செவ்வாய், 31 மார்ச், 2020

கடைசி விவசாயியின் மரண வாக்குமூலம்! ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

நட்பெனும் நந்தவனம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
http://www.tamilauthors.com/04/533.html


நட்பெனும் நந்தவனம்!

நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

வெளியீடு : கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை – 600 017.


*****

 நூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.  அவர்கள் பேச்சு, எழுத்து என்ற இருவேறு துறையிலும் தனி முத்திரை பதித்து  வருபவர் . ‘நட்பெனும் நந்தவனம்’ என்ற நூலின் மூலம் நட்பிற்கு மகுடம் சூட்டியுள்ளார்.நட்பின் மேன்மை விளக்கிடும் நூல்.

சிந்தனைக் கவிஞர் கவிதாசன் சொல்வார். “உப்பு இல்லாமல் இருந்திடலாம், நட்பு இல்லாமல் இருக்க முடியாது” என்று. அதுபோல நட்பின் பயனை, நன்மையை, சிறப்பை, புகழை மிக விளக்கமாக எழுதி உள்ளார்.

ஆசிரியர் நுழைவாயிலில் குறிப்பிட்ட வரிகள் “நண்பர்களை இன்னும் நெருக்கமாக தங்கள் தோள்களோடு இறுக்கிக் கொண்டால் அதுவே இந்த நூலுக்குக் கிடைக்கும் வெற்றியாக் இருக்கும்”.

உண்மை. இந்த நூல் படித்து முடித்தவுடன் வாசகர் மனதில் ‘நட்பின்’ முக்கியத்துவத்தை விதைத்து விடுகிறது. நண்பர்களின் மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றது. நூல் பற்றி  எடுத்து இயம்பிட சொற்கள் கிடைக்கவில்லை எனக்கு . பல எழுத்துக்கள் பொன்மொழிகள் போல உள்ளன .கவித்துவமாக சொற்கள் வந்து விழுந்து உள்ளன .

பலரின் சாதனைக்கு, புகழுக்கு, மேன்மைக்கு, வளர்ச்சிக்கு, உச்சத்திற்கு, மன அமைதிக்கு, உடல்நலனுக்கு, வளத்திற்கு அனைத்திற்கும் நட்பே அடித்தளமாக இருக்கும் என்பதை நூல் நன்கு உணர்த்துகின்றது. நட்பெனும் நந்தவனம் நூல் படிக்கும் போது நந்தவனத்தில் நடந்து செல்லும் உணர்வு வருகின்றது. காரணப் பெயராகி விட்டது.

70 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. கட்டுரை தொடங்கும் போது நட்பு குறித்து அறிஞர்கள் சொன்ன பொன்மொழிகளுடன் தொடங்கி இருப்பது நல்ல யுத்தி. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது. பாராட்டுக்கள்!

நட்பு குறித்து முனைவர் பட்டம் ஆய்வு போல நிகழ்த்தி உள்ளார். நூல் முழுவதும் நட்பு நட்பு நட்பு தவிர வேறு ஏதுமில்லை எனும் அளவிற்கு நட்பு குறித்தே எழுதி உள்ளார். நூலின் கடைசிப் பக்கத்தில் ஆய்வுக்கு துணைநின்ற நூல்களின் பட்டியலில் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழி நூல்களும் இடம்பெற்றுள்ளன. அதனைப் படித்தாலே இத்தனை நூல்களின் பழச்சாறே இந்த நூல் என்பதை அறிய முடியும்.

மூன்று ஆண்டுகள் தவம் செய்து ஆய்வுசெய்து தனக்கு நண்பர்களுடன் ஏற்பட்ட சொந்த அனுபவங்களையும் சேர்த்து வடித்துள்ளார். ‘நட்பு’ பற்றி இவ்வளவு விரிவாக இதுவரை எந்த நூலும் வரவில்லை, இனி வரப்போவதும் இல்லை என அறுதியிட்டுக் கூறலாம்.

நண்பனுக்குச் செய்த உதவியை அன்றே மறந்துவிட வேண்டும், அதனை சொல்லிக் காட்டுவது நட்புக்கு அழகல்ல். ஆனால் நண்பனிடம் நாம் பெற்ற உதவியை மறக்காமல் நன்றியோடு நினைவில் கொள்வது நல்லது என்பதை மிக அழகாக விளக்கி உள்ளார்.

எழுதியது மட்டுமல்ல நூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் இயல்பும் அதுதான். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாத உண்மை மாமனிதர். எனக்கு நேரடியாக அவருடன் அந்த அனுபவம் உண்டு. அவர் எனக்குச் செய்த உதவிகளை அன்றே மறந்து விட்டார். ஆனால் அவருக்கு நான் செய்த சிறு உதவியை மறக்காமல் பாக்யா இதழில் எழுதி பாராட்டினார்.

உலகப்பொதுமறை வடித்த திருவள்ளுவரில் தொடங்கி சீன ஞானி கன்பூசியஸ், மேல்நாட்டு அறிஞர்கள், கருத்துக்கள் தமிழ் இலக்கியத்தில் உள்ல நட்பு குறித்த பாடல்கள் விளக்கங்கள் யாவும் உள்ளன.

நமக்குள் மனமாற்றத்தை விதைத்து விடுகின்றது. நண்பர்களை நாம் பார்க்கும் பார்வையே செம்மையாக்கி விடுகிறது. முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் தற்போது சென்னையில் வாழ்ந்தாலும் சில ஆண்டுகள் மதுரையில் வாழ்ந்தார். அப்போது ஏற்பட்ட நட்பின் சங்கிலியை இன்றுவரை அறுந்துவிடாமல் வைத்து இருப்பவர்.

மதுரைக்கு வந்துவிட்டால் மதுரை நண்பர்கள் அனைவருக்கும் தகவல் தந்து வரவழைத்து கலந்து பேசி மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார். தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கி விருந்தோம்பல் செய்வார். அவரது நண்பர்களுக்குள்  நட்பை உருவாக்கி விடுவார். சென்னையில் இருந்து கொண்டே அவரது நண்பரான மதுரையில் உள்ள கவிஞர் ஆத்மார்த்தியை எனக்கு அறிமுகம் செய்து வைத்து எங்களை நண்பர்களாக்கினார். அவர் என்னுடைய இரண்டாயிரம் ஹைக்கூ கவிதைகளில் இருத்து,முத்துக்கள் போல நூறு தேர்ந்தெடுத்து வழங்கி உள்ளார். விரைவில் நூலாக உள்ளது.

நண்பர்களுக்கு சட்டத்திற்கு உட்பட்ட நியாயமான உதவிகளை நன்மைகளை பலருக்கும் செய்து வருகிறார். ஆனால் அது பற்றி எழுதவும் மாட்டார், பேசவும் மாட்டார், இரவு 9.00 மணிக்கு மேல் அவரிடம் ஆலோசனைகள் பெற்று ‘இந்திய ஆட்சிப் பணி’ தேர்வில் வென்ற  ஆட்சியர்கள் பட்டியல் நீளும். ஆனால் அவற்றை சொல்ல மாட்டார். நட்பிற்கு இலக்கணமாக வாழ்ந்து வருபவர். அன்பு காட்டுவதில் வள்ளல் என்றே சொல்ல வேண்டும். அவருடைய ‘மூளைக்குள் சுற்றுலா’ என்ற 100வது நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மாநாடு போல கூட்டம் கூடியது. அன்பால் நட்பால் கூடிய கூட்டம் அது.

கட்டுரைகளின் தலைப்புகளே நட்பின் சிறப்பை உணர்த்துகின்றன. நட்பின் மகத்துவம், உயிர் காப்பான் தோழன், ஆளுமையும் நட்பும், நிபந்தனையற்ற நட்பு, நல்ல நண்பர்கள் இப்படி நட்பின் வகைகள், நட்பு பற்றி சேக்சுபியர் தொடங்கி மேல்நாட்டு அறிஞர்கள் சொன்ன கருத்துக்கள் அள்ள அள்ள அன்னம் வரும் அட்சயப் பாத்திரம் போல படிக்கப் படிக்க நட்பின் மேன்மை வரும் நூல் இது.

நூலின் நிறைவுரை, பதச்சோறாக.

புதிய நண்பர்களை சம்பாதித்தாலும் பழைய நண்பர்களைத் தக்க வைத்துக் கொள்வது பேராற்றல். அதைச் செய்து வருகின்ற சில நண்பர்களையும் அறிவேன். நட்புக்கு நாம் நெடுந்தூரம் செல்ல சித்தமாய இருக்க வேண்டும். என் பழைய நண்பர்களைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்கு மீண்டும் பல் மூளைக்குத் தொடங்குகிறது.

இந்த உலகத்தில் நம்மைச் சூளும் நன்மையை நட்பால் நிரப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது!

நட்பால உலகை ஆளலாம், நட்பால் எதையும் சாதிக்கலாம், நட்பால் வானமும் வசப்படும் என்பதை உணர்த்திடும் உன்னத நூல்.

புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளவும் பழைய நண்பர்களை புதுப்பித்துக் கொள்ளவும் வழிசெய்யும் வழிகாட்டி நூல்.

நூலில் நட்பு குறித்து கல்வெட்டுப் போல சில வரிகள் உள்ளன .மனதில் பதித்துக் கொண்டால் நட்பால் உலகை ஆளலாம் .
உண்மையான நட்பு என்றால் என்ன ? எது நட்பு ? நட்பில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் .இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக நூல் வந்துள்ளது .

நட்பு குறித்து சரியான புரிதல் இல்லாத இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல். 
நூல் ஆசிரியர்  முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. எழுதிய நூல்களின் எண்னிக்கை விரைவில் நூற்றி ஐம்பதை தொட உள்ளன இந்த நூல் அவரது புகழ் மகுடத்தில்  பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது .பாராட்டுக்கள் .

--  

.

முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் உரை 6

முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் உரை 5

முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் உரை 5

திங்கள், 30 மார்ச், 2020

தனித்திரு விழித்திரு ! கவிஞர் இரா .இரவி !

தனித்திரு விழித்திரு ! கவிஞர் இரா .இரவி !

கொரோனா கொடிய நோய் தொற்று புரிந்திடு
கூடி இருந்தால் தொற்று விடும் அறிந்திடு  !

சீனாவை சின்னா  பின்னமாகியது கொரோனா
சப்பானையும் கொரோனா சிதைத்து  விட்டது !

இத்தாலியின் மக்கள் தொகையைக் குறைத்து
இங்கிலாந்து இளவரசரையும் தொற்றியது !

அமெரிக்காவிற்கு அடி மேல் அடி கொடுத்தது
அதிபரையும் சோதனைக்கு உள்ளாக்கியது !

பரவாத நாடே இல்லை என்னுமளவிற்கு
பரவி விட்டது  கிருமி  உலகம் முழுவதும் !

வழிபாட்டுத் தலங்களை  மூட வைத்தது
வழியே தெரியாமல் தவிக்க விட்டது !

வணிக நிறுவனங்களை முடக்கி விட்டது
வயிற்றுக்கு உணவு கிடைப்பதே சாதனையானது ! 

கூட்டமாகக்  கூடுவதை முழுவதும் நிறுத்திடு
கைகளை சோப்பால் அடிக்கடி கழுவிடு !

கொடிய அரக்கன் கொரோனாவை கொல்ல
கண்டுபிடிக்கப்படவில்லை இன்னும் மருந்து !

விரைவில் மருத்துவர்  மருந்து காண்பர்
வரும்வரையில் வீட்டிலிருப்பதே மருந்து !

வீராதி வீரனையும் விட்டு வைக்காது
சூராதி சூரனையும் தள்ளி வைக்காது ! கண்ணுக்குத் தெரியாத கிருமியிடம் தோற்றோம்
கர்வம் அகற்றி மனிதம் போற்றி வாழ்வோம் !

ஞாயிறு, 29 மார்ச், 2020

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஆழ்கடல்  தத்தளிப்பு
சேருவோம் கரை
ஒழிப்போம் கொரோனா !

திக்குத் தெரியாத காட்டில்
தவிப்பு நிலை
மாறும் விரைவில் !

நோய் எதிர்ப்பு சக்தி
குறைவானால் தொற்றும்
கொடியோன்  கொரோனா !

கொடிய கிருமி
காண்போம் மருந்து
அழிப்போம் கொரோனா !

கொல்ல வந்த கொள்ளை நோய்
கொன்று வெல்வான் மனிதன்
கொல்லப்படும் கொரோனா !

சனி, 28 மார்ச், 2020

புதிய திசைகள் இணையத்தில் கவிஞர் இரா .இரவி படைப்புகள் படித்து மகிழுங்கள்

புதிய  திசைகள் இணையத்தில் கவிஞர் இரா .இரவி படைப்புகள் படித்து மகிழுங்கள்https://puthiyathisaigal.com/?s=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE+.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF 
.

மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !
மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !
கொரோனா விழிப்புணர்வு பற்றி நான் எழுதிய கவிதைகள் 28.3.2020. இன்று இரவு ஹலோ பண்பலை வானொலியில் டைரி நிகழ்ச்சியில் முதுநிலை அறிவிப்பாளர் செல்வ கீதா அவர்களின் இனிமையான குரலில் ஒலிபரப்பாக உள்ளது.

வெள்ளி, 27 மார்ச், 2020

மூளைக்குள் சுற்றுலா! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் முதன்மைச் செயலர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி.
மூளைக்குள் சுற்றுலா!
நூல் ஆசிரியர் :
முதுமுனைவர் முதன்மைச் செயலர்

வெ. இறையன்பு, இ.ஆ.ப.


நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி.

******

இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் 100ஆவது நூல். சுற்றுலாத்துறையின் ஆணையாளராகவும், செயலராகவும் இருந்து சுற்றுலாத்துறையின் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு பல நற்செயல்கள் புரிந்தவர். சுற்றுலாவைப் பற்றி நல்ல புரிதல் உள்ளவர். மூளைக்குள் கடின சுற்றுலா நடத்தி ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் வடித்துள்ளார்.நூலாசிரியரின் ‘இலக்கியத்தில் மேலாண்மை’ நூல் படித்துவிட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திருமலை அவர்கள் குறிப்பிட்டு இருந்தார். “இறையன்பு அவர்களே நினைத்தாலும் இதுபோன்ற நூலை எழுத முடியாது” என்று. இந் நூலிற்கும் அது பொருந்தும். அவரே நினைத்தாலும் இதுபோன்று இன்னொரு நூல் எழுத முடியாது. அவ்வளவு சிறப்பு.இந்த நூலில் மூளையின் செயல்பாடுகள் படித்த போது, வியந்து போனேன். கையளவு உள்ள மூளை மலையளவு செயல்புரிகின்ற விதம் கண்டு வியந்து போனேன். இந்த நூலில் மூளை மட்டுமல்ல நாடி, நரம்பு, எலும்பு, பல், இனாமல் என உடல் உறுப்புகள் அனைத்தையும் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி உள்ளார்.பொருத்தமான அழகிய வண்ணப்படங்களும் இடம்பெற்றுள்ளன. படிப்பதற்குச் சுவை கூட்டுகின்றன படங்கள். நூலினை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மிகச் சிறப்பாக அச்சிட்டு உள்ளனர். முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நூல் என்றால் தனிக்கவனம் செலுத்து மிகச்சிறப்பாகப் பதிப்பித்து விடுகின்றனர்.டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார். அணிந்துரையில் சுட்டியுள்ள மேற்கோள்கள் நூலின் நோக்கத்தை சிறப்பை தெளிவாக உணர்த்தி விடுகின்றன.ஆசிரியரின் முன்னுரையில் இருந்து சிறு துளிகள் : “அறிவியல் குறித்த புத்தகங்களை எழுத வேண்டும் என்கிற விருப்பம் வெகுநாட்களாகவே இருந்தது. பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் உடல்மொழியோடு தொடர்புபடுத்தி எழுதியபோது அந்த முயற்சி சாத்தியம் என்கிற நம்பிக்கை பிறந்தது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே மூளையைக் குறித்து தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன்”.நூலாசிரியர் அய்ந்து வருட உழைப்பு இந்நூலின் மூலம் அறுவடை ஆகியுள்ளது. நல்ல விளைச்சல். மூளை குறித்து அறிவியல் அறிஞர்கள் சொன்ன மேற்கோள்கள் பல நூலில் இடம்பெற்றுள்ளன. மனித மூளைகள் மட்டுமல்ல, மனிதக் குரங்குகள், புழு, பூச்சி, எறும்பு என சகல உயிர்களின் மூளை பற்றிய தகவல்கள் நூலில் உள்ளன. தகவல் களஞ்சியமாக நூல் உள்ளது.‘தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’ என்பது நாமக்கல் கவிஞரின் வைர வரிகள். இன்று நூல் படித்து முடித்த பின்பு, ‘மனிதன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற மனநிலை வந்து விடும். உலகில் உள்ள உயிர்களில் மிகமிக உயர்ந்த இனம் மனித இனம். எவ்வளவு ஆற்றல், எவ்வளவு செயல்பாடு, எவ்வளவு முன்னேற்றம், மனித மூளையின் மகத்துவம் உணர்த்தி மனிதனாகப் பிறந்ததற்கே ஒவ்வொரு மனிதனும் கர்வம் கொள்ளும் விதமாக நூல் வடித்துள்ளார், பாராட்டுக்கள்.அள்ள அள்ள அன்னம் வரும் அட்சயப் பாத்திரம் போல சிந்திக்க சிந்திக்க சிறகடிக்க வைக்கும் அட்சயப் பாத்திரம் தான் மூளை என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.எள்ளல் சுவையுடன் சில ஒப்பீடுகளும் நையாண்டிகளும் நூல் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளன. நூலிலிருந்து சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு."தொன்று தொட்ட காலமாக ‘தங்க விதி’ என்கிற ஒன்று மானுட சமுதாயத்தை இயக்குகிறது. அதுவே நம் சட்டம், ஒழுக்கம், நீதி நூல்கள், நாட்டாண்மை போன்ற அத்தனைக்கும் அடிப்படை. ‘மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, அதையே நீ அடுத்தவர்களுக்கும் செய் என்பது தான் அது. அதைப் போலவே, ‘அடுத்தவர்கள் நமக்கு எதைச் செய்யக் கூடாது என எண்ணுகிறோமோ அதை மற்றவர்களுக்கு நாம் செய்யக் கூடாது’."உண்மையில் தங்கமான விதி தான். இந்த விதியை உலகில் உள்ள மனிதர்கள் யாவரும் கடைபிடித்தால் உலகில் அமைதி நிலவும். சண்டை, சச்சரவுகள் வராது. இந்நூல் படிக்கும் வாசகர்களும் இந்த விதியைக் கடைபிடித்து நடந்தால் சமுதாயம் சீர்படும். செம்மைப்படும். சிறந்து விளங்கும். வன்முறைகள் ஒழியும். மன நிம்மதி பிறக்கும். அரிய பல தகவல்கள் நூலில் இடம் பெற்றுள்ளன.“யானையின் கருவுற்றிக்கும் காலம் 660 நாட்கள். ஒட்டகம் 406, குதிரை 345, குரங்கு 235, சிங்கம் 120, புலி 106, முயல் 40, அணில் 35, சுண்டெலி 23.மனிதர்களுக்குப் பத்துமாதம் என்பது தான் எல்லோரும் அறிந்த தகவல். பலரும் அறியாத அரிய தகவல்களான யானை தொடங்கி எலி வரை கருவுற்றிருக்கு காலம் மட்டுமல்ல, அவற்றின் செயல்பாடுகள், வாழ்வியல் முறை, நுட்பமான சிறப்புகள் என எல்லாம் உள்ளன நூலில்.“கோயில்கள் தேவையில்லை, சிக்கலான தத்துவமும் தேவையில்லை. நம் மூளை இதயம் ஆகியவையே கோயில்கள். கருணையே தத்துவம். இதுவே என் எளிய மதம்” – தலாய்லாமா.தலாய்லாமா அவர்களின் மேற்கோள் நூலில் உள்ளது. நமது மூளையில் மனிதாபிமானம் இருந்தால் மதச்சண்டைகளுக்கு, சாதிச்சண்டைகளுக்கு வேலை இருக்காது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.கரையான் புற்றில் 10 டிகிரி வெப்பம் குறைவாக இருந்துள்ளது. அதனை ஆராய்ந்து அதே நுட்பத்தில் ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேவில் ஒரு பெரும் கட்டிடத்தை கட்டி உள்ளார்கள் – என்ற தகவல் நூலில் உள்ளது. இப்படி எறும்பு, புழு, பூச்சி எல்லாம் மனிதனுக்கு பலவற்றை கற்பித்து உள்ளன. அவற்றிலிருந்து பாடம் கற்று பல கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்களை படித்து வியந்தேன்

.

மூன்று வகையான மூளைகள் உள்ளன என்று அதன் வகைகளை விளக்கி உள்ளார்.“மனிதனின் மூளையே முக்கிய உறுப்பு, அதை முட்டுக் கொடுக்கவே உடல்” என்று எடிசன் குறிப்பிட்டார். இப்படி மூளை பற்றிய அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன.மனித உறுப்புக்களில் தலையாய உறுப்பு மூளை. மூளை இறந்து விட்டால் மற்ற உறுப்புக்கள் இருந்தும் பயன் இல்லை. மூளைச்சாவு அடைந்தால் உடல் உறுப்பு தானம் நடைபெறுகின்றது. இந்த அற்புதமான மூளையை காப்பதற்கு தான் கடினமான மண்டைஓடு உள்ளது.மூளைக்குத் தேவையான உணவுகள் எவை? எப்படி செயல்படுகின்றன? நரம்புகளின் செயல்பாடு, படிக்கப் படிக்க பிரமிப்பு வந்தது. படித்துவிட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது. என்சைக்ளோபீடியா போல கூகுள் போல தகவல் களஞ்சியம் இந்நூல்.மூளையோடு பிறந்ததற்காக உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் கர்வம் கொள்ள வேண்டும். கையளவு மூளையில் கடலளவு செயல்பாடு. ‘மூளைக்குள் சுற்றுலா’ என்ற கடலில் மூழ்கி முத்தெடுக்க வாருங்கள். ‘MASTER PIECE’ ஆக வந்துள்ள நூல். நூலை வாங்கிப்படித்து பயன் பெறுங்கள்.


.மருத்துவம் பயின்ற மருத்துவரால் கூட இப்படி நுட்பமாக எழுத முடியாது மருத்துவம் பயிலாத முதுமுனைவர் முதன்மைச் செயலர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.அவர்கள் உடல் குறித்து, மூளை குறித்து, நரம்பு குறித்து, எலும்பு குறித்து மிக விரிவாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் நூலிற்கு வழங்கிய அணிந்துரையில் நூல் ஆசிரியர் :
முதுமுனைவர் முதன்மைச் செயலர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.அவர்கள் குறிப்பிட்டு இருந்தார் ."தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் அருகே அவர் எழுதிய நூல்களை அடுக்கினால் அவரை விட உயரமாக இருக்கும் :"

".இது நூல் ஆசிரியர் முதுமுனைவர் முதன்மைச் செயலர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.அவர்க ளுக்கும் பொருந்தும் "வெ. இறையன்பு, இ.ஆ.ப .அவர்களின் அருகே அவர் எழுதிய 100 நூல்களை அடுக்கினால் அவரை விட உயரமாக இருக்கும் .

வெ. இறையன்பு, இ.ஆ.ப. அவர்கள் எழுத்து பேச்சு என்ற இருவேறு துறையிலும் தனி முத்திரைப் பதித்து உள்ளார்கள் .எழுத்திலும் கவிதை கதை கட்டுரை ,கேள்வி பதில் என பல்வேறு வகையிலும் நூல்கள் எழுதி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .சகல கலா வல்லவராக உள்ளார்கள் .

முழு மனிதன் ஆவதற்கு ஒரு நூலாவது எழுதி இருக்க வேண்டும் என்பது பொன்மொழி .வெ. இறையன்பு, இ.ஆ.ப. அவர்கள் 100 நூல்கள் எழுதி விட்டார்கள் .இது அளப்பரிய சாதனை .இன்னும் எழுதுவார்கள் .

அவர் எழுதும் ஒவ்வொரு நூலும் ஒன்றை ஒன்று மிஞ்சுவதாக அமைந்து விடுகின்றது .இந்த நூலிற்காக சாகித்ய அகாதெமி விருது வழங்க வேண்டும் என்பது என் ஆசை .ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு .

கொரோனா ! கவிஞர் இரா .இரவி !கொரோனா  ! கவிஞர்  இரா  .இரவி  !

கண்ணுக்குப் புலப்படாத கிருமி கொரோனா
கண்இமைக்கும் நேரத்தில் தோற்றும் கொரோனா!

காட்டுத் தீயை விட வேகமாகப் பரவுது கொரோனா
கட்டுப்பட்டு வீட்டில் இருப்பது நலம் பயக்கும் !

மின்னலை விட விரவாகப் பரவுது கொரோனா
மனிதர்கள் சிந்தித்து செயல் படுவது சிறப்பாகும் !

சீனாவை சின்னா பின்னமாகியது கொரோனா
ஜப்பானின்  கப்பலையும் விடவில்லை கொரோனா!

இத்தாலியின் இடுப்பை ஒடித்துவிட்டது கொரோனா
அமெரிக்காவை ஆட்டம் காண வைத்தது கொரோனா  !

துபாய் அரேபியா என எங்கும் பரவியது  கொரோனா
தனிமையில் இருந்து கொடிய பரவல் தடுப்போம் !

அனைத்து  நோய்களுக்கும் மருந்து கண்டவன் மனிதன்
அகிலம் அச்சப்படும் கொரானாவிற்கும் மருந்து காண்பான் !    

அதுவரை அடங்கி  ஒடுங்கி  இருப்போம் இல்லத்தில்  
அச்சம்  தவிர்த்து அடிக்கடி வெளியேற வேண்டாம் !

மனிதர்களின் உயிர் பறிக்கும் கொரோனாவின் உயிரை 
மனிதன் பறிக்க விரைவில் மருந்து காண்பான் உறுதி !

ஒரேயடியாக கொரோனாவை ஒழிப்பது உறுதி நம்புங்கள் !
ஒத்துழைப்பை நல்கி அனைவரும் உதவிடுவோம் !

CORONA COVID 19

CORONA COVID 19

வியாழன், 26 மார்ச், 2020

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

இயந்திரமாக இயங்கியவர்கள்
இன்று ஓய்வில்
சும்மா இருப்பது சுகம் !

பரபரப்பு இன்றி
பங்காக அமர்ந்து
பாசம் பொழிந்தனர் !

வாசிக்கப்பட்டன
வாசிக்காத நூல்கள்
வளர்ந்தது பொதுஅறிவு !

வெளியே சென்றால்
வந்துவிடும் தொற்று
இருப்போம் இல்லத்திலேயே !

சுத்தம் சுகம் தரும்
சும்மா இருப்பதும்
சுகம்தான் !

முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் உரை 2.இராமகாதையில் போர்க்கலை ! முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் உரை . 2

கொரோனாவின் தீமையும் நன்மையும் ! கவிஞர் இரா .இரவி !
கொரோனாவின்   தீமையும்   நன்மையும்  ! கவிஞர் இரா .இரவி !

சுறுப்பானவர்களையும் சோம்பேறியாக்கியது
சும்மா இருக்கும்படி இல்லத்தில் முடக்கியது !

நேரம் போதவில்லை  என்று சொன்னவர்களை
நேரம் போகவில்லை என்று சொல்ல வைத்தது !

மேல்நாட்டு பாணியில்  கை குலுக்கியவர்களை
நம்நாட்டு பாணியில் வணங்கிட வைத்தது !

கை கால் கழுவாமல் உண்ணும் பலரையும்
கை கால் கழுவிய பின் உண்ண வைத்தது !

சுகாதாரத்தின் பயனை உணர்த்தியது
சுத்தம் சுகம் தரும் அறிவுறுத்தியது !

மரணபயத்தை எல்லோருக்கும் காட்டியது
மனதில் பயத்தை எல்லோருக்கும் விதைத்தது !  

உணவின் அருமையை உணர்த்தியது
உழவனின் பெருமையை உணர்த்தியது !

பணத்தை உண்ண முடியாது காட்டியது
பணக்காரனையும் வீட்டில் முடக்கியது !

கோயில்கள்  அனைத்தும் இழுத்து மூடப்பட்டன
கடவுள்களுக்கும் வழங்கப்பட்டது  கட்டாய ஓய்வு !

பள்ளிவாசல்கள் யாவும் இழுத்து மூடப்பட்டன
பாடல் ஒலிப்பும் உடன் நிறுத்தப்பட்டன !

தேவாலயங்கள் யாவும் இழுத்து மூடப்பட்டன
தேவ பாடல்களும் உடன் நிறுத்தப்பட்டன !

குடும்ப உறுப்பினர்கள் யாவரும்  பேசிக் கொண்டனர்
குடுமபத்தில் பாசம் நேசதிற்கு நேரம் கிடைத்தன !

தொலைக்காட்சிக்கு சண்டையும் நடந்தன
தொல்லைக்காட்சியும் நேரம் கடத்தியது !

அலைபேசியில் தேய்த்து ரேகை அழிந்தது
அலைபேசியும் போரடிக்க ஆரம்பித்தது !

தூரத்தில் இருக்கும் உறவுகள் நினைவில் வந்து
தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டனர் !

புத்தகத் திருவிழாவில் வாங்கிய நூல்கள் எல்லாம்
புதிதாகவே இருந்தன பிரித்துப்  படித்தனர் !

உணவகத்தை நம்பி இருந்தவர்கள் எல்லாம்
உணவு கிடைக்காமல்  திண்டாடி வருகின்றனர் !

தினக்கூலி பெற்றவர்கள் எல்லாம் வருமானமின்றி
தினமும் வாழ்க்கையோடு போராடி வருகின்றனர் !

வெவ்வேறு ஊர்களில் வேலை பார்த்த ஜோடிகள்
ஒரே  ஊரில் சிலர் இணைத்து விட்டனர் !

வேறு சில ஜோடிகள்  சேர முடியாமல்
வெவ்வேறு ஊர்களில் வருந்தி வருகின்றனர் !

உயிர் வாழ வேண்டுமென்ற ஆசை இருந்தால்
உன் இல்லம் விட்டு வராதே உணர்த்தியது !

உலகில் பல உயிர்களை பலி வாங்கி
உயிரின் மதிப்பை உணர்த்தி விட்டது !


நன்றி.முரசொலி

நன்றி.முரசொலி.


கொரோனா ! கவிஞர் இரா .இரவி !கொரோனா ! கவிஞர் இரா .இரவி !

குலை நடுங்க வைக்கும் கொடிய நோய்
குவலயத்தை ஆட்டிப் படைக்கும் நோய் !

சீனாவில் தொடங்கி இத்தாலியைத் தொட்டு
சிங்கார சென்னைக்கும் வந்து விட்டது !

வழிபாட்டுத் தலங்களை மூட வைத்தது
வெளியில் நடமாட முடியாமல் முடக்கியது !

முதலில் ஒரு நாள் ஊரடங்கு என்றார்கள்
முதல் நாள் முடிந்ததும் ஏழு நாட்கள் என்றனர் !

அடுத்த நாளில் தலைமை அமைச்சர் பேசினார்
இரண்டாம் நாளில் இருபத்தி ஒரு நாள் என்றனர் !

அதிர்ச்சியில் மக்கள் ஆனாலும் கடைப்பித்தனர்
அகிலம் முழுவதும் அச்சத்தில் ஆழ்த்தியது !

இத்தாலியில் குடும்பத்தையே எரித்ததாக
இங்கே செய்தி காட்டுது தீயாகப் பரவியது !

தனித்திரு விழித்திரு கூட்டம் கூடாதே
தனிமை இனிமை என்றே நாள்களை நகர்த்து  !

கரோனா! கவிஞர் இரா .இரவி !
கரோனா!   கவிஞர் இரா .இரவி !

தனித்திரு ! விழித்திரு ! வள்ளலார் சொல்லியதை
தனித்திருந்து விழித்திருந்து விரட்டிடுவோம் !

வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பது
வேதனை என்றாலும் சோதனைக் காலம் இது !

பொறுத்து இருந்தால் நலமாய் வாழலாம்
பொறுமை மிகவும் அவசியம் பொறுத்திடுங்கள் !

இத்தாலி நிலைமை இந்தியாவிற்கு வராமலிருக்க
இந்தியர் அனைவரும் ஊரடங்கிற்கு ஒத்துழைப்போம் !

வந்தபின் வருந்துவதை விட வருமுன் காப்பு சிறப்பு
வாசிப்பை நேசித்து புத்தகம் வாசித்து புத்துணர்வு பெறுங்கள் !

வதந்திகளை நம்ப வேண்டாம் பரப்ப வேண்டாம்
வரவிடாமல் ஒழித்துக் கட்டுவோம் கரோனாவை !   

--

.

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அலட்சியம் செய்தால்
அல்லல்பட நேரிடும்
கொடியது கொரோனா !

வல்லரசு அமெரிக்காவே
ஆடிப் போய் விட்டது
நம் நிலை யோசி !

இத்தாலி நிலைமை
இந்தியாவிற்கு வேண்டாம்
ஊரடங்கி உயிர் காப்போம் !

கொள்ளை நோய் இது
கொன்றுவிடும் கொத்தாக
அடங்கி இரு முடங்கி  இரு !

கைகளை கழுவு
தள்ளியே நில்
அண்டாது கொரோனா !

புதன், 25 மார்ச், 2020

Irai Anbu I.A.S Motivational Speech | வெ. இறையன்பு I.A.S. உரை | 43 Chenn...

ஊரடங்கு உங்களுக்குதான் மனிதர்களே எங்களுக்கு இல்லை இப்படிக்கு கொரோனா தாக்காத குருவிகள். கவிஞர் இரா.இரவி.
ஊரடங்கு உங்களுக்குதான் மனிதர்களே
எங்களுக்கு இல்லை
இப்படிக்கு கொரோனா தாக்காத குருவிகள்.
கவிஞர் இரா.இரவி.

முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் உரை.

கோடையில் குளிர்நீர் குளியல் போடும் வண்ணக்குருவி. கவிஞர் இரா.இரவி.
கோடையில் குளிர்நீர்
குளியல் போடும்
வண்ணக்குருவி.
கவிஞர் இரா.இரவி.

செவ்வாய், 24 மார்ச், 2020

மதுரை டைரி யு டியுப் சேனலுக்கு கவிஞர் இரா .இரவி நேர்முகம் இனிய நண்பர் ஒளிப்பதிவாளர் வெ.மோகன் கை வண்ணம்

கவிஞர் இரா .இரவி கவியரங்கில் கவிதை .மற்றும் நேர்முகம் ,உரைகள் பார்த்து மகிழுங்கள்

கவிஞர் இரா .இரவி கவியரங்கில் கவிதை  .மற்றும் நேர்முகம் ,உரைகள் பார்த்து மகிழுங்கள்.

கவிஞர் இரா .இரவி கவியரங்கில் கவிதை  . 


 


பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம்


http://www.tamilauthors.com/video%20link/eraeravi-interview01.html

http://www.tamilauthors.com/video%20link/eraeravi-interview02.html

http://www.tamilauthors.com/video%20link/eraeravi-interview03.html


கலைஞர் தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம்

http://www.tamilauthors.com/video%20link/Eraraviinterview01.html

http://www.tamilauthors.com/video%20link/Eraraviinterview02.html

http://www.tamilauthors.com/video%20link/Eraraviinterview03.html

ஜெயா 
தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம்
.

-- http://www.tamilauthors.com/video%20link/kaalimalar-01.html

http://www.tamilauthors.com/video%20link/kaalimalar-02.html


பட்டிமன்றத்தில் கவிஞர் இரா .இரவி உரை

http://www.tamilauthors.com/video%20link/eraravispeech.html
--கொரோனா வைரஸில் PhD செய்த Dr.பவித்ரா | Special Interview | Tamil News | S...

ஞாயிறு, 22 மார்ச், 2020

படித்ததில் பிடித்தது !

படித்ததில் பிடித்தது !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


படத்திற்கு ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

உணர்த்தியது
துளி நீரின் அருமையை
ஹைக்கூ கவிதையின் தூதர் அணில் .

தூங்காத மதுரை தூங்கியது முடங்காத மதுரை முடங்கியது அடங்காத மதுரை அடங்கியது ! கருத்தும் ,படங்களும் கவிஞர் இரா .இரவி !

தூங்காத மதுரை தூங்கியது
முடங்காத மதுரை முடங்கியது 
அடங்காத மதுரை அடங்கியது !

கருத்தும் ,படங்களும் கவிஞர் இரா .இரவி !


நண்பர்களே தேநீர் அருந்தினீர்களா ?

நண்பர்களே தேநீர் அருந்தினீர்களா ?
பாரதப் பிரதமர் வேண்டிய வண்ணமும்,நம் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வண்ணமும் வீட்டிலிருக்கிற எல்லோர்க்கும் நன்றியும், பாராட்டுகளும் .நாடும், நாமும் நலமாக இருப்போம்.
வீட்டிலிருக்கிற கவிஞர்பெருமக்களே கவிதைச் சுவைஞர்களே ”சும்மா இருக்கவில்லை நாங்கள் ”என்றதலைப்பில் இன்று வீட்டில் என்னசெய்தீர்கள் என்பது குறித்து 24 வரிகளுக்கு மிகாமல் சுகமான ஒரு கவிதை எழுதி அனுப்புங்கள்.
சிறந்த கவிதைகளுக்குப் பரிசுகள் மட்டுமல்ல கவிதை உறவு இதழிலும் வெளியிடுவோம். இன்று இரவுக்குள் எழுதப் படுகிற கவிதைகள் மட்டுமே ஏற்கப்படும்.
.கட்செவி(வாட்ஸ் அப் )9444107879 .மின்னஞ்சல் kavithaiuravu@gmail.com க்கு அனுப்புங்கள்.
கரோனாவைத் தொற்ற விடோம்.கவிதைகளின் பற்றை விடோம்.

சும்மா இருக்கவில்லை நாங்கள் ! கவிஞர் இரா .இரவி !

சும்மா இருக்கவில்லை நாங்கள் ! கவிஞர் இரா .இரவி !

சும்மா இருப்பது சுகமல்ல கடினம் என்பதை
சும்மா சும்மா மனம் உணர்த்திச் சென்றது !

சுய  ஊரடங்கு எப்படி உள்ளது பார்ப்பத்ற்கு
சும்மா வெளியில் நடந்து வந்தேன் !

வழக்கமான கடை திறக்கவில்லை
வேறு கடை  இருக்கா தேடினேன் !

மறைவாக இயங்கியது ஒரு கடை
மனம் விரும்பிய செய்தித்தாள் கிடைத்தது !

சற்று நடந்து வந்தபோது ஒரு இடத்தில
சுவையான தேநீரும் கிடைத்தது !

உணவகங்கள் மூடி இருந்ததன
உணவுக்கு வழியின்றி சிலர் தவித்தனர் !

இல்லம் வந்து தொலைக்காட்சியில்
இனிதே அமர்ந்து பார்த்தேன் !

வெறிச்சோடியது   வெறிச்சோடியது
வரிசையாக காட்டினார்கள் வேறு செய்தி இல்லை !

கணினியில் அமர்ந்து முகநூல் வாசித்தேன்
கவிதை உறவு ஏர்வாடியாரின் அறிவிப்பு !

மனதில் தோன்றிய வரிகளை வடித்தேன் 
மீண்டும் ஒருமுறை வாசித்து அனுப்பினேன் !

ஒரு நாளே ஒரு யுகமாகக் கழிந்தது
எப்படித்தான் சிலர் சும்மா இருக்கின்றனர் ?

நீட்டிப்பு என்று தகவல் வந்தது போதும்
நீட்டிப்பு இனி வேண்டாம் தாங்காது !

சனி, 21 மார்ச், 2020

நன்றி .தினமணி நாளிதழ் 22.3.2020.

நன்றி  .தினமணி நாளிதழ் 22.3.2020.


நன்றி மாலை முரசு 21.3.2020.

நன்றி மாலை முரசு 21.3.2020.

இனிய நண்பர் பட்டிமன்றப் பேச்சாளர் நகைச்சுவை தென்றல் முத்து இளங்கோவன் - திருமதி சரஸ்வதி இணையரின் மகள் செல்வி திவ்ய பாரதி ,செல்வன் இராம கிருஷ்ண யோகேஷ் திருமண வரவேற்பு விழாவில் .

இனிய நண்பர் பட்டிமன்றப் பேச்சாளர் நகைச்சுவை தென்றல் முத்து இளங்கோவன் - திருமதி சரஸ்வதி இணையரின் மகள் செல்வி திவ்ய பாரதி ,செல்வன் இராம கிருஷ்ண  யோகேஷ் திருமண வரவேற்பு விழாவில் .
பெண்கள் தின விருது வழங்கும் விழாவில் கவிஞர் இரா .இரவி வாசித்த கவிதை .

நால்வர் காலாண்டு இதழ் வெளியீட்டு விழா !

நால்வர் காலாண்டு  இதழ்  வெளியீட்டு விழா !

கவிஞர் பேனா மனோகரன் அவர்கள் வரவேற்று நிகழ்வை  ஒருங்கிணைத்தார் .கவிஞர் மூரா  தலைமை வகித்தார் .கவிஞர் மஞ்சுளா வாழ்த்துரை வழங்கினார் .கவிஞர் இரா .இரவி ஹைக்கூ குறித்து உரை நிகழ்த்தினார் .கவிஞர் அமரன் ஏற்புரை நிகழ்த்தினார். கவிஞர் அமரன் அவர்கள் நால்வர் இதழை வெளியிட கவிஞர் இரா .இரவி பெற்றுக் கொண்டார். புலவர் ஆறுமுகம் நன்றி கூறினார் .

படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம்  .

உலகப் புகழ் இணையத்தில் கவிஞர் இரா .இரவி எழுதிய விரிவான நூல் மதிப்புரைகள் படித்து மகிழுங்கள்

http://www.tamilauthors.com/index.html    உலகப் புகழ்  இணையத்தில் கவிஞர் இரா .இரவி எழுதிய விரிவான நூல் மதிப்புரைகள்  படித்து மக...