வியாழன், 31 மார்ச், 2016

பெங்களூரூ தொடர்வண்டி நிலைய உணவகத்தில் உள்ள தொட்டி மீன்கள் ! படம் கவிஞர் இரா .இரவி !

பெங்களூரூ தொடர்வண்டி நிலைய உணவகத்தில் உள்ள தொட்டி மீன்கள் ! படம் கவிஞர் இரா .இரவி !

பெங்களூரூ தொடர்வண்டி நிலையம் மண்டல அலுவல பூங்கா ! படம் கவிஞர் இரா .இரவி !

பெங்களூரூ தொடர்வண்டி நிலையம் மண்டல அலுவல பூங்கா !
படம் கவிஞர் இரா .இரவி !

பெங்களூரூ அந்தி வானம் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

பெங்களூரூ அந்தி வானம் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! ஏப்ரல்-01, முட்டாள்கள் தினக் கவிதை ! கவிஞர் ப.கண்ணன்சேகர் 9894976159. திமிரி .

படித்ததில்  பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

ஏப்ரல்-01,  முட்டாள்கள் தினக் கவிதை !

கவிஞர் ப.கண்ணன்சேகர் 9894976159. திமிரி .

P.Kannansekar,
13,Varada reddi street,
TIMIRI-632512,
Vellore dt, Tamil nadu, INDIA
cell:9698890108.

எல்லோரும் ஒருநாளில் எங்கேயோ ஏமாற்றம்
         ஏய்ப்பவனின் அடிமையாகி ஏழைகளின் ஏமாற்றம்
கொல்லும்நோய் வந்ததாலே கோடீஸ்வரன் ஏமாற்றம்
         கூடினாலும் குறைசொல்லும் கூட்டணியும் ஏமாற்றம்
வெல்லுகிற வீரனுக்கும் வயோதிகம் ஏமாற்றம்
     வந்தபின்னே தவிக்கின்ற வறுமையும் ஏமாற்றம்
சொல்லுகிற வார்த்தையில் சுட்டெரிக்க ஏமாற்றம்
     சுதந்திரத்தை தனக்கெனவே சொந்தமாக்க ஏமாற்றம்

அதிகப்படி இலவசமோ அரசியலில் ஏமாற்றம்
      ஆட்சியாளர் வாக்குறுதி அன்றாட ஏமாற்றம்
துதிப்பாடும் கூட்டங்கள் தொடர்வதும் ஏமாற்றம்
      துளிர்த்திடும் லஞ்சஊழல் துறைதோறும் ஏமாற்றம்
முதியோரை காக்காமல் முடக்குவதும் ஏமாற்றம்
      முதலிலா தரகுத்தொழில் மொத்தமாய் ஏமாற்றம்
விதியெனவே நினைப்பது வாழ்க்கையே ஏமாற்றம்
       விதைக்காமல் உழுவதால் விளைவதோ ஏமாற்றம்

நதியிணைப்பு செய்யாமை நாட்டிற்கே ஏமாற்றம்
       நாட்டுக்குள் பிரிவினையால் நல்லிணக்க ஏமாற்றம்
கதியற்ற தமிழருக்கு கண்ணீரே ஏமாற்றம்
       காத்திட மனமில்லா கட்சிகளின் ஏமாற்றம்
நிதிக்கேட்டு தொண்டர்களை நெருக்குவதும் ஏமாற்றம்
      நாளுமொரு கட்சியென நடைமுறையும் ஏமாற்றம்
மதிகலங்கும் நன்கொடையால் மாணவர்கள் ஏமாற்றம்
      மகிழ்ந்திடும் முட்டாள்தினம் மடமையின் ஏமாற்றம்.
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

புதன், 30 மார்ச், 2016

பிடித்த பாடல் !கவிஞர் இரா .இரவி ! நன்றி . கவிஞர் கண்ணன் சேகர்

பிடித்த பாடல் !கவிஞர் இரா .இரவி !
நன்றி . கவிஞர் கண்ணன் சேகர் .


கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் . மயக்கமா ? கலக்கமா ? காரணம் காவியக் கவிஞர் வாலி திரைப்படத்திற்கு   முயற்சி செய்து தோல்வி கண்டு விரக்தியில் சொந்த ஊருக்கு   சென்று விடலாம் என்று முடிவு எடுத்தப்  போது ,இந்தப் பாடல் கேட்டு முடிவைக் கைவிட்டு தொடர்ந்து முயற்சி  பாட்டு எழுதி மூன்று  தலைமுறைக்கு பாட்டு எழுதி காவிய  கவிஞராக உயர்ந்தார் .
ஒரு பாடல் என்ன செய்யும் என்பதற்கு இது உதாரணம் .இப்படி பல பாடல்கள் பலரது வாழ்வில் மாற்றம் ஏற்றம் விளைவித்தது உண்மை .

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி 
நினைத்துப்   பார்த்து நிம்மதி நாடு ."

நமக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்துப் பொறாமைப் பட்டு பலர் நிம்மதி இழந்து விரக்தியில் தற்கொலை வரை  செல்கின்றனர். கவியரசர் எழுதியது போல நமக்கு கீழே உள்ளவர்களைப் பார்த்துஆறுதல் அடைய வேண்டும் எனக்கும் கவலைகள் உண்டு .உலகில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும் கவலைகள் உண்டு.ஆனால் கவியரசரின் இந்தப் பாடல் கேட்டால் கவலை காணமல் போகும் என்று  உறுதி கூறலாம் கேட்டுப் பாருங்கள் நீங்கள் .நான் எழுதியது உண்மை என்பதை உணர்வீர்கள் .  
.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி.
தருமபுரியில் இருந்து பெங்களூரூ தொடர் வண்டி பயணத்தின் பொது எடுத்து இயற்கை காட்சிகள் .படங்கள் கவிஞர் இரா .இரவி.

தருமபுரியில் இருந்து பெங்களூரூ தொடர் வண்டி பயணத்தின் பொது எடுத்து இயற்கை காட்சிகள் .படங்கள் கவிஞர் இரா .இரவி.
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவியின் பாமாலை ! நன்றி பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் (சென்னை )

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவியின் பாமாலை !
நன்றி பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்  (சென்னை )
)


-- 

மலரும் நினைவுகள் ! நன்றி ! புகைப்படக் கலைஞர் கே .சிவக்குமார் கோவை .

மலரும் நினைவுகள் !
நன்றி ! புகைப்படக் கலைஞர் கே .சிவக்குமார் கோவை .விழா அழைப்பிதழ் !

Displaying Final 1.jpgDisplaying Final 1.jpgDisplaying Final 1.jpgவிழா அழைப்பிதழ் !

செவ்வாய், 29 மார்ச், 2016

தினமணி இணையம் தந்த தலைப்பு ! வாக்கு உன் செல்வாக்கு ! கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு !

வாக்கு உன் செல்வாக்கு ! கவிஞர் இரா .இரவி !

வாக்கு உன் செல்வாக்கு உண்மை 
வாக்கை செல்வத்திற்கு விற்பது மடமை !

உலகின் மிகப்பெரிய மக்களாட்சி  நாடு 
உன் உரிமையை உண்மையாக நிலை நாட்டிடு   !

மனதில் சிந்தித்து மனசாட்சிப்படி போடு 
மற்றவர் சொல்வதற்காக போடுவதை விடு !

விழிகளை விற்று ஓவியம் வாங்கலாமா ?
வாக்குகளை விற்று பணம் வாங்கலாமா ?

சின்னமீனைப் போட்டு பெரியமீனைப் பிடிக்கும் 
சின்ன்ப்புத்திக் காரர்களிடம் கவனம் வேண்டும் !

வாக்களிக்க வாங்கிடும் பணத்தால் நமக்கு 
வருவது ஒரு நாள் இன்பம் ஐந்து வருடங்கள் துன்பம் !

தமிழகம் தவிர வேறு மாநிலங்களில் இல்லை 
தமிழகத்திற்குத் தலைகுனிவு வாக்களிக்கப் பணம் !

ஏழ்மையை விலைபேசி ஏளனம் செய்கின்றனர் 
ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்து காட்டுவோம் !

ஏழை பணக்காரன் வேறுபாடுகள் இன்றி 
எல்லோருக்கும் உண்டு வாக்களிக்கும் உரிமை ! 

காமராசர் காலத்தில் சேவைகள் செய்தனர் அன்று 
கணினி காலத்தில் ஊழல் செய்கின்றனர் இன்று !

அரசியலில் நேர்மை வாய்மை இருந்தன அன்று 
அரசியலில் நேர்மை வாய்மை இல்லை  இன்று !


சாதியைப் பார்த்து வாக்களிக்கவில்லை அன்று 
சாதியைப் பார்த்து வாக்களிக்கின்றனர் இன்று !

நல்லவர்கள் நின்றனர் தேர்தலில் அன்று 
நல்லவர்களைத் தேட வேண்டியுள்ளது இன்று !

பொதுநல விரும்பிகள் இருந்தனர்  அன்று 
தன்னல விரும்பிகள் பெருகினர் இன்று !

மக்கள் தொண்டை விரும்பினர் அன்று 
தன் மக்கள் தொண்டை விரும்புகின்றனர்  இன்று !

கொள்கைக்காக வைத்தனர் கூட்டணி அன்று   
கோடிகளுக்காக வைத்தனர் கூட்டணி இன்று !

அதிகபட்ச நல்லவர்கள் இருந்தனர் அன்று 
குறைந்தபட்ச கெட்டவர் தேர்வு இன்று !

பணம் வாங்கி வாகளிக்கவில்லை அன்று 
பணம் வாங்கி வாகளிக்கின்றனர் இன்று !

வாக்கு உன் செல்வாக்கு அதனை நீ 
வாய்மையாக பணம் பெறாது பயன்படுத்து !


-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

சாட்டை படத்தின் முலம் சமுதாயத்தில் கல்வி குறித்து தாக்கம் ஏற்படுத்திய இனிய நடிகர் ,இயக்குனர் சமுத்திரக்கனி அவர்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது அறிந்து மகிழ்ந்தேன் .பாராட்டுக்கள்

சாட்டை படத்தின் முலம் சமுதாயத்தில் கல்வி குறித்து தாக்கம் ஏற்படுத்திய இனிய நடிகர் ,இயக்குனர் சமுத்திரக்கனி அவர்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது அறிந்து மகிழ்ந்தேன் .பாராட்டுக்கள் .

5 வது முறையாக தேசிய விருது பெறும் மண்ணின் மைந்தன் மேஸ்ட்ரோ ,சிம்பொனி இளையராஜா அவர்களுக்கு பாராட்டுக்கள் . கவிஞர் இரா .இரவி !

5 வது முறையாக தேசிய விருது பெறும் மண்ணின் மைந்தன் மேஸ்ட்ரோ ,சிம்பொனி இளையராஜா அவர்களுக்கு பாராட்டுக்கள் . கவிஞர் இரா .இரவி !


சிம்பொனி ,மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களை ப் பற்றி 1997 ஆம் ஆண்டிலேயே நான் எழுதிய கவிதை !

மேஸ்ட்ரோ இளையராஜா வாழ்க பல்லாண்டு !
கவிஞர் இரா .இரவி !
இசைஞானியே ! இசையின் தோணியே !
இளையராஜாவே ! இன்னிசை ரோஜாவே !
அன்னக்கிளியில் ஆரம்பமானது இசைப் பயணம் !
ஆங்கில நாட்டில் சிம்பொனியாய் மிளிர்ந்தது !
கிராமியப் பாடல்களுக்கு வாழ்வளித்த வல்லவரே !
கிராமத்தில் பிறந்து உயர்ந்த நல்லவரே !
பட்டி தொட்டி எல்லாம் கிராமியப் பாடல்கள் !
பாமரரை எல்லாம் ஈர்த்திடும் பாடல்கள் !
மேட்டுக் குடியினருக்கே சொந்தமென்ற இசையை !
மண் குடிசைக்கும் சொந்தமாக்கி மகிழ்வித்தாய் !
புரியாத இந்தி இசையை தமிழ்நாடு விட்டு விரட்டினாய் !
புரிந்த தமிழ்ப் பாடலால் சரித்திரம் படைத்தாய் !
தங்கத் தமிழில் ஒலித்திட்டாயே பாடல்கள் யாவும் !
தரணியே போற்றித் தகும் வண்ணம் செய்தாய் !
நடிகருக்காக ஓடிய படங்களின் தன்மையை !
நயம் தரும் இசைக்காக ஓட வைத்தாய் !
புலிக்குப் பிறந்தது பூனையாகாது உண்மை !
உந்தன் வாரிசுகள் நிருபித்தனர் நன்மை !
தமிழக மக்களை மட்டுமன்றி உலகத் தமிழர்களை
தரமான பாடல்களால் உள்ளம் கொள்ளைக் கொண்டாய் !
உலகம் உள்ளவரை தமிழ் மொழி இருக்கும் !
தமிழ் மொழி உள்ளவரை உன் பாடல் நிலைக்கும் !
2015 ஆம் ஆண்டு எழுதிய கவிதை !
இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே !
கவிஞர் இரா. இரவி !
*****
பண்ணைப்புரத்தில் பிறந்த இசைப்பண்ணையே!
பழைய மதுரை மாவட்டமான தேனியில் உதித்தவரே!
மேட்டுக்குடி இசையை மாடு மேய்ப்பவருக்கும் தந்தவரே!
மென்மையான இசையை மேன்மையாக வழங்கியவரே!
நாட்டுப்புற இசையை நாடு வியக்க இசைத்தவரே!
நாடுகள் தாண்டிச் சென்று சிம்பொனி மீட்டியவரே!
விருதுகள் பல பெற்று விருதுகளுக்கு பெருமை ஈந்தவரே!
விவேகமான பாடல்களை வெள்ளித்திரையில் யாத்தவரே!
கடவுளுக்கு மேலாகத் தாயை வணங்குபவரே!
கடவுள்கள் பலருக்கு கும்பாபிசேகம் செய்தவரே!
ராசய்யா என்ற இயற்பெயரை இளையராசா என மாற்றியவரே!
ராசாவாக இசையில் என்றும் வலம் வருபவரே!
பாவலர் வரதராசனின் பண்பான இளவலாக வளர்ந்தவரே!
பாவலரோடு பல கச்சேரிகள் செய்து இசை கற்றவரே!
உன்பாடல் ஒலிக்காத தொலைக்காட்சி இங்கு இல்லை!
உன்பாடல் ஒலிக்காத தொலைக்காட்சி தொலைக்காட்சியே இல்லை!
இசையால் இதயங்களை இதமாக்கிய இசைவேந்தரே!
இசையால் வசமாக்கி எல்லோரின் உள்ளம் கவர்ந்தவரே!
ஆறு முதல் அறுபது வரை அனைவரையும் ரசிக்க வைத்தவரே!
ஆறு இசை ஆறு தமிழகத்தில் ஓடிடச் செய்தவரே!
இசையில் பொற்காலம் உன் காலம் என்றாக்கியவரே!
இசை ஓசையில் ஒழுங்கு ஒழுங்கை ஒழுங்கு செய்தவரே!
அன்னக்கிளியில் தொடங்கி ஆயிரம் படங்களுக்கு மேல் இசைத்தவரே!
அன்னப்பறவையென தண்ணீர் விலக்கி இசைப் பால் நல்கியவரே!
மிகச்சிறந்த படங்களுக்கு விருது கிடைத்திட காரணமானவரே!
மோசமான படங்களையும் இசையால் ஓடிட வைத்தவரே!
கர்னாடக இசை, மேற்கத்திய இசை எந்த இசையிலும்
கற்கண்டு பாடல்களை இசை அமைத்தவரே !
ஏழைகளின் கவலைப் போக்கும் பாடல் தந்தவரே !
ஏழைகளின் இன்னலை பாட்டில் வடித்துத் தந்தவரே !
குடத்து விளக்காக இருந்த கவிஞர்கள் பலரை
குன்றத்து விளக்காக ஒளிர வைத்தவரே!
பாடகர்கள் பலரை உச்சம் தொட வைத்தவரே !
பாடகிகள் பலரை புகழ் அடைய வைத்தவரே !
கவிதை கட்டுரை எழுதும் ஆற்றல் மிக்கவரே !
கிராமத்தில் பிறந்து லண்டன் வரை புகழ் சேர்த்தவரே !
பண்ணால் பண்ணைப்புரத்திற்கு புகழ் சேர்த்தவரே !
பல மொழிகளில் இசையமைத்து புகழ் பெற்றவரே !
இசை வரலாற்றில் நிலைத்த இடம் பெற்றவரே!
என்றும் காலம் கடந்தும் நிலைக்கும் உந்தன் இசை!
சாதனைகள் பல புரிந்த போதும் தலையில் ஏற்றாதவரே!
சோதனைகள் வந்த போதும் துவளாத உள்ளம் பெற்றவரே!
எழுபத்தி இரண்டாம் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !
இன்னும் புதிய புதிய இசை எதிர் நோக்குகின்றோம் !
எழு ராகத்திலும் இன்னிசையில் இசையாட்சி புரிபவரே !
இனிதே பல்லாண்டு வாழ்க நூற்றாண்டுகள் கடந்து !
.
இளையராஜா இசையில் மூத்த பெரிய ராஜா !
இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே !


உங்களால் எங்களுக்குப்பெருமை! வாழ்க பல்லாண்டு!

உங்களால் எங்களுக்குப்பெருமை! வாழ்க பல்லாண்டு!

திங்கள், 28 மார்ச், 2016

நன்றி மாலை முரசு நாளிதழ்

நன்றி மாலை முரசு நாளிதழ் .

நிலவு ! கவிஞர் இரா. இரவி

நிலவு !

கவிஞர் இரா. இரவி

சித்திரை நிலவே  ! சித்திரை நிலவே !
சிந்தையை செதுக்கிட வா ! சீரோடு வா ! 
எட்டாத தூரத்தில் இருந்தாலும் உன்னை
எட்டிப் பிடிக்கும் எல்லோருடைய மனமும் !
உன்னை விரும்பாதவர் இந்த
உலகில் இல்லை என்பதே உண்மை !
குழந்தை முதல் பெரியவர் வரை
குவலயத்தில் அனைவருக்கும் பிடிக்கும் !
தேய்ந்து வளர்வதாகத் தெரிந்தாலும்
தேய்வு வளர்ச்சி உண்மையில் இல்லை!
கவிஞர்களின் முதல் பாடுபொருள் நீ
காதலி கூட அடுத்த பாடுபொருள் தான் !
உன்னைப் பாடாத கவிஞர் இல்லை
உன்னைப் பாடாதவர் கவிஞரே இல்லை !
அன்று முதல் இன்று வரை மட்டுமல்ல
அடுத்து வரும் எதிர்காலமும் நீயே பாடுபொருள் !
கற்காலம் தொடங்கி கணினிக் காலம் வரை
கவிஞர்களுக்கு கவிதை தரும் அட்சயப் பாத்திரம் நீ !
உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்குமென்றால்
உதாரணமாக பூமி அளவுக்கு பிடிக்கும் என்பேன் !
காதலி கூட பிரிவது உண்டு
கண்ணே நீ என்றும் பிரிவது இல்லை !
கனவிலும் வருகிறாய் ! நினைவிலும் வருகிறாய்
காட்சி தருகிறாய் ! களிப்பூட்டுகின்றாய் !
முழு நிலவு நாளில் உன்னை ரசிக்க
முழி இரண்டு போதாது எனக்கு !
பால் நிலவு எனபார்கள் இல்லை இல்லை
பாலை விட வெண்மை நீ !
திருமணமான புதிதில் இணைகள் செல்வதை
தேன்நிலவு செல்லல் என்றார்கள் !
தேன் இனிப்பு நிலவு மகிழ்ச்சி
தேன் நிலவு பொருத்தமாக சூட்டினார்கள் !
உன் மீது முதலில் தயங்காமல் கால் வைத்ததால்
உலக வரலாற்றில் இடம் பிடித்தார் ஆம்ஸ்ட்ராங் !
இருட்டில் நான் நடந்து சென்றால்
என்னோடு நீயும் கூட நடந்து வருவாய் !
வழியில் நின்று உன்னை ரசித்தால்
வனப்புடன் நீயும் நின்று ரசிப்பாய் !
நிலா இங்கே வா ! வா ! என்று பாடிய பாடல்
நீண்டு வளர்ந்த பின்னும் நினைவில் நிற்கின்றது !
உன்னைக் காட்டி அன்னை சோறூட்டியது
ஒருபோதும் மறக்கவில்லை எனக்கு !
அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் குழந்தைகளுக்கு
அன்னையால் உன்னைக் காட்ட முடிவதில்லை !
இயற்கையான உன்னை ரசித்து வளர்ந்ததால்
இன்றும் நான் இயற்கை ரசிகனாக உள்ளேன் !
என் தாத்தாவின் காலத்தில் இருந்தது போலவே
என் அப்பாவின் காலத்திலும் இருந்தாய் !
என் காலத்திலும் அப்படியே இருக்கின்றாய்
என் மகன் காலத்திலும் அப்படியே இருப்பாய் !
உன் இளமையின் ரகசியத்தை நீ சொல்
என்னிடம் மட்டுமாவது 
சொல் !
மாற்றம் ஒன்று தான் மாறாது என்பார்கள்
முழு நிலவில் எந்த மாற்றமும் இல்லை !
காலம் காலமாய் இளமையாக நீ
கண்களைக் கொள்ளை கொள்ளும் அழகு !
பசியை மறக்கடிக்கும் அழகு உனக்கு
பாமரனையும் ரசிக்க வைக்கும் அழகு !
கதிரவனிடமிருந்து பெற்ற ஒளியை குளிர்வித்து
குளிர் ஒளியாய் வழங்கும் வித்தை எங்கு கற்றாய் ?
பகலில் கதிரவனைத் திட்டிய மக்கள்
இரவில் உன்னைப் பாராட்டி மகிழ்கின்றனர் !
உன்னைக் கண்டு அல்லி மட்டும் மலரவில்லை
உலக மனிதர்கள் யாவரும் மலர்கின்றனர் !
சந்திராயானை அனுப்பி உன்னுள் தண்ணீர் உள்ளது
செப்பினார்கள் மன ஈரமுள்ளவன் நீ நிரூபணமானது !
சந்திரன் என்று ஆண்பாலுக்கு உன் பெயர்
நிலா என்று பெண்பாலுக்கும் உன் பெயர் !
ஆண் பெண் இருபாலருக்கும் பிடிக்கும்
அதனால்தான் உன் பெயர் இருபாலருக்கும் !
நிலவென முகமென்று காதலியிடம் சொன்னாள்
நிலவென ஒளிர்கின்றது காதலியின் முகம் !
நம் காதலுக்கு நிலவு சாட்சி என்றால்
நங்கை நம்புகிறாள் உன்னை சாட்சியா
க !
சங்க இலக்கியத்தில் அன்று வந்த நீ
சந்தோசக் கவிதையில் இன்றும் வருகிறாய் !
வளர்பிறை தேய்பிறை மாயை அறியாதவர்கள்
வாய்க்கு வந்தபடி மூட நம்பிக்கை பரப்புகிறார்கள் !
உனக்கு இணையான உவமை உலகில் இல்லை
உனக்கு உவமை உலகில் நீ மட்டுமே !
குழந்தைகள் விரும்பிடும் குதூகலம் நீ
காதலர்கள் போற்றிடும் கட்டழகு நீ !
பசியோடு பார்ப்பவனுக்கு தோசை நீ
பரவசத்தோடு பார்ப்பவனுக்கு பால்நிலா நீ !
விளையாட்டு வீரன் பார்வைக்கு பந்து நீ
விவேகமாக சிந்திப்பவன் பார்வைக்கு சிந்து நீ !
பார்த்துக் கொண்டே இருக்கலாம் சலிப்பே வராது
பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும் !
வட்டம் என்ற வடிவத்தின் விளம்பரத் தூதுவர் – நீ
வட்டமிட்டு சுற்றினாலும் சூரியன் வசமாகவில்லை!
உயரத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் கவியரங்கம்
உயரத்தில் இருக்கும் தலைமைக் கவிஞன் நீ !
கதிரவன் பிடிக்குமா? நிலவு பிடிக்குமா? எனக்
கேட்டு வாக்கெடுப்பு வைத்தால் வெற்றி உனக்கே !
வெப்பத்தை விரட்டியடிக்கும் சூரன் நீ
அப்பத்தைப் போன்ற உருவமுள்ள இனிமை நீ !
குளத்தில் மிதக்கும் உன்னை சிறுவர்கள்
கல்லால் சிதைத்து மகிழ்வதுண்டு !
ஆதாம் ஏவாள் காலத்திலும் இருந்தாய்
அன்னை தெரசா காலத்திலும் இருந்தாய் !
கேத்ரின் தெரசா காலத்திலும் இருக்கிறாய்
காலம் காலமாய வாழும் விந்தை நீ !
ஆண்டு ஒன்று போனால் வயதொன்று கூடும்
ஆண்டாண்டு காலமாய வாழும் உன் வயதென்னவோ ?
மண்ணின் மனிதர்கள் முதுமை தவிர்க்க முடியாதது
விண்ணின் உனக்கோ முதுமை இல்லை இளமை மட்டுமே !
உன்னில் மனிதர் வாழலாமா? என ஆராய்ச்சி
உன்னில் மனிதன் வாழ்ந்தால் மாசாக்கிடுவான் உன்னை !
கண்டால் கவலை காணாமல் போகும் உன்னை
கண்டவர் உள்ளம் கொள்ளை போகும் !
ஒப்பனை இல்லாத இயற்கை அழகு நீ
ஒப்பற்ற உயர்ந்த இடத்து அழகு நீ
நிலவுக்கு உவமை நிலவு மட்டுமே 
நிலவுக்கு நிகர் நிலவு மட்டுமே !

நன்றி . தினமணி இணையம்

அணையட்டும் சாதீ: கவிஞர் இரா .இரவி

First Published : 28 March 2016 12:00 AM IST

விலங்கிலிருந்து மனிதன் வந்தது பரிணாம வளர்ச்சி 
விலங்காக மனிதன் மாறுவது  பரிணாம  வீழ்ச்சி  !
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழகத்தில் 
சங்கம் வைத்து சாதி வெறி வளர்க்கும் அவலம் !
தூண்டி விட்டு வேடிக்கைப் பார்க்கும் தலைவன் 
தூண்டில் புழுவாக இரையாகும் தொண்டன் !
சொந்த புத்தியின்றி சொல்புத்திக் கேட்கும் கொடுமை  
சோகத்தில் ஆழ்த்தி மகிழ்ந்திடும் கொடூர மடமை !
பெற்ற மகளை விட உனக்கு உன் சாதி பெரிதா ?
பெற்ற மகனை  விட உனக்கு உன் சாதி பெரிதா ?
சாதிமத வெறியால் மாண்ட உயிர்கள் போதும் 
சாதிமத வெறி உடன் மாண்டால்  போதும் !
எதையும் ஏன் ? எதற்கு  ? எப்படி எதனால் ? என சிந்தி 
எவனோ சொன்னதற்காக கூலிப்படையாகலாமா ?
விலை மதிப்பற்றது மனித உயிர்கள் உணர்ந்திடு 
வீண் வீம்புக்கு உயிர் பறிப்பதை நிறுத்திடு !
உன் சாதியால் மட்டும் ஒரு நாள் வாழ முடியுமா ?
ஒட்டு மொத்த சாதியின் பங்களிப்பே உன் வாழ்வு !
உன் சாதிக்கு என்று தனி ரத்தமா ஓடுது ?
உனக்கு உயிர் காக்க உதவிய உதிரம் எந்த சாதி ?
விலங்குகள் கூட அன்பு செலுத்தி வாழுதடா 
வெட்டி மனிதர்கள் தான் வெட்டி வீழ்கின்றனர் !
சாதீயை வளர விடுவது தமிழகதிற்கு அவமானம் 
சா தீயை மனிதநேயம் தண்ணீரால் அணைத்திடுவோம் 

சகோதரர்களாய் அனைவரும்  கூடி வாழ்வோம் 
சாதி எனும் தீயை அணைக்க வீரர்களாய் மாறுவோம் !
நன்றி  . தினமணி இணையம்


ஞாயிறு, 27 மார்ச், 2016

புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் தமிழ் மூதறிஞர் இரா இளங்குமரனார் சிறப்புரை.படங்கள் கவிஞர் இரா .இரவி !

புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் தமிழ் மூதறிஞர் இரா இளங்குமரனார் சிறப்புரை.படங்கள் கவிஞர் இரா .இரவி !

மதுரை வானொலியில் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது

மதுரை வானொலியில் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது .கவிஞர்கள் இரா .இரவி ,கவி மோகன் ,ரோஸ்லின் ஆகியோர் கவிதை பாடினார்கள் .14.4.2016 அன்று மதியம் 2.30 மணிக்கு ஒலிபரப்பாகின்றது .

நன்றி .நிகழ்ச்சி தயாரிப்பாளர் திரு .ஞானசம்பந்தன் .


மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சி .வீர பாண்டியத் தென்னவன் தலைமையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைப்பில் கவியரங்கம் .நடந்தது

மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சி .வீர பாண்டியத் தென்னவன் தலைமையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைப்பில் கவியரங்கம் .நடந்தது .செயலர் கவிஞர் இரா .இரவி வரவேற்று ,பின் கவிதை வாசித்தார் .தமிழ் அறிஞர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் இணையத்தில் பதிந்திட ஒளிப்பதிவு செய்தார் .புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் அவர்கள் தமிழ் அறிஞர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களை பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார் .உடன் அமுது ரசினி அவர்கள் .தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது