வியாழன், 31 ஜனவரி, 2013

தமிழ்க்கூத்தன் அவர்களுக்கு இதய அஞ்சலி கூட்டம் புகைப்படங்கள்

27.1.2013 அன்று  தமிழ்க்கூத்தன்  அவர்களுக்கு
திருப்பரங்குன்றம் த  .மு .எ .க .ச .சார்பில்
நடைபெற்ற இதய அஞ்சலி கூட்டம்  புகைப்படங்கள் .

நன்றி தீக்கதிர் புகைப்படக்கலைஞர் திரு .S.M.பாண்டி

சாதி மறுப்பில் காதல் ! நூல் ஆசிரியர்கள் எழுத்தாளர்கள் அருணன் ,ச .தமிழ்ச் செல்வன் ,ஆதவன் தீட்சண்யா . நூல் விமர்சனம் கவி்ஞர் இரா .இரவி .

சாதி மறுப்பில் காதல் !

நூல் ஆசிரியர்கள்
எழுத்தாளர்கள் அருணன் ,ச .தமிழ்ச் செல்வன் ,ஆதவன் தீட்சண்யா .

நூல் விமர்சனம் கவி்ஞர் இரா .இரவி .

.வெளியீடு த .மு .எ .க .ச . மாநிலக் குழு  விலை ரூபாய் 10
11.மேலப் பெருமாள்  மேஸ்திரி வீதி ,மதுரை .1. செல் 9442462888 .

காதல் திருமணதிற்கு எதிர்ப்பு என்ற பெயரில் ஆதிக்க சாதியினர் தலித்
மக்கள் மீது நடத்திய வன்முறையை நேரடியாக சென்று ஆய்வு நடத்தி ஆய்வுக்
கட்டுரையாக வடித்துள்ளனர் .எழுத்தாளர்கள் அருணன் ,ச .தமிழ்ச் செல்வன்,
ஆதவன் தீட்சண்யாமூவரின் கட்டுரையும் நூலாகி உள்ளது .40 பக்கங்கள் மட்டுமே
உள்ள சிறிய நூல்தான் . ஆனால் படிக்கும் வாசகர்களின் மனதில் மிகப் பெரிய
தாக்கத்தை ஏற்படுத்துகின்றது .நூல் என்ன ? செய்யும் என்பதற்கு
எடுத்துக்காட்டு இந்த நூல் .படித்து முடித்தவுடன் மனம் கனத்து
விடுகின்றது. மனிதநேயம் பிறக்கின்றது .நூல் ஆசிரியர்களுக்கு
பாராட்டுக்கள் .

கை அடக்க நூலில் மிக நல்ல கருத்துக்களை வலியுறுத்தி உள்ளது சிறப்பு .
ஒரு ஜோடி காதலை இரு சாதி மோதலாக மாற்றி ,வன்முறையை ஈவு இரக்கமின்றி ஏவிய
ஆதிக்க சாதியின் முகத்திரை கிழிக்கும் வண்ணம் நூல் வந்துள்ளது .

"காதலினால் அல்ல " என்ற தலைப்பில் ச .தமிழ்ச் செல்வன்அவர்களும் ,
"இராமதாஸ் வகையறா வந்து கொண்டிருக்கிறது மனிதர்கள் வேறு பக்கம் செல்லவும்
."    என்ற தலைப்பில் ஆதவன் தீட்சண்யா அவர்களும் ,
" மருத்துவர் ஒருவர் நவீன மனுவாகிறார் ."என்ற தலைப்பில் அருணன்அவர்களும்
எழுதிய ஆய்வுக் கட்டுரை நூலாகி உள்ளது .

மனிதாபிமான அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும்
விதமாக நூல் உள்ளது .தனி நபர் இருவரின் காதலை காரணம் காட்டி இரு
சாதிகளின் சண்டையாக உருமாற்றி மிகப் பெரிய கலவரத்தையும் வன்முறையையும்
நிகழ்த்திய கொடுமைக்கு கண்டனத்தை நன்கு பதிவு செய்துள்ளனர் .

இனி காதலிப்பது என்றால் என்ன ? சாதி என்று பார்த்து விட்டு தான் காதலிக்க
வேண்டும் . என்ற நிலையை உருவாக்கி வரும் அவலத்திற்கு கண்டனக் குரல்
கொடுத்துள்ளனர் ."ஆதலினால் காதல் செய்வீர் " என்ற மகாகவி பாரதியின் வைர
வரிகளுக்கு உரம் சேர்க்கும் விதமாகு நூல் உள்ளது .

" வன் கொடுமைத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் .அதன் பல்லைப் பிடுங்க
வேண்டும் என்று கோரிக்கை வைக்கிற அளவிற்கு தலித்துகள்  மீதான
வன்கொடுமைகள் தொடர்கின்றனவே அவை இன்னும் முடிவுக்கு வரவில்லையே என்று
சமூக நீதியாளர்கள் வேதனைப்பட்டு வரும் வேளையில் வன் கொடுமைத் தடைச்
சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்பது நியாயமா ? " என்ற
நியாயமான கேள்வியை எழுத்தாளர்கள் அருணன் எழுப்பி உள்ளார் .

 தீண்டாமை ஒழிந்து விட்டது என்று அறுதி இட்டு கூற முடியாத நிலையே இன்னும்
நீடிக்கின்றது .இன்னும் சில கிராமங்களில் இரட்டை குவளை முறை தொடரும்
அவலம் நீடித்து வருவது வேதனை.வன்கொடுமைத் தடைச் சட்டம் இருப்பதால்தான்
ஆதிக்க சாதியினர் கொஞ்சம் அடக்கி வசிக்கின்றனர் என்பதே உண்மை .தலித்
மக்களுக்கு பாதுகாப்பாக உள்ள இந்த சட்டம் இன்னும் நீடிக்க வேண்டும்
என்பதே மனிதநேய ஆர்வலர்களின் விருப்பம். .அந்த விருப்பதை வழி மொழியும்
விதமாக கருத்துக்கள் நூலில் உள்ளது .
.
தமிழர்கள் அனைவருக்கு ஒரு வார்த்தை
" பழைய பயித்தியம் படீரென்று தெளியுது "என்று ஆசைப்பட்டான் பாரதி .அந்தப்
பழைய சாதி பயித்தியம் அப்படி உளிய வேண்டும் என்றால் அதற்கு ஒரு நல்ல
மார்க்கம் சாதி பாராத காதல் .சாதி மறுப்புத் திருமணம்
.சாதித் தலைவர்களின் அகங்காரப் பேச்சை கேட்காதீர்கள் .
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் கள்ளங்கபடு இல்லாத இதயங்களின்
சேர்ந்திசைக்கு செவி கொடுங்கள் .காதல் பொங்கலைக் கொண்டாடுங்கள் .அதற்கு
முன்னதாக சாதியத்தைக் கொளுத்திப் போகிப் பண்டிகை நடத்துங்கள் ." என்று
அருணன் அவர்கள்  எழுதியுள்ள கருத்து சிந்தனை விதை விதைக்கின்றது .

காதலுக்கு சாதியில்லை மதமும் இல்லையே ! கண்கள் பேசும் வார்த்தையிலே
பேதமில்லையே ! கவியரசு கண்ணதாசன் வைர வரிகளுடன் நூல் முடிகின்றது .காதலை
நேசிப்பவர்களும் ,காதல் வயப்பட்டவர்களும். சாதியை வெறுப்பவர்களும் ,
மதத்தை மறுப்பவர்களும் ,மனித நேய ஆர்வலர்களும் .வன்முறையை
விரும்பாதவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நல்ல நூல் .மிகப் பெரிய
சிந்தனைகளை விதைக்கும் அறிவார்ந்த கட்டுரைகளைத் தொகுத்து நூ்லாக்கிய  த
.மு .எ .க .ச . மாநிலக் குழுவிற்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

செவ்வாய், 29 ஜனவரி, 2013

முன்னேற்றத்தின் முகவரி நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஞா.சந்திரன் இளைய பெண்ணே ! எழுக முன்னே ! கட்டுரை கவிஞர் இரா .இரவி

முன்னேற்றத்தின் முகவரி   நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஞா.சந்திரன்
இளைய பெண்ணே ! எழுக முன்னே !  கட்டுரை கவிஞர் இரா .இரவி

இனிய நண்பர் தமிழாசிரியர் ,கவிஞர் ஞா .சந்திரன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழா புகைப்படங்கள்

இனிய நண்பர் தமிழாசிரியர் ,கவிஞர் ஞா .சந்திரன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழா புகைப்படங்கள்

திங்கள், 28 ஜனவரி, 2013

தமிழ்க் கூத்தன் புகழுக்கு அழிவில்லை !கவிஞர் இரா .இரவி .

தமிழ்க்கூத்தன்  அவர்களுக்கு  திருப்பரங்குன்றம் த  .மு .எ .க .ச .
சார்பில் நடைபெற்ற இதய அஞ்சலி கூட்டத்தில்  27.1.2013 அன்று
 கவிஞர் இரா .இரவி வாசித்தது .

தமிழ்க் கூத்தன் புகழுக்கு அழிவில்லை !கவிஞர் இரா .இரவி .

திருவள்ளுவரை நாங்கள் யாரும் பார்த்ததில்லை !
திருவள்ளுவரைப் பார்த்தோம் தமிழ்க்கூத்தன் வடிவில் !

திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்த தமிழ்க்குன்று !
தித்திக்கும் தமிழில் அவர் படைத்த கவிதை கற்கண்டு !

இருபத்திஅய்ந்து வருடங்களுக்கு முன்பே !
என்னை  கவிதா வேள்வியில் பாட வைத்தவர் !

அன்று தொடங்கிய எனது இலக்கியப் பயணம் !
இன்று பதினொன்று நூல்கள் இரண்டு இணையம் !

ஒரு வலைப்பூ என்று வளர்ந்தது மலர்ந்தது !
அன்று அவர் தந்த ஊக்க விதையே விருட்சமானது !

அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை !
அன்பு நெஞ்சம் உறுத்திக் கொண்டே இருந்தது !

தம்பி கவிஞர் கோபால கிருஷ்ணன் குறுந்தகவல்
தட்டினார் இதய அஞ்சலி கூட்ட  அறிவிப்பை !

உடனடியாக ஓடோடி வந்தேன் இங்கு !
உன்னத மனிதருக்கு இதய அஞ்சலி செய்திட !

எழுதியபடி வாழ்ந்தவர் வாழ்ந்தபடி எழுதியவர் !
எதிலும் சமரசம் செய்து கொள்ளாத கொள்கைக் குன்று !

தமிழ் இனத்திற்கான போராட்டம் எதுவென்றாலும்
தானாக முன் வந்து முதல் ஆளாக நின்றவர் !

தமிழ் மொழிக்கு தீங்கு என்றால் தட்டிக் கேட்க
திருப்பரங்குன்றத்தில் தலைமகனாக வந்து நின்றவர் !

திருப்பரங்குன்றத்திற்கு முருகனால் பெருமை !
திருப்பரங்குன்றத்து  பக்தர்கள்  சொல்வர்கள் !

திருப்பரங்குன்றத்திற்கு தமிழ்க்கூத்தனால் பெருமை !
திருப்பரங்குன்றத்து கவிஞர்கள்  சொல்வர்கள் !

ஈழத்தில் படுகொலைகள் நடந்தபோது கொதித்து
இரக்கக் குரல் உரக்கக் கொடுத்தவர் தமிழ்க்கூத்தன் !

கவிஞர்களின் வேடந்தாங்கல் தமிழ்க்கூத்தன் !
கவிஞர்களின் குருவாக வாழ்ந்தவர் தமிழ்க்கூத்தன் !

தமிழ்க்கூத்தனால் வளர்க்கப்பட்ட கவிஞர்கள் பலர் !
தமிழ்க்கூத்தனார் வார்ப்பில் நானும் ஒருவன் !

குருவை இழந்த சீடனாக தவிக்கின்றேன் !
திருவைப் பெற்ற குரு தமிழ்க்கூத்தன் !

மறைவு என்பது அவரது உடலுக்குத்தான்
மறைவு என்றும் இல்லை அவர் புகழுக்கு !

வளரும் கவிஞர்களை ஆகா ! ஓகோ ! பலே ! என்றே
வளர்த்து விட்ட தாயுமானவர் தமிழ்க்
கூத்தன் !  

கவிதைப் பறவைகள் நாள் தோறும் வருகை தந்து
கூ்டு கட்டிட விட்ட ஆலமரம் தமிழ்க்
கூத்தன் !

உடலின் நிறம்தான் கருப்பு அவரின்
உள்ளத்தின் நிறமோ வெள்ளையோ! வெள்ளை !


ஈடு செய்ய   முடியாத இழப்பு முற்றிலும் உண்மை !
இலக்கிய இமயம் சரிந்தது என்ன கொடுமை !


தமிழ்க்
கூத்தன் இடத்தை நிரப்பிட யாரும்  இல்லை !
தமிழ்க்
கூத்தன் தடத்தில் நடை போடுவோம் வாருங்கள் !

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி

சாகாமல்  காக்கும் மருந்து தமிழ் !  கவிஞர் இரா .இரவி

சாகாமல்  காக்கும் மருந்து
அமுதம் என்றார்கள் !

அமுதம் நாங்கள் பார்தது இல்லை !
அமுதம் நாங்கள் பருகியது  இல்லை !

அமுதம் தேவர்களுக்கு கடவுள்வழங்கியதாக
அன்று புராணக்கதை கதைத்தது !

இன்பமாக வாழ வேண்டுமா ?
இனிய தமிழ் படியு்ங்கள் !

துன்பம் தொலைய வேண்டுமா ?
தீ்ந்தமிழ் படியு்ங்கள் !

சோகங்கள் ஒழிய வேண்டுமா?
சந்தத்தமிழ் படியு்ங்கள் !

கவலைகள்  போக வேண்டுமா?
கற்கண்டுத்தமிழ் படியு்ங்கள் !

விரக்தி நீங்க வேண்டுமா ?
வளம் மிக்க தமிழ் படியு்ங்கள் !

ஒழுக்கமாக  வாழ வேண்டுமா ?
ஒப்பற்றத் தமிழ் படியு்ங்கள் !

பண்பாடாக  வாழ வேண்டுமா ?
பைந்தமிழ் படியு்ங்கள் !

நெறிகளை அறிந்திட வேண்டுமா ?
நிதமும் தமிழ் படியு்ங்கள் !

வீரம் அறிந்திட வேண்டுமா ?
விவேகத்தமிழ் படியு்ங்கள் !

சாதி மத வெறி அகற்ற வேண்டுமா?
சீர்மிகு  தமிழ் படியு்ங்கள் !

மனிதம்  மலர்ந்திட வேண்டுமா ?
மயக்கும் தமிழ்  படியு்ங்கள் !

முத்திரை பதிக்க வேண்டுமா ?
முதல்மொழி தமிழ் படியு்ங்கள் !

கற்பனைத்திறன் வேண்டுமா ?
கனித்தமிழ் படியுங்கள் !

சுயமாகச்  சிந்திக்க வேண்டுமா ?
சுந்தரத்தமிழ் படியுங்கள் !

வாழ்வியலை உணர வேண்டுமா ?
வற்றாதத் தமிழ் படியுங்கள் !

மனிதன் மனிதனாக வாழ வேண்டுமா ?
முத்தமிழ் படியு்ங்கள் !

மரணத்திற்கு மரணம் தர வேண்டுமா ?
மாண்புமிகு  தமிழ் படியு்ங்கள் !

இறப்புக்கு இறப்பு தர வேண்டுமா ?
இனிமையான தமிழ் படியு்ங்கள் !

சாகாமல் வாழ வேண்டுமா ?
சங்கத்தமிழ் படியு்ங்கள் !

சாகாமல்  காக்கும் மருந்து தமிழ் !
சாதாரணம் தமிழ் முன் அமுதம் !

வெள்ளி, 25 ஜனவரி, 2013

விசும்பில் சிறுபுள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விசும்பில் சிறுபுள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .

நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி .

விலை ரூபாய் 20 . இலக்கு பதிப்பகம் ,132 .வங்கி ஊழியர் குடியிருப்பு
,திருவானைக்காவல் ,திருச்சிராப்பள்ளி .620005.

அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று .ஹைக்கூ கவிதைகள் ஆறிலிருந்து அறுபது வரை
ரசிக்கும் வடிவம் .சிறுபான்மையினர் சிலர் ஹைக்கூவை குறைவாக விமர்சனம்
செய்து வருகின்றனர் . நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் ஹைக்கூ
நுட்பம் அறிந்து விசும்பில் சிறுபுள் நூல்
படைத்துள்ளார் .இவரது ஹைக்கூ கவிதைகளை பல்வேறு இதழ்களில் படித்து
இருக்கிறேன் ,மொத்தமாக நூலாக பார்த்ததில் மகிழ்ச்சி .
பாராட்டுக்கள் .கவிதைகளை பிரசுரம் செய்த இதழ்களுக்கு மறக்காமல் நன்றியை
பதிவு செய்துள்ளார் .ஹைக்கூ என்பதை துளிப்பா என்று குறிப்பிட்டுள்ளார்
.ஹைக்கூ என்பதை துளிப்பா,மின்பா ,வாமனப்பா, கெய்க்கூ ,என்று அழைத்தாலும்
ஹைக்கூ என்ற சொல்லே பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட  சொல்லாக உள்ளது.

ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு வகை .ஏழைச்சிறுமி விளையாட்டு
மைதானத்தில் கொலுசை  தொலைத்து விட்டு வந்து குடிசை வீட்டிற்கு வந்தவுடன்
அம்மாவிடம் திட்டு வாங்கும் காட்சியை கண் முன் கொண்டு வந்து வெற்றி
பெறுகின்றார் .

விளையாட்டு மைதானத்தில்
ஒற்றைக் கொலுசு
குடிசையில் விசும்பல் ஒலி !

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிய வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால்
வறுமையின் காரணமாக குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவலம் நடந்து கொண்டே
உள்ளது .

பணிக்கு செல்கிறான்
சிறுவன்
பள்ளிச் சீரு்டையில் !

மதத்தின் பெயரால் நாட்டில் வன்முறை நிகழ்ந்து வருகின்றது.அதனால்தான்
தந்தை பெரியார் கடவுளை மற ! மனிதனை நினை ! என்றார் .அன்று மனிதனை
நெறிப்படுத்த உருவாக்கப் பட்ட மதங்கள் இன்று மனிதனை வெறிப்படுத்த
பயன்பட்டு வருகின்றது .அதனை வலியுறுத்தும் விதமாக உள்ள ஹைக்கூ .

மதவாதிகளின் ஆட்டம்
கால்பந்தானது
மனிதநேயம் !

தங்கத்தின் விலை ஏற ஏற நாட்டில் வன்முறை பெருகி வருகின்றது. ஏழைகளின்
வாழ்வில் கவலை பெருகி வருகின்றது .வரதட்சணை பற்றியும் ஏழை தந்தையின்
பாசம் பற்றியும் உணர்த்தும் ஹைக்கூ .

ஒவ்வொரு நகையிலும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
தந்தையின் வியர்வை வாசம் !

கரை புரண்டு தண்ணீர் ஓடிய மதுரை வைகை ஆறில்  இன்று மாடு கட்டி மாட்டு
தொழுவமாக உள்ளது .நமது நாட்டில் ஆறுகள் எல்லாம் பாலைவனங்கள் ஆகி
வருகின்றது .மணல் கொள்ளையோ அமோகமாக நடந்து வருகின்றது .இதனை உணர்த்தும்
ஹைக்கூ .

இறந்து  போன நதிக்கு
நினைவுச் சின்னமாய்
பாலம் !

மூட நம்பிக்கையின் காரணமாக நம் நாட்டில் மண்ணுக்கும் , தீயுக்கும்
இரையாகும் கண்களை மனிதனுக்கு தர மறுத்து வரும் மனிதர்களுக்கு  புத்தி
புகட்டும் விதமாக ஒரு ஹைக்கூ இதோ் !

சிதைந்த மலரை உயிர்ப்பித்தது
உதிர்ந்த மலர்
கண் தானம் !

விளை  நிலங்கள் எல்லாம் வெகு வேகமாக வீட்டடி  மனைகளாகி வருகின்றது .எதிர்
காலத்தில் உண்ண  உணவே கிடைக்காத நிலை வருவது உறுதி .

நெற்பயிர்கள்
நின்ற இடத்தில
தொட்டிச் செடிகள் !

கவிதைக்கு கற்பனை அழகு .மிக வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ
வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

அடங்காத தாகமோ
இரவு முழுவதும்
நீர்  பருகும் நிலா !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன்நிறைய ஹைக்கூ கவிதைகளில் காட்சிப்
படுத்தி வெற்றி பெறுகின்றார் .

சோறு கேட்டு
கரையும் காகம்
பூட்டிய வீடு !

மனிதர்களின் ஆடை சுத்தமாக உள்ளது ஆனால் மனம் மிக , மிக அழுக்காக உள்ளது
.இதனை உணர்த்தும்  ஹைக்கூ  ஒன்று .

பாவங்களைக் கழுவ
கங்கை ஆறு
மன அழுக்குகளுக்கு ?

கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளார் .ஆனால் கோடிகள் பல செலவழித்தும்
இன்னும் கங்கை அழுக்காகவே உள்ளது .கங்கையில் குளித்து பாவம் போக்குவதை
விட மனிதாபிமானத்துடன் பாவமே செய்யாமல் வாழ்வதே சிறப்பு .

எள்ளல் சுவையுடன் ஒரு ஹைக்கூ படித்தவுடன் நினைத்துப் பார்த்தால் சிரிப்பு
வந்து விடும் .

கையை முந்தி வந்து
லஞ்சம் கேட்டது
போலீஸ்காரர் தொந்தி !

திருடனை ஓடிப்பிடிக்க முடியாமல் தொந்தியும் தொப்பையுமாக காவலர்கள் பலர்
இருப்பதைப்  பார்க்கிறோம் .

"மனைவியிடம் திட்டு வாங்காத கணவனே உலகில் இல்லை ." என்று அறுதி இட்டுக்
கூறலாம் .இவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் , அறிவாளியாக இருந்தாலும்
மனைவியிடம் திட்டு வாங்குவது வாடிக்கை .வீட்டுக்கு வீட்டு வாசப்படி
போன்றது .திட்டு வாங்குவது.யாரவது என் மனைவியிடம் நான் திட்டு வாங்கியதே
இல்லை என்று சொன்னால் அது பொய்யாகவே இருக்கும் .

கடவுள் ஆனார்
கணவர்
மனைவி  அர்ச்சனை !
சுண்டக் காய்ச்சிய பாலாக ,சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் விதமாக
சொற்ச்சிக்கனத்துடன் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பா
.சேது மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
வியாழன், 24 ஜனவரி, 2013

செல்பேசி ! கவிஞர் இரா .இரவி !

செல்பேசி ! கவிஞர் இரா .இரவி !

அவள் அழைக்கட்டும் என்று நானும்
நான் அழைக்கட்டும் என்று  அவளும்
எதிர்ப்பார்த்தே காலம் கழிந்தது !
இருவருமே அழைக்கவில்லை !
விட்டுக் கொடுத்தவர்கள்
கெட்டுப் போனதில்லை !
கேள்விப்பட்டு இருக்கிறோம் !
விட்டுக் கொடுக்க மனம்
விடுவதே இல்லை !
அடுத்தவருக்கு அறிவுரை
சொல்வது எளிது !
சொன்ன அறிவுரை
சொன்னவர் கடைபிடிப்பது அரிது !
ஊடலை உடைக்க ஒரு நொடி போதும் !
ஒரு போதும் அனுமதிக்கவில்லை
தன் முனைப்பு !


நம்பிக்கையில் நான் ! கவிஞர் இரா .இரவி !

நம்பிக்கையில் நான்  !    கவிஞர் இரா .இரவி !

என்னுடைய அலைபேசி எண்
அவளுக்கு தந்து வந்தேன் !
அந்த நிமிடம் முதல்
இந்த நிமிடம் வரை
அழைப்பது அவளோ ? என்று
அழைப்பு வரும்
ஒவ்வொரு முறையும் ஏமாறுகின்றேன் !
என்றாவது அழைப்பாள்
என்ற நம்பிக்கையில்
எண் மாற்றவில்லை !
மூச்சு நிற்கும் முன் அவள்
பேச்சு கேட்கும் என்ற
நம்பிக்கையில் நான் !

விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் ! கவிஞர் இரா .இரவி !

விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் !
கவிஞர் இரா .இரவி !

முடியாது என்று முடங்காதே !
முடியும் என்றே முயன்றிடு !

தெரியாது என்று தயங்காதே !
தெரிந்திடு நன்றே அறிந்திடு !

வருமென்று காத்திருக்காதே !
வாய்ப்பைத்  தேடி சென்றிடு !

பிறந்தோம் என்பதற்காக வாழாதே !
பிறந்தது சாதிப்பதற்கு உணர்ந்திடு !

சராசரியாக காலம் கழிக்காதே !
சாதனை நிகழ்த்தி சாதித்திடு !

காலத்தை வீணாய் கழிக்காதே !
காலம் மேலானது தெரிந்திடு !

அறிவுரை ஏற்காமல் இருக்காதே !
அறிவுரை ஏற்று நடந்திடு !

பெரியவர்களை மதிக்காமல் இருக்காதே !
பெரியவர்களை மதித்து நடந்திடு !

எதிர்காலத்தை திட்டமிடாமல் இருக்காதே !
எதிர்காலத்தை திட்டமிட்டு வகுத்திடு !

மனதில் கவலை கொள்ளாதே !
மனதில் கவலையை அகற்றிடு !

அவநம்பிக்கையோடு இருக்காதே !
அகத்தில் நம்பிக்கை பெற்றிடு !

தோல்வி கிடைத்தால் வருந்தாதே !
தோல்விக்குத் தோல்வி கொடுத்திடு !

வெற்றி தூரமென்று நினைக்காதே !
வெற்றி உன்னருகில் அறிந்திடு !

என்றும் சோம்பேறியாக இருக்காதே !
என்றும் சுறுசுறுப்பாக இருந்திடு !

ஓய்வு எடுக்க நினைக்காதே !
ஓய்வுக்கு ஓய்வு அளித்திடு !

நாளையென்று நாட்களைத் தள்ளாதே !
நாளை என்ன ? இன்றே முடித்திடு !

பேசிடக் கூச்சம் கொள்ளாதே !
பேசி நன்மைகளைப்  பெற்றிடு !

உன் வாழ்க்கை உந்தன் கையில் உள்ளது !
விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் !

புதன், 23 ஜனவரி, 2013

டாக்டர் எம் .எஸ் .உதய முர்த்தி மறைவிற்கு மதுரையில் இதய அஞ்சலி கூட்டம்

மக்கள் சக்தி இயக்க நிறுவனர் ,சிறந்த சிந்தனையாளர் , நதி நீர்
இணைப்புக்கு அன்றே குரல் தந்தவர் , நூல்களி்ன்  மூலம் தன்னம்பிக்கை
விதைத்தவர், மாமனிதர், டாக்டர் எம் .எஸ் .உதய முர்த்தி மறைவிற்கு
மதுரையில் இதய  அஞ்சலி கூட்டம் நடந்தது . கவிஞர் இரா .இரவி கலந்து
கொண்டார் .உடன் மதுரை மாவட்ட மக்கள் சக்தி இயக்க பொறுப்பாளர் திரு
பிரபாகர் .

செவ்வாய், 22 ஜனவரி, 2013

மரம் ! கவிஞர் இரா .இரவி .

- மரம்  !   கவிஞர் இரா .இரவி .

சுவாசிக்க உதவும்
ரசிக்க உதவும்
மரம்  !

பூ காய் கனி நல்கும்
பொதுவுடமைவாதி
மரம்  !

அசைவது இல்லை
தென்றல் தீண்டாமல்
மரம்  !

வெளியில் தெரியாது
வேர்களின் பயணம்
செழித்திடும் மரம்  !

குறிலில் தொடங்கி
மெய்யில் முடியும் மெய்
மரம்  !

சிறிய விதையின்
பெரிய பிரமாண்டம்
மரம்  !

நீர் குடித்து
மழைநீர் வரவழைக்கும்
மரம்  !

சொல்லில் அடங்காது
நல்கிடும் நன்மை
மரம்  !

ஆதாம் தொடங்கி அப்துல்
கலாம் வரை நேசிக்கும்
மரம்  !

நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

விரியும் உலகு !
நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் .செல் 9965039935
நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி .
விலை ரூபாய் 60
கூடு பதிப்பகம் ,31.காளியம்மன் கோவில் தெரு ,பிள்ளையார் பாளையம்
,திண்டுக்கல் . 6240001.

அட்டைப்பட வடிவமைப்பு  நன்று .வித்தியாசமாக உள்ளது .கவிவேந்தர்
மு .மேத்தா அவர்களின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது .
"இக்கவிதைத் தொகுதி புதுக்கவிதைக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்கி ,நற்பெயரை
உண்டாக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது எனக்கு . கவிவாணனின்நாளைய
வெற்றி ஊர்வலத்தை என் கண்கள் இப்போதே கனாக் காண்கின்றன "
புதுக்கவிதையின் தாத்தா மேத்தா அவர்களின் கணிப்பு உண்மையே .நூல் ஆசிரியர்
கவிஞர் கவிவாணன் பல்வேறு இதழ்களில் எழுதி வரும் படைப்பாளி .நல்ல
சிந்தனையாளர் .வத்தலக்குண்டில் வசித்த போதும், மதுரையில் இலக்கிய விழா
என்றால் கலந்து கொள்ளும் இலக்கிய ஆர்வலர். நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன்
தன மகளின் கிறுக்கலை   உற்று நோக்கி கவிதை வடித்துள்ளார் .குழந்தைகளின்
கிறுக்கலை ரசித்தவர்கள் உணரும் நல்ல கவிதை .

விரியும் உலகு !
என் வீட்டில் எந்த வெள்ளைத்தாளும்
என் மகளின் கிறுக்கல் இல்லாமல் இருந்ததில்லை !
இதழ் கூப்பியும் சத்தமிட்டும்
எழுதத் துவங்கும்  போது
உலகம் அவளுக்காக விரிகின்றது !

முயற்சி ! கவிதையில் தேனில் நனைந்த தேனீ  திரு்ம்பப் பறக்கும் முயற்சியை
காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

ஆற்றொழுக்கமாய் !
எந்தப் பொழுதையும் சுவாரசியமாக
ஆக்கும் கலை !
வாழ்வை ருசிக்க வைக்கும் !

உண்மைதான் .எந்த ஒரு செயலையும் கஷ்டப்பட்டு செய்வதை விட்டு இஷ்டப்பட்டு
செய்தால் வாழ்க்கை இனிக்கும் .கவலைகள் காணாமல் போகும்.
அன்று வெள்ளையனே வெளியேறு ! இயக்கம் நடத்தினார்கள் .ஆனால் இன்று
சுயநலத்தின் காரணமாக "வெள்ளையனே  கொள்ளையடிக்க வருக ! வருக ! என்று
வரவேற்று ரத்தினக் கம்பளம் விரிக்கின்றனர் .அரசியல்வாதிகளின் முகத்திரை
கிழிக்கும் விதமாக ஒரு ஹைக்கூ .

சில்லறை வணிகம்
அன்னிய  முதலீடு
சில்லறையான  அரசு !

வெள்ளாடு என்பார்கள் ஆனால் பார்த்தால் கருப்பாக இருக்கும் .அதனை
உணர்த்தும் ஹைக்கூ .

இருட்டின்
எச்சம்
வெள்ளாடு !

உலகில் உறவுகள் ஆயிரம் உண்டு .ஆனால் அம்மா என்ற உறவுக்கு ஈடு இணை இல்லை
.அதனை உணர்ந்து எழுதிய கவிதை .

உலகை முதலில் அறிமுகப்படுத்தியவள் !
உலகில் முதலில் அறிமுகமானவள் அம்மா !

ஈழத்தில் நடந்த தமிழனப் படுகொலை மறக்க முடியாதது .மன்னிக்க முடியாதது
.படைப்பாளிகளால்  தாங்கிக் கொள்ள முடியாத  கொடூரம் .நூல் ஆசிரியர் கவிஞர்
கவிவாணன் ஈழம் பற்றி எழுதி உள்ளார் .

பீனிக்ஸ் தமிழன் !
நிர்வாணம் என்பது பிறப்பில் இருக்கலாம் !
இறப்பிலுமா ?
முள் தைத்த விழிகளோடும்
முள் தைத்த மனசோடும்
புத்தன் அழுகிறான் !
மீட்கப் படுவான்
மீள்வான் மீண்டும் இதே ஈழத்தில்தமிழன்  !

மனு தர்மம் என்பது மனித அதர்மம் என்பதை கண்டு கேட்டு உணர்ந்து கவிதை
வடித்துள்ளார் .

தீட்டு !
கிழ்  வெண்மணி தொடக்கமெனில்
கிளைபரப்பி உத்தப்புரத்திலும் உதிக்கிறது !
அந்த வருணாசிரம  நஞ்சு !
இன்னும் விட்டு விடாது
தொட்டுத் தொடர்கிறது
தீட்டுப் பாரம்பரியம் !

உலகமயம் தாரளமயம்  என்றபெயரில் நம் நாட்டையே அன்னியருக்கு விற்று வரும்
அவலம் கண்டு கொதித்து , நொந்து எழுதியுள்ள கவிதை .

அன்னியமயமாதல் !
வால்மார்ட் வந்தால் என்னவாகும் ?
உனக்கான தாய்ப்பால் கூட
பாலிதீன் பைகளில் விற்பனையாகும் !

உண்மை ! இந்த அன்னிய வரவேற்பு அமோகமாக நடந்தால் இவர் எழுதியதும் நடக்கலாம் .
( ஒரு சிற்றிதழில் தொடராக வெளிவந்த கவிதைகளில் ஒரு சில மட்டும் ) என்று
நூலில் உள்ளது .எந்த சிற்றிதழ் என்பதை அடுத்த பதிப்பில் மறக்காமல்
குறிப்பிடுங்கள் .இன்று சிற்றிதழ்கள் தான் ஆபாசமின்றி தரமாக வருகின்றன.
எழுத்துப்பிழை பல இடங்களில் உள்ளது .அடுத்த பதிப்பில் திருத்தி
வெளியிடுங்கள் .
நாரில் பூச்சுடி கவிதைகள் மிக நன்று .

வியர்வையின் விருட்சங்கள்
பொன்னைக் கண்டுபிடிக்கும் !
பரிமாணமும் பரிணாமமும்
திசைகளைக் கற்றுத் தருகிறது !
பரிமாற்றமும் பரஸ்பரமும்
வாழ்க்கையைக் கற்றுத் தருகிறது !

கேள்விகள் வேள்விகள் ! என்று தலைப்பிட்டு பகுத்தறிவுப் பகலவன் தந்தை
பெரியார் வழியில் ஏன் ? என்று கேள்விகள் கேட்டு சிந்திக்க வைத்துள்ளார்.
பாராட்டுக்கள் .

தலித்துகளுக்கு யாகம் வளர்த்து
பாரதி அணிவித்த பூணூல்  ஏன்  தொடரவில்லை ?

வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வேலை ஏய்ப்பு அலுவலகமாகி விட்ட அவலத்தை
உணர்த்தும் கேள்வி ?

வாய்ப்பே வழங்காத போது
எதற்கு வேலை வாய்ப்பு ?

மீன் தருவதை விட மீன் பிடிக்க கற்றுத் தருவது சிறந்தது ! என்று சீன
பழமொழி உண்டு .ஆனால்  இன்று ஆள்வோர் மீன் தரும் வேலையைத்தான் செய்து
வருகின்றனர் .அதனைச் சாடி ஒரு கவிதை.

வண்ணத் தொலைகாட்சி
மின்விசிறி மிக்சி கிரைண்டர் அரிசி
எல்லாம் இலவசமெனில்
எப்போது உழைக்க ?

கவிஞர் கவிவாணன் தொடர்ந்து படைத்து வரும் படைப்பாளி .கவிஞர் என்பதையும்
தாண்டி நல்ல நண்பர் .பண்பான ,அன்பான சிறந்த மனிதர். தொடர்ந்து படைக்க
வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .


மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின்
சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது
.வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர்
வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் . ஒருங்கிணைப்பாளர்
திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார்.

திரு .ஜோதி மகாலிங்கம் , திரு  கலாம் கே ஆர் .சுப்பிரமணி ,
திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன் ,திரு G. ராம மூர்த்தி ,திரு .அழகர் சுவாமி
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,கே.விஸ்வநாதன்,சந்துரு ஆகியோர்
தன்னம்பிக்கை கவிதை வாசித்தனர் .

  பட்டி மன்ற நடுவர் குகசீல ரூபன் "நமக்கு நாமே " என்ற தலைப்பில் தன்
முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .  நமக்கு நாமே தனம்பிக்கை மிக்கவர்களாக
இருக்க வேண்டும் .நமை பற்றி எதிர் மறையாக "உன்னால் முடியாது" என்று
பேசுவோர் கருத்தை கவனிக்காமல் ,நம் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும்
."முடியும் என்றே முயன்றால் எதுவும் முடியும் ". பல பயனுள்ள கருத்துக்கள்
கூறி பயிற்சி அளித்தார் .மாணவி செல்வ பிரித்தா தன்னம்பிக்கை கருத்துக்
கூறினார் .  திருமதி லதா குமாரி  சுப்பிரமணி நன்றி கூறினார் .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர் திரு.பாண்டியன் ,
திரு .கார்த்திகேயன்,திரு சம்பத்  உள்ளிட்ட   பலர் கலந்துக் கொண்டு
விழாவை சிறப்பித்தனர் .
--


திங்கள், 21 ஜனவரி, 2013

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு . விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .

 விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மானமிகு பதிப்பகம் 3/20 A.ஆதி பராசக்தி நகர் ,திருப்பாலை ,மதுரை .14.
விலை ரூபாய் 60.

 நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .B.S.N.L நிறுவனத்தில் பணி
புரிந்துக் கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர் .விடுதலை, உண்மை
பத்திரிக்கைகளில் படைத்தது வரும் படைப்பாளி .முனைவர்
வெ .இறையன்பு அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்
.முனைவர் பட்டநெறியாளர் பேராசிரியர் கலைமாமணி
கு .ஞானசம்பந்தன் .தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற முனைவர் பட்ட தகுதித்
தேர்வு அன்று சென்று இருந்தேன் .பலரும் பாரட்டினார்கள் நூல் ஆசிரியர் வா
.நேருவை .

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு என்னுரையில் மிக வித்தியாசமாக
எழுதி உள்ளார் .

" நான் பிறவிக் கவிஞன் அல்ல .சரஸ்வதி நாவில் வந்து குடியேறினால்தான்
கவிதை வரும் என்று நம்புபவனும் அல்ல .என்னைப் பாதித்த ,எனக்கு
சரிஎனப்பட்ட  கருத்துக்களைக் கூற இக்கவிதை வடிவத்தை எடுத்திருக்கிறேன்
.கொடுத்திருக்கிறேன் ."

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூலின் தலைப்பே வித்தியாசமாக
உள்ளது .நூலின் தலைப்பில் உள்ள கவிதையில் ஊரில் திருவிழா  என்றால்
வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரம் வீடுகளில் வசூல் செய்து
கரகாட்டம், பட்டிமன்றம் ,டாஸ்மாக் என்று தட  புடலாக செலவு செய்வார்கள்
.ஆனால் ஊரில் உள்ள   பள்ளியை கண்டு கொள்ள மாட்டார்கள் .அதனை உணர்ந்து
எழுதியுள்ள கவிதை நன்று .

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !

ஊரில் உள்ள
ஒரே ஒரு பள்ளிக்கூடம்
கரும்பலகையும்
இல்லாமல்
ஒழுகும் கூரையோடு
கேட்பாரற்றுக் கிடக்கிறது
ரொம்ப நாளாய் !

இறுதி மூச்சு உள்ளவரை மனித சமுதாயத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் தந்தை
பெரியார் பற்றிய கவிதை மிக நன்று .

மனிதருக்கெல்லாம்  மாமருந்தாய் !

ஈரோட்டுப் பூகம்பமே !
நீ மறைந்து ஆண்டுகள் பல ஆனாலும்
நீ ஏற்படுத்திய அதிர்வலைகள்
கடல் அலைகளாய்
ஓயாமல் உலகெங்கும் !

நூல் ஆசிரியர்  வா .நேரு  பகுத்தறிவாளர் கழகத்தில் மாநிலத் தலைவராக  உள்ள
பகுத்தறிவாளர் என்பதால் ,சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்ட கருத்துக்களை
துணிவுடன் புதுக் கவிதையாக வடித்துள்ளார் .எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி
? எங்கு? எதனால் ?என்று தந்தை பெரியார் வழியில்  சிந்தித்த காரணத்தால்
நன்கு படைத்துள்ளார் .

அறிஞர் அண்ணா  பற்றிய கவிதை நன்று .

உனது நூல்களே முறியடிக்கும் !

தந்தை பெரியாரின் தலைமகனே பிரிந்து விட்டார் !
தந்தையும் மகனும் அய்யாவின் கொள்கைக்கு கொள்ளி  வைப்பார் !
என்று எதிர்பார்த்த மூதறிஞர்களின் எதிர்பார்ப்பில்
மண்ணை அள்ளிப் போட்ட மகத்தான சரித்திரமே !

அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும் எனது ஆட்சியே தந்தை பெரியாருக்கு
காணிக்கை என்று சொல்லி பெரியாரின் கொள்கைகளை சட்ட வடிவமாக்கியவர் .சுய
மரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் தந்தவர் அறிஞர் அண்ணா.அறிஞர்
அண்ணாபற்றிய மதிப்பீடு மிக நன்று .
மூட நம்பிக்கைகளை சாடி பல கவிதைகள் உள்ளது .பதச் சோறாக சில மட்டும்
உங்கள் பார்வைக்கு !

ஒரு பக்கம் சந்திரனைச் சென்றடைந்த
சந்திரயான் விண்கலம் !
மறு பக்கம் இருபத்தி எழு பெண்டாட்டி வீடுகள்
அதில் ஒரு வீடான தனுசுவிலிருந்து
இன்னொரு வீடான மகரத்திற்கு
குரு  பகவான்
போகின்றார் .
குரு  பெயர்வது கிடக்கட்டும்
இவர்களின் புத்தி பெயர்வு
எப்போது ?

மாணவர் தேர்வில் ராம ஜெயம் எழுதியதைக் கண்டு எழுதிய கவிதை ஒன்று !

நம் மூளையில் திணிக்கப்பட்டுள்ளது
திணிக்கப்பட்ட குப்பைகளை தூக்கி
வீசாமல்
முன்னேற்றம் என்பது
முயற்கொம்பே !

காதலைப் பாடாமல் கவிதை நிறைவு பெறாது .நூல் ஆசிரியர்  வா .நேருவும்
காதலைப் பாடி உள்ளார் .

ஆதலினால் காதலிப்பீர் !

காதல் வலு சேர்க்கும் !
காதல் சமூகத்தின்
சாதி நோய் போக்கும் !
காதல் சமூகத்தின்
மதப் பொய்மை நீக்கும் !
ஆதலினால் காதலிப்பீர் !

தீபாவளி  மூட நம்பிக்கை கதையைச் சாடி உள்ளார் .கவிதைகள் வசன நடையில்
இருந்தாலும் சிந்திக்க வைத்து வெற்றி பெருகின்றது.பாராட்டுக்கள்.

பிள்ளையார்  (சுழி ) அழி !

பிள்ளையார்  சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு  !
என நம்மை ஏமாற்றி
என்றும் ஏதுமறியா
சுழியன்களாய் நம்மை
வைத்திருக்க சூது செய்யும்
பிள்ளையார் ஊர்வலச்
சதி அறிவோம் !

என் கை பட்டால் நோய்கள் குணமாகும் என்று சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கும்
சாமியார்களின் மோசடிகளை தோலுரிக்கும் விதமாக ஒரு கவிதை இதோ !

பக்தி வியாபாரிகள் !

அறிவியல் மருந்துகளை
மறுத்து வெறும் பிராத்தனையால்
ஓடி விடும் ! நோய்கள் !
என மன நோயாளிகளாய்மனிதர்களை மாற்றிவிடும்
அயோக்கியத்தனம் !

மூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் சமுதாயம் திருந்தும் கவிதைகள் படைத்த
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு அவர்களுக்கு பாராட்டுக்கள்
.தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .இந்நூலை தரமாக அச்சிட்டு  மானமிகு
பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளியிட்ட பகுத்தறிவாளர் நண்பர்  பா
.சடகோபன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் .

திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான  பெண்களின் படம் ) ஆவணப் படம் .

நன்றி புகைப்படங்கள் எடுத்தது திருமிகு மன்சுரா பேகம்

சனி, 19 ஜனவரி, 2013

மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம்


திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான  பெண்களின் படம் ) ஆவணப் படம் .

விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

ஆவணப்படங்களின்  மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கீதா இளங்கோவன் அவர்களின்  நான்காவது ஆவணப்படம் மாதவிடாய் . .ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் ஒரு பெண் பின் நிற்கிறாள் என்பது பொன் மொழி .திருமதி கீதா இளங்கோவன் அவர்களின் வெற்றிக்கு அவரது கணவர் திரு .இளங்கோவன்  முன் நிற்கிறார் என்பது புது மொழி .அவர் தந்த ஊக்கம் பாராட்டுக்குரியது .ஆவணப்படம் பேசத் தயங்கும் விசயத்தை துணிவுடன் படமாக்கிய  திருமிகு கீதா இளங்கோவன் அவர்களுக்கு .பாராட்டுக்கள் .இந்தப் படம் பல விழிப்புணர்வை விதைத்து உள்ளது .ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாக உள்ள மூட நம்பிக்கைகளை சாடும் விதமாக உள்ளது .ஒய்வு பெற்ற காவல்துறை பெண் அதிகாரி எழுத்தாளர் திலகவதி ,சட்டமன்ற உறுப்பினர் பால  பாரதி  ,திருச்சி பாரதி தாசன் பல்கலைக் கழகப் பேராசிரியர்  தொடங்கி கிராமங்களில் உள்ள விவசாய கூலி பெண்கள் வரை அனைத்து தரப்பினரையும் நேர்முகம் கண்டு பதிவு செய்துள்ளார் .ஆவணப்படம் என்பதும் முற்றிலும் பொருந்தும் பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் என பலரின் கருத்தையும் ஆவணப் படுத்தி உள்ளார் .
கிராமங்களில் இன்றும் மாதவிடாய் ஆன பெண்களை தனியா ஒரு அறையில் இருக்க வைத்து விடும் கொடுமை நடந்து வருகின்றது .பள்ளி மாணவி வருத்தத்துடன் அவர் கருத்தை பதிவு செய்துள்ளார் .பரீட்சைக்கு படிக்க முடியாது .இந்த அறையில் மின்சாரம் இல்லை .விளக்கு இல்லை கொசுத் தொல்லை .இந்த அறியில் இருப்பதால் ஊருக்கே நாம் மாதவிடாய்  ஆனது தெரிந்து விடுகின்றது .வயதிற்கு வந்த பெண்கள் மாதா மாதம் வருகிறாளா என்று கவனிப்பார்கள் .சாதரணமாக சில நாள் தள்ளிப் போவது இயல்பு . அதற்கு கற்பம் என்று தவறான அர்த்தம் கற்பித்து விடுவார்கள் என்று பயந்து ஆக விட்டாலும் ஆனதுபோல இந்த அறைக்கு வந்து அமர்ந்து விடுவோம் .என்று பெண் கூறி உள்ளார் .
இந்தப் படம் பார்த்து விட்டு இந்த விழாவில் பேசியபோது நான் குறிப்பிட்டேன் .ன்பான் பெண் விடுதலை பற்றி முற்போக்கு கவிதைகள் எழுதிய போதும் பேசியபோதும்  ,  நான் என் மனைவி நாப்கின் என்னை வாங்கச் சொன்னால் நான் மறுத்து விடுவேன் .இந்தப்படம் பார்த்தபின் எனக்குள் மன மாற்றம் வந்தது .இனி நான்  நாப்கின் வாங்கி கொடுப்பேன் .இது ஆண்களுக்கான படம் மட்டுமல்ல பெண்களும் பார்க்க வேண்டிய படம்தான் .
நம் நாட்டில் ஏவு கணைகள்  ஏவி விட்டோம் .அணுகுண்டு வெடித்து விட்டோம் .சந்திரனுக்கு சந்திரயான் அனுப்பி விட்டோம் என்பதல்ல பெருமை ."பெண்களுக்கு பெண்களின் கழிவிடங்களில் மாதவிடாய் கழிவுகளை அழிப்பதற்கு வழி  செய்து விட்டோம் என்பதே பெருமை ".என்பதை உணர்த்தும் படம் இது .இந்த விழாவிற்கு வந்த கல்லூரி மாணவி சொன்னார் .கல்லூரி மூலமாக தேசிய மாணவியர் படை கிராமம் சென்றால் .மாதவிடாய் கழிவு அகற்ற படும் பாடு மிகவும் கஷ்டம் .என்றார் .நான் அமெரிக்கா சென்று உள்ளேன் அங்கு பெண்கள் கழிவறையில் நாப்கின் எடுத்துக் கொள்ளவும் ,கழிவு போடுவதற்கு தனி பேடியும் உள்ளது .வாரா வாரம் இந்த பெட்டி பராமரிக்கிறார்கள் .என்றார் .நம்  நாட்டில் அவல நிலை இன்னும் தொடர்கின்றது .இந்த படத்தின் இயக்குனர் தகவல் அறியும் சட்டத்தின் படி கேட்டுள்ளார் .பெண்கள் மாதவிடாய் கழிவு அகற்ற சுகாதார நிதி ஒதிக்கி அரசு ஆணை உள்ளதா ? என்று .இது வரை இல்லை என்று பதில் வந்துள்ளது. அதையும் படம் பிடித்து உள்ளார் .பாராட்டுக்கள் .

மூட நம்பிக்கை கார னமாக பெண்களை கோயிலில் அனுமதிக்காத நிலை .இந்து கிறித்தவர் முகமதியர் என்று எல்லா மதத்தினரிடம் மூட நம்பிக்கை உள்ளது .அர்ச்சகர் ,அருட்தந்தை ,முல்லா போன்ற பதவிகளில் பெண்களை அனுமதிப்பது இல்லை .இன்னும் ஐய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை .ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடே .இப்படி பல சிந்தனைகளை அதிர்வுகளை உருவாக்கி உள்ளது இந்தப்படம் .படம் பார்த்து விட்டு வந்த பின்னும் இரவு முழுவதும் .பெண்களுக்கான துன்பத்தை துயரத்தை நினைத்து தூக்கம் வர வில்லை எனக்கு .அலுவலகத்தில் பணி  புரியும் பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் மாற்றிக் கொள்ள வசதி இல்லை என்பதற்காக ,சிறுநீர் வரக் கூடாது தண்ணீர் கூட குடிக்காமல் இருக்கிறார்கள் .இதனால் மன   உளைச்சல் சிறுநீர் தொற்று நோய் ,கற்பப்பை புற்று நோய் வருகின்றது என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர் .இனியாவது பெண்கள் கழிவறைகளில் மாதவிடாய் கழிவு போடுவதற்கு வசதி செய்து தர வேண்டும் அரசு .ஆயரதிர்க்கு மேல் பண்கள் பனி புரியும் தலைமை செயலகத்தில் கூட இந்த வசதி இன்னும் செய்யப்பட வில்லை .

இந்தப் படம் பார்க்கும் ஆண்களுக்கு பெண்கள் மீதான மதிப்பு உயரும் .மாதவிடாய் காலங்களில் அவர்களிடம் அன்பு செலுத்து வேண்டும் .இப்படி பல போதனைகளை தந்துள்ள மிக நல்ல படம் .பாராட்டுக்கள்.இந்தப் படத்தில் மூட நம்பிக்கை காரணமாக குடுபத்துடன் திருப்பதி செல்ல முன் பதிவு செய்து விட்டோம் .எனக்காக பயணத்தை தள்ளிப்போட முடியாது .எனக்கு மாதவிடாய் வரும் தேதி என்பதால் மாதவிடாய் தள்ளிப் போகட்டும் என்று சிலர் மாத்திரை சாப்பிடுகின்றனர் .இது மிகவும் தீங்கு .ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .எனவே இனி யாரும் இந்த தள்ளிப் போக மாத்திரை சாப்பிடாதீர்கள் என்ற கருது இடம் பெற வில்லை .ஆனால் முப்பது நிமிட குறும்படத்தில் இவ்வளவு சொன்னது பெரிய விசயம் .இயக்குனர் கீதா  இளங்கோவனுக்கு பாராட்டுக்கள் .விரைவில் நல்ல திரைப்படம் ஒன்று இயக்குங்கள் ..வாழ்த்துக்கள் 

வெள்ளி, 18 ஜனவரி, 2013

திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் .


திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான  பெண்களின் படம் ) ஆவணப் படம் திரையிடப்பட்டது .திருமிகு எம் ஜே .பிரபாகர் .நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ,தொகுத்து வழங்கினார் .கவிஞர் .இரா இரவி ( உதவி சுற்றுலா அலுவலர் )வரவேற்று ஆவணப் படம் பற்றிய கருத்துக்களை சொல்லி பாராட்டினார் .திருமிகு பிம்லா  சந்திர சேகர் ( இயக்குனர் ஏக்தா ( பெண்களுக்கான ஆதார மையம் ) தலைமை வகித்து ஆவணப் படம் பற்றிய கருத்துக்களை சொல்லி பாராட்டினார்  விழாவில் கலந்துக் கொண்ட தீக்கதிர்  ஆசிரியர் ,எழுத்தாளர் பெருமாள் ,குமுதம் நிருபர் திரு.திருமலை பகுத்தறிவாளர் கழக திரு.நேரு, காமராசர் பல்கலைக் கழக பேராசிரியர்கள் ,மாதவிடாய் ஆவணப்படத்தின் இயக்குனர் திருமிகு கீதா இளங்கோவன்  ஏற்புரையாற்றினார் .காரல் மார்க்ஸ் நூலக வாசகர்கள் ,மக்கள் கண்காணிப்பகத்தின்பணியாளர்கள் , கூடு வாசிப்பரங்கம் உறுப்பினர்கள் என பெருமளவில் கலந்துக் கொண்டு விழாவை .சிறப்பித்தனர் படத்தின்  இயக்குனரை குரு மருத்துவமனை மேலாளர் 
திரு . கே .ஆர் .சுப்பிரமணி அவரது மனைவியுடன் விழாவிற்கு வருகை தந்து வாழ்த்தினார் .கூடு வாசிப்பரங்கம் திருமிகு .மன்சுரா பேகம் நன்றி கூறினார்.விழா மக்கள் கண்காணிப்பகத்தின்சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது 


மதுரை மேலக்கோட்டை கிராமத்தில் நடந்த பொங்கல் சுற்றுலா விழா

Inline image 1
Inline image 3

மதுரை மேலக்கோட்டை கிராமத்தில் நடந்த பொங்கல் சுற்றுலா விழா

மதுரை மேலக்கோட்டை  கிராமத்தில் நடந்த பொங்கல் சுற்றுலா விழா
Inline image 1
Inline image 1
Inline image 2
Inline image 3

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...