சனி, 28 பிப்ரவரி, 2015

அரிய படம் அறிக . நன்றி இனிய நண்பர் தேசியமணி !

அரிய படம் அறிக . நன்றி இனிய நண்பர் தேசியமணி !

திருப்பரங்குன்றம் தங்கத்தேர்

திருப்பரங்குன்றம் தங்கத்தேர்.

சிவயோகம் மலர் ஆசிரியர் லண்டன் கலாநிதி பொன் பாலசுந்தரம் அவர்கள் திருக்குறள் செம்மல் மணிமொழியனார் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு தனது நூலையும் வாழ்த்துக் கவிதையும் அனுப்பி உள்ளார் .

சிவயோகம் மலர் ஆசிரியர் லண்டன் கலாநிதி பொன் பாலசுந்தரம் அவர்கள் திருக்குறள் செம்மல் மணிமொழியனார் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு தனது நூலையும் வாழ்த்துக் கவிதையும் அனுப்பி உள்ளார் .
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரை தெப்பக்குளம் மற்றும் வானுயர்ந்த கோபுரங்கள் .அலைபேசி வழி எடுத்த படங்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரை தெப்பக்குளம் மற்றும் வானுயர்ந்த கோபுரங்கள் .அலைபேசி வழி எடுத்த படங்கள் .திரு. கிருபாகரன் லண்டனிலிருந்து மதுரை வந்த போது பொன்னாடைப் போர்த்தி வரவேற்ற போது எடுத்த படங்கள் .

சிவயோகம் மலர் ஆசிரியர் லண்டன் கலாநிதி பொன் பாலசுந்தரம் அவர்களின் மருமகன் தணிக்கையாளர் திரு. கிருபாகரன் லண்டனிலிருந்து  மதுரை வந்த போது பொன்னாடைப் போர்த்தி வரவேற்ற போது எடுத்த படங்கள் .


வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

மதுரை மாநகராட்சியின் பயனுள்ள அறிவிப்பு !

மதுரை மாநகராட்சியின் பயனுள்ள அறிவிப்பு !

இனிய நண்பர் தேசிய மணி தந்த அழைப்பிதழ்

இனிய  நண்பர் தேசிய மணி தந்த அழைப்பிதழ்


‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. புரிந்துரை : கவியருவி; கோவை கோகுலன்,

‘புத்தகம் போற்றுதும்’

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
புரிந்துரை :
கவியருவி;  கோவை கோகுலன்,
செயலர் , வசந்தவாசல் கவிமன்றம்
9/68, பெரியார் நகர், நேரு நகர் கிழக்கு, விமான நிலையம் அஞ்சல், கோவை. அலைபேசி 98422038022
மின்னஞ்சல்  kovaivasanthavasal@rocketmail.com 
-------------------------------------

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை-600 17. 
பக்கங்கள் : 224, விலை : ரூ. 150


பாராட்டுக்குரியவர்கள் மற்றவர்களை பாராட்டுதல் என்பது தமிழரின் பண்பட்ட நாகரீகம்.  நஞ்சை நில குணம் கொண்ட அந்த நல்லோர் வரிசையில், பாராட்டுக்குரிய பண்பாளர், நண்பர் இரா. இரவியும் ஒருவர்.  கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், உரைவீச்சாளர், இணையதள இயக்குனர் எனப் பன்முகம் கொண்ட இவரின் நற்குணங்களில் ஒன்று தான் தன்னைப் போன்ற, தன்னிலும் மூத்து முதிர்ந்த படைப்பாளர்களை, பண்பாளர்களை பணிதலும், பாராட்டுதலும் கொண்ட நற்குணமாகும். அதற்கான சரியான சான்று தான் இவரது ‘புத்தகம் போற்றுதும்’ என்கிற நூற்புதையல்.

தமிழ் இலக்கியப் புலத்தில், கவிப்புலத்தில் தன்னைத் தக்க வைத்துக் கொண்டதோடு தனது இலக்கிய முன்னோர்களையும், எழுத்துலக முன்னோடிகளையும் முன்னோர் உழவாக்கி, அவர்களது படைப்புகளை பாங்குற அறிந்து, பயனுறப் புரிந்து அதனால் விளைந்த நல்லுணர்வுச் செய்திகளை நாட்டோர்க்களித்து நலம் கண்டிருக்கும் திரு. இரவி அவர்களின் இந்த ‘புத்தகம் போற்றுதும்’ என்கிற புரிந்துணர்வு நூலில் அவர் சொல்லியிருப்பதை விட சொல்லாமல் நமக்கு உணர்த்தியிருக்கும் புலப்பாடுகளே அதிகம்.

இந்நூலில் ஒரு தனிச்சுவையை நான் காண்கிறேன்.  சான்றோர் பெருமக்களின் கட்டுரைகள் பலவற்றை தனது நூலின் ஆய்வுக்களமாக்கிக் கொண்டு தன் நோக்கில் பயணிக்கும் இவர், அவற்றில் பெரிதாக எடுத்துக் கொண்டது என்னவென்றால், அக்கட்டுரையாளர்கள் தங்களது படைப்புகளில், மற்றவர்களைப்பற்றி குறிப்பிட்டுள்ள நன்றிக்குரிய நற்குறிப்புகளைத் தான்.  அவற்றை எல்லாம் இவர் கூர்ந்தளித்து இந்நூலில் கட்டுரையாளர்களோடு அவர்கள் காட்டியுள்ள நற்பேராளர்களையும் அவர்களோடு இவருக்கிருந்த தொடர்புகளையும் இந்நூலில் குறிப்பிட்டு தனது நன்றியறிதலை அவர்களுக்குமாக சேர்த்தளித்தது இவரது நற்பண்பை நடுகல்லாக நிலைக்க வைத்திருக்கிறது.

எக்காலத்துக்கும் பொருந்தி வரும் விருந்தாக பல சான்றோர்களால் படைக்கப்பட்டிருக்கும் இந்த பொற்புதினங்களை, தனது நூலறிவால் நுகர்ந்து நுண்ணறிவால் தெளிந்து இனி எக்காலத்துக்கும் பொருந்தும் அருமருந்தாக தமிழ் விருந்தாக்கி இந்த நூலை இவர் தந்திருப்பது தனிச்சிறப்பு.  வாசகர்கள் இந்நூலைப் படித்து முடித்தவுடன் மலைஅளவு மகிழ்வுச் சூழலில் திளைத்தவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வைத்திருக்கும் எழுத்துவண்ணம் இவருக்கு கைவண்ணமாகி விடுகிறது.

நல்லோர்களை, நல்லனவற்றை எங்கிருந்தாலும், எவரிடமிருந்து வரினும் அவற்றையும், அவர்களையும் மனமுவந்து பாராட்டுகின்ற பண்பு அசாதாரணமானதாகும்.  இவரது மற்ற நூல்களிலிருந்து இந்நூல் மாறுபட்டு, தனிக்கொடி ஏந்தி, தனிப்படை திரம், தரணியில் தமிழ்வலம் வரவேண்டிய தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளது பாராட்டுக்குரியதாகும்.

எவரையும் ஏகடியம் செய்யாமல், எவரிடத்திலும் குறைகளைத் தேடாமல், நல்ல நிகழ்வுகளையும், அவர்கள் நிறைவுகளையும் தேடிப்பிடித்து சிலாகிட்டதில் திரு. இரவியவர் எப்போதும் முன்னோடியாக, முதல்வராக இருப்பவர் என்பதை நிரூபணம் செய்கிறது இந்நூல்.  படைப்பாளர்கள் அனைவரும் இவ்வழியைப் பற்றினால் எழுத்துலக ஏற்றங்கள் விரைவில் சாத்தியமாகி விடும்.  இவரின் இம்முயற்ச்சி தன்னலமற்றது.  தகை சான்றது.  நாளை எழுத்துலகம் இவரிடமிருந்து நிறைய எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
நன்றியும் வாழ்த்துகளும்.மனம் நிறை மகிழ்வுடன்

கோவை கோகுலன்
19-02-2015
கோவை
*****

தானத்தில் சிறந்தது எது ? நிதானமா ? கண் தானமா ? மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் நிறுவனர் அகவிழி பார்வையற்றோர் விடுதி ! நன்றி உதவிக்க்கரம் மாத இதழ் !

தானத்தில் சிறந்தது எது ? நிதானமா ? கண் தானமா ?
மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் நிறுவனர் அகவிழி    பார்வையற்றோர் விடுதி !
நன்றி உதவிக்க்கரம் மாத இதழ் !

அஞ்சலில் வந்த அழைப்பிதழ் ! வேண்டுகோள் ! அடுத்த ஆண்டு அழைப்பிதழ் தமிழில் இருக்கட்டும் .விழா சிறக்க வாழ்த்துக்கள்

அஞ்சலில் வந்த அழைப்பிதழ் ! வேண்டுகோள் ! அடுத்த ஆண்டு அழைப்பிதழ் தமிழில் இருக்கட்டும் .விழா சிறக்க வாழ்த்துக்கள்.


மாமனிதர் அப்துல கலாமின் அறிவியல் ஆலோசகர் திரு .பொன்ராஜ் அவர்கள் மதுரை வந்த போது வரவேற்ற போது எடுத்த படங்கள்

மாமனிதர் அப்துல கலாமின் அறிவியல் ஆலோசகர் திரு .பொன்ராஜ் அவர்கள் மதுரை வந்த போது வரவேற்ற போது எடுத்த படங்கள் 


நேரில் தந்த அழைப்பிதழ் ! வேண்டுகோள் ! அடுத்த ஆண்டு அழைப்பிதழ் தமிழில் இருக்கட்டும் .விழா சிறக்க வாழ்த்துக்கள் .

நேரில் தந்த அழைப்பிதழ் ! வேண்டுகோள் ! அடுத்த ஆண்டு அழைப்பிதழ் தமிழில் இருக்கட்டும் .விழா சிறக்க வாழ்த்துக்கள் .

காது வளர்த்த காதலி ! நூல் ஆசிரியர் :ஞா. தங்கமாரிமுத்து ! நூல் விமர்சனம்.கவிஞர் இரா. இரவி !

காது வளர்த்த காதலி !


நூல் ஆசிரியர் :ஞா. தங்கமாரிமுத்து !

நூல் விமர்சனம்.கவிஞர் இரா. இரவி !

கந்தகப்பூக்கள் பதிப்பகம், 120, குட்டியணைஞ்சான் தெரு, சிவகாசி-626 123.  விலை : 
ரூ. 60.  sivakasi@gmail.com

*****
      காது வளர்த்த காதலி நூலின் தலைப்பே மிக வித்தியாசமாக கிராமத்துக் கிழிவியை நினைவூட்டுகின்றது. நூலின் தலைப்பிலான கவிதை, கிராமத்து கிழவியை மனக்கண் முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றது. நூலின் பின் அட்டையில் கவிதை வரிகள் உள்ளன.

      நூலாசிரியர் கவிஞர் ஞா. தங்கமாரிமுத்து அவர்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவராக இருக்க வேண்டும். கிராமத்துக் கிழவியை கிராமிய மொழியிலேயே மிக நுட்பமாக வடித்துள்ளார் பாராட்டுக்கள்.  பதிப்பாளர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களின் அணிந்துரை மிக நன்று.  ‘காடு செல்லும் வரை வேண்டும் என்று தொடங்கி ‘காதல் வரை தலைப்புகள் இட்டு 25 கவிதைகள் உள்ளன.

      தாத்தா, பாட்டி பற்றி கவிதைகள் வடித்து நூல் படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் தாத்தா, பாட்டியை நினைவூட்டி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் கவிஞர் தங்கமாரிமுத்து அவர்கள்.  கவிதை மாரி பொழிந்து உள்ளார்.  கவிதையில் நந்தவனம் அமைத்துள்ளார். 

      விண்ணில் ஒரு விசாரணை !
      என் பாட்டனே! எப்படி இருக்கிறாய்?
      உன் 
   கம்பீரக் குரல் கேட்க 
   மரணித்துப் போவேன்
      எத்தனை முறை வேண்டுமானாலும்
      திமிராய் சிரித்திருக்கிறேன் 
   இவன்
      என் பாட்டனென்று
      நான் சிலிர்க்கவும் 
   சிந்திக்கவும் 
   விதை நீ தானே
      யார் அங்கே 
   பாரதியா? 
   பார் என் 
   பட்டிக்காட்டு பாட்டனை
      கோகிலாபுரத்து கோமகனை!

      எனக்கும் என் தாத்த செல்லையா அவர்கள் தான் விதையாக இருந்தார். மலரும் நினைவை மலர்ப்பித்தது கவிதை. 
      நூலின் தலைப்பில் உள்ள கவிதை நூலிற்கு மகுடமாக இருந்து கவி ஒளி வீசி அம்மம்மாவை நினைவூட்டுகின்றது.

      காது வளர்த்த காதலி!

      காலமெல்லாம் 
   என்னைக் காதலித்த 
   என் 
   காது வளர்த்த
      காதலி 
   சோர்ந்து வருவோருக்கு 
   சோறு போட்ட
      அட்சய பாத்திரம்! 
   பட்டினியோடு போராடிய
      என் பாட்டனின் 
   பட்டத்து ராணி
      கருவாட்டுக் குழம்பு வச்சி! 
   காதலை சொல்லும்
      காவியம் அறியாத கருவாச்சி.

      கவிதையை கிராமிய மொழியிலேயே எழுதி கிராமத்தை நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் காந்தியடிகள்.  ஆனால் இன்று கிராமங்களில் வாழ முடிகிறதா? என்பது கேள்விக்குறியாகி, உலகமயம் கிராமத்தை விழுங்கி வருகின்றது.

      முதியவர்களை மதிக்க வேண்டும் என்று இன்றைய இளைய சமுதாயத்திற்கு எடுத்துரைக்கும் விதமாக வடித்த கவிதை நன்று.

      மூலவர் இல்லாத கோயில்!

      பட்ட பாட்டிற்கு 
   பட்டாடை வேண்டாம்
      பரிவு காட்டுங்கள் 
   போதும்!
      உங்கள் வளர்ச்சிக்காக 
   தங்களை உதிர்த்தவர்களை
      உதாசீனப் படுத்தாதீர்கள்!
      சீதனமாய காத்திடுங்கள்!

      சித்தர்கள் பாடல் போல, சித்தாந்தம் கூறுவது போல, வாழ்வியல் தத்துவம் விளக்குவது போல வடித்த கவிதை மிக நன்று.

      சுழற்சி!

      புழுவிற்கு ஆசைப்பட்டது மீன் 
   மீனுக்கு ஆசைப்பட்டான் மனிதன்
      மீனுக்குச் சிக்கியது புழு 
   மனிதனுக்குச் சிக்கியது மீன்!
      புழுவிற்கு? ஆனாலும் காத்திருக்கிறது புழு
      மனிதன் மண்ணுக்கு வரும் வரை!
      எதுவும் எதையும் விட 
   உயர்ந்ததும் இல்லை
      தாழ்ந்ததும் இல்லை!

      எல்லோரும் சமம் என்பதையும் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதையும் நன்கு உணர்த்தி உள்ளார்.  புழுவை வைத்து மீன் பிடிக்கும் மனிதனே, நீயும் ஒரு நாள் புழுவிற்கு இரையாவாய் என்பதை உணர்த்தியது சிறப்பு. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணர்த்தியது.

      வாழ்வின் நிலையாமையை கவிதை வரிகள் மூலம் மிக நுட்பமாக உணர்த்தி உள்ளார், பாருங்கள்.

      மரணம்!

      நிரந்தரமில்லாத உலகில் 
 நிரந்தரமானது
      நினைவுகள் மட்டுமே!
      உலகம் 
 சுற்றுலா மையம் 
 எல்லோரும் பயணிகள்
      திரும்புவது நிச்சயம் 
 தேதி மட்டும் ரகசியம்!

வாழ்வில் மகிழ்ச்சியோடு இருங்கள். கவலைகள் காணாமல் போகும்.  எப்போதும் முகத்தில் புன்னகை  என்ற நகையை அணிந்தே இருங்கள்.  வாழ்க்கை வசப்படும் என்கிறார்.

      புன்னகை!

      புன்னகைப்பீர்!
      எதிர்பார்ப்பு இல்லாது 
   புன்னகை செய்தால்
      உலகில் உங்களை விட 
   அழகானவர் இல்லை
      ஐந்து நிமிடம் புன்னகையால் 
   அழகாகிறது
      புகைப்படம் 
   ஆயுள் முழுக்கப் புன்னகைத்தால்
      அழகாகும் வாழ்க்கைப் படம்.

      காதலர்களுக்கு பிரிவு என்பது சோகம் தரும் நிகழ்வு.  அந்த சோகத்தையும் சுகமாகப் பார்க்கும் பார்வை நன்று.
      பிரிவு !

      கலைந்து செல்லும் மேகம் 
   தொலைந்து போவதில்லை
      பிரிந்து செல்லும் அன்பு 
   மறந்து செல்வதில்லை
      பிரிவு 
   சோகம் அல்ல 
   சுகம்.
      இமைகள் பிரிந்தால் தான் 
   உலகை ரசிக்க முடியும்
      பிரிவு 
   உறவின் முடிவல்ல 
   நினைவின் ஆரம்பம் !

      எதையும் நேர்மறையாக உடன்பாட்டுச் சிந்தனையுடன் பார்க்கும் பார்வை நன்று. முத்தாய்ப்பான முடிப்பு மிக நன்று.
      தன்னம்பிக்கை விதைக்கும் விதமான கவிதைகள் உள்ளன.  பாராட்டுக்கள்.  படிக்கும் வாசகர்களுக்கு தெம்பு தரும் விதமாகவே படைப்புகள் இருக்க வேண்டும்.

      நம்பிக்கை!
      கடைசியில் எல்லாம் 
   சரியாகும் என் நம்பு
      சரியாகவில்லையெனில் 
   கடைசி இல்லை
      இது என்று நம்பு!
      காலில் ஈரம் படாமல் 
   கடலை கடந்தவர்களுண்டு
      கண்ணில் ஈரம் படாமல் 
   வாழ்வைக் கடந்தவரில்லை
      நம்பிக்கை தான் வாழ்க்கை!

      மாற்றுத் திறனாளிகள் அவர்களை சிலர் உற்றுநோக்கும் போது தான் அவர்களுக்கு வலிக்கிறது என்ற உண்மையை நன்கு உணர்த்தி உள்ளார்.

      ஊனம் எங்கே?

      வலிப்பதில்லை 
   ஊன்றி நடக்கும் போது
      ஆனால் வலிக்கிறது 
   சிலர் உற்றுப் பார்க்கும் போது
      தன்னலத்தோடு வாழ்வது மனிதம் அன்று
      பொதுநலத்தோடு வாழ்வதே மனிதம் !

என்பதை உணர்த்தும் கவிதை மிக நன்று.

      தனக்காய் மட்டும் 
   வாழ்ந்து மடியும் மனிதா!
      பிறருக்காய் வாழ்வதும்
   பிறருக்காய் தருவதும் மட்டுமே
      மனிதம்!

நூல் ஆசிரியர் :ஞா. தங்கமாரிமுத்து அவர்களுக்கு பாராட்டுக்கள்.
மத்தாப்பூ நகராம் சிவகாசியில் இருந்து   மத்தாப்பூ  கவிதைகள் வந்து கொண்டே இருக்கட்டும் .வாழ்த்துக்கள் .

மதுரையில் அந்தி மாலை சூரியன் அலைபேசி வழி எடுத்த படங்கள்

மதுரையில் அந்தி மாலை சூரியன் அலைபேசி வழி எடுத்த படங்கள் 

புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி .நூல் மதிப்புரை கவியருவி கோவை கோகுலன் செயலர் கோவை வசந்த வாசல் கவி மன்றம்

புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி .நூல் மதிப்புரை கவியருவி கோவை கோகுலன் செயலர் கோவை வசந்த வாசல் கவி மன்றம் 

வியாழன், 26 பிப்ரவரி, 2015

தன்னைத் தானே எடுத்த படம்

தன்னைத்  தானே எடுத்த படம்

கண்ணாடியிலும் நானே !

கண்ணாடியிலும் நானே !
படித்ததில் பிடித்தது ! மாமனிதர் மாயாண்டி பாரதி அவர்களைப் பற்றி இனிய நண்பர் கவிஞர் ஸ்ரீ ராசா எழுதியது . நன்றி தி இந்து தமிழ் நாளிதழ் !

படித்ததில் பிடித்தது !
மாமனிதர் மாயாண்டி பாரதி அவர்களைப்  பற்றி இனிய நண்பர் கவிஞர்  ஸ்ரீ ராசா எழுதியது . நன்றி தி இந்து தமிழ் நாளிதழ் !

பறத்தலுக்கான பாடல்! நூல் ஆசிரியர் : கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

பறத்தலுக்கான பாடல்!


நூல் ஆசிரியர் : கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !கந்தகப்பூக்கள் பதிப்பகம், 120, குட்டியணைஞ்சான் தெரு, சிவகாசி-626 123.  விலை : ரூ. 80.  sivakasi@gmail.com

*****
       நூலாசிரியர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி ஓய்வின்றி எழுதி வரும் படைப்பாளி. 
10 நூல்களின் ஆசிரியர்.  குட்டி சப்பான் என்று சொல்லும் சிவகாசி என்ற கந்தக பூமியின் கந்தகக் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி.  மனதில் பட்டதை பட்டென கவிதையாக வடிக்கும் ஆற்றல் மிக்கவர். மதுரை, சென்னை எங்கெல்லாம் இலக்கிய விழாக்கள் நடந்தாலும் தேடிச்சென்று ரசித்து மகிழும் தேனீ.  இலக்கிய விழாக்களில் சந்தித்தும் மகிழும் நண்பர்.

       மகாபாரத்தை நன்கு படித்து உள்வாங்கி எள்ளல் சுவையுடன் மாற்றி யோசித்து வடித்த கவிதை மிக நன்று. இன்றைய புதுமைப்பெண்ணாக பாஞ்சாலியை சித்தரித்தது சிறப்பு.

கிருஷ்ணன் காத்திருக்கிறான் !
       கரங்களை விரித்து 
 அபயம் அபயம் என 
 அலற வேண்டியளோ
       நிமிர்ந்த நன்னடை போட்டு 
 நேர் கொண்ட பார்வையோடு
       பீமனின் கதையைப் பிடுங்கி
 துச்சாதனன் தலையை ...
       அர்ச்சுனன் காண்டீபம் எடுத்து 
 துரியோதனன் நெஞ்சை
       ஒளிய ஒடிய சகுனிக்கு 
 ஏதுமறியாது கிடந்த பகடைகளை
       துணிவற்ற சபையோருக்கு 
 காரி உமிழ்ந்த எச்சிலை
       பரிசாக்கிச் சிரித்தாள் 
 அச்சிரிப்பு எத்திசையும் விரிந்து
       பாண்டவர் சங்கை நெரிக்க 
 அபயம் அபயம் என்ற
       அவர்களின் அலறல் ...

இப்படி வித்தியாசமாக சிந்தித்து புதிய மகாபாரதத்தை கவிதையில் வடித்த நூலாசிரியர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களுக்கு பாராட்டுக்கள்.  மாற்றி யோசித்தன் விளைவே இக்கவிதை.

       சமூகத்தில் நடக்கும் சீர்கேட்டை சுட்டிக்காட்டி கவிஞர்கள் கவிதைகள் வடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  ஆனால் சீர்கேடுகள் சீராகவில்லை என்ற வருத்தத்தை மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாக வடித்தது சிறப்பு.

       தொடர்களுக்குள் அவள்களும்
       பார்களுக்குள் அவன்களும்
       கவிதைகளுக்குள் நாங்களும்!

சதுரங்கம் என்ற விளையாட்டை கவிதையால் வடித்து நம் கண் முன்னே சதுரங்க விளையாட்டை விளையாடி காட்டியது சிறப்பு.
  
         சதுரங்க விளையாட்டில் சாதித்தவர்களும் உண்டு.  சரிந்தவர்களும் உண்டு.  சரித்திரம் உண்டு.

    சதுரங்கம் !
       கருப்பு வெள்ளை கட்டம்! – இதில்
       ஏகப்பட்ட சட்டம் – இது
       ராசா காலத்து ஆட்டம் – இதில்
       ராசாவை காக்குறதே ஆட்டம்!
       முன்னால் போகும் காலாட்படை!
       நேரப் போகும் யானைப்படை!
       குறுக்கப் பாயும் மந்திரிப்படை!
       எதையும் தாவும் குதிரைப்படை!
       கட்டுப்பாடு எதுவும் இல்லாம
       எட்டுதிக்கும் பறந்தடிக்கும் ராணி – இது
       அறிவு வளர்க்கும் ஏணி! – இதில்
       மூளைக்குத்தான் வேலை!

       இக்கவிதையைப் படித்தால் போதும் சதுரங்க விளையாட்டு பற்றி அறியாதவர்களும் அறிந்து கொள்வார்கள். வித்தியாசமான கவிதை வடித்து வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி.  சமூகத்தின் மீது பற்றுக் கொண்ட காரணத்தால் உரக்க சிந்தித்து சீரான கவிதைகளை வடித்துள்ளார், பாராட்டுக்கள்.

       மகாகவி பாரதியோடு உரையாடுவது போல வடித்த கவிதை நன்று.தமிங்கிலம் பேசி தமிழ்மொழியைச் சிதைத்து வருபவர்களுக்குப் புத்தி புகட்டும் கவிதை. 

       மொழி அழிந்தால் அடையாளம் அழியும்
       அடையாளம் அழிந்தால் கலாச்சாரம் அழியும்
       கலாச்சாரம் அழிந்தால் இனம் அழியும்
       ஓர் இனத்தை அழிக்க
       அணுகுண்டுகள் தேவையில்லை...
       அதன் மொழியை அழித்தாலே போதுமெனும்
       அடிப்படை கூடவா தெரியவில்லை?

       இப்படி பல கேள்விகள் பாரதி கேட்பது போலவே கேட்டு சிந்திக்க வைத்து தாய்மொழிப்பற்றை, தமிழ்மொழிப்பற்றை விதைத்து உள்ளார்.  பாராட்டுக்கள்.  தமிழின் பெருமை தமிழன் உணர்வில்லை என்பது தான் வேதனை.

       பஞ்சபூதக் கவியரங்கில் பாடிய கவிதையை பஞ்சபூதங்கள் பற்றி கவிதையில் வடித்தது சிறப்பு. வித்தியாசமான நடை, பதச்சோறாக ஒன்று மட்டும்.

       நெருப்பே – நீ 
 என் அடிவயிற்றில் 
 அடங்கிக் கிடக்கிறாய்
  எரிமலையாய் 
 வெடித்துச் சிதறினாலும் 
 என்னுள்ளேயே
   உன் நெருப்பாறு.

       தமிழகத்தில் திரைப்பட மோகம் ஒழியவில்லை.  கட் அவுட்டிற்கு மாலை இடுவது,  அபிசேகம் செய்வது தோரணம் கட்டுவது, நடிகைக்கு கோயில் கட்டுவது என்று கோமாளித்தனம் குறைந்தபாடில்லை.  தமிழகத்தின் நிலையை படம்பிடித்துக் காட்டும் விதமாக வடித்த கவிதை நன்று.  பகுத்தறிவை உணர்த்திடும் கவிதை இது.

       சக்கரம் !
  வாழ்க்கை ஒரு வட்டம் 
 கீழ இருக்கிறவன் மேல வருவான்
  மேல இருக்கிறவன் கீழ வருவான் 
 சினிமா தத்துவங்கள்
  தரும் நம்பிக்கைகள் 
 கதாநாயகனுக்கு அல்ல
  எங்களுக்கு என்றே ... எண்ணி 
 அவர்களிடமே
  அரியணைகள் வழங்குகிறோம்! 
 அரியணைகள்
  அவர்களை வில்லன்களாக மாற்றி விடுகிறது 
 பாவம்
  அவர்கள் என்ன செய்வார்கள்!
   எங்கள் இரவுகளையும் கனவுகளையும்
   அவர்கள் காலடியில் வைத்துவிட்டு
  எப்போதும் போல் 
 சுழல்கிறது
  வாழ்க்கைச் சக்கரம்.

       நாட்டில் அமைதி நிலவவில்லை.  எங்கும் எதிலும் வன்முறை.  தினசரி செய்தித்தாளில் குண்டுவெடிப்புகள் வராத நாளே இல்லை.  உலக அமைதி கேள்விக்குறியானது.  சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வன்முறை தலைவிரித்து ஆடுகின்றது.  அவற்றை உணர்த்திடும் கவிதை நன்று, மிக நன்று.

       ஆயுதங்கள்
       விற்பனையாகிக் கொண்டே இருக்கின்றன!
       பயன்பட்டுக் கொண்டே இருக்கின்றன!
       அதற்கான தேவைகளும்
       அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன!
       ஆயுதங்கள் தேவைப்படாத உலகமாக மாற வேண்டும்.

       இப்படி சமூக அவலங்கள் நாட்டில் அதிகரிக்க அதிகரிக்க படைப்பாளிகளின் நுட்பமான நெறிப்படுத்தக் கூடிய கவிதைகளுக்கான தேவைகளும் இருக்கின்றன.  நூலாசிரியர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...