இடுகைகள்

April, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படித்ததில் பிடித்தது ! மாணவர்கள் எழுதிய ஹைக்கூ

படம்
படித்ததில் பிடித்தது ! மாணவர்கள் எழுதிய ஹைக்கூ

ஹைக்கூ         
பி.இராஜேஷ் குமார்

வெளியே காவி!
உள்ளே பாவி!
போலிச்சாமியார்!

எமனைச் சந்திக்க
ஒருவருக்கொருவர் போட்டி!
சாலை விபத்து!
ஊதியமின்றி வேலைக்காரி!
ஒவ்வொரு வீட்டிலும்
பெண்ணடிமை!
பெற்று வளர்த்தவர்க்கு
மகனின் அன்புப்பரிசு
முதியோர் இல்லம்!
இவனுக்கு வருமானம்!
நாட்டிற்கு அவமானம்!
பிச்சைக்காரன்!
-----------        ----------------------------------------------------
ஹைக்கூ    மு.அருண்கிருஷ்ணா

மாளிகையில் அமர்ந்து வாங்கும்
மாறுபட்ட பிச்சை!
இலஞ்சம்!
புத்தகம் ஏந்தவேண்டிய கை
பட்டாசு சுற்றியது!
குழந்தைத் தொழிலாளி!
பலகோடி மரங்களின்
கல்லறைப்பூக்கள்
காகிதம்!
வார்த்தை மறைந்தது!
வாங்குவது மறையவில்லை!
வரதட்சணை!       

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ                 கவிஞர் இரா .இரவி
வைத்துக் கொண்டப்  பந்தை மிதித்தனர்
தந்துவிட்ட புல்லாங்குழல் முத்தமிட்டனர்
காற்று !


முற்றும் துறந்த முனிவர்கள்
முடி சூடிக் கொண்டார்கள்
தங்கக் கீரிடம் !

ஒரு லட்சம் வாங்கியவர் உள்ளே
பல கோடி வாங்கியவர் வெளியே
இன்றைய  அரசியல் !

ஆலையில் இட்டக் கரும்பாக
விவசாயி
கரும்பு நட்டத்தில் நட்டம்  !

தீக்குளிக்கச் சொன்ன இராமனிடம் 
சீதை சொன்னாள்
முதலில் நீ குதி !  

தலைவர்கள் சண்டை
மக்கள் வேண்டினர்
வேண்டாம் புத்தாண்டு !

மாத
தியம் லட்சத்தில்
மன நிம்மதி   பூஜ்ஜியம் 
கணினிப்  பொறியாளர் !


இருந்தால் நன்றுதான்
ஆனால் இல்லை
கடவுள் !

இல்லம் வந்தது
பால்
கடைக்குச் சென்றால் மது
மதிப்பதில்லை நல்லதை !     
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!

தி இந்து நாளிதழில்

தி இந்து நாளிதழில்
http://www.hindu.com/lf/2004/01/28/stories/2004012801760200.htm
http://www.hindu.com/mp/2009/03/17/stories/2009031750290600.htm
http://www.hindu.com/2006/01/16/stories/2006011616200300.htm
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

மதுரை உயர் நீதி மன்றத்தில் உள்ள பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கவிஞர் சி . அன்னக்கொடியின் நூல்கள் அறிமுக விழா நடைப்பெற்றது .

படம்
மதுரை  உயர்   நீதி மன்றத்தில் உள்ள பெண் வழக்கறிஞர்கள்  சங்கத்தில் கவிஞர் சி . அன்னக்கொடியின் நூல்கள் அறிமுக விழா நடைப்பெற்றது .

வழக்கறிஞர் சி .அன்னக்கொடி அவர்களின் நூல்கள் அறிமுக விழா மதுரை உயர் நீதி மன்றத்தின் பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தின் அன்னா சாண்டி அரங்கத்தில் நடைப்பெற்றது . பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் திருமதி .ஜெ.நிஷாபானு தலைமை வகித்தார் .செயலர் செல்வி னந்தவள்ளி  வரவேற்றார் . மதுரை உயர் நீதி மன்றத்தின்  வழக்கறிஞர் சங்கத்தின் செயலர் கு .சாமிதுரை அவர்களும் ,வழக்கறிஞர் திருமதி மீரா கற்பகம் அவர்களும் நூல்கள்  பற்றிய ஆய்வுரையை வழங்கினார்கள் .மதுரை  உயர் நீதி மன்றத்தின் நீதிபதி G.M அக்பர்அலி நூல்களை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார் .நூல்களின் ஆசிரியர் வழக்கறிஞர் சி அன்னக்கொடி அவர்களுக்கு  சமுதாயக் கவிஞர் என்று பட்டம் வழங்கலாம் .என்று குறிப்பிட்டார்கள் .சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட கவிஞர் இரா இரவிக்கு, நீதிபதி G.M. அக்பர் அலி  அவர்கள் பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்கள் . நூல்களின் ஆசிரியர் வழக்கறிஞர் சி அன்னக்கொடி ஏற்புரைக்குப் பின் வழக்கறிஞர் திரும…

UK Tamil News (தமிழ்): கவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்க...

UK Tamil News (தமிழ்): கவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்க...: www.tamila uthors.com இணையத்தில் கவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள் http://www.tamilauthors.com/ 03/Eraravi18.html http:...

அடுக்கக வீடும் உரிமை இல்லாச் சிறைதான் ! கவிஞர் இரா .இரவி

படம்
அடுக்கக வீடும்  உரிமை இல்லாச் சிறைதான் !   கவிஞர் இரா .இரவி

அன்பளிப்பாக மரக்கன்று ஒன்று தந்தார்கள்
அன்போடு வாங்கி வீடு சென்றேன்

அழகான மரம் வளர்க்க ஆசை
எங்கு நடலாம் என்று யோசித்தேன்

வீட்டின் இடது வலது இருபுறமும் வீடு
வீட்டின் முன் பின் இருபுறமும் வீடு

வீட்டின் மேல் கீழ்இருபுறமும் வீடு
பல லட்சம் தந்து வாங்கிய வீடு

ஒரு மரக்கன்று நட உரிமை இல்லை
அடுக்கக வீடும்  உரிமை இல்லாச் சிறைதான்

இயற்கை  நேசத்திற்கு வழியில்லா அறைதான்
வரும் வழியில் குடிசையைக் கண்டேன்

வாங்கிய மரக்கன்றைத் தந்தேன்
ஏழையிடம்
வாங்கிய அவரோ உடன் வீட்டின் அருகே நட்டார்--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி

படம்
ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி

ஆட்சியர் அலக்சு இணையத்தில் எழுதுபவர் ,ஹைக்கூ கவிஞர் ,சுதந்திரமாக மனதில் பட்ட கருத்தை என்னைப் போல எழுதுபவர் .அவர் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் உலக அளவில் இந்தியாவிற்கு மிகப் பெரிய அவமானமாகும் .ஏற்கெனவே ராணுவ ஊழல் காரணமாக இந்தியாவின் மானம் காற்றில் பறக்கின்றது. ஆட்சியர் அலக்சை உயிரோடு    உடனடியாக மீட்டு இந்தியாவின் மானத்தைக் காக்க வேண்டும் .

ஏவுகணை அனுப்புவதில் ,செயற்கைக்  கொள் அனுப்புவதில் இந்தியா மார் தட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை .மாவோஷ்டுகள் ஏன்? உருவாகுகின்றனர்  .நக்சல் ஏன் ?உருவாகுகின்றனர் என்பதை ஆராய்ந்து ,உருவாகாமல் இருக்க வழி வகை செய்ய வேண்டும் .எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் .ஏற்றத் தாழ்வு இருக்கவே கூடாது .அரசியல்வாதிகளின் ழல் ஒழிய வேண்டும் .

உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு என்று மார் தட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை.இத்தாலிக் கார்களை உடனடியாக துடிப்போடு மீட்க முடிந்தது .தமிழனை மீட்க மட்டும் தாமதம் ஏன் ?

இத்தாலிக்காரர்களை மீட்டதுப்  போல ,தமிழரையும் மீட்க வேண்டும் .  உயிர் என்றால் எல்ல…

அட்சய திரிதி கவிஞர் இரா .இரவி

படம்
அட்சய திரிதி                   கவிஞர் இரா .இரவி

பகல் கொள்ளை
ஆரம்பம் 
அட்சய திரிதி  !

உழைக்காமல் உண்ணும்
சோம்பேறி
சோதிடன் உளறல்
அட்சய திரிதி !

பெருகிட உயிரினமா  ?
தங்கம்
அட்சய திரிதி !

அடகில் மூழ்கியது
வாங்கிய தங்கம்
அட்சய திரிதி !

மூடநம்பிக்கையின் உச்சம்
ஏமாருவதே மிச்சம்
அட்சய திரிதி !

சோதிடன் 
நகைவணிகன்
கூட்டுக் கொள்ளை
அட்சய திரிதி !

உலோகம் பெருகுமா ?
யோசிக்க வேண்டாமா ?
அட்சய திரிதி !

தங்கத்தின் ஆசை
தகர்த்திடுப் பெண்ணே
அட்சய திரிதி !

கொலை கொள்ளைப் 
பெருகிடக்
காரணம் தங்கம்
அட்சய திரிதி !

குடும்பத்தின் நிம்மதி
கெடுப்பது
அட்சய திரிதி !

தங்கத்தின் விலை ஏற்றதிற்குக்
காரணம்
அட்சய திரிதி !

தரமற்றத்    தங்கம்
தரமென்று விற்கும்
அட்சய திரிதி !

விருதுகள் வழங்கிய விழா

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் ,தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கிய விழா

விருதுகள் வழங்கிய விழாப் புகைப்படங்கள்

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் ,தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கிய விழாப் புகைப்படங்கள்

விருதுகள் வழங்கிய விழாப் புகைப்படங்கள்

படம்

சீனாவில் தமிழ்

படம்
சீனாவில் தமிழ்
   சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில்
குடிநீர் குறித்து
   தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இன்று உலக புத்தக தினம் ! புத்தகம் ! கவிஞர் இரா .இரவி

படம்
இன்று உலக புத்தக தினம் !
புத்தகம்   !  கவிஞர் இரா .இரவி


மனிதனை மனிதனாக
வாழ வைப்பது 
புத்தகம் !

மனிதனின் வளர்ச்சிக்கு
வித்திட்டது
புத்தகம்
!

பண்பாடு வளர்த்து
பண்பைப் போதிப்பது

புத்தகம்  !

அறிவியல்  அறிவை  
அகிலம் பரப்பியது
புத்தகம்  !

பயனுள்ள கண்டுபிடிப்பு
வாழ்வின் பிடிப்பு
புத்தகம்
!

புரட்சியாளனை
உருவாக்கியது
புத்தகம் 
!

அகிம்சைவாதியை
வளர்த்தது
புத்தகம்
!

பகுத்தறிவுப் பகலவன்
ஒளிவீசக் காரணம்
புத்தகம் 
!

பேரறிஞர்
புகழ்ப்  பெறக் காரணம்
புத்தகம் 
!

அகமும் புறமும்
சுத்தம் செய்வது
புத்தகம்  !

அகம்பாவம் ஆணவம்
அகற்றுவது
புத்தகம்  !

பணிவு கனிவு தெளிவு
வழங்குவது
புத்தகம்  !

அறிவை விரிவு செய்து
அறியாமையை  அகற்றுவது
புத்தகம்  !

கவிஞர் மு.ஆ. பீரொலி அவர்களின் 'நித்திரைப் பயணங்கள்' கவிதைநூல் வெளியீட்டு விழா !

படம்
கவிஞர் மு.ஆ. பீரொலி அவர்களின் 'நித்திரைப் பயணங்கள்' கவிதைநூல் வெளியீட்டு விழா !

UK Tamil News (தமிழ்): மாணவன் ! கவிஞர் இரா .இரவி

UK Tamil News (தமிழ்): மாணவன் ! கவிஞர் இரா .இரவி: மாணவன் !              கவிஞர் இரா .இரவி ஆசிரியருக்கு அஞ்சிய காலம் அன்று ஆசரியர் கள்  அஞ்சும் காலம் இன்று ஆசிரியரை வணங்கிய காலம் அன்று ஆசி...

கவிஞர் மு.ஆ. பீரொலி அவர்களின் 'நித்திரைப் பயணங்கள்' கவிதைநூல் வெளியீட்டு விழா !

படம்
கவிஞர் மு.ஆ. பீரொலி அவர்களின் 'நித்திரைப் பயணங்கள்' கவிதைநூல் வெளியீட்டு விழா !


மதுரை ரயில்வே முதன்மை வர்த்தக ஆய்வாளர் கவிஞர் மு.ஆ. பீரொலி அவர்களின் 'நித்திரைப் பயணங்கள்' கவிதைநூல் வெளியீட்டு விழா ஏப்ரல் 18 புதன் கிழமை அன்று மதுரையில் நடைபெற்றது.

கோவை தகிதா பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் பேராசிரியர் மணிவண்ணன்  இந்த நூலை   வெளியிட திருமதி அமுதா ஞானசம்பந்தன் பெற்றுக்கொண்டார்.நூல் குறித்த திறனாய்வு உரையை கவிஞர் திரு இரா.இரவி அவர்களும் ,திருமதி குமுதா ஆறுமுகம் அவர்களும் ஆற்றினர்.

பேராசிரியர் மணிவண்ணன்   தலைமை உரையில்: தகிதாவின் நூல் வரிசையில் இது குறிப்பிடத்தக்க நூல். காரணம் கவிஞர் பீரொலி அவர்கள் இந்நூலைப் படைக்க, திரு சாலமன் பாப்பையா அவர்கள் வாழ்த்துரை வழங்க,பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் அவர்கள் அணிந்துரை வழங்கி இருக்கிறார்கள். இந்த அடையாளம் இந்நூலை சமயம் கலந்த நூலாகவும் ,சமயம் கடந்த நூலாகவும் அடையாள படுத்தி இருக்கிறது. மொழியையும் மானுடத்தையும் பாடாத எந்த படைப்பாளியையும் காலம் நினைவில் வைப்பதில்லை. காலத்தை உச்சரித்திருக்கும் இந்நூல காலம் கடந்து உச்சரிக்க…

விழியீர்ப்பு விசை ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
விழியீர்ப்பு விசை

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் 

விமர்சனம்
கவிஞர் இரா .இரவி

விஜயா பதிப்பகம் கோவை விலை ரூபாய் 35


கவிஞர் தபூ சங்கர் தனது கவிதை நூல்கள் மூலம் காதலர்களையும் ,காதலையும் வளர்த்து வருபவர் .விழியீர்ப்பு விசை காதல் கவிதை நூல் இது . கவிஞர் தபூ சங்கர்  காதல் கவிதைகள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்தவர் .காதலர்களுக்குப்  பிடித்த கவிஞர் தபூ சங்கர்.  இவரது நூலைத்தான்  காதலர்கள் பலர் பரிசு நூலாகப் பரிமாறிக் கொள்கிறார்கள் . காதலர்கள் காதலைப் போலவே காதல் கவிதைகளையும் நேசிக்கின்றனர் .அதனால்தான் பல பதிப்புகளில் நூல் வந்துக் கொண்டே இருக்கின்றது.  கவிஞர்கள் அறிவுமதி ,பழனி பாரதி இருவரின் அணிந்துரையும் நூலிற்கு உரம் சேர்க்கும் விதமாக உள்ளது .

புவி யீர்ப்பு விசை கண்டுபிடிக்கும் காலத்திற்கு முன்பே ,ஆதாம் ஏவாள் காலத்திலேயே உருவானது   விழியீர்ப்பு விசை.கவிதைக்குப் பொய் அழகு என்பதை மெய்பிக்கும் கவிதை இந்நூலின் பின் அட்டையில்  உள்ளது .

உனது ஆடையையும் எனது
ஆடையையும்
அருகருகே காய வைத்திருக்கிறாயே !
இரண்டும் காய்வதை விட்டு விட்டு
விளையாடிக் கொண்டிருப்பதை
ப்  பார் !

காற்றில் ஆடைகள் ஆடுவதை கவிஞ…

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ                   கவிஞர் இரா .இரவி

உயிரை
அடிப்பான் கொள்ளை
உடையின் நிறம் வெள்ளை
வெண்சுருட்டு ( சிகரெட் )

தேள் படம் போட்டும்
கவலையின்றி சுவைக்கின்றான்
வருங்கால் மன நோயாளி !  (
பான்பராக் )

குடி குடி கெடுக்கும்
படித்து விட்டு குடிக்கின்றான்
படித்தவன் ?

தெரிந்தே குடித்தனர்
புற்று நோய் வரும்
குளிர்பானம்   !
அழுதாலும்
ஒளி தந்தது
மெழுகு !

வானிலிருந்து குதித்தும்
காயம் இல்லை
மழைத் துளி !

சுமை அல்ல பாதுகாப்பு
கூடு 
நத்தை !

அவள் வரும் முன்னே
வந்தது இசை ஓசை
கொலுசு !


சிதைத்தப்  போதும்
தந்தது வாசம்
சந்தனம் !

அன்று நல்லவர்களுக்கு  மட்டும்
இன்று
கெட்டவர்களுக்கு மட்டும்
அரசியல் !

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இலக்கிய நிகழ்வு

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இலக்கிய நிகழ்வு

தமிழ் இசைச் சங்கம் மதுரை 37 ஆம் ஆண்டு தமிழ் இசை விழா புகைப்படங்கள் .

படம்
தமிழ் இசைச் சங்கம் மதுரை 37 ஆம் ஆண்டு தமிழ் இசை விழா புகைப்படங்கள் .

வாழ்த்துரை திரு .சேக்கப்ப செட்டியார் ,   திரு மோகன் காந்தி .

பட்டிமன்ற நடுவர் முத்தமிழ்க் காவலர் விசுவநாதன்  விருதாளர் , தமிழ்த் தேனீ ,முனைவர் .இரா .மோகன் .
உடன் பங்கேற்றவர்கள் தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ,கவிஞர் இரா .இரவி ,நகைச்சுவைத் தென்றல்
முத்து இளங்கோவன்,சொல்லின் செல்வி  சங்கீத் ராதா  .

ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இயக்கம் . ராஜேஷ் .M

நடிப்பு ,தயாரிப்பு உதயநிதி  ஸ்டாலின் 


தயாரிப்பாளராக இருந்த உதயநிதி  ஸ்டாலின்  நடிகர்கள் படுத்தியப்   பாடு தாங்க முடியாமல், நாமே நடித்தால் என்ன ? என்று முடிவு எடுத்து நடிக்க ஆரம்பித்து விட்டார் .நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும் .நகைச்சுவை கதை என்பதால் தப்பித்து விட்டார் .படம் தொடங்கியது முதல் முடியும் வரை குறுந்தாடியுடனே வருகிறார் ,காதலிக்கும் பெண் , தினம் முகச் சவரம் செய்பவர்தான் எனக்குப் பிடிக்கும் என்று நிபந்தனை போட்டும்  தாடியுடனே வருகிறார்.தொடந்து நடிப்பதாக முடிவு எடுத்தால் ,நடிப்பில் பயிற்சி பெறுவது நல்லது .

நகைச்சுவை கலந்த காதல் கதை .நடிகர்  சந்தானம் படத்திற்கு பக்க பலமாக உள்ளார் .சந்தானம் இல்லை என்றால் படம் இல்லை. தயாரிப்பாளர் உதயநிதி    ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து உள்ளார் .முகத்தை எப்பொதும் ஒரே மாதிரியாகவே வைத்துள்ளார் .  நடிகை ஹன்சிகா மோட்வாணி  அழகுப் பதுமையாக வந்து போகிறார் .படத்தின்  திரைக்கதை, வசனத்தில்  நல்ல நகைச்சுவை இருப்பதால் .படம் போரடிக்காமல்  செல்கின்றது .இசை ஹாரி…

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

படம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

படம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி பயிற்சிக் கல்லூரியில் நடைப்பெற்றது .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .திரு .ஜோதி மகாலிங்கம் , 
திருஆ .முத்துக்கிருஷ்ணன்,   திரு.G.ராமமூர்த்தி ,திரு.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,
K.விஸ்வநாதன்ஜனசிந்தன் ,இரா .கணேசன் ,பொன் .சிவ முருகன் ,கலை இனியன், தமிழ் இனியன் ஆகியோர் தன்னம்பிக்கை தொடர்பான கவிதைகள் வாசித்தனர் .தன்னம்பிக்கை பயிற்சியாளர் ,அடுத்த ஆயிரம் நாட்கள் நூல் ஆசிரியர் .வைகை திரு. ஆ. விஸ்வநாதன்  மற்றவர் நிலையில் தான் என்ற உணர்வு என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .சூழ்நிலையை புரிந்துக் கொள்ளுதல் ,யார் வெல்வது என்பதை விட யார் தோற்கக் கூடாது  என்பது முக்கியம் .தோல்வியைத் தாங்கும் மன நிலை இல்லாதவர்களுக்கு சிறிது விட்டுக் கொடுத்து உதவுதல் .ம.நி.த வேண்டும் .அதாவது, மனிதாபிமானம் ,நிறைவு ,தன்மை .அடுத்தவர் பலகீனமாக இருக்கும்போது அவர் நிலையில் இருந்து யோசித்து உதவு…

இந்தியன் எக்ஸ்பிரஸ் 3.8..2009

படம்
இந்தியன் எக்ஸ்பிரஸ் 3.8.2009

மு.ஆ.பீர்ஒலி அவர்களின் "நித்திரைப் பயணங்கள்' நூல்வெளியீட்டு விழாவிற்கு தகிதா அழைக்கிறது.

படம்
மு.ஆ.பீர்ஒலி   அவர்களின் "நித்திரைப் பயணங்கள்' நூல்வெளியீட்டு விழாவிற்கு தகிதா அழைக்கிறது.

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி

தமிழர்களை விட
சிங்களர் மீதே பாசம்
இந்தியா !

காற்றில் பறந்தது
இந்தியாவின் மானம்
ராணுவத்தில்  ழல் !

ஓழிக்க  முடியவில்லை
ழல்
ஒழிக்கலாமா ?
ழல்வாதிகளை !

காமராஜ் கக்கன்
காலத்தோடு முடிந்தது
அரசியலில் தூய்மை !

வாரிசு அரசியல்
ஓழிக்க வழி
வாரிசில்லாத் தலைவர் !

தோழி ஆதிக்கம் 
ஓழிக்க வழி
தோழி இல்லாத் தலைவி !
மாற்றினர்
தலைநகரை துக்ளக்
புத்தாண்டை அரசியல்வாதிகள் !


போதித்து
அமைதி
புத்தரின் சிலை !

புத்தரை வணங்கியும்
புத்திக் கெட்ட
இலங்கை !

இலைகள் உதிர்ந்தும்
நம்பிக்கையோடு மரம்
மழை வரும்  !

நீர் உயர
தானும் உயந்தது
தாமரை !


வழக்கொழிந்தது
கிராமங்களில்
குலவைச் சத்தம் !


நிலத்தையும்
மலடாக்கியது
மலட்டு விதை !

தனியாக செல்கையில்
துணைக்கு வந்தது
நிலா !
மரத்தை வாங்கியவன்
பிய்த்து எறிந்தான்
பார்வையின்
கூட்டை !

பதட்டம் இல்லை
பற்றி எரிந்தும்
உள்ளது காப்பீடு  !

மாதவம் செய்து
மங்கையாகப் பிறந்து
குப்பைத் தொட்டியில் !

பணக்காரகளுக்கு அருகில்
ஏழைகளுக்கு தூரத்தில்
கடவுள் தரிசனம் !

இன்றும் வாழும்
கொடிய அரக்கன்
தீண்டாமை !

அத்திப்
பூத்தாற்ப் போல  
நல்லவர்கள்
காவல் து…

கோலம் ! கவிஞர் இரா .இரவி

படம்
கோலம்  !  கவிஞர் இரா .இரவி

கோலம் போடும் உந்தன்
கோலம் காண !
அதிக நேரம் தூங்கும் நான் 
அதிகாலை எழுந்தேன் !
உதய சூரியனை
உன்னால் பார்த்தேன் !
பனி மலரையும்
பார்த்து ரசித்தேன் !
நீயும் வந்தாய் !
கதவு திறந்தாய் !
கூட்டித் தள்ளினாய் !
வாசல் தெளித்தாய் !
புள்ளி வைத்தாய் !
கோலம் போட்டாய் !
கோலம் பார்த்தேன் !
கல்வெட்டாய்ப் பதிந்தது !
கன்னி உன் நினைவு !

காதல் கவிஞர் இரா .இரவி

படம்
காதல்    கவிஞர் இரா .இரவி

காதல் வயப்பட்டால்
எப்படி ? இருக்கும்

காதல் வயப்பட்டுப்
பாருங்கள் !

வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாத
விந்தை உணர்வு !

அனுபவித்தவர்கள் மட்டும்
அறிந்த அற்புத உணர்வு !

அடுத்தவர்கள் காதல்
கேலியாகத் தெரியும் !

உங்கள் காதல்
உயர்வாக
த் தெரியும் !

இனிய உணர்வு
இளமை நினைவு !

தொடர்கதையானது ! கவிஞர் இரா .இரவி

படம்
தொடர்கதையானது  !   கவிஞர் இரா .இரவி

அவளைப் பார்த்தால்
போதும் என்று நினைத்தேன்
பார்த்தேன் !
அவளிடம் பேசினால்
போதும் என்று நினைத்தேன்
பேசினேன் !
அவளைத் தீண்டினால்
போதும் என்று நினைத்தேன்
தீண்டினேன் !
பார்த்தல் பேசல்
தீண்டல்
தொடர்கதையானது  !


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

நினைவுச் சிலுவை கவிஞர் இரா .இரவி

படம்
நினைவுச்  சிலுவை    கவிஞர் இரா .இரவி

பசுமரத்து ஆணியாக
பாவையின் நினைவுகள்

கிறித்தவர்கள் வணங்கும்
ஏசுவிற்கு ஒரே ஒரு முறைதான் சிலுவை

எனக்கு உன்னை நினைக்கும்
ஒவ்வொரு
முறையும் நினைவுச்  சிலுவை

ஏசு உயிர்த்து எழுந்ததாகச் சொல்
வார்கள்
எனக்கு உயிர்த்து எழ வாய்ப்பே இல்லை 


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

காதலர்கள் கவிஞர் இரா .இரவி

படம்
காதலர்கள்  கவிஞர் இரா .இரவி

ஊடல் காரணமாக
இருவரும் இனி
சந்திக்க மாட்டோம்
என முடிவு எடுத்து விட்டு
இனி எப்போது சந்திப்போம்
என்று சந்திப்பைப் பற்றியே
சிந்தித்து ஏங்குபவர்கள் !

அவள் ! கவிஞர் இரா .இரவி

படம்
அவள் !  கவிஞர் இரா .இரவி

வெள்ளையும் இல்லை
கருப்பும் இல்லை

உயரமும் இல்லை
குள்ளமும் இல்லை

பேரழகியும் இல்லை
அசிங்கமும் இல்லை

அறிவாளியும் இல்லை
முட்டாளும் இல்லை

ஆர்ப்பட்டமும் இல்லை
அமைதியும் இல்லை

அவளுக்கு உவமை
அவனியில் இல்லை

புன்னகை செய்தால்
பூரிக்கும் உள்ளம்

மூளையில் நுழைந்து
மூலையில் அமர்ந்தாள் ! 

நித்திரைப் பயணங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி. விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
நித்திரைப் பயணங்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.
தகிதா பதிப்பகம் கோவை விலை ரூபாய் 50.
 விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நூல் கிடைக்குமிடங்கள்  

சர்வோதய இலக்கியப் பண்ணை ,மேல வெளி வீதி ,மதுரை .1

மல்லிகை புத்தக நிலையம் , மேல வெளி வீதி ,மதுரை.1

நூலின் தலைப்பே நமை சிந்திக்க வைக்கின்றது .கனவு என்பதை நித்திரைப் பயணங்கள் இப்படி கவித்துவமாகவும்  சொல்ல லாம் என்பதை உணர்த்தி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.அட்டைப் பட வடிவமைப்பு அருமை. ஆங்கில இலக்கியம் ,சட்டம் படித்துவிட்டு கவிதை எழுதுவதற்கு முதலில் பாராட்டுக்கள் .கலை மாமணி,பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் கை எழுத்திலேயே வந்து இருக்கும் இரண்டாவது அணிந்துரை இது .மிக நன்று .
பேராசிரியர்  ,கலைமாமணி  கு.ஞானசம்பந்தன் அவர்களின்அணிந்துரை .இரண்டு இலக்கிய இமயங்களின் அணிந்துரை கவிதை நூல் என்ற மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக மிளிர்கின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி வித்தியாசமாகச் சிந்திக்கிறார் .நிலவு அழகு என்றுதான் பலரும் பாடி உள்ளனர் .நிலவு பற்றி அவரது வரிகள் .
உண்மையைத் தேடி ! வெப்பத்தைக் கக்கிய நிலவு  மனது கனத்தது  மீண்டும் அந்த பயணம்…

உலகப் படைப்பாளிகள் பட்டியல் பார்வையிட்டோர் எண்ணிக்கையில் கவிஞர் இரா .இரவிக்கு முதல் இடம்

உலகப்  படைப்பாளிகள் பட்டியல் பார்வையிட்டோர் எண்ணிக்கையில்  கவிஞர் இரா .இரவிக்கு முதல் இடம்

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2984:2011-10-28-07-50-50&catid=305:2011-03-02-06-06-18&Itemid=542

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=category&id=305&Itemid=542
--
உலகப் புகழ் அலேச்க இணைய  புள்ளி விபரத்தில் கவிஞர் இரா .இரவி  இணையங்கள் புள்ளி விபரம்

http://www.alexa.com/siteinfo/eraeravi.com#


http://www.alexa.com/siteinfo/kavimalar.com#

http://www.alexa.com/siteinfo/eraeravi.blogspot.com#

http://www.alexa.com/siteinfo/eraeravi.wordpress.com#

கவிஞர் இரா .இரவி

http://www.lankasripoems.com/?conp=list&poetId=194606

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


பல்வேறு இணையங்களில் கவிஞர் இரா .இரவி படைப்புகள்

படம்

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ஒத்துழைப்பு !கவிஞர் இரா .இரவி

படம்
பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ஒத்துழைப்பு !

ஒத்துழைப்பு !  கவிஞர் இரா .இரவி
தொழிலாளிகள் ஒத்துழைப்பு
இல்லை என்றால்
முதலாளிகள் இல்லை !
----------------------------------
சக பணியாளர்களின்
சக பங்களிப்பு
ஒத்துழைப்பு
---------------------------------
வெற்றிக்கான வித்து
சாதனைக்கான உரம்
எல்லோருக்குமான வரம்
ஒத்துழைப்பு !
--------------------------------------
போட்டி குணம்  விடுத்து
இசைந்து இசைக்கும் இனிய இன்னிசை
ஒத்துழைப்பு !
------------------------------------------
இரு கைகள் இணைந்தாலே
ஓசை வரும்
கூ ட்டாக  உழைத்தாலே
வெற்றி வரும்
ஒத்துழைப்பு !


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


யாரும் யாராகவும் ! நூல் ஆசிரியர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
யாரும் யாராகவும் ...

நூல் ஆசிரியர் புரட்சிக் கவிஞர் விருதாளர் ஏர்வாடி
எஸ் . ராதாகிருஷ்ணன் ervadiar@yahoo.co.in

விலை ரூபாய் 70   கவிதை உறவு 420E .மலர்க் காலனி ,அண்ணா நகர் மேற்கு ,சென்னை
.40
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி 


நூல் ஆசிரியர்  ஏர்வாடி ராதாகிருஷ்ணன் கலைமாமணி விருது பெற்றவர் .அவர்கள் கவிதை உறவு என்ற மாத இதழை 25 வருடங்களுக்கு மேலாக தொய்வின்றி நடத்தி வருபவர் . கணினி உலகில் இன்று மாத இதழை நடத்தி வருவதே பெரிய சாதனை தான் .கவிதை உறவு இதழின் 7ஆம் பக்கத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .பல்வேறு இதழ்களிலும் பிரசுரமாகி உள்ளது .கவிஞர் கல்யாண்ஜி அவர்களின்அணிந்துரை
நூலிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக  உள்ளது .நூல் ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் வழங்கப் பட்ட புரட்சிக் கவிஞர் விருதைப் பெற்றவர் .பாரத மாநில வங்கியில் அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர் .இலக்கியத்தை, கவிதையை மூச்சாகக் கொண்டு வாழ்பவர் .கவிஞர் என்பதைத் தாண்டி சிறந்த மனிதர் .பழகுவதற்கு இனிமையானவர் .மென்மையானவர் ,இவர் சினம் கொண்டு நான் பார்த்ததே இல்லை .கவிதை மட்டுமல்ல கட்டுரை…