புதன், 30 நவம்பர், 2011

கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி

கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி

முல்லை பெரியாறு அணையை பிரிடீஷ் அரசு ஒதுக்கிய நிதி போதாமல் தன் சொந்த சொத்துக்களை வித்துக்
கட்டினார்.
திரு . பென்னி குக் என்ற மாமனிதர் .முல்லை பெரியாறு அணையை இடிக்க நினைப்பது அந்த தன்னலமற்ற தியாகி திரு .பென்னி குக்  அவர்களுக்கு செய்யும் பச்சைத்  துரோகம் வெள்ளையருக்கு இருந்த மனிதாபிமானம் கேரளா மனிதர்களுக்கு இல்லை .

புதிய அணை கட்டுகிறோம் என்ற பெயரில் சில கோடிகளை அரசியல் வாதிகள் சுருட்டுவதை தவிர வேறு ஒன்றும் நோக்கம் இல்லை .
காங்கிரஸ் அரசு இது வரை போட்ட திட்டங்களில்
அரசியல் வாதிகள் சுருட் டியத்தைப் பார்த்து உலகமே சிரிக்கின்றது.

500ஆண்டுகளுக்கு திடமாக உள்ள அணையை உடைக்க  வேண்டும்  .புதிய அணை கட்ட வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள்.நன்றி மறந்தவர்கள் .நெய்வேலியில் இருந்து தமிழ் நாட்டு மின்சாரம் கேரளா செல்கின்றது .மாட்டுக் கறி உண்ண அடி மாடுகள் சாரை சாரையாக தினமும் கேரளா செல்கின்றது .அரிசி பருப்பு என அனைத்துப் பொருள்களும் தமிழகத்தில் இருந்துதான் செல்கின்றது .உண்டு கொளுத்து விட்டு வஞ்சனை செய்கிறார்கள் .

அணை இடிவது போல கிராபிக்ஸ் காட்சி குறுந்தகடு வெளியிட்டார்கள் .அணை இடிவது போல பித்தலாட்டமான படம்
அணை 999   தயாரித்து உள்ளார்கள்.பாராளு மன்றத்தில் கேரளா  அனைத்துக் கட்சி உறுப்பினர்களும்  ஓரணியில் நின்று .புதிய அணை வேண்டும் என்று  வம்பிற்கு குரல் கொடுக்கின்றனர்.ஆனால் தமிழக அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் இது வரை எந்தப் பிரச்சனைக்கும்     ஓரணியில் நிற்பதே இல்லை .
பத்மநாபபுரம் கோயில் நகைகள் அனைத்தும் தமிழகத்திற்கு சொந்தம் என்று ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் விளக்கி உள்ளனர் .எனவே   பத்மநாபபுரம் கோயில் நகைகள் அனைத்தும் தமிழகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்த வேண்டும் .


தமிழகத்தில் லட்சக் கணக்கான மலையாளிகள் பிரபல நகைக் கடைகள் ,ஜவுளிக் கடைகள் ,
போக்கு வரத்து நிறுவனங்கள்,

தேநீர்க் கடைகள் என பலவாறு நிறுவனங்கள் நடத்திக் கொண்டு மிகவும் வளமாகவும் ,நலமாகவும் .பாதுகாப்பாகவும் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, இப்படி பல்வேறு காரணங்களை மனதில் கொண்டு கேரளா அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் .வதந்தி பரப்பும் அணை 999 திரைப்பட இயக்குனரை கைது செய்ய வேண்டும் .
மனித நேய அடிபடையில் மனிதாபிமான அடிப்படையில் நாடு அமைதியாக இருக்க கேரளா ஒத்துழைப்புத் தர வேண்டும் .வீண் வம்பை விலைக் கொடுத்து வாங்க வேண்டாம் என்று கேரளாவிற்கு எச்சரிக்கை செய்கிறோம் .இங்குள்ள மனிதாபிமானமுள்ள  மலையாளிகளும்  அவர்கள் சங்கத்தின் சார்பாக கேரளாவிற்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் .தமிழன் சண்டைக்குப் போக மாட்டான் அனால் வந்த சண்டையை விட மாட்டான். என்பது வரலாறு .    
 
     
திடமாக உள்ள அணையை உடைக்க  வேண்டும்  .புதிய அணை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து பொய்யாகக் குரல் கொடுக்கிறார்கள். பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னாலும் மெய் ஆகி விடாது .பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு ,தமிழன் பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் தாங்க முடியாது .மனிதாபிமானத்தை ஏமாளித்தனம் என்று தவறாக எண்ணி விடாதீர்கள் .   மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி கேரளாவில் ஆளும்  காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக எச்சரிக்கை செய்ய வேண்டும் .தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில்தான்    மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்டு கொண்டு  இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

வெளியீட்டு விழா அழைப்பிதழ் .


வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களின் உதவியாளர் கவிஞர் பா .மீனாட்சிசுந்தரம் அவர்களின் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ் .

நூல் ஆசிரியர்  கவிஞர் பா .மீனாட்சிசுந்தரம்  செல் 9677007177
மின்னஞ்சல்கள்   poetmeenachisundaram@gmail.com

செவ்வாய், 29 நவம்பர், 2011

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்

நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை


  விமர்சனம் கவிஞர் இரா .இரவி


ஈழத்தமிழர் படுகொலைக்கு ஈர மனதுடன் தொடர்ந்து துணிவுடன் குரல் கொடுத்தவர் .கவிதை எழுதுவதோடு மற்ற கவிஞர்கள் போல நின்று விடாமல் கவிதையாக வல்ல்ந்து வருபவர் நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை.முதல் கவிதை நூல் இது .இந்த கவிதை நூல்தான் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆவதற்கு அடித்தளமாக இருந்து உள்ளது .இயக்குனர் இமயம்  பாரதி ராஜா ,கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோரின் அணிந்துரை அற்புதமாக உள்ளது .

பரிசுப்பெற்ற கவிதைகள் பல்  வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .ஆணாதிக்க திரைப்பட  உலகில் நல்ல பல காதல் பாடல்கள் எழுதி தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் .பெண்ணுரிமைக் குரலாக ஒலித்துள்ளார் .
காதல் உணர்வுக் கவிதை ஊறுகாய் போல உள்ளது .சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் சோறுப் போல உள்ளது .பாராட்டுக்கள்

காதலின் சுவடுகள்


வலி பார்த்ததும் விழி பூத்ததும்

உயிர் போனதும் உடல் வாழ்வதும் 
நேற்றுதான் நிகழ்ந்ததாய்
நெஞ்சிலே வேகுதே !

சிறுமியாக இருந்தபோது திருவிழாவில் தொலைந்து போது குடும்பமே பதறியது திருமணமாகி சுயம் இழந்து    தொலைந்த போது யாருமே தேடவில்லை என்ற ஒப்பீட்டுக் கவிதை மிக நன்று .


தொலைந்து போனேன் !


என் பெயரே மறந்து போனேன் -என்

மணவிழாவில் நான் தொலைந்து போனேன்
ஆனால்
யாரும் என்னைத் தேடவில்லை !

கவிதையில் கடைசி வரியில் முத்தாய்ப்பாக முடிப்பது தனிக் கலை .கவிஞர் தாமரைக்கு அந்தக் கலை நன்றாக வந்துள்ளது .


வாழ்க்கைப் பிரச்சனை !


அந்த மழை நாள் இரவை

எங்களால் மறக்க முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல் !

கற்பில் சிறந்தவள் கண்ணகியா ?மாதவியா ?என்று கவிதைப் பட்டிமன்றம் நடத்தி அதில் கவிஞர் தாமரை சொல்லியுள்ள தீர்ப்பு மிக சிறப்பு .புதிய சிந்தனை .

நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற தீர்ப்பு இது .இதோ !

அமைதியாய்க் கேட்ட நடுவர்    

அழுத்தமாய்ச் சொனார்
தீர்ப்பு ...
சந்தேகமே இல்லை
இருவருமே கற்பில்
சிறந்தவர்கள்தாம் ..
கற்பிழ ந்தவன்  கோவலனே  !

 கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் என்ற கருத்தை வழி மொழிவது போலகவிதை  உள்ளது  .கற்பு என்ற சொல்லே ஆணாதிக்க வாதிகளால் கற்பிக்கப் பட்டக் கற்பனைச் சொல்  .என்னை பொறுத்தவரை ஒழுக்கம் என்ற சொல்லே பொருத்தம் .
தேநீர்  விருந்து  கவிதையில் சுத்தம் செய்யும் தொழிலாளியின் சிரமத்தை ,ஏழ்மையை கவிதையில் காட்சிப் படுத்தி உள்ளார் .

ஒட்டடை


யார் அடிப்பது

மனசின் ஒட்டடை ?

கவிதையின் கடைசி வரியின் மூலம் மனிதர்களின் மன அழுக்கைப் படம் பிடித்துக் காட்டு கின்றார் .

நரை என்பது எல்லோருக்கும் வரக் கூடிய பிரச்னை .அதனை எள்ளல் சுவையுடன் கவிதையில் உணர்த்துகின்றார் .

முதல்   நரை


அந்த முதல்   நரைக்கு அஞ்சி

மொட்டையடித்துக் கொண்டேன் .

ஆனால் இன்று பலரும் மொட்டை அடிப்பதில்லை கருப்ப்பு வண்ணம் பூசி இளமையாகக் காட்சி தருகின்றனர் .

மயிலிறகைக் காணவில்லை கவிதையில் குழந்தையின் மனதைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் .  

தமிழீழம் மலர்ந்ததின்று


தமிழீழம் மலர்ந்ததின்று

கண்ணில் கண்ட யார்க்கும்
தடையின்றிப் பூங்காற்று
சேதி கொண்டு சேர்க்கும் .

கவிஞரின் ஆசை ஒரு நாள் நிறைவேறும் .ஈழத்தமிழரின் வாழ்வில் விடியல் விளையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .


தீலிபா!


உயிருக்கு  நீ தந்த  மரியாதை

உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே !
தமிழன் தலை இனி நிமிர்ந்தே இருக்கும்
காலுக்குக் கீழே வேராய் நீ
உறைந்து விட்டதால் !

இந்தக் கவிதையின் மூலம் உண்ணா விரதம்  இருந்தே உயிர் துறந்த தீலிபனைக் காட்சிப் படுத்தி உள்ளார் .இன்று அரசியல்வாதிகள்  உண்ணா விரதத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டனர் .


நாம் அடிக்கடி கேட்டுப்  பழகிய சொற்களை வைத்து ஆணாதிக்க சமுதாயத்தின் கன்னத்தில் அறையும் வண்ணம் ஒரு கவிதை .


எதிர்வினை !


கொலையும் செய்வாள்

பத்தினி
கொஞ்சம்  இரு
முன்னதாக
நீ என்ன செய்தாய் ?

கவிஞர் தாமரை கவிதை நூல்களை தொடர்ந்து வெளியிடுங்கள் .என்ற என் வாழ்த்தை எழுதி   முடிக்கின்றேன்.


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

திங்கள், 28 நவம்பர், 2011

மயக்கம் என்ன திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மயக்கம்  என்ன

இயக்கம் செல்வராகவன்


நடிப்பு தனுஷ்


திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி


செல்வராகவன் படம் என்றால் இனிமேல் யோசித்துப் பார்த்து ,முடிவு கேட்டு   விட்டுதான் செல்வேண்டும் .இடைவேளைக்குப் பின்பு திரைஅரங்கில் அமர்ந்து இருப்பதே பெரிய சோதனை ஆகிவிட்டது .செல்வராகவன் மனம்  போன போக்கில் திரைக்கதை அமைத்து உள்ளார் .குறிப்பாக நமது தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பலருக்கு மன நோயாளிகள்   கதையை பெரிதுப் படுத்தி சமுதாயத்தில் மன நோயாளிகளை உருவாக்குவதே நோக்கமாகக் கொண்டு படம் எடுத்து வருகின்றனர் .


நடிகர் தனுஷ் பக்கத்துவீட்டுப் பையனை ப்  போல  இருப்பதாலும் ,ஒல்லியான உடம்பை வைத்துக் கொண்டு  நன்றாக சண்டை போடுவதாலும் பலரும் ரசித்தனர்.அண்ணன் செல்வராகவன் தம்பி தனுஷை வீணடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும் .படத்தில் சண்டைக் காட்சி எதுவும் இல்லை. தனுஷ்எடுத்த பறவை .புகைப்படத்தை தான் எடுத்த  புகைப் படம் என்று ஏமாற்றி விருது பெரும் வில்லனை படம் பார்க்கும் நமக்கே அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் கதாநாயகன் தனுஷ் அடிக்க மாட்டார் . 


படம் முழுவதும் தண்ணி அடித்துக் கொண்டே இருக்கிறார்கள் .நண்பனின் தந்தை மகனுக்கும் மகனின் நண்பர்களுக்கும் தண்ணி ஊற்றி ஊற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.நல்ல பண்பாடு வளர்க்கும் திரைப்படம் .குடியை மறந்த குடிகாரகள்  படம் முடித்தவுடன் நேராக டாஸ்மாக் சென்று விடுவார்கள். ஏற்கெனவே சமுதாயம் சீரழிந்து வருகின்றது .இது போன்ற படங்கள் சமுதாயத்தை இன்னும் சீரழிக்கும்  .அப்படி ஒரு திரைக்கதை இந்தப்படம் .தனுஷ் நண்பன் என் காதலி என்று நண்பன் அறிமுகம் செய்து  வைக்கிறான் அவளோ டேடிங் என்று சொல்லிவிட்டு ,அவனை விட்டு விட்டு நண்பனைதனுஷை காதலிக்கிறாள். கட்டிப் பிடிக்கிறார்கள் .நண்பன் பார்த்து விட்டு குமுறுகிறான் .அரை மனதுடன் அவர்களுக்கே  திருமணம் செய்து வைக்கின்றனர் .


தனுஷ் எடுத்த புகைப்படத்தை தான் எடுத்த  புகைப்படம் என்று சொல்லி விருது பெற்ற வில்லனின் பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது .அதை பார்த்து விட்டு  தொலைக்காட்சி பெட்டியைப் போட்டு உடைக்கிறார்.ஏன் ? என்று கேட்ட கர்ப்பிணி மனைவியை தள்ளி விட்டுக் கருவை சிதைக்கிறார்.தோழியின் திருமணதிற்கு சென்ற தனுஷ் தோழியின் கணவன் மாப்பிள்ளையை திருமணத்தன்றே பாட்டிலால் அடித்து மண்டையை உடைக்கிறார். இப்படி மன நோயாளி ஆனவர், பின் .மனைவி பத்திரிகைக்கு அனுப்பிய புகைப்படத்தின் காரணமாக .வன விலங்கு படப்பிடிப்பு வாய்ப்பு வந்து, உலக விருது பெறுகிறார் .கடைசி சுபம் எப்போது ? போடுவார்கள் .படம் எப்போது ?முடியும் என்று ஆவலோடு எதிர் பார்க்க வைத்து விட்டார் படம் பார்க்கும் போதே செல்வராகவன் என்ன ?ஆனதோ என்று எண்ணத் தோன்றுகிறது .


திரைப்படம் என்பது வலிமையான ஊடகம் அதனை மக்களுக்கு நாள் செய்திகள் சொல்லப் பயன் படுத்துங்கள் .சைக்கோ கதை எடுப்பதற்கு இனி தடை விதிக்க வேண்டும் .படத்தில் ஆறுதலான விஷயம் விளம்பரத்தில் வந்த ரிச்சா கதாநாயகி அழகாக  இருக்கிறார் .நன்றாக நடித்து உள்ளார் . அவருக்கு  நல்ல எதிர்காலம் உண்டு .ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது .வன விலங்குக் காட்சிகளைப் பாராட்டலாம் .இசை சிறப்பாக உள்ளது.நடிகர் தனுஷ் அடிடா உதைடா என பாட்டு எழுதுவதையும் ,பாடுவதையும் நிறுத்தி விட்டு படத்தில் நடிப்பதை  மட்டும் செய்வது நலம் .இனி வருங்காலங்களில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்காமல் இருப்பதும் நலம் .


--

சனி, 26 நவம்பர், 2011

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்    பயிலரங்கம்


மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்
பயிலரங்கம் நடைப்பெற்றது .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர்

எ .எஸ்
.ராஜராஜன் வரவேற்றார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா
.இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார்.   .ஒருங்கினைப்பாளார்
திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .மன நலம் சற்று குன்றிய தன்னம்பிக்கை
வளம்  மி குந்த ஜோ .சம்பத் குமார் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது .ஆ
.முத்து கிருஷ்ணன் ,ஜி .ராம மூர்த்தி ,நீத்தி வாழ்த்துரை வழங்கினார்கள்
.கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,கே .விஸ்வநாதன் ,மதுரை ஆனந்தன்
,குருநாதன் ,குமுதம் ஆறுமுகம் ஆகியோர் தன்னம்பிக்கை தொடர்பான கவிதை
வாசித்தனர் .திருமதி பா .உஷா மகேஸ்வரி  தாம்பத்தியமும் ஒரு
தன்னம்பிக்கையே என்ற தலைப்பில்    தன் முன்னேற்றப்    பயிற்சி அளித்தார்
. குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து ,புரிந்து கொண்டு
வாழ வேண்டிய அவசியத்தை விளக்கிக் கூறினார்கள் .ஜோதி மகாலிங்கம் வருகை
தந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கி நன்றி கூறினார் .மதுரை தன்னம்பிக்கை
வாசகர் வட்டத்தினர் பெருமளவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .

மேடைப் பயணங்கள்நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

மேடைப் பயணங்கள்

நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

அமுதம் பதிப்பகம் ,155.டெபுடி கலெக்டர் காலனி , வது தெரு ,கே .கே .நகர்
,மதுரை .20.   விலை ரூ 120

சில ஓவியங்களைப் பார்த்தால் வரைந்த ஓவியரின் பெயரைக் கூறி   விடலாம்
.குறிப்பாக ஓவியர் அரஸ் அவர்களின் ஓவியத்தை பார்த்தவுடன் யாரும் சொல்லி
விடலாம் .அந்த அளவிற்கு தனித்துவமான ஓவியம் வரைவதில் வல்லவர்  ஓவியர்
அரஸ்.நூலின் முகப்பில் நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் ஓவியத்தை
மிகச் சிறப்பாக வரைந்துள்ளார். பாராட்டுக்கள் .

பாக்கியம் ராமசாமி அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது.
எல்லோரும் படிக்க வேண்டிய அற்புத நூல் .குறிப்பாக பேச்சாளர் ஆக விருப்பம்
உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் கடந்து வந்த பாதையை முதல் மேடை
தொடங்கி இன்றுவரை சந்தித்த அனுபவங்களை மலரும் நினைவுகளை மறக்காமல் பதிவு
செய்துள்ள நூல் .நகைச் சுவை உணர்வுடன் நூலை எழுதியுள்ளார் .நூலைப்
படித்து முடித்தவுடன் முழு நீள  நகைச் சுவை திரைப்படம் பார்த்த உணர்வு
வருகின்றது .அதுதான் நூலின் வெற்றி. பேச்சாளர் எப்படி நடந்து கொள்ள
வேண்டும் என்று விளக்கும் விளக்காக நூல் உள்ளது .

நீங்கள் நம்ப மாட்டீர்கள் ,நான் பேசிய முதல் வார்த்தைக்கே கைதட்டு
வாங்கினேன் .1 1/2 வயது நான் பேசிய முதல் வார்த்தை அம்மா  கைதட்டியதுயார்
தெரியுமா ? என் அம்மா ,என் குடும்பத்தாரும்தான்  என்று நான்
வேடிக்கையாகப் பதில் சொன்னேன் .
இப்படி நகைச் சுவை உணர்வுடன் நூல் முழுவதும் மிக எளிய இனிய நடையில் நூல்
எழுதியுள்ளார் .

பள்ளியில் படித்தபோது முதல் மேடையில் தன பெயரையே சொல்ல மறந்த அனுபவத்தை
மறைக்காமல் பதிவு   செய்துள்ளார் . நூல் ஆசிரியரின் நேர்மையைப் பாராட்ட
வேண்டும் .பக்தியை  விட  தொண்டே சிறந்தது என்று மாணவனாக இருந்தபோதே
பேசிப் பாராட்டுப் பெற்றது .இப்படிப் பல நிகழ்வுகளை சுவைபட நூலில் எழுதி
உள்ளார் .மறைந்த  குன்றக்குடி   அடிகளார் நடுவராக இருந்தபோது ,தரமான
பட்டிமன்றங்களின் பொற்க்காலம்  என்றே சொல்ல வேண்டும் .நூல் ஆசிரியர்
,குன்றக்குடி   அடிகளார் பட்டிமன்றங்களை தேடித் தேடி ,ஓடி ஓடி பயணித்து
கேட்டு ரசித்த அனுபவங்களை நன்கு பதிவு செய்துள்ளார் .இன்று புகழ் பெற்றப்
பேச்சாளராக விளங்குவதற்கு அந்த அனுபவம்தான் உரமாக அமைந்தது என்பதை
உணர்த்துகின்றார் .

 பார்வையாளராக இருந்தவர் பேச்சாளராக மாறி மறைந்த குன்றக்குடி   அடிகளார்
தலைமையில் வழக்காடு மன்றத்தில் வழக்குத் தொடுப்பவராகவும், வழக்கை
மறுப்பவராகவும் இரட்டை வேடம்  இட்டு, மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளி
என்றும்  மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளி அல்ல என்றும் ,வாதாடிய
அனுபவம்தான் சிறந்த பேச்சாளர் ஆவதற்கு உதவியதைஎன்பதை  உணர்த்துகின்றார் .

சிறு வயதில் அப்பா கேட்டுக் கொண்டதனால் மார்கழி மாதம் திருப்பாவை வகுப்பு
எடுத்த அனுபவம் பின்னாளில் பேராசிரியர் பணிக்கும் ,பேச்சுத் துறைக்கும்
உதவியாக இருந்தது என்பதை நூலில் பதிவு செய்துள்ளார் .
ரசித்துச் சிரிக்க கூடிய நல்ல பல நகைச் சுவை நூலில் உள்ளது .மிருகக்
காட்சி சாலை சென்றபொழுது நீர் யானை  நீர் ... யானை என்று பேசிய சொல்
விளையாட்டை தமிழின் சிறப்பை நன்கு எழுதி உள்ளார் .

பட்டிமன்றம் பேச  காரில் சென்றவர்களை ஊர் மக்கள் அனைவரும் வந்து
வரவேற்பது  கண்டு வியந்து பார்த்தபோது .அவர்கள் புது திரைப்படத்தின் படப்
பெட்டி வருவதாக நினைத்து ,வந்து வரவேற்று ஏமாந்து ,படப் பெட்டி வரும் வரை
பட்டிமன்றம் பேசுங்கள் என்று சொன்ன நிகழ்வை நூலில் விளக்கி உள்ளார் .

மேடையில் பேசுகின்ற பெருமக்கள்   சில உயர்ந்த குறிக் கோள்களைக்
உடையவர்களாக இருக்க வேண்டும் .பேசுகிறபோது கீழான சொற்களையோ ,வேறு பொருள்
தரும்படியான வார்த்தைகளையோ ,பிறர் மனம் புண்படும் படியான செய்திகளையோ ஒரு
போதும் கூறக்   கூடாது .என எங்கள் பேராசிரியர் சொல்லிக் கொண்டே இருப்பார்
என்று நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார் .இந்த வைர வரிகளை ஒவ்வொரு
பேச்சாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

 தோற்றத்தை வைத்து யாரையும் எளிதாக எண்ணி விடாதீர்கள் என்று எச்சரிக்கைத்
தரும் நிகழ்வு நூலில் உள்ளது .
வளர்ச்சிக்கு அடிப்படை
முயற்சி +பயிற்சி =வளர்ச்சி
கட்டுரையின் தலைப்புகளே தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக உள்ளது.
மதுரையில் மீனாட்சி மருத்துவமனையில் நகைச் சுவை மன்றம் தொடங்கி
20ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருவதற்குக் காரணமான மருத்துவர் ந
.சேதுராமன் அவர்களைப் பற்றி நூலில் குறிப்பிட்டுள்ளார் .  இன்றைய
தொலைகாட்சி புகழ் பேச்சாளர்கள் பலரும் மதுரை நகைச் சுவை மன்றத்தில்
பேசிப்  பயிற்சி பெற்றவர்கள் என்ற உண்மையைப் பதிவு செய்துள்ளார்.

பாம்புப் புற்றின் மீது மேடை அமைத்தது தெரியாமல் பட்டி மன்றம் பேசிய
திகில் அனுபவங்கள் சுவையாக உள்ளது .
திரைப்படம் போல ஒரு பாடல் காட்சி நேரத்தில் வெற்றி பெற்று விட முடியாது
.தான் இந்த நிலைக்கு வர பட்ட கஷ்டங்கள் ,பயணித்த பயணங்கள் ,சந்தித்த
அவமானங்கள் ,பெற்றப்  பயிற்சி ,சந்தித்த மனிதர்கள் என அனைத்தையும் சுவைபட
எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல சிறந்த
எழுத்தாளர் என்பதை பறைசாற்றும் விதமாக நூல் உள்ளது .

வெள்ளி, 25 நவம்பர், 2011

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் ! கவிஞர் இரா .இரவி

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி

என்ன ? வளம் இல்லை நம் தமிழ்  மொழியில்
ஏன்? கையை    ஏந்த வேண்டும் பிற மொழியில்

அழகுத்  தமிழ்ச்  சொற்கள் ஆயிரம் இருக்கையில்
அந்நிய மொழிச் சொற்கள் கலப்பது மடமை

உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு
மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு

வாழ வந்தவர்கள் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்
வாழ வந்தவர்கள் எம்மை ஆள நினைப்பது தவறு

தமிழ் என்ற அமுதத்தில் திட்டமிட்டே வட மொழி
நஞ்சுக் கலக்கும் வஞ்சகர்கள் திருந்தட்டும்

முதலில் தோன்றிய மூத்தமொழி நம் தமிழ் மொழி
இளையமொழிகள் தமிழை அழிக்க நினைப்பதா ?

ஈடில்லா இலக்கிய இலக்கணங்கள் நிறைந்த மொழி
எண்ணிலடங்கா சொற்களைக்  கொண்ட தமிழ் மொழி

திரு என்ற சொல்லை ஸ்ரீ என்று எழுதாதீர்கள்
தீந்தமிழில் வட மொழி  நஞ்சுக் கலக்காதீர்கள்

தமிழைத் தமிழாக எழுதுவோம் பேசுவோம்
தமிழின்றி பிற மொழிச் சொற்களைத் தவிர்ப்போம்

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !
பைந்தமிழின் பெருமையை தரணிக்குப் பறைசாற்றுவோம் !

வானம் வசப்படும்நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி

வானம் வசப்படும்

நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி

நூல் விமர்சனம் கவிஞர் இரா  .இரவி

வானம் வசப்படும்  என்ற நூலின் தலைப்பே தன்னம்பிக்கை விதைப்பதாக உள்ளது .
நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி மாற்றுத் திறனாளி .மிகச் சிறப்பாக
ஹைக்கூ கவிதைகள் வடித்து உள்ளார் .
கவிஞர்கள் புதுவைத் தமிழ் நெஞ்சன் ,கன்னிகோயில் ராஜா ,வசீகரன் ஆகியோரது
அணிந்துரை நூலிற்கு அணி சேர்கின்றது .
ஹைக்கூ வின் சிறப்பம்சம் மூன்றாவது வரியில் ஒரு முத்திரை இருக்கும்
.வாசகர் எதிர்பார்க்காத திருப்பம் இருக்கும் .

அழுதாள்
அணைத்தேன்
இறந்தது மெழுகுவர்த்தி

எங்கும் எதிலும் கலப்படம் உள்ளது என்ற அவலத்தைச் சாடிடும் ஹைக்கூ

விசம் சாப்பிட்டான்
ஏமாந்தான்
கலப்படம்

மற்ற கலப்படம் உடலுக்குக் கேடு .ஆனால் இந்த விசத்தின் கலப்படம் ஒரு
உயிரைக் காப்பாற்றி விட்டது என்று சந்தோசப்படலாம் .
  மொய் செய்தல் சீர் செய்தல் இதன் காரணமாக பல சிரமங்கள் நடுத்தரக்
குடும்பங்களுக்கு .இதனை உணர்த்திடும்  ஹைக்கூ

காது குத்தியாச்சு
வலித்தது மாமனுக்கு
சீர் செலவு

ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களைப் போல காட்சிப் படுத்தும் ஹைக்கூ வடித்துள்ளார் .

நிலாவில் கால் வைத்தான்
அம்மணச் சிறுவன்
தேங்கிய மழை நீர்

உழைப்பவர்கள் யாவரும் துன்பத்தில் வாடுகின்றனர் .அவர்களின் வாழ்வில்
விடியல் விளைய வில்லை என்பதை உணர்த்திடும் ஹைக்கூ

வெளுத்துப் போட்டவனுக்கு
அழுக்குச் சட்டை
சலவைத் தொழிலாளி

வரதட்சணைக் கொடுமையை குறிப்பாக பெண்ணைப் பெற்றோர் படும் துன்பங்களை  மிக
நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .ஹைக்கூ கவிதைகளுக்கு சொற்களில் சிக்கனம்
அவசியம் ..அந்த வகையில் படைத்துள்ள ஹைக்கூ .
இதோ!

சொந்த வீடு
வாடகையானது
மகளுக்கு திருமணம்

மனிதாபிமானம் இன்றி மனிதர்கள் கவனிக்காமல் உள்ள பிணத்தைப் பற்றி ஒரு
ஹைக்கூ வடித்துள்ளார் .

அனாதைப்பிணம்
துக்கம் விசாரித்தன
ஈக்கள்

மின்தடை காரணமாக மக்கள் மிகவும் வேதனை அடைந்து வருகிறார்கள் .ஆட்சி
மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற வேதனையில் உள்ளனர் .மின்தடையைக் கூட
நேர்மறையாகச் சிந்திக்கிறார் .

முதல் இரவு
மின்தடை
சரியான சகுனம்

கிராமங்களில் மிகவும் பாசமாக ஆடு வளர்ப்பார்கள்
அதுவும் கடவுளுக்கு நேர்ந்து விட்ட ஆடு என்றால் மிகச் செல்லமாக
வளர்ப்பார்கள் .பக்கத்துக்கு நிலத்தில் மேய்ந்தாலும் அடிக்காமல்
விரட்டுவார்கள் .அதனையும் பார்த்து ஒரு ஹைக்கூ வடித்துள்ளார்.

நம்ப வைத்து
கழுதறுத்தான்
நேர்ந்து விட்ட ஆடு

கூ ட்டுக்குடும்பத்திற்கு பெயர் பெற்ற நமது நாட்டில்தான்
முதியோர்இல்லங்கள் பெருகி வருகின்றன .வேதனையான முதியோர்இல்லங்களையும்
நேர்மறையாகவே பார்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி

தெய்வங்கள் எல்லாம்
ஒரே இடத்தில
முதியோர்இல்லம்

நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி மூடநம்பிக்கையையும் சாடி உள்ளார் .

விபத்து
துண்டானது
ராசிக்கல் விரல்

வாழ்த்துக்கள் தொடந்து எழுதுங்கள்.

நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி செல் 9095989658

மதுரை உயர் நீதி மன்றத்தில் கவிஞர் இரா .இரவி யின் சுட்டும் விழி நூல் அறிமுக விழா
மதுரை உயர் நீதி மன்றத்தில் கவிஞர் இரா .இரவி யின் சுட்டும் விழி நூல் அறிமுக விழா

மதுரை உயர் நீதி மன்றத்தில் கவிஞர் இரா .இரவி யின் சுட்டும் விழி நூல் அறிமுக விழா

மதுரை உயர் நீதி மன்றத்தில் கவிஞர் இரா .இரவி யின் சுட்டும் விழி நூல் அறிமுக விழா

மதுரை உயர் நீதி மன்றத்தில் ,மகளீர் வழக்கறிஞர்கள் சங்கத்தில் ,
சுட்டும் விழி நூல் அறிமுக விழா நடைப்பெற்றது .சங்கத்தின் தலைவிJ. நிஷா
பானு வரவேற்றார் .நீதியரசர் K.N.பாஷா சுட்டும் விழி நூல் அறிமுகம்
செய்து தனக்குப் பிடித்த ஹைக்கூ கவிதைகளை மேற்கோள் காட்டி விமர்சன
உரையாற்றினார் .நீதியரசர் பாஷா நினைவுப்பரிசினை நூல் ஆசிரியர் கவிஞர்
இரா .இரவிக்கு வழங்கிப் பாராட்டினார் .

சிரிப்பும் சிந்தனையும் என்ற தலைப்பில் தொலைக் காட்சிப் புகழ் விளாங்குடி
விநாயக மூர்த்தி உரையாற்றினார் .
நீதியரசர் V.ராம சுப்ரமணியன் சுட்டும் விழி நூலைப் பெற்றுக் கொண்டு ,எது
தரமான நகைச் சுவை என்று விளக்க உரையாற்றினார் .

விழாவிற்கான ஏற்பாட்டை வழக்கறிஞர் கு .சாமிதுரை செய்தார் .மதுரை உயர்
நீதி மன்ற வழக்கறிஞர்கள் இரு பாலரும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை
சிறப்பித்தனர் . மகளீர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலர் J. ஆனந்தவள்ளி
நன்றி கூறினார்

வியாழன், 24 நவம்பர், 2011

இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வருக !


இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வருக !

முனைவர் வெ.இறையன்பு இ. ஆ.ப அவர்களின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

நாள் 10.12.2011 சனிக் கிழமை

மாலை 5.30 மணி

இடம் . சர் .பிட்டி .தியாகராயர் கலையரங்கம்

கவியரசு கண்ணதாசன் சிலை அருகில்

ஜி .என் .செட்டி சாலை ,தி .நகர் ,சென்னை .17

--

புதன், 23 நவம்பர், 2011

முனைவர் வெ.இறையன்பு இ. ஆ.ப அவர்களின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வருக !

முனைவர்  வெ.இறையன்பு இ. ஆ.ப அவர்களின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

நாள்  10.12.2011    சனிக் கிழமை

மாலை    5.30 மணி

இடம்  . சர் .பிட்டி .தியாகராயர் கலையரங்கம்

கவியரசு கண்ணதாசன் சிலை அருகில்

ஜி .என் .செட்டி சாலை ,தி .நகர் ,சென்னை .17


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

 கண் தானம் செய்வோம் !!!!!

செவ்வாய், 22 நவம்பர், 2011

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

http://eluthu.com/kavithai/46866.html
http://eluthu.com/kavithai/46000.html
-- http://eluthu.com/kavithai/44273.html
http://eluthu.com/kavithai/44271.html
http://eluthu.com/kavithai/44099.html
http://eluthu.com/kavithai/42140.html
http://eluthu.com/kavithai/41849.html
http://eluthu.com/kavithai/41676.html
http://eluthu.com/kavithai/41232.html
http://eluthu.com/kavithai/40674.html
http://eluthu.com/kavithai/40236.html
http://eluthu.com/kavithai/40146.html
http://eluthu.com/kavithai/39745.html
http://eluthu.com/kavithai/39743.html
http://eluthu.com/kavithai/39739.html
http://eluthu.com/kavithai/37987.html

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ        கவிஞர் இரா .இரவி

ஒரே நேரத்தில் முப்படைத் தாக்குதல்
பேருந்து பால் மின்சாரம்
கட்டண உயர்வு

ஏறுகின்றது விலைவாசி
ஏறவில்லை ஊதியம்
தனியார் நிறுவனங்களில்

கையில் வாங்கி
பையில் போடவில்லை
வாங்கினார் நடத்துனர்

விஞ்சியது
விமானக் கட்டணத்தை
பேருந்துக்  கட்டணம்

அரவை இயந்திரங்கள் சிலருக்கு
விலைவாசி அரவையோ
அனைவருக்கும்


வாழ்க்கையில் போராடலாம்
போராட்டமே வாழ்கையானது
ஏழைகளுக்கு

இறக்குவேன் என்பார்கள்
ஏறியதும் ஏற்றுவார்கள்
விலைவாசி

ஏழை எளிய மக்கள்
வெந்தப்  புண்ணில் வேலாக
விலைவாசி

வேண்டாம் புள்ளிவிபரம்
வேண்டும் விலைக்குறைப்பு
மக்கள் விருப்பம்


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

 கண் தானம் செய்வோம் !!!!!

திங்கள், 21 நவம்பர், 2011

கலை இலக்கியப் பெருமன்றம் மதுரை சார்பில் பாராட்டுச் சான்றிதழ்.

கலை இலக்கியப் பெருமன்றம் மதுரை சார்பில்   மணியம்மையார்  தொடக்கப் பள்ளியில் நடைப்  பெற்ற கவிதை வாசிப்பில் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற தலைப்பில் கவிஞர் இரா .இரவி கவிதை வாசித்தார் .கவிஞர்கள் மஞ்சுளா .குமுதம் ஆறுமுகம் ,கலைத்தாமரை ,ஜன சிந்தன் ,குருநாதன் மற்றும் பாத்திமா கல்லூரி மாணவிகள் இருவர் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர் . அனைவருக்கும் பாராட்டுச்  சான்றிதழ் வழங்கப் பட்டது . கலை இலக்கியப் பெருமன்றம் மதுரை தலைவர் கவிஞர் மு .செல்லா .கலை இலக்கியப் பெருமன்றம் மதுரை துணைத்தலைவர் கவிஞர் பேனா மனோகரன் .பேராசிரியர்கள் பா .ஆனந்த குமார் , சாகுல் அமீது ,கருணா மூர்த்தி ,எழுத்தாளர்  முத்து மோகன்,அழகு பாரதி  உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டு  விழாவை சிறப்பித்தனர் .மதுரை காமராசர்  பல்கலைக் கழக துணைப் பேராசிரியர் கருப்ப தேவன் கவிதை மதிப்பிடு செய்தார் .

வெள்ளி, 18 நவம்பர், 2011

ஜெயிக்கப் போவது நீ தான் !

ஜெயிக்கப்  போவது நீ தான் !

நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

அமுதம் பதிப்பகம் 155.டெபுடி கலெக்டர் காலனி வது தெரு .கே .கே .நகர்
மதுரை.20. விலை ரூ 80

நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்  புகைப்படத்துடன் அட்டைப்பட
வடிவமைப்பு அருமை .ஜெயிக்கப்  போவது நீ தான் ! என்ற நூலின் தலைப்பே
படிக்கும் வாசகனுக்கு    .ஜெயிக்கப்  போவது நீ தான் !  என்று
உணர்த்துவதுப் போல இருப்பதால்  நூலின் தலைப்பே நூலைப் படிக்க வேண்டும்
என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது .

முனைவர் தொ .பரமசிவம் அவர்களின் அணிந்துரை நூலிற்குத்  தோரண வாயிலாக
உள்ளது .அணிந்துரையில்  அவர்  குறிப்பிடுகிறார். அவரது நகைச் சுவையின்
வெற்றிக்குக் காரணம் அவரது புத்தக வாசிப்பு மட்டுமல்ல அவரது மனித
வாசிப்பும் கூடத்தான்.

 உண்மைதான்   நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்  தேனீயைப்    போல
அடிக்கடி பயணம் மேற்கொள்வார் .காலையில் மதுரையில் இருப்பார். மாலையில்
சென்னையில் இருப்பார் இரவு மதுரை வந்து விடுவார். விமானத்தில் மட்டும்
அல்ல காரிலும் பட்டி மன்றத்திற்காக பயணம் மேற்கொள்வார்.சலிக்காமல் பயணம்
செல்வார் .நானே நேரடியாகப் பார்த்து இருக்கிறேன் .அவரிடமே இது குறித்துப்
பாராட்டி இருக்கிறேன் .

அமெரிக்கா சென்று வந்து  கல்லூரியில்  வகுப்பு எடுத்து கொண்டு
இருந்தேன். ஒருவர் சொன்னார் கீழ வாசலில் இருந்து வந்தேன் ஒரே அலுப்பு
என்பார். எனக்கு அமெரிக்கா கீழ வாசல் மாதிரி அவருக்கு கீழ வாசல்
அமெரிக்கா மாதிரி .என்று அதற்கும் ஒரு நகைச் சுவை சொன்னார் .அவர் பயணம்
மேற்கொள்ளும் பொது சந்திக்கும் மனிதர்களை வாசிக்கிறார் என்பதே அவரது
வெற்றியின் ரகசியம் .

எழுத்தாளர் ச .தமிழ்ச்செல்வன் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது .நூல்
ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்  என்னுரையில் யாரையும் மறக்காமல்
நன்றி கூறி உள்ளார்    .குடும்ப  உறுப்பினர்கள் அனைவருக்கும்
வாழ்த்தையும் நன்குப் பதிவு செய்துள்ளார் .

25 தலைப்புகளில்  அவரது வெற்றியின் ரகசியத்தை  அம்பலப் படுத்தி வெற்றிப்
பெற்று உள்ளார் .ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பிலும் நம்மைச்  சிந்திக்க
வைக்கிறார் .   கட்டுரையின்  தொடக்கத்தில் வைர வரிகளுடன் பொன் மொழிகளுடன்
தொடங்குகிறார் .முகப்பு வரிகளை படித்தவுடனே  கட்டுரை கள்     முழுவதும்
படித்து விட்டுதான்  நூலைக் கிழே வைப்பார்கள் .அந்த அளவிற்கு மிக நல்ல
நடை .

ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் ,எடுப்பும் ,தொடுப்பும், முடிப்பும் மிகச்
சிறப்பாக உள்ளது .உலகப் பொது மறையான திருக்குறளை கட்டுரையில் பல்வேறு
இடங்களில் பொருத்தமாக மேற்கோள் காட்டி தன்னம்பிக்கை விதை
விதைத்துள்ளார்.பாராட்டுக்கள் .

முதல் கட்டுரையில் நினைத்தது நடக்கும் வரம் தரும் சித்தரை காணச்
செல்வதில்  தொடங்கி
எண்ணிய எண்ணியாங்கு  திருக்குறள்
நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிக்கும் வல்லமை மன உறுதி படைத்தவர்களுக்கு உண்டு .
முதல் தன்னம்பிக்கை ஆசிரியரான திருவள்ளுவரின் திருக்குறள் .இந்த ஒரு
குறள் வழி மனிதன் நடந்தால் போதும்  வெற்றி உறுதி .என்பதை உணர்த்தும்
விதமாக கட்டுரைகள் உள்ளது .( )அடைப்பு குறிகளுக்குள் உள்ள சில வரிகள்
நகைச் சுவை விதைக்கின்றன .எள்ளல் சுவையுடன் உள்ளது .

ஏழைக்  குழந்தைகளின் பசிப் போக்கிக் கல்வி தந்த வள்ளல் காமராசர் மதிய
உணவுத் திட்டம் கொண்டு வந்த  வரலாறு நூலில் உள்ளது .நூல் முழுவதும்
தமிழின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக ,சங்க இலக்கியப் பாடல்களும்
மேற்கோள் காட்டி உள்ளார் .

 கட்டுரைகளின் தலைப்பே தன்னம்பிக்கை விதைக்கின்றது .எல்லாம் இன்ப
மயம்,சோதனையே சாதனை ,காலம் உயிர் போன்றது ,பெரிதினும் பெரிது கேள்
,நினைவாற்றலே பெருஞ்செல்வம் இப்படி   தன்னம்பிக்கை விதைக்கின்றது .

கைகளே இல்லாத தூக்கனாங்   குருவி  அருமையான கூடு  கட்டுகிறது.கரையான்களோ
பெரிய புற்றை கட்டுகின்றன.
தேனீக்கள் ஆயிரம் அறைகள் கொண்ட கூ ட்டை  உருவாக்குகின்றன. சிலந்திப்
பூச்சி  தன உணவிற்கான வலையைத் தானே பின்னுகிறது .அவர் பெரியவர் இவர்
சிறியவர் என்று யாரையும் எளிதாக எடை போட வேண்டாம்.  எல்லா
மனிதருக்குள்ளேயும்  தனித் தனித் திறமைகள் உண்டு என்னும் கருத்தில் அவ்வை
பாடிய பாடலுடன்  கட்டுரை மிக அருமை .

நூல் முழுவதும் அனைத்து வயதினரும் விரும்பிடும் மிக எளிய நடையில் மிக
இனிய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார் .நன்றாகப் பேசுபவர்களுக்கு
நன்றாக எழுத வராது என்ற பழமொழியை முறியடிக்கும் வண்ணம், முந்தைய அவரது
நூல்களை விஞ்சும் வண்ணமும் நன்றாகப் பேசவும் வரும் நன்றாக எழுதவும் வரும்
என்பதைப் பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது.

என்ன வளம் இல்லை நம் இலக்கியத்தில் ஏன்? கையை ஏந்த வேண்டும் பிற
இலக்கியத்தில் என்று சொல்லும் விதமாக தன்னம்பிக்கை என்றால் சிலர்
அமெரிக்காவில் அவரைப்  பார்  ,ஜெர்மனியில் இவரைப் பார் என்று எழுதிவரும்
காலத்தில் .தன்னம்பிக்கை வேண்டுமானால் திருக்குறளைப் படி, அவ்வையின்
ஆத்திச் சூடிப்  படி, சங்க இலக்கியம் படி என்று கூறும் விதமாக நூல்
உள்ளது .

மரணம் குறித்த அச்சமோ மறுபிறப்புப் பற்றிய நம்பிக்கையோ இல்லை.
இருந்தாலும் இன்னும் இரண்டு நாட்கள் கிடைத்தால் இந்த அறிய நூல்
முழுவதையும் படித்து விடலாம் .என்று அறிஞர் அண்ணா மருத்துவரிடம்
வேண்டியதும் ,மருத்துவர் இரண்டு நாட்கள் தள்ளி அறுவைச் சிகிச்சை செய்து
கொண்ட வரலாறு நூலில் உள்ளது .

இந்த நூல் படித்தால் படித்த வாசகர்களுக்கு தன்னம்பிக்கை தொடர்பான வேதியல்
மற்றம் நிகழும் என்று அறிதியிட்டுச் சொல்லலாம் .வாசகர் மனதில் ஏதாவது
சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் தருகின்றது .தமிழன் என்பதில் பெருமிதம்
கொள்ளும் வண்ணம் நூல் எழுதிய  முனைவர் கு .ஞானசம்பந்தன் அவர்களுக்குப்
பாராட்டுக்கள்


புதன், 16 நவம்பர், 2011

புல்லாங்குழல் கவிஞர் இரா .இரவி

புல்லாங்குழல்     கவிஞர் இரா .இரவி

தீக்காயம் பட்ட போதும்
வருந்தவில்லை
புல்லாங்குழல்

காற்றை இசையாக்கும்
வித்தகக் கருவி
புல்லாங்குழல்

மவ்னமாகவே  இருக்கும்
காற்றுத்  தீண்டும் வரை
புல்லாங்குழல்

உருவில் சிறியது
உணர்வில் பெரியது
புல்லாங்குழல்

காட்டில் விளைந்து
காதோடு உறவாடும்
புல்லாங்குழல்

தீயால் துளைத்தபோதும்
இசை நல்கும்
புல்லாங்குழல்

இதழ் குவித்து விரல் பதித்து
காற்றுத் தந்ததும் இசைக்கும்
புல்லாங்குழல்

அன்று முதல் இன்று வரை
அற்புத இசை
புல்லாங்குழல்

எம்மொழியும் சம்மதம்
இனிய இசைப் பிறக்கும்
புல்லாங்குழல்

கானம் இசைத்து
கவலைப்  போக்கும்
புல்லாங்குழல்

பல இசையிலும்
தனித்துக் கேட்கும்
புல்லாங்குழல்

விழிகள் மூடி செவிகள் திறந்தால்
தேன் பாயும்
புல்லாங்குழல்

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

 கண் தானம் செய்வோம் !!

செவ்வாய், 15 நவம்பர், 2011

வேண்டாம் கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் கவிஞர் இரா .இரவி

வேண்டாம் கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம்  கவிஞர் இரா .இரவி

 அணு உலையை  அன்றில் இருந்தே சில உண்மையான மனிதாபிமானிகள் எதிர்த்து
வந்துள்ளனர் .இன்று மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது .எம் மக்கள்
உயிரைப் பணயம் வைத்தி அணு உலையில் மின்சாரம் எடுத்து கொலைகாரப் பாவி
ராஜபட்ஜெக்கு கொடுப்பீர்கள் .கொலைகார சிங்களர்களை  இந்தியாவின் செலவில்
இந்தியாவை சுற்றிக் காட்டுவீர்கள் .தமிழன் வாய் பொத்தி வேடிக்கைப்
பார்க்க வேண்டுமா ? அணு உலை வெடிக்க வேண்டாம் .அணு உலைக் குப்பை போதும்
தமிழ்நாட்டை அழித்து விடும் .தமிழினம் இப்போது விழித்து விட்டது.இனி
ஏமாற்று வேலை நடக்காது .பல கோடி செலவாகி விட்டதே இப்போது மூடச்
சொல்கிறார்களே என புலம்பும் கூட்டத்திடம் ஒரு கேள்வி? உங்க அப்பன் வீட்டு
பணமா ?அரசாங்கப் பணம்தானே போகட்டும் .பணம் போனால் திரும்ப கிடைக்கும்
.உயிர்கள் போனால் திரும்ப கிடைக்காது அரசியல்வாதிகள் கோடி கோடியாகக்
கொள்ளை அடிக்கிறார்களே அவர்களை என்ன செய்து விட்டீர்கள்  .

பல கோடி செலவழித்து சேது சமுத்திரம் திட்டம் வேலை நடைபெற்றதே .அப்போது
சில விசமிகள் கற்பனையாக ராமன் பாலம் என்று போய் சொல்லி அந்தத் திட்டத்தை
பாதியிலேயே நிறுத்திய போது .இப்போது கூடங்குளத்தில் அணு உலை மூடினால்
கோடிகள் நட்டம் என்று சொல்லும்  கூட்டம்அன்று மட்டும் அமைதியாக இருந்ததே
ஏன் ?

அணு உலை கழிவு    வருங்கால சந்ததிகளை பாதிக்கும் என்று வல்லுனர்கள்
எச்சரிக்கிறார்கள்.அணு உலை வேண்டும என்பவர்கள் அணு உலை அருகே வசிக்க
சம்மதமா ?மின்சாரம் இல்லை கிடைக்காது என்று கூ ச்சல்   இடுபவர்கள்
மின்சாரம் எடுக்க பல வழி  உண்டு அறிந்து கொள்ளுங்கள் .

அயல் நாடுகளில் சோலார் மூலம் மின்சாரம் வீடுகளில் எடுத்து அரசுக்கு
விற்பனை செய்கிறார்கள் .கோடிகளை சோலார் திட்டத்திற்கு செலவிடுங்கள் .வணிக
நிறுவனங்களில் விளம்பரத்திற்காக  விரயம் செய்வதை  நிறுத்துங்கள் .கேரளா
போல குண்டு    பல்பை அகற்றுங்கள் .
உங்களது ஆடம்பதிற்காக தமிழகத்தின் தென் மாநில மக்களின் உயிரை பணயம் வைக்க வேண்டுமா?

அணு உலையால்  பாதித்தால் நட்ட ஈடு கேட்டு வழக்கு போட முடியாது தெரியுமா
?உங்களுக்கு அப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு உள்ளனர் .நமது அரசியல்வாதிகள்
.போபால் விச வாய்வு  தாக்கி எத்தனை  பேர் மாண்டார்கள்   எத்தனை பேர் கை
,கால் இழந்தார்கள். எத்தனை குடும்பம்  அனாதை ஆனது .அவர்களுக்கு நட்ட ஈடு
இன்று வரை முறையாப் போய் சேரவில்லை .ஆனால் அந்த  நிறுவனத்தின்  அதிபதி
,கொலைகாரனை பாதுகாப்பாக தனி விமானத்தில் தப்ப விட்டவர்கள் நம் நாட்டு
அரசியல்வாதிகள் .

விலங்குகளுக்கு இல்லை பகுத்தறிவு ஆனால் மனிதனுக்கு பகுத்தறிவு உண்டு
அதனைப்  பயன்படுத்தி  எதையும்  ஏன் ?எதற்கு ?எப்படி ?என்று  யோசித்துப்
பாரக்க வேண்டும அவரே சொல்லி விட்டார் .இவரே சொல்லி விட்டார். என்பதற்காக
நம்பத் தேவை இல்லை .சொல்வது யார்? என்பது முக்கியம் அல்ல
என்ன ? சொல்கிறார் என்பதே முக்கியம் .நான் மதிக்கும் மிகச் சிறந்த மனிதர்
அப்துல் கலாம் ஆனால் அவரே சொல்லி விட்டார் என்பதற்காக அப்படியே  ஏற்க
வேண்டும என்று  அவசியம் இல்லை  நம் பகுத்தறிவு கொண்டு  சிந்தித்துப்
பார்க்க வேண்டும .நல்லது  கேட்டது ஆராய வேண்டும.

 போபால் விச வாய்வு விபத்துப்போல கூடங்குளத்தில் அணு உலைவிபத்து நடந்தால்
யார் பொறுப்பு ?அணு உலை தடை  செய்ப்பட்ட கனடாவில் பாதுக்காப்பாக வாழ்ந்து
கொண்டு , கூடங்குளத்தில்அணு உலை வேண்டும என்று  சொல்பவர் பொறுப்பு ஆவாரா
? நட்ட ஈடு தருவாரா ?இழந்த உயிர்களை திருப்பி தர முடியுமா ?

அணு உலை வேண்டாம் என்பவர்கள் மனிதாபிமானிகள்

அணு உலை வேண்டும என்பவர்கள் மனிதாபிமான மற்றவர்கள்

-
 

நூலகம் ஒர் ஆலயம் அல்ல கவிஞர் இரா .இரவி

நூலகம் ஒர் ஆலயம்  அல்ல           கவிஞர் இரா .இரவி

நூலகம் ஒர் ஆலயம்  அல்ல அல்ல
அதற்கும் மேலான ஒர் சொல் தேடுகின்றேன்

ஆலயத்தில் வேற்று மதத்தவருக்கு அனுமதி இல்லை
நூலகத்தில் எந்த மதத்தவருக்கும்  அனுமதி உண்டு

ஆலயத்தில் சாதிச் சண்டைகள் நடந்தது உண்டு
நூலகத்தில் சாதிச் சண்டைகள் நடப்பது இல்லை

ஆலயத்தில்  சில சாதியினரை அனுமதிப்பது இல்லை
நூலகத்தில் எல்லாச் சாதியினருக்கும் அனுமதிஉண்டு

ஆலயத்தில் மற்ற ஆலயத்தினர் வந்து இடிப்பது உண்டு
நூலகத்தில் மற்ற  நூலகத்தினர் வந்து இடிப்பது இல்லை

ஆலயத்தில் கருவறையில் உயிர்சாதிக்கு மட்டுமே அனுமதி
நூலகத்தில் எந்த சாதியினரும் எங்கும் செல்லாம்

ஆலயத்தில் தரும் பிரசாதம் மதக் குறியீடுகள்
நூலகத்தில்  தரும் நூல்கள் அறிவின் குறியீடுகள்

ஆலயத்தில் பூட்டி விட்டு சண்டைகள் நடப்பது உண்டு
நூலகத்தில்  பூட்டி விட்டு சண்டைகள் நடப்பது இல்லை

ஆலயத்தில்  சிலைகள் நகைகள் கொள்ளை நடப்பதுண்டு
நூலகத்தில்  நூல்கள் கொள்ளை என்றும் நடப்பதே இல்லை

ஆலயத்தில் உள்ள கடவுள்கள் நம்மோடு  பேசுவது இல்லை
நூலகத்தில் உள்ள நூல்கள் நம்மோடு உறவாடுவது உண்டு

கோயில் தேவாலயம் பள்ளிவாசல் பலசொற்கள் உண்டு
நூலகம் என்ற ஒற்றைச் சொல்லே எங்கும் உண்டு

இந்துக்களின் புனித  இடம்  ராமேஸ்வரம் என்பார்கள்
இஸ்லாமியர்களின்  புனித  இடம் நாகூர்   தர்கா என்பார்கள்

கிறித்தவர்களின் புனித  இடம் வேளாங்கண்ணி என்பார்கள்
எலோருக்கும் புனிதமான இடம் நூலகம் என்பேன் நான்

நூலகம் என்பது ஆலயம் அல்ல அல்ல
அதையும் தாண்டிப்  புனிதமானது நூலகம் இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog

சனி, 12 நவம்பர், 2011

போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள் ராஜபட்சே கவிஞர் இரா இரவி

போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள்   ராஜபட்சே
கவிஞர் இரா இரவி

இந்த ஆண்டின் ஈடு இணையற்ற நகைச்சுவை இதுதான் .
மக்கள் பிடிக்க ஓடி வரும்போது திருடன் ஓடிக் கொண்டே அதோ திருடன் பிடிங்க
, அதோ திருடன் பிடிங்க என்று சொல்லிக் கொண்டே ஓடுவான்.  புதிதாகப்
பார்ப்பவர்களுக்கு     திருடனை  விரட்டிக் கொண்டு ஓடுவது போல தோன்றும்
அப்படியே திருடன் தப்பி விடுவான் .

இந்தக் கதைதான் நினைவிற்கு வந்தது .ஐ . நா.மன்றம் போர்க் குற்றவாளியான
ராஜபட்சேயை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும் .விசாரணை ,அறிக்கை
என்ற பெயரில் நாட்களை நகர்த்தினால் மேல சொன்ன திருடன் கதை போல  ராஜபட்சே
தப்பி விடுவான் .
ஐ நா.மன்றம் இந்த விசயத்தில் உருப்படியாக நடவடிக்கை எடுக்கா விட்டால்,
உலக அரங்கில் ஐ நா.மன்றம் தன மதிப்பை இழக்க நேரிடும்.

மனிதாபிமானமற்ற முறையில் தமிழர்களைக் கொன்று குவித்த கொடூரன் யோக்கியன்
போல நாளும் உலக வலம் வருவது வேதனையாக உள்ளது .
சேனல் 4 வரிசையாக  ஒளிபரப்பிய காட்சிகளே போதும் .ராஜபட்சேயை    தண்டிக்க
வேறு என்ன ? ஆதாரம் வேண்டும் .இன்னும் என்ன ? சாட்சி எதிர்
பார்க்கிறார்கள்.

திருடன் கையிலேயே சாவி கொடுத்த கதையாக போர்க்குற்றம் புரிந்த ராஜபட்சே
அரசிடமே விசாரணை செய்யச் சொல்வது முட்டாள் தனம்.
ராஜபட்சே உடனடியாக தண்டிக்கப் பட வேண்டும் .உலகத் தமிழர்கள் யாவரும்
எதிர்பார்க்கும் விஷயம் இதுதான்.

உலகில் தமிழர்கள் இல்லாத நாடே இல்லை .உலக நாடுகள் முழுவதும் தமிழர்களின்
பங்களிப்பு உள்ளது .எனவே தமிழர்களின் கருத்தை மதிக்காமல் அமெரிக்காவும் ஐ
.நா .மன்றமும் நடப்பது சரி இல்லை .இந்நிலை தொடர்ந்தால் உலக அளவில்
தமிழர்கள் யாவரும்   அமெரிக்காவையும் ,
ஐ .நா .மன்றத்தையும் எதிர்க்க வேண்டிய நிலை வரும் என்பதை கவனத்தில் கொள்ள
வேண்டும் .

மலேசியா ,சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் அமைச்சரவையில் முடிவு
எடுக்கும் அதிகாரத்தில் தமிழர்கள் பலர் உள்ளனர் .எனேவே மனிதாபிமான
அடிப்படையில் போர்க்குற்றவாளி ராஜபட்சேயை  உடனடியாகத் தண்டிப்பதற்கு
நடவடிக்கை எடுக்கவேண்டும் .எடுக்கத் தவறினால் விளைவுகள் மிக மோசமாக
இருக்கும் .

உலக அளவில் பிரான்சில் ,கனடாவில் ,இங்கிலாந்தில்   ,அமெரிக்காவில் பல
நாடுகளில் உலகத் தமிழர்கள் போர்க்குற்றவாளி ராஜபட்சே யை உடனடியாகத்
தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மிக அமைதியான முறையில்
வேண்டுகோள் விடுத்தது நினைவில் கொள்ள வேண்டும் .

ஐ .நா .மன்றம் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துவதன் காரணமாக   உலக
அரங்கில் தன் மதிப்பை இழந்து வருகின்றது .ராஜபட்சேயுடன் ரகசிய குட்டணி
வைத்துள்ளதோ ? என்று சந்தேகம் வருகின்றது .

உலகத் தமிழர்களின் கருத்தை அலட்சியம் செய்தால் அது மிகப் பெரிய விளைவுகளை
ஏற்படுத்தும் என எச்சரிக்க ஆசைப் படுகின்றேன் .
--

ரோஜா கவிஞர் இரா .இரவி

ரோஜா   கவிஞர் இரா .இரவி

மலர்களில் அழகு ரோஜா !
மனம் கவர்ந்தவர்கள்
பரிமாறும் ரோஜா !
ஒற்றை ரோஜா !
ஓராயிரம் பேசும்
நிலவைப் போலவே
ரோஜாவைப் பார்த்தாலும்
சலிப்பதே இல்லை .
ரோஜாவைப் பார்த்தால்
அவள் நினைவு !
அவளைப் பார்த்தால்
ரோஜா நினைவு !
ரோஜாவைப்  பார்த்தால்
தவறு இல்லை .
பறித்தால் முள் குத்தும் .
அவள் அப்படித்தான்
ரசிக்க தடை இல்லை !

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!தெருவெல்லாம் தேவதைகள்நூல் ஆசிரியர் திரு. கோபிநாத்விமர்சனம் கவிஞர் இரா .இரவி

தெருவெல்லாம் தேவதைகள்

நூல் ஆசிரியர் திரு. கோபிநாத்

 விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நக்கீரன்   பதிப்பகம்  விலை 50 ரூபாய்

தெருவெல்லாம் தேவதைகள்  என்ற கவித்துவமான தலைப்பே காதல் கவிதை நூல் என்று
பறை சாற்றும் விதமாக உள்ளது .நூல் முழுவதும் காதல் கவிதைகளாக
இருந்தபோதும் ,இந்நூலை தேவதைகளின் எல்லா அம்சமும் பொருந்திய என்
அம்மாவுக்கு ! என்று சமர்ப்பணம் செய்து திரு.கோபிநாத்
 வித்தியாசப் படுகிறார் .
விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா  ? நிகழ்ச்சி மூலம் சமுதாயத்தில்
விழிப்புணர்வு விதைத்து வரும் திரு. கோபிநாத்  சிறந்த புதுக் கவிஞர்
என்று உணர்த்தும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .
இந்த உலகில் காதலிக்காதவர்கள் மிகச் சிலரே ! காதலிக்கும் பலருக்கும்
இந்நூல் நிச்சயம் பிடிக்கும் .காரணம் படிக்கும் வாசகர்களுக்கு அவரவர்
காதலை நினைவூட்டும் விதமாக கவிதைகள் உள்ளது .காதல் திரைப் படங்களில்
திரு. கோபிநாத்  அவர்களின் அனுமதியுடன் இக்கவிதைகளைப் பயன்படுத்தலாம்.
நூலில் நக்கீரன் கோபால் அவர்களும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களும்
வாழ்த்துரை வழங்கி  உள்ளனர் .  இயக்குனர் பாலாஜி சக்திவேல்
குறிப்பிட்டபடி இந்நூலில் சரியான வார்த்தைகள் சரியான வரிசையில்
இருக்கும்போது கவிதை ஆகின்றது .

என்னோடு பழகிப் பழகி இந்த கடிகார முட்களும்
இப்படி ஆகி விட்டன .
நீ இருக்கும்போது வேகமாக நகர்வதும்
இல்லாதபோது மெதுவாகச் சுழல்வதுமாய்!

கவிதைக்கு பொய்  அழகு என்பார்கள் .ஆம் ,கடிகாரம் சீராகத்தான் ஓடுகின்றது
.ஆனால் காதலன் பார்வையில் காதலி அருகில் இருக்கும்போது மிக விரைவாக
ஓடுவது போலத் தோன்றும் ,காதலி   இல்லாதபோது மிக மெதுவாக ஓடுவதுபோல
தோன்றும் .காதலனின் மன நிலையை நன்கு பதிவு செய்துள்ளார் .

என்னிடம் மாற்றம் இருப்பதாய் நிறையப் பேர் சொன்னார்கள்
திரும்பிப் பார்த்தேன் .உன் சாயலில் என் நிழல்

காதல் உணர்வுகளை உணர்வுப் பூர்வமாகக் கவிதை எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .

அரசு சாதிப் பட்டியலில் உனக்கென ஒரு தனியிடம்
ஒதுக்கியுள்ளது தேவலோகக் கன்னி என்று !

இது கொஞ்சம் அதிகம்தான் ஆனாலும் எள்ளல் சுவையுடன் ரசிக்கும்படி உள்ளது .

அதிகமான சந்தோசத்திலும்   அதிகமான துயரத்திலும்
உன் நினைவு எனக்கும் ,என் நினைவு உனக்கும்
தானாக வந்து விடுகிறது .

கவிஞர் கோபிநாத் காதலர்களின் ரகசிய உணர்வைஅம்பலப் படுத்தும் விதமாக ,
படம் பிடித்து கவிதை ஆக்கி உள்ளார் .உணர்ந்து ரசித்து திரும்பவும்
படித்துப் பார்த்தேன் .

கடைசிவரை தூங்கவே முடிவதில்லை
உன்னை நினைத்துக் கொண்டே
தூங்கிவிட  வேண்டுமென
நினைக்கிற நாட்களில் !

உண்மைதான் காதலர்களின் மன நிலையை காட்சிப்படுத்தி வெற்றிப் பெறுகின்றார் .

எந்தக் கவிதையும் உன்னை நினைத்துக் கொண்டு
எழுதுவதில்லை .
எழுதுகிற எந்தக் கவிதையிலும் நீ இல்லாமல் இல்லை .

எல்லாக் கவிதைகளிலும் அவள் வந்து  விடுகிறாள் என்ற கவிஞனின் ஆரம்ப நிலையை
அப்படியேப் பதிவு செய்துள்ளார் .

பட்டுபூச்சி  மோட்சம் கவிதை கவிஞர் வைரமுத்துவின் திரைப் படப்பாடலை
நினைவூட்டும்  விதமாக உள்ளது .அதனைத் தவிர்த்து இருக்கலாம் .

முத்தம் தவறில்லை ஒதுக்காதே !
தவறென்று தர்க்கம் செய்யாதே !
எச்சில் உறவைத் தவிர
வேறெதுவும் அன்பின் ஆழத்தை
அத்தனை அழுத்தமாய் சொல்லி விடுவதில்லை .

முத்தத்தின் மொத்தத்தை வித்தைப் போல கவிதையாய் வடித்து உள்ளார் .

மயிலிறகால் வருடியது போதும்
தோளில் சாய்ந்து கிடப்பவளே
கேசத்தை சரி செய்து கொள் !

காதலி இல்லம் செல்லும் வழியில் அவள் கேசத்தைப் பார்த்து யாரும் அவளைத்
தவறாக எண்ணி விடக் கூடாது  என்ற காதலனின் உயர்ந்த உள்ளத்தை அக்கறையை,
அன்பே ,அழகிய கவிதை ஆக்கி உள்ளார் .

யாரும் சொல்லித் தந்து வருவதில்லை காதல்
சுவாசம் சொல்லித் தந்தா வருகிறது

இந்நூலின் மூலம் கவிஞர் கோபிநாத்  காதல் கவிதை எழுதுவதில் வல்லவர் என்பதை
நிருபித்து உள்ளார் .இந்த கவிதை புனையும் ஆற்றலையும் ,நீயா நானா ?
நிகழ்ச்சி அனுபவத்தையும் வைத்து சமுதாயப் பிரச்னைகள் பற்றியும்,
தீர்வுகள் பற்றியும் கவிதைகள் எழுதி   நூலாக வெளியிட வேண்டும் என்ற என்
ஆசையையும் எழுதி நிறைவு செய்கின்றேன் .

வெள்ளி, 11 நவம்பர், 2011

மனது சிலைடு அல்ல கவிஞர் இரா .இரவி

மனது சிலைடு அல்ல கவிஞர் இரா .இரவி

மறந்துவிட்டேன் என்று
சொல்ல உனக்கு உரிமை உண்டு
மறந்துவிடு என்று
சொல் உனக்கு உரிமை இல்லை
உன் உதடுகள்தான்
மறந்துவிட்டேன் என்கின்றது
உள்ளம் ஒருபோதும் சொல்லாது
என்பதை நான் அறிவேன்
என்னை நீ மறந்துவிடு
என்று சொன்னபிறகுதான்
மறக்கமுடியாமல் தவிக்கின்றேன்
மனது சிலைடு அல்ல
நினைத்தும் அழிப்பதற்கு
மனதில் கல்வெட்டாகப்
பதிந்தது உன் நினைவு

அன்பின் சின்னம் அன்னை தெரசா கவிஞர் இரா .இரவி

அன்பின் சின்னம் அன்னை தெரசா  கவிஞர் இரா .இரவி

கல்கத்தா வீதிகளில் விடுதிக்காக
கையேந்தி சென்றார் அன்னை

உமிழ்ந்தான் ஒரு வியாபாரி
உமிழ்ந்தது எனக்குப் போதும்

விடுதியில் உள்ள தொழு நோயாளிகளுக்கு
விரும்பியதைக் கொடு என்றார்

காலில் விழுந்து வணங்கினான்
கடையில்  இருந்து  உமிழ்ந்தவன்

இன்னா செய்தாரை திருக்குறள் வழி
இனிதே வாழ்ந்துக் காட்டிய அன்னை

நோபல் பரிசுக்கே நோபல் பரிசு தந்தவர்
நேயம் மிக்க தன்னலமற்றத்  தாய்

இறந்த பின்னும் வாழ்பவர்கள் மிகச் சிலர்
மிகச் சிலரிலும் சிகரமானவர் அன்னை

பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர்
பெண்மையின் மேன்மையை உணர்த்தியவர்

பிறருக்காகவே  வாழ்ந்திட்ட மாதா
பண்பால் சிறந்திட்ட பிதா

அயல் நாட்டில் பிறந்திட்ட போதும்
அனைவரின் உள்ளத்திலும் வாழ்பவர்

மனிதநேயம் கற்பித்த மனிதம்
மனிதருள் மாணிக்கமாக ஒளிர்ந்த புனிதம்

அன்பின் சின்னம் அன்னை தெரசா
பண்பின் சிகரம்  அன்னை தெரசா--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


வியாழன், 10 நவம்பர், 2011

அணு ஆய்வாளர் திரு நீரஜ் ஜெயின் உரைதொகுப்பு கவிஞர் இரா .இரவி

அணு ஆய்வாளர்  திரு நீரஜ் ஜெயின் உரை

ஏற்பாடு  மக்கள் கண் காணிப்பகம் மதுரை

தொகுப்பு கவிஞர் இரா .இரவி

அணு உலையை ஆதரிப்பவர்களை கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்  .
அணு உலை விபத்து ஏற்படாவிட்டாலும் செயல்படும் எல்லாக் காலங்களிலும்
கதிரயக்கம் வெளிப்படுகின்றது
காற்றோடு கலக்கின்றது ,நீரோடு கலக்கின்றது.
ஒரு அணு உலையின் ஆயுட்காலம் சுமார் 50ஆண்டுகள் என்றால் அணு உலை
மூடிய பின்னும் 1000ஆண்டுகளுக்கு பாதிப்பு இருக்கும்  .
வருங்கால சந்ததிகள் உடல் குறைபாடுடன் பிறக்கும் .
அமெரிக்கா நடத்திய  ஆய்வில் யுரேனியம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில்
வேலை பார்ப்பவர்களுக்கு நுரை ஈரல் புற்று நோய் வருகின்றது .
தாதுப் பொருள்கள் வெட்டி எடுக்கும் சுற்றுப் பகுதி கிராம மக்களுக்கு
புற்று நோய் வருகின்றது.
அணு உலை சுழற்சி நடுக்கும் போது சின்ன விபத்து பெரிய விபத்து என நடந்து
கொண்டே இருக்கின்றது.
1000 ஆண்டுகள் பின் விளைவு உள்ளது அணு உலை கழிவுகளில்
உலகில் உள்ள அணு உலைகளில் இந்தியாவில் உள்ள அணு உலைகள் ஆபத்தானவை .
சுனாமி வருவதிற்கு முன்பே வடிவமைத்த கூடங்குளம் அணு உலை சுனாமி தாங்கும் வண்ணம் வடிவமைக்க வில்லை .
சுனாமி தாங்கும் அணு உலை கண்டுபிடிக்கப் பட வில்லை .

அணு ஆய்வாளர் திரு கடேக்கர் PHD ஆய்வுக் கருத்து
குழந்தைகள் இறந்து பிறக்கக் காரணம் அணு உலை கதிர் வீச்சு
பலருக்கு புற்று நோய் வந்துள்ளது .
முன்னி என்ற குழந்தை தரையில் உட்கார முடியாது தொட்டிலில் படுக்க  வைத்தே
 இருக்கும் .
தினேஷ் என்ற சிறுவன் நேராக நிற்கவே முடியாது .
சில குழந்தைகளுக்கு கையில் விரல்களே இல்லை . .
மின்சாரத்திற்காக அணு உலை வேண்டும் என்று சொல்பவர்கள் அணு கதிர் வீச்சால்
பாதிக்கப் பட்ட குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கத் தயாரா ?

அணு உலை அருகில் உள்ள கடலில் இருந்து நொடிக்கு லட்சக் கணக்கான லிட்டர்
தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் .அணு உலையில் கலந்து வெந்நீராகி
கடலில் திரும்ப  கலக்கும்   போது மீன்கள் உள்ளிட்ட கடல் உயிரினங்கள்
இறந்து விடுகின்றன .மீனவர்களின் மீன் பிடிக்கும்    தொழில் முடங்கும் .

அமெரிக்காவின்  அணு உலை உள்ள கடலோர பகுதிகளில் நடத்திய ஆய்வில் கடல்
பாதிப்பை பதிவு செய்து உள்ளனர் .

கூடங்குளத்தில் அணு உலை தொடங்கினால் வெளியேறும்  கழிவுகள்
ஒரு வருடத்திற்கு 30  டன்
60 வருடங்களுக்கு  1800 டன்
கூடங்குளத்தில் அணு உலை தொடங்கினால் ,மிக பெரிய இழப்பு வரும்.

அமெரிக்கா ஜெர்மனி ஜப்பான் போன்ற நாடுகளால் அணு உலை விபத்தைத் தடுக்க
முடிய வில்லை .இந்தியாவில் விபத்தைத் தடுக்கவே முடியாது .
ஒரு வேளை வெடித்தால் தமிழக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தமிழகத்தை
விட்டு வெளியேறி விட முடியுமா ?

கதிர்  வீச்சு காரணமாக இறந்து உள்ளனர்
1986-2005
985000இறந்து உள்ளனர்

சீநோபி விபத்தில் வெளியேற முடியாமல் இறந்தனர் இன்னும் 1000ஆண்டுகளுக்கு
இறப்பு எண்ணிக்கை தொடரும் .
கூடங்குளம் அணு உலை விபத்து ஏற்பட்டால் தென் இந்தியாவிற்கே ஆபத்து .
உலகில் இதற்கு முன்பு அணு உலை விபத்து ஏற்பட்ட இடங்களில் எல்லாம்
கதிரியக்கம் வெளியேறி வருகின்றது

திங்கள், 7 நவம்பர், 2011

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

காலக்கண்ணாடி

விலை ரூ 50
நூல் ஆசிரியர் கவிஞர் முத்துகிருஷ்ணா

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூலின் படையல் அன்னைக்கும் அன்னைத் தமிழுக்கும் என்று வழங்கி இருபது சிறப்பு .குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி இணைப் பேராசிரியர் முனைவர் பா .வேலம்மாள் ,திரு ஸ்ரீ தரன்    ஆகியோரது அணிந்துரை நூலுக்கு அழகுரையாக உள்ளது .

இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்கிறோம் .விண்வெளிக்கு ஏவுகணைகள் ஏவுகின்றோம்.ஆனால்  இந்தியாவின் வறுமை மட்டும் இன்னும் ஒழிந்த பாடில்லை .அதனை உணர்த்தும் முதல் கவிதை   !

எழுதவும் முடியாமல் எதுவும் படிக்கவும் முடியாமல்
எந்த ஒரு வெளிச்சமுமில்லாமல்
ஏழை வீட்டின் மின் விளக்காய்
மங்கலாக எரிந்து கொண்டு   இருக்கிறது
நவீன விடியல் காலம் வந்த பின்னும்
வெளிச்சம் இன்னும் கிடைக்கவில்லை
ஏழைகளின் கூரை  கோபுரமாகும் போது
இந்நிலை மாறுமென்று நம்பிக்கையிலே
மங்கலாக விட்டில் போல்
மின்னிக் கொண்டிருக்கிறது  
ஏழை வசிக்கும்  கூரை வீடெங்கும்.

இந்தக் கவிதையை படிக்கும் போது இந்தியாவில் உள்ள கோடான கோடி குடிசைகள் நம் மனக் கண் முன் வருகின்றன .
நகரத்து வாழ்க்கையை மூன்று வரிகளில் முத்தாய்ப்பாக  வழங்கி உள்ளார் .

நகரம்

கையில் காசு கரைந்ததும்
கழுத்தை நேரிக்குது
நகரம்

அடுத்த பதிப்பில் மேல உள்ள தலைப்பை  நீக்கி விடுங்கள் .நீக்கினால் நல்ல ஹைக்கூ .

சிந்திக்க வைக்கும் வைர வரிகள் .

கருப்போ சிவப்போ எந்த நிறத்திலும்
எவரும் பிறக்கலாம் .
நிறத்தையும்  குணத்தையும் அடிக்கடி மாற்றும்
பச்சோந்தியாக  மாறாமல்
மனிதனாக இருந்தால் சரிதான்!

நம் நாட்டில் கோடிகளை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு நடிக்கும் நடிகர்கள் பற்றி பேசுகின்றனர் .ஆனால் தமிழகத்தின் உயிர் நாடியான காவிரி பற்றியோ ,பெரியாறு   பற்றியோ பேசுவது இல்லை .அதனைச் சுட்டுகிறார் .நூல் ஆசிரியர் கவிஞர் முத்துகிருஷ்ணா.

உப்பு சப்பிலாத பல விஷயங்களை
காரசாரமாய்  விவாதிக்கின்றோம் .
காரசாரத்துடன் விவாதிக்க வேண்டிய
சில விஷயங்களை ஏனோ விட்டு விடுகின்றோம்
உப்புக்குக் கூட பிரயோசனம் இல்லை என்று !

இந்த வரிகளை ஊடகத்தினரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

நானே பெரியவன் என்ற அகந்தை அழித்துவிடும் .என்ற கருத்தை மிக எளிமையான உவமை மூலம் உணர்த்திடும் கவித்திறன் மிக நன்று .

தீக்குச்சி

தலைக்கனம் கொண்டதால்
வாழ்ந்திடாமல் எரிந்து சாம்பலானது . 
தீக்குச்சி

இதிலும் தலைப்பை எடுத்து விட்டால் சிறந்த    ஹைக்கூ ஆகி விடும் .

வீட்டில் பலர் பெருமைகைக்காக நாய் வளர்க்கின்றனர் .அனால் நாயிடம் உள்ள நல்ல குணத்தை நாய் வளர்ப்பவர்கள் வளர்த்து க்கொள்வதில்லை     
அதனை உணர்த்தும் கவிதை !

நன்றி
எதனை நாய்கள் அவன் வளர்த்தாலும்
அவனுக்கு ஏற்படவில்லை நன்றி உணர்வு !

காலக்கண்ணாடி என்ற நூல் தலைப்புக்கு  ஏற்றபடி காலத்தின் கண்ணாடியாகவே உள்ளது .பாராட்டுக்கள் .     
நூல் ஆசிரியர் கவிஞர் முத்துகிருஷ்ணா  வாழ்வில் கண்ட கேட்ட நிகழ்வுகளை புதுக்கவிதைகளாக வடித்துள்ளார். உள்ளத்து உணர்வுகளை கவியாக்கி உள்ளார் .இது இரண்டாவது நூல் .தொடர்ந்து எழுதி நூல்கள் பல வெளியிட வாழ்த்துகின்றேன் .
அடுத்த   பதிப்பில் அட்டைப்படத்தில் கவனம் செலுத்தி ,நல்ல வண்ணத்தில் அச்சிடுங்கள்.    
--

சனி, 5 நவம்பர், 2011

மதுரையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் நடைப்பெற்ற அன்னை சேதுமதி நினைவு பொற்கிழி வழங்கும் விழா புகைப்படங்கள் .
மதுரையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் நடைப்பெற்ற அன்னை சேதுமதி நினைவு பொற்கிழி  வழங்கும் விழா புகைப்படங்கள் .

பேராசிரியர் பால சுப்பிரமணி ,இறுதியில் இன்பத்தான் ஆகியோருக்கு   பொற்கிழி வழங்கும் விழா
பெருங்கவி
க்கோ    வா ,மு .சேதுராமன் ,திருக்குறள்ச் செம்மல் மணிமொழியன் ,முனைவர் இரா .மோகன் ,கவிமுரசு வா ,மு .சே.திருவள்ளுவர் ,பேராசிரியர் வா ,மு .சே.ஆண்டவர்  ,கவிஞர் இரா .இரவி  

வியாழன், 3 நவம்பர், 2011

தந்தை பெரியார் திருக்குறள் பற்றி

தந்தை பெரியார் திருக்குறள் பற்றி

தாளம் சர்வதேச வானொலி கேட்டு மகிழுங்கள்

தாளம் சர்வதேச வானொலி கேட்டு மகிழுங்கள்    

http://www.thaalamradio.com/
--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

புகைப்படங்கள்

தாளம் சர்வதேச வானொலியில் கவிஞர் இரா .இரவி பங்குப் பெற்ற நேரலை நிகிழ்ச்சிப் புகைப்படங்கள் உடன் பங்குப்பெற்றவர் நிகழ்ச்சித்   தொகுப்பாளர் திரு .ஸ்ரீ பிரசாத் .    சுவிஸ் ,கனடா ,அமெரிக்கா ,ஈழம்  ஆகிய நாடுகளில் இருந்து நேயர்கள் தொலைபேசி மூலம் பங்குபெற்று கலந்துரையாடினார்கள் . 

செவ்வாய், 1 நவம்பர், 2011

சுட்டும் விழி ஹைக்கூ நூல் திறனாய்வு கவிஞர் சி .விநாயக மூர்த்தி

சுட்டும் விழி ஹைக்கூ நூல் திறனாய்வு கவிஞர் சி .விநாயக மூர்த்தி .செல் 9791562765

நூல் ஆசிரியர்  கவிஞர்  இரா .இரவி .

பொதிகை மின்னல் 118.எல்டாம்ஸ் சாலை சென்னை .18. செல் 9841436213  விலை ரூ 40

   மகாகவி பாரதியார் அவர்கள்  வசன கவிதை வடிவில் புதுக்கவிதையை அறிமுகப்படுத்தியது போல் ,ஜப்பான் மொழியின் ஹைக்கூ கவிதைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார் .எதிலும் முதன்மையாய் நின்ற பாரதி வழியில் இன்று   சிறப்பாக ,செழிப்பாக வளர்ந்துள்ளது .
 ஜப்பான் மொழியில் இருக்கும் சீர்க் கட்டுப்பாடுகளை ஒதுக்கிவிட்டு ,மூன்று வரிகளை மட்டும் நாம் ஏற்றுக்கொண்டு   இதுவே ஹைக்கூ என்று   எழுதி வருகிறோம் . இலக்கணப் புலவர்கள் எழுதிய மரபுக்கவிதைகள்   பெரும்பாலும் , அரைத்த மாவையே அரைத்து இலக்கியத் தரம் குறைந்ததால் ,
முதாயத் தாக்கம் மிகுந்த புதுக் கவிதைகளும், ஹைக்கூ கவிதைகளும் மக்கள் மனதில் இன்று நீங்கா இடம் பிடித்தன .
ஹைக்கூ கவிதைஎன்றால் மதுரைக்கவிஞர் இரா .இரவி அவர்களுக்கு தனிச் சிறப்பிடம் உண்டு .இலக்கியத்திற்காக இணைய தளங்கள் உருவாக்கி .உலக அளவில் அறிமுகம் ஆனவர் .எல்லாச் சிற்றிதழ் களிலும்  அவரது படைப்புகள் தொடர்ந்து பதிவாகி உள்ளன .ஹைக்கூ நூல்கள்,மற்றும் திறனாய்வு நூல் எழுதி உள்ளார் .
 சுட்டும் விழி என்னும் பெயர் சூடிக் கொண்ட இந்நூலில் ,அழகியல் ,சமுதாயச் சிந்தனைகள் ,இலக்கிய நயம் உள்ளன .

பறக்கும்
நட்சத்திரம்  
மின்மினி !

அருமையான அழகியல் ஓவியம்
நாம் குழந்தையாக இருக்கும்போது தாலாட்டுகிறாள் தாய் .நாம் வளர்ந்த பிறகும் தாலாட்டுவது யார் ? இதோ கவிதையில் கூ றுகிறார் .

உருவம் இன்றியே
தாலாட்டியது
தென்றல் !

வானவில் மின்னும் ஏழு வண்ணங்களை வண்ணத் தமிழில் வர்ணிப்பதே நம் வழக்கம் .ஆனால் ,வானவில்லும் பாடம் போதிப்பதாக கவிதை வரைந்துள்ளார் .

உணர்த்தியது
நிரந்தரமற்றது
அழகு !
 
 கம்பீர மாளிகை இடிந்து நொறுங்கிய கதையை ,எஞ்சி நிற்கும் குட்டிச் சுவர் கூட வரலாற்றுப் புத்தகமே என்று புதிய கண்ணோட்டத்தில் பாடுகிறார் .

கூறியது
வரலாறு       
 
குட்டிச் சுவர் !   


உடலின் மச்சங்கள் அழிவதில்லை .அதுபோல ஒவ்வொருவர் மனதிலும் அழியாத மச்சம் இருப்பதாகவும் ,அதுவே   காதல் என்று கவிதை பாடுகிறார் .

மனத்தில் மச்சமென 
நீங்கா நினைவு
காதல் !

அற்புதமான கற்பனை .
வளர்த்திட்ட மண்ணிற்கு  நன்றி சொன்னது .மரம் .எந்த வகையில் ? கவிதையில் விடை தருகிறார் .

வளர்த்திட்ட மண்ணிற்கு
நன்றி சொன்னது .மரம்
பூ உதிர்த்து !

பளிங்கால் அமைந்த தாஜ்மகாலை உலக அதிசயம் என்று எல்லோரும் புகழ்கிறோம் .கவிஞரோ வேறு கோணத்தில் கவிதை தருகிறார் .

வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கின்றது
தாஜ்மகால் !

தமிழ் மொழி உணர்வோடும் ,இன உணர்வோடும் பல கவிதைகள் படைத்துள்ளார் .

தமிழ் என்ற சொல்லின்றி
தமிழுக்கு மகுடம்
திருக்குறள் !

இக்கவிதை தமிழுக்கு புகழ் மகுடம் சூட் டுகின்றது  .
பள்ளிக் கல்வி ,ஆங்கிலத்தைத் திணித்தாலும்  ரத்தத்தில் கலந்துள்ளது தமிழ்தான் .அதனால்தான்

தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா !

என்று முதல் கவியில் ,முதல் தரமான கவிதையில் மொழி உணர்வை வெளிப் படித்திள்ளார் .எல்லோரும் தமிழில் பெயர் வைத்தால் ,இனிமையாகத்தான் இருக்கும் என்பதை உணர்த்த

இனிது இனிது
தமிழில் இனிது
அவள் பெயர்     ... என்கிறார்

யுகங்கள் கடந்தும்
இளமை குன்றவில்லை
தமிழ் !

உலகின் முதல் மொழி
மொழிகளின் தாய்மொழி
தமிழ் !

செய்தி வாக்கியம் போல் இருந்தாலும் சிறந்த கருத்தை அழுத்தம் திருத்தமாக கற்கண்டு சொற்கொண்டு கவி வடித்துள்ளார் .
கவித்துவம் மிகுந்த கவிதைகள் நிறையவே உள்ளன .

நிலம் விற்று
பெற்ற பணத்தில்
அப்பாவின் முகம் !

பரம்பரை நிலம் பறிபோன சோகத்திலும் அப்பாவை பாசத்துடன் நினைப்பது அருமை .

பொம்மை உடைந்த போது
மனது   உடைந்தது 
குழந்தை !

மலரினும் மெல்லியது குழந்தை மனம் .சிலரதன் செவ்வி தலைப்படுவார்.என்று புதுக்குறளை ,    புதுக்குரலாக ஒளிகிறது இக்கவிதை .

ஏங்கியது குழந்தை
கதை கேட்க
முதியோர் இல்லத்தில் பாட்டி !

பாட்டி மட்டுமல்ல ,பாட்டியைப் பிரிந்த குழந்தையும் அனாதையாய் தவிப்பதை கவித்திதுவமுடன் கூறுகிறார் .

ஆயிரம் பேர்
தனியாகத் தெரிந்தது
அவள் விழிகள் !

ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன் என்ற கண்ணதாசன் திரை இசை நினைவுக்கு வருகிறது .

நடமாடும் நயாகரா
நடந்து வரும் நந்தவனம்
என்னவள்     .....                                                 
துவும் அழகியல் படைப்பே  

 எந்த நூற்றாண்டுக்கும்   தேவையான காந்தியின் கருத்து
க்களை ,பல பாக்களில்  பதிவு செய்துள்ளார் .

மனித உரிமைகளின்
முதல் குரல்
மகாத்மா ! 

மதுவால் தள்ளாடுவது
குடிப்பவன் மட்டுமல்ல
அவன் குடும்பமும் !

 நல்ல படப் பிடிப்பு .
காவிரி நீர் அரசியலாகி விட்டது போல் ,கல்வியும் அரசியலாகி விட்ட அவலத்தை கவிதையில் சுட்டுகிறார்.

காவிரி போல்
அரசியலானது
சமச்சீர் கல்வி !

அம்மாவைப் பாடாதவர் யாருமில்லை  . இவரும் பாடுகிறார் .

உருகிடும் மெழுகு  
உறைந்திடும் அழகு
அம்மா !

என்று உருகிப் பாடுகிறார் .
மனைவியைப் பற்றியும் மறவாமல் புதிய கோணத்தில் கவி புனைந்துள்ளார் .

மாதா பிதா குறு
ஒரே வடிவில்
மனைவி !

பெரியாரின் பகுத்தறிவுக் கருத்தையும் ,பறை கொட்டி முழக்குகிறார்.

எலி மீது யானை
எப்படி ? சாத்தியம்
பிள்ளையார் !

ஈழத்தமிழர் அவலத்தையும் இதய வலியோடு எழுதியுள்ளார் .

வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயந்தோர்  வலியை !

கவிதை படிக்கும் போது நமக்கும் வலிக்கிறது .  .
ஈழத்தமிழர்கள் லட்சக் கணக்கில் ,படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .இறந்தவர்களின் ஆவி தமிழகத்துள் நுழைந்து பல அரசியல் தலைவர்களை பழி தீர்த்துக் கொண்டதாக பகிரங்கமாய்ப் பாடுகிறார் .

ஈழத்தில் மரித்த உயிர்கள்
இன்று பழி தீர்த்தன
தேர்தல் முடிவு !

கவிதைக்கு சுவை சேர்ப்பதில் ,முரண் தொடை முக்கிய பங்கு வகிக்கிறது இதோ சில கவிதைகள் .

கோடிகளும் லட்சங்களும்
கோயிலின் உள்ளே
வெளியே பிச்சைக்காரகள் !

கூழ்  இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
ஒளிரும் இந்தியா !

யாரும் வாங்காமலே
மலர்ந்தன பூக்கள்
வாடினால் பூக்காரி !

இக்கவிதைகளில்    முரண் தொடை நயம் தூக்கலாக உள்ளது .
ஹைகூவின்  உயிர்த் துடிப்பு ,மூன்றாம் வரியின் திருப்புமுனையே .இதோ உதாரணங்கள் .

யானைப் பசிக்கு
சோளப்பொறி
இது எல்லோரும் அறிந்த பழமொழி .இதற்கு   உதாரணமான குறைந்த கூலியைச் சொல்வதுதான் வழக்கம் .கவிஞரோ வித்தியாசமாக முடிக்கிறார்.

யானைப் பசிக்கு
சோளப்பொறி
அவள் முத்தம்   ... என்கிறார்

மூன்றாம் வரியின் திருப்புமுனையாக ,மேலும் பல நல்ல கவிதைகள் உள்ளன .

மழை வந்ததும்
உடன் வந்தது
மண் வாசனை !

கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை !
\
ராமன் ஆட்சி
இராவணன் ஆட்சி
ஒழியாத வறுமை !

குழந்தைகளுக்கு
குச்சி மிட்டாயாய்
வாக்களிக்கப் பணம் !

இன்னும் இன்னும் ஏராளம் உள்ளன .

சேமிக்கும் எறும்பு
வருகிறது மழைக்காலம்
மனிதன் ?

மூவறிவுடைய எறும்புகளிடம் ஆறறிவு மனிதன் பாடம் படிக்க வேண்டிய அவசியத்தை கவிஞர் உணர்த்துகின்றார் .
 ஊறுகாய்களை   ,சாப்பாடு போல் சாபிடுவது ,எங்கும் நடப்பதில்லை .இங்கு நடப்பதாகக் கூறுகிறார் .பகுதி நேரம் மட்டுமே பயணப் படுத்தவேண்டிய தொலைக் காட்சியில் முழு நேரமும் முழ்கிக் கிடப்பதை அவ்வாறு கூறுகிறார் .

அயல் நாடுகளில்  ஊறுகாய்
நம்  நாட்டில் சாப்பாடு
தொ( ல் )லைக் காட்சி !

கட்சிக் கொடி தவிர்
பச்சைக் கொடி வளர்
பசுமைத் தாயகம் !

கொடி என்ற சிலேடை நயம் ,தேன் சொட்டுகிறது .
தண்ணீரை வீணாக்க கூடாது   என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் ,  தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகளும் ஒழுகத்தான் செய்கின்றன .இதைக் கவனித்து கற்பனைத் தூரிகையால் கவிச் சித்திரம் வரைகிறார் .

கோலமிட்டுச் சென்றது  
வறண்ட சாலையில்
 தண்ணீர் லாரி !

சுட்டும் விழி என்ற இந்நூலுக்குள் கற்பனை நயம் ,அழகியல் உருவகம் .முரண் தொடைச் சுவை ,சிலேடைச் செந்தேன், வீரியம் மிக்க கருத்துக்கள் அதனையும் ஒருங்கே அமைந்துள்ளன.
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய இலக்கியப் பெட்டகம்  
 


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது