வியாழன், 30 அக்டோபர், 2014

மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் ! கவிஞர் இரா .இரவி !

மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் ! 

கவிஞர் இரா .இரவி !

புத்தரை வணங்கும் நாடு இன்று 
புத்திக் கேட்டு போனது ஏனோ ? 

அகிம்சை புத்தரை வணங்குவது நடிப்பா ?
இம்சை தரும்   மரண தண்டனை தரலாமா ?

அப்பாவி மீனவர்கள் மீது பொய் வழக்கு !
அவர்கள் உயிருக்கு சுருக்குக் கயிறு முறையா ?

நீதி என்ற பெயரில் தமிழர்களுக்கு  அநீதி !
நீதிபதியின் பெயரில் ராஜபட்சேயின் அநீதி !

ஐ. நா.மன்றம் தண்டிக்கும் தருணத்தில் 
என்ன திசை திருப்பும் செயலா ?
.
தமிழன் உயிர் மட்டும் இவ்வளவு மலிவா ?
தட்டிக் கேட்க நாதி இல்லை என்ற நினைப்பா ?

சுண்டைக்காய் நாடு நம்மை அடிக்கடி 
சீண்டிப்பார்கிறது பாடம் கற்பிப்போம் !

ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த போது 
இனத்தையே திட்டமிட்டு அழித்த போது 

அடுத்த வீட்டில் தானே தீ என்று நாம் 
அலட்சியமாக இருந்தோம் !

அந்தத் தீ இன்று நம் வீட்லும் பற்றியது !
அப்பாவி தமிழக மீனவர்களை கொல்கிறான் !

சிங்கள இன வெறி பிடித்த பிட்சுக்கு !
சீராட்டி அஞ்சல் தலை வெளியிட்டது  தவறு !

மத்தியில் ஆட்சி மாறிய போதும் 
மாற்றம் இல்லை காட்சியில் !

தமிழர்களை கொன்று குவிக்கும் 
தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளும் 

தரம் கேட்ட இலங்கை பாம்புக்கு 
தாரளமாக பால் வார்ப்பதை நிறுத்துங்கள் !

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் 
இனியாவது மாற்றம் காண்க !

இந்தியனான  தமிழக மீனவர்களை தாக்கினால் 
இலங்கையை திருப்பித் தாக்குக !

கோடிகளை அள்ளிக் கொடுப்பதையும் 
கொடிய ஆயுதப்பயிற்சி தருவதையும் 

உடனடியாக நிறுத்துங்கள் இல்லையேல் 
உங்களால் தமிழ் இன உணர்வை நிறுத்த முடியாது !

நாய் வாலை என்றும் நிமிர்த்த  முடியாது  !
இராஜபட்சேயை என்றும் திருத்த முடியாது  !


இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திடுக !
எம தமிழர் உயிர்களை   உடன் காத்திடுக !

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதியுங்கள் !
இலங்கையோடு உறவை துண்டித்துக் கொள்ளுங்கள் !

வழங்கிய கோடிகள் அனைத்தையும் 
வட்டியோடு திரும்பப் பெறுக  !

எரியும் கொள்ளியை அகற்றினால் 
கொதிப்பது உடன் அடங்கும் !

இலங்கைக்கு உதவுவது நிறுத்துக 
ஏற்கனவே உதவியதை பெறுக  !

இலங்கை நட்பு நாடு என்போரே சிந்திக்க !
இந்தியருக்கு தூக்கு வழங்குவது நட்பா !

இராமேசுவரம் தமிழர்களுக்கு வேண்டுகோள் !
தண்டவாளம் தகர்க்க வேண்டாம் !

பேருந்தை எரிக்க வேண்டாம் !
போதுசொத்தை சேதப்படுத்த வேண்டாம் !

நட்டம் நமக்குத்தான் அவனுக்கு அல்ல !
நாம் ஒன்று பட்டு குரல் தருவோம் !

அப்பாவி  மீனவர் ஐவரை மீட்போம் !  
அல்லல்படும் குடும்பத்தின் கண்ணீர் துடைப்போம் !
 
மனிதாபிமானமற்ற இலங்கைக்கு எச்சரிக்கை  !
மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் !

பாவையின் பார்வை போதும் ! கவிஞர் இரா .இரவி

பாவையின் பார்வை போதும் !  கவிஞர் இரா .இரவி

பாவையின் பார்வை போதும்
பரவசம் என் வசம் !
உற்று நோக்கினால்
உத்வேகம் பிறக்கும் !
இமைக்காமல்   பார்த்தால்
புதுத்தெம்பு  உண்டாகும் !
கம்பியில்லா மின்சாரம்
கண்கள் வழி பாயும் !

அவளை
பார்த்துக் கொண்டே இருந்தால்
இமைக்க இமைகள்
மறக்கின்றன !
நேரம் செல்வதையும்
மறந்து விடுகின்றேன் !

அவளின் இதழ்கள்
உச்சரிப்பை விட
கண்களின்  மவ்வுன   உச்சரிப்பு
மெய் சிலிர்ப்பு !
.
காந்தம் கூட
அருகில் வந்தால்தான்
இரும்பை  இழுக்கும் !
அவள் கண்களோ
தூரத்திலிருந்தே
என்னை  இழுக்கும் !

அவள் இதழ்கள் அசைத்து
எதுவும் பேசவில்லை
அவள் விழிகளால்
எல்லாம் பேசினாள் !

காதலனுக்கு மட்டும் புரியும்
விழி மொழி !
மற்றவர்களுக்கு அம்மொழி
புரிவது இல்லை !புதன், 29 அக்டோபர், 2014

ஆஷ்திரேலிய எழுத்தாளர் முனைவர் மாலினி ஆனந்த கிருஷ்ணனுக்கு பாராட்டு .

இனிய நண்பர் சோலை தமிழினியன் மின் அஞ்சலில் அனுப்பிய சென்னை நிகழ்வு . ஆஷ்திரேலிய எழுத்தாளர் முனைவர் மாலினி ஆனந்த கிருஷ்ணனுக்கு பாராட்டு .

நன்றி ! மின்னல் தமிழ்ப்பணி மாத இதழ் !

நன்றி !  மின்னல் தமிழ்ப்பணி மாத இதழ் !

நன்றி மதுரை மணி நாளிதழ்

நன்றி மதுரை மணி நாளிதழ்

மதுரையில் கவியரங்கம் அழைப்பிதழ்

மதுரையில் கவியரங்கம் அழைப்பிதழ்

இனிய நண்பர் கவிஞர் உமையவன் பங்குபெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி

இனிய நண்பர் கவிஞர் உமையவன் பங்குபெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி  30.10.2014 நாளை காலை 8 மணிக்கு முதல் 8.30 மணி வரை விடியலே வா என்ற தலைப்பில் நேர்முகம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பகின்றது பார்த்து மகிழுங்கள் .  

மது ஒழிப்பு மக்கள் இயக்கம் மதுரை வருகை .

மது ஒழிப்பு மக்கள் இயக்கம் மதுரை வருகை .

இனிய நண்பர் , கவிஞர் ,புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதுநிலைத் தமிழாசிரியர் ஞா.சந்திரன் பட்டம் பெற்றார்

இனிய நண்பர் , கவிஞர் ,புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி  
முதுநிலைத் தமிழாசிரியர்  ஞா.சந்திரன் பட்டம் பெற்றார் 


இனிய நண்பர் , கவிஞர் ,புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி  
முதுநிலைத் தமிழாசிரியர்  ஞா.சந்திரன் அவர்களுக்கு தமிழக ஆளுநர் அவர்கள் முனைவர் பட்டம்  வழங்கினார் .பட்டமளிப்பு விழா மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடந்தது .

புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்   பணித் திட்ட முகாம்

புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்   பணித் திட்ட முகாம் மதுரை அருகே உள்ள கோவில் பாப்பாக்குடி கிராமத்தில் நடந்தது .உதவி திட்ட அலுவலர் ஆசிரியர் செ. ஞானகிருபா வரவேற்றார்    கவிஞர்கள் இரா .இரவி, திருநாவுக்கரசு சிறப்புரையாற்றினார்கள் .திட்ட அலுவலர் முது நிலைத் தமிழாசிரியர்  ஞா.சந்திரன் முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தார் . 


இலக்கிய இணையர் பேராசிரியர் இரா .மோகன் - பேராசிரியர் நிர்மலா மோகன் இல .பழனியப்பன் நூல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ் !

இலக்கிய இணையர் பேராசிரியர் இரா .மோகன் - பேராசிரியர் நிர்மலா மோகன்
இல .பழனியப்பன் நூல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ் !செவ்வாய், 28 அக்டோபர், 2014

எழுத்து என்ற பெயரை மறு பரிசீலனை செய்ய வேண்டுகோள் .

எழுத்து என்ற பெயரை  மறு பரிசீலனை  செய்ய வேண்டுகோள் .

எனக்கு அஞ்சலில் வந்த அழைப்பிதழ் வந்தது  .
தமிழ் அறிஞர்கள் கவிஞர்கள் சேர்ந்து இலக்கிய அமைப்பு தொடங்குவது மகிழ்வான செய்தி .எழுத்து . காம் என்ற பெயரில் புகழ் பெற்ற இணையம் உள்ளது .அதில் நான் உள்பட பல படைப்பாளிகள் எழுதி வருகிறோம் .அமைபிற்கு வேறு பெயர் வைத்து இருக்கலாம். இந்த அமைபிற்கு ஒரு இணையம் தொடங்குவது என்றாலும் எழுத்து என்ற பெயரில் இணையம் தொடங்க முடியாது .திட்டமிட்டபடி விழா நடக்கட்டும் .அதில் வேறு பெயர் சிந்திக்கலாம் .எழுத்து என்ற பெயரை  மறு பரிசீலனை  செய்ய வேண்டுகோள்.

எழுத்து இணையம் காண்க .

http://eluthu.com/

எழுத்து இணையத்தில் எனது பதிவுகள் காண்க .

படித்ததில் பிடித்தது ! தமிழ்த் தேனீ ,முனைவர் ,பேராசிரியர் இரா . மோகன் அவர்கள் எழுதிய வரவு எட்டணா ; செலவு பத்தணா !

படித்ததில் பிடித்தது !
தமிழ்த் தேனீ ,முனைவர் ,பேராசிரியர் இரா . மோகன் அவர்கள் எழுதிய வரவு  எட்டணா ; செலவு பத்தணா ! கட்டுரை படித்து மகிழுங்கள் . நன்றி தினமலர் நாளிதழ் .

கட்டுரை குறித்த கருத்தை பகிர்ந்து கொள்ள மின் அஞ்சல் முகவரிகள் . 

mdureporting@dinamalar.in  eramohanmku@gmail.com

ப்ளாஸ்டிக் இரவுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மு. குணசேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


ப்ளாஸ்டிக் இரவுகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் மு. குணசேகரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராயர் நகர், சென்னை—600 017.  பேச : 044 52070663

*****
       நூலாசிரியர் கவிஞர் மு. குணசேகரன் அவர்கள் நூலின் தலைப்பை ப்ளாஸ்டிக் இரவுகள் என்று சூட்டியதற்கு எது காரணமோ?  என வியப்பை நன்கு பதிவு செய்துள்ளார் இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள், இயக்குநர் தரணி அவர்களும் வாழ்த்துரை வழங்கி உள்ளார்.  காதல் மணம் கமழ கவிதைகள் வடித்துள்ளார்.  வானில் உள்ள நிலவை ரசிக்க சலிப்பு வருவதில்லை.  அதுபோலவே யாருடைய காதல் கவிதையாக இருந்தாலும், படிப்பதற்கு சலிப்பு வருவதில்லை.  காரணம், காதல் கவிதைகள் படிக்கும் போது, படிக்கும் வாசகர்களின் காதல் நினைவுகளையும் மலரும் நினைவுகளாக மலர்வித்து மகிழ்விக்கும்.  அந்த வகையிலான கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன.
       முதல் கவிதையே ஒரு ஹைக்கூவோடு தொடங்கி உள்ளார்.
 வாழ்ந்ததற்கு 
 அடையாளம் 
 காதல்.
       உண்மைதான், காதல் வயப்பட்டவர்கள் எல்லாம் பாக்கியவான்கள் எனலாம். அது ஒரு சுகமான அனுபவம்.  சொற்களால் உணர்த்தி விட முடியாத உன்னத உணர்வு. 

 எதற்கென்று தெரியவில்லை !

 உன்னை பிடித்திருக்கிறது
 காதல் செய்திட்டு 
 இயல்பாய் இருப்பது 
 இயலாத காரியம்
 
நான் நெய்யும் 
 ஒவ்வொரு கவிதையிலும் 
 நூலாக இருப்பது நீயே
 காதல் கதைக்கு 
 விதை போட்டாய் 
 கவிதை
 காதலிக்க வேண்டாம் 
 மனிதனாக விரும்பாதவர்கள்.

       காதலுக்காக கொடி பிடித்து கட்சி தொடங்கி மனிதனாக வேண்டுமா? உடன் காதலியுங்கள் என்று கவிதையை வடித்துள்ளார்.

       காதலுக்கு மெய் அழகு, காதல் கவிதைக்கு பொய் அழகு, பொய் என்று தெரிந்தும் காதலி ரசிப்பது உண்மை.  அதனால் தான் பலர் காதல் கவிதைகளில் மையோடு பொய்யும் கலந்து எழுதி வருகின்றனர்.

 நீ 
 மழையில் நனைந்தால் 
 எறும்பு கூட
 காளானுடன் வருகிறது.
       எறும்புகள் ஒன்று கூடி காளானை இழுத்து வரலாம்.  அதனைக் கண்ட கவிஞர் அவை காதலிக்குக் குடைப்பிடிக்கக் கொண்டு வருவதாகக் காட்சிப்படுத்துகின்றார். 

கல்லூரிகளில் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் வகுப்பறைகள் உண்டு.  இதில் காதலி வரவில்லை என்றால் காதலன் எழுந்து சென்று விடுவதுண்டு. தமிழ்த் திரைப்படங்களிலும் காட்டி இருக்கிறார்கள். இவர் அக்காட்சியை கவிதையில் உணர்த்துகின்றார். பாருங்கள்.

 என் தேவதை 
 இல்லாத வகுப்பில் 
 நமக்கென்ன
 வேலையென 
 சென்று விட்டேன் 
 மறு நாள் தான்
 தெரிந்தது 
 நீ காலம் தாழ்த்தி வந்திருக்கிறாய் !

       அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்பதையும் உணர்த்தி விடுகின்றது.

       இமைக்காமல் பார்க்கும் போட்டி வைத்தால் வெல்வது யார்? என்றால் காதலி எனலாம்.  கண்களால் விழுங்குவது கேள்விப்பட்டிருக்கிறோம். இவர் கண்களால் உண்பது பற்றி கவிதை வடித்துள்ளார்.

 எத்தனை முறை தின்றாலும் 
 என் இதயத்திற்கு மட்டும்
 திகட்டுவதில்லை 
 உன் விழிகள்.
 நான் 
 உறங்க படுத்ததும் 
 எங்கிருந்தோ வந்து
 என் நெஞ்சத்தில் சாயும் 
 உன் நினைவுகளுக்கும் சேர்த்தே
 தாலாட்டு பாடுகிறது 
 காதல்
 பார்வைகளை 
 உதிர்த்துக் கொண்டே போ
 நான் சேகரித்துத் தருகிறேன்.

       காதல் கவிதைகளில் முத்தம் பற்றிய கவிதை இல்லாமலா இருக்கும்.  இருக்கின்றது.  முத்தத்தின் தித்திப்பிற்குக் காரணம் முத்தமிழ் என்கிறார்.

 ஒரு சந்தேகம் 
 இதழ்களை தமிழிலா 
 ஊற வைப்பாய்
 இப்படி சுவைக்கிறது 
 நீயும் 
 என் போல் தானே
 அவஸ்தைப்படுவாய் 
 பிறகேன் 
 முத்தம் தர மறுக்கிறாய்
 என்னிடம் சண்டை போடு 
 அப்போது தானே
 சமாதானஞ் செய்ய 
 முத்தமிட முடியும்.
       நீ! , நீ! என்று முடிக்கும் நீள்கவிதை மிக நன்று.  பதச்சோறாக சில வரிகள் மட்டும்.

 அழுதால் அணைக்கும் ஆறுதல் நீ 
 நடையிட ரசிக்கும் ரசிகை நீ
 விடைபெற குறையும் புன்னகை நீ 
 நேரம் காலம் இல்லாமல்
 இமைத்ததும் 
 என் முன் வருபவள் நீ 
 இராசி, கோள்கள்
 ஏதுமின்றி பார்த்ததும்
 ஆசை வைத்தவள் நீ
 வேசம் முகத்தில் போடாமல் 
 உண்மை உருவில் உறைபவல் நீ!

       காதல் வயப்பட்டவுடன் காதலன், காதலி இருவரும் உணவருந்தும் போது காதலி, காதலனுக்கு ஊட்டி விடும் பழக்கம் சிலருக்கு உண்டு.  அதனை நினைவூட்டும் கவிதை மிக நன்று.

 என் விரல்களை விட 
 உன் விரல்களையே
 அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன் 
 சாப்பிட உதவியாய்.
       உண்மையில் காதலன் குழந்தையாக இருந்த போது அவரது அம்மா தான் ஊட்டி விட்டு இருப்பார்கள். காதலி சில வேளை மட்டும் ஊட்டி இருக்கலாம்.  காதலன் அம்மாவை மறந்துவிட்டு காதலியைப் பாராட்டுவது இயல்பு தான்.  நாட்டில் நடக்கும் ஒன்று தான்.

       சண்டையிட்டு ஊடலில் கோபித்துக் கொண்டு சென்ற காதலி உடன் வந்து விட்டாள் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லது கண் மூடியதும் கனவில் வந்து விடுகிறாள் என்றும் பொருள் கொள்ளலாம்.  இதில் எது உண்மை என்பது எழுதிய கவிஞருக்கே வெளிச்சம்.

 நாம் சந்திக்க 
 வாய்ப்பே இல்லையென 
 சென்ற நீ
 ஏன் இமைத்ததும் 
 எதிர்வந்து நிற்கிறாய்.
       காதல் கவிதைகளில் வாசகர்கள் கேள்வி கேட்க கூடாது.  இது நடக்குமா? இது நடந்ததா? இப்படி எழுதலாமா? என்று கவிதையை அப்படியே ரசிப்பது தான் ரசிகரின் வேலை.  அப்படியான கவிதை ஒன்று, இப்படி எழுதினால் தான் காதலி ரசிப்பாள்.
 நீ 
 வந்து போன பாதை 
 தனக்குத்தான் சொந்தமென
 உச்சநீதிமன்றத்தில் 
 புற்களும் பூமியும்.
       உச்சநீதிமன்றத்தில் மனிதர்கள் தொடுக்கும் சில வழக்குகளே ஏற்காமல் தள்ளுபடி செய்து விடுகின்றனர். புற்களும் பூமியும் வழக்குத் தொடுத்தால் உச்சநீதிமன்றத்தில் ஏற்பார்களா?  என்ற கேள்வி எழுப்பாமல் கவிதையை ரசியுங்கள்.

       காதலிக்கும் காலத்தில், காதலிக்கு வலி, வேதனை, துன்பம் வரக்கூடாது என்று காதலன் நினைப்பது வாடிக்கை. 

       அன்பே !
 பிரசவ வலி உனக்கு வேண்டாம்
 குழந்தை வேண்டுமானால் 
 தத்தெடுத்துக் கொள்வோம்!
       காதலியின் மீதுள்ள அக்கறையில் தத்தெடுக்கும் பொதுநலமும் உள்ளது.  பாராட்டுக்கள்.  உண்மையில் பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் மறுஜென்மம் என்பார்கள்.  ஒவ்வொரு பெண்ணும் தன்னுயிரை துச்சமென நினைத்துத்தான் இந்த மண்ணில் குழந்தையை பிரசவிக்கிறார்கள்.
       காதல் ரசம் சொட்டச் சொட்ட புதுக்கவிதை வடித்த நூலாசிரியர் கவிஞர் மு. குணசேகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

தத்துபித்துவம் ! நூல் ஆசிரியர் : ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


தத்துபித்துவம் !
நூல் ஆசிரியர் : ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

விழிகள் பதிப்பகம், 8/எம்/39, 7ஆம் குறுக்குத் தெரு, !திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை –
 600 041.  94426 51520  விலை : ரூ. 60
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
*****
       ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் அண்ணன் திரு. தங்கவேல் அவர்கள் சகலகலா வல்லவர்.குடும்பத்திற்காக திருமணம் புரியாமல் வாழ்ந்தவர்.  அவரது மரணம் தந்த வலியின் காரணமாக வடித்த நூல் இது.  தத்துபித்துவம் நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது.  இதன் விளக்கம், அவரது மொழியிலேயே காண்போம்.

       ‘’இந்நூலில் தத்துவம் போலச் சில உண்மைகள் உளவாகலாம்.  அவ்வாறே பித்துற்ற தன்மையில் பிறந்த காரணத்தால் சில பித்துவங்கள் போல உளவாகலாம்.  எனவே தத்துபித்துவம் எனப் பெயரிட்டுள்ளேன்”.

       ஒவ்வொரு கவிதையும் நான்கு வரிகளில் வெண்பா போல இருந்தாலும் வெண்பா இல்லை. ஹைக்கூவும் இல்லை.  வாழ்க்கை தத்துவங்கள் சொல்லும் புதுப்பா இது.  அரிய, பெரிய கருத்துக்களை நான்கே வரிகளில் உணர்த்திடும் உன்னத நூல்.  விழிகள் பதிப்பகத்தின் பெருமைமிகு வெளியீடாக வந்துள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு, உள்அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன.  பாராட்டுக்கள்.

       புலம் பெயர்ந்த, வலி மிகுந்த வாழ்க்கையிலும், தமிழை நேசிக்கும், வாசிக்கும், சுவாசிக்கும் புலம் பெயர்ந்த தமிழன் கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள் அணிந்துரையில் ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை நேசிப்பை, 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அன்பை குறிப்பிட்டுள்ளார்.

       நம்மில் பலர் கடந்த கால கசப்புகளை, கவலைகளை எண்ணி எண்ணி நிகழ்காலத்தை வீணடித்து வருகிறோம்.  அவர்களுக்கான கவிதை ஒன்று மிக நன்று. 

       புதன்கிழமை மனத்திற்குள் 
 புதன் மட்டும் நிறைந்திருக்கும்
       செவ்வாயின் நினைவு வந்து 
 சிக்கல்கள் நிரப்பாது.
       இயந்திரமயமான உலகில் சில மனிதர்கள் இயந்திரமாகவே மாறிவிட்டனர்.  அன்பு செலுத்த நேரமின்றி, இயற்கையை ரசித்திட நேரமின்றி, ஓடி ஓடி பணம் சேர்த்து, மனச்சோர்வு அடைந்து, மருத்துவரை நாடி வருகின்றனர்.  அவர்களுக்கான கவிதை இதோ!

       பூ நுகர மறந்தவனே 
 புலம்புவதால் என்ன பயன்?
       ஏன் வந்த பகல் தொலைத்தாய்? 
 இருள் அழகை தொடர்கின்றாய்?

       சிலர் என்னிடம் அதில் குறை, இதில் குறை என்று குறைபட்டுக் கொண்டே தாழ்வு மனப்பான்மையுடன், வாழ்க்கையை ரசித்து வாழாமல் புலம்பி வாழ்கின்றனர்.  அவர்களுக்கான அறிவுரை கூறும் கவிதை.

       குறையெல்லாம் குறையல்ல 
 குறைவில் தான் வாழ்வியக்கம்
       நிறை வளரும் பாத்திகளைக் 
 குறைவென்றா நினைக்கின்றாய்?

       தன்னை விட வலியவர்களிடம் யாரும் வீரம் காட்டுவதில்லை.  எளியவர்களிடமே வீரம் காட்டி வீர வசனம் பேசுவார்கள்.  மனிதாபிமானம் வேண்டும் என்று அறிவுறுத்தும் கவிதை. 
       வலியுடன் வாழ்வென்றால் 
 வாழ்ந்திடுவாய் வாழ்த்திடுவோம்
       மெலிந்தவர்கள் தலை மேலே 
 வெற்றித் தேர் ஓட்டாதே!

       சிலர், நான் அவர் போல ஆக வேண்டும், இவர் போல ஆக வேண்டும் என்றே முனைந்து, தனது சுயம் இழந்து, வாடுவதைக் காண்கின்றோம்.  அவர்களுக்கான கவிதை.

       எவரைப் போல் வாழ்வதென 
 ஏனென்ணிக் கலங்குகிறாய்?
       அவரவரும் அவரவராய் 
 வாழ்ந்தாலே அதுபோதும்.

       இயல்பாக இரு, நீ நீயாக இரு என்று வாழ்வியல் கருத்துக்களை, சித்தர்கள் போல சிந்தித்து கவிதை வடித்துள்ளார் ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.  எண்பது வயதைத் தொட்டு விட்ட போதும் ஓய்வின்றி படைத்து வருகிறார்.  தமிழ் கூறும் நல்உலகிற்கு இலக்கியத்தை ஈந்து வருகிறார் ஓய்வறியா படைப்பாளி.

       கேள்விகள் கேட்டு, விடை சிந்திக்க வைத்து, நுட்பம் உணர்த்துவது ஒரு வகை.  அவ்வகையிலான கவிதைகள் நூலில் சில உள்ளன.  அவற்றில் பதச்சோறாக ஒன்று.

       நதியுறக்கம் மந்தமென்றால் 
 நாம் சாட்டை எடுப்போமா?
       விதையுறக்கம் கலைப்பதற்கு 
 வெந்நீரை விடுவோமா?
       ஒரு குழந்தை சரியாக படிக்கவில்லை என்றால், அக்குழந்தையிடம் சில பெற்றோர்கள் கடுமையாக நடந்து கொண்டு தண்டிப்பதைக் காண்கிறோம்.  அவர்களுக்கான வரி தான் இது, ‘விதையுறக்கம் கலைப்பதற்கு வெந்நீரை விடுவோமா? சிலர் கடுஞ்சொல் என்ற வெந்நீரை குழந்தை என்ற விதையின் மீது ஊற்றி விடுகின்றனர்.  பாராட்டு என்ற நந்நீரே விதையினை வளர்க்கும் என்பதை கடிந்திடும் பெற்றோர்கள் உணர் வேண்டும்.

       சிறு துளி பெரு வெள்ளம் என்பதை அறிந்து இருக்கிறோம்.  ஆனால் இவர் கடைசித் துளியே குடம்பால் ஆகும் என்று வித்தியாசமாக உணர்த்துகின்றார், பாருங்கள்.  குடத்துப்பாலையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார்.

       ஒரு குடம் பால் நிரம்ப இன்னும் 
/ ஒரு துளி தான் தேவையெனில்
       ஒரு துளியாய்க் காத்திருப்பாய் 
/ ஒரு குடம் பால் நீ ஆவாய்!

       வாழ்க்கையை செம்மையாக வாழ் ;  வாழ்வில் பிழை நேர்ந்தால் திருத்திக் கொள் ;  எல்லாவற்றிற்கும் நீயே பொறுப்பு ; தீதும் நன்றும் பிறர் தர வாரா ;  உனக்கு நீயே நீதிபதி ; வாழ்வாங்கு வாழ நீ பழகு இப்படி பல கருத்துக்களை வலியுறுத்தும் வண்ணம் குறியீடாக சொற்கள் உள்ளன.

       இருப்பதுவும் இயங்குவதும் 
 மட்டுமில்லை! இவையிரண்டில்
       உருவாகும் பிழையும் நீ 
 உருவாக்கும் திருத்தமும் நீ

       தன்னலமின்றி பொது நலனுக்காக வாழ்ந்தவர்கள், மரணத்திற்குப் பின்னும் மக்கள் மனங்களில், எண்ணங்களில் வாழ்கின்றனர்.  தன்னலம் மிக்கவர்களோ வாழும் பொழுதே இறந்து விடுகின்றனர்.  யாருக்கும் உதவாத பணக்காரர்களை செத்த பிணம் என்றே வள்ளுவர் சொல்கின்றார்.  எனவே நடமாடும் நடைப் பிணங்கள் நம் நாட்டில் ஏராளம் உண்டு. வெளிநாட்டு வங்கியில் பணம் பதுக்குபவர்களும் செத்த பிணம்தான் .   மறைந்தும் மறையாத மாமனிதர்களின் தியாகம் உணர்த்தும் கவிதை மிக நன்று.  நான்கே வரிகள் தான், நமக்கு 40 சிந்தனைகளை விதைக்கின்றன.

       உடலுருகி உளமுருகி 
 ஒளி தருமே மெழுகு திரி
       கடமையில் தேய்பவரே 
 காலமெலாம் வளர்கின்றார்.

       ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தர்.  அந்த புத்தரை கடவுளாக வணங்குபவரும் ஆசை பிடித்து அலைந்ததன் காரணமாக பிறரை அழித்து மகிழ்ந்து வருகின்றனர்.  மகிழ்ச்சி நிரந்தரமன்று என்பதை உணராதவர்கள்.  அவர்களுக்கு உணர்த்தும் கவிதை.

       அழிகிறதே ஆசையென 
 ஆசைகளாய் வாழ்ந்தாலும்
       அழிகின்றாய் அழிவதன் முன் 
 ஆசைகளை அழிப்பாயா?

       உன்னை நீ நம்பு ; உனக்குள்ளே தான் விளக்கு உள்ளது ; அதுவே உனக்கு வழிகாட்டும் ; திசை காட்டும்என்று நம்பிக்கை விதைக்கும் வைர வரிகள். 

       நமக்குள்ளே ஒளியேற்ற 
 நாமே தான் திரியாவோம்
       நமக்குள்ளே சுடர் பரவ 
 நாமே தான் விளக்காவோம்

       வாசித்து விட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது.  மனதில் கவலை வரும்பொழுதெல்லாம் மறுவாசிப்பு செய்து கவலை அகற்றிக் கொள்ள உதவிடும் நூல்.  .80 வயது   ஆன பின்னும் இலக்கியத்தில் சுறுப்பாக இயங்கி படைத்து வரும் படைப்பாளி விஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்


.

திங்கள், 27 அக்டோபர், 2014

தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா புகைப்படம் .நன்றி .மாலை முரசு

தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா புகைப்படம் 
.நன்றி .மாலை முரசு 

மதுரை திருப்பாலை கிளை நூலக வாசகர் வட்ட விழா !

மதுரை திருப்பாலை கிளை நூலக வாசகர் வட்ட  விழா !மதுரை திருப்பாலை கிளை நூலக வாசகர் வட்ட விழா !

மதுரை திருப்பாலை கிளை நூலக வாசகர் வட்ட  விழா !
யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...