வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

மதுரையில் நடந்த தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் ஆண்டு விழா புகைப்படங்கள்

மதுரையில் நடந்த தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின்
7ஆம் ஆண்டு விழா புகைப்படங்கள்
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12e5ce97f7733ea5&attid=0.5&disp=inline&realattid=f_gkl41h0w4&zwhttps://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12e5ce97f7733ea5&attid=0.6&disp=inline&realattid=f_gkl41h0z5&zw
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12e5ce97f7733ea5&attid=0.2&disp=inline&realattid=f_gkl41h0k1&zwhttps://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12e5ce97f7733ea5&attid=0.1&disp=inline&realattid=f_gkl41h0f0&zw

மதுரையில் பாராட்டு விழா

மதுரை மண்ணின் மைந்தன் ரோபோ சங்கருக்கு
நடந்த பாராட்டு விழாவில் கவிஞர் இரா .இரவி
பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார் .
உடன் திரு வி .என் .சிதம்பரம் திரு வேலாயுதம்
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12e5ce97f7733ea5&attid=0.3&disp=inline&realattid=f_gkl41h0o2&zw

புதன், 23 பிப்ரவரி, 2011

Thaalam --- இலக்கியம் - அன்னை தெரசா

Thaalam --- இலக்கியம் - அன்னை தெரசா

பாராட்டுவிழா

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற
பாராட்டுவிழாவில் திரைப்படப் பாடல் ஆசிரியர்
நெல்லை ஜெயந்தாவிற்கு கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ ஆற்றுப்படை என்ற தன் நூலை வழங்கிப்
பாராட்டினார் . உடன் திரு . பிரான்சிஸ் பாஸ்டின்
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12e52a6e36749dae&attid=0.1&disp=inline&realattid=f_gki9krux0&zw

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

வேப்பம் தோப்பில்

வேப்பம் தோப்பில்
முப்பாலின் ஒப்புரவு என்ற தலைப்பில் நடந்த கட்டுரை வாசிப்பிற்கு
தலைமை வகித்த தமிழ் மூதறிஞர் தமிழ் அண்ணல் அவர்களுக்கு
கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார் .
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12e4d42168d5121d&attid=0.2&disp=inline&realattid=f_gkgrp53z1&zw
வேப்பம் தோப்பில் வருடா வருடம்கட்டுரை வாசிப்பு நடத்தி
மதிய உணவு தந்து ,வாசித்த கட்டுரைகளை சொந்த செலவில்
நூலாக்கி தந்து மகிழும் பொறியாளர் அகமுடைநம்பிக்கு
கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார் .
உடன் முனைவர் இ .கி ,இராமசாமி
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12e4d42168d5121d&attid=0.1&disp=inline&realattid=f_gkgrp53u0&zw

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

வைகை மீன்கள் நூலாசிரியர் : டாக்டர் வெ.இறையன்பு திறனாய்வாளர் : முனைவர் ச.சந்திராவைகை மீன்கள்
நூலாசிரியர் : டாக்டர் வெ.இறையன்பு
திறனாய்வாளர் : முனைவர் ச.சந்திரா
கோபுர வாயில் :
வைகை மீன்கள் எனும் தலைப்பில் டாக்டர் வெ.இறையன்பு படைத்திருக்கும் குறுங்காவியமானது இளைய தலைமுறையினரை ஈர்க்கும் ஓர் இனிய நூல்.கவிதையும் கதையுமாக, சிறுகதையின் சீரிய ஓட்டத்துடன் ஒரு நாவலின் நளினத்துடன்,உவமையும் உருவகமுமாய்,படிமமும் குறியீடுமாய் புனையப்பட்ட இந்நூலை கதம்ப மாலை எனலாம்..மதுரை சொக்கநாதருக்காக,பூலோகத்தில் வந்து மீனாட்சி உதித்து, காத்திருந்து பின்னர் கரம் கோர்த்தது புராண சாட்சி!இருபத்தோராம் நூற்றாண்டிலும் காத்திருத்தலும் பொறுத்திருத்தலுமான உயரிய பண்பு நலன்களோடு கூடிய மாந்தர்கள் உலவுகின்றனர் என்பதற்கு வைகை மீன்களேசாட்சி. காதற்காவியமா ?மோதற்காவியமா?
சேற்றில் புரண்டாலும் மண் தன் மேனியில் ஒட்டாது காக்கும் திறன்,தான் அழுக்கைத் தின்று, தன்னைச் சுற்றியிருக்கும் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்கும் தன்மை,சூழலுக்கேற்ப வளைந்து,நெளிந்து கொடுக்கும் சுழிவு இவையெல்லாம் மீனினத்திற்கே உரிய உன்னத குணங்கள்.நதியில் நீந்தும் ஒரு சோடி மீன்கள் பாசக்கடலில் எவ்விதம் சங்கமாகின்றன என்பதே காவியக் கதை. இருமீன்கள் கொஞ்சிக்குலாவும் காதற்காவியமா?அல்லது சமூகத்துடனான மோதற்காவியமா? என்று உய்த்துணர முடியாத அளவிற்கு ஜெல்லி மீன்களும் சுறா மீன்களும் இடையிடையே பயணிக்கும் இக்குறுங்காவியத்தைவாழ்வோவியம் என்று கூட கூறலாம்.
மைய மண்டலம் :
சாதாரண மனிதனிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மாறுபட்ட ஓர் இளைஞன் தன் பருவத்து ஆசைகளையெல்லாம் புறம்பே தள்ளி வாழ்ந்து கொண்டிருக்க, ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராகச் செல்லும் வேளையில், தொகுப்பாளினியாக அன்றைய விழாவில் உரையாற்றிய நங்கையின் திறன் அவன் மனதை ஈர்க்க,மேற்கூறிய இருவருமே குறுங்காவியத்தின் நாயகன் நாயகி.இருபது ஆண்டு காலம் பாதுகாப்பு பெட்டகமாம் இதயத்திற்குள் பூட்டிவைக்கப்பட்ட அதீத அன்பு எவ்விதம் வெள்ளமாக பெருகிப் பொங்கி வழிகிறது என்பதே காவியக் கதை.இந்த நேசநதியோட்டத்தின் இடையே புயற்காற்றும் சுழற்காற்றும் ஆற்றின் பாதையை எவ்வாறு திசை திருப்புகிறது என்பது தனிக்கதை.
இரத்த ஓட்டம் :
அகராதி முதல் கலைக்களஞ்சியம் வரை,கூட்டுப்புழு முதல் பீனிக்ஸ் பறவை வரை,தெருநாய் முதல் ஒட்டகம் வரை,மூக்கணாங்கயிறு முதல் திருமாங்கல்யக்கயிறு வரை,கைக்குட்டை முதல் கம்பளி வரை,கல்வி நிறுவனர் முதல் காவலாளி வரை -என நூலாசிரியர் இருவேறுபட்ட முரண் எல்லைகளைத் தொட்டுச் செல்வதை காவியத்தை வாசிப்போர் உணரமுடிகிறது.ஆசிரியரின் கரங்களில் எட்டிப்பழம் இனிக்கிறது;இலவு கூட பழுக்கிறது:பசுஞ்சாணி சிற்பமாக உருவெடுக்கிறது;இரும்புக்கோட்டை மணல் வீடாகின்றது;சுண்டுவிரல் மோதிர விரலாகின்றது;சித்திரம் கூட சித்ரவதைப்படுகின்றது;காதலோ கண்ணாடியாக பரிமளிக்கின்றது.
பொன்னூஞ்சல்:
காலத்தைத் தன் கரங்களோடு கோர்த்துக் கொண்டு ,உவமையையும் உருவகத்தையும் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு,காவியக் கதையோட்டத்தை ஆசிரியர் ,சீரிய மொழிநடையுடன் நகர்த்தும் விதம் வீட்டின் நடுக்கூடத்தில் இனிதாக அசையும் ஊஞ்சலின் நகர்தலை ஒத்திருக்கின்றது. கதாப்பாத்திரத்தின் உள்மனதிற்குள் புகுந்து ஒரு நுண்ணோக்கி போல் நூலாசிரியர் செயல்படுவதை பற்பல இடங்களில் காணமுடிகிறது.உதாரணத்திற்கு நாட்டுப்பண் இசைக்கப்படும் பொழுது ஒவ்வொருவரின் மனநிலை எவ்விதமாக உள்ளது என்பதை உரைக்கும் விதத்தில் இறையன்பு அவர்களின் உற்றுநோக்கல் திறன் புலப்படுகிறது.நூலின் நாயகன் மேடைச் சொற்பொழிவு பற்றிக் கூறும் ஐந்து பக்க கவிதையோட்டம் (21-25),'சிறந்த பேச்சாளராக ஆவது எப்படி ?'-என்ற நூலை வாசித்த நல்லுணர்வை ஏற்படுத்திவிடுகின்றது.கல்வியை கறிக்கோழியோடு ஒப்பிடும் பொழுதிலும் ,ஒரு வேளை உணவிலேயே தங்கள் குழந்தைகள் வளர்ந்துவிடும் என்று நம்பும் பெற்றோரின் அதீத நம்பிக்கை பற்றிக்கூறும் பொழுதிலும் ஆசிரியரின் நகைச்சுவைத் திறம் புலனாகின்றது.
உவமையும் உருவகங்களும் நூலாசிரியரின் கரங்களில் பூப்பந்து போல் துள்ளி விளையாடுகின்றன!தத்துவமொழிகளோ சரமாரியாய்ப் பொழிய, மொழிநடையோ தெள்ளிய நீரோட்டமாய் இக்காவியத்திற்கு மெருகேற்றுகின்றன.
சொல் விளையாடல்:
"அக்கரை சேர்க்கும் அக்கறையில் நான்
இக்கரையிலேயே இருந்து விட்டேன்!” (ப .121)
உயர் உவமைக்குச் சான்று:
தாமிரபரணித் தண்ணீராய்,விளக்குத் திரி போல்,
இழி உவமைக்குச் சான்று:
"வாழ்க்கை சிலருக்கு வழவழப்புத் தாள்
சிலருக்கோ அது கழிவறைத் தாள்"(ப.43)
தத்துவ மொழிகள்:
திருமணம்-
"சிலருக்கு திருப்புமுனை
பலருக்கு கத்திமுனை
சிலருக்கு பூமாலை
பலருக்கு மலர் வளையம்"(ப.88)
சீரிய மொழிநடைக்குச் சான்று:
"வாழ்க்கைப் பயணத்தில் வழிப்போக்கர்கள் பலர்;சிலர் கோலம் போல் வாசலிலேயேத் தங்கி விடுகின்றனர்;சிலரோ கம்பளமாய் வரவேற்பறை வரை வருகின்றனர்;சிலர் பாயாய் கூடம்வரை வர,வெகு சிலரே குத்துவிளக்காய் பூஜையறை வரை வந்து ஒளிர்விடுகின்றனர்."(ப.42)
உணவ__இதற்கு ஆசிரியர் கூறும் விளக்கம் :
"சமைப்பவர் கனிவு
பரிமாறுபவர் பரிவு
உண்பவர் உணர்வு
இம்மூன்றும் சேர்ந்ததே உணவு!" (ப.124
விதைப்பிற்கும் புதைப்பிற்கும்,இரு மனத்திற்கும் திருமணத்திற்கும்,ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் நூலாசிரியர் கூறும் இலக்கணம் அருமையிலும் அருமை.உதாரணத்திற்கு ஒன்று!
"ஆணுக்கு உலகம் அட்சயப் பாத்திரம்
பெண்ணுக்கு அதுவோ வடிகட்டி!"(ப.28)

மனதார ...
மனித குலத்தின் உயரியப் பண்புகளைப் பிரதிபலிக்க வந்த வைகைமீன்கள் சொல்நயம்,பொருள்நயம்,கவிநயம்-என இலக்கண,இலக்கிய உத்தியோடு அமைந்த ஓர் இணையற்ற நூல்.எவ்வித விரசமும் சரசமும் இன்றி ஒரு காதல் க(வி)தையை அதுவும் நூற்றியறுபது பக்க கதையை நதியோட்டம் போல் நகர்த்திச் செல்ல டாக்டர் வெ.இறையன்பு அவர்களால் மட்டுமே இயலும் என்பதற்கு வைகைமீன்களே சாட்சி!கரித்துண்டின் காத்திருப்பு வைரம்;;காதலின் காத்திருப்பு கரம் கோர்ப்பு!என்ற உண்மையினை விளக்க வந்த இந்த வைகைமீன்கள் இறையன்புவின் இலக்கிய வானில் விண்மீனாய் ஒளிரும் என்பதில் ஐயமுண்டோ?

புதன், 16 பிப்ரவரி, 2011

ஹைக்கூ ஆற்றுப்படை நூலைப் படித்து மகிழுங்கள்


உலகின் முதல் மொழியான தமிழுக்கு என்றும் அழிவில்லை

என்று அறுதியிட்டுச் சொல்லாம் .பொள்ளாச்சி நசன் அவர்கள்
தன் சொந்த செலவில் ,பிரதிபலன் பாராமல்
தமிழ்அண்ணல் உள்ளிட்ட பல அறிஞர்களின் நூல்களை
இணையத்தில் ஆவணப்படுத்தி உலகு அறிய வைத்துள்ளார் .
யாழ் நூலகம் எரிக்கப் பட்டபோது இணையவளர்ச்சியும் ,
பொள்ளாச்சி நசனும் இப்பணி அன்றே செய்து இருந்தால்
பல அறிய தமிழ் நூல்களை இழந்து இருக்க மாட்டோம்
சிறியவனான என் நூலையும் ஆவணப்படுத்தி உள்ளார் .
ஹைக்கூ ஆற்றுப்படை நூலைப் படித்து மகிழுங்கள்http://www.pollachinasan.com/ebook2/2100/pdf/TM2067.pdf

Thaalam --- இலக்கியம் - நிறங்கள் ஹைக்கூ

Thaalam --- இலக்கியம் - நிறங்கள் ஹைக்கூ

Thaalam --- இலக்கியம் - நிறங்கள் ஹைக்கூ

Thaalam --- இலக்கியம் - நிறங்கள் ஹைக்கூ

Thaalam --- இலக்கியம் - காதல் அனுபவம்

Thaalam --- இலக்கியம் - காதல் அனுபவம்

Thaalam --- இலக்கியம் - நிறங்கள் ஹைக்கூ

Thaalam --- இலக்கியம் - நிறங்கள் ஹைக்கூ

திங்கள், 14 பிப்ரவரி, 2011

பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி


பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி
(+2 மாணவர்களுக்கு +1 மாணவர்களின் வாழ்த்து )


வரலாற்றுச் சிறப்பு மிக்க நமது பள்ளியில்
வரலாறுப் படைக்க இருக்கும் நண்பர்களே
மருத்துவர் பொறியாளர் ஆசிரியர் எவரான போதும்
மறக்க வேண்டாம் நமை வளர்த்த பள்ளியை
மேல் நிலை நாம் அடைய அயராது உழைத்த
மேன்மைமிகு ஆசிரியர்களை மறக்க வேண்டாம்
அன்பான நம் தலைமை ஆசிரியரையும் மறக்க வேண்டாம்
அலுவலகப் பணியாளர்களையும் மறக்க வேண்டாம்
பசுமரத்து ஆணியாகப் பதிந்தது உங்கள் நினைவு
பிரிய மனமில்லை என்றபோதும் தேவையான பிரிவு
கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும்
இனி இனிய பள்ளி வாழ்க்கைத் திரும்பக் கிடைக்காது
வசந்த காலத்தை இனிதே முடித்து
கல்லூரி செல்ல இருக்கும் நண்பர்களே
கூட்டல் இரண்டு முடித்துச் செல்வதால்
இனி வாழ்க்கையில் கூட்டல்மட்டுமே கழித்தல் இல்லை
இனிமையான நினைவுகளை இதயத்தில் தேக்கி
கனத்த இதயத்துடன் விடைபெறும் நண்பர்களே
முதல் வருடம் இரண்டாம் வருடம் வேறுபாடு இன்றி
முது நிலை இள நிலை இடைவெளி இன்றிப்பழகினோம்
வேடந்தாங்கலில் கூடிய பறவைகளாய் இணைந்தோம்
வேண்டியமட்டும் அன்போடு அனைவரும் பழகினோம்
வாழ்க்கையில் உயர்ந்த நிலை அடைவது உறுதி
வாழ்த்தி வழி அனுப்புகிறோம் நாங்கள்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

பருவ கால வாரந்திர சுற்றுலா கலை விழா

பருவ கால வாரந்திர சுற்றுலா கலை விழாவில்
சுற்றுலா அலுவலர் தர்மராஜ் உதவி சுற்றுலா அலுவலர்கள்
இரா .இரவி ,பாலமுருகன்மற்றும் கிராமியக் கலைஞர்கள்
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12e04103ae99c4f2&attid=0.1&disp=inline&realattid=f_gjwgjwtb0&zw

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12e04103ae99c4f2&attid=0.3&disp=inline&realattid=f_gjwgjwti2&zw
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12e04103ae99c4f2&attid=0.4&disp=inline&realattid=f_gjwgkp893&zw
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12e04103ae99c4f2&attid=0.5&disp=inline&realattid=f_gjwglht04&zw

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

தூங்காநகரம் இயக்கம் கெளரவ் விமர்சனம் கவிஞர் இரா .இரவிதூங்காநகரம்
இயக்கம் கெளரவ்
நடிப்பு விமல் ,கெளரவ்
தயாரிப்பு தயாநிதி அழகிரி


விமர்சனம்
கவிஞர் இரா .இரவி

தூங்காநகரம் இன்னொரு பருத்திவீரன்
மற்றொரு சுப்புரமணிபுரம் என்றால் மிகை அன்று .
இயக்குனர் கெளரவ் முதல் படத்திலேயே முத்திரைப் பதித்து உள்ளார்
பாராட்டுக்கள் .இயக்குனர்கள் மகராசன் ,கே எஸ் .ரவிக்குமார்
பலரிடம் உதவி இயக்குனராக பல ஆண்டுகள் பயிற்சிப் பெற்று
பெற்றப் பயிற்சியை திறம் பட பயன்படுத்தி உள்ளார் .
யாரும் எதிர்பார்க்காத திருப்புமுனையான முடிவு .
படத்தின்இறுதியில் மனதை கனமாக்கி மகிழ்ச்சிப் படுத்தி விட்டார் .
நட்பிற்கு இலக்கணம் கூறும் நல்ல படம் .
வைகைப்புயல் வடிவேலு குரலில் கதை நாயகர்கள்
அறிமுகம் சிறப்பு .

இயக்குனர் சிங்கம்புலி முன்பகுதியில்
நகைச்சுவையில் கலக்கி உள்ளார் .
பின்பகுதி மிக விறுவிறுப்பாக உள்ளது .
இரண்டு கிழவிகள் நடத்தும் ரவுசு
அப்பப்பா நல்ல நகைச்சுவை.
அக்கினி நட்சத்திரம் படத்தில்
பிரபு கார்த்திக் நடக்கும் போது
மோதிக்கொள்ளும் முறையில்
கிழவிகள் மோதல் நன்று .
இயக்குனர் கெளரவ் மதுரை வடக்குமாசி வீதியில்
வளர்ந்த காரணத்தால் வடக்குமாசி வீதி வழுக்குமரம்
திருவிழா மற்றும் மதுரையை மிக இயல்பாக
படமாக்கி வெற்றி பெற்றுள்ளார்

.
கவிஞர் மூரா விமலின் தந்தையாக மிகஇயல்பாக
நடித்து. உள்ளார் அவர் மட்டும் அல்ல கதாநாயகி
அஞ்சலி உள்பட அனைவரும் சிறப்பாக நடித்து.உள்ளனர் .
பிம்பம் பற்றிய கவலை இன்றி இயக்குனர் கெளரவ்
சுடுகாடு வெட்டியானாக மிகஇயல்பாக
நடித்து. உள்ளார் .
ஊமையாக மாற்று திறனாளியாக
நடித்துள்ள நண்பனிடம்
தன் குடும்பத்தை வில்லன் கொன்று
விடுவோம் என்று மிரட்டி நண்பனை கொல்லச் சொல்லியதும்

நண்பனுக்கு லட்டில் விஷம் கலந்து கொடுத்து விட்டு
மானசாட்சி கேட்காமல் உடன் கொடுத்த லட்டை
பிடுங்கி செல்வதும் உருக்கமான காட்சி .

நண்பனின் மனைவி வளைகாப்பில் பிணமாக கற்பனை
செய்து சிரித்ததற்காக நண்பர்களிடேயே ஊடல் .
நண்பனுக்கு விபத்து என்றவுடன் உயிர் காக்க
துடிப்பது ,போதையில் இருந்ததால் இரத்தம்
எடுக்க மறுத்ததும் ,காதலியை பிடித்து வந்து
இரத்தம் கொடுக்க வைத்து நண்பன் உயிரைக்
காப்பாற்றும் காட்சி மதுரை மக்களின் மனசாட்சி.
மதுரைக் காரர்கள் பாசக் காரர்கள் என்பதற்கு
எடுத்துக்காட்டு.
மணல் கொள்ளையை தட்டிக் கேட்ட அதிகாரியின்
மனைவியை காரை ஏற்றி கொன்று
விட்டு மகளையும் கொன்று விடுவோம் என
மிரட்டியதால் நீதிமன்றத்தில் விட்டுவிட்டு
பின் வில்லனை அதிகாரி காரை ஏற்றி கொன்று
விடுவது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி .
பல இடங்களில் இயக்குனர் முத்திரை உள்ளது
வில்லன் சாகும் போது இமை மூடுவது போலவே
கேமிரா மூடுவது சிறப்பு .
மிக மென்மையான மனிதர் வி .என் .சிதம்பரம்
அவர்களைக் கொடூர வில்லனாக நடிக்க
வைத்ததில் இயக்குனர் பனி உணர முடிகின்றது .
கடைசியில் படத்தின் முடிவில் படம் பார்த்த
அனைவருக்கும் மகிழ்ச்சி .நட்பிற்கும் கற்பு உண்டு
என்று மெய்ப்பித்த படம் .வெற்றி இயக்குனர்கள்
வரிசையில் முதல் படத்திலேயே இடம் பிடித்து
விட்டார் இயக்குனர் கெளரவ் .வாழ்த்துக்கள் .
உலகப் புகழ் சாக்கிசான் படத்தில் வருவது போல
படம் எடுத்த விதத்தை காட்டியது மிக சிறப்பு .
இயக்குனரின் உழைப்பை உணர முடிந்தது .
பாடல் ,ஆடல், ஒளிப்பதிவு ,ஒலிப்பதிவு
அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள்
சிறப்பாக உழைத்து வெற்றியை தேடித் தந்து உள்ளனர் .
பாடலில் மதுரையின் பெருமை பறை சாற்றி உள்ளனர் .
http://www.eraeravi.com/home/detail.php?id=495&cat=ka
தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது