சனி, 31 மே, 2014

இறைவன் தந்த பரிசு ! நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் . 9486264022. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

இறைவன் தந்த பரிசு !


நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 35. செல் 9944391668

நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்கள் தச்சுத் தொழிலாளி. இவருக்கு மரத்தை செதுக்குவது மட்டுமல்ல சொற்களை செதுக்குவதும் கை வந்த காரணத்தால் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியருக்கும் ,பதிப்பாளர் இனிய நண்பர் ஏகலைவன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .வாசகன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது .
.
ஆணாதிக்கச் சமுதாயத்தைப் பார்த்து கேட்க்கும் கேள்விகள் சிந்திக்க வைக்கின்றன .சிறு வயதிலேயே ஆணாதிக்க சிந்தனையை கற்பித்து விடுவதால் அது இரத்தத்தில் கலந்த ஒன்றாகி விடுகின்றது. சமுதாயத்தில் மாற்றம் நிகழ வேண்டும் .சக மனுசியின் மனசை மதிக்கும் உள்ளம் வேண்டும் .பெண்களை சமமாக  மதிக்கும் உள்ளம் எல்லா ஆண்களுக்கும் வர வேண்டும் .அதற்காக படைப்பாளிகள் குரல் தர வேண்டும் .நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் குரல் தந்துள்ளார். பாராட்டுக்கள் .

உன்னைச் சுற்றும் சாபங்கள் !

வீட்டுக்கு ஒரு பெண்டாட்டி 
அவருக்கு மலடி என்று பெயர் பிள்ளை பெறாட்டி
தனக்கோர்  வாரிசு வேண்டுமென்று ஆண் 
அவன் மறுமணம் செய்து கொள்கிறான் .

தனக்கே குறை இருந்தால் 
மனைவிககோர் மணம் செய்வானா ?  

ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள் .ஆசிரியர் சமுதாயத்திற்கு வேண்டுகோள் போல வைக்கும் கவிதை நன்று .அறிவொளி ஏற்றும் விளக்குகளான ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டும் .

நல்ல குருவுக்கு நன்றி !

திறமை நிறைந்த ஆசிரியர்களே 
வறுமை நிறைந்த மாணவனுக்கும் 
பெருமை வாய்க்கும் கல்வியை 
சேவையாக கற்றுத் தாருங்கள் !

வாழ்வியல் கருத்துக்களை விதைக்கும் விதமாக பல கவிதைகள் நூலில் உள்ளன .பாராட்டுக்கள் .துன்பத்திற்கு துவளாமல் வாழ்வது எப்படி ? என்பதை உணர்த்துகின்றார் .

சுகங்கள் விரும்பாதீர் !

சுமக்கத் துணிந்தவனுக்கு 
மலையும் துரும்பாகும் !

சுமக்க இயலாதவனுக்கு தன்
தேகமே சுமையாகும் !

சங்கடத்தையும் 
சுகமாய் மாற்றிக் கொண்டால் 
தொலைந்துவிடும் துன்பங்கள்  
இதை மனதிடம் சொல்லி வையுங்கள் !

உழைப்பாளிகளின் சார்பில் உரக்க குரல் தந்து உள்ளார் .

உழைத்தவன் களைக்கும் முன்னே 
அவன் ஊதியத்தைக் கொடுங்கள் !
அவனுக்கு சுகங்கள் இல்லாவிட்டாலும் 
உயிராவது இருக்கட்டும் !
 
.
தமிழகத்தின் சிறப்புகளில் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்த கூட்டுக் குடும்பம்  பற்றி சிந்திக்க வைக்கும் கவிதை நன்று .கூட்டுக் குடும்பம்   இன்று சிந்திந்து தனித்தனி குடும்பமாகி  விட்டன.
   
உயர்ந்த பின்னே மறவாதே !!

தேனீக்களின் பெருந்தன்மை 
அதன் கூட்டை அழித்தாலும் 
மீண்டும்  கூடி கூடு  கட்டுது !
நம் கூட்டுக் குடும்ப வாழ்வில் 
சிறு சண்டை வந்தாலும் 
மனம் விலகி மீண்டும் சேர்வதில்லை !

தமிழ்ப் பண்பாட்டை  சீரழித்து வரும் தொலைக்காட்சித்
தொடர்களுக்கு தமிழக மக்கள் அடிமையாகி விட்டனர் .இவர்கள் மீட்டு எடுக்க வேண்டிய அவசர அவசியம்  உள்ளது  . தொலைக்காட்சியால் வாசிக்கும் நல்ல பழக்கமும் வழக்கொழிந்து வருகின்றது .நூல் ஆசிரியர் கனவிலும் வாசிக்கிறார் .

சொப்பனத்தில் ஒரு புத்தகம் !

உறங்க இமை மூடினேன் 
சொப்பனத்தில் புத்தகம் படித்தேன் !
நூலகத்தின் நூலிலே 
நல்ல கருத்துக்கள்.

சலித்தவன் சாதித்தது இல்லை 
சாதிப்பவன் சலிப்பதும் இல்லை 

இது நல்ல கருத்து
இந்த கருத்தை 
என் இதயத்தில் ஏற்றி வைத்தேன் !

நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .இறைவன் தந்த பரிசு என்ற  பெயரில்  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்கள் தந்த பரிசு நன்று 


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கவித்தென்றல் ! நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கவித்தென்றல் !


நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் ! mail2mariammal@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 35. செல் 9944391668kavignareagalaivan@gmail.com

நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்கள் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில் குறை இல்லாத காரணத்தால் ஆழ்ந்து சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .குடத்து விளக்காக இருந்த கவிஞர் பி .மாரியம்மாள் அவர்களின் கவிதை ஆற்றலை குன்றத்து விளக்காக ஒளிரும் வண்ணம்  நூலாக்கிய இனிய நண்பர் ஏகலைவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்கள் B.COM ,D.C.A, D.T.P. படித்து உள்ளார்கள்.இந்த  நூலை தன் பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார் . இந்த நூல் வெளி வர உதவிய  உள்ளங்களுக்கு மறக்காமல் நன்றியை பதிவு செய்துள்ளார்கள் . 

நூலில்  முதல் கவிதை செய்தித்தாள் விற்றுப் படித்து தலைப்புச் செய்தியானவர் .இந்தியாவின் கடைக்கோடியான  இராமேசுவரத்தில் படகோட்டி மகனாகப் பிறந்து  இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்த  மாமனிதர்  அப்துல் கலாம்  பற்றிய கவிதை நன்று.

ஐயா  அப்துல் கலாம் !

கனவுகளை 
கனவில் மட்டுமல்லாமல்
நினைவிலும் 
சிற்பமாக செதுக்கியவர் .

வீடு வீடாக 
செய்தித்தாள் போட்டு 
கல்வி பயின்ற 
பல்கலைக்கழகம் .

10 வகுப்பு தேர்வில் தோற்று பின் நாளில் பெரிய சாதனைகள் புரிந்தவர்கள் பட்டியல் நீளம்.இதை உணராமல்  தேர்வில்   தோல்வி அடையும் சிறு தோல்வி  கூட   தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர் .தோல்வியால் துவளும் நெஞ்சங்களுக்கு  தன்னம்பிக்கை  விதைக்கும் விதமான கவிதை மிக நன்று .

வீழ்வது தோல்வியல்ல !

கீழே விழுவதால் 
வீழ்ந்து போவதில்லை ..
அருவி !

மண்ணில் விழுவதால் 
பழுதாவது இல்லை ..
விதை !

தவறி விழுவதால் 
தளிர்நடை மறுப்பதில்லை 
மழலை !

முயற்சியில் தோல்வியடைந்தால் 
விட்டு விலகுதல்  அழகா ?
உனக்கு .. 

எளிய சொற்களின் மூலம் வாழ்வியல் கருத்துக்களை நுட்பமாக கற்பிக்கும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

கற்றது கையளவு !

அம்மாவிடம் 
அன்பைக்  கற்க வேண்டும் !

நண்பரிடம் 
நேசத்தைக் கற்க வேண்டும் !

உறவினர்களிடம் 
விட்டுக்கொடுத்தலைக்  கற்க வேண்டும் !

முதியோர்களிடம் 
அனுபவத்தைக் கற்க வேண்டும் ! 

இனிய நண்பர் மாற்றுத்திறனாளிகள்  கவிதைத்  தொகுப்பு வெளியிட்டவர்  பதிப்பாளர் ஏகலைவன் பற்றிய கவிதை நன்று .

நம்பிக்கை நாயகனே வா !

மாற்றுத்திறனாளிகளின் 
நலனுக்காகவே 
வாழ்ந்து கொண்டு 
பலரின் வாழ்க்கைப் பாதையில் 
ஒளியை மலரச் செய்யும் 
சகோதரனே ஏகலைவா ..!

புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் நூலின் உள்ளன. பாராட்டுக்கள் .

அன்பின் மேன்மை சொல்லும் ஹைக்கூ நன்று .

எதிரியையும் பணியவைக்கும் 
ஆன்ம மந்திரம் 
அன்பு !

நட்பின் நுட்பம் சொல்லும் ஹைக்கூ மிக நன்று .

இன்பத்தில் தூரமிருந்தாலும் 
துன்பத்தில் பக்கமிருக்கும் 
உன்னதமான நட்பு !

இன்று பலர் குடியால்  சீரழிந்து  வருகிறார்கள் .மதிப்பை எங்கும் இழந்து வருகின்றனர் . அவர்களுக்கான ஹைக்கூ ஒன்று .

குடியை நிறுத்து 
ஊற்றெடுக்கும் 
வளமை !

கவித்தென்றல் நூலிருக்கான தலைப்பு மிகப் பொருத்தம் பெயருக்குப் பெயர் வைக்காமல் உண்மையில் கவிதைகள் கவித்தென்றலாகவே இருந்தது .நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்களுக்கு எழுதிய இந்த நூலிற்காக பாராட்டுக்கள் .இன்னும் எழுத உள்ள நூலிற்கு வாழ்த்துக்கள்.  


வெள்ளி, 30 மே, 2014

. 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,

.


'ஆயிரம் ஹைக்கூ'  

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.

நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர், 
vimalaandu@gmail.com   பேராசிரியர் பச்சையப்பன் கல்லூரி, சென்னை-30.

வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com

184 பக்கங்கள் விலை ரூபாய் 100.

சங்கத்தமிழ் வளர்த்த மதுரையின் தங்கக் கவிஞராக உலா வரும் அன்புக்குரிய நண்பர் ஹைக்கூ கவிஞர் இரவியின் “ஆயிரம் ஹைக்கூ”" என்ற நூலினை வாசிக்கும் பேறு பெற்றேன்.
இளைய சமுதாயம் தமிழின் பக்கம் தலை வைத்துப் படுக்க மறுக்கும் இக்காலகட்டத்தில், தமிழுக்காக தன் தலையையும், எந்த விலையையும் தரக்கூடியவர் தான் கவிஞர் இரவி.

இணையத்தில் ஹைக்கூவிற்காக அவர் வைத்துள்ள www.kavimalar.com  www.eraeravi.com
 இணையத்தளங்கள்  உலகப்புகழ் பெற்றவை ..  பெரும்பொருட்செலவு செய்து இணையத்தில் கவிதைத் துறையினை வளர்த்து வருகிறார்.  பாரதி சொன்ன நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச்செறுக்குடன் வலம் வரும் இளைஞர்.

ஹைக்கூ கவிதைக்கென்று இளைய வாசகர்கள் உண்டு.  அந்த வரிசையில் முன்னணியில் இருக்கும் கவிஞர் இரவி.  மற்ற எல்லா கவிஞர்களுக்கும் இடையே இவருக்குள்ள சிறப்பு, ஹைக்கூவை இயக்கமாகவே வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

ஜப்பானிய இலக்கிய வடிவமான இவ்வடிவத்தில் நம் தமிழ் மண்ணுக்குரிய பாடுபொருள்களை சமைத்து ஹைக்கூவை புதிய திசையினை நோக்கி நகர்த்துகிறார்.  தமிழ், சமூகம், மூடநம்பிக்கை ஒழிப்பு, இயற்கை, தத்துவம், பெண்கள் மேம்பாடு, போலி அரசியல் என பல பாடுபொருள்களில் இவரது கவிதைகள் செல்கின்றன.

உலகளாவிய நிலையில் பறந்த தமிழன், இன்று தனக்கென்று நாடு இல்லாமல் அகதிகளாக இருக்கும் நிலையைக் கண்டு கொதித்தெழுகிறார். 

   இல்லாத நாடில்லை
   இவனுக்கென்று ஒரு நாடில்லை
    தமிழன் !              
               
என்கிறார்.

அண்மையில் “ஈழ ஏதிலியர் (அகதிகள்) ஓர் அறைகூவல்" என்ற தொகுப்பு நூலை இரா. இரவி மதுரையில் மிகச்சிறப்பாக, அரசரடியில் இறையியல் கல்லூரியில் வெளியிட்டார்.  ஈழ மக்கள் மீதும், ஈழ மண் மீதும் அவர் வைத்துள்ள அன்பு, எங்களையெல்லாம் ஒரு புள்ளியில் இணைத்தது.  கவிதை எழுதுவது மட்டுமல்ல; செயல் துடிப்புள்ள வீர இளைஞர் இவர்.

சில நேரங்களில் “போலிகள் வென்று விடும்; நிஜங்கள் தோற்று விடும், இதனை அழகிய கவிதையாக வடிக்கிறார்.

     அசலை வென்றது
      நகல்
      செயற்கைச் செடி !

என்ற வரியில் இவரது கூரிய பார்வை தொடுகிறது.
மேலும் பல முற்போக்கு சிந்தனைகளின் விளைநிலமாக இரவி திகழ்கிறார். உலக நாடுகள் எல்லாம் தூக்குத் தண்டனை ஒழித்து மனித உரிமையை போற்றி வரும் இந்த நாளில், தமிழ்நாட்டில் பேரறிவாளன், முருகன், நளினி போன்றவர்கள் தூக்கு தண்டனை கைதிகளாய் சிறைக்குள் இருப்பதனை தன் கவிதையில் சாடுகிறார்.

      கணினி யுகத்தில்
      காட்டுமிராண்டித் தனம்
      தூக்குத் தண்டனை !

முரட்டுத் தனமான கொடிய சட்டங்கள் இந்த ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல . என உரைக்கிறார்.

அண்மையில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.  ஆனால் ‘கருப்பு மை' வைத்து வாக்காளர்கள் முகத்தில் கரி பூசும் நிகழ்ச்சியாகவே இருக்கிறது.  இன்று வறுமைக்கோட்டுக்கு கீழ் 30 கோடி மக்கள் வாழ்கிறார்கள்.  வாக்காளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள் என்பதனை சிறந்த கவிதையாக வடிக்கிறார்.
     இலவு காத்த கிளியாய்
      விடியல் நோக்கி
      வாக்காளர்கள் !

   என்கிறார்.

அற்புதமான இயற்கை ஆர்வலராக இருப்பது அவர் கவிதை வழி எனக்குத் தெரிந்தது.

      மழையில் நனைந்தும்
      வண்ணம் மாறவில்லை
      வண்ணத்துப்பூச்சி !

மிகச் சிறப்பான கவிதை.  இக்கவிதை சிறப்பை விரிவாக பேச முடியும்.  இன்னொன்று பட்டுப் புடவை அணிந்து வரும் பெண்கள்.  ஆனால் இரவி அழகை பார்க்காது, பட்டு புடவைக்காக அழிக்கப்பட்ட பட்டு புழுக்களைப் பற்றி கவலைப்படுகிறார்.  இங்கே தான் கவிஞர் நிற்கிறார்.

       பட்டுப் பூச்சிகளின்
      அழுகுரல்கள்
       பட்டுப் புடவைகளில் !

 நேர்த்தியான ஹைக்கூ கவிதை.

நீ-கோன் என்ற ஜப்பானிய சொல்லுக்கு, சூரியன் வலம் வருதல் என்று பொருள்.  அதே போல் தமிழ் வானில் உலா வரும் கவிஞர் என்ற சூரியன் இன்னும் பெரிய சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.
ஜப்பானிய மொழி நான் படித்தேன்.  இரண்டு முறை ஜப்பான் சென்று வந்து என் ஹைக்கூ நூலினை ஜப்பானில் வெளியிட்டேன். அங்கு நம் இரவி போன்ற கவிஞர்களின் கவிதைகளை ஜப்பானில் எடுத்து சொன்னேன்.  ரசித்தனர்.  நம் தமிழ் இன ஹைக்கூ கவிஞர்கள் கவிதைகளை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்து அதனை ஜப்பானில் வெளியிட வேண்டும்.  அதற்கு ஜப்பானிய மொழி அறிந்த பேராசிரியர்களும், இரவி போன்ற இளைய கவிஞர்களும் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்தால் “வானம் நமக்கு வசப்படும்".


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

நன்றி .மாலை முரசு

நன்றி .மாலை முரசு 

புதன், 28 மே, 2014

கவிஞர் இரா .இரவி ஹைக்கூ கவிதைகள் மலையாள மொழியில் !

கவிஞர் இரா .இரவி ஹைக்கூ கவிதைகள் மலையாள மொழியில் !

மலையாள மொழிபெயர்ப்பு ; மலையாள மொழி அறிஞர் 
திரு . ஸ்டான்லி  ( கோவை )
.
கவிஞர் இரா .இரவியின் ஆயிரம் ஹைக்கூ நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகள் சில மலையாளத்தில் மொழி பெயர்த்த மலையாள மொழி அறிஞர் திரு .ஸ்டான்லி  ( கோவை ) அவர்களுக்கு மிக்க நன்றி. மலையாளம் அறிந்தவர்கள் படித்து மகிழுங்கள் .மலையாள நண்பர்களுக்கு அனுப்பி வையுங்கள் .தமிழின் பெருமை அவர்களும் அறியட்டும் .
-- 
இனிய நண்பர் இசக்கி கைவண்ணத்தில்

இனிய நண்பர் இசக்கி கைவண்ணத்தில்

இனிய நண்பர் இசக்கி கைவண்ணத்தில்

இனிய நண்பர் இசக்கி கைவண்ணத்தில்


செவ்வாய், 27 மே, 2014

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


எட்டாவது வரை படித்து 
எட்டாத உயரம் உயர்ந்தவர் 
கவியரசு !

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு யுகமாய்
ஏழைகள் !

கள்ளம் கபடம் அறியாத
கற்கண்டுகள்
சிறுவர்கள் !

மீனவர்களின்
அட்சயபாத்திரம்
கடல் !

காதல் ! கவிஞர் இரா .இரவி !

காதல் !  கவிஞர் இரா .இரவி !கவிதை வழங்கும் 
அட்சயப் பாத்திரம் 
காதல் ! 

முக்காலமும் 
பாடு பொருள் 
காதல் ! 

மூன்றெழுத்து முத்தாய்ப்பு 
மூச்சு இருக்கும்வரை நினைப்பு 
காதல் ! 

ஒன்றும் ஒன்றும் 
இரண்டல்ல ஒன்று 
காதல் ! 

கவிதை வரும் 
விதையென வளரும் 
காதல் ! 

நினைவலை தொடரும் 
மகிழ்ச்சி பரவும் 
காதல் ! 

முகம் மலரும் 
அகம் குளிரும் 
காதல் ! 

சிறகுகள் முளைக்கும் 
சிந்தனை பறக்கும் 
காதல் ! 

சொல்லில் அடங்காது 
சொன்னால் புரியாது 
காதல் ! 

ஊடல் இன்றி 
ஒருவரும் இல்லை 
காதல் !

கண்களில் தொடங்கி மூளையில் பதிந்து 
உதட்டில் வழியும்  
காதல் ! 

திரைப்படத்தில் ரசிப்பு 
இல்லத்தில் எதிர்ப்பு 
காதல் !

நாவலில் விருப்பு 
நம் வீட்டில் வெறுப்பு 
காதல் !

நேரடியாக சந்திக்காவிட்டாலும்  
நினைவுகள் சந்திக்கும் 
காதல் !

இணையற்ற இணை 
என்றனர் 
எங்களை !

காணமல் போகும்
கவலை 
அவள் சிரித்தால் !

இருட்டிலும் 
ஒளிர்கின்றன 
அவள் விழிகள் !

வாசனை திரவியங்கள் 
தோற்றன 
கூந்தல் வாசம் !

எந்த  ஆடையும் 
அழகாகின்றன 
அவள் அணிந்தால் !

நின்றால் அழகு 
நடந்தால் அழகோ அழகு 
அவள் !

ஊட்டம் தரும் 
உமிழ்நீர் பரிமாற்றம் 
முத்தம் !.

சிமிட்டாமல் பார்ப்பதில் 
சிங்காரி வென்றாள்
தோற்றேன் நான் ! நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !என் கவிதை வானில் நூல் ஆசிரியர் கவிஞர் ஹரி கிருஷ்ணன் ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !

என் கவிதை வானில் 
நூல் ஆசிரியர் கவிஞர் ஹரி கிருஷ்ணன் !
நூல் அணிந்துரை  கவிஞர் இரா .இரவி !

தன்னம்பிக்கை மாத இதழ் செய்தி !

தன்னம்பிக்கை மாத இதழ் செய்தி !

“டாக்டர் மு.வ. ஆய்வுக்கோவை “ பதிப்பாசிரியர்கள் : முனைவர் பா. கந்தசாமி முனைவர் வா.மு.சே. ஆண்டவர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

“டாக்டர் மு.வ. ஆய்வுக்கோவை “
பதிப்பாசிரியர்கள் : முனைவர் பா. கந்தசாமி
                            முனைவர் வா.மு.சே. ஆண்டவர்
நூல் விமர்சனம் : கவிஞர் இராரவி
சேதுச்செல்வி பதிப்பகம்,26/2, நேரு நகர் முதன்மைச் சாலை, சாலிக்கிராமம், சென்னை-93.
அலைபேசி : 94445 51750,   
vimalaandu@gmail.com   விலை : ரூ. 150
*****
                இலக்கிய இமயம் மு. வரதராசன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு பன்னாட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக நூல் வந்துள்ளது.  இந்த நூலை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் முனைவர் பா. கந்தசாமி மற்றும் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் புதல்வர் பேராசிரியர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் ஆகிய இருவரும் தொகுத்து நூலாக்கி உள்ளனர்.  அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையினை கட்டுரை வடிவில் வடிப்பதற்கு உழைத்த உழைப்பை உணர முடிகின்றது.  இலக்கிய இமயம் மு.வ. அவர்களின் புகழ் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக இந்த நூல் ஒளிர்கின்றது.
       இலக்கிய இமயம் மு.வ. பற்றி அறிஞர் அண்ணா சொன்னவை. டாக்டர் மு.வ. அவர்கள் தம்முடைய எழுத்தின் மூலம் பேச்சின் மூலம் தாமும் சிந்திப்பார்.  அவருடைய பேச்சையும் எழுத்தையும் பெற்றவர்கள் தாமும் சிந்திக்கத் தொடங்குகின்ற வகையில் அந்த எழுத்துக்கும் பேச்சுக்கும் தனிச்சிறப்பு இருக்கிறது.
       டாக்டர் மு.வ. அவர்களைப் பார்த்துவிட்டு அவர்களுடைய ஏடுகளைப் படித்தால் இந்த சாந்தபுருசரா இவ்வளவு புரட்சிகரமான கருத்துக்களையும் எழுதி இருக்கிறார்?  உண்மை தானா? என்று எண்ணிப் பார்ப்பார்கள்.  அப்படித் தோற்றத்திலேயும், நடைமுறையிலும், தன்மையிலேயும் அமைதியே உருவாக இருந்து கொண்டு, அந்த அமைதியைத் துணைக் கொண்டு, ஆர்வத்தை உடன் வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு வழிகாட்டியாக பல அரிய கருத்துக்களை அவர் தந்திருக்கிறார். 
அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றல்மிகு சொல்வலிமையினால், மு.வ. அவர்களை பார்த்திராத இன்றைய இளைய தலைமுறையினருக்கு காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார்.  மு.வ. அவர்கள் பற்றிய பிம்பத்தை மேலும் மேலும் உயர்த்தும் விதமாக நூலைத் தொகுத்த தொகுப்பாசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.
       மு.வ. அவர்களின் படைப்பை படித்தவர்கள், ஆராய்ந்தவர்கள், பழகியவர்கள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் என தேடிப் பிடித்து, தகவல் தந்து, வேண்டுகோள் விடுத்து, கட்டுரைகள் பெற்று நூலாக்கி உள்ளனர்.  நூலில் மொத்தம் 22 கட்டுரைகள் உள்ளன.  முத்தாய்ப்பாக உள்ளன.  முத்திரை பதிக்கும் விதமாக உள்ளன.
       மு.வ. அவர்கள் எழுதிய திருக்குறள் உரை விற்பனையில் சாதனை படைத்த உரை.  அவருக்கு திருக்குறள் மீது அளப்பரிய பற்றும், பாசமும், புலமையும் உண்டு.  அவர் எழுதிய திருக்குறள் கட்டுரைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை சிறப்பாக புலவர் 
பா. வீரமணி எழுதி உள்ளார்கள்.
       “தமிழகத்தில் திருக்குறளைப் போதித்தவர்களில், பரப்பியவர்களில் டாக்டர் மு. வரதராசனார் தலையாயவர்.  தமிழ் படிக்கும் மாணவ மாணவியரிடத்து மட்டுமல்லாமல் சாதாரணப் பாமரரிடத்தும் திருக்குறளைக் கொண்டு சென்றவர்”.
       மு.வ.வின் இலக்கியப் பணி : முனைவர் தெ. ஞானசுந்தரம்
பெருந்தகை மு.வ. தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதையும் அறிந்தவர். எனினும் சங்க இலக்கியம், திருக்குறள் சிலம்பு ஆகியவற்றில் தோய்ந்தவர் என்றும் அவற்றில் அரிய ஆய்வு முடிவுகளைக் கண்டு அறிந்தவர் என்றும் கூறலாம்.
       மொழியியல் அறிஞர் மு.வ. : பேராசிரியர் ச. வளவன்
தமிழ் இலக்கியத்தையும், தமிழர் நலனையும், தமில் மொழியினையும் போற்றும் வகையிலும், போற்றவும் காக்கவும் துணிந்தவர் மு.வ. சங்க இலக்கியம் முதற்கொண்டு இக்கால இலக்கியம் வரை ஆழ்ந்து கற்றவர் அவர்.  அவற்றின் சிறப்புகளை நூல்களில் காட்டியவர் அவர்.
       மு.வ.வும் மொழி நடை இயல்பும் : முனைவர் இராம. குருநாதன்,
மு.வ. காலத்திற்கு முன் புதினங்கள் எழுதிட, பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் போன்ற பேராசிரியர்கள் படைப்பிலக்கியத்தில் வெற்றி பெற்றதாக கருத இயலாது.  அப்படியே வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் நடை கடுநடையாக இருந்தது.  மு.வ. தம் எழுத்து யாவரும் உணர்ந்து படிக்கக் கூடியதாகவும், எளிமை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கரை செலுத்தினார். 
மு.வ.வும் திராவிட இயக்கமும் என்ற கட்டுரையை 
திரு. க. திருநாவுக்கரசும்,
மு.வ.வும் பாரி நிலையமும் என்ற கட்டுரையை 
திரு. செ. அமர்ஜோதி அவர்களும்,
மு.வ.வும், ஈழ மண்ணும் என்ற கட்டுரையை 
திரு. செ. கணேசலிங்கமும் எழுதி உள்ளனர். 
தொகுப்பாசிரியரகளில் ஒருவரான பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் எழுதியுள்ள மு.வ.வும் பழந்தமிழ் இலக்கியமும் என்ற கட்டுரையில் இருந்த சிறு துளிகள்.
       “தனக்கென ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு ஓர் இலட்சிய நெறியில் வாழ்ந்தவர் மு.வ. அவர்கள். மனித இதயத்தின் உணர்வுகளையும், இயற்கையின் கவர்ச்சி நிறைந்த எழிலையும் நெருங்கிப் பிணைப்புடையனவாய் இனிய உறவுடையனவாய் மு.வ.கருதினார். இவற்றை  மேனாட்டு அறிஞர்களின் அரிய ஆய்வுக் குறிப்புகளுடன் நிறுவினார். 
       இலக்கிய இமயம் மு.வ. என்ற மிகப்பெரிய ஆளுமையாளர் பற்றி அறிந்து கொள்ள உதவும் ஆய்வு நூல். வருங்கால சந்ததிகளும் மு.வ. பற்றி அறிந்து கொள்ள ஆவணப்படுத்திய அற்புதமான நூல்.  மு.வ. வின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் தமிழ்த்தேனீ இரா. மோகன்    அவர்களிடமும் ஒரு கட்டுரை வாங்கி இருக்கலாமே என்று தோன்றியது.  தொகுப்பாசிரியர் இருவருக்கும் பாராட்டுக்கள்.
******


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

திங்கள், 26 மே, 2014

சிறுகதை ! கவிஞர் இரா .இரவி !

சிறுகதை ! கவிஞர் இரா .இரவி !

ஒரு குடும்பத்தில் எல்லோரும் கஷ்டப்பட்டு ஒருவரை நன்கு படிக்க வைக்கின்றனர் .  படித்து முடித்த அவருக்கு  உயர் பதவி கிடைக்கின்றது .வேலையில் சேர்ந்தவுடன்  விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார் . குடும்பத்தின் ஜென்மபகையாளனை விருந்துக்கு அழைக்கிறார் .அவனை அழைத்தால் நான் வர மாட்டேன் என்றார் அண்ணன்  .நீ வராவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லி ஜென்மபகையாளனை வரவேற்று விருந்து வைத்தார் .குடும்ப உறுப்பினர்கள் வருத்தத்தில் .

கவனம் கொடூரன் ! கவிஞர் இரா .இரவி !

கவனம்  கொடூரன் !         கவிஞர் இரா .இரவி !

செருப்பாலடித்து விட்டு 
கருப்பட்டி தந்தானாம் 
மீனவர்  விடுதலை !

லட்சகணக்கில் கொன்று விட்டு 
சிறு எண்ணிக்கை விடுதலை 
இலங்கை !
.
அப்பாவிகளை கைது செய்து 
அரங்கேற்றினான் 
விடுதலை நாடகம் !

அதையும் பாராட்டும் 
அப்பாவி கூட்டம் 
மீனவர் !

யோக்கியன் வருகிறான் 
சொம்பை தூக்கி வை உள்ளே 
அவன் வருகை ! 

மறக்க முடியாதவன் 
மன்னிக்கக்  கூடாதவன் 
கொடூரன் !

இரக்கமற்ற அரக்கன் 
இனம் அழித்த வேடன் 
அவன் !

ஜாலியன் வாலபாக் மிஞ்சும் 
கொடுரம் நிகழ்த்தியவன் 
அவன் !

கொடுமையில் 
கிட்லரை வென்றவன் 
அவன் !

சுதந்திரம் கேட்டவர்களை 
சுட்டு வீழ்த்தியவன் 
அவன் !

விடுதலை கேட்டவர்களின் 
வேரை அறுத்தவன் 
அவன் !

ஜனநாயகத்தையும் மக்களையும் 
குழி தோண்டி புதைத்தவன் 
அவன் !

நெஞ்சம் பொறுக்கவில்லை 
வஞ்சகனை நினைத்தால் 
மோசக்காரன் !

வானூர்தி வழி குண்டுகள் வீசி 
மக்கள்  உயிரைப்  பறித்தவன் 
அவன் !

புலிகள் என்று சொல்லி 
பூனைகளையும் கொன்றவன் 
அவன் !

முப்படை தாக்குதல் 
சொந்த மக்கள் மீதே நடத்தியவன் 
அவன் !

சர்வாதிகாரத்தின் உச்சம் 
தமிழனம் இல்லை மிச்சம் 
முடித்தவன் அவன் !

ரோசம் மானம் 
துளியும் இல்லாதவன் 
அவன் !

நடிக்கிறான் நம்பாதீர் 
நம்பிக்கை துரோகி 
அவன் !

சிரித்தே கழுத்தறுக்கும் 
நயவஞ்சகன் 
அவன் !

கொலைகாரனுக்கு வரவேற்பு
கொள்கையாளருக்கு சிறை 
மிக நன்று !  

சிங்களன் உறவு 
தமிழர் பகை 
வாழ்க தேசியம் !

பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இரா .இரவி உரை .


பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன்  அவர்களின்  நிலைத்த புகழுக்கு காரணம் திறமையா ? அதிர்ஷ்டமா ? 

பட்டிமன்றம் .

நடுவர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் .

 
பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன்  அவர்களின்  நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இரா .இரவி உரை .

இன்னிசை சக்கரவர்த்தி ,பாட்டுத் தலைவன் ,எழிலிசை வேந்தன் பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன்  அவர்கள் இன்று இருந்திருந்தால் எதிரணியினர் மூவரின் தலையில் கொட்டு வைத்து விட்டு .நடிகர் அஜித் சொல்லிய வசனமான " என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா ." என்று சொல்லி இருப்பார் .கி .பி ,கி .மு . மாதிரி . பா .மு . ,பா .பி . பாடுவதற்கு முன் ,பாடுவதற்கு பின் இரண்டு வாழ்க்கை உண்டு .டி .எம் .எஸ் . அவர்களுக்கு .பாடியதற்கு பின்  
உள்ள  வாழ்க்கையைப்  பார்த்து விட்டு அதிர்ஷ்டம் என்கின்றனர் எதிரணியினர்.

அதிர்ஷ்டம் என்பதே கற்பிக்கப்பட்ட கற்பனை .அப்படி ஒன்றே இல்லை. ஆபிரகாம் லிங்கன் போல வாழ்க்கையில் பல தோல்விகள் கண்டவர் .டி .எம் .எஸ் . தந்தை மீனாட்சி வரதராச பெருமாள் கோவில் அர்ச்சகர்.அவரது முதல் மனைவி இறந்து விடுகிறது  .பிரோகிதம் செய்திட மனைவியை இழந்தவரை அழைப்பதில்லை .அதற்காக இரண்டாவது திருமணம் செய்கிறார் .பிளேக் நோய் வந்து அவரும் இறக்கிறார் .மூன்றாவது திருமணம் அவரின் இரண்டாவது மகன்தான் டி .எம் .எஸ்.

மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் சிறிய வீடு. மின்சாராமும் தண்ணீரோ கிடையாது .தண்ணீர் வெளி  குழாயில்தான் பிடிக்க வேண்டும் . கிருஷ்ணன் கோவில் தெருவில் பிறந்து தென் ஆப்பிரிக்கா ,அமெரிக்கா ,சிங்கப்பூர் போன்ற பல வெளி நாடுகள் சென்று பாடி புகழ் பெறக் காரணம் திறமை"ஏழையாய் பிறப்பது உன் தவறு அல்ல ஏழையாகவே இறப்பது உன் தவறு " . என்று பொன்மொழி உண்டு.டி .எம் .எஸ். ஏழையாகப் பிறந்தார் பணக்காரராக இறந்தார். காரணம் திறமை .

கடின உழைப்பு .பயிற்சி + முயற்சி  + உழைப்பு = டி .எம் .எஸ்.
இவருக்கு படிக்க வசதி இல்லை ஆனால் இவர் பேரன் பேத்திகள் இன்று பொறியாளாராக இருக்கிறார்கள் .மதுரை புனித மரியன்னை பள்ளியில் 6,7, 8  வகுப்புகள் 3 ஆண்டுகள் படிக்கிறார் .உதவித் தொகை பெற்று படிக்கிறார் .பின் சௌராஷ்டிரா  நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று சொல்ல 9  வகுப்பு முதல் சௌராஷ்டிரா பள்ளியில் படிக்கிறார். S.S.L.C. நுழைவுத் தேர்வில் தோல்வி அடைகிறார். அதற்குப் பின் படிக்க வசதி இல்லை .

மாதம் 40 ரூபாய் சம்பளம் வேலைக்கு செல்கிறார் .அங்கு மேலாளர் பொய் கணக்கு எழுதி திருடுகிறார் .முதலாளிக்கு இந்தியில் கடிதம் எழுதுகிறார். முதலாளி மேலாளர் திருடன் என்பது தெரியும் என்கிறார் . பொய் கணக்கு எழுத  மனசாட்சி இடம் தராததால்  வேலையை விட்டு விலகுகிறார் .கோவில்களில் பஜனை பாடுகிறார் .பலரும் பாராட்டுகின்றனர். 

வாழ்க்கையில் அவர் சந்தித்த தோல்விகள் மிக அதிகம் .தோல்விக்கு துவளாமல் தொடர்ந்து முயன்று வாழ்க்கையில் வென்றவர்.
தனலட்சுமி என்ற பெண்ணை காதலிக்கிறார் .அக்கா மூலம் பெண் கேட்டு அனுப்புகிறார் . தனலட்சுமி வீட்டில் வைரத்தோடு , வைர   மூக்குத்தி 20 பவுன் நகை மாப்பிள்ளை போட்டால் பெண் தருகிறோம். என்கின்றனர்.ஏழையால் முடியவில்லை. காதல் தோல்வி .காதல் தோல்வி பாடல்கள் பாடும்போது மட்டும் காதலி தனலட்சுமி நினைவு வருவதுண்டு என்று நேர்முகத்தில் குறிப்பிட்டுள்ளார் .

இவர் பஜனை பாடுவது கேட்டு சுமித்ரா என்ற பெண் இவரை விரும்புகிறார். அவர் வீட்டில் சொல்கிறார் .அவர் அண்ணன் உடனடியாக  பணக்கார மாப்பிள்ளைக்கு இரண்டாம் தராமாக நிச்சியம் செய்கிறார். மாப்பிள்ளை நெஞ்சு வலியால் இறந்து விடுகிறார் .பின் போராடி சுமித்ரா  டி எம் .எஸ் .அவர்களை மணந்தார் .தான் விரும்பியவள் கிடைக்க விட்டாலும் தன்னை விரும்பியவளை ஏற்றுக் கொண்டவர். உண்மையாக வாழ்ந்தவர் . 

முறைப்படி காரைக்குடி குரு .இராஜாமணியிடம்  பாடல் பயற்சி பெறுகிறார்.பாடுவதற்கு வாய்ப்பு வேண்டி கோவை செல்கிறார் .அங்கு சின்னப்பாவை சந்திக்கிறார் .அவருடன் பழகுகிறார் .திரையரங்கம் செல்கின்றனர் .அவர் பீடி கட்டு வாங்கி வா என்கிறார். மனக்கஷ்டத்துடன் வாங்கித் தருகிறார் .

இயக்குனர் சுந்தரராவ் மனம் வைத்தால் பாடி விடலாம் என்கின்றனர். இயக்குனர் சுந்தரராவ்  மகன்  மோகனுக்கு கதைகள் சொல்கிறார் . சுந்தரராவ் மனைவிக்கு மாவாட்டிக் கொடுக்கிறார் .அவர் கூட சிரமம் வேண்டாம் என்கிறார் .நன் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன் .என் அம்மாவிற்கு நான் மாவாட்டி கொடுத்து இருக்கிறேன். என்று சொல்லி ஆட்டி கொடுத்து விட்டு கணவரிடம் பரிந்துரை செய்ய வேண்டுகிறார் .அவரும்  பரிந்துரை செய்கிறார் .அவர் மனம் வைத்து இசை அமைப்பாளர் சுப்பையாவை அழைத்து மதுரை தம்பி டி .எம் .எஸ் .க்கு பாட வாய்ப்பு வழங்குக என்கிறார் .போராடித்தான் வாய்ப்பு வந்தது. அதிர்ஷ்டத்தால் வர வில்லை .முதல் பாடல்" ராதே என்னை விட்டு போகாதடி" படத்தில் வந்தது. இசைதட்டில் இவர் பாடல் வரவில்லை
 .
மாத வாடகை 10 ரூபாய்க்கு அறை பிடித்து சென்னையில் படுவதற்கு முயற்சி செய்கிறார் .வாய்ப்பு கிட்டவில்லை .கையில் 15 ரூபாய் உள்ளது .நான் மதுரைக்கு செல்கிறேன் என்கிறார் மகாதேவனிடம். அவர் H.M.V.அழைத்து சென்று பாட வைக்கிறார் .மதுரையில் இருந்து வந்த மாதிரி பேருந்துக்கட்டணம் பயணப்படி என்று சொல்லி ரூபாய் 180 வாங்கித் தருகிறார் .6 மாதம் சென்னையில் இருக்க இது போதும் என்று சொல்லி சென்னையில் இருந்து முயற்சி செய்கிறார் .

கவியரசு கண்ணதாசன் அவர் எழுதிய பாடல்களான பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது , கோப்பையிலே என் குடியிருப்பு பாட்டரசன்  டி .எம் .சௌந்தரராஜன் தான் பாட வேண்டும்  என்று விரும்பினார்.மனக்கோட்டை கட்டதடா மனிதா என்ற கவியரசு கண்ணதாசன் பாடல் பதிவானது .படத்தில் இடம் பெறவில்லை .

கலைமாமணி டி .எம் .எஸ். பேசும் பொது முருகா ! முருகா  ! என்று சொல்வது வழக்கம் .அப்போது நாத்திகராக இருந்த கவியரசு கண்ணதாசன்' முருகனுக்கு எவ்வளவு வேலை இருக்கும் .அவரை ஏன் தொந்தரவு  செய்கிறீர்கள்' என்பார் .நான் எந்த வேலை செய்தாலும் முருகனிடம் சொல்லி விட்டுதான் செய்வேன் .என்றார் .

கவியரசு கண்ணதாசன் பாடலை இப்படி எழுதி இருந்தார் .

கடவுள் மனித்கனாகப் பிறக்க வேண்டும் .அவன் 
காதலித்து வேதனையில் சாக வேண்டும் !

இந்த வரிகளைப் படித்த கலைமாமணி டி .எம் .எஸ் . நான் ஆன்மிகவாதி கடவுளை சாக வேண்டும் என்று பாட முடியாது. மாற்றித் தாருங்கள் என்றார் .எழுதியதை  யாருக்காகவும் மாற்றாத கவியரசு கண்ணதாசன் கலைமாமணி டி .எம் .எஸ். அவர்களுக்காக இப்படி மாற்றி எழுதினார் .

கடவுள் மனித்கனாகப் பிறக்க வேண்டும் .அவன் 
காதலித்து வேதனையில்  வாட  வேண்டும் !

பாட்டுக்கோட்டையான  பட்டுக்கோட்டை  கல்யாண சுந்தரத்தின் பாடல்களை திறம்படப் பாடி  M.G.R க்கு புகழ் தேடித் தந்தவர்.

அந்த நாள் ஞாபகம்  நெஞ்கிலே வந்ததே பாடலை 4 முறை ஒடி விட்டு வந்து மூச்சு இரைக்க பாடினார்  .ஞானஒளி படத்தில் வரும் தேவனே என்னைப் பாருங்கள் பாட்டில் வரும் ஆங்கில வசனத்தை வேறு ஒருவர் சொல்வதாக இருந்தது .ஆனால் நடிகர் திலகம்சிவாஜி டி.எம் .எஸ். அவர்களே ஆங்கில வசனம் சொல்லட்டும் என்றார் .அந்த அளவிற்கு திறமை மிக்கவர்.

செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி " கண்ணா நீயும் நானுமா." பாடலை 15 முறை திரும்பத் திரும்ப கேட்டார் .ஏன் என்று கேட்டபோது. 
டி .எம் .எஸ் . உயிரைக் கொடுத்து பாடி உள்ளார் .பாட்டுக்க நான் சரியாக நடிக்க வில்லை என்றால் .மக்கள் சிவாஜிக்கு நடிக்க தெரியவில்லை என்று சொல்லி விடுவார்கள் .அதனால் பாடலை உள்வாங்குகிறேன் .என்றார் .அந்த அளவிற்கு திறமை  மிக்கவர் .

டி .எம் .எஸ் .அவர்கள் நாடோடிப்பாடல் ,கர்நாடக இசைப்பாடல், மேற்கித்திய இசைப்பாடல் என்று எதுவென்றாலும் திறம்பட பாடும் திறமை பெற்றவர் .பாடாத நடிகர் இல்லை என்று சொல்லும் அளவிற்கு 14 நடிகர்களுக்கு நன்கு தலைமுறைக்கு பாடிய பாட்டு இமயம். 

அவருடன் பல ஆண்டுகள் இருந்த பேராசிரியர் மகாதேவன் சொன்னார் 6 மணிக்கு விழா என்றால் 5 மணிக்கே முன்னதாகவே செல்லும் பழக்கம் உள்ளவர் . ஏன் இப்படி என்று கேட்டால் .முன்னதாக செல்வதால் நமக்கு என்ன நஷ்டமொன்றுமில்லை . என்பார் .நேரத்தை சரியாக கடைபிடித்த திறமையாளர் .மிக மோசமான ஒலிவாங்கி ( மைக் ) அமைவதுண்டு .அதற்காக விழா ஏற்பாட்டாளர்கள் மீது கோபம் கொள்ளாமல் மிகவும் சிரமப்பட்டு மிகச் சிறப்பாக பாடி விடுவார் .திறமை மிக்கவர் .  
.

எதிர்நீச்சல் படத்தின் பாட்டின் மெட்டை மாற்றினால் நன்றாக இருக்கும் என்கிறார் .படத்தின் இயக்குனர் பாலசந்தர் ஏதோ கோபத்தில் அதே மேட்டில் பாடச் சொல்லுங்கள் .இல்லாவிட்டால் வீட்டுக்குப் பக்கச் சொல்லுங்கள் என்கிறார் .போய் விடுகிறார்  .கொஞ்ச நாட்கள் களைத்து வேறு படத்திற்கு பாட வேண்டும் என்று இயக்குனர் பாலசந்தர் வேண்டுகோள் வைத்ததும் பழைய நிகழ்வை மறந்து பாடி விடுகிறார்
.
தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் தேசியகீதம் பாடினார் .கடைசியாக செம்மொழி மாநாட்டுப் பாடலும் பாடினார் .இன்று ஒவ்வொரு விழாவிலும் அவர் பாடும் பாடலுக்கு எல்லோரும் எழுந்து நிற்கிறோம். காரணம் அவர் திறமை .

மூன்று முதல்வர்களுடன்  பழகியபோதும் யாரிடமும் எதுவும் கேட்காத சுயமரியாதை மிக்க மாமனிதர் .அவருடைய இன்னிசை கச்சேரி கேட்பவர்களுக்கு அவர் பாடுகிறாரா ? இல்லை இசை தட்டு ஓடுகிறதா ? என்று வியக்கும் அளவிற்கு மிக நுட்பமாகப் பாடும் திறமை மிக்கவர் .

பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன்  அவர்களின்  நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! திறமையே ! திறமையே !

நடுவர்  தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன்அவர்கள் வழங்கிய தீர்ப்பு ;

பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன்  அவர்களின்  நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே !

நன்றி .திரு வாமணன் எழுதிய 
டி .எம் ,.எஸ் . ஒரு பண்- பாட்டுச் சரித்திரம்  நூல் .
மணிவாசகர் பதிப்பகம்.
 
பேராசிரியர் மகாதேவன் .
.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

சனி, 24 மே, 2014

பத்மஸ்ரீ டி .எம் . சௌந்தர ராஜன் முதலாம் ஆண்டு நினைவு நாள் 25.5.2014. என்றும் மறைவு உனக்கில்லை ! கவிஞர் இரா .இரவி !

பத்மஸ்ரீ டி .எம் . சௌந்தர ராஜன் முதலாம் ஆண்டு நினைவு நாள் 25.5.2014.

என்றும் மறைவு உனக்கில்லை ! கவிஞர் இரா .இரவி ! 


சௌந்தரராஜன் என்பது பெயர் மட்டுமல்ல ! 
சௌந்தரமான குரலின் ராஜன் நீ ! 

உனது தாய் மொழி தமிழ் இல்லை !
உச்சரிப்பில் உச்சமே உன் எல்லை !

உனது தாய் மொழி சௌராஷ்டிரம் மொழி !
உனது வாய் மொழி செம்மொழி தமிழ் மொழி !

கவியரசு கண்ணதாசனின் வைர வரிகளை !
காதுகளில் தேனாகப் பாய்ச்சியவன் நீ !

கவியரசு கண்ணதாசனின் கருத்துக் கல்லை !
கண் கவரும் சிலையாக வடித்த சிற்பி நீ !

மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களிடமும்
முத்திரைப் பதித்த சகலகலா வல்லவன் நீ !

எம் .ஜி .ஆர் . சிவாஜி இரு துருவத்திற்கும் !
இரண்டு குரலில் இனிமையாகப் பாடிய ஒருவன் நீ !

பாட்டுக் கோட்டையான பட்டுக்கோட்டை
பாடலுக்கு பட்டுக் கட்டியவன் நீ !

மக்கள் திலகம் எம் .ஜி .ஆருக்கு நூறு சதவிகிதம் !
முற்றிலும் என்றும் பொருந்தியது உந்தன் குரலே !

வேறு பலர் அவருக்குப் பாடி ப் பார்த்தார்கள் !
விரும்பவில்லை ரசிகர்கள் கூட்டம் !

செவாலியர் சிவாஜியின் சிறப்பான நடிப்பை !
சிம்மக்குரலில் கர்ஜித்துப் பாடியவன் நீ !

யாரை நம்பி நான் பிறந்தேன் பாடலின் மூலம் !
யாருக்கும் பிடித்தவன் ஆனாய் நீ !

மலர்ந்து மலராத பாடல் மூலம் !
மக்கள் மனதை கொள்ளை அடித்தவன் நீ !

பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி !
கோடிகளுக்கு மேல் ரசிகர்களை உனக்கு !

தானாகவே மரணம் வந்தது உன் உடலுக்கு !
தனி இடம் உண்டு என்றும் உன் குரலுக்கு !

மதுரையில் மாநாடுப் போல நடந்தது !
மண்ணின் மைந்தன் உந்தன் பாராட்டு விழா !

ஒலிநாடாவிற்கும் உனது இசை நிகழ்ச்சிக்கும் !
ஒரு வேறுபாடு கூட என்றும் இருந்ததில்லை !

படிக்காத பாமர்கள் பலருக்கும் தமிழ்
படிப்பித்த பாடல் ஆசான் நீ !

உழைப்பாளிகளின் உதட்டிலும் உன் பாட்டு !
படிப்பாளிகளின் உதட்டிலும் உன் பாட்டு !

ஒரு காலத்தில் நேயர்களின் சொர்க்கமாக இருந்த !
இலங்கை வானொலியில் எப்பவும் ஒலித்தது உன் பாடலே !

ஒப்பற்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடி !
உலகத் தமிழர்களை எழுந்து நிற்க வைப்பவன் நீ !

உயிர் உன் உடலை விட்டு பிரிந்திட்டப் போதும் !
உயிராய் வாழும் ரசிகர்கள் உள்ளத்தில் உன் பாடல் !

உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும் !
பாடலால் என்றும் வாழ்வாய் எங்களிடம் !
-- 

உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! aarison.2008@gmail.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

உழைப்பின் நிறம் கருப்பு !

( ஹைக்கூ கவிதைகள்  )


நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! aarison.2008@gmail.com


நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தளிர் பதிப்பகம் 2/2 தீபம் வளாகம் ,முதன்மைச் சாலை ,சாத்தூர் 626203.விலை ரூபாய் 100.

உழைப்பின் நிறம் கருப்பு ! நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது.நூலின் அட்டைப்படத்தில் கருப்பு நிற  உழைப்பாளியின் புகைப்படம் மிக நன்று .தமிழ்த் தேனீ முனைவர் இரா மோகன் அவர்களின் அணிந்துரை , வாழ்த்துரை நூலிற்கு அணிவித்த மகுடமாக உள்ளன. த .மு .எ .க .ச .திரு எஸ் .கருணா ,இயக்குநர் தமிழ் இயலன் ,முனைவர் பு .ரா. திலகவதி , ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் இனிய நண்பர் பொன்குமார் ஆகியோரின்  அணிந்துரை, வாழ்த்துரை மிக நன்று .இந்த ஹைக்கூ கவிதை நூலை ஹைக்கூ கவிஞர்களின் முன்னோடி கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது மிகச் சிறப்பு . 

நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் அவர்கள் சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் கலந்து கொண்டார் .சந்தித்து உரையாடினேன். பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து ஹைக்கூ படைத்து வரும் படைப்பாளி .ஹைக்கூ எழுதும் நுட்பம் உணர்ந்த காரணத்தால் தொடர்ந்து ஹைக்கூ நூல்கள் எழுதி வருகிறார். அலைபேசி வழி தினந்தோறும் ஹைக்கூ அனுப்பியவர் .

முயன்றால் வெற்றி பெறலாம் .வானம் வசப்படும் என்பதை உனர்த்தும் விதமான  நூலின் முதல் ஹைக்கூ இது . மிக நன்று .

இறக்கைகளை அசைக்க  அசைக்க  
அருகில் வருகிறது 
வானம் !

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் சிலைகளின் அழகில் உள்ளம் மயங்குவது உண்டு  .சிற்பியின் திறமை அறிந்து வியப்பது உண்டு .சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் ஹைக்கூ நன்று .

சிற்பியை 
வணங்கியது 
சிலை !

எந்த நோயும்  இல்லாவிட்டாலும் தனக்கு நோய் இருப்பதாக அஞ்சி வாழும் மனிதர்கள் உண்டு .அவர்களுக்கான ஹைக்கூ .

நோயில்லை 
மனதை உலுக்கியது 
பயம் !

நிலவு வந்ததும்  அல்லி மலரும் அறிந்து இருக்கிறோம் .பார்த்தும் இருக்கிறோம் .அதனை கவித்துவமாக உணர்த்தும் ஹைக்கூ

நிலவின் முத்தத்தில் 
ஓசையின்றி விழித்தது 
மலர் !

இந்த ஹைக்கூவில் மலர் என்பதற்குப் பதில் அல்லி என்றும் எழுதி இருக்கலாம் .

வாசிப்பது யாரென்றாலும் இசை தரும் புல்லாங்குழல் .நிறம் பார்ப்பதில்லை .குணம் பார்ப்பதில்லை. பாரபட்சம் பார்ப்பதில்லை. என்பதை விளக்கும் ஹைக்கூ .

நிறம் பற்றி கவலையின்றி 
இசையாக்கியது புல்லாங்குழல் 
காற்று !

ஜல்லிக்கட்டு நடக்கும் ஒவ்வொரு வருடமும் உயிர் பலியும், காயங்களும் நடந்து கொண்டுதான்  இருக்கின்றன .ஜல்லிக்கட்டின் காரணமாகவே   விதவையான  பெண்கள் கிராமங்களில் நிறைய உள்ளனர் மனிதாபிமான அடிப்படையில் வடித்த ஹைக்கூ .

உயிர்வதை செய்து 
உயிரிழக்கிறார்கள்
ஜல்லிக்கட்டு !

மனிதனில் எவனும் சாமி இல்லை என்பதை உணராமல் ஆசாமிகளை சாமி என்று சொல்லி ஏமாந்து பணம் கட்டி வருகின்றனர் .அவர்களோ சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் .கோடிகளை சேர்த்து விடுகின்றனர் . பெண்களிடம் தவறாக நடக்கின்றனர் . விழிப்புணர்வு விதைக்கும் ஹைக்கூ .

போதைமடம் 
காவிக்குள் வழிகிறது 
காமரசம் !

இயற்கையைக் காட்சிப் படுத்துதல் , முதல் இரண்டு வரிகளில் வியப்பு ஏற்படுத்தி மூன்றாம் வரியில் விடை சொல்லும் விதமாக எழுதுவது ஹைக்கூ வடிப்பதில்  உள்ள யுத்திகள் .அந்த வகை ஹைக்கூ .

இனிக்கிறது 
வேப்பங்காடு 
குயிலோசை !

கேள்விப்பட்ட பொன்மொழிகளை மாற்றி எழுதுவது ஹைக்கூ வடிப்பதில் உள்ள ஒரு கலை .நிறைகுடம் தளும்பாது என்ற பொன்மொழியை மாற்றி சிந்தித்து வித்தியாசமான ஹைக்கூ வடித்துள்ளார் .நன்று .

நிறைகுடம் 
பாறைக்குள் தளும்பியது 
ஊற்று !

தீப்பெட்டியை காட்சிபடுத்தி அதன் மூலமாக சோம்பேறியாக இருக்கும் மனிதனுக்கு சுறுசுறுப்பை போதிக்கும் விதமான ஹைக்கூ .

உறங்கும் தீ 
தீப்பெட்டிக்குள் 
தீக்குச்சிகள் !

தோற்றத்தை , நிறத்தை வைத்து யாரையும் குறைவாக எண்ணுதல் தவறு என்பதை உணர்த்தும் ஹைக்கூ 

அருவருப்பு அல்ல 
உழைப்பின் நிறம் 
கருப்பு !

நூலின் தலைப்பைத் தந்த ஹைக்கூ இதுதான் .மிக நன்று  நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் . .

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...