திங்கள், 30 ஜூன், 2014

முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் தினத்தந்தி நாளிதழில் ஞாயிறு தோறும் எழுதி வரும் உலகை உலுக்கிய வாசகங்கள் சிந்தனைத் தொடர் படித்து மகிழுங்கள்.


முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் தினத்தந்தி நாளிதழில் ஞாயிறு  தோறும்   எழுதி வரும் உலகை உலுக்கிய வாசகங்கள் சிந்தனைத் தொடர் படித்து மகிழுங்கள்.

http://epaper.dailythanthi.com/showxml.aspx?id=16303268&code=3321

மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்திய “ஹெலன் கெல்ல்ர்” அவர்களின் 135வது பிறந்த நாள் விழா

மூன்றாம் பார்வை அறக்கட்டளை
நடத்திய
“ஹெலன் கெல்ல்ர்” அவர்களின் 135வது பிறந்த நாள் விழா

மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்திய “ஹெலன் கெல்ல்ர்” அவர்களின் 135வது பிறந்த நாள் விழா

மூன்றாம் பார்வை அறக்கட்டளை
நடத்திய
“ஹெலன் கெல்ல்ர்” அவர்களின் 135வது பிறந்த நாள் விழா

மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்திய “ஹெலன் கெல்ல்ர்” அவர்களின் 135வது பிறந்த நாள் விழா

 மூன்றாம் பார்வை அறக்கட்டளை
நடத்திய
“ஹெலன் கெல்ல்ர்” அவர்களின் 135வது பிறந்த நாள் விழா
*****
மதுரை மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியின் சார்பில் ஹெலன் கெல்லர் அவர்களின் 135-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.  விடுதி மாணவர்களின் இன்னிசை நிகழ்ச்சியோடு விழா தொடங்கியது.

மதுரை 45-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. ஐ. அபுதாகீர் தலைமை வகித்தார். விடுதி நிறுவனர் “மனிதநேய மாமணி” எம். பழனியப்பன் எம்.ஏ. அவர்கள் வரவேற்றார். கவிஞர் இரா. இரவி, யோகா ஆசிரியர் ஆர்.எம். சேது, திரு. எம். கோபி ஆகியோர் முன்னிலை உரையாற்றினார்கள். 

ஹெலன் கெல்லர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, விடுதி மாணவர் பார்வையற்ற திரு. ஆர். கார்த்திக் மிகச்சிறப்பாக எடுத்துக்கூறியதைப் பாராட்டி, அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் திரு. சி. முத்துராஜா அவர்கள் திரு. ஆர். கார்த்திக் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்.  மேலும், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள கடையில் வாங்கிய அரிய பேனாவை திரு. பழனியப்பன் அவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

விடுதி மாணவர் ஏ. முருகசாமி, பலகுரல் நிகழ்ச்சியில், கிருபானந்த வாரியார், நடிகர்கள் வீராச்சாமி, ரகுவரன் , நடிகை காந்திமதி மற்றும் விமானம், புகைவண்டி, நாய், ஆடு, மாடு என பலகுரல்களில் பேசி அனைவரையும் கவர்ந்தார்.  விடுதி மேலாளர் என். ராஜா நன்றி கூறினார்.

-- 

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ   ( சென்றியு  ) கவிஞர் இரா .இரவி !

உணர்த்தியது
பேராசை பெரு நட்டம்
அடுக்குமாடி விபத்து !

இனியாவது நிறுத்துக
ஏரிகளில்
ஆக்கிரமிப்பை !

விண்ணில் பறந்தது
ஏவுகணையோடு
விலைவாசியும் !

பார்த்ததில் பிடித்த ஓவியங்கள் ! வரைந்த ஓவியர் திருமதி கார்த்திகா வெங்கடேஷ் !

பார்த்ததில் பிடித்த ஓவியங்கள் !
வரைந்த ஓவியர் திருமதி கார்த்திகா வெங்கடேஷ் !சனி, 28 ஜூன், 2014

வணக்கம் இன்று தினமலர் , தினமணி நாளிதழ்களில் என் படைப்புகள்

வணக்கம் இன்று தினமலர் , தினமணி நாளிதழ்களில் என் படைப்புகள்

உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இரண்டாவது சொற்பொழிவு நடைபெற்றது .

உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இரண்டாவது சொற்பொழிவு நடைபெற்றது .


மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இரண்டாவது சொற்பொழிவு நடைபெற்றது .உலகத் தமிழ்ச் சங்கத்தின் தனி அலுவலர் முனைவர் க .பசும்பொன் தலைமை வகித்தார். லண்டனில் இருந்து மதுரைக்கு வருகை தந்த பொறியாளர் ,புலவர் சிவநாதன் , ஆங்கிலேயர் திரு .கெயில் ஆகியோர் திருக்குறளின் பெருமை குறித்து சிறப்புரையாற்றினார்கள் .திருக்குறள் போல ஒரு நூல் உலகில் இல்லை .மேலாண்மை பற்றி ,ஆளுமை பற்றி திருவள்ளுவர் அளவிற்கு உலகில் வேறு எந்த அறிஞரும் சொல்ல வில்லை .மற்ற நூல்கள் தமிழுக்குப்  பெருமை .ஆனால் திருக்குறள் தமிழருக்குப்  பெருமை  என்றார்கள் .

விழாவில் காவல்துறை உதவி ஆணையர் முனைவர் கவிஞர் 
ஆ .மணிவண்ணன் ,மதுரை காமராசர் பல்கலைக் கழக மொழியியல் துறைத் தலைவர் முனைவர் ரேணுகா தேவி ,கவிஞர் இரா .இரவி, முது நிலைத் தமிழாசிரியர் ஞா . சந்திரன் , பட்டிமன்ற நடுவர் கணேசன் ,பேராசிரியர் அம்பை மணிவண்ணன் ,கவிஞர் லக்குமணசாமி  மற்றும் பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள் , கவிஞர்கள்  கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .
விழாவிற்கான ஏற்பாட்டை  உலகத் தமிழ்ச் சங்கத்தின் பணியாளர்கள்  செய்து இருந்தனர் .


ஞாபக நடவுகள் நூலாசிரியர் : கவிஞர் கூ.ரா. அம்மாசையப்பன் 97900 01558 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

ஞாபக நடவுகள்

நூலாசிரியர் :  கவிஞர் கூ.ரா. அம்மாசையப்பன் 97900 01558
நூல் விமர்சனம் : கவிஞர் இராரவி
ஓவியா பதிப்பகம், 17-16-5A, கே.கே. நகர், வத்தலக்குண்டு, விலை : ரூ. 70amsakiruba@gmail.com vathilaipraba@gmail.com
*****
       அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நன்று.  ஓவியா பதிப்பகத்தின் தரமான பதிப்பகத்தின் தரமாக பதிப்பாக வந்துள்ளது.  இனிய நண்பர் வதிலைபிரபா அவர்களின் பதிப்புரை நன்று.  முனைவர் வல்லவன் அவர்கள் வாழ்த்துரையை புதுக்கவிதையாகவே வழங்கி உள்ளார்  திரு. சு. சண்முகம் தலைமையாசிரியர் அணிந்துரை மிக நன்று.
       கவிதை என்பது படிக்கும் வாசகர்களுக்கும் எழுதிய கவிஞர் உணர்ந்த உணர்வை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.  நூலாசிரியர் கூ.ரா. அம்மாசையப்பன் அவர்கள் சமுதாயத்தை கூர்ந்து நோக்கி உணர்ந்தவற்றை உள்ளத்தில் உள்ளது கவிதை என்று மனதில் பட்டதை கவிதையாக வடித்து நூலாக்கி உள்ளார்கள். பாராட்டுக்கள்.  நூலை காணிக்கையாக்கிய விதத்திலேயே வித்தியாசப்படுகிறார்.
       “சிதறிக்கிடந்த சிந்தனைகளை சேகரிக்கத் தூண்டிய மனைவிக்கும், சேமிக்க உதவிய சிறு இடைவெளிக்கும் என்று காணிக்கையாக்கி உள்ளார்.
       கண்மாய், ஏரி, குளம் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து விட்டு இன்று குடிநீருக்கு அல்லல்பட்டு வருகிறோம்.  அதனை உணர்த்திடும் கவிதை நன்று.
       ஆக்கிரமிப்பு
       அன்று / ஊருக்குள் ஏரி / செழித்தது நீரால்
       இன்று / ஏரிக்குள் ஊர் / மிதிக்குது நீரால்
       வரைமுறை இன்றி / வளைத்துப் போட்டதால்
       தலைமுறை தாண்டியும் / தண்டிக்கப்படுகிறார்கள்
       மக்கள் / தண்ணீராலும் / தண்ணீருக்காகவும்...
       நதிநீர் இணைப்பு என்பது நல்ல திட்டம்.  மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்கள்.  புதிதாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ளவர்கள்.  நிறைவேற்ற முன் வர வேண்டும். நிறைவேற்றினால் நாடு செழிக்கும்.
       இணையட்டும் இந்தியா!
       இருப்பு பாதைகளால் / இந்தியாவை இணைத்தோம்
       தேசிய சாலைகளால் / தேசத்தை இணைத்தோம்
       தண்ணீரால் இணைத்து / எங்கள்
       கண்ணீர் துடைக்க மட்டும்
       காலதாமதம் ஆவது ஏன்?
       கண்ணீரோடு காத்திருக்கிறான் / தண்ணீரின்றி 
துடிக்கும் தமிழன்.
       காதல் கவிதை எழுதித் தான் முதலில் கவிஞன் தன் பாதையை தொடங்குகின்றான்.  நூலாசிரியர் கவிஞர் அம்மாசையப்பன் அவர்களும் காதல் கவிதைகள் எழுதி உள்ளார். 
       மனசு
       நீ கடந்து போகும் / ஒவ்வொரு முறையும்
       உடைந்து போகிறது / என் மனது / கண்ணடியாய்.

       
பெண் குழந்தை பாசம் மிக்கது நேசம் மிக்கது.
       பெண் பெற்று வளர்த்த பெற்றோர்கள் அனைவரும் உணர்ந்த ஒன்று.  ஆனாலும் சிலர் கருவிலேயே கண்டுபிடித்து பெண் என்றால் கதை முடிக்கும் அவலத்தை அரங்கேற்றி வருகின்றனர்.  அவர்களுக்கான கவிதை.
       ஸ்கேன்
       உள்ளே இருப்பதை / ஊடுருவிப் பார்க்கவா...!
       உயிரைப் பறிக்கவா....?
       காந்தியடிகள் படத்தை பணத்தில் அச்சிட்டு மரியாதை செய்தனர்.  ஆனால் மதுவை ஒழிக்கச்சொன்ன காந்தியடிகள் படம் அச்சிட்ட பணம் கொடுத்து மது வாங்குகின்றனர்.  அஞ்சல்தலையிலும் காந்தியடிகள் படம் உள்ளது.  எள்ளல் சுவையுடன் கவிதை வடித்துள்ளார்.
       மகாத்மா!
       அன்றாடம் / அடிபடுகிறார் / அண்ணல் காந்தி
       அன்று / ஆங்கிலேயரிடம் / இன்று – அஞ்சல்காரரிடம்.
       தினசரி செய்தித்தாளில் விபத்து என்று செய்தி வந்து கொண்டே இருக்கின்றன.  கவனமின்மையும் மது அருந்தி வாகனம் ஓட்டுதலும் போட்டி மனப்பான்மையும் காரணமாகின்றன.
       சாலைகள்
       பயணத்துக்கு / மட்டுமே / பந்தயத்துக்கு அல்ல
       ஆள்வோர்கள் சரியாகத் திட்டமிடாத காரணத்தால் உலக வங்கியிடம் வட்டிக்கு கடன் வாங்கி கடன் சுமையை நாளுக்கு நாள் ஏற்றி வருகின்றனர்.  அதனை உணர்த்திடும் கவிதை ஒன்று.
       இந்தியா
       அன்று / மூன்று பக்கமும் / கடலால் சூழப்பட்டநாடு
       இன்று / நான்கு பக்கமும் / கடனால்.
       மனிதாபிமானமுள்ள மனிதர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத கொடூரம் இலங்கையில் நடந்தது. லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்த பின்னும் சுதந்திரமாக உலகை வலம் வருகின்றான்.  ஈழக் கொடுமைக்காக குரல் கொடுத்தவர்கள் தான் உண்மையான படைப்பாளிகள்.  அந்த வகையில் குரல் கொடுத்துள்ளார் நூலாசிரியர்.
       எங்கே அனுமன்?
       அன்று / ஒற்றைச் சீதையை / சிறை மீட்க
       அசோகவனத்தையே / அக்னிக்கு இரையாக்கி
       அழித்த அனுமனே
       இன்று / நித்தம் நித்தம் / கொத்துக் கொத்தாய்
       செத்து மடியும் / ஈழத்து சோதரிகளின்
       அபயக்குரல் உன் / செவிகளில் விழவில்லையா?
       ஆன்மிகவாதிகளையும் சிந்திக்க வைக்கும் கவிதையாக உள்ளது.
       முத்தாய்ப்பாக தன்னம்பிக்கை விதைக்கும் விதமான கவிதை மிக நன்று.  பாராடடுக்கள்.
       முயற்சி!
       கவலையை மற! காற்றென பற!
       நிலமென பொறு / நெருப்பாய் எரி / நீராய் தெளி
       தடைகளை உடை / தாகம் தவிர் / சிறகை விரி
       சீக்கிரம் விழி / வியர்வை பொழி / வெற்றியே வழி
       நூலாசிரியர் கவிஞர் கூ.ரா. அம்மாசையப்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.    .

" புத்தகம் போற்றுதும் " . நூல் விரைவில் வெளி வர உள்ளது.

" புத்தகம் போற்றுதும் " . நூல் விரைவில் வெளி வர  உள்ளது.


.
கவிஞர் இரா இரவி எழுதிய  13 வது நூல், விமர்சனம் தொகுப்பு நூல்
" புத்தகம் போற்றுதும் " . விரைவில் வெளி வர  உள்ளது .புகழ் பெற்ற வானதி பதிப்பக வெளியீடாக வருகின்றது .தமிழ்த் தேனீ முனைவர் 
இரா .மோகன் ,கவிஞர் புதுயுகன் ( லண்டன் கல்லூரி  துணை முதல்வர் ) இருவரின்  அணிந்துரைகளுடன் வர உள்ளது .புகழ் பெற்ற கவிஞர்கள் ,புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய  50 நூல்களின் விரிவான விமர்சனம் ஒரே நூலில் .

வெள்ளி, 27 ஜூன், 2014

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

ஒரே மாதிரி உருவம் 
கொண்டவர்கள் எழு பேர் 
உள்ளனர் என்பது பொய் !
என்னவள் போல உருவம் 
கொண்ட வேறு ஒருவரும் 
உலகில் இல்லை !
அவள் போல அவள் மட்டுமே !
---------------------------------
படித்த படிப்பு
மறந்து விடுகின்றன !
பாவையை பார்த்த 
பார்வை மறக்க 
முடியவில்லை !
-----------------------------------
சிக்கி முக்கி கற்கள் உரசி 
தீயை கண்டுபிடித்தான் 
ஆதி மனிதன்  !
அவள் பார்வை என் பார்வை உரசி 
காதல் தீ கண்டுபிடித்தோம் !
 --------------------------------------
ஒரே ஒரு புன்னகை செய்தாள்
ஓராயிரம் சக்தி என்னுள் பிறந்தன ! 
---------------------------------
பெண்ணும் புயலும் ஒன்று !
அதனால்தான் 
புதிய புயல்களுக்கு 
பெண்கள் பெயர் 
சூட்டுகின்றனர் ! 
----------------------------------
காற்று இல்லா 
வெற்றிடத்தில் 
மணி ஒலித்தாலும் 
ஓசை கேட்பதில்லை !
அவளிடம் நான் வைத்த
வேண்டுகோள் 
அவளுக்கு 
கேட்கவில்லை !
--------------------------------
பிரபல ஓவியர்கள் 
பலரிடம் 
அவளின் புகைப்படம் தந்து 
வரைய வேண்டினேன் !
ஒருவராலும் 
அவள் போல 
வரைய முடியவில்லை 
அவள் அவ்வளவு அழகு ! 
-------------------------------------

பிரபல சிற்பிகள் 
பலரிடம் 
அவளின் புகைப்படம் தந்து 
அவளை சிலையாக 
வடிக்க  வேண்டினேன் !
ஒருவராலும் 
அவள் போல சிலை
வடிக்க  முடியவில்லை 
அவள் அவ்வளவு அழகு ! 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

கவிச்சூரியன் -19 இதழுக்கு


* மருத்துவ தினம்
* வேலூர் சிப்பாய் எழுச்சி தினம்
* மக்கள் தொகை தினம்
* உலக கல்வி தினம்

  இந்த தலைப்புகளில்  ஹைக்கூ கவிதைகள் மட்டும் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  kavisooriyan@gmail.com

ஹைக்கூ  ( சென்றியு )  கவிஞர் இரா .இரவி !

உயிர் காக்கும் 
உன்னத மனிதர்கள் 
மருத்துவர்கள் !

நேரம் காலம் பார்க்காமல் 
நேயப்பணி புரிவோர் 
மருத்துவர்கள் !

விடுதலைப் போராட்டம் 
வித்திட்ட முதல் போர் 
வேலூர் சிப்பாய் கலகம் !

வீரம் உணர்த்தியது 
வெள்ளையனுக்கு 
வேலூர் சிப்பாய் கலகம் !

.
பெருகப் பெருக 
பெருகுது பிரச்சனை 
மக்கள் தொகை !

மழலை ஒன்று 
மகத்துவம் இன்று 
ஒன்றே நனி நன்று !

திருடு போகாத சொத்து 
கொடுத்தாலும் குறையாதது 
கல்வி !

உயிருள்ளவரை உடன் இருக்கும் 
மூச்சுள்ளவரை மதிப்புத் தரும் 
கல்வி ! .


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

மதுரையில் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் நாளிதழ் செய்திகள் .

மதுரையில் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் நாளிதழ் செய்திகள் .பண்புள்ள மனிதனாக இருப்பது மிக மிக முக்கியம் ! தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் . நன்றி மின்னல் தமிழ்ப்பணி .

பண்புள்ள மனிதனாக இருப்பது மிக மிக  முக்கியம் ! தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் . நன்றி மின்னல் தமிழ்ப்பணி  .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நன்றி உதவி கரங்கள் மாத இதழ் ,அகவிழி விடுதி மனிதநேய மாமணி எம்.பழனியப்பன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நன்றி உதவி கரங்கள் மாத இதழ் ,அகவிழி விடுதி மனிதநேய மாமணி எம்.பழனியப்பன்

அகவிழி பார்வையற்றோர் விடுதி விழா !

 அகவிழி பார்வையற்றோர்  விடுதி விழா !

கவிஞர் இரா .இரவி எழுதிய சுட்டும் விழி நூலை மதுரைக்கு வந்த கவிஞர் தமிழச்சி அவர்களிடம் கொடுத்தார் .

கவிஞர் இரா .இரவி எழுதிய   சுட்டும் விழி  நூலை  மதுரைக்கு   வந்த  கவிஞர்  தமிழச்சி  அவர்களிடம் கொடுத்தார் . இனிய நண்பர் இசக்கி கை வண்ணத்தில் .

வியாழன், 26 ஜூன், 2014

பத்ம ஸ்ரீ ,முனைவர் ம .பொ.சிவஞானம் ! கவிஞர் இரா .இரவி !

பத்ம ஸ்ரீ ,முனைவர் ம .பொ.சிவஞானம் !  கவிஞர் இரா .இரவி !

26.6.1906 ---- 3.10.1995.

தமிழினத்தின் தன்னிகரில்லாத் தலைவர் ம. பொ.சி .!
தமிழருக்காகவே தன வாழ்வை  அர்பணித்தவர் ம. பொ.சி !

முகத்தை அலங்கரிக்கும் பெரிய மீசை !
அகத்தை அலங்கரிக்கும் அன்பின் ஓசை !

தாயின் தாலாட்டில் தமிழ்சை அறிந்தவர் !
திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் நேசித்தவர் ! 

அச்சு கோர்க்கும்  தொழிலாளியாக இருந்தவர் !
அரசியல் அறிஞராக வாழ்வில் உயர்ந்தவர் !

சிறையிலே  நூல்கள் படித்து தமிழ்ப் பற்றைப்  பெற்றவர் !
சிறைக்கு அஞ்சாமல் தமிழருக்காக  சிம்மக்குரல் தந்தவர் !

கப்பலோட்டிய தமிழர் வ .உ .சி. யின் சிலை திறக்க வைத்தவர் !
கர்ஜனைமிக்க வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு உரைத்தவர் !

தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் !
தன்னிகரில்லா முழக்கம் தந்து சென்னையைக் காத்தவர் !

தமிழ்நாடு என்று பெயர்   சூட்டிடக் காரணமானவர் !
தமிழ்  தமிழர் தமிழ்நாடுமுன்னேற்றத்திற்கு முழங்கியவர் !

சிலப்பதிகாரத்தின்  சிறப்புகளை எடுத்து இயம்பியவர் ! 
சிலம்புச் செல்வர் என்ற பட்டம் பெற்றவர்  !

புரட்சிக் கவிஞரின் பாராட்டிப் பெற்றவர் !
புகழுக்கு மயங்காத எளியவர் இனியவர் !

வள்ளலாரின் சமரசத்தை வாயாரப் புகழ்ந்தவர் !
வளமான தமிழகம் அமைந்திட உழைத்தவர் !

ஒழுக்கத்தின் வழி நின்று வள்ளுவம் காத்தவர் !
ஒழுக்க சீலர் என்ற நற்பெயர் பெற்றவர் !

மகாகவி பாரதியாரின் பாடல்களால் வீரம் பெற்றவர் !
மாண்புகளை பேச்சு எழுத்து இரண்டிலும்  பெற்றவர் !

தமிழர் உரிமைக்காக அஞ்சாமல் குரல் கொடுத்தவர் !
தமிழ் உணர்விற்காக ஓயாமல் ஓடி உழைத்தவர் !

மாநில  சுயாட்சிக்கு முதல் குரல் தந்தவர் !
மாநில செழுமைக்கு வழிகள் பல சொன்னவர் !

தமிழக எல்லைகள் காக்க தொல்லைகள் ஏற்றவர் !
தமிழக நலனுக்காக தன்னலம் மறந்தவர் !

அவர் இடத்தை ஈடு செய்ய ஒருவருமில்லை !
அவர் போல தமிழருக்கு உழைக்க யாருமில்லை !

உடலால் உலகை விட்டு மறைந்த போதும் !
உள்ளங்களில் மக்கள் உள்ளங்களில் வாழ்கிறார் ம. பொ.சி .!


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !பாரம் சுமக்கும் குருவிகள்! நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

பாரம் சுமக்கும் குருவிகள்


நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா 
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

9, சிந்தாமணி தெரு, ஐயப்பன் சாலை, அடுக்ககம், செந்தில் நகர், திருமுல்லைவாயில், சென்னை-600 062. விலை:ரூ. 45.   
*****
            இல்லற விழிப்புணர்வு கவிதைகளை லிமரைக்கூ வடிவில் வடித்துள்ளார்கள்.  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஜப்பானிய மொழியில் மிக பிரபலமான ஹைக்கூ வடிவத்தை மட்டுமின்றி லிமரைக்கூ சென்ரியூ வடிவத்தையும் செம்மொழி தமிழ் உள்வாங்கி நிற்பது தமிழின் சிறப்பு.  நூலாசிரியரின் புனைவு மிக நன்று.
      இந்த நூலை நல்ல பல கவிதைகள் எழுதி வரும் கவிஞருக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்கள்.
      “இந்நூல் பாவெழுதி புகழ் கொய்த பூவை
      பாவைக்கு பாதை சொல்லும் கோதை
      ஆண்டாள் பிரியதர்ஷிணி அவர்களுக்கு”
      ஹைக்கூ லிமரைக்கூ சென்ரியூ தொடர்பாக யார் அணிந்துரை கேட்டாலும் இன்முகத்துடன் தந்து உதவிடும் இனிய நண்பர் மு. முருகேஷ் அவர்களின் அணிந்துரை நூலிற்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. பாராட்டுக்கள்.  முனைவர் ப.ச. ஏசுநாதன் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று.  இனிய நண்பர் கவிஞர் வசீகரன் பதிப்புரையும் நன்று.
      பாரம் சுமக்கும் குருவிகள்” நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது.  குடும்பத்திற்காக உழைப்பவர்களை குறீயீடாக குறிப்பிட்டு உள்ளார்கள்.  குடும்பம் பற்றிய புரிதல் இல்லாமல், விரைவாக காதல், விரைவாக திருமணம், விரைவாக மணவிலக்கு என்று, எல்லாம் விரைவாக நடைபெற்று விடுகின்றன.  இந்த நூலில் உள்ள லிமரைக்கூ கவிதைகளை கடைபிடித்து நடந்தால், குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாகும். 
      விட்டுக் கொடுத்தல் இன்பம்
      இதை புரியாது ஒருவருக்கு ஒருவர்
      தேடிக் கொள்கிறீர்கள் துன்பம்
      இணையர்கள் இணைபுரிவதன் காரணமாக அவர்கள் குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கின்றது என்பதை உணர வேண்டும். 
      உங்கள் கோபத்திற்கு பலி
      நீங்கள் பெற்ற பிள்ளைகள் இது
      நெஞ்சுக்கு தீராத வலி!
      காதல் திருமணம் புரிந்தோர் கடைசி வரை வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும்.  காதல் திருமணம் புரிந்தோர் பிரிவதால் காதலையே இகழ்கின்றனர் சிலர்.  எனவே கவனமாக பிரியாமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
      வாழ்ந்து காட்ட வேண்டும்
      காதல் திருமணம் முறிவதா? நீ
      யோசித்து முடிவெடு மீண்டும்?
      மணவிலக்கு என்பது மிகவும் கொடியது.  வாழ்நாள் முழுவதும் வடுவாக இருந்து வலி தரும்.  கூடிய மட்டும் பிரியாமல் கூடி வாழ்வதே நன்று.
      வேண்டாம் மணமுறிவு
      பணிவுடன் கரம் கூப்பி கேட்கிறேன்
      மேவட்டும் உந்தன் அறிவு
      குடும்பத்தலைவன் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்.  அவசரம் கூடாது.  கோபம் கூடாது என்பதை வலியுறுத்தும் லிமரைக்கூ .
      குடும்பத் தலைவன் நீ
      உன் கூட்டில் நீயே ஏன்
      வைத்து கொள்கிறாய் தீ
      பொறுமையின்றி பிரிய நினைக்கும் இணையர்களுக்கு புத்தி புகட்டும் விதமாக நூல் முழுவதும் நல்ல நெறி போதிக்கும் விதமாக வாழ்வியல் அறிவுரை கூறும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார்.
      நன்றாக யோசித்துப் பார்
      குடும்பத்தை பிரிப்பது தவறு தவறு
      வாழ்க்கை அழகுத் தேர்!
      மணவிலக்கு வேண்டி விண்ணப்பித்த வழக்குகளின் எண்ணிக்கை மிகுதி.  அவர்கள் இந்த நூல் படித்தால் இணைவது உறுதி!.
      ஏறாதே நீதிமன்ற படி
      குடும்ப சண்டை தெருவுக்கு ஏன்
      சமாதானமாய் பேசி முடி.
      ஆண் பெண் பேதமின்றி இருபாலருக்கும் நல்ல கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக படைத்து உள்ளார்.
      உனதன்பு கணவன் தானே
      விட்டுக் கொடுக்க கற்றுக்கொள்
      வாழ்வை ஆக்காதே வீணே!
      ஆணாதிக்க சிந்தனையை அகற்றும் விதமாக படைத்துள்ளார் சென்ரியூ.
      மனைவி அடிமை அல்ல
      சமத்துவத்தால் முயன்றிடு நீ தம்பி
      மனைவி மனத்தை வெல்ல.
      சூழ்நிலை காரணமாக சினம் காரணமாக பிரிந்தவர்கள் இணையவும் ஆலோசனை வழங்கி உள்ளார்.
      வாழ்க்கை என்பது கரும்பு
      புரிந்து பிரிவை துறந்து மீண்டும்
      குடும்ப வாழ்வுக்கு திரும்பு!
      பெற்ற பெற்றோரைப் பிரிந்து, கணவருடன் வாழ்ந்து வருபவர் பெண்.  அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டியது கணவனின் கடமை.
      தாய் தந்தையரை விட்டு
      உன்னோடு வாழ வந்தவள் மனைவி
      சொல் மனம் தொட்டு.
      இந்த நூலை திருமணத்தின் போது பரிசாக வழங்கலாம்.  இந்த நூல் படித்தால் இணையர்கள் பிரிய மாட்டார்கள்.  பிரிந்தவர்கள் இணைவார்கள்.  நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்..


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !புதன், 25 ஜூன், 2014

வேலையில்லா பட்டதாரி படக் குழுவினருக்கு !

வேலையில்லா பட்டதாரி படக் குழுவினருக்கு !

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் சுவரொட்டி பார்த்தேன். நடிகர் தனுஷ் வாயில் சிகரெட் வைத்து இருப்பது போன்று உள்ளது. இனி வரும்  சுவரொட்டிகளில்   இதனை தவிர்த்திடுங்கள். வேண்டுகோள் இது .வேலையில்லா பட்டதாரி எல்லாம் புகைபிடிப்பார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றது .நல்லதை விட கெட்டது விரைவில் மனதில் பதியும் .இதைப்பார்த்து  சிலர் புகைபிடிக்கப் பழகலாம் .  நடிகர் தனுஷ் நல்ல நடிகர். எளிமையானவர் ,திறமையானவர் பாராட்டுக்கள். உளவியல் ரீதியாக பிடித்த  நடிகர்கள் திரையில் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து பலர் புகைபிடிக்கப் பழகுகின்றனர் .எனது உண்மை .ஏற்கனவே இவரது மாமனார் திரு ரஜினி காந்த திரைபடத்தில் புகைபிடிப்பது கண்டு புகைபிடிக்கப் பழகியோர் பலர் உண்டு .
 
ஒட்டு மொத்த திரைப்படத் துறையினருக்கு புகைபிடிக்கும் மாதிரி, மது குடிக்கும் மாதிரி காட்சிகள் வைக்காதீர்கள் .அப்படியே வைத்தாலும் சுவரொட்டியில் இடம் பெற வேண்டாம் .

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ   ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி 


இறக்குவேன் என்று ஏறுகிறார்கள் 
ஏறியதும் ஏற்றுகிறார்கள் 
விலைவாசி !

நிறம் வேறுபட்டாலும் 
குணம் ஒன்றாக 
அரசியல்வாதிகள் !

இல்லாத  நாளே இல்லை 
கொலை தற்கொலை 
செய்தித்தாள் !
.
எதிர்பார்ப்பது போலவே 
கொடுக்கவும் வேன்ப்டும் 
மரியாதை !

சிறிய விதை 
பெரிய விருட்சம்  
இயற்கை நேசம் !

கற்றுத்தருகின்றன 
களவும் 
தொலைக்காட்சித் தொடர்கள் !

நடக்கின்றன 
நியா ? நானா ?
குடும்பங்களில் !

போதையின் பாதை 
பயணிக்கிறது 
மயானம் நோக்கி !

அரசாங்கத்தால் 
அச்சடிக்கப்பட்ட காகிதம்  
பணம் !

மரணம் உடலுக்குத்தான் 
புகழுக்கு இல்லை 
மக்களுக்காக  வாழ்ந்தோர் !

உடல் தூய்மை
உள்ளமும்  தூய்மை
நீட்டிப்பு வாழ்நாள் !

யாகம் வேண்டாம் 
மரம் நடுங்கள் 
மழை !

பண சேமிப்பைவிட
மிகவும்  முக்கியம் 
மழைநீர் சேமிப்பு !

நடந்தது சண்டை 
புதைப்பதா? எரிப்பதா ?
ஓடியது  பிணம் !

உடன் நிறுத்துங்கள் ! கவிஞர் இரா .இரவி !

உடன் நிறுத்துங்கள் !   கவிஞர் இரா .இரவி !

இந்தியாவின் பணத்தில் காந்தியடிகள் படம் ! 
இனி அச்சடிப்பதை உடன் நிறுத்துங்கள் !

காந்தியடிகள் இன்று இருந்து இருந்தால் 
கட்டாயம் வருந்திடுவார் என்பது உண்மை !

மது வாங்கத்  தரும் பணத்தில் காந்தியடிகள் !
மடையர்களின் கையூட்டுப் பணத்தில் காந்தியடிகள் !

வரிக்கட்டாத கறுப்புப்  பணத்தில் காந்தியடிகள் !
வஞ்சகர்களின் கொள்ளைப்  பணத்தில் காந்தியடிகள் !

அரசியல்வாதிகளின்  ஊழல் பணத்தில் காந்தியடிகள் !
ஆன்மிகவாதிகளின் ஏமாற்றுவசூல் பணத்தில் காந்தியடிகள் !

தேசப்பிதாவிற்கு மரியாதை செய்வதாக நினைத்து !
தேசப்பிதாவை  அவமரியாதை செய்வதை நிறுத்துக !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...