தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை செயலர் முனைவர் மூ .இராஜாராம் இ .ஆ .ப . அவர்களின் புதல்வி ஸ்ரீநிதி, செல்வன் சாகர் பென்டேலா அவர்களின் திருமண வரவேற்பு ! தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி !

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை செயலர் முனைவர் மூ .இராஜாராம் இ .ஆ .ப . அவர்களின் புதல்வி ஸ்ரீநிதி, செல்வன் சாகர் பென்டேலா அவர்களின் திருமண வரவேற்பு !

தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி !

நாள் 7.6.2014 மாலை 6 மணி  இடம் இராணி மெய்யம்மை  மன்றம் எழும்பூர்  சென்னை . 

திருமண  வரவேற்பு விழா கோலாகலமாக நடந்தது ..தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ,  தமிழ்ச் சுடர்  நிர்மலா மோகன் ,
கவிஞர் இரா .இரவியாகி நான் .மூவரும்  மதுரையில் இருந்து பயணமாகி விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வந்தோம். உடன் கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் குடும்பத்துடன்  வந்து வாழ்த்தினார்கள் . 

செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு இராஜேந்திர  பாலாஜி அவர்கள் குடும்பத்துடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்திவிட்டு இரவு உணவு சாப்பிட்டு   சென்றார்கள் .

1992  ஆம் ஆண்டு மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவாராக இருந்து முத்திரைப்  பதித்த கிரிஜா இ .ஆ .ப . அவர்கள் உள்ளிட்ட  பல 
இ .ஆ .ப. உயர் அதிகாரிகளும் .இ .கா .ப . உயர் அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும்  .சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்களும்   மணமக்களை வாழ்த்தினார்கள் .வெளிநாட்டு நண்பர்களும் கலந்து கொண்டனர் .


உலகத் தமிழ்ச் சங்கத்தின் தனி அலுவலர் முனைவர் க .பசும்பொன் குடும்பத்துடன் வந்து வாழ்த்தினார்கள் .

மதுரை மீனாட்சி கோயில் தக்கார் திரு கருமுத்து கண்ணன் அவர்கள் மீனாட்சி கோயில் அர்ச்சகர்களுடன்  வருகை தந்தி வாழ்த்தினார்.  மதுரை மேயர் திரு இராஜன் செல்லப்பா வந்து வாழ்த்தினார் .

கலைமாமணி கு .ஞானசம்பந்தன் , திருமதி அமுதா ஞானசம்பந்தன் குடும்பத்துடன் வந்து வாழ்த்தினார்கள். 

சுற்றுலாத்துறை உதவி இயக்குனர்கள் திரு .காமராஜ் ,
திரு .வேணுகோபால் ,மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர்திரு .
 க .தர்மராஜ் ,மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலர் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்கள் .வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் இளசை சுந்தரம் ,பாரதி யுவகேந்திர தலைவர் நெல்லை பாலு ,கிராமியக் கலை இயக்குனர் திரு,.சோமு உள்ளிட்டோர்  மதுரையில்  இருந்து வருகை தந்து வாழ்த்தினர் .

சிறிய ஆளில்லா விமானம் கருவியில் கேமிரா பொருத்தப்பட்டு    திருமண மண்டபத்தில்  பறக்க விட்டு  மணமக்கள் வருகையை ஒளிப்பதிவு  செய்து ஒளிபரப்பினார்கள் .வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருந்தது .வருகை தந்த அனைவரும் சுவையான இரவு உணவு  சாப்பிட்டனர் .

முனைவர் மூ .இராஜாராம் இ .ஆ .ப.அவர்கள் அனைவரையும் நுழை வாயிலில் நின்று வரவேற்று ,இருக்கையில் அமரவைத்து, மேடையில்  மணமக்களை வாழ்த்த வைத்து சாப்பிட வைத்து அன்போடு உபசரித்து அனுப்பினார்கள் .

பணக்கார்கள்  முக்கிய பிரமுகர்கள்  மகிழுந்து ஓட்டுனர்களை மண்டபத்தின் உள்ளே அழைத்து வர மாட்டார்கள் .அவர்கள் பசியோடு இருப்பார்கள் .ஆனால் இங்கு மகிழுந்து ஓட்டுனர்கள் அனைவருக்கும் சுவையான இரவு உணவு தண்ணீர்  பாட்டில் உள்ளே  நுழையும் போதே வழங்கினார்கள் . மனிதநேயம் மிக்க இந்த காட்சி நெகிழ்ச்சி .மகிழ்ச்சி . 
தமிழ் வளர்ச்சித்துறை ,செய்தித்துறை ,சுற்றுலாத்துறை அதிகாரிகள்  பலரும் வந்து வாழ்த்தினார்கள் .

மன்றத்தின் வாயிலில் தமிழ்ப் பண்பாட்டின் படி பெண்கள் நின்று வரவேற்றனர் .உணவு சாப்பிடும் போதும் வந்து என்ன வேண்டும் என்று கேட்டு கவனித்தார்கள் .சாப்பிடாமல்  யாரும் செல்லாமல் அனைவரையும் சாப்பிட   வைத்தனர்.

வருகை தந்த அனைவருக்கும் மரக் கன்று ஒன்றும் ,வாழ்வியல் கருத்துக்களை  உணர்த்தும் ஆங்கில நூல் ஒன்றும் வழங்கினார்கள் .
முனைவர் மூ .இராஜாராம் இ .ஆ .ப . அவர்களின் அன்பு மழையில் நனைந்து வந்தோம்  .


.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


கருத்துகள்