சனி, 31 மார்ச், 2012

கழுகு .திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா. இரவி

கழுகு                  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா. இரவி 

இயக்கம் ! சத்திய சிவா

நடிப்பு ! கிருஷ்ணா

இசை யுவன் ! சங்கர் ராஜா

மலை மேல் இருந்து குதித்து
த் தற்கொலை செய்துக் கொள்ளும் பிணங்களை பள்ளத்திற்கு சென்று எடுத்து வந்து ஒப்படைக்கும் கூலித்  தொழிலாளிகள் பற்றிய  கதை.நடிகர்கள் கிருஷ்ணா   ,தேசிய விருதுப் பெற்ற
தம்பி இராமையா,கருணாஸ் ,பேச முடியாத மாற்றுத் திறனாளி பத்திரம்  நான்கு பெரும் அந்தப் பத்திரமாகவே மாறி ,மிக நன்றாக நடித்து உள்ளனர் .இயக்குனர் சத்திய சிவா  நன்றாக வேலை வாங்கி உள்ளார் .படம் முழுவதும் தம் அடிப்பது ,மது குடிப்பது காட்சிகள் மிக அதிகம் .இந்தக் காட்சிகளின் போது புகை பிடித்தால் புற்று நோய் வரும் .உயிருக்கு ஆபத்து ,குடி குடியைக் கெடுக்கும். என்று எழுத்தும் வந்து விடுகிறது.    நான்கு பேரின் தொழில் முறையின் மீதான நட்பில் கதை நகர்கின்றது .படத்தின் கதாநாயகி பிந்து மாதவி மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .நல்ல எதிர் காலம் உண்டு .

 கதாநாயகி பிந்து மாதவி காதலிக்கும் தன் சகோதரிக்கு ,தன் மோதிரம் தந்து காதலனுடன் செல்ல வழி   அனுப்பி வைக்கிறார் .காதலனுடன் சென்று இருவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர் .நண்பர் கூட்டணி   பிணத்தை எடுத்துக் கொண்டு வந்துக் கொடுகின்றார்கள் .தம்பி இராமையா கூலி குறைவாக பேசியதற்குத் திட்டுகின்றனர் .பிணத்தின் கையில் இருந்த மோதிரத்தை கிருஷ்ணா எடுத்து வைத்துக் கொள்கிறார் .பிந்து மாதவி என் சகோதரி நினைவாக அந்த மோதிரம் கிடைத்தால் கொடுங்கள் என்கிறார் .முதலில் இல்லை என்று பொய் சொன்னவர் பிறகு மோதிரம் தந்து விடுகிறார் .லேசாக காதல் மலர்கின்றது கிருஷ்ணா மீது .முதலில் கிருஷ்ணா காதலை ஏற்க மறுக்கிறார். பின்னர் ஏற்கிறார் .

பிந்து மாதவி அப்பா காதலை எதிர்க்கிறார் .ஏற்கெனெவே ஒரு மகளை இழந்தும் ,மறு மகள் காதலையும் எதிர்க்கும் தந்தையை ,கிருஷ்ணா எதிர்த்து பின்  மணம் முடிக்கின்றனர் .மிக இயல்பாக காதல் மலர்கின்றது .
பிணம் தூக்கும் நண்பர்களுக்கு சாவின் வலி தெரிய வில்லை .எப்படா ? பிணம் விழும் .நமக்கு
கூலி வரும் தண்ணி அடிக்கலாம் .என்று வாழ்கின்றனர் .நண்பர்களை பிணமாகப் பார்க்கும்  போது மரணத்தின் வேந்தனை விளங்குகின்றது .இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. மிகச் சிறந்த பின்னணி இசை இசைத்துள்ளர்.   .கிருஷ்ணா தன் உடம்பில் கயிறைக் கட்டிக் கொண்டு பள்ளத்தில் இறக்கி விடும் காட்சியில் ஒளிப்பதிவாளர் மிக நன்றாக படமாக்கி  உள்ளார் .

ஈவு, இரக்கமற்ற பிணம் தூக்கும் மனிதர்கள் இடையே மனிதாபிமானம் விதைக்கும் நல்ல கவிதையாக திரைக்கதை ,மரணத்தின் வேதனையை, படம் பார்ப்பவர்களுக்கும் உணர்த்தி வெற்றிப் பெற்றுள்ளார் .இயக்குனர்  சத்திய சிவா.பசங்க படத்தில் ஆசிரியராக  நடித்து முத்திரைப் பதித்த நடிகர், வில்லனாக வருகிறார் .எந்தப் பாத்திரம் தந்தாலும் மிக நன்றாக நடித்து விடுகிறார் .

பிணத்தைத் தின்ன   மொய்க்க  வரும்   கழுகு .பிணத்தைத் தூக்கி வாழ்க்கை நடத்தும் நண்பர்களின் வாழ்க்கையை  விளக்கும் கதை .பெயர் பொருத்தம் நன்று .காதல் எப்போது வரும் எங்கு வரும் ,யாருடன் வரும் ,எப்படி வரும் .என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது .இந்தப் படத்தில் பிந்து மாதவிக்கு , சகோதரி காதலின் காரணமாகத்  தற்கொலை செய்தபோதும் ,தந்தை எதிர்த்த  போதும் , பிணம் தூக்கும்,குடிப் பழக்கம் உள்ள ஒருவர் மீது காதல் வருகின்றது .காதலுக்கு கண் இல்லை உண்மைதான் .  


வில்லனால்  பலி வாங்கப் பட்ட நண்பர்களின் பிணத்தைப் பார்த்து கதறும் போது கிருஷ்ணா மிக நன்றாக நடித்து உள்ளார் .கடைசியில் வில்லன் அடியாட்கள் கிருஷ்ணாவை வெட்ட வரும் போது ,அந்து வெட்டு பிந்து மீது பட்டு உயிர் இழக்கிறாள் .கடைசியில்  உயிரோடு இருக்கும் கிருஷ்ணா ,இறந்த பிந்துவை கட்டிக் கொண்டு குதித்து தற்கொலை செய்யும் முடிவு ஏற்புடையதாக இல்லை .    கடைசியில் காதலர்களை சாகடிக்கும் முறையை தமிழ் இயக்குனர்கள் கை விட வேண்டும் .வாழ்ந்து காட்டும் படி படம் எடுங்கள் .அதிக ஆபாசம் இல்லாமல் ,நல்ல  கதை அம்சத்துடன் மிக இயல்பாக படத்தை இயக்கி உள்ள சத்திய சிவா அவர்களுக்கு பாராட்டுக்கள். படம்  பார்க்கிறோம் என்பதையே மறந்து கண் முன் நிஜ நிகழ்வு பார்ப்பதைப்    போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளார் .

உயிர்வேலி நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

உயிர்வேலி

நூல் ஆசிரியர்
கவிஞர் ஆலா

நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

நெய்தல் பதிப்பகம் விலை 45
நூலின் அட்டைப்படம் வித்தியாசமாக உள்ளது .பாறையில் பூ பூப்பதுப் போல ,கற்களில் செடி முளைத்துள்ளது .உயிர்வேலி
நூலின் தலைப்பே முள்வேலியை நினைவுட்டுவதாக உள்ளது . கவிஞர் அறிவுமதியின் அணிந்துரையிலிருந்து சில வரிகள் .,

இதோ தம்பி ஆலா ...இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்ததற்கான அடையாளங்களோடு அழகழகான அய்
கூக்களைத் தந்திருக்கிறார் .

ஆம் உண்மைதான் .புதுவையின் சிறந்த ஹைக்கூ கவிஞர்கள் வரிசையில் ஆலாவும் இடம் பிடித்துள்ளார் .ஆலா என்ற அற்புதப் பறவையின் புனைப் பெயரில் அற்புத  ஹைக்கூ புனைந்துள்ளார்  .சொந்த  வீட்டை வறுமையின் காரணமாக விற்று விட்டு  வாடகை வீட்டில் குடி இருக்கும், குடிமகனின் ஏக்கத்தை ,ஒரு ஓரத்தில் இருக்கும் கவலையை  நன்குப் பதிவு செய்துள்ளார் .

பூத்திருக்கும் பாளை
தாத்தா வச்ச தென்னை
வீடு விற்பனை !  


குடும்ப சூழ்நிலை காரணமாக பலருக்கு காதல் தோற்கலாம் . ஆனால் காதலி நினைவு மட்டும் என்றும் மறப்பதே இல்லை. மூச்சு உள்ளவரை  மூளையில் ஒரு ஓரத்தில் காதலி நினைவு  இருந்துக் கொண்டே இருக்கும் .

காதலித்தவளைப்
பூட்டி வைத்தனர்
நெஞ்சுக்குள் !  


பகுத்தறிவுப் போதித்து,முட நம்பிக்கைகளைச் சாடும் விதமாக ஹைக்கூ கவிதைகள் நூலில் நிரம்ப உள்ளது .அவற்றில் பதச் சோறாக  ஒன்று.

அறுத்தெறி
கறுப்புக் கயிறு
மடமையின் குறி  !
காதலை வித்தியாசமாகப் பார்க்கிறார்     நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா.

சயனைடு சுவை
சாப்பிட்டவருக்கு தெரியும்
காதல் !

தமிழகத்தில் கல்லுரி மாணவிகளை உயிரோடு பேருந்தில் கொளுத்திய கொடூர நிகழ்வை யாரும் எளிதில் மறக்க முடியாது . அதனை நினைவூட்டும் ஹைக்கூ .

அரசியல் வெறி
பூக்கள் சாம்பலாச்சு
மாணவிகள் எரிப்பு !


அண்டை மாநிலங்கள் போட்டிப் போட்டு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்து வருகின்றன .தமிழகத்து அரசியல் வாதிகள் அவர்கள் சண்டைப் போடுவதற்கே, நேரம் போதவில்லை .பிறகு எப்படி? மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் .பிற மாநிலம் போல தமிழகத்தில் எந்த விசயத்திலும் ஒற்றுமை இல்லாதது வேதனை .தமிழ்நாட்டுத் தமிழர்களின்  உள்ள கொதிப்பை நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா நன்குப் பதிவு செய்துள்ள ஒரு  ஹைக்கூ .

இந்தியா பொய்
இந்தியன் 
பொய் ...பொய்
நாம் தமிழர் !


அறிவியல் சாதனமான கணினியிலும் சோதிடம் பார்க்கும் மடமையைச் சாடிடும் ஹைக்கூ .

மடமை மாந்தன்
புதிய வண்ணம்
கணிப்பொறிக் கணியம் !


தொலைக்காட்சி  வருவதற்கு முன் நாடு நன்றாக  இருந்தது .தொலைக்காட்சி வந்தப் பின்புதான்  நாடு சீரழிந்து  வருகின்றது. தொலைக்காட்சி மூலம் வன்முறை, ஆபாசம் ,வக்கரம் ,அனைத்தும்  கற்பித்து வருகின்றனர் .தொலைக்காட்சி தொல்லைக்காட்சி ஆகி விட்டது .

நாமாவோம்
மூன்று    குரங்கு பொம்மை

தொலைக்காட்சி !

காதலுக்கு புதிய விதி ஒன்று கூறுகின்றார் பாருங்கள் .வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ எழுதி உள்ளார் .இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவிற்கு வரும் .

தூரம் அதிகமாக
ஈர்ப்பு விசை கூடும்
காதலின் விதி ! 


புகழ்ப் பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்கள் இயற்கையை மட்டுமே பாடினார்கள். ஆனால், தமிழக ஹைக்கூ கவிஞர்கள்தான் சமுதாயத்தையும் பாடி வென்றார்கள் .இயற்கையையும் எங்களுக்கு பாடத் தெரியும், காட்சிப் படுத்தும் விதமாகவும்  பாடத் தெரியும்என்பதை மெய்பிக்கும் விதமாக ஒரு ஹைக்கூ  .

பனை மரத்தைப்
படம் பிடித்தது
பனித்துளி !

காதலர்களின் விழிகள் பேசும் போது,இதழ்கள் பேசிட தேவை இருக்காது .காதலர்கள் அனைவரும் அறிந்த உண்மை . 

நிறைய பேச நினைத்து
அமைதியாய் விழுந்தேன்
விழி ஈர்ப்பு விசை !


ஆணாதிக்க சமுதாயத்தால் எழுதப்பட்ட பாரப்பட்சமான சட்டத்தையும் கேலி செய்யும் விதமாக எள்ளல் சுவையுடன் சாடுகின்றார் .

விபச்சாரம் செய்தனர்
ஆண்கள்
அழகிகள் கைது !

ஈழத தமிழர்களுக்கு அடுத்தப் படியாக புதுவைத் தமிழர்கள் தமிழ் இன உணர்வுடனும் ,தமிழ் மொழி பற்றுடனும் பிற மொழிச் சொற்கள் கலப்பின்றி முடிந்த அளவிற்கு நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி  படைப்புகளைப் படைத்தது வருகின்றனர் .அந்த வரிசையில்
நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா மிக நன்றாகப் படைத்தது உள்ளார் .பாராட்டுக்கள் .

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


வியாழன், 29 மார்ச், 2012

செவ்வாய், 27 மார்ச், 2012

கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார் .

மதுரை ஆதீன மடத்தில் நடந்த பாராட்டு விழாவில், தஞ்சைத் தமிழ்ப்  பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் .திருமலை அவர்களுக்கு, கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார் .

கவிஞர் இரா .இரவி

http://www.haaram.com/AuthorPosts.aspx?FeedID=18218&ln=ta

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


திங்கள், 26 மார்ச், 2012

கடவுளின் கடைசி கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி

கடவுளின் கடைசி கவிதை  !

நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை

நூல் விமர்சனம் 
கவிஞர்இரா .இரவி

வனிதா பதிப்பகம் சென்னை .17.   விலை ரூபாய் 45

நூலின் தலைப்பும் ,நூல் ஆசிரியர் பெயரும் ,அட்டைப்படமும் வித்தியாசமாக உள்ளது  .பாராட்டுக்கள் .முனைவர் நா .இளங்கோ அவர்களின் மதிப்புரை முத்தாய்ப்பாக உள்ளது .துளிப்பாப் பாவலர் புதுவை சீனு .தமிழ்மணி  அவர்களின் அணிந்துரை அழகுரை . நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை என்னுரை எண்ணங்களின் சுருக்க உரை .ஹைக்கூ கவிதை இன்று பரவலாக எல்லோராலும் அறியப்பட்டு ,வாசிக்கப்பட்டு, பாராட்டப் படுகின்றது என்றால் அதற்கு புதுவை ஹைக்கூ கவிஞர்களும் ஒரு காரணம் .புதுவையில் குடும்பத்தோடு ஹைக்கூ கவிதை  எழுதி வருகின்றனர் .அந்த வரிசையில் ஹைக்கூ கவிதையில் தடம் பதித்து உள்ளார் .நூல் ஆசிரியரின் இயற்ப்பெயர் மணிகண்டன் .
நூலின் முதல் கவிதையே விடுதலையின் அவசியம் உணர்த்துவதாக உள்ளது .

கட்டுண்ட கரங்களில்
பாதுகாப்பாய் இருக்கிறது
விடுதலைப் பற்றிய கவிதை !


தந்தை கோபத்துடன் மகனை அடிக்கும் போது உடன் தாய் வந்து தடுக்கும் பாச நிகழ்வு தினந்தோறும் நம் இல்லங்களில் காணும் நிகழ்வு. அதனை காட்சிப் படுத்தும் கவிதை !
.
அப்பா என்னை
அடிக்கும் போதெல்லாம்
அம்மாவிற்கு வலிப்பதெப்படி ?

தள்ளாத முதுமை வந்தப் பின்னும் பதவியை உடும்புப் போல பிடித்துக் கொண்டிருக்கும் மூத்த அரசியல்வாதிகளின்   பதவி ஆசை
உணர்த்தும்  கவிதை !

நாற்காலி ஆசை
யாரை விட்டது
நாற்காலியில் பொம்மை !

புலம் பெயர்ந்தவர்களின்  மன வலியை மிகவும் நுட்பமாக சொற்ச்சிக்கனத்துடன்  நன்கு அதிர்வு செய்துள்ளார் .

அகதிகள் முகாம்
அடிக்கடி வந்து வெறுப்பேற்றும்
மண்வாசனை !

நடிகைக்கு கோயில் கட்டி உலக அளவில் தமிழகத்திற்கு தலை குனிவை
த் தந்தவர்கள் நம் ரசிகர்கள்  .திரைப்பட ரசிகர்கள் தமிழம் அளவிற்கு உலகில் எங்கும் காண முடியாது .நடிகரின் கட்அவுட்டிற்கு மாலை போடுவார்கள் ,சூடம் காட்டுவார்கள் ,நடிகரை அவதாரம் என்பார்கள் ,பால் அபிசேகம் செய்வார்கள் .எல்லாம் செய்து விட்டு .சொந்தப் பணத்தில் அதிக விலை கொடுத்து சீட்டு வாங்கி திரை அரங்கின் உள்ளே செல்வர்கள் .இந்த இழி நிலையை மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார் .

சொந்த வீடில்லாதவர்கள்
கட்டி முடித்தார்கள்
நடிகைக்கு கோயில் !


இயந்திரமயமான உலகில் இன்று வேகமாக காதல் ,வேகமாக திருமணம் ,மிக வேகமாக விவாகரத்து என்றாகி விட்டது .விவாகரத்து ஆனபோதும் பழைய நினைவுகள் மறப்பதில்லை .

தினமும் கனவில்
தோள் சாய்கிறாள்
விவாகரத்தான மனைவி !

பிறந்
து முதல் இறக்கும் வரை வடுவாக இருக்கும் சொல் அனாதை.இந்தச் சொலின் வலியை, சொற்களில் கூறி விட முடியாது .சம்மந்தப் பட்டவர்கள் மட்டும் உணரும் கொடிய  வலி .குற்றம் எதுவும் செய்யாமல் வந்த பழிச் சொல் .

அன்னையும் பிதாவும்
படித்துக் கொண்டிரு
க்கிறது 
அனாதைக் குழந்தை !

உழைப்பாளி உழைப்பாளியாகவே வாழ்கிறான் .எந்த நாளும் முதலாளி ஆவதில்லை தொழிலாளியாகவே வாழ்க்கை முடிந்து விடுகின்றது. பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான் . ஏழை மேலும் ஏழை ஆகிறான் .கடின உழைப்பிற்கு ஈடு இல்லை இல்லை என்று பொன்மொழி உள்ளது .கடின  உழைப்பாளி கடின  உழைப்பாளியாகவே வாழ்கிறான்.பெரிய முன்னேற்றம் வரவில்லை .

எத்தனை வீடு கட்டினாலும்

வாடகை வீட்டில்தான்
சித்தாள் !


கடவுளின் கடைசி  கவிதை என்ற நூலின் தலைப்பிற்கும் பொருந்தும் கவிதை !

பரமனுக்கு  தெரியாது
பாமரனுக்கு தெரியும்
பசியின் வலி !

வரதட்சணைக் கொடுமை நம் நாட்டில் ஒழிந்த பாடில்லை .பெண்ணைப் பெற்றவர்கள் எல்லாம் தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே செல்வதுக் கண்டு வேதனையில் உள்ளனர் .

பெண்ணிற்கு
தலை தீபாவளி
அப்பாவிற்கு தலைவலி !

எள்ளல் சுவையுடன் சென்ரியு,ஹைக்கூ ,லிமரைக்
கூ மூன்று  வடிவிலும்    முத்தாய்ப்பாக கவிதை வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

கவிதை புத்தகத்தில்
கடைசி பக்கம் வரை தேடல்
கிடைக்கவில்லை கவிதை !


எள்ளல் சுவையுடன் சிந்தனை விதைக்கும் படைப்புகள் உள்ளது .

எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது
கருமியின் இல்லத்தில் திருட்டு !

வாழ்க்கையின் யதார்த்தத்தை நீதிமன்றங்களில் நடக்கும் நடைமுறை உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் .

நீதி மன்றத்தில்
முதல் பொய்
சொல்வதெல்லாம் உண்மை !


குறியீடாக சில கவிதை உள்ளது .இந்தக் கவிதைப் படித்ததும் என் நினைவிற்கு ஈழத்தமிழர் வந்தனர் .

நாளையாவது கிடைக்குமா
பூனைகள் தேசத்தில்
எலிகளுக்கு சுதந்திரம் !

நாகரீக உலகில் நகரத்தில் சிலர் குளிக்க விட்டாலும் வாசனை திரவியம் இட்டுச் செல்வதை கவனித்து ஒரு கவிதை எழுதி உள்ளார் .

வாசனை திரவிய
த்தை
மறக்கவில்லை
குளிக்க மறந்தவன் !


பகுத்தறிவு விதைக்கும் கவிதைகளும் நூலில் உள்ளது .

ஆயுதங்களுடன் இருந்தும்
திருடுபோனது
பத்திரகாளி சிலை !


அரசியலில்  இன்றைய  அவள் நிலையை தோலுரித்துக் காட்டும் துணிவு மிக்க ஹைக்கூ !

கள்ளச்சாராயம் விற்றவன்
அமைச்ச
ரானதும் முதல் நிகழ்ச்சி
காந்தி சிலைத் திறப்பு !

மனம் குறித்து ஒரு கவிதை இதோ !

தெளிந்த  நீரில்
முகம் பார்த்தபிறகும்
தெளியாத மனசு !

புகழ்ப் பெற்ற
ப் புதுவை கவிஞர்கள் வரிசையில் இடம் பிடிக்கும் விதமாக படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் 
--

சனி, 24 மார்ச், 2012

விதைகள் விழுதுகளாய் ... நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி .ஸ்ரீவில்லிபுத்தூர். அணிந்துரை கவிஞர் இரா .இரவி

விதைகள் விழுதுகளாய் ...

நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி
.ஸ்ரீவில்லிபுத்தூர்.


அணிந்துரை கவிஞர் இரா .இரவி

விலை ரூபாய்  90

சின்னச் சின்ன துளிகள் பிரவாகமாய் வருவதுப்போல  நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி அவர்களின் மனதில் அவ்வப்போது  தோன்றிய சின்னச்சின்ன கவித்துளிகளைச் சேகரித்து இன்று முழு நூலாக பிரவாகமாக வலகி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .
உள்ளத்தில் உள்ளது கவிதை .சொற்கள் நடந்தால் வசனம் .சொற்கள் நடனமாடினால் கவிதை .இந்த நூலில் எதுகை  மோனை என்ற இலக்கணத்திற்கு முக்கியத்துவம் தராமல் ,முற்போக்குக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தந்து புதுக்கவிதை படைத்துள்ளார்கள். பாராட்டுக்கள் .ஹைக்கூ வடிவிலும் பல கவிதை உள்ளது .பரப்பரப்பான வழக்கறிஞர் தொழில் புரிந்துகொண்டே ,கவிதையும் எழுதுவது பாராட்டிற்குரியப் பணி.

இவருக்கு கவிதை எழுதிட நேரம் எப்பொழுது கிடைக்கின்றது என்று வியந்துப் போனேன் .
மிகச்சிறந்த எழுத்தாளர், பேச்சாளார்,  சிந்தனையாளர் திரு .வெ.இறையன்பு . இ.ஆ .ப .அவர்கள் குறிப்பிடுவார்கள் .. ஒய்வு என்பது படுத்துத் தூங்குவதுஅல்ல .வழக்கமான பணிகளான வீடு,அலுவலகம்  தாண்டி நமக்குப் பிடித்தமான இலக்கியப் பணியில் ஈடுபடுவதுதான் ஒய்வு. இலக்கியம் இதயத்தை இதமாக்கும். நம்மை ஆற்றுப்படுத்தும் .புத்துணர்வு தரும் .புதுப்பித்துக் கொள்ள உதவும் .நூல் ஆசிரியர் கவிஞர்  சி .அன்னக்கொடி கவிதை எழுதுவதால் தான் ,அவரால் வழக்கறிஞர் தொழிலும் வெற்றிகரமாக முத்திரைப் பதிக்க முடிகின்றது .என்று அறுதி இட்டுக் கூறிடலாம்  .
இந்த நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் ,பதச்சோறாக  சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு ..

பெண் கன்று
போட்டபோது இனித்த  மனசு !
பெண் பிள்ளை பிறந்தபோது
கசந்து போனது ..!

பெண் குழந்தை பிறந்தால் வருத்தப்படும் அவள் நிலையை காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

வெங்காயம் அறுத்தவன்
கண்ணீர் சிந்தினான் ..!
விற்றவனும் கண்ணீர் சிந்தினான் .

உண்மைதான்
வெங்காயம்  மிகவும் மலிவாக விற்கும் போது, உழைத்திட்ட விவசாயி வஞ்சிக்கப்படும்  உண்மையை  தோலுரிக்கும்  கவிதை.
கவிஞரின் பார்வை வித்தியாசமானது .இனிமையான தேனை நூல் ஆசிரியர் எப்படிப் பார்கின்றார் பாருங்கள் .

தேன் கூடு கலைத்த போது
தேனீ சிந்திய ரத்தம்
தேன் ..

மனிதாபிமானம் போல பறவை அபிமானம் விதைக்கும் விதமாக ஒரு கவிதை ..

என்னை அதிகாலையில்
எழுப்பியது
என் வீட்டு சேவல்
நான் அறுக்கப் போவது அறியாமல் ..!

இந்தக் கவிதைக்காகவே நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி அவர்களை பாராட்ட வேண்டும் .தான் ஒரு வழக்கறிஞர் என்ற நிலை மறந்து உண்மையைப் பதிவு செய்துள்ளார் .

காடிற்காக
வழக்குப் போட்டான் ...!
வீட்டையும் இழந்துவிட்டான் ..!


தன்னம்பிக்கை விதைக்கும் விதமாகவும் கவிதைகள் உள்ளன  .அவற்றில் ஒன்று .

துணிந்து நில் ..!
சூரியனைக்
கூ
சுட்டெரிக்க முடியும் ...!

இன்றைய  பல பிரச்சனைகளைத்  தீர்ப்பதற்கான   ஒரே வழி நதி நீர் இணைப்பு .அந்தத் தீர்வை வலியுறுத்தும் விதமாக உள்ள கவிதை இதோ ..!

இணையுங்கள்
கங்கை காவிரியை
கண்ணீர் தேசத்தை
ண்ணீர் தேசமாக
மாற்றுவதற்கு ..!      


சில கத்துக்குட்டிகள் நதி நீர் இணைப்பு தேவையற்றது என்று சொன்னபோதிலும் ,முதிர்ந்த அனுபவசாலிகளின் கருத்து   பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு நதி நீர் இணைப்பு என்பது .மதுரைப் பொறியாளர் திரு காமராஜ் அவர்கள் நதி நீர்ச் சாலை என்ற திட்டமே அரசுக்கு அனுப்பி உள்ளார். அது நிறைவேற வேண்டும் .நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி  அவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் .
இல்லத்தரசி பற்றிய கவிதையைப்  படிக்கும் எல்லோரும் அவரவர்
இல்லத்தரசியின் தியாகத்தை ,தொண்டை நினைத்துப் பார்க்கும் வண்ணம் ஒரு கவிதை .

மூன்று முடி
ச்சுக்கா
மூன்று தலைமுறைக்கும்
உழைக்கின்றா
ளே  
அவள் தியாகத்திற்கு ஈடேது ...!


உண்மைதான் கணவன் ,மகன் ,பேரன் என்று மூன்று தலைமுறைக்கும் உழைக்கும் மனைவியை மனதாரப் போற்றப் பட வேண்டும் .இப்படிப் பல கவிதைகளின் தொகுப்பு நூல் இது .தொடர்ந்து இது போன்ற  கவிதை நூல்களை வெளியிட வேண்டும் என்ற என் வாழ்த்துக்களைச் சொல்லி முடிக்கின்றேன் .

வெள்ளி, 23 மார்ச், 2012

கூடங்குளமும் தமிழக அரசின் வியூகமும்

கூடங்குளமும் தமிழக அரசின் வியூகமும்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் - முதற் தொகுதி

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
கவிதைகள் - முதற் தொகுதி
(75 கவிதைகள் )http://library.senthamil.org/067.htm

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
கவிதைகள் - இரண்டாம் தொகுதி
(66 கவிதைகள் )http://library.senthamil.org/068.htm

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


வியாழன், 22 மார்ச், 2012

இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள் ! கவிஞர் இரா .இரவி

இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி

முள்ளிவாய்க்காலில் படுகொலைகள் புரிந்து 
முள் என தைத்தான் தமிழர் உள்ளங்களில் !

அனாதைஇல்லம் ஆலயம் பள்ளி மருத்துவமனை
அனைத்தின் மீதும் வானிலிருந்து குண்டு பொழிந்தான !

முதியவர் பண்கள் குழந்தைகள் அனைவரையும்
மூர்க்கத்தனமாக  கொன்று குவித்தான் !
பாதுக்காப்பு வளையம் என்று சொல்லி மக்களைக் குவித்து
பாதுகாப்பாக ராணுவம் நின்று  கொன்றுக்  குவித்தான்  !

மனித உரிமை மீறல்கள் அத்து
மீறல்கள் நடந்தது 
மனிதாபிமானமற்ற படு  கொலைகள் நடத்தினான் !

கொத்துக் குண்டுகளை அப்பாவி மக்கள் மீது 
கொத்துக்  கொத்தாக வீசிக் கொன்றான் !

தடை செய்யப்பட்ட ரசாயணக் குண்டுகளை
தடையின்றி
ப் பயன்படுத்தி சாகடித்தான் !

கத்தியால் குத்திக் கிழித்து சித்திரவதைச் செய்து
கடைசியில் உயிர் பறித்தான்    கொடூரன் !

பச்சிளம் பாலகன் கண் முன்னே அவனது
பாதுகாவலர்களைக் கொன்று பாலகனையும் கொன்றான் !


செத்தப் பிணங்கள் மீதும் எத்தி மிதித்து
சாவை உறுதி செய்து சந்தோசப் பட்டான் !

விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று
வீதியில் சுட்டு வீழ்த்திச் சென்றான் !


அப்பாவி மக்களை அழித்துக் கொன்றான்
அடப் பாவி அவன் இதயம் இல்லாதவன் !

கவிதை எழுதினோம் கட்டுரை எழுதினோம்
கண்டனம் செய்தோம் கண்டுகொள்ள வில்லை அன்று !

சேனல் நான்கு தொலைக்காட்சி உலகின்
செவிட்டை நீக்கி கேட்க, பார்க்க வைத்தது !

தமிழ் இனத்தை அழித்த கொலைபாதகன்  ராஜபட்சே
தரணியில் இன்னும் வாழ்வது தமிழருக்கு இழுக்கு !

பாவத்தின் பரிசாகப் புற்று நோய் வந்துவிட்டது
பாவி அவன் நோயால் சாகக்
கூடாது !

அய் .நா. மன்றமே முன் நின்று உடன்
அவனை சாகும் வரை
தூக்கிலிடுங்கள் !
 
எட்டு நாட்டு ராணுவ உதவியுடன் கூட்டாக
எம்மக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்றவன்  !

ஜெயித்து விட்டதாக கொக்கரித்த
க் கொடியவனுக்கு
ஜெனிவா தீர்மானத்தில் தொடங்கியது தோல்வி !


இங்கு தமிழன் கறி கிடைக்கும்  என்ற சிங்களனோடு
இனி தமிழன் இணைந்து வாழ முடியாது !

பிரிந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது
சேர்ந்து வாழ்வது இனி சாத்தியமற்றது !

இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள்
ஈழத்தமிழரையும் சிங்களரையும் தனித்தனியே வாழ விடுங்கள்  ! 

--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

புதன், 21 மார்ச், 2012

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம்


மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை

வகித்தார் .முன்னிலை  வகித்த திருச்சி சந்தர் அவர்களின் 80 வது பிறந்த
நாளை முன்னிட்டு கவிஞர் இரா  .கல்யாண சுந்தரம் சார்பில் ஆசிரியர் பீட்டர்
சந்தன  மாலை அணிவித்தார் .கவிஞர் இரா. இரவி நினைவுப் பரிசு வழங்கினார்
.ஆசிரியர் மைகேல் பிரான்சிஸ் ,திரு ஜோதி மகாலிங்கம் ,திருG. ராம மூர்த்தி
, (SWEET ) அமைப்பு திரு. ராமலிங்கம்,திரு சரவணன்    ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினார்கள் .   கவிஞர்கள் விஸ்வநாதன் ,சிவ முருகன் கவிதை வாசித்தனர்
.தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பீட்டர் அருள்ராயன் எண்ணங்கள்
மேம்பட என்ற தலைப்பில்    தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார். சதுரங்க
விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களிடம் ,உங்களின் வெற்றிக்கு
என்ன ? காரணம் என்று கேட்டபோது ,நான் போட்டிக்கு முதல் நாளே கற்பனையாக
போட்டியாளருடன் விளையாடி வென்று விடுவேன் .அதுபோல நாமும் முதலில்
திட்டமிட்டு உழைத்தால் வெற்றி உறுதி .என்று பல வெற்றியாளர்களின் வெற்றி
ரகசியங்களை எடுத்துக்  கூறிப்    பயிற்சி அளித்தார் .திரு .தினேஷ் நன்றி
கூறினார் .வாசகர் வட்டத்தினர் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்
.விழாவிற்கான ஏற்பாட்டை  மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர் எ
.எஸ் .ராஜா ராஜன் செய்து இருந்தார்.

செவ்வாய், 20 மார்ச், 2012

மனசோடு பேசு நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மனசோடு பேசு

நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

அட்டைப்பட  வடிவமைப்பு ,உள்ளடக்க கவிதைகள் அச்சு ,புகைப்படங்கள்
அனித்தும் மிக நன்று.பாராட்டுக்கள் .  நூல் ஆசிரியர் கவிஞர் சி
.அன்னக்கொடி அவர்கள் வழக்கறிஞர் தொழில் வெற்றிகரமாகச் செய்துக் கொண்டே
கவிதையும் எழுதுவது பாராட்குறியப் பணி.இருதய அறுவை சிகிச்சைக்காக
மருத்துவமனையில் இருந்தப் போது  எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி
உள்ளார்கள் .நூல் ஆசிரியர் பெயர் அன்னக்கொடி.அன்னம் என்ற பறவை பாலில்
கலந்து இருக்கும் நீரை பிரித்து விட்டு பாலை மட்டும் அருந்தும்
என்பார்கள் .அதுப்போலத் தீயவைகளைத் தள்ளிவிட்டு , நல்லவைகளை   மட்டும்
கவிதையாக்கி உள்ளார் .

நூல் ஆசிரியர் என்னுரையில் சில நூல்கள் பேசுவோனை ஊமையாக்கும் .என் நூல்
ஊமையைக் கூடபேச வைக்கும் நம்புகிறேன் .தன்னம்பிக்கையோடு
குறிப்பிட்டுள்ளார் .கவிஞர் சுரா அவர்களின் வாழ்த்துரை ,திரு. குருமனோகர
வேல் அவர்களின் கனிந்துரை  ,முனைவர்.க .ச .புகழேந்தி அவர்களின் அணிந்துரை
என யாவும் நூலின் அழகிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது .

சுனாமி கண்ட ஜப்பான் பற்றி
வாழ்க உன் தேசம்  என்ற தலைப்பில்

இரண்டாம் உலகப் போரின் காயச்சுவடுகள்
இன்னும் காய்ந்தபாடில்லை !
தழும்புகளை தனக்குள் வைத்துக் கொண்டு
தரணியில் தனக்கென ஒரு தடம் பதித்தவன் !

தத்துவப் பாடல்களும் நூலில் உள்ளது .மரணத்தைக் கண்டு அஞ்சி தினம் தினம்
செத்துப் பிழைப்பவர்கள் உண்டு .அவர்களுக்கான கவிதை

என் அழுகை எனக்கல்ல  ...!

மரணம் என் இதய வாசலின் கதவைத் தட்டினாலும்
மாலைப் போட்டு வரவேற்பேன் !
மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் கோழை !
மரணத்தை எதிர்கொள்ள எந்த நேரத்திலும்
தயாராயிருப்பவனே  மனிதன் !

முனகல் சத்தம் என்ற கவிதையில் ஏழைக் கிழவியின் நிலையைப் படம் பிடித்துக்
காட்டி கண்ணில் கண்ணீர் வர வைக்கின்றார் . நூல் ஆசிரியர் கவிஞர் சி
.அன்னக்கொடி.
 தன்னம்பிக்கை விதைக்கும் கவிதைகள் உள்ளது .இந்த வைர வரிகளை இன்றைய
இளைஞர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
தோல்வி எனக்கல்ல !

காட்டாற்று  வெள்ளம் கடந்து செல்வேன் !
பெரும்பாறையே என் மீது மோதினாலும் சிதறுண்டு போகும் !
வானமே விழுந்தாலும் எழுந்து நிற்பேன் !
பெருந்தீயே சுற்றிச் சுழன்றாலும் தட்டிவிட்டுச் செல்வேன் !
சிறு நோயே நீ என்ன செய்ய முடியும் என்னை நீ
சுற்றி வந்தாலும்  சுழன்று வந்தாலும் தோல்வி உனக்குத்தான் !
அப்போலோ அதிசயிக்கும் வண்ணம் எழுந்து நிற்பேன் !
அகிலமும் அதிரும் வண்ணம் உயர்ந்து நிற்பேன் !

அடுக்கு மாடி வீடுகளில் அடுத்த வீட்டுக்காரகள் பற்றி அறிந்து கொள்வதில்லை
.இயந்திர வாழ்க்கையானது இன்று . நாங்களும் சொந்தக்காரகள் என்ற கவிதையில்
நன்கு பதிவு செய்துள்ளார் .

பட்டாசு ஆலை தீ விபத்து அடிக்கடி நடப்பது நாம் அடிக்கடி படிக்கும்
செய்தியானது .அதில் உயிர் பலி நடப்பதும் வாடிக்கையாகி விட்டது .
மீனவன் !
கடல் அலையில் மிதக்கிறான்
பட்டாசு ஆலைத் தொழிலாளி
கந்தக ஆலையில் மிதக்கிறான்
பல உயிர்களைப் பலி வாங்கும்
பட்டாசு ஆலை பட்டுப் போகாதோ !
எனக்குத்தான் வேறு தொழில் கிடைக்காதோ !

மனிதாபிமானம் தாண்டி விலங்காபிமானம் விதைக்கும் கவிதை.
உள்ளது .மாடுகளுக்கு கால் சுடக் கூடாது என்று லாடம் கட்டும் பழக்கம்
இன்றும் உள்ளது  நடைமுறையில் .மாட்டிற்கு உதவுகிறோம் என்ற பெயரில்
துன்புறுத்துகின்றனர் .இந்தச் செயலைப் பார்த்து நானும் மனம்
வருந்தியதுண்டு .அதற்கு விடை  சொல்வதுப் போல ஒரு கவிதை இதோ !

காளைக்கும் காலணி போடுங்கள்
காயப்படுத்தாதீர்கள் - என்றான் தம்பி
பதில் சொல்லத் தெம்பில்லை அப்பாவுக்கு !

ஆசை ஆசையாய் கவிதையில் வித்தியாசமான ஆசைகளை எழுதி உள்ளார் .கிராமிய
மொழியில் சில கவிதைகள் மண் வாசம் தருகின்றன .கருப்பாயி  கிழவி கவிதை
நன்று .கண்ணகி கவிதை வித்தியாசமானப் பார்வை !
ஈழத்தைப் பற்றி பாடாமல் இருக்க முடியாது .மனிதாபிமானம் மற்றவர்கள்தான்
ஈழம் பற்றி பாடுவதில்லை .

நீ வரும் வரையில் !
கைகளை இழந்தாலும் கால்களை இழந்தாலும்
நீ இந்த ஈழ தேசத்தை மீட்டெடுக்கும் வரை
சுருங்கிய விழிகள் மட்டும் திறந்தே இருக்கும் !

ஆம் ஈழத்தாயின் கனவு மட்டுமல்ல ,நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி
.அன்னக்கொடிகனவு மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரும் கனவும் ஈழத்தில்
தமிழன் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதுதான் .கனவு நனவாகும்
நாள் விரைவில் வரும் .
செருப்பு பேசுவதுப் போல ஒரு கவிதை நன்று .என் சொகாகக் கதையைக் கேளு !
பறவையின் சோகத்தை உணர்த்தி வெற்றிப் பெறுகின்றார் .வாசகர் மனதில்
விழிப்புணர்வு விதைத்து வெற்றிப் பெறுகின்றார் .உளத்தில் உள்ளது கவிதை
.உண்மை உரைப்பது கவிதை.என எண்ணச் சிதறல்களை கவிதையாக்கி ,கவி விருந்தைப்
படைத்துள்ளார் .பாராட்டுக்கள்

www.seithy.com

www.seithy.com

www.seithy.com

www.seithy.com

திங்கள், 19 மார்ச், 2012

யாருமில்லை என்றான போது !நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்

யாருமில்லை என்றான போது !

நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்

விலை ரூபாய் 75 . நந்தினி  பதிப்பகம் கோவை

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இது வெறும் கவிதை நூல் அல்ல .ஈழத்தின் உரிமைக் குரல்
.புத்தக வடிவில் உள்ள கேள்விக் கணைகள் .நூலைப் படித்து முடித்தவுடன் நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம் அவர்களுடன் செல்லிடப்  பேசியில் பாராட்டி விட்டு நீங்கள் ஈழத் தமிழரா ?என்று கேட்டேன். அவர் இல்லை நான் கோவையில் பிறந்த தமிழ் நாட்டுத் தமிழர் .என்றார் .மதுரையில் உள்ள பேராசிரியர் முனைவர் இ .கி .ராமசாமி அவர்களின் வகுப்புத் தோழர் என்றார் .இந்த நூலை எனக்கு அறிமுகம் செய்தவர்  முனைவர் இ .கி .ராமசாமி.
அச்சாகி வெளி வந்தவுடன் நான் அனுப்பும் முதல் நூல் இது .கெழுதகை  நண்பர் இ .கி .ரா .அவர்களுக்கு என்று
எழுதிய காரணத்தால் முனைவர். இ .கி .ராமசாமி அவர்கள் ,நூலை எனக்கு அனுப்பாமல், படி எடுத்து அனுப்பி வைத்தார்கள் விமர்சனத்திற்கு.    புகழ்ப் பெற்ற கவிஞர்களான சிற்பி ,தமிழன்பன், புவியரசு ஆகியோரின் அணிந்துரை கவிதை நடையிலேயே மிகச் சிறப்பாக உள்ளது .

சேனல் 4 என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பியபின்  இன்று உலகம் அறிந்தது  ஈழப்படுகொலையை   .அனால் அன்றே இன உணர்வாளர்கள் பலர் குரல் கொடுத்தப் போதும். இந்த உலகம் குறிப்பாக நம் நாடு கண்டு கொள்ள வில்லை .வேடிக்கை பார்த்த குற்றவாளிகளின் கன்னத்தில் அறைவதுப் போல இந்த நூல் கவிதைகள் உள்ளது .உள்ளத்து உணர்வை ,கொதிப்பை ,கோபத்தை ,மனித நேயத்தை கவிதையாக்கி  உள்ள  நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம் அவர்களுக்குப் பாராட்டுக்கள் .இவரது இயற்ப்பெயர் சந்திர சேகர் .ஈழத் தமிழருக்கு நடந்த கொடுமைகள் கண்டு குமுறும் எரிமலையாக் கவிதை வடித்துள்ளார் .

யாருமில்லை என்றான போது என்ற இந்த நூலை ஈழத் தமிழரைக்  காக்க  யாருமில்லை என்றான போது  தமிழ் இனத்தையே கொன்று குவித்த கொடூரத்தை சுட்டும் விதமாக உள்ளது . 

என்ன செய்வதாக !

அடக்கினீர்கள்   , ஒடுக்கி
னீர்கள், பறித்தீர்கள்  
எரித்தீர்கள் , வெட்டி
னீர்கள் ,விரட்டினீர்கள்
சுட்டீர்கள் ,அழித்தீர்
கள் இன்னும்
என்னவெல்லாமோ  செய்தீர்கள்
நாங்கள் அப்படியே இருக்கிறோம்
நாங்கள் இன்னும் வலுவாக இருக்கிறோம் !

ஈழத்  தமிழரின் விடுதலைக்கான    உரிமைக் குரலாகவே  ஒலிக்கின்றது கவிதைகள் !

சாதல் என்பது வாழ்தல் !

நாங்கள் செத்துக் கொன்
டிருந்ததாலேயே 
நாங்கள் செத்துப்  போனோம் என்பதல்ல  பொருள்
நாங்கள் சாகவில்லை என்பது பொருள்
உங்களால் அழிக்க முடியாது என்று
பொருள்
நாங்கள் வலிமையாக எழுவோம் என்பது
பொருள்

எல்லாம் நல்லபடியாக  !

எல்லாம் நல்லபடியாக   நடந்து கொண்டிருக்கின்றன
சாமியார்கள் பஜனை செய்து
கொண்டிருக்கிறார்கள்
நடிகைகள் காதல் காட்டிக்
கொண்டிக்கிறார்கள்
தலைவர்கள் மேடை
ளில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்
மக்கள் தொலைக்காட்சிகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள்
முதலாளிய நிறுவனங்கள் கொழுத்துக் 
கொண்டிருக்கின்றன
அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து
கொண்டிருக்கிறார்கள்
சாராயக் கடைகள் கோயில் குளங்கள் கடைத் தெருக்கள்
விளையாட்டுக்களங்கள்  இன்னும்
இன்னும் எல்லாமும்
ல்லபடியாகவே நன்றாக நடந்து கொண்டிருக்கின்றன
எங்களையும் கொன்று
கொண்டிருக்கிறார்கள்
நாங்களும் செத்துக்
கொண்டிருக்கிறோம்
நீங்களும்  பார்த்துக்
கொண்டிருங்கள்  நல்லபடியாக !

ஈழத்  தமிழர் படுகொலையின் பொது எனக்கென்ன என்று சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு  இருந்த தமிழ்நாட்டுத் தமிழரின் நிலையைப்  படம் பிடித்துக் காட்டி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம் .

இங்குள்ள உண்மையான தமிழ் இன உணர்வு உள்ளவர்கள் ,மனித நேயம் மிக்கவர்கள் ஈழத்  தமிழர்களுக்காக குரல் கொடுத்தனர் . ஆனால்
ஒரு சில அரசியல் வாதிகள் முதலை கண்ணீர் வடித்து நாடகம் நடத்தினார்கள் .அதனை குறிப்பிடும் கவிதை இதோ !

அறிவிப்பு வேண்டாம் என அறிவிப்பு !

உங்களிடம் ஒரு வேண்டுகோள்
எங்களுக்கு உதவுவதாக அறிவிக்காதீர்கள்
எங்களுக்கு  ஆதரவு தருவதாக  அறிவிக்காதீர்கள்
நாங்கள் உங்கள் இனம் என்று
எங்களுக்காக
ப் போராடுவதாக அறிவிக்காதீர்கள்
அறிவிப்பு என்ற சொல்லே எங்களுக்கு
அருவெறுப்பாக இருக்கிறது .

ஈழத் தமிழரின் உள்ளக் குமுறலை ஈழத் தமிழர்
கூற்றுப்  போலவே கவிதையைப் பதிவு செய்துள்ளார் .இலங்கையில் தமிழினம் அழிய எல்லா உதவிகளும் செய்துவிட்டு இன்று  அமைதி மறுவாழ்வு என்று போலி வசனம் பேசும் அரசியல்வாதிகளின் முகத்திரை கிழிக்கும் வண்ணம் கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

அமைதியின் பெயர்
நல்லது
எங்கள் சாம்பல் காடுகளுக்கு இனி
உணவு கொடுக்கலாம் உடை கொடுக்கலாம்
அமைதி வந்துவிட்டது எனவே எல்லாமே தரலாம்
!

அயல் நாட்டில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி இன்று உலகிற்கு அம்பலப் படுத்து    உள்ளது .ஆனால் தமிழகத்தில் சில தொலைக்காட்சிகள்  ஈழச் செய்தி வர விடாமல் கவனமாக இருந்து தமிழ் இனத்  துரோகம் செய்ததை மறக்கவும் மன்னிக்கவும் முடியாது .

ஈழத் தமிழர்கள் என்ன கேட்டார்கள் விடுதலை கேட்டார்கள் .விடுதலை கேட்பது குற்றமா ? காந்தியடிகள் விடுதலை கேட்டது குற்றமா ? சிந்திக்க வைக்கும் கவிதைகள் நூலில் உள்ளது .

நாங்கள் வாழ்வதற்கு எங்களுக்கு ஒரு வீடு ஒரு நாடு
நாங்கள் பேசுவதற்கு ஒரு மொழி ஒரு இனம்
நாங்கள் உழைப்பதற்கு ஒரு நிலம்
நாங்கள்  உண்பதற்கு ஒரு கவளம்
நாங்கள் மூச்சு விட வேண்டும் அதற்காக ஒரு உரிமை

மக்கள் அற்ற தேசம் !

யுத்தம் முடிந்துவிட்டது அமைதி வந்துவிட்டது
கலவரங்கள் அடங்கி விட்டன
கொல்லப் பட்டவர்கள் எரிந்த நெருப்பின் வாசம்
திசைகள் முழுவதும் வெப்பமாகக் கவிழ்ந்திரு
ந்தது !

இப்படி நூல் முழுவதும் இலங்கையில் நடந்த கொடூரத்தை கவிதைகளால் படம் பிடித்துக் காட்டி உள்ளார் .மனித நேயத்துடன் ஒரு படைப்பாளியின் கடமையை மிக சிறப்பாகச் செய்துள்ளா
ர்.பாராட்டுக்கள் .   தமிழ் இனத்தை திட்டமிட்டு கொடூரமாக அழித்த இலங்கைக் கொடூரன் ராஜபட்சே உலக அரங்கில் தண்டிக்கப் படும் நாளை ,இந்த நூல் ஆசிரியர் உள்பட உலகத் தமிழர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்து உள்ளோம் .


ஞாயிறு, 18 மார்ச், 2012

ஈழப் படுகொலை இன்று உலகம் அறிந்துக் கொண்டது . ஈழப் படுகொலை குறித்து கவிஞர் இரா .இரவி அன்றே எழுதிய கவிதைகள் !

ஈழப் படுகொலை இன்று உலகம் அறிந்துக் கொண்டது . ஈழப் படுகொலை குறித்து   கவிஞர் இரா .இரவி அன்றே எழுதிய கவிதைகள் !


ஹைக்கூ ராஜபட்சே      கவிஞர் இரா .இரவி
ஹிட்லரின் தற்கொலை
முடிவை நீயே எடு
ராஜபட்சே

மரணம் உறுதி
விரைவில் இறுதி
ராஜபட்சே
தப்புச் செய்தவன்
தப்பிக்கப் பார்க்கிறான்
ராஜபட்சே
பலநாள் கொலைகாரன்
ஒரு நாள் அகப்பட்டான்
ராஜபட்சே
கெட்டிக்காரன் புளுகு
எட்டு நாளைக்குதான்
ராஜபட்சே

வணங்கிய புத்தரும்
கைகழுவினார்
ராஜபட்சே
மொட்டைப் பிட்சுக்களால்
காக்க முடியாது உன்னை
ராஜபட்சே
எத்தனுக்கு எத்தன்
உலகில் உண்டு உணர்
ராஜபட்சே
முகத்தில் தெரியுது
மரணபயம் உனக்கு
ராஜபட்சே
வினை விதைத்தவன்
வினை அறுப்பான் உண்மை
ராஜபட்சே
கூட்டுக்களவானி   பொன்சேகா
உன்னுடன் இல்லை
ராஜபட்சே  

http://eraeravi.wordpress.com/2011/04/30/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87/


துளிப்பா கவிஞர் இரா .இரவி

ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை
ஈவு இரக்கமற்ற கொடூரக் கொலை
வாழ வழியின்றி முள்வேலி
வாடி வதங்கினர் குழந்தைகள்
இழவை கேட்க நாதியில்லை


 
உலக மகா கொடூர கொலைக்காரன்
உலக வலம் நாளும் வருகிறான்
உலக நாடுகள் மன்றத்தான் வேடிக்கை பார்க்கிறான்
ஒருவரும் தட்டி கேட்கவில்லை
பலகாலம் ஏமாற்றி வாழ்கிறான்
http://tamilparks.50webs.com/tamilpoem/tuleepaa_ravi_madurai.html
மறையவில்லை முத்துக்குமார்
கவிஞர் இரா. இரவி, மதுரை
 
உடலால் உலகை விட்டு மறைந்த போதும்
உணர்வாளர்களின் உள்ளத்தில் என்றும் வாழ்கிறாய்

மரண வாக்கு மூலத்தை இறபிற்க்கு முன்
மின்னஞ்சல் அனுப்பி அதிர்ச்சியில் ஆழ்த்தினாய்

உலகில் தற்கொலை செய்வது கோழைத்தனம்
உந்தன் தற்கொலையோ நல் வீரத்தின் இலக்கணம்

உடலுக்கு தீ மூட்டி பரவிய ஒளியில்
உணர்வினை எமக்கு புகட்டிய புத்தன்

உந்தன் கோரிக்கையை ஆள்வோர் ஏற்று இருந்தால்
ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து இருப்பார்கள்

சர்வதேச சமுதாயத்திற்கு படு கொலைகளை
கவன ஈர்ப்பு செய்த திருமகன்

ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் காக்க வேண்டி
ஒப்பற்ற உன் உயிர் மாயித்த மா வீரன்

ஈழத்தமிழர்கள் லட்சிய வரலாற்றில்
இனிய இடம் உனக்கு உறுதியாக உண்டு

கொலைகாரன்களிடயே நடந்த தேர்தலில்
பெரிய கொலைகாரன் வெற்றி பெற்றான்

கொட்டு இல்லாமல் ஆடுவான் இனி
வெற்றி கொட்டு கிடைத்ததால் கூடுதலாக ஆடுவான்

ஆணவக்காரர்களின் ஆட்டம் நிரந்தரம் அன்று
ஆதிக்கம் நிலைத்ததாக வரலாறு இல்லை

இருள் மறைந்து ஒளி பிறக்கும் உறுதி
தனித்தமிழ் ஈழம் விரைவில் மலர்வதும் உறுதி
http://tamilparks.50webs.com/tamilpoem/muthu_kumar_ravi_madurai.html
சுந்தர இலங்கை
 
சுந்தர இலங்கை
சுடுகாடானது
சிங்கள இனவெறியால்
ராஜ பட்சே 
  கவிஞர் இரா. இரவி, மதுரை
கணினி யுகத்தின் கொடுங்கோலன்
காட்டுமிராண்டிக்கு எடுத்துக்காட்டு
ஆசையை அறவே அழித்த புத்தன்
தமிழரை அறவே அழித்த பித்தன்
ஹிட்லரை பார்க்காதவர்கள்
இவனைப் பாருங்கள்
ஹிட்லர் தற்கொலை செய்தான்
இவனும் தற்கொலை செய்வான்
தற்கொலைக் கான கருவி
துண்டை அணிந்தே இருப்பவன்
கொலை செய்த கொலை பாதகன்
கவலை வேண்டாம காப்பேன் என்கிறான்
ஆடுகளை ஓநாயிடம் ஒப்படைக்கும் உலகம்
சாவதேச குற்றவாளிக்கு சிகப்பு கம்பளம்
விரிக்கும் அயிய் நா மன்றம்

 

http://tamilparks.50webs.com/tamilpoem/raja_batch_ravi_madurai.html
நெஞ்சு பொறுக்க வில்லை ஹைக்கூ கவிஞர் இரா. இரவி, மதுரை
 
நெஞ்சு பொறுக்க வில்லை
ஆண்ட இனம் வந்தேறியின்
சிறையில்

உலக ரவுடி
அன்று புஷ்
இன்று ராஜ பட்சே

முள் வேலியில்
மூன்றை லட்சம் தமிழர்
மவுனத்தில் உலக தமிழர்

கொலைகார நாட்டில்
கிரிகெட் விளையாடும் இந்தியா
வேதனையில் தமிழர்

நந்தவனத்தை சுடுகாடாக்கிய
நயவஞ்சகன்
ராஜ பட்சே

கொடி கட்டி வாழ்ந்தவர்களை
ஊர் கோடியில் சிறை வைத்த விலங்கு
ராஜ பட்சே

உயிராய் தமிழை நேசித்த
தமிழரின் உயிர் பறித்த கொடூரன்
ராஜ பட்சே

 
 
தமிழர் உயிர் மட்டும் மட்டமா ?
 
இரா. இரவி, மதுரை


இலங்கையில் போரை நிறுத்தச்சொல்லி
எத்தனையோ பேர் உயிர் மாயித்தனர்
உண்ணாவிரதம் இருந்தனர் பலர்
உயிரையும் உடலையும் தீயுக்கு இரையாக்கினர்
மாவீரன் முத்துக்குமார் மரித்த்போதே
மூர்க்கப்போரை நிறுத்தியிருந்தால்
ஈழத்தில் லட்சம் உயிர் வாழ்ந்திருக்கும்
ஈழ தமிழும் அழகாய் நிலைத்திருக்கும்
கடுமையாக கவன ஈர்ப்பு செய்த போதும்
கண்டுகொள்ளவில்லை ஆளும் காங்கிரஸ்
ஒட்டுமொத்த தமிழினமே அழிந்தது ஈழத்தில்
ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை
விலை மதிப்பற்ற மனித உயிர்கள்
விலை போனது காங்கிரஸ் அலட்சியத்தால்
தனி ஒரு மனிதன் சந்திரசேகர் உண்ணாவிரதத்தால்
தனி தெலுங்கானா உருவாக்க சம்மதித்த காங்கிரஸ்
இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் ஒருவர்
இனி உண்ணாவிரதம் இருந்தால் பிரிப்பார்களா ?
தெலுங்கர் உயிர் மட்டும் உசத்தியா ?
தமிழர் உயிர் மட்டும் மட்டமா ?
மவுனமாக இருந்தே மவுன வலி தந்தனர்
மவுனமாக இருந்தே தமிழர் தக்க பதில்தருவர்
 
இலங்கை ஹைக்கூஇரா. இரவி, மதுரை
 
சுதந்திரம் தருவேன் பத்திரிக்கைகளுக்கு
சாத்தான் வேதம் ஓதியது
சரத் பொன்சேகா

ஒரே குட்டையில்
ஊறிய மட்டைகள்
ராஜபட்சே பொன்சேகா

கொலைகாரன்களில்
சிறந்தவன் யார் ?
இலங்கை தேர்தல்
 


உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு உண்மை – இரா.இரவி

பதியப்பட்ட நாள்June 22nd, 2010 நேரம்: 15:06
Mullivaikal ஈழத்தில் தமிழை தாய் மொழியாகப் பேசியதால்
லட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழர்களின்
உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு போனது
உயிரோடு மண்ணில் போட்டுப் புதைத்தான் ராஜபட்சே
ஈழத்தில் சிங்களனாகப் பிறந்து இருந்தால்
இந்தக் கொடுரக் கொலைகள் நடந்து இருக்காது
உலகத் தமிழர்களில் பலர் வேடிக்கைப்
பார்த்ததைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை
கிராமத்தில் ரத்த சொந்தம் ஒருவர் இறந்தால்
குடும்பத்தில் பொங்கல் கொண்டாட மாட்டார்கள்
ஈழத்தில் ரத்த சொந்தம் லட்சத்திற்கும் மேல்
இறந்ததால் உணர்வாளர்களுக்கு செம்மொழிமாநாடு
இனிக்கவில்லை .
மகாகவி இன்று இருந்து இருந்தால்
செந்தமிழ் நாடு எனும் போதினிலே
துன்பக் கண்ணீர் வழியுது விழிகளிலே
என்றே பாடி இருப்பான் .
தமிழினம் வீழ்ந்து தமிழ் வாழ்ந்து என்ன பயன் ?
http://meenakam.com/2010/06/22/772
http://tamilkurinji.com/Ilakkyam_details.php?/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D//%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/-/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE/.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF//////&id=15675நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!

www.seithy.com

www.seithy.com

www.seithy.com

www.seithy.com

சனி, 17 மார்ச், 2012

பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவரின் நேர்முகம்

President of Bangalore Tamil Sangam asks India not to favour Sri Lanka @ the UNHRC 2012http://www.youtube.com/watch?v=iYmnKOhQMu8&feature=youtu.be

ஆற்றோரம் மண்ணெடுத்து நூல் ஆசிரியர் வழக்கறிஞர் .கவிஞர் சி .அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஆற்றோரம்   மண்ணெடுத்து

நூல் ஆசிரியர்
வழக்கறிஞர் .கவிஞர் சி .அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர்

நூல் விமர்சனம்
கவிஞர் இரா .இரவி

விலை  ரூபாய் 70

அட்டைப்பட வடிவைமைப்பு அருமை .தமிழே !உன்னை ஆராதிக்கிறேன் .என்ற குதல் கவிதையிலேயே   
நூல் ஆசிரியர் கவிஞர்
சி .அன்னக்கொடி தனி முத்திரைப் பதித்து உள்ளார் .தமிழை தாயாக ,தந்தையாக ,நண்பனாக பார்க்கும் பார்வை வித்தியாசமானது. பாராட்டுக்கள்
.
தமிழன் தமிழனாக இரு ! கவிதையில் தமிழர் திருநாளான தைத்திங்கள் ஒரு நாளிலாவது   தமிழன் தமிழனாக இரு ! என்று வேண்டுகோள் வைக்கின்றார் .ஆற்றோரம்   மண்ணெடுத்து நூலின் தலைப்பிற்கான கவிதை மிக நன்று .

ஆத்துத் தண்ணியில்
ஓரத்து மண்ணெடுத்து
அயிரை மீன் பிடிச்சது
ஞாபகமிருக்கு !

ஞாபகமிருக்கு ! ஞாபகமிருக்கு ! என்று எழுதி மலரும் பசுமையான நினைவுகளை கவிதையாக்கி படுக்கும் வாசகர்களுக்கும்  மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றிப் பெறுகின்றார் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி .இளைஞனே ! என்ற கவிதையில் தன்னம்பிக்கை விதை விதைத்து உள்ளார் .

சாமிக்கு இடம் தேடி !
புல்லாங்குழல் கிடைத்திருக்கிறது
அடுப்பெரிக்க பயன்படுத்துகிறோம் !
ராமர் சாமிக்கு
இடம் தேடி
க் கொண்டிருக்கின்றோம்!

மூடநம்பிக்கைகளை பல கவிதைகளில்   சாடி உள்ளார் .

இந்தியாவின் விடுதலைக்கு -- மகாத்மா
தமிழரின்
விடுதலைக்கு -- பெரியார்
இந்த இரண்டு வரிகள் போதும் நூலின் சிறப்பைப் பறை சாற்றிட !
ஆதிக்க சக்திகளுக்கு ஆரத்தி எடுத்தபொழுது
தீப்பந்தம் கொண்டுவந்தவன்  நீ  !

என்று தந்தை பெரியாரைக் குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தம் .

தத்துவம் சொல்லும் கவிதைகள் நூலில் உள்ளது .தத்துவத்தை கணிதத்தின் மூலம் உணர்த்துகின்றார் .

வெறுமை !
மனித வாழ்க்கை
கூட்டிப் பார்த்தேன்
கழித்துப்
பார்த்தேன்
பெருக்கிப்
பார்த்தேன்
வகுத்துப்
பார்த்தேன்
கிடைத்தது ஒன்றே ஒன்றுதான்
அதுதான் ஒன்றுமில்லை !

மிகப் பெரிய தத்துவத்தை மிக எளிமையாகப் பதிவு  செய்துள்ளார் .

புகைப்படங்களுக்குப் பொருத்தமாக பல கவிதைகள் உள்ளது .சிந்திக்க வைக்கின்றன .வனத்துறையின் ,காவல்துறையின் பாரபட்சத்தை உணர்த்தும் கவிதை .

சந்தனக் கட்டை வண்டிக்கு
சலாம் போட்ட கைகள்
சுள்ளி விறகு பொறுக்கிய
கரங்களுக்கு காப்பு மாட்டியது ! 


வித்தியாசமாக சிந்திக்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி.

காதல் வாகனம் !
எங்கள் காதலுக்கு
மத்தியும் --- மாநிலமும்
உதவிக்கு வந்தன
பேருந்தாய் ! இரயிலாய் !  

நம் நாட்டில் கடவுள் பக்திக்கு பஞ்சம் இல்லை .கடவுளுக்குப் பணத்தை தண்ணியாகச் செலவழிப்பார்கள் ,ஆனால் பெத்த தாயை  கவனிக்க  மாட்டார்கள் .அதனை உனதும் கவிதை .  

மறுசேலை !
அம்மனுக்கு தாயே என்று சொல்லி
பட்டுப்புடவை   எடுத்து சாற்றினேன் !
அம்மாவுக்கு ஒரு சேலைக்கு
மறுசேலை இல்லாமல் இருப்பதை மறந்து விட்டேன் !


விவசாயிக்கு மட்டும்
வெல்லமும்  கசக்கும்
விலைக் குறைவால் !
மிகச் சிறந்த ஹைக்கூ கவிதைகளும் நூலில் உள்ளது .பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி அவர்கள் தொடர்ந்து எழுதி நூல்கள் வெளியிட்டு சமுதாயத்தில் விழிப்புணர்வை விதைக்க வேண்டும் .

வெள்ளி, 16 மார்ச், 2012

தொ(ல்)லைக்காட்சி ! கவிஞர் இரா .இரவி

தொ(ல்)லைக்காட்சி  !                               கவிஞர் இரா .இரவி

துண்டித்தது
உறவுகளின் உரையாடலை
தொ(ல்)லைக்காட்சி   !

வளர்ச்சியை விட
வீழ்ச்சியே அதிகம்
தொ(ல்)லைக்காட்சி   !

வன்மம் வளர்த்து
தொன்மம் அழித்தது
தொ(ல்)லைக்காட்சி   !

பாலில்  கலந்த
பாழும் நஞ்சு
தொ(ல்)லைக்காட்சி   !

இல்லத்தரசிகளின்
போதைப்போருளானது 
தொ(ல்)லைக்காட்சி   !

வளர்த்துவிடும்
மாமியார் மருமகள் சண்டை
தொ(ல்)லைக்காட்சி   !


கைவினைப் பொருட்களின்
உற்பத்தி அழித்தது
தொ(ல்)லைக்காட்சி   !

நன்மையை விட
தீமையே அதி
கம்
தொ(ல்)லைக்காட்சி   !

பணம் பறித்து
மனம் சிதைக்கும்
தொ(ல்)லைக்காட்சி   !

பழிக்குப் பழி வாங்கும்
உணர்ச்சிப் போதிக்கும்
தொ(ல்)லைக்காட்சி   ! 

இரண்டு மனைவிகள்
தொடர் நாயகர்களுக்கு
தொ(ல்)லைக்காட்சி   !

பண்பாட்டைச் சிதைத்து
குற்றம் வளர்க்கும்
தொ(ல்)லைக்காட்சி   !

பிஞ்சு நெஞ்சங்களில்
நஞ்சு விதைக்கும்
தொ(ல்)லைக்காட்சி   !

மழலை மொட்டுகள்
மனத்தைக் காயப்படுத்தும்
தொ(ல்)லைக்காட்சி   !

நேரம் விழுங்கும்
சுறா மீன்
தொ(ல்)லைக்காட்சி   !

விளம்பர இடைவேளைகளில்
பரிமாறப்படும் உணவு
கள்
தொ(ல்)லைக்காட்சி   !

ஆபாசம் காண்பித்து
புத்தியைச் சிதைக்கும்
தொ(ல்)லைக்காட்சி   !
தமிழ்ப் பண்பாட்டை
தரை மட்டமாக்கும்
தொ(ல்)லைக்காட்சி   !

குறுந்தகவல் வழி
பணம் பறிக்கும் திருடன் 

தொ(ல்)லைக்காட்சி   !

மூடி விடுங்கள்
நாடு உருப்படும்
தொ(ல்)லைக்காட்சி   !
--

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!
 

வியாழன், 15 மார்ச், 2012

மது ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

மது             ஹைக்கூ             கவிஞர் இரா .இரவி

அதனை நீ குடிக்க
அது உன் உயிர் குடிக்கும்
மது !

இலவசமென்றாலும் வேண்டாம்
உனைக் கொல்லும் நஞ்சு
மது !

என்றைக்காவது என்றுத் தொடங்கி
என்றும் வேண்டும் என்றாகும்
மது !

நண்பனுக்காகக் குடிக்காதே
நண்பனைத் திருத்திடு
மது !

சிந்தனையைச் சிதைக்கும்
செயலினைத் தடுக்கும்
மது !

மதித்திட வாழ்ந்திடு
அவ
மதித்திட வாழாதே
மது !

இன்பத்தைக் கொண்டாட
துன்பம் எதற்கடா
மது !

சோகத்தை மறந்திட
மருந்தன்று
மது !

நன்மை ஏதுமில்லை
தீமை ஏராளம்
மது !

இழப்பு பணம் மட்டுமல்ல
மானமும்தான்
மது !

இல்லத்தரசிகளின்
முதல் எதிரி
மது  !

திறமைகளை மறக்கடிக்கும்
ஆற்றலை அழித்துவிடும்
மது !

உடலுக்கு
க் கேடு மட்டுமல்ல
ஒழுக்கக் கேடு
மது !

வீழ்ந்தவர்கள் கோடி
வீழ்வது தெருக்கோடி
மது !

அடிமை ஆக்கும்
அடி மடியில் கை வைக்கும்
மது !

மனிதனை மிருகமாக்கும்
பகுத்தறிவை மழுங்கடிக்கும்
மது !

குற்றவாளியாக்கும்
கொலைகாரனாக்கும்
மது !

நிதானம் இழந்து
நிலத்தில் வீழ்த்தும்
மது !


வாய் மட்டுமல்ல
வாழ்க்கையும் நாறும்
மது !

உழைத்த
ப்  பணத்தை 
தாரியாக்கும்
மது !

குடி குடியை மட்டுமல்ல
சமுதாயத்தையும் கெடுக்கும்
மது !
கேடியாக மாறுவாய்
ஜோடிஇன்றி வாடுவாய்
மது   !

தொடவே தொடதே
தொட்டால் பற்றிக்கொள்ளும்
மது   !

மட்டமாக்கும் உன்னை
மடையனாக்கும் உன்னை
மது  !

கேளீக்கை என்று தொடங்கி
வாடிக்கையாகிவிடும்
மது  !

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!

புதன், 14 மார்ச், 2012

இந்தியாவின் கேவலமான நிலைப்பாடு கவிஞர் இரா .இரவி

இந்தியாவின் கேவலமான நிலைப்பாடு   கவிஞர் இரா .இரவி

இந்தியாவிற்கு தமிழன் வேண்டுமா ? சிங்களன் வேண்டுமா ?என்ற கேள்விக்கு எங்களுக்கு
சிங்களன்தான் வேண்டும் தமிழன்  தேவை இல்லை என்று பதில் தந்து உள்ளனர் .இளித்த வாயன் தமிழன் இனியாவது விழிக்க வேண்டும் .உலகமே இந்தியாவை கேவலமாகப் பார்க்கின்றது .வெளியுறவு அமைச்சரின் இந்த பதில் எதிர்ப்பார்த்த ஒன்றுதான் .காரணம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் .கொலைக் குற்றவாளியான ராஜபட்சே இந்தியாவைக் காட்டிக் கொடுக்க தயங்க மாட்டான் .தமிழ் இனப் படுகொலைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்தது ,ராணுவ உதவி,  ஆயுத உதவி ,தொழில் நிற்ப உதவி அனைத்தும் இந்தியாதான் என்று தங்களை காட்டிக் கொடுத்து விடுவான் என்ற பயம் இந்தியாவிற்கு உள்ளது .கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குதான் .இந்தியாவின் புளுகு சில நாட்களுக்குத்தான் விரைவில் அனைத்து உண்மையும் வெளி வரும் .அன்று இந்தியாவின் முகத்திரை கிழியும்.கொலைக்காரனே கொலைக் குற்றத்தை விசாரிக்க வேண்டுமாம்  வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவின் நகைச்சுவை .

ராமேஸ்வரத்தில் அப்பாவி மீனவர்களை இலங்கை ராணுவம் காக்கை குருவி சுடுவதுப் போல சுட்டப்போதேல்லாம் இந்திய ராணுவம் அமைத்து காத்ததன் ரகசியம் விளங்குகின்றது .

தமிழ் நாட்டில் இருந்து காங்கிரஸ் தூக்கி   எறியப் பட்டு    பல வருடங்கள் ஆகி விட்டது.சமீபத்தில் நடந்த தேர்தலில் பல மாநிலங்களில் படு தோல்வி சந்தித்தும் .திருந்த வில்லை .இந்தியாவில் இருந்து
காங்கிரஸ் தூக்கி   எறியப் படும் நாள் விரைவில் வருகிறது .  
தமிழ்நாட்டில் காங்கிரசிற்கு தொண்டர்கள் யாருமே இல்லை .ஒரு சில தலைவர்கள்தான் கோஸ்டி சண்டை போட்டுக் கொண்டு ,பதவி சுகத்திற்க்காக இருகின்றனர் .இனி மானமுள்ள தமிழன் எவனும் காங்கிரசில் இருக்க மாட்டான் .தமிழின விரோதியாக காங்கிரஸ் ஆகி விட்டது .தந்தை பெரியார் சொன்னதுப் போல காங்கிரசை ஒழிப்பதே ஒழிப்பதே ஒவ்வொரு தமிழனின் கடமையாக இருக்க  வேண்டும் .காங்கிரசை வேரோடும்   வேரடி மண்ணோடும் வீழ்த்திடுவோம்.வாருங்கள் .தமிழர்களுக்கு இன உணர்வை கற்பித்த காங்கிரசிற்கு நன்றி   

திமிருக்கு அழகென்று பெயர் நூல் ஆசிரியர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

திமிருக்கு அழகென்று பெயர்

நூல் ஆசிரியர் தபூ சங்கர்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விஜயா பதிப்பகம் கோவை விலை 30 ரூபாய்

காதல் கவிதைகளால் பிரபலமான
தபூ சங்கரின் நான்காவது நூல் இது .நூலின் அட்டைப்படம் காதலர்களுக்கான காதல் கவிதை நூல் என்பதைப் பறைச்சாற்றும் விதமாக உள்ளது . திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் நா .முத்துக்குமார் அவர்களின் அணிந்துரை கவித்துவமாக அழகுரையாக உள்ளது .

முதல் கவிதையிலேயே காதல் தனி முத்திரை பதித்துள்ளார் .இந்தக் கவிதையை வாசிக்கும் வாசகர்கள் அனைவரும் அவரவர் காதலியை உடன் நினைத்துப் பார்ப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூறலாம் .

தேவதை வாழ்த்து !

உன்னை என்  
தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை  
தேவதை ஆக்கிவிடும் !

கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவன் நான் .நூல் ஆசிரியர் தபூ சங்கர் காதலியையே கடவுளாகப் பார்ப்பது மிகையாக இருந்தாலும், காதலுக்கு கண் என்பார்களே .கவிதையை ரசிக்கலாம் .

தேவதை வாழ்த்து !

தினமும் நான் உன்னை
வழிபட்டுக் கொண்டிருந்தாலும்
என்ன வேண்டும் என்று
ஒருபோதும் நீ என்னைக் கேட்டு விடாதே
உன்னையே கேட்டுத் தொலைத்துவிடுவேன் !


தபூ சங்கரின் கவிதை நூலைப் படித்து முடித்து விட்டால் ,படித்த வாசகர்களும் காதல் கவிதை எழுதத் தொடங்கி விடுவார்கள் என்று அறுதி இட்டுக்  கூறலாம் .இந்த நூலைப் படித்து விட்டு நீண்ட நாட்கள் கழித்து, நான் காதல் கவிதை எழுதியது உண்மை .

சந்திர கிரகண
த்திற்கு   
விஞ்
ஞாம்  ஏதோ விளக்கம் சொல்கிறது
ஆனால்
நான்
  சொல்வதென்ன வென்றால்
உன்னை எது மறைத்தாலும் 
எனக்குச்
சந்திர கிரகணம்தான் !

ஒவ்வருவருக்கும் அவரவர் காதலி உலக அழகியாகத்தான் தெரிவாள் .பிறரது பார்வைக்கு அவள் அழகற்றவலாகக் கூடத் தெரியலாம் .

உலக அழகிப் ப
ட்டமெல்லாம்
உனக்
கெதற்கு 
நீ உலகையே அழகாக்குபவள் !


நூலின் தலைப்பை உணர்த்திடும் கவிதை இதோ !

அழகான பெண்களுக்கெல்லாம்
திமிர் இருக்குமென்றாலும்
உனக்கிருக்கும் அழகே
உன் திமிர்தான் !


காதலர்களின் உள் உணர்வைப் பதிவு செய்யும் கவிதை ஒன்று !  நூல் ஆசிரியர் அனுபவப் பட்டு எழுதிய கவிதையாக இருக்க வேண்டும் .

நீ எனக்கு கிடைத்து விடுவாய்
என்கிற நம்பிக்கையை விட
நீ எனக்கும் கிடைக்காமல் போய் விடுவாயோ
என்கிற பயத்தில்தான்
நான உன்னை அதிகம் காதலிக்கிறேன் !  
  
இந்த நூலின் 31 பக்கத்தில் எழுத்துப் பிழையுடன் கவிதை வந்துள்ளது .காதலுக்கு மிகப் பெரிய சொத்தாக் காதலர்களால் கருதப்படும் இதயம் என்ற சொல் இயம் இன்று இரண்டு இடத்தில ஒரே பக்கத்தில் வந்துள்ளது .தமிழில் ஒரு எழுத்து குறைந்தாலும் கூடினாலும் பொருள் மாறி விடும் .அடுத்தப் பதிப்பில் திருத்தி வெளியிடுங்கள் . 

கவிதைக்கு கற்பனை அழகு. பொய் அழகு என்பதை மெய்பிக்கும் கவிதை !

ஒவ்வொரு உடையிலும் 
ஒவ்வொரு மாதிரி இருக்கிறாயே
ஒவ்வொரு உடைக்கென்றும்
ஒவ்வொருத்தியை
உன் வீட்டில் வைத்திருக்கிறாயோ
ஒரு நாள் அதிரடியாய்
உன் வீடு புகுந்து பார்க்க வேண்டும்
நீ ஒருத்தியா இல்லை 
ஒவ்வொருத்தியா என்று !

காதலின் ஊடலை கவித்துவமாக உணர்த்தும் கவிதை மிக நன்று .பாராட்டுக்கள் .

யார் மீதாவது கோபம் வந்தால்
திட்டத் தோன்றும் அலது அடிக்கத்
தோன்றும்
உன் மீது கோபம்  வந்தால்
  மட்டும்
இன்னும் கொஞ்சம் காதலிக்கத் தோன்றுகிறதே
அது எப்படி !

காதல் கவிதையில் முத்தம் இல்லாமல் இருக்குமா ? இதோ முத்தம் உள்ளது .

உன் உதட்டு உண்டியலில்
உனக்காகச்   சேமித்து
வைத்திருக்கும் முத்தங்களை
உடைத்து எடுத்துக் கொள்ள
எப்போது வரப்போகிறாய் !

மிகைபடுத்தப் பட்ட கற்பனைகள் இருந்தாலும் ,காதல் கவிதைகள் என்பதால் ஏன்? எதற்கு ?எப்படி ?என்ற கேள்விகள் கேட்க்காமல் ரசிக்கலாம் .ரசிக்கும் படி உள்ளது பாராட்டுக்கள் .    

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ             கவிஞர் இரா .இரவி

இழுக்க
இழுக்க இன்பமன்று
இழுக்க இழுக்கத் துன்பம்
சிகரெட் !

புண்பட்ட மனதை
ப் புகை விட்டு
புண்ணாக்காதே
மேலும்
சிகரெட் !

விரைவில் சாம்பலாவாய்
உணர்த்தும் சாம்பல்
சிகரெட் !

புகையில் வளையம்
உனக்கான மலர்
வளையம்
சிகரெட் !

நடிகரைப் பார்த்து
ப் புகைக்காதே
உன்னை நீயே புதைக்காதே
சிகரெட் !

உனக்கு மட்டுமல்ல
சுற்றி இருப்பவருக்கும் நோய்
சிகரெட் !

வெள்ளையன் கற்பித்த
வெள்ளை உயிர்க்கொல்லி
சிகரெட் !

எந்தப் பெண்ணும்
என்றும் விரும்பவில்லை 
சிகரெட் !

தூக்கம் வர விழிக்க
தயாரிக்க
வில்லை  
சிகரெட் !

ஆதியில் இல்லை
பாதியில் வந்த தொல்லை
சிகரெட் !

தீங்குத் தரும் கங்கு
தீண்டாது ஒதுங்கு
சிகரெட் !

உடல் நலத்திற்குக் கேடு
உடனே சிந்தித்து விட்டுவிடு
சிகரெட் !

முயன்றால் முடியும்
முடிவெடு வேண்டாம் என்று
சிகரெட் !

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

செவ்வாய், 13 மார்ச், 2012

காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி

தபூ சங்கர் எழுதிய  திமிருக்கும்  அழகென்று பெயர்    என்ற கவிதை நூல்  படித்த பாதிப்பில் எழுதிய கவிதைகள்   !

காத(லி)ல் கவிதைகள் !        கவிஞர் இரா .இரவி


உனைப்பார்க்கும்
நான் மட்டுமல்ல
எல்லா ஆண்கள் மட்டுமல்ல
எல்லாப் பெண்களும்
வியந்துப் போகிறார்கள்
இவ்வளவு அழகா ? என்று 
!

-----------------------------------------------
உனக்கானக் காத்திருப்பு  சுகம்தான்
வழி மேல் விழி வைத்து மட்டுமல்ல
வழி மேல் மனதையும் வைத்துக்  காத்திருக்கிறேன் !
தாமதமாகும் நிமிடங்களில்
உன் மீது கோபம் வந்தாலும்
வந்த கோபம் நீ வந்ததும்
பறந்து விடுகின்றன !

-----------------------------------------------
ஒற்றை ரோஜா தந்தேன்
திரும்பி விட்டாய் !
வாங்க மறுக்கிறாயோ ?
என்று நினைத்தேன்
வைத்து விடுங்க !
என்றாய் !
வைத்து விட்ட பின் ரோஜா
என்னைப்பார்த்து விரல் ஆட்டியது ! 

-----------------------------------------------
விழிகள் சந்தித்து
இதயங்கள் இடம் மாறி
பரிசுப் பொருட்கள்
பரிமாறியது காதலின் தொடக்கம் !
இதழ்கள் வழி
உமிழ்நீர் பரிமாற்றம் காதலின் பரிணாமம் !
மாலை மாற்றத்திற்குப் பின்
உடல்
ள்  பரிமாற்றம் காதலின் உச்சம் !
-----------------------------------------------
ஓரக் கண்ணால்
ஒரே ஒரு பார்வைதான் பாவை பார்த்தால் !
என்னுள் பரவசம்
எண்ணிலடங்கா இன்பம் !
பார்வையின் சக்தி
பார்த்தவர்களுக்குதான் புரியும் !
கூ
ர்ந்து  பார்த்து
நங்
கூரம் இட்டுச் சென்றாள் !
கப்பல் என நின்று விட்டேன்
நான் அதே இடத்தில !  --
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                           கவிஞர் இரா .இரவி

சிரித்தான் பிச்சைக்காரன்
சாலையோர வியாபாரி
கையேந்தும் காவலர் !

உண்மை
நுணலும் தன் வாயால் கெடும்
அரசியல்
தலைவர் !

வருந்தியது
மரம்
பிரிந்த இலைகள் !

பேசும் சிலை
நடக்கும் ஓவியம்
அவள் !

சிறகுகள் இருந்தும்
வானில் பறப்பதில்லை
வாத்து !

வேண்டா  வெறுப்பாக  
அபராத
த்திற்குப் பயந்து
தலைக்கவசம் !

பிடித்தால் மாட்டலாம்
பின்னால் மனைவியிடம்
தலைக்கவசம் !

ஞாயிறு, 11 மார்ச், 2012

புத்தக மதிப்புரை வாசிக்க

புத்தக மதிப்புரை வாசிக்க

http://tamilkurinji.in/puthaga_mathipurai_index.php

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

ஹைக்கூ ஆற்றுப்படை » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

ஹைக்கூ ஆற்றுப்படை » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

மனதில் ஹைக்கூ » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

மனதில் ஹைக்கூ » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

சுட்டும் விழி » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

சுட்டும் விழி » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                  கவிஞர் இரா .இரவி

மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப்பூச்சி !

தீயால் சுட்டபோதும்
வண்ணம் மாறவில்லை
வெண்சங்கு !

தீக்காயம் பட்டபோதும்
நல்கியது இனிய இசை
புல்லாங்குழல் !

பயணத்தில்
வரிசை மாறவில்லை
எறும்பு !


சுமையை சுமையாகக்  கருதவில்லை
நண்டு !

பசித்தபோதும்
உண்ணவில்லை புல்
புலி ! 
ஏமாற்றிக் கரந்தபோதும்
பால் தந்தது
பசு !

உழுது உதவியது
உழவனுக்கு
மண் புழு !

 
அடித்தப்போதும் 
குரைத்து உதவியது
நாய் !


வெட்டியப்போதும்
கறியானது
ஆடு !

வலையில் சிக்கியும்
உணவானது
மீன் !


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

சனி, 10 மார்ச், 2012

ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேசப் பிடி இறுகுகிறது

ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேசப் பிடி இறுகுகிறது

காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை

காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை !             கவிஞர் இரா .இரவி மதுரை

உலகின் முதல் மனிதன் தமிழன்
உலகின் முதல் மொழி தமிழ்

உலகின் முதல்  ஊர் மதுரை
உலகப் புகழ்  மகாத்மா ஆக்கிய மதுரை !

மதுரைக்கு வந்த
காந்தியடிகளின் மனம்
ஏழைகளின் இன்னல் கண்டு இரங்கியது

ஆடைக்கு வழியின்றி வாடும் ஏழைகள் இருக்க
ஆடம்பர ஆடைகள் எனக்கு இனி எதற்கு ?

விலை உயர்ந்த ஆடைகளைக் களைந்து
கதராலான அறையாடைக்கு மாறினார்

காந்தியடிகளுக்கு மனமாற்றத்தை விதைத்தது மதுரை
எல்லோருக்கும்   எல்லாமும் கிடைக்கும் வரை

என்னுடைய  ஆடை இதுதான் என்றார்
எவ்வளவோ பலர் சொல்லியும் ஏற்க  மறுத்தார்

எடுத்த முடிவில் இறுதிவரை தீர்க்கமாக இருந்தார்
எங்கு சென்றபோதும் அரை ஆடையிலேயே சென்றார்
என்னைப் பற்றி எவர் என்ன ? நினைத்தாலும்
எனக்கு கவலை என்றும் இல்லை என்றார்


பொதுஉடைமை சிந்தனையை ஆடையால் விதைத்து
பூமிக்கு புரிய வைத்த புனிதர் காந்தியடிகள்

ஏழைகளின் துன்பம் கண்டு 
காந்தியடிகளின்
இரக்கத்தின் வெளிப்பாடே அரையாடை

மன்னரைப் பார்க்கச் சென்றபோதும்
கூ
மதுரை அரையாடையிலேயே சென்றார்

கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார்
கண்டவர்  பேச்சுக்கு செவி மடுக்காமல் இருந்தார்

அரையாடை அணிந்த பக்கிரி என்று சிலர்
அறியாமல் பேசியதையும் பொருட்படுத்தாதிருந்தார்

குழந்தை ஒன்று தாத்தா சட்டை தரட்டுமா ? என்றது
கோடிச் சட்டைகள் தர முடியுமா ? உன்னால் என்றார்

இந்தியாவின் ஏழ்மையை மறந்துவிட்ட சுயநல
அரசியல்வாதிகளுக்கு ஏழ்மையை உணர்த்திட்டார்

ஏழ்மையின் குறியீடாக
த் திகழ்ந்தார் காந்தியடிகள்
வறுமையின் ப்டிமமாகத்
திகழ்ந்தார் காந்தியடிகள்

கதராடை  அரையாடை ஆடை மட்டுமல்ல
சமத்துவ சமதர்ம சமுதாயத்தின் விதை அவை
உலகளாவிய அஞ்சல் தலைகளிலும் சிலைகளிலும்
உன்னத அரையாடைக் கோலத்திலேயே உள்ளார் 


உலகம் உள்ளவரை ஒப்பற்ற மதுரை இருக்கும்
மதுரை
உள்ளவரை மகாத்மா புகழ் நிலைக்கும் 
  


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது