இடுகைகள்

December, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் ! கவிஞர் இரா .இரவி !

படம்
இயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் ! கவிஞர் இரா .இரவி !
திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில்  திரு .நம்மாழ்வார் பிறந்தார் நம் மனதை ஆண்டார் !
இயற்கையை நேசித்த இயற்கை இன்று இல்லை ! இயற்கைகள் அனைத்திலும் அவர் முகம் உண்டு !
பூச்சிக்கொல்லி மருந்து மனிதனையும் கொல்லும் ! பூ மனதுக்காரர் எச்சரிக்கை விடுத்தார் நமக்கு !
இயற்கை உரம் இருக்க மனிதர்க்குத் தீங்கு தரும்  செயற்கை உரம் வேண்டவே  வேண்டாம்  என்றார் !
உலகமயத்தின் தீங்கை எடுத்து இயம்பினார் ! உலகம் மதிப்பு அளிக்க வில்லை வெம்பினார் !
விவசாய நாட்டில் விளைபொருள் இறக்குமதி  வேண்டாம் என்றார் கேட்கவில்லை ஆள்வோர் ! .
விவசாயம் செழிக்க வழிகள் பல சொன்னார் ! விபரம் தெரியாதவர்கள் ஏற்க மறுத்தனர் !
தீங்கான மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்தார் ! தேவையற்றது மரபணு சோதனை என்று எதிர்த்தார் !
விதையில்லா பொருள்கள் விளையும் நிலத்தை ! வீ ணாக்கும் என்றார் பலரும் கேட்க வில்லை ! 
நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ! நாட்டை ஆள்வோரை  கவனிக்கச்  சொன்னார் !
மண்ணை நேசித்த மனிததருள் மாணிக்கம் அவர் ! மரத்தையும் நேசித்த மட்டற்ற  மாமனிதர் அவர் !
இறுதி மூச்சு உள்ளவரை இறு…

வைகை காற்று ! நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

படம்
வைகை காற்று !

நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் ! cholaitamileniyan1975@gmail.com

அலைபேசி 9840527782.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


சோலை பதிப்பகம் 6.பழனியாண்டவர்  கோவில் தெரு, பெரம்பூர்,சென்னை .600011 விலை ரூபாய் 30.

நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் அவர்கள் இலக்கியச் சோலை மாத இதழ் ஆசிரியர் ,பல்வேறு தொகுப்பு நூல்களை திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாளில் வெளியிட்டு வருபவர் .தொகுப்பு நூலில் பங்குப் பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் நூலும் , பாராட்டு சான்றிதழும் வழங்கி வருபவர் .நானும் பல நூலில் பங்கு பெற்றுள்ளேன். முதலில் இவர் கவிஞர் பிறகுதான் எழுத்தாளர் , பதிப்பாளர் , தொகுப்பு ஆசிரியர்,  நூல் வடிவமைப்பாளர் ,வெளியீட்டாளர்,தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்  என்று பல முகங்கள் உண்டு .ஆற்றல் மிக்கவர். சென்னையில் இவரை  அறியாத இலக்கிய வட்டம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு  பிரபலமானவர் .அன்பானவர் .கவிப்பேரரசு என்ற பட்டதை வைரமுத்து அவர்களுக்கு வழங்குவதற்கு  பல வருடங்களுக்கு முன்பே பெற்றிட்ட அருமை நாதன் என்ற வேடந்தாங்கலில் வளர்ந்த கவிப்பறவை கவிஞர் தமிழினியன்.அருமையாரின் அருமையான வாழ்த்துரையும் நூலில் உள்…

தவிக்கும் தமிழக மீனவர்கள் ! கவிஞர் இரா .இரவி !

படம்
தவிக்கும் தமிழக மீனவர்கள் ! கவிஞர் இரா .இரவி !

தானம் தந்த கச்சத்தீவில்
தாவி வந்து தாக்குகிறான்
சிங்களன் !

வலையை அறுக்கிறான்
நிலை குலைய வைக்கிறான்
சிங்களன் !

மீனவர் பயணம்
வந்தது மரணம்
காரணம் சிங்களன் !

கண்டபடிசுடுகிறான்
கண்முடித்தனமாய் தாக்குகிறான்
காட்டுமிராண்டி சிங்களன் !

எல்லைதாண்டி வந்ததாய்ச் சொல்லி
எல்லைதாண்டி வந்து தாக்குகிறான்
சிங்களன் !

மட்டை விளையாட்டில் தோற்றால்
மடையன் தாக்குகிறான்
முட்டாள் சிங்களன் !

தரையில் தவிக்கும் மீனாக
தமிழக மீனவர்கள்
சிரிக்கும் சிங்களன் !

வீரம் காட்டுகிறான்
நிராயுதபாணிகளிடம்
நரிப்பயல் சிங்களன் !

அப்பாவி மீனவர்களிடம்
தப்பாக நடக்கிறான்
அடப்பாவி சிங்களன் !

சேதாரமானது வாழ்வாதாரம்
தமிழக மீனவர்கள் !
காரணம் சிங்களன் !

தவிக்கின்றனர்
தட்டிக் கேட்க நாதியின்றி
மீனவர்கள் !

சுண்டிப்பார்க்கிறது சுண்டைக்காய் நாடு
சொரணையற்று
பேராயக்கட்சி !

வல்லரசிடம் காட்டும் வீரம்
கொடிய அரசிடம் காட்ட மறுப்பதேன்
பேராயக்கட்சி !

ஆயிரக்கணக்கில் கைது
நூற்றுக்கணக்கில் கொலை
வேடிக்கைப்பார்க்கும் பேராயக்கட்சி !

தேவயானிக்கு ஒரு நியாயம்
தமிழக மீனவருக்கு அநியாயம்
பேராயக்கட்சி !

வடவருக்கு துன்பம…

முது முனைவர் வெ .இறைஅன்பு இ .ஆ .ப . அவர்கள் தினத்தந்தி நாளிதழில் ஞாயிறு தோறும் எழுதி வரும்

படம்
முது முனைவர் வெ .இறைஅன்பு இ .ஆ .ப . அவர்கள் தினத்தந்தி நாளிதழில்   ஞாயிறு தோறும் எழுதி வரும் உலகை உலுக்கிய வாசகங்கள் சிந்தனைத் தொடர் படித்து மகிழுங்கள்

.http://www.dinathanthiepaper.in/showxml.aspx?id=16088211&code= 3306

வெற்றி ! கவிஞர் இரா .இரவி !

படம்
வெற்றி !  கவிஞர் இரா .இரவி !
வெற்றி பெற வேண்டும் என்று வேண்டும்  வெறி ! வெற்றி  எளிதில் கிடைத்து விடாது என்பதை அறி !
வெற்றி எட்டும் கனி என்றே நீ நினைத்திடு ! வெற்றி எட்டாக்கனி என்று நீ நினைக்காதே !
விவேகமாகச் சிந்தித்து வேகமாகச் செயல்படு ! வேறு சிந்தனை விடுத்து ஒரே சிந்தனை செய்திடு !
தோல்வி நேருமோ ? பயத்தை விட்டுவிடு !   தோல்வியைத் துரத்துவேன் துணிவுடன்  முடிவெடு ! 
பயிற்சி முயற்சி தளர்ச்சியின்றித் தொடர்ந்திடு ! அயற்சி இன்றி ஆர்வத்துடன் நடந்திடு !
என்றும் இஸ்டப்பட்டு செயலில் இறங்கு ! என்றும் கஷ்டப்பட்டு செயலில் இறங்காதே !
எனக்கு வரும் என்றே நீ நினைத்திடு  ! எனக்கு வராது என்று நீ நினைக்காதே !
என்னால் முடியும் என்றே நீ நினைத்திடு  ! என்னால் முடியாது என்று நீ நினைக்காதே !
முடியாது என்று எடிசன் நினைத்து இருந்தால் ! முற்றிலும் இருட்டாகவே இருந்திருக்கும் உலகம் !
முடியாது என்று காந்தியடிகள்  நினைத்து இருந்தால் ! முழுசுதந்திரம் இன்றி அடிமையாகவே இருந்திருக்கும்!
முடியாது என்று பெரியார்  நினைத்து இருந்தால் ! மூட நம்பிக்கையில்  நாடு மூழ்கியே இருந்திருக்கும்!
முடியாது என்று ஆம்ஷ்டிராங்  நினைத்து…

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

படம்
காதல் கவிதைகள் !  கவிஞர் இரா .இரவி !
காதல் ! மூன்றெழுத்து உணர்வு  மூச்சு உள்ளவரை நினைவிருக்கும் ! கர்வம் கொள்ள வைக்கும் ! கனவுகளை வளர்க்கும் ! உடல் இங்கும் எண்ணம்  அங்கும் ! அடிக்கடி அலைபாயும் ! அழகு கொஞ்சம் கூடும் ! அறிவு கொஞ்சம் குறையும் ! --------------------------------------------- விழிகளில் நுழைந்து  மூளையில் அவள்  சிம்மாசனம் இட்டு   அமர்ந்து விடுகிறாள் ! காதல் ரசவாதம்  தொடர்கின்றது ! கற்பனைக் காவியம்  வளர்கின்றது ! ---------------------------------------------------- முன்பு தேநீரை சூடாகக்  குடிக்காதவன் ! அவள் இருக்குமிடம்  இதயமல்ல மூளை  என்று தெரிந்ததும்  இப்போது தேநீரை  சூடாகவே குடிக்கிறேன் !  ----------------------------------------------- காதலர்களின் கண்கள்  கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன ! யார் அதிகம் கொடுத்தது  யார் அதிகம் பெற்றது  கண்டுபிடிப்பது கடினம் ! ----------------------------------------------- அவள்  பேசும் சொற்களை  காதுகள்  கேட்பதை விட   அவள்  பேச்சால்  அசையும் உதடுகளை  கண்கள் இமைக்காமல்  கண்காணிப்பதால்  என்ன சொன்னாள் என்பது புரியாமலே  தலை ஆட்டி விடுகிறேன் .  ---…

பாரதியின் கருத்துப்பேழை ! நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

படம்
பாரதியின் கருத்துப்பேழை !
நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
. மின்னல் கலைக் கூடம் ,117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .600018. விலை ரூபாய் 60 அலைபேசி 9841436213. 
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு , உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள மின்னல் கலைக் கூடத்திற்குப் பாராட்டுக்கள்.நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் நூலை காணிக்கை ஆக்கி உள்ள விதத்தில் வித்தியாசப்படுகிறார் 
"உழைத்து உடனிருந்து உயிர் காக்கும் என் வாழ்க்கைத் துணை ஜெகதீஷ்வரிக்கு ."--- கவிஞர் திருச்சி கௌதமன் !
" எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும்  தெய்வமன்றோ."  ----- மகாகவி பாரதி !
பாரதி கலைக் கழகம் நிறுவனர் திரு . பாரதிசுராஜ் அவர்களின் அணிந்துரையும் , பாரதி நெல்லையப்பர் மன்ற  நிறுவனர் திரு . எதிரொலி  விசுவநாதன் வாழ்த்துரையும் ,பதிப்பாளர் பொதிகை மின்னல் ஆசிரியர் , கவிஞர் வசீகரன் பதிப்புரையும் நூலிற்கு அணி சேர்க்கும் விதமாக உள்ளன .கவிஞர் வசீகரன் பதிப்புரையில் முடிப்பு வரிகள் மிக நன்று .
தமிழுக்கு மகுடம் பாரதி ! தரணிக்கு அவனே சாரதி !
மகாகவி பாரதியின் கவிதைகள் கட்டுரைகள் பட…

"கைபேசி வழியே(எஸ்.எம். எஸ் மூலம்) நிகழ்ந்த கே.கே.ஐ-2000 துளிப்பாப் போட்டியில் வெற்றி பெற்றோர் விபரம் .

அன்பர்களுக்கு என் இனிய மாலை வணக்கம்! "கைபேசி வழியே(எஸ்.எம். எஸ் மூலம்) நிகழ்ந்த கே.கே.ஐ-2000 துளிப்பாப் போட்டியில் வெற்றி பெற்றோர் விபரம் . கவிதைகள் குறித்து!"

முகநூல் நண்பர்களுக்கு வணக்கம்!
"குறுங்கவிதை(Kki) இதழ் நேற்று இரவு மதுரை ஹைக்கூ திலகம், திரு.இரா.இரவி அவர்கள் இப் போட்டிக்கு நடுவராக இருந்து முதலாவது,
இரண்டாவது, மூன்றாவது இடங்களுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்து கொடுத்த இரா.இரவி அவர்களுக்கு மிக்க நன்றி!
இத்துளிப்பாப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் "kki இதழுக்கு "அமுதநஞ்சு" எனும் தலைப்பில எழுதியனுப்பியது: 
முதல் பரிசை பெற்ற கவிதை:
1.'முப்போக விளை நிலங்கள்     அடுக்கு மாடிக் குடியிருப்புகள்      அமுத நஞ்சு!!
இத் துளிப்பாவை எழுதியவர்: புதுப்பட்டிணம், கு.இலக்குமணன்: கைபேசி எண்: 9894506387.
2. அளவுக்கு மிஞ்சினால்  அமுதமும் நஞ்சாகுமாம்    ஆனால் உன் அன்பு மட்டும்     எனக்குத் திகட்டுவதில்லையே! ஏன்? 
இத் துளிப்பாவை எழுதியவர்: வேலூர், முத்து ஆனந்த்.
கைபேசி எண்: 9629152468.
3. சிறார்களின் சம்பாத்தியம் உலையில் கொதிக்கிறது      அமுத நஞ்சு.! 
இத் துளிப்பாவை எழுதியனுப்பியவ…

நிலா ! குழந்தைகள் 9 ஆம் ஆண்டு புத்தாண்டு விழா அழைப்பிதழ் !

படம்
நிலா ! குழந்தைகள் 9 ஆம் ஆண்டு புத்தாண்டு விழா அழைப்பிதழ் !

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ ( சென்றியு )   கவிஞர் இரா .இரவி !கைக்கு எட்டியது  வாய்க்கு எட்டவில்லை  ஈழத் தமிழர் விடுதலை !
விதைத்தால் வளரும்  விருட்சம்  அன்பு !   
நம் முதுகு  நமக்குத்  தெரியும்  கண்ணாடியில் !
துன்பம் இன்பம்  இரவு பகல்  உண்டு மாற்றம் !
சொல்வதை விட  நடந்துகாட்டுவது நன்று  அறிவுரை !
பொறி தட்டும்போது  பிடித்துக்கொள்  அறிவு !
சிக்கலைத் தீர்க்கும்  சிந்தனை  சிந்தி !
கல்வியே சிறந்த செல்வம்  சரி  கல்விக்கு வேண்டும் செல்வம் !
மயங்காதவர்  உலகில் இல்லை  பாராட்டு ! .
வீட்டில் எலி  வெளியில் புலி  அரசியல்வாதிகள் !
தேர்தலுக்கு முன் ஒன்று  தேர்தலுக்குப் பின் மற்றொன்று  மாறும்   கூட்டணி !
முட்டாள்கள் உள்ளவரை  அரசியல்வாதிகள் காட்டில்  என்றும் மழை !
பொய்யர்களின்  எதிரி  மறதி !

தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! கவிஞர் இரா .இரவி !

படம்
தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது ! 
கம்ப இராமாயணமா ? திருக்குறளா ? 
தலைப்புத் தந்தவர்! தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் . 
தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! 
கவிஞர் இரா .இரவி !

தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களே இல்லாமல் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை தேடித் தந்தது திருக்குறள் .உலகில் தமிழ் மொழி அறியாதவர்கள் கூட திருக்குறள் அறிந்துள்ளனர்.அதனால்தான் தமிழ்ப்பாட்டி  அவ்வை சொன்னாள். 
 ."அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்       குறுகத் தரித்த குறள் .
திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி இல்லை .திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி மொழியே இல்லை .பெரும்பாலான உலக மொழிகள் யாவிலும் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். திருக்குறள் அளவிற்கு பெரும்பாலான மொழிகளில்  கம்ப இராமாயணம் மொழி பெயர்க்கப்பட வில்லை என்பது உண்மை . பெற்ற தாய் பசியோடு இருந்தால் பஞ்சமா பாதகம் செய்தாவது  தாய் பசியினை போக்கிடு என்றுதான் வேதங்கள் சொல்கின்றன .ஆனால் திருவள்ளுவரோ .
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க    ( 656) சான்றோர் பழிக்கும் வினை .
பெற்ற தாய் பசியோடு இருந்தாலும் தவறான செயல் செய்து பசி போக்க நி…

வானதி பதிப்பாக விரைவில் வெளிவர உள்ள தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் கவிதைச் சுடர் நூல் அட்டைப்படங்கள் .

படம்
வானதி பதிப்பாக விரைவில்  வெளிவர உள்ள தமிழ்த் தேனீ  முனைவர்
இரா .மோகன் அவர்களின் கவிதைச் சுடர்
நூல் அட்டைப்படங்கள் .

ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திருச்சி அ.கெளதமன் !

படம்
ஆயிரம் ஹைக்கூ ! 
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் கவிஞர் திருச்சி அ.கெளதமன் !
4/26 இராகவேந்திரா 2 வது தெரு ,சதாசிவம் நகர் ,மடிப்பாக்கம், சென்னை .91. அலைபேசி 8870748997  .
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769.  மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
என் இனிய நண்பர் திரு இரா .இரவி ஹைக்கூ உலகில் ஓர் தனி இடத்தைப் பிடித்தவர் .ஆயிரம் ஹைக்கூ ! என்ற இந்நூல் 12 வது நூலாக மலர்ந்துள்ளது .முந்தைய  ஹைக்கூ நூல்களிலிருந்து சிறந்த ஹைக்கூ கவிதைகளைத் தேர்ந்தெடுத்து பல்வேறு தலைப்புகளில் மனம் மகிழும் வண்ணம் இந்நூலில் நமக்கு  விருந்தளித்துள்ளார் .
இது கருத்துக் கருவூலமா ? இயற்க்கை அழகின் எழில் மிகு காட்சிக் கோப்பா  ? புரட்சிச் சிந்தனைகளின் வெளிப்பாடா ?சமூக அவலங்களைச் சாடும் சவுக்கா ? என்றெல்லாம் வியக்கத் தோன்றுகிறது .அழகிய அட்டைப்படம் .உலகம் சார்ந்த திருக்குறள் எழுதிய வள்ளுவர் படம் ,அறிவியல் சாதனமாய் அறிவிக்கும் படம், விரிந்த வானத்தில் எழுகதிரை உயரே பார்த்து கைகள் விரித்துத் தன்னம்பிக்கையோடு த…

ஒரு சிறிய விதையின் உழைப்பு பிரமிப்பு ! கவிஞர் இரா .இரவி !

படம்
ஒரு சிறிய விதையின் உழைப்பு பிரமிப்பு ! கவிஞர் இரா .இரவி !

ஒரு சிறிய விதை
கீழும் மேலும் பயணித்தது !

கீழே வேர் விட்டு 

சத்து ஈட்டியது !

மேலே முளை விட்டு
இலைகள் விட்டு கிளைகள் விட்டு

பூக்கள் பூத்து காய்கள் காய்த்து
கனிகள் வழங்கியது !

நிற்க நிழல் தந்தது !
சுவாசிக்க காற்றும் தந்தது !

உயர் திணையான மனிதனோ !
நன்றி மறந்து பரிசளித்தான் !

கோடாரி !

தலைமுறைகள் ! ஒளிப்பதிவு இயக்கம் பாலு மகிந்திரா ! இசை இளையராஜா ! இணை தயாரிப்பு இயக்குனர் சசிக்குமார் ! திரைப்பட விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி !

படம்
தலைமுறைகள் !
ஒளிப்பதிவு இயக்கம் பாலு மகிந்திரா  !
இசை இளையராஜா !
இணை தயாரிப்பு  இயக்குனர் சசிக்குமார் !

திரைப்பட விமர்சனம்       ! கவிஞர் இரா .இரவி !

சராசரி மசாலாப் படம் இல்லை .மதுக்கடை காட்சிகள்  இல்லை. ஆங்கிலச் சொற்கள் கலந்த பாடல்கள் இல்லை .இரைச்சல் மிக்க பாடல்கள் இல்லை .குத்துப்பாட்டு இல்லை .நடிகையின் கவர்ச்சி நடனம் இல்லை .சண்டைகாட்சி இல்லை .வெட்டுக் குத்து  இல்லை துப்பாக்கிச் சூடு இல்லை .இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. மொத்தத்தில் வழக்கமாக தற்போது வரும் திரைப்படங்களின் எந்த அம்சமும் இல்லை .
இந்தபடத்தில் பாசம் உண்டு ,நேசம் உண்டு ,பண்பாடு உண்டு ,மனித நேயம் உண்டு .நட்பு உண்டு ,இயற்கை உண்டு ,பசுமை உண்டு . 
காலத்தால் அழியாத பல நல்ல திரைப்படங்களை இயக்கி திரு .பாலு மகிந்திரா .அவர்கள் இந்தபடத்தில் தாத்தாவாக நடித்து உள்ளார்.இல்லை.இல்லை . தாத்தாவாக வருவது பாலு மகிந்திராவா? நம்ப முடிய வில்லை .அவ்வளவு இயல்பான கிராமத்து முதியவர் போன்ற நடிப்பு .தாத்தாவாக வாழ்ந்து உள்ளார் .தனது பிம்பங்களை எல்லாம் மறந்து விட்டு ஒரு சராசரி கிராமத்து  தாத்தாவாக  வந்து உள்ளத்தைக்  கொள்ளை கொள்கிறார் .பேரனாக நடித்துள்ள…

படித்ததில் மிகவும் பிடித்தது ! மின் அஞ்சல் குழுவில் படித்து .நன்றி முத்தமிழ் வேந்தன் ! . ""சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளெல்லாம் தமிழிலிருந்து பிறந்த மொழிகள்தான்!'' ம.சோ. விக்டர் நேர்காணல்

படித்ததில் மிகவும் பிடித்தது ! மின் அஞ்சல் குழுவில் படித்து .நன்றி முத்தமிழ் வேந்தன் !


.
""சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளெல்லாம் தமிழிலிருந்து பிறந்த மொழிகள்தான்!''
ம.சோ. விக்டர் நேர்காணல்

மொழி ஆய்வுத்துறையின் முக்கிய பிரிவுகளில் முதன்மையானது சொல்லாய்வுத் துறை. ஒரு சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிந்து விளக்கிக்கூறும் சொல்லாய்வு மூலம் ஒரு மொழியின் செவ்வியல் தன்மையை உணர முடியும். சொல்லாய்வுத் துறையில் தன்னிகரற்றுத் திகழ்ந்து தமிழுக்கு அணி சேர்த்தவர் பாவாணர். பாவாணருக்குப் பிறகு மொழி ஆய்வை மிக நுட்பமாக முன்னெடுத்துச் சென்றவர்கள் சிலரே. அவர்களில் தனித்துவமான கோணத்தில் தமிழின் தொன்மையை ஆய்ந்து வருபவர் மொழியறிஞர் ம.சோ. விக்டர். இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவரது தமிழறிவு மிகப் பரந்தது என்றால் மிகையில்லை.

அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டையைச் சேர்ந்தவர் விக்டர். இவரது முதல் ஆய்வு நூலான "எபிரேயத்தின் தாய்மொழி தமிழே' நுட்பமான கவனம் பெற்றது. இந்த நூலைத் தொடர்ந்து தற்போது வெளிவந்திருக்கும் பத்தொன்பது தமிழாய்வு நூல்கள், தமிழ்மொழியின் தொன்மையை ஆணித்தரமான தரவுக…