திமிருக்கு அழகென்று பெயர் நூல் ஆசிரியர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

திமிருக்கு அழகென்று பெயர்

நூல் ஆசிரியர் தபூ சங்கர்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விஜயா பதிப்பகம் கோவை விலை 30 ரூபாய்

காதல் கவிதைகளால் பிரபலமான
தபூ சங்கரின் நான்காவது நூல் இது .நூலின் அட்டைப்படம் காதலர்களுக்கான காதல் கவிதை நூல் என்பதைப் பறைச்சாற்றும் விதமாக உள்ளது . திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் நா .முத்துக்குமார் அவர்களின் அணிந்துரை கவித்துவமாக அழகுரையாக உள்ளது .

முதல் கவிதையிலேயே காதல் தனி முத்திரை பதித்துள்ளார் .இந்தக் கவிதையை வாசிக்கும் வாசகர்கள் அனைவரும் அவரவர் காதலியை உடன் நினைத்துப் பார்ப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூறலாம் .

தேவதை வாழ்த்து !

உன்னை என்  
தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை  
தேவதை ஆக்கிவிடும் !

கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவன் நான் .நூல் ஆசிரியர் தபூ சங்கர் காதலியையே கடவுளாகப் பார்ப்பது மிகையாக இருந்தாலும், காதலுக்கு கண் என்பார்களே .கவிதையை ரசிக்கலாம் .

தேவதை வாழ்த்து !

தினமும் நான் உன்னை
வழிபட்டுக் கொண்டிருந்தாலும்
என்ன வேண்டும் என்று
ஒருபோதும் நீ என்னைக் கேட்டு விடாதே
உன்னையே கேட்டுத் தொலைத்துவிடுவேன் !


தபூ சங்கரின் கவிதை நூலைப் படித்து முடித்து விட்டால் ,படித்த வாசகர்களும் காதல் கவிதை எழுதத் தொடங்கி விடுவார்கள் என்று அறுதி இட்டுக்  கூறலாம் .இந்த நூலைப் படித்து விட்டு நீண்ட நாட்கள் கழித்து, நான் காதல் கவிதை எழுதியது உண்மை .

சந்திர கிரகண
த்திற்கு   
விஞ்
ஞாம்  ஏதோ விளக்கம் சொல்கிறது
ஆனால்
நான்
  சொல்வதென்ன வென்றால்
உன்னை எது மறைத்தாலும் 
எனக்குச்
சந்திர கிரகணம்தான் !

ஒவ்வருவருக்கும் அவரவர் காதலி உலக அழகியாகத்தான் தெரிவாள் .பிறரது பார்வைக்கு அவள் அழகற்றவலாகக் கூடத் தெரியலாம் .

உலக அழகிப் ப
ட்டமெல்லாம்
உனக்
கெதற்கு 
நீ உலகையே அழகாக்குபவள் !


நூலின் தலைப்பை உணர்த்திடும் கவிதை இதோ !

அழகான பெண்களுக்கெல்லாம்
திமிர் இருக்குமென்றாலும்
உனக்கிருக்கும் அழகே
உன் திமிர்தான் !


காதலர்களின் உள் உணர்வைப் பதிவு செய்யும் கவிதை ஒன்று !  நூல் ஆசிரியர் அனுபவப் பட்டு எழுதிய கவிதையாக இருக்க வேண்டும் .

நீ எனக்கு கிடைத்து விடுவாய்
என்கிற நம்பிக்கையை விட
நீ எனக்கும் கிடைக்காமல் போய் விடுவாயோ
என்கிற பயத்தில்தான்
நான உன்னை அதிகம் காதலிக்கிறேன் !  
  
இந்த நூலின் 31 பக்கத்தில் எழுத்துப் பிழையுடன் கவிதை வந்துள்ளது .காதலுக்கு மிகப் பெரிய சொத்தாக் காதலர்களால் கருதப்படும் இதயம் என்ற சொல் இயம் இன்று இரண்டு இடத்தில ஒரே பக்கத்தில் வந்துள்ளது .தமிழில் ஒரு எழுத்து குறைந்தாலும் கூடினாலும் பொருள் மாறி விடும் .அடுத்தப் பதிப்பில் திருத்தி வெளியிடுங்கள் . 

கவிதைக்கு கற்பனை அழகு. பொய் அழகு என்பதை மெய்பிக்கும் கவிதை !

ஒவ்வொரு உடையிலும் 
ஒவ்வொரு மாதிரி இருக்கிறாயே
ஒவ்வொரு உடைக்கென்றும்
ஒவ்வொருத்தியை
உன் வீட்டில் வைத்திருக்கிறாயோ
ஒரு நாள் அதிரடியாய்
உன் வீடு புகுந்து பார்க்க வேண்டும்
நீ ஒருத்தியா இல்லை 
ஒவ்வொருத்தியா என்று !

காதலின் ஊடலை கவித்துவமாக உணர்த்தும் கவிதை மிக நன்று .பாராட்டுக்கள் .

யார் மீதாவது கோபம் வந்தால்
திட்டத் தோன்றும் அலது அடிக்கத்
தோன்றும்
உன் மீது கோபம்  வந்தால்
  மட்டும்
இன்னும் கொஞ்சம் காதலிக்கத் தோன்றுகிறதே
அது எப்படி !

காதல் கவிதையில் முத்தம் இல்லாமல் இருக்குமா ? இதோ முத்தம் உள்ளது .

உன் உதட்டு உண்டியலில்
உனக்காகச்   சேமித்து
வைத்திருக்கும் முத்தங்களை
உடைத்து எடுத்துக் கொள்ள
எப்போது வரப்போகிறாய் !

மிகைபடுத்தப் பட்ட கற்பனைகள் இருந்தாலும் ,காதல் கவிதைகள் என்பதால் ஏன்? எதற்கு ?எப்படி ?என்ற கேள்விகள் கேட்க்காமல் ரசிக்கலாம் .ரசிக்கும் படி உள்ளது பாராட்டுக்கள் .    

கருத்துகள்