழன் கறி  கிடைக்கும் என்றவன்களை
இவ்வுலகை விட்டு அனுப்பிய வேங்கைகள் !

விழிகளைத் தோண்டிய விரல்களை
வெட்டி வீழ்த்தி வீரம் புகட்டியவர்கள் !

துப்பாக்கி நாங்கள் சுட்டாலும் சுடுமென்று
துரோகிகளுக்கு  உணர்த்தி
க் காட்டியவர்கள் !

மாவீரர் நேதாஜி வழியில் படைகள் அமைத்து
மங்கையர்களுக்கும் இட ஒதிக்கீடு தந்தவர்கள் !

முப்படைகள் நிறுவி மூடர்களுக்கு தினமும்
மூக்கை உடைத்து வீரம் விதைத்தவர்கள் !

சிங்கள இன வெறி பிடித்த ராணுவத்திற்கு
சிங்கமெ
கர்ஜித்து ஓட வைத்தவர்கள் !

பாலியல் வன்முறை புரிந்த பாவிகளுக்கு
பற்களை  உடைத்து புத்தி புகட்டியவர்கள் !

ஆதிக்க சிங்களத்தின் ஆணவத்தை
ஆட்டி  சாய்த்து மண்டியிட வைத்தவர்கள் !

சிங்கள ராணுவ மிருகங்களை
சின்னா பின்னமாக்கி சிதைத்தவர்கள் !

சிங்கள பொது மக்களுக்கு
என்றும் 
சிறு தீங்கும் செய்யாதவர்கள் !

ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக மதித்து
ஒழுக்கமாக வாழ்ந்த தங்கங்கள் !


நேர்மையற்ற திருட்டுப் படையினரிடம்
நேர்மையாக மோதி வீழாமல் வாழ்பவர்கள் !

நெஞ்சில் உரம் நேர்மை திறம் கொண்டு எதிர்த்து
நெஞ்சை நிமிர்த்தி  நெஞ்சில் நின்றவர்கள் !


அடங்க மறுத்து சீறி அத்து மீறி
ஆதிக்க கொட்டம் அடக்கியவர்கள் !

குண்டு மழை பொழிந்த விமானங்களை
குறி வைத்து சுட்டு வீழ்த்தி வென்றவர்கள் !

இரக்கமற்ற சிங்கள இராணுவ வீணர்களை
இறக்க வைத்து கதை முடித்த சிங்கங்கள் !


பகை கொண்டு பலி வாங்கிய பதர்களுக்கு
பாடம் புகட்டி வரலாறு படைத்தவர்கள் !

மக்களுக்கான வீரர்களுக்கு மரணம் இல்லை
மாவீரர்களுக்கு மரணம் என்றும் இல்லை!

ஈழத்தமிழர்கள் இல்லாத நாடு இல்லை
ஈழத்தமிழர்கள் உள்ளங்களில் மாவீரர்கள் !

தனித்தமிழ் ஈழம் மலர்வது உறுதி
தனித்தமிழ் ஈழம் மலராமல் வராது எ
க்கு இறுதி !

ஈழத்தமிழர்களின் நல்  வாழ்விற்கு
ஈழமே தீர்வு என்பதை உலகிற்கு உணர்த்துவோம் !

மாவீரர்கள் நினைவைப் போற்றுவோம்
மாவீரர்கள்  கனவை நிறைவேற்றுவோம் !

திங்கள், 26 நவம்பர், 2012

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி .

உயிருள்ள
வண்ண விமானம்
வண்ணத்துப் பூச்சி !

தெரியவில்லை
தாலாட்டுப்பாட்டு
இன்றைய அம்மாவிற்கு !

பாறைகளுக்கு வைத்த வெடிகள்
பழி வாங்கியது
குவாரி அதிபர்களை !

வழிபாட்டிற்கு  பயன்பட்டும்
மகிழவில்லை
மலர்கள் !
மின்தடை நீக்கிட
ஒரே வழி
சூரிய ஒளியே  வழி !

யானைகளுக்கு
புத்துணர்வு சரி
மனிதர்களுக்கு ?

வண்ணங்களில்
எண்ணங்கள்
ஓவியம் !

பறவைகள்
விட்ட விதைகள்
விருட்ச்சங்கள் !

சாதி மாறி
காதல்
உயிர்கள் பலி !

என்றும் இனிக்கும்
தேனிலவு
புகைப்படங்கள் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம்

ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ்.விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஹைகூ  வானம்

நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ்      93.சி .வி .ஆர் .தெரு ,சின்ன காஞ்சிபுரம் .631501 
செல் 9894809812.  

 விமர்சனம் கவிஞர் இரா .இரவி

அன்னை ராஜேஷ்வரி பதிப்பகம் ,41.கல்யாண சுந்தரம் தெரு ,பெரம்பூர் ,சென்னை .11 விலை ரூபாய் 60


நூலின் அட்டைபடமே நூலை வாங்க வேண்டும் என்ற ஆவலைத்  தூண்டும் வண்ணம் மிக நேர்த்தியாக உள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர்
வீ .தங்கராஜ் அவர்களின் இரண்டாவது நூல் இது .முதல் நூலான குறிஞ்சிப்பூக்கள்  நூலின் மூலம் பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட,
பாராட்டப்பட்ட கவிஞர் .முதல் நூலில் ஹைக்கூ ,புதுக் கவிதை ,மரபுக் கவிதை மூன்றும் இருந்தது .இந்த நூலில் ஹைக்கூ கவிதைகள் மட்டும் இடம் பெற்றுள்ளது .தள்ளாத வயதிலும் தளராத தேனீ  இவர் .இவரது ஹைக்கூ வராத சிற்றிதழே  இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா இதழ்களிலும் எழுதி வரும் படைப்பாளி .குறுந்தகவல் இதழ்கள் பல இயங்கி வருகின்றன .அவற்றிலும் ஹைக்கூ கவிதைகள் பங்களிப்பு செய்து வருபவர் . ஒய்வு அறியாத உன்னத படைப்பாளி .

இந்நூலை  ஹைக்கூ அன்னை முனைவர் தி .லீலாவதி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் ,பேராசிரியர் மித்ரா , 55 வருடங்கள் நன்பர்  கவிஞர் பழனி எழில்மாறன் ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக உள்ளது .ஹைக்கூ கவிதை ரசிகர்களுக்கும் , ஆய்வாளர்களுக்கும் ஹைக்கூ விருந்தாக உள்ளது .இந்நூலிற்கு  பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கும் தகுதி உள்ளது.
 

அணுவுக்குள் அண்டம் மூவடிக்குள்  ...
ஹைகூ வானம் !

என்ற முதல் ஹைக்கூ கவிதையே நூலின் சிறப்பை பறை சாற்றுவதாக உள்ளது .பாராட்டுக்கள் .
இயற்கையைப் பற்றி ஹைக்கூ கவிதை எழுதுவதில் ஜப்பானிய கவிஞர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல தமிழ்க்கவிஞர்கள் என சவால் விடும் வண்ணம் ஹைக்கூ வடித்துள்ளார் .இயற்கையை உற்று நோக்கி ,ரசித்து ,ருசித்து ,ஒன்றி ஹைக்கூ படைத்துள்ளார் .நூலில் உள்ள அத்தனை ஹைக்கூவும் பிடித்தாலும், பதச்சோறாக சில மட்டும் தங்கள் ரசனைக்கு மேற்கோள் காட்டி உள்ளேன் .

நகராத சூரியன்
கிழக்கிலும் மேற்கிலும்
நகர்த்தும் பூமி !
சூரியன் நக வில்லை பூமிதான் சுற்றுகிறது என்ற அறிவியல் செய்தியை ஹைக்கூவில் உணர்த்துகின்றார் .

நிலாவை பாடாத கவிஞரே இல்லை .இவரும் பாடி உள்ளார் .ஆனால் இவரது பார்வை மிகவும் வித்தியாசமானது .பாருங்கள் .

மீனுக்கு இரையாகாமல்
மிதக்கிறது அப்பம்
குளத்தில் நிலா !


இந்த ஹைக்கூவை திருவும் ரசித்துப் படித்தேன் .நம் கண் முன் இயற்கையை காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

நாம் மலையில் இருந்து கிழே பார்த்தால் கிழே உள்ளவை    மிகவும் சிறிதாகவே தோன்றும் .ஹைக்கூ என்பது ஒரு உணர்வு படைப்பாளி தான் உணர்ந்ததை வாசகருக்கும் உணர்த்துதல் .

மலை ஏற ..ஏற
தெருவெல்லாம்
தீப்பெட்டி வீடுகள் !


மனிதர்கள் கவிதை எழுதுவார்கள் படித்து இருக்கிறோம். நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் அவர்களின் கற்பனையில் மேகமும் கவிதை எழுதுகின்றது பாருங்கள் .

மேகம் எழுதிய
இருவரிக் கவிதை 
இடி மின்னல் !
சோகத்திற்கு வருந்தாதீர்கள் என்று இயற்கையின் மூலம்  தன்னம்பிக்கை உணர்த்தும் ஹைக்கூ இதோ !

விதையின் வாழ்க்கை
மரணத்தில் தொடக்கம்
உயிர்
த்தெழும்  அற்புதம் !

தன்  உழைப்பில் வாழாமல் பிறர் உழைப்பில் வாழும் சோம்பேறிகளுக்கு  அறிவுரை கூறும் வண்ணம் ஒரு ஹைக்கூ .

காக்கை கூடு கட்டுகிறது
குயிலுக்குக் கொண்டாட்டம்
முட்டையிடலாமே !


வாழ்க்கை வாழ்வதற்கே ! விரக்தி சோகம்  கவலை வேண்டாம் என்று உணர்த்திடும் ஹைக்கூ .

வாழ்க்கை
அகல் விளக்கு
அல்ல
அற்புத விளக்கு !

மலர்களையும் வண்ணத்துப்பூச்சியையும் ரசிப்பது சுகமோ சுகம் .நூல் ஆசிரியர் அவர் ரசித்த காட்சியை நமக்கும் உணர்த்துகின்றார் .

வண்ணப் பூவில்
வண்ணத்துப் பூச்சி
அழகுக்கு அழகு !


சுற்றுச்சுழல் விழிப்புணர்வும் விதைக்கின்றார்  .நமது நாட்டில் உள்ள ஆறுகள் எல்லாம் பாழாகி  வருகின்றது .நம் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடி உள்ளது .னால் இன்று குட்டை போல சாக்கடை தண்ணீரே தேங்கி உள்ளது .பார்க்க நெஞ்சம் பொறுக்க  வில்லை .இப்படி பல்வேறு சிந்தனைகளை மலர்வித்தது  இந்த ஹைக்கூ .

ஓடிய ஆறு
முடமானது
சாக்கடைக் கலப்பு  !


நாட்டில் திட்டங்கள் திட்டிக்   கொண்டே தான் இருக்கிறார்கள் .ஆனால் வறுமை மட்டும் ஒழிந்த பாடில்லை .ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் அவர்கள் வறுமையை  ஒழித்து ,அவர்களது பல தலைமுறைக்கும் பயன்படும் வண்ணம் சொத்துக்களை குவித்து விடுகின்றனர் .நாட்டின் வறுமையை உணர்த்தும் ஹைக்கூ .

குப்பையைக் கிளறுவது
கோழியல்ல
கோணியுடன் சிறுவன் !


தங்கம் விலை ஏற ஏற நாட்டில் கொலை, கொள்ளை குற்றங்கள் பெருகிக் கொண்டே போகின்றது .ஏழைகளின் வாழ்வில் தங்கம் பெரிய தலைவலியாக உள்ளது .தங்க ஆசை பெருகப் பெருக ஏழைகளுக்கு திண்டாட்டம் .ஏழையின் மகளுக்கு திருமணம் என்றாலே நொந்து நூலாகி விடுகின்றனர் .

பொட்டுத் தங்கமில்லை
"ஆளானாள் " மகள்
ஆடிப்போனது வீடு !


எந்த மதமும் வன்முறை போதிக்க வில்லை .வன்முறை போதித்தால் அது மதமே இல்லை .மதம் என்பதே விலங்கில் இருந்து வந்த மனிதனை நெறிப் படுத்த , அன்பு செலுத்த மனிதனால் தோற்றுவிக்கப்பட்டதுதான் .ஆனால் இது புரியாமல் , பகுத்தறிவை பயன்படுத்தாமல் மதத்தின் பெயரால் மோதி விலங்காக மாறி வரும் முட்டாள்களுக்கு புத்தி புகட்டும் ஹைக்கூ .

நாவில் நாமாவளி
கையில் ஆயுதம்
மனத்தில் மதம் !


இன்று மின் வெட்டு பெரிய பிரச்சனையாக உள்ளது .பொது மக்கள் யாவரும் மிக மிக கோபத்தில் உள்ளனர் .உடனடியாக மின் வெட்டை நீக்க வேண்டும் . மின்சாரம் என்பது அடிப்படை தேவையாகி விட்டது .இதனை பூர்த்தி செய்ய வேண்டியது மத்தியிலும் , மாநிலத்திலும் ஆள்வோரின் தலையாய கடமை .அது விடுத்து மாறி மாறி குற்றம் சொல்வது ,புள்ளி விபரங்கள் தருவது ,காரணங்கள் சொல்வது ,இவற்றை கேட்கும்போது  பொதுமக்களுக்கு எரிச்சல் வருகின்றது .மின் வெட்டு பற்றியும் ஒரு ஹைக்கூ எழுதி உள்ளார்  .

வாடும் பயிர்
வரப்பில் உழவன்
மின்வெட்டு !
மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள் .ஆசிரியர் பற்றி அவர்களது தியாக உணர்வு பற்றி மிக சிக்கனமான சொற்களில் மிக நேர்த்தியாக ஒரு ஹைக்கூ படைத்துள்ளார் .

பல தீபங்கள் ஒளிர
ஒரு மெழுகுவர்த்தி எரிகிறது
நல்லாசிரியர் !

இன்று ஒரு சில ஆசிரியர்கள் மிக உயர்வான ஆசிரியர் பணியை புனிதமாக நினைக்காமல் தவறு செய்த காரணத்தால் மிக கவனமாக ஆசிரியர் என்று எழுதாமல்
நல்லாசிரியர் என்று எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .மிக சிறந்த ஹைக்கூ நூல் .அனைவரும் வாங்கி படியுங்கள் .
வயது வேறுபாடு இன்றி எல்லோரோடும் அன்பாகப் பழகும் மிகச் சிறந்த மனிதரின் மிகச் சிறந்த படைப்பு .தொடர்ந்து எழுதுங்கள் .தங்கள் இலக்கியப் பனி சிறக்க வாழ்த்துக்கள் .மிக நேர்த்தியாக வடிவமைத்து அச்சிட்ட அன்னை ராஜேஷ்வரி பதிப்பகதாருக்கும் பாராட்டுக்கள்


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

ஞாயிறு, 25 நவம்பர், 2012

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் முப்பெரும் விழாக்கள் அழைப்பிதழ்

 உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் முப்பெரும் விழாக்கள் அழைப்பிதழ்

அருள்திரு ,அறிவர் , கவிஞர் ஞான ஆனந்த ராஜ் அவர்களின் நூல் வெளியீடு , இணையம் தொடக்க விழா அழைப்பிதழ் !

அருள்திரு ,அறிவர் , கவிஞர் ஞான ஆனந்த ராஜ் அவர்களின் நூல் வெளியீடு , இணையம் தொடக்க விழா அழைப்பிதழ் !

அன்புடையீர் வணக்கம் .

அன்புடையீர் வணக்கம் .

அனைவரின் அன்பிற்கும் மிக்க நன்றி .நா
ம் ஒன்றை இழந்தால் வருந்தி ,சோர்ந்து , காலம் கழிப்பதை  விட ,அதை மறந்து தொடர்ந்து இயங்கி வந்தால் ,நாம் இழந்ததை விட மதிப்பு மிக்க வெற்றி கிடைத்தே தீரும் .நான் மேல்நிலை தேர்வில் 857 மதிப்பெண் பெற்று இருந்தேன் .குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி செல்லமுடிய வில்லை .வேலைக்கு சென்று விட்டேன் .
 
அஞ்சல் வழியில் பி .காம் டித்தேன் .கல்லூரி வாழ்க்கை நம் வாழ்வில் இல்லாமல் போய் விட்டதே என்ற வருத்தம் இன்று வரை ஒரு புறம் இருந்தாலும் ,மறுபுறம்  என் ஹைக்கூ கவிதைகள், திருச்சி பாரதிதாசன்  பல்கலைக்கழகம் ,மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை தியாகராசர் கல்லூரி   ,விருதுநகர் வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி அனைத்திலும் என் ஹைக்கூ பாட நூலில் இடம் பெற்றுள்ளது. இளங்கலை மாணவர்கள் அனைவரும் என்   ஹைக்கூ கவிதைகளை பாடமாக படிக்கிறார்கள்    .என் மகன் மதுரை தியாகராசர் கல்லூரியில்( பி. சி .எ.) படித்து வருகிறான் .அவனுக்கும் என் 10 ஹைக்கூ கவிதைகள்  பாடமாக உள்ளது . ன்று கல்வி கற்க கல்லூரி செல்லாத என் கால்கள் ,இன்று கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக என் கால்கள் செல்கின்றது .

என் கவிதை நூல்கள் திருடியதற்காக மனம் சோர்ந்து இருந்தால் அடுத்த  படைப்புகள் படைத்து இருக்க முடியாது .அதை பொருட் படுத்தாமல், கவலைப் படாமல் தொடர்ந்து எழுதியதால் . 11 நூல்கள் எழுத முடிந்தது .என் ப
டைபுக்காகவே "இராஇரவிடாட் காம் ","கவிமலர் டாட் காம்"  www.eraeravi.com    www.kavimalar.com இரண்டு இணையங்கள் ,"இராஇரவிடாட் ப்ளாக்ஸ்பாட்காம் www.eraeravi.blogspot.com "ஒரு வலைப் பூ ,மற்றும் எழுத்து டாட் காம்,
தமிழ் ஆதர்ஸ் டாட் காம் ,நூலகம் டாட் காம் ,விருபா டாட் காம் ,லங்கா ஸ்ரீ டாட் காம், தமிழ் தோட்டம் ,ஈகரை ,கூகுள் பிளஸ் ,முக நூல் ,ஆர்குட் நெட்லாக் ,டுவிட்டர் ,ஷ்டையில் எப் எம் உள்பட பல்வேறு பிரபல இணையங்களில் என் படைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது . 300 நூல்களுக்கு மிகவிரிவான விமர்சனம் என் இணையத்தில் பதிவு செய்துள்ளேன் .  , தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன் அவர்கள் தொகுத்த "இரா .இரவி ஹைக்கூ ஆயிரம்" நூல் அச்சில் உள்ளது .என் எழுத்து மற்றும்  இணையப் பணிகளைப் பாராட்டி அமெரிக்க மேரி லேண்டில் உள்ள உலகத் தமிழ் பல்கலைக் கழகத்தில்  இருந்து எனக்கு மதிப்று முனைவர் பட்டமும் வழங்கினார்கள். படைப்பாளிகள் அனைவருக்கும் என் வேண்டுகோள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருங்கள் .உங்கள் வெற்றியை சாதனையை யாராலும் தடுக்க முடியாது .இலக்கிய திருடர்களுக்கு ஒரு வேண்டுகோள் !எல்லோரும் ன்னை போல இனி மன்னிக் மாட்டார்கள்.சொந்தமாக சிந்தித்து எழுதுங்கள் .படித்த கவிதை பிடித்து இருந்தால் ,படைப்பாளி பெயருடன் ,படித்ததில் பிடித்தது என்று பதிவு செய்யுங்கள் .
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

 

புதன், 21 நவம்பர், 2012

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

ஹைக்கூ !           கவிஞர் இரா .இரவி .

அம்மாவிற்கு பிடிக்காத
தமிழ்ச்சொல்
மருமகள் !

மனைவிக்கு பிடிக்காத
தமிழ்ச்சொல்
மாமியார் !

வெண்மேகம்
கார்மேகமானது
கருப்பு  வண்ணத்தால் !

இல்லை என்று சொல்
பொய் சொல்லப் பழக்கினர்
குழந்தையை !

ஊதிக் கெடுத்தார்
தந்தையே மகனை
வெண் சுருட்டு !

கெடவில்லை பொருட்கள்
குளிரூட்டப்பட்ட அறையில்
மனிதர்கள் மூளை ?


--

இப்படியும் சிலர் ! கவிஞர் இரா .இரவி .

இப்படியும் சிலர் !                                             கவிஞர் இரா .இரவி .

சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய "கவிஞர் இரா .இரவி ஹைக்கூ கவிதைகள்"( 1998) ,"விழிகளில் ஹைக்கூ" ( 2003) நூலையும் சிவகாசியில் இருக்கும்  நண்பர்   பல லட்சம் பிரதிகள்  வெளியிடுவதாக  என் தம்பி மாமனார் வாங்கி சென்றார் .நானும் எனக்கு ச
ன்மானம் எதுவும் வேண்டாம் என் பெயரோடு ஹைக்கூ கவிதைகள் வந்தால் போதும் என்று சொல்லி கொடுத்து அனுப்பினேன் .நூல் வந்து விட்டதா என்று பல முறை கேட்டேன் வரவில்லை என்றார். பின் கேட்பதை விட்டு விட்டேன் . நான் சென்னைக்கு தொடர் வண்டியில் பயணம் செய்த போது ஜோதிடம் ,ஆன்மிகம் புத்தகங்கள் விற்றனர் அதில் ஹைக்கூ கவிதைகள் என்று ஒரு புத்தகம் இருந்தது வாங்கி விட்டேன் .வாங்கி உள்ளே பார்த்தால் அதிர்ச்சி என்னுடைய இரண்டு நூல் ஹைக்கூ  கவிதைகளும் அப்படியே இருந்தது .என் பெயருக்குப் பதில் இளங்கோவன் என்று இருந்தது .

அதில் உள்ள சிவகாசி பதிப்பாக தொலைபேசி என்னை அழைத்து பேசினேன் .இப்படி செய்யலாமா ? அறிவு திருட்டு அல்லவா ?  மூளை திருட்டு அல்லவா ? என்று கேட்டபோது தவறு நடந்து விட்டது லட்ச கணக்கில் விற்பனைக்கு சென்று விட்டது மன்னித்து விடுங்கள் அடுத்த பதிப்பு போடாமல் விட்டு விடுகிறோம். என்றனர் .என் தம்பி மாமனாரிடமும்  நடந்ததை சொல்லி கடிந்து கொண்டேன் .

நண்பர்கள் வழக்கு தொடுக்க சொன்னார்கள் .நான் வழக்கு தொடுத்து மன நிம்மதி இழக்க விரும்பாமல் மன்னித்து விட்டு விட்டேன் .தினமலர் நாளிதழ் மதுரை பதிப்பில் என் நூல் அட்டையையும் சிவகாசி ஹைக்கூ கவிதைகள் நூல் அட்டையையும் போட்டு நடந்த நிகழ்வை பதிவு செய்தனர். இனிய நண்பர் மு .முருகேஷ் உள்ளிட்ட ஹைக்கூ கவிஞர்கள் பலரும் சிவகாசி பதிப்பகதாருக்கு  கண்டன மடல் அனுப்பி வைத்தார்கள்  என் சோகம் வேறு யாருக்கு நேர்ந்து இருந்தாலும் பொறுத்து ,மன்னித்து இருக்க மாட்டார்கள் .என் சோகம் அதோடு முடிய வில்லை .

இரண்டு மாதங்களுக்கு முன்பு மனித நேயம் மாத இதழில் என் ஹைக்கூ கவிதையை பிரசுரம் செய்து கீழே இளங்கோவன் என்று இருந்தது .மனித நேயம் ஆசிரியர் நண்பர் திரு .எ .எம் .ஜெமேஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டேன் .என் ஹைக்கூ இளங்கோவன் என்ற பெயரில்
வந்துள்ளதே !  அந்த பெயரில் யாரும் அனுப்பினார்களா ? என்றேன் .அவர் .இல்லை ஹைக்கூ கவிதைகள் என்ற நூல் வாங்கினேன் அதில் பிடித்து இருந்தது எனவே அதில் உள்ள பெயரை அப்படியே போட்டேன் என்றார் .அவரிடம் நடந்த சோகத்தை விளக்கியதும் .மறு மாதம் மறுப்பு வெளியிட்டார் .


இரண்டு நாட்களுக்கு முன் இனிய நண்பர் மின்மினி ஆசிரியர் கன்னிக்கோவில் ராஜாசெல்லிடப் பேசியில் அழைத்து நான் வாசிக்கும் ஹைக்கூ உங்களுடையாதா ? என்று ஹைக்கூ கவிதைகள் வாசித்தார் .பத்தும் என் ஹைக்கூ தான் .யார் அனுப்பியது என்றேன் ? அவர் பெயரை சொல்லி மின்மினி இதழில் பிரசுரம் செய்ய அனுப்பி உள்ளார் . கல்லூரி  பேராசிரியாராக உள்ளார் என்றார் .இதே ஹைக்கூ  கவிதைகளை சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் நேரில் வந்து வாசித்தார். என்றார் .அவர் செல் என் உள்ளதா ? என்றேன் உள்ளது என்றார் .உடன் வாங்கி அந்த என்னை தொடர்பு கொண்டு பேசினேன் .அவர் பெயரை சொல்லி நிங்களா ? என்றேன் கல்லூரி  பேராசிரியாரா ? என்றேன் .ஆம் என்றார் .என் ஹைகுவை சொல்லி இது நீங்கள் எழுதியதா ?மனசாட்சிப் படி உண்மையை சொல்லுங்கள் என்றேன் .முதலில் ஆம் என்றவர் என்னிடம் என் நூல்கள் உள்ளது சான்றுகளுடன் நிருபிக்கட்டுமா ? என்றதும் .ஆம்  தவறு செய்து விட்டேன் மன்னியுங்கள் என்றார் .நீங்கள் இப்படி இருந்தால் உங்கள் மாணவர் எப்படி இருப்பார்கள் என்று பேசியதும் திரும்ப மன்னிப்பு கோரினார்.பின் அவரே  மின்மினி ஆசிரியர் கன்னிக்கோவில் ராஜாவை   செல்லிடப் பேசியில் அழைத்து  நான் தவறு  செய்து விட்டேன்.  மின்மினி இதழில் பிரசுரம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் .

இரண்டு நாட்களுக்கு முன்பு மின்மினி ஆசிரியர் இனிய நண்பர் கன்னிகோவில் ராஜா செளிடப் பேசியில் அழைத்து நன் வாசிக்கும் ஹைக்கூ சிவகாசி  ஹைக்கூ கவிதைகள் நூலை வாங்கி பலரும் படித்து விட்டனர் .அதில் ஒரு சிலர் திருட்டை ஹைக்கூவில்  இருந்து திருடி ஹைக்கூ எழுதி தங்கள் பெயர் எழுதி இதழ்களுக்கு அனுப்பி வருகிகின்றனர் .சோகம் தொடர்ந்து கொண்டே உள்ளது .
இணையத்தில் வெளியாகும் என் கவிதைகளை பிரபல
இணையங்கள் என் பெயரோடன் வெளியிட்டு வருகின்றனர் .மகிழ்ச்சி .ஆனால் ஒரு சிலர் இணையத்திலும் வலைப் பூவிலும் என் கவிதைகளை என் பெயர் ன்றி பதிப்பித்து விடுகின்றனர் .ஒரு புறம் கோபம் வந்தாலும் மறு புறம் நம் படைப்பு பல லட்சம் வாசகர்களை சென்று அடிகின்றதே என்று மகிழ்வேன் .
இரண்டு நூல் ஹைக்கூ கவிதைகள் எழுத நான் எவ்வளவு சிந்தித்து இருப்பேன் .எவ்வளவு உற்று நோக்கி இருப்பேன் எத்தனை  இரவு முழித்து இருப்பேன் .இரு சக்கர வண்டியில் பயணிக்கும் போது  மின்னல் போன்று தோன்றும் .வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு எத்தனை முறை குறித்து இருப்பேன்  .திருடர்கள் ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தால் திருட மாட்டார்கள் .சிந்திக்காமல்  இப்படி பல நாள் உழைப்பை திருடி விடுகின்றனர்.

 நடக்கும் சோகங்களை நினைக்கும்  போது எழுதுவதையே விட்டு விடலாமா ? என்று  விரக்தி வரும் .ஆனாலும் .பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. சாதிக்க வேண்டும் .மனித குல மேன்மைக்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டு என்ற எண்ணத்தில்தான்  தொடர்ந்து எழுதி வருகிறேன்

இனியாவது அறிவு திருடர்கள் மூளை  திருடர்கள் திருந்த வேண்டும் !பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்  பாடல்தான் என் நினைவிற்கு வருகின்றது .
" திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .

குறிப்பு ; மன்னித்தவர்களை பெயர் சொல்லி அசிங்க படுத்த வேண்டாம் என்று பெயர் குறிப்பிட வில்லை .

செவ்வாய், 20 நவம்பர், 2012

தமிழ்நாடு சுற்றுலா தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள்

தமிழ்நாடு சுற்றுலா தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள்


http://website.informer.com/visit?domain=tamilnadu-tourism.com

http://www.tamilnadutourism.org/temples/Templesmain.aspx

http://tamil.oneindia.in/tour/chennai/tour-information-centers.html

http://www.tamilnadutourism.org/Tours/toursmain.aspx

http://www.ttdconline.com/

http://www.tamilnadutourism.org/hotels/HotelsMain.aspx

http://tamilnadutourism.org/Hotels/TTDCHotels/ttdc-mamallapuram.html

https://www.google.co.in/search?q=tamilnadumap&hl=en&newwindow=1&tbo=u&site=webhp&tbm=isch&source=univ&sa=X&ei=5WKsUOjPGIePrgfN8oDoDg&ved=0CEQQsAQ&biw=1366&bih=597


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !
   

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் . திரு .ஜோதி மகாலிங்கம் , ,திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மதுரை வானொலி நிலைய அறிவிப்பாளர்
திரு ச.  ஞானசம்பந்தன்" பெரிதினும் பெரிது கேள் " என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் . பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியிலிருந்து "பெரிதினும் பெரிது கேள் "தலைப்பு தந்தமைக்கு கவிஞர் இரா .இரவிக்கு நன்றி கூறினார். அய்புலன்களையும் நன்மைக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும் . கெட்டதை  கேட்க, பார்க்க ,பேச ,உண்ண பயன்படுத்தக் கூடாது . கேள் என்பதற்கு கேட்டல் ,யாசித்தல் ,கேள்வி ,தண்டித்தல் என்று பல பொருள் உண்டு .குழந்தைக்கு முதலில் உருவாகும் உறுப்பு காது .புராணத்திலும், அறிவியலிலும் இக்கருத்து உள்ளது .தாய் கருவுற்று இருக்கும் போதே குழந்தை கேட்கத் தொடங்கும் .அதனால் தாயும் நல்ல விசயங்களை கேட்க வேண்டும் .குறிப்பாக   வக்கிரம் வளர்க்கும்  இன்றைய தொலைக்காட்சித் தொடர்களை பார்ப்பது நன்மை அல்ல தீமையே . இவ்வாறு பல பயனுள்ள கருத்துக்கள் கூறி பயிற்சி அளித்தார் .

ஆசிரியர் பீட்டர் , திரு G. ராமமூர்த்தி ,மாணவி பாண்டிச் செல்வி  தன்னம்பிக்கை கருத்துக் கூறினார்கள் .தன்  சகோதரருக்கு சிறுநீரகம் தானம் வழங்கிய திரு ஜோ.சம்பத் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது .திரு.தினேஷ் நன்றி கூறினார் .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர் திரு .கார்த்திகேயன், திரு .ஜான் உள்ளிட்ட   பலர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தார்.

திங்கள், 19 நவம்பர், 2012

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !     கவிஞர் இரா .இரவி !

அன்று இங்கிலாந்திடம்
இன்று உலக நாடுகளிடம்
இந்தியா !

தீமையிலும் நன்மை
தெரியவில்லை தொடர்கள்
மின்தடை !

தாலி ஆசிர்வாதம்
மணவிழாவில்
கையில் பிடித்தபடி !

வந்தது  ஒளி
மின்சாரமின்றி
மின்னல் !

கண் சிமிட்டுகின்றாள் 
வானிலிருந்து
 நட்சத்திரம் !

45 - வது தேசிய நூலக வார விழா அழைப்பிதழ் !

45 - வது தேசிய நூலக வார விழா அழைப்பிதழ் !

சிறுபான்மையினரை குறிவைக்கும் துப்பாக்கி

சிறுபான்மையினரை குறிவைக்கும் துப்பாக்கி

ஞாயிறு, 18 நவம்பர், 2012

மண் சிலையா ? மண் தேவதையா ? கவிஞர் இரா .இரவி !

மண் சிலையா ? மண் தேவதையா ? கவிஞர் இரா .இரவி !

மண்ணிலிருந்து கிளம்பிய தேவதையா ?
மண் என்றால் நம்ப முடிய வில்லை !

சிற்பியின் கை வண்ணத்தில் தேவதை

காண்போரின் உள்ளம் கவரும் வனப்பு !

உயிரோடு ஒரு அழகி படுத்து இருக்கிறாள் !
உற்று நோக்கினால் கவர்ந்து இழுக்கிறாள் !

செயற்கை அல்ல இந்த மண் ஓவியம் !
இயற்கை மண்ணில் பூத்த காவியம் !

அகிலத்தில் இல்லை இவளுக்கு இணையான அழகி !
அழகி அழகி பேரழகி அற்புத அழகி !

வானில் இருந்து வந்த தேவதையும் தோற்றாள் !
மண்ணில் இருந்து வந்த தேவதையின் வனப்பில் !


--

செவ்வாய், 13 நவம்பர், 2012

இரா. இரவி

இரா. இரவி

இரா. இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் கவிமலர் என்ற இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். இந்த இணையத்தில் கவிதைகள், ஹைக்கூ (குறுங்கவிதைகள்), நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. மதுரை சுற்றுலாத் துறையில் பணி புரிந்து வருகிறார்.

[தொகு] வெளிவந்த நூல்கள்

1. கவிதைச் சாரல் - 1997

2. ஹைக்கூ கவிதைகள் - 1998
3. விழிகளில் ஹைக்கூ - 2003
4. உள்ளத்தில் ஹைக்கூ - 2004
5. என்னவள் - 2005
6. நெஞ்சத்தில் ஹைக்கூ - 2005
7. கவிதை அல்ல விதை - 2007
8. இதயத்தில் ஹைக்கூ - 2007
9.மனதில் ஹைக்கூ 2010
10. ஹைக்கூ ஆற்றுப்படை2010
11.சுட்டும் விழி 2011 .

சிறப்புக்கள் !


 முனைவர், பேராசிரியர், தமிழ்த்துறைத்தலைவர் ச.சந்திரா  அவர்கள் கவிஞர் இரா .இரவியின் நூல்களை விமர்சனம் செய்து இணையத்தில் பதிப்பித்துள்ளார் .கவிமலர் டாட் காம் www.kavimalar.com இணையத்தை ஆய்வு செய்து ஆய்வுரை வழங்கி உள்ளார் .

இவரது முதல் கவிதை மதுரை மணி நாளிதழில் வந்ததை நன்றியோடு நினைவு கூறுகிறார் .26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார்.

இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.


சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.

இவரது 100க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து \\\"புத்தாயிரம் \\\"தமிழ் ஹைக்கூ என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார்.

இவரது இணையத்தளக் கவிதைகளை சென்னை இலயோலா கல்லூரி மாணவர் இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ்த்துறை மாணவர் அன்பு ஷிவா இவரது கவிதைகளை ஆய்வு செய்து
உள்ளார்.

கவிஞர் இரா.இரவியின் கவிதை நூல்களை மாற்றுத்திறனாளி திரு.பிரகாசம் M Phil. ஆய்வு செய்து
ஆய்வேடு வழங்கி உள்ளார்.
இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலில் 9ஹைக்கூ கவிதைகள்,மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலில் 10 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளது. விருதுநகர் வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி பாட நூலில்  2 ஹைக்கூ  இடம் பெற்றுள்ளது.

பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் உதவி சுற்றுலா அலுவலராக மதுரையில்  பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார்.மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து சிறந்த அரசுப்பணியாளர் விருது பெற்றுள்ளார். 

இதுவரை
எழுதியுள்ள   நூல்கள் 11.


புதுவை எழுத்தாளர் சங்கம் ஹைக்கூ கவிதை நூல் சிறந்த நூலாக தேர்வு செய்து பரிசும் பாராட்டுச் சான்றிதழும் புதுவை ஆளுனர் முன்னிலையில் ஆளு
னர் மாளிகையில் புதுவை துணைவேந்தர் வழங்கினார்.

 லண்டன் தமிழ் இலக்கிய மன்றம் உலக அள்வில் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றுள்ளார். இவரது ஒன்பது ஹைக்கூ கவிதைகள் திருச்சிப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாடநூலில் இடம்பெற்றுள்ளது.


மதுரை நகைச்சுவை மன்றத்தின் ஆண்டு விழாவில் முனைவர் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களிடமிருந்து  வளரும்  கலைஞர்  விருது பெற்றுள்ளார் .இவருடை கவிதைகள் மதுரை வானொலியில் ஒலிபரப்பாகி இருக்கின்றது. இணையத்தில் கவிதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.பல்வேறு கவியரங்கங்களிலும் கலந்துகொண்டு கவிதை பாடி வருகின்றார்.

இவரின் கவிதைகள் பல்வேறு தினசரி பத்திரிகைகளில் பிரசுரமாகி இருக்கின்றது. பிரபல இதழ்களிலும்.பல்வேறு சிற்றிதழ்களிலும் பிரசுரமாகி வருகிறது.


கணித்தமிழ் சங்கம் மதுரையில் நடாத்திய கணிப்பொறித் திருவிழாவில் " தமிழும் அறிவியலும் " என்ற தலைப்பிலான
கவிதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார்.டில்லி  " மக்கள் காப்புரிமை " மாத இதழ் நடாத்திய கட்டுரை போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார்.மனிதநேய் அறக்கட்டளையின் சார்பில் மனித  "நேயப்படைப்பாளர் " விருது பெற்றுள்ளார் கவியருவி, கவிச்சிங்கம்,கவிச்சூரியன்,ஹைக்கூ திலகம் எனப் பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். இலண்டன் "சிவாயோகம்" மலரின் ஆசிரியர் திரு.பொன்.பாலசுந்தரம் அவர்கள் தனது மலரில் திரு.இரா.இரவி அவர்களைப் பாராட்டியுள்ளார்."நகர் முரசு\" வார இதழின் சார்பில் சிறந்த ஹைக்கூ கவிஞர் விருது பெற்றுள்ளார்

.www.tamilauthors.com ,

http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://thannambikkai.org/author/ravi/
http://tamilbookmarket.com/wp/category/6
http://www.lankasripoems.com/?conp=list&poetId=194606
http://www.vaarppu.com/poet/474/
http://tamilsguide.com/day.php?day=2010-04-22

போன்ற இணையத் தளங்களிலும் இவரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளது.
லண்டன் மூத்த எழுத்தாளர் பொன் பாலசுந்தரம் ,ஜெர்மனி "சமூக ஜோதி " திரு.புவனேந்திரன், கலைவிளக்கு ஆசிரியர்,எழுத்தாளர் கவிஞர் திருமதி.விக்னா பாக்கியநாதன்,டென்மார்க் கவிஞர் பொன்ணண்ணா , கனடா எழுத்தாளர் அகில் ஆகியோரின் பாராட்டைப் பெற்றுள்ளார். பிரான்ஸ் தமிழ் ஒலி வானொலி பொறுப்பாளர் கவிஞர் வண்ணை தெய்வம் அவர்கள் "விழிகளில் ஹைக்கூ" கவிதைத் தொகுப்பினை ஏடும் எழுத்தாணியும் என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பினார். தாளம் பண்பலை வானொலியில் இவரது கவிதைகள் ஒலிபரப்பாகி வருகின்றன.
முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு அப்துல்கலாம் குடியரசுத்தலைவராக 29.6.2005 அன்று திருச்சி வந்திருந்தபோது கவிஞர் இரா.இரவியை வரவழைத்து சந்திக்க வாய்ப்பளித்துப் பாராட்டி உள்ளார்.

தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றங்களில் பேசி வருகிறார் .
www.eraeravi.com    

கவிதை ,கட்டுரை ,நூல் விமர்சனம் உள்ளது .பல லட்சம் வாசகர்கள் படித்து வருகின்றனர் .
www.eraeravi.blogspot.com  வலைப்பூவில் படைப்புக்களை நாள்தோறும் பதிப்பித்து வருகிறார். துரை சுற்றுலாத் துறையில் பணி புரிந்து வருகிறார்.

தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்களின் தொகுப்பு நூலாக " கவிஞர் இரா .இரவி ஹைக்கூ ஆயிரம்"  நூல் விரைவில் வெளிவர உள்ளது .

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

சுதந்திரக் காற்றுப் போதும் ! கவிஞர் இரா .இரவி

சுதந்திரக் காற்றுப்   போதும் ! கவிஞர் இரா .இரவி .

அரண்மனை வாகன பவனி வேண்டாம்
அழகிய இயற்கையை ரசித்தால் போதும் !
தங்கக்
கூண்டு வேண்டாம்
தங்க 
கூண்டு போதும் !
தேனும் பாலும் வேண்டாம்
தெம்மாங்கு
ப்   பாடல் போதும் !
சுக போக சிறை வேண்டாம்
சுதந்திரக் காற்று
ப்   போதும் !
யாருக்காகவோ  வாழ வேண்டாம்
யான் எனக்காக வாழ வேண்டும் !

மின்தடை நீங்கும் ! கவிஞர் இரா .இரவி .

மின்தடை நீங்கும் ! கவிஞர் இரா .இரவி .

கவர்ந்து இழுக்கும் இரட்டை காந்தம்
கன்னி அவள் விழிகள் !
கள்  குடித்தால்தான் போதை
கன்னி பார்த்தாலே போதை !
கண்களில் மின்சாரம் உள்ளது
கண்டுபிடியுங்கள் விஞ்ஞானிகளே
மின்தடை நீங்கும் !

திங்கள், 12 நவம்பர், 2012

நீ அழகா ? உன் உடை அழகா ? கவிஞர் இரா .இரவி .

நீ அழகா ? உன் உடை அழகா ? கவிஞர் இரா .இரவி .

புறாக்களின் பசி போக்கும் பெண் புறாவே !
பாவையின் மனதில் சோகம் ஏனோ ?
அழகிய தாவணி அணிந்த வெண்ணிலவே !
அன்புக் காதலன் வரவில்லையோ ?
அகல் விளக்கின் கீழ் உள்ள சுடர் விளக்கே !

அழகே உருவான அற்புத தேவதையே !
நீ அழகா ? உன் உடை அழகா ?
நடந்தது பட்டிமன்றம் .
நடுவர் தீர்ப்பு சொல்ல முடியாமல்
இரண்டும் அழகுதான் என்றார் .

சனி, 10 நவம்பர், 2012

மதுரை மகிழ்வோர் மன்ற விழாவில் மாணவ மாணவியர் மற்றும் பெரியவர்கள் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி

மதுரை மகிழ்வோர் மன்றம் ஆம் மாதக் கூட்டம் நடைபெற்றது .தலைவர் இஸ்மாயில் தலைமை வகித்தார். செயலர் இரா .சொக்கலிங்கம் வரவேற்ப்பு மற்றும் தொகுப்புரை ஆற்றினார் .முத்துபட்டி  விடுதியின் ( பார்வையற்ற ) மாணவர்களின் பட்டிமன்றம் ,யோகா ,பலகுரல்நிகழ்ச்சி என பல்சுவை நிகழ்ச்சி நடந்தது .திருமதி வி .சிவசக்தி நன்றி கூறினார் .
-----------------------------------------
மதுரை மகிழ்வோர் மன்ற விழாவில் மாணவ மாணவியர் மற்றும் பெரியவர்கள் சொன்ன நகைச்சுவை
கள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

ஒருவர் ;மொத்தத் திருமணம் நடக்குது என்று போனாய் ஏன் ? சும்மா வந்துவிட்டாய் !
மற்றவர் ;நிறைய  பெண்  கட்டி வைப்பார்கள் என்று போனேன் .ஒரு ஆளுக்கு ஒரு பெண் தான் என்றனர் வந்து விட்டேன்
.
--------------------------------------
ஆசிரியர் ; இந்தியாவின் தேசிய பறவை எது ?
மாணவன் ;கொசு .
-------------------------------------
ஆசிரியர் ;பத்து  விரலில் இரண்டு விரல் போனால் என்ன வரும் மாணவன் ;ரத்தம் வரும் .
---------------------------------------மருத்துவர் :உங்களுக்கு இருப்பது பரம்பரை நோய் .
நோயாளி ;உங்கள் கட்டணத்தை என் தாத்தாவிடம் வாங்கிக் கொள்ளுங்கள் .
----------------------------------------
ஒருவர் ; பண்பலையில் வானொலியில் வேலைக்கு சேர்ந்தது தவறாகி விட்டது
மற்றவர் ; ஏன் ?
ஒருவர் ; ஊதியம் கேட்டால் கேளுங்க ! கேளுங்க ! கேட்டுக் கிட்டே இருங்க ! என்கிறார்கள் .
-------------------------------------------

ஒருவர் ;மதுக்கடையிலும் துணி தைய்க்கும் கடையிலும் கேட்கும் கேள்வி என்ன ?மற்றவர் ;தெரியவில்லை ஒருவர் ;ஆப்பா ? புல்லா ?
--------------------------------------------
ஆசிரியை ; பூ வாசம் பிடிக்குமா ? சந்தன வாசம் பிடிக்குமா ?
மாணவி;பக்கத்துக்கு வீட்டு சீனிவாசன்தான் பிடிக்கும் .
-----------------------------------------------
கணவன் ; என்னடி சாம்பார் தண்ணியா இருக்கு .
மாணவி ;நீங்கதானே மதியம் உங்க அம்மா வராங்க என்று சொன்னீர்கள் .

----------------------------------------------
ஒருத்தி ;தீபாவளிக்கு சேலை எடுக்கப் போனது தப்பாப் போச்சு .
மற்றொருத்தி ;ஏன் ?
ஒருத்தி ;சேலை எடுத்து வர சில நாள் ஆகி விட்டது .அதற்குள் என் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து ஓடி விட்டார் .
---------------------------------------------
ஒருவர் ;  நீதிபதியை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராக அழைத்தது தவறாகி விட்டது
மற்றவர் ; ஏன் ?
ஒருவர் ; முடிவு சொல்லாமல் தீர்ப்பை தள்ளி வைக்கிறேன் என்று சொல்லி போய் விட்டார் .
---------------------------------------------
ஒருவர் ; படிச்சுக்கிட்டு  இருக்கிற  பையனை ஏன் அடிக்கிறீர்கள் .
மற்றவர் ; பரீட்சைக்கு போகாமல் படி
ப்பதுபோல் நடிக்கிறான் .
-----------------------------------------------

ஒருவர் ;உங்க படத்தில் பைத்தியமாக நடித்தவர் தத்துரூபமாக நடித்து இருந்தார் எங்கே பிடித்தீர்கள் ?
இயக்குனர் ;கீ
ழ்பாக்கத்
தில்தான் !
-------------------------------------------------
ஒருத்தி ; என் கணவர் ஒரு லிட்டர் பெட்ரோலை  குடித்து விட்டார் .
மருத்துவர் ; 40 கிலோ மீட்டர் ஓடச் சொல்லுங்க சரியாகி விடும் .
--------------------------------------------------

நடத்துனர் ;பேருந்து  முழுவதும் பிட்சைக்காரர்களாக இருக்காங்க ஏன் ?
மற்றவர் ; நீங்கதானே சில்லரை  இருப்பவர்கள் மட்டும் ஏறுங்க என்றீர்கள் .
---------------------------------------------------
ஒருவர் ; எங்க மருத்துவர் ஒரே நேரத்தில் உயிர்களை காப்பாற்றி விட்டார்
மற்றவர் ; எப்படி ?
ஒருவர் ; அறுவைச்சிகிசையை தள்ளி வைத்து விட்டார் .
-------------------------------------------------

பயணி ;கோவில் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துங்க.
.
நடத்துனர் ;தூங்கிக் கிட்டே ஓட்டுற ஓட்டுனரை  எழுப்பி சொல்லுங்க .பேருந்தை நிறுத்துவார் .
-------------------------------------------------

தத்துவங்கள் .
ஒருவன் .ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவள் நிழல் கருப்பாதான் இருக்கும் .

---------------------------------------------------
கொசு பல வகை ரத்தம் குடித்தாலும் ரத்த தானம் செய்ய முடியாது.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog

கவிஞர் இரா .இரவி கவிதை வாசித்தார் .

 கவிஞர் இரா .இரவி கவிதை வாசித்தார் .

லட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் விழா மதுரையில் உள்ள ராஜா முத்தையா  மன்றத்தில் நடைபெற்றது .கவிஞர் இரா .இரவி, லட்சுமி விலாஸ்  வங்கி பற்றியும் , வங்கி அதிகாரிகள் சங்கம் பற்றியும் ,மகாகவி பாரதி  பற்றியும்,மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றியும் கவிதை வாசித்தார் .

வெள்ளி, 9 நவம்பர், 2012

மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் ! நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம் நீ நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் !

நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம்  நீ 

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மணிமேகலைப் பிரசுரம் தணிகாசலம் சாலை ,சென்னை 
விலை ரூபாய் 15.

நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம்  நீ.  அவர்கள் குழந்தை நாவல் ,குழந்தை காவியம் ,குழந்தைப் பாடல் ,கட்டுரைகள் ,வைரவரி சிந்தனைகள் என எழுதி வரும் பன்முக ஆற்றலாளர் .பல்வேறு இதழ்களில் பிரசுரமான   ஹைக்கூ 330 கவிதைகளின் தொகுப்பு நூல் இது .மணிமேகலைப் பிரசுரம் நிறுவனம் மிக நன்றாக அச்சிட்டுள்ளனர்  .மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் ! நூலின் தலைப்பு இந்த நூலை படிக்கும் வாசகர்களின் மனதில் ஹைக்கூ மழைத் துளிகள்.பாராட்டுக்கள்.

பற்றிக் கொண்டேன்
தொற்றிக் கொண்டது
நோயல்ல ..விவேகம் !

நாம் படிக்கும் நூல்களில் உள்ள மந்திரச் சொற்கள் சில நம் மனதை பற்றிக் கொள்ளும் .பற்றிக் கொண்டதை கடைப் பிடித்து நடந்தால் விவேகம் பிறக்கும் என்பதை ஹைக்
கூ மூலம்  உணர்த்தி உள்ளார் .

சபரிமலை விரதம் முடிந்து
அவச
மாய் ஓடினார் பக்தர்
மதுக்கடைக்கு !
மதுக் கடையை அரசு ஏற்று வீதி தோறும் அரசு மதுபானக் கடை என்று விளம்பரங்கள் ."அதி நவீன அரசு பார் " விளம்பரப் பலகைகள் .செய்தித்தாள்களில் விற்பனை வளர்ச்சி அபாரம் என்று வளர்ச்சி விகித புள்ளி விபரங்கள்.இது சமுதாய வீழ்ச்சி புள்ளி விபரங்கள் என்பதைஎண்ணி மனித நேய ஆர்வலர்கள்தான் வருந்துகின்றோம் .னால் குடிமகன்கள் எந்தக் கவலையும் இன்றி "குடி குடியைக் கெடுக்கும்" என்பதை படித்து விட்டு குடித்து அழிகிறார்கள் .

வீச்சரிவாள் கம்புகளுடன்
உச்சத்தில் சாதிச்சண்டை
விளையாடும் இருசாதிக் குழந்தைகள் !


குழந்தைகள் உயர்ந்த உள்ளத்துடன் விளையாடுகின்றன .ஆனால் பெரியவர்கள் சாதி வெறியோடு மோதி வீழ்கின்றனர் .பகுத்தறிவைப் பயன்படுத்தாது விலங்காகி விடுகின்றனர் .

பாடம் நடத்தும் பேராசிரியர்
பாடம் கற்கிறார் வீட்டில்
மனைவியிடம் !

இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர்கள் எவரும் இல்லை .பேராசிரியருக்கு தெரியாததை மனைவியிடம் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை .


கிளை தாவி பழித்து
சொறிந்து  வால்  பிடித்து
அடடா ! மனிதர்களாய் மந்திகள் !

இந்தக் கவிதை படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் சொல்லாமலே அரசில்வாதிகள் நினைவிற்கு வந்து விடும் .மந்திகள் ! என்று இருந்தது  மந்திரிகளோ என்று திரும்பவும் படித்துப் பார்த்தேன் .


இடம் வாங்கினார்
சிறு பள்ளி உருவாக்கினார்
இன்று பெரும் புள்ளி !

அன்று அரசிடம் மட்டுமே இருந்த  கல்வித்துறை தனியாரிடம் தாரை வார்த்த காரணத்தால், இன்று தனியார் கல்வி நிறுவனங்கள் பகல் கொள்ளை அடித்து வருகின்றன .தாராள மயமாக்கப் பட்டதால் தாராளக்
கொள்ளை நடக்கின்றது .அதனை உணர்த்தும் ஹைக்கூ .

தெருவிற்குத் தெரு ஆங்கிலப் பள்ளிகள்
தடுக்கி விழுந்தால் மருத்துவமனை
நவீன பாரதம் !

நாட்டுநட 
ப்பை உணர்த்திடும் ஹைக்கூ .

பேருந்தில் மாணவர்கள்
கூச்சலும்  கும்மாளமாய்
 ஓ .. சட்டசபைக்கு இப்போதே !
சட்டசபையில் ஒரே கூச்சல் சண்டை சச்சரவுகள் நடுக்கும் கொடுமையை, இனியாவது சட்டசபையில்  உருப்படியாக பேசி  மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள் .என்பதை  எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார் .

கிரகங்களைப்  படித்தறிந்த
கல்லூரிப் பேராசிரியை ..சுற்றுகிறார்
கடமையாய் நவகிரகத்தை !


படித்த பெண்களும் மூட நம்பிக்கையில் மூழ்கியுள்ள மடமையைச் சாடி எழுதியுள்ள ஹைக்கூ நன்று .

அடிக்கடி அடுப்படிகள் எரியாத
குடிசைகள் எரிந்தன அடிக்கடி
சாதிச் சண்டை !
சாதிச் சண்டையின் காரணமாக மனிதாபிமானமற்ற  முறையில் குடிசைகளை எரிக்கும் கொடுமை .கணினி யுகத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனம் என்பதை நன்கு   உணர்த்தும் ஹைக்கூ.

எரி  வாயு விலை உயர்வு
செய்தி கேட்டு
எரிந்தது வயிறு அவளுக்கு ..


மைய அரசு எரி  வாயு விலை உயர்த்தியது மட்டுமன்றி வருடத்திற்கு எண்ணிக்கை ஆறு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்து வயிற்றில் அடித்து உள்ளனர் .எந்த விலை உயர்வும் ஆள்வோரின் திறமையின்மையை வெளிச்சம் காட்டி வருகின்றது .மக்களின் மனக் குமுறலை  ஹைக்கூவாக்கி உள்ளார்.

 
ஜப்பானியக் கவிஞர்கள் போல இயற்கையும் ஹைகூவாக்கி உள்ளார் .

நேற்று பெய்த மழைக்காக
இந்திரா குடை பிடிப்பது ?
ஓ ! காளான் !

புச்சிகளுக்குமா  இங்கே
சிறைத் தண்டனை ?
சிலந்தி வலை !

எந்தப் பறவை இட்ட
கருப்பு முட்டை இது ?
ஓ .. மலை !


நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம்  நீ  அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .நல்ல சிந்தனை விதைக்கும்  ஹைக்கூ கவிதைகள் .கவி மழையாக பொழிந்துள்ளது .

வியாழன், 8 நவம்பர், 2012

ஆணவம் ! கவிஞர் இரா .இரவி ..

ஆணவம் !      கவிஞர் இரா .இரவி ..

அழிவுக்கு அறிகுறி
வீழ்ச்சிக்கு அறிகுறி

ஆணவம் !  

என்னைத் தவிர
யாராலும் முடியாது
ஆணவம் !  

எனக்கு நிகர்
எவரும் இல்லை

ஆணவம் !  

நானே பெரியவன்
மற்றவர்
சிறியவர்கள்
ஆணவம் !

எல்லாம் தெரியும்
எனக்கு 

ஆணவம் !

எதுவும் தெரியாது
மற்றவருக்கு
 
ஆணவம் !

ஆளப் பிறந்தவன்
நான்
 
ஆணவம் !

நானே பணக்காரன்
மற்றவர் ஏழை

 ஆணவம் !

நானே அறிவாளி
மற்றவர் முட்டாள்
 
ஆணவம் !

நானே வெல்வேன்
மற்றவர் தோற்பார்

ஆணவம் !

என்னைவெல்ல
எவனும் இல்லை

ஆணவம் !

மனதில் தோன்றும்
கொடிய அரவம்
ஆணவம் !

அழிக்
கா   விட்டால்
அழித்துவிடும்

ஆணவம் !  

நான் எழுதிய ஹைகா ( கவிஞர் இரா .இரவி )

மின்மினி இதழின் ஹைகா போட்டி  ( ஓவியத் துளிப்பா  ) கலந்து கொள்ளுங்கள் .

நான் எழுதிய ஹைகா   ( கவிஞர் இரா .இரவி )

ஏழ்மையிலும் மகிழ்ச்சி
பயணப்பட்டது மனசு
காகிதக்கப்பலுடன் !

பொருட்படுத்தவில்லை
வயிற்றுப்பசி
மனப்பசியாறும் மழலை !

மழைநீர் சேகரிப்பு
மண் குடத்தில்
குடிசைக்குள் !

அடுப்பெரியவில்லை
கவலையில்லை
குதூகலத்தில் குழந்தை !

இல்லாததற்கு வருந்தாமல்
இருப்பதில் இன்புறும்
சிறுமி !
வெள்ளோட்டம் பார்க்கிறாள்
வருங்கால
கப்பல் படை அதிகாரி !

உணவுக்காக வருந்தாமல்
உணர்வோடு மகிழ்கின்றாள்
உன்னதப்பெண் !

சோகத்தைத் தள்ளி வைத்து
சுகமாக ரசிக்கிறாள்
கப்பலை !

வீடெல்லாம் தண்ணீர்
விடவில்லை கண்ணீர்
விளையாடும் பனிமலர் !

வறுமைக்கு வறுமை தந்து
மென்மையாக விளையாடும்
மேன்மை !


உங்களின் இரண்டு ஹைகா ( ஓவியத் துளிப்பா  ) மட்டும் அனுப்ப வேண்டிய முகவரி .

கவிஞர் கன்னிக்கோவில் ராஜா
ஆசிரியர் மின்மினி
 30/8.கன்னிக்கோவில் முதல் தெரு
அபிராமபுரம்
சென்னை . 18

செவ்வாய், 6 நவம்பர், 2012

நகல் ! கவிஞர் இரா .இரவி.

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த
தலைப்பு                   நகல் !

நகல் !        கவிஞர் இரா .இரவி.
நன்மையையும் உண்டு !
தீமையும் உண்டு !
--------------------------------------------------- ----
அசலை விஞ்சி நிற்கும் !
ஆராய்ந்துப் பார்த்தல் தோற்கும் !
--------------------------------------------------- ----
மயிலிடம் தோற்ற
வான்கோழி !
--------------------------------------------------- ------
என்றுமே வெல்ல முடியாது
மூலத்தை !
--------------------------------------------------- --------
மின் தடையால்
தடையானது !
--------------------------------------------------- -------
அரசுத் தேர்வுகள்
ரத்து செய்ய
காரணமான
காரணி !

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!

கவிஞர் இரா .இரவி .

உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் !
உலகம் முழுவதும் பரவியுள்ள
மொழி தமிழ் !
உலகின் முதல்மொழி  தமிழ்மொழி என்பதை
உரைத்தார் அன்றே பன்மொழி அறிஞர் பாவாணர் !
பன்னாட்டு  ஆட்சிமொழியான
மொழி தமிழ் !
பண்டைக் காலம் முதல் ஆளுமை மொழி தமிழ் !

இணையத்தில் வாகை சூடிய  மொழி தமிழ் !
இதயத்தில் இடம் பிடித்த மொழி தமிழ் !
மூவேந்தர்கள் போற்றி வளர்த்த மொழி தமிழ் !
மூத்த புலவர்கள் கட்டிக் கா
த்த மொழி தமிழ் !
எழுத்து பேச்சு இரண்டிலும் வாழும் மொழி தமிழ் !
இணையில்லா திருக்குறளை
ந்தமொழி தமிழ் !
மொழி அறியாதவர்களும் ரசிக்கும் மொழி தமிழ்
மொழியின் பால் ஈர்ப்பு சக்தி உள்ள மொழி தமிழ் !
செம்மொழி நம் மொழி  உணர்வாய் தமிழா !
செம்மையைக்  காத்திட முயல்வாய் தமிழா !

கலப்பு தாவரத்தில் நன்மை தரலாம் !
கலப்பு மொழிக்கு தீமையே தந்திடும் !

கலப்படம் உணவில் தண்டனைக்குரிய குற்றம் !
கலப்படம் மொழியில் புரிவதும் குற்றமே !
இலக்கண இலக்கியம் நிறைந்த மொழி தமிழ் !
எண்ணிலடங்கா சொற்கள் மிகுந்த மொழி தமிழ் !

இயல் இசை நாடகம் நிறைந்த மொழி தமிழ் !
இனிய முத்தமிழில்   இனிய மொழி தமிழ் !

தமிங்கிலப்  பேச்சிற்கு முடிவுரை எழுதுங்கள் !
தமிழை தமி
ழாகவேப் பேசிட முயலுங்கள் !
ஆயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும்
அழகு  தமிழுக்கு எந்த மொழியும் ஈடாகாது
தமிழன் பெருமையை நெஞ்சில் நிறுத்து !
தமிழோடு பிற மொழி கலப்பதை நிறுத்து !


இல்லாதவன் பிச்சை எடுத்தல் நியாயம் !
இருப்பவன் பிச்சை எடுத்ல் நியாயம் !

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!

பட்டிமன்றம் நடைபெற்றதுபட்டிமன்றம்  நடைபெற்றது

பட்டிமன்றம் நடைபெற்றது
பட்டிமன்றம்  நடைபெற்றது

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...