சனி, 31 மார்ச், 2018

முனைவர் வெ .இறைஅன்பு இ. ஆ .ப அவர்களின் தன்னம்பிக்கை சிந்தனைகள் தொகுப்பு கவிஞர் இரா .இரவி

முனைவர் வெ .இறைஅன்பு இ. ஆ .ப அவர்களின் தன்னம்பிக்கை சிந்தனைகள்


தொகுப்பு கவிஞர் இரா .இரவி

நாம் கல்லாகப் படைக்கப் பட்டோம் .நம்மை நாம்தான் சிற்பமாக
மாற்றிக்கொள்ள வேண்டும் .இதில் நாமே கல் நாமே உளி நாமே சுத்தியல்
நாமே சிற்பியும் கூட.

நம் திறமையும் தனித் தன்மையும் நேர்மையும் மட்டுமே
நமக்கு சிபாரிசு சான்றிதழ் தரவேண்டும் .

எவன் சோம்பலோடு இருக்கிறானோ
அவனுக்கு வறுமைதான் வரமாக அளிக்கப்படுகிறது

தான் இன்னும் பயல வேண்டி உள்ளது எனத் தன்
வெறுமையை உணர்பவனே பண்டிதனாக முடியும் .

தலைகனம் இழப்பவர்களே தலை நிமிரவும் முடியும் .

வார்த்தைகளால் ஒருவரை குணப் படுத்தவும் முடியும்
ரணப் படுத்தவும் முடியும் .

புல்லாங்குழல்கள் எப்போதும் காலியாக கிடக்கின்றன
குப்பைத்தொட்டிகள் நிறைந்து இருப்பதாக குதூகலிக்கின்றன .

பிரச்சனைகளை எதிர் கொள்வதன் மூலம்தான்
தீர்வு காண முடியுமே தவிர அவற்றிலிருந்து
ஓடி ஒதுங்குவதால் தப்பிக்க முடியாது .

பெண்கள் துணிவு கொண்டால் அது ஆண்களைக் காட்டிலும்
பல மடங்கு தீவிரமாக இருக்கும் .

நமது தோல்விகள் நமக்கு கல்விச் சாலைகளாக இருக்கின்றன
வாழ்க்கை நம்பிக்கையிலும் அழகுணர்விலும் அடங்கி இருக்கிறது .

நம்பிக்கையுள்ளவன் கண்களில் இருள் கூட விளக்குகளாகி
எதிர்காலத்தை வெளிச்சமாக்குகிறது .

ஆதிக்கம் செலுத்தாமல் நடத்திக் காட்டுவதே சிறந்த நிர்வாகம் .

அயர்ச்சியும் அலுப்பும் ஏற்படாமல் வாழ நாம் நேரத்தை சரியாகப்
பயன்படுத்த கற்று இருக்க வேண்டும் .

கடிகாரத்தில் இருப்பவற்றை முள் என்று சொல்வது
சற்று ஏமாந்தால் அவை குத்திவிடும் .

நாம் எந்தப் பணிக்காக முயற்சி செய்கிறோமோ அதில் முழுமையும்
தீவிரமும் வேண்டும் .

வாழ்க்கை உழைப்பை நேசிக்காததால்தான் புளித்துப் போய் விடுகிறது .

வலியைப் பொறுத்துக் கொள்ளாத மூங்கில் எப்படி புல்லாங்குழல் ஆகமுடியும் .

மனிதன் எப்போது தேங்குகின்றானோ அப்போது அவன் நதியாக இல்லாமல் குட்டை யாகி விடுகிறான் .

முயற்சி முழுமையாக இருக்குமேயானால் விதி என்று சொல்லப்
படுபவற்றை மாற்றி அமைக்க முடியும் .

காலைக் கடனைப் போல வியர்வையும் கட்டாயமாக்கப்படும் சமூகத்தில்தான் சாதனைகள் பூத்துக் குலுங்கும் .

நாம் நேசிக்காவிட்டால் உழைப்பு வெறும் பிழைப்பு நோக்கி நடத்தப் படுகிற சாதாரண செயல்பாடு .
.
மகுடதிற்காகக் குனிவதும் தலைகுனிவுதானே

பதற்றம் இருந்தாலே மூளையின் செயல்பாடு பாதியாகக் குறைந்து விடும் .

பதற்றம் ஏன் ?ஏற்படுகிறது என்று ஆராய்ந்தால் அதற்கு முக்கியக் காரணம் திட்டமிடாமைதான் .

நாம் எதைக் கண்டு அஞ்சி ஓடுகிறோமோ அது நம்மைப் பயமுறுத்துகிறது
மனிதனை பின்னுக்குத் தள்ளும் அசுரபலம் பயத்திற்கு உண்டு .
சத்தியத்துடன் நிமிர்ந்து நிற்கிறவன் பயம் கொள்ளத் தேவையில்லை .
பயம் கொள்ள ஆரம்பித்தால் அது விஸ்வரூபம் எடுத்து படாதபாடு
படுத்துகிறது

புத்திசாலிகள் பாம்புகளைக் கூட மாலையாக்கிக் கொள்கிறார்கள் .

வாழ்க்கை என்பது அடுத்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது
அவர்கள் அனுபவங்களிலிருந்து நம்மை உருவாக்கிக்கொள்வது.

அன்பு விதையைப் போல மென்மையாகவும்
கோபம் கல்லைப் போல கடினமாகவும் இருக்கின்றன .

தொடர்ந்து மாணவனாக இருக்கச் சம்மதிப்பவர்கள்
சிறந்த ஆசிரியர்களாகத் திகழ முடியும் .

நமக்குள் இருக்கும் சக்தி வெளிப்பட வேண்டும் என்றால் நம்மைப்
போராடச் செய்கின்ற சுழல் நிலவ வேண்டும் .சில நேரங்களில்
நாமே சுழலை உருவாக்க வேண்டும் .

.
ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஏன்? முடியாது என்று
கேட்டவர்களால் உருவானது .

மோசமான துணையைக் காட்டிலும்
அமைதியான தனிமை அழகானது .

ஆன்மிகம் என்பது சாமி கும்பிடுவதில் இல்லை .எந்த உயிரையும்
துன்புறுத்தாமல் இருப்பதுதான் உண்மையான ஆன்மிகம்.

கடவுள் நம்மைக் காப்பற்றட்டும் .நாம் கடவுளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை
.
நாம் இறைமையை வழிபடுவதுகூட நம்பிக்கையினால் அல்ல
சந்தேகத்தினால்தான் .

இயல்பாகப் பூக்கிறபோது புன்னகையும் பூவாகிவிடுகின்றது .

இயற்கையின் ஒவ்வொரு செயலும் நன்றிஅறிதலினால் நிகழ்கிறது.
.
உணராத ஆற்றலும் ஊறாத நீரும் தாகத்தைத் தணிக்க முடியாது.
.
புதிதாகப் பிறப்பது என்பது ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டும் .
இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு நொடியும் அது நிகழ வேண்டும் .

எல்லோரும் உயர்ந்த குறிக்கோளுடன்தான் பயணத்தை ஆரம்பிகிறார்கள்.ஆனால்அதில் விடாப் பிடியுடன் வைராக்கியமாக
இருப்பவர்கள் ஒரு சிலர்தான் .அவர்கள்தான் நீடித்து நிற்பவர்கள் .
பலர் குறிக்கோளை வரையறுக்கிறார்கள்.ஆனால் சிலர் மட்டுமே
அதில் உறுதியாக இருக்கிறார்கள் .

உண்மையாய் இருப்பவர்கள் தமக்குள் மலர்ச்சியைப் பெற்று இருப்பவர்கள் .ஜீவித்து இருப்பவர்கள்.கொஞ்ச காலம் வாழ்ந்தாலும்
தங்களைச் சுற்றிப் பல எண்ணஅலைகளை எழுப்பிக் கொண்டேஇருக்கிறார்கள்

-- முனைவர் சுந்தர ஆவுடையப்பன் தொகுத்த
இறைஅன்புவின் சிந்தனை வானம் நூலில் இருந்து
தொகுப்பு கவிஞர் இரா .இரவி

யு டீயூப் காணொளியில் கவிஞர் இரா .இரவி படைப்புகள் , நேர்முகம் .நூல் மதிப்புரை கண்டு மகிழ்க !

யு டீயூப் காணொளியில் கவிஞர் இரா .இரவி படைப்புகள் ,  நேர்முகம் .நூல் மதிப்புரை கண்டு மகிழ்க !
https://www.youtube.com/watch?v=JMw3gwx7abo&t=338s

https://www.youtube.com/watch?v=BMxhIzbEtbA&feature=youtu.be&a

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி் 


kaalaimalar_split2.mp4

kaalaimalar_split1.mp4

Eraravi split3

Eraravi split2

Eraravi split1

என்னைப் படித்த புத்தகம் 71 இரா. இரவி (Ennai paditha puthakam 71 Era. Eravi)

பவகணேஷ் யின் 'பூமிக்கூடு' நூல் குறித்து கவிஞர் இரா.இரவி #PAVAGANESH

பவகணேஷ் யின் 'நையப்புடை' நூல் குறித்து கவிஞர் இரா.இரவி #PAVAGANESH

www.tamilauthors.com-Eraeravi-interview 02.wmv

www.tamilauthors.com-Eraeravi interview01

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்.


வெள்ளி, 30 மார்ச், 2018

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் யானைக்கல் பாலத்திற்கு கீழே வரைந்துள்ள காந்தி அருங்காட்சியக ஓவியம் !ஓவியருக்கு பாராட்டுக்கள் படங்கள் கவிஞர் இரா .இரவி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் யானைக்கல் பாலத்திற்கு கீழே வரைந்துள்ள காந்தி அருங்காட்சியக ஓவியம் !ஓவியருக்கு பாராட்டுக்கள்.
 படங்கள் கவிஞர் இரா .இரவி !


சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை சிம்மக்கல் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஜீவ சமாதி சித்தர் அடக்கம் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை சிம்மக்கல் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஜீவ சமாதி சித்தர் அடக்கம் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் அந்தி வானம் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில்  அந்தி வானம் !
படங்கள் கவிஞர் இரா .இரவி !

வியாழன், 29 மார்ச், 2018

வெட்டுக்கிளி ! படம் .கவிஞர் இரா .இரவி !

வெட்டுக்கிளி !   படம் .கவிஞர் இரா .இரவி !

நன்றி .விகடன் ! கவிஞர் இரா .இரவி
நன்றி .விகடன் !   கவிஞர் இரா .இரவி


1. கர்நாடகாவில்தானே காவிரி உற்பத்தியாகிறது. தங்களது தேவைக்குப்போக, தண்ணீர் மிஞ்சினால்தானே தமிழ்நாட்டுக்குத் தரமுடியும். இது அவர்களது விருப்பம்தானே, நாம் ஏன் வீணாகப் பிரச்னை செய்யவேண்டும்? 


காவிரி ஆறு என்பது இயற்கை தந்த கொடை. கர்நாடகா, தமிழ்நாடு என்பதெல்லாம் மனிதானால் செயற்கையாக உருவாக்கப்பட்ட எல்லைக்கோடுகள். எனவே, கர்நாடாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல காவிரி. ஓர் ஆறு, அது உற்பத்தியாகும் இடத்திலிருந்து தானாக சென்று முடிவடையும் வரையில் உள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் உரிமையானது. குறிப்பாக, கடைமடை என்று சொல்லப்படும் ஆற்றின் கடைசி பகுதியில் வசிக்கும் மக்களுக்குக் கூடுதல் உரிமை உண்டு. இதுதான் உலக நீர் நியதி! 

2. சட்டப்பூர்வமாக காவிரிநீரை தமிழ்நாடு உரிமை கொண்டாட முடியுமா ? 

1924-ம் ஆண்டு மைசூர் சமஸ்தானம் மற்றும் சென்னை மாகாணம் இடையே போடப்பட்ட சட்டப்பூர்வமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு சட்டப்பூர்வமான உரிமையுள்ளது. இதுமட்டுமல்ல உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஆற்றுநீர் மரபுரிமை அடிப்படைப்பிலும் சட்டப்பூர்வமான உரிமையுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளாக காவிரிநீரை தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 

3. கர்நாடகாவில் காவிரி பாயாத 28 மாவட்டங்களில் வறட்சி நிலவுவதாகவும், பெங்களூருவில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் உச்ச நீதிமன்றம் கவலைப்படுவது நியாயமானதுதானே?

ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்கள் கடும்வறட்சியில் சிக்கித் தவிப்பதை உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளவே இல்லையே. பெங்களூரின் குடிநீர்த் தேவைக்காக தமிழ்நாட்டுக்கான காவிரி நீரில் 14.75 டி.எம்.சி-யை உச்ச நீதிமன்றம் குறைத்திருப்பது அநீதியின் உச்சம். பெங்களூருவின் மூன்றில் ஒரு பகுதிதான் காவிரி படுகைக்குள் அமைந்துள்ளது. அதனால், அந்தப் பகுதிகளின் குடிநீர்த் தேவைக்கு மட்டும்தான் காவிரிநீரை தரமுடியும் என நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் சொல்லப்பட்டது. ஆனால், தற்பொழுது உச்ச நீதிமன்றம் பெங்களூருவின் முழுமைக்கும் காவிரிநீரைத் தாரை வார்த்துள்ளது. ஆனால், பெங்களூரைவிட மக்கள் தொகையிலும், நிலப்பரப்பிலும், தொழிற்சாலைகளிலும் பல மடங்கு அதிகமான சென்னையின் குடிநீரைப் பற்றி உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. 

4. தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்களை முறையாக பராமரித்தாலே தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை நிறைவு செய்துவிட முடியுமே... ஆண்டுதோறும் கர்நாடகாவிடம் ஏன் கையேந்த வேண்டும்?

இது பிரச்னையை திசை திருப்புவதற்காக திட்டமிட்டே பரப்பப்படும் தவறான தகவல் இது. ஏரி, குளங்களை ஆழப்படுத்தி, முறையாக பரமாரிக்க வேண்டும் என்பதை யாருமே மறுக்க முடியாது. ஆனால் காவிரி நீருக்கு மாற்றாக, இதைக்கொண்டு தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை நிறைவுசெய்து கொள்ளலாம் எனச் சொல்வது அபத்தமானது. இங்குள்ள ஏரி, குளங்களில் முழுமையாக தண்ணீர் நிரம்பினால் கூட,  தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தண்ணீர் தேவையில் 5 சதவிகிதத்தைக் கூட நிறைவு செய்ய முடியாது. அதுமட்டுமல்ல, பெரும்பாலும் இந்த நீர்நிலைகளின் நீராதாரம் காவிரிதான். ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் ஓடினால்தான் பூமிசெழித்து, மரங்கள் வளர்ந்து, மேகத்தை ஈர்த்து, மழை பொழிந்து, ஏரி, குளங்கள் நிரம்பும். இவற்றை ஆழப்படுத்தி அழகுப்படுத்தி வைத்தால் மட்டும் தண்ணீர் நிறைந்துவிடாது.  

5. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தற்பொழுது வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்படவில்லை என மத்திய அரசு சொல்கிறதே?

ஆம். கர்நாடாகாவின் விருப்பமும் மத்திய அரசின் எண்ணமும் ஈடேறும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துவிட்டது சோகமே. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லவில்லை. தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒரு செயல்திட்டத்தை உருவாக்கவேண்டும் என்றுதான் தற்போதைய தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற சொற்கள் தவிர்க்கப்பட்டிருப்பதுதான் பல்வேறு பிரச்னைகளுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது. 

6. காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்கவேண்டும் என ஏன் தமிழ்நாடு முரண்டு பிடிக்கவேண்டும்? 

காவிரி மேலாண்மை வாரியம் என்பது சுய அதிகாரமிக்க, நடுநிலையான அமைப்பு. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, கபினி, ஹேரங்கி ஆகிய 4 அணைகள், தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர், அமராவதி, பவானி ஆகிய 3 அணைகள், கேரளாவில் பானாசூரசாகர் உள்ளிட்ட  8 அணைகளும் காவிரி மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதுவே நீர் பங்கீட்டை நேரடியாக செயல்படுத்தும். இதனால்தான் காவிரி மேலாண்மை வாரியம் என்றாலே கர்நாடகாவிற்கு எரிச்சல் வருகிறது. 

7. தற்பொழுது மத்திய அரசு அமைக்கவிருப்பதாகச் சொல்லப்படும் காவிரி மேற்பார்வைக்குழுவும் பொதுவான அமைப்புதானே. அதை ஏன் எதிர்க்க வேண்டும்? பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணும் என்பதுபோல அல்லவா இருக்கிறது?

மேற்பார்வைக்குழு என்பது பொதுவான அமைப்பாக இருக்கலாம். ஆனால் அது அதிகாரமற்ற அமைப்பாகவே செயல்படும். கர்நாடகம் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி வழங்க வேண்டிய காவிரி நீரை மேற்பார்வைக்குழுவால் பெற்றுத் தரமுடியாது. தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதியை வேடிக்கை மட்டுமே பார்க்கும். எனவே, காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுயஅதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு ஓரளவுக்காவது நீதி கிடைக்கும்.

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  !  கவிஞர் இரா .இரவி !

இந்தா அந்தா என்றே 
வைத்தனர் ஆப்பு 
மேலாண்மை வாரியம் !

தீர்ப்பு வந்தபின் 
பொருளில் சந்தேகமாம் ?
நவீன திருவிளையாடல் !

பாரதிதாசனுக்குப் பாமாலை-2

பாரதிதாசனுக்குப் பாமாலை-3

நன்றி .தினத்தந்தி நாளிதழ்

நன்றி  .தினத்தந்தி நாளிதழ் !

வரலாற்று சிறப்பு மிக்க வைகை ஆறு வறண்டு உள்ளது .துணி உலர்த்துகின்றனர் .குப்பைத் தொட்டி வைத்துள்ளனர் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

வரலாற்று சிறப்பு மிக்க வைகை ஆறு வறண்டு உள்ளது .துணி உலர்த்துகின்றனர் .குப்பைத் தொட்டி வைத்துள்ளனர் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் மேற்கு வாயில் கோட்டை .படங்கள் கவிஞர் இரா .இரவி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் மேற்கு வாயில் கோட்டை .படங்கள் கவிஞர் இரா .இரவி !

வாழையிலை! நூல் ஆசிரியர் : கவிதாயினி சி.ஆர். மஞ்சுளா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வாழையிலை!


நூல் ஆசிரியர் : கவிதாயினி சி.ஆர். மஞ்சுளா !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வெளியீடு :
பூவரசு பதிப்பகம், 30/8, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை-600 018.

பக்கம் : 32, விலை : ரூ. 25.

******

     இந்த நூல் புதுவையில் நடந்த ஹைக்கூ நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்டது.  நூலாசிரியர் கவிஞர் சி.ஆர். மஞ்சுளா அவர்களுக்கு தலைப்பிரசவம். அதாவது முதல் நூல்.  நூலிற்கு இனிய நண்பர் கன்னிக்கோவில் இராஜா அணிந்துரை வழங்கி உள்ளார். நூல் வடிவமைப்பு வெளியீடும் அவரே.     மதுரைக் கவிஞர் ப்ராங்ளின் குமார் அவர்களின் புகைப்படங்கள் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளன.  பாராட்டுக்கள்.  முதல் ஹைக்கூவே முத்தாய்ப்பாக உள்ளது.     மண்ணுக்கு அடியில்
     சுவாசிக்கும் உயிர்
     விதை!     விதையின் உழைப்பு வெளியில் தெரிவதில்லை.  அது உயிர்ப்புடன் இருந்து வேர் விட்டு கிளைகளுக்கு அனுப்புகின்றது.  விதையின் மேன்மையை மென்மையாக உணர்த்தியது சிறப்பு.     நவநாகரிக உலகம்
     கட்டடக் காடுகளில்
     மனிதர்கள் விலங்குகள்!     இந்த ஒரு ஹைக்கூவை பல பொருள் கொள்ளலாம்.  காடுகளை அழித்து நாடாக்கி வருகிறான் மனிதன்.  காடுகளில் வாழ்ந்த மனிதன் நாட்டிற்கு வந்தபின்னும் காட்டுமிராண்டியாகவே இருக்கிறான்.  காட்டை அழித்ததால்தான் காட்டு மிருகங்கள்  நாட்டிற்குள் வந்துவிட்டன. இன்னும் சிலர் மனிதராகாமல் விலங்காகவே   இருக்கின்றனர். இப்படி பல பொருள் கொள்ளலாம்.     கையடக்க நூல் என்றாலும் வாசிக்கும் வாசகர்கள் மனதில் திரும்பத் திரும்ப அசைபோடும் விதமாக ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள கவிதாயினி சி.ஆர். மஞ்சுளா அவர்களுக்கு பாராட்டுக்கள்.     சுவை அதிகரிப்பு
     கைப்பக்குவம்
     கூடவே வாழையிலை!     நூலின் தலைப்பில் உள்ள ஹைக்கூ நன்று.  சூடான உணவை வாழை இலையில் வைக்கும் போது இலையில் உள்ள பச்சையம், உணவிலும் சேரும்.  சுவை கூடும்.  உடல்நலத்திற்கும் நல்லது. அதனை உணர்த்தியது சிறப்பு. இன்றைக்கு வாழை இலைக்குப் பதிலாக நெகிழிக் காகிதங்களை உணவகங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.  இம்முறை ஒழிக்கப்பட வேண்டும். நுகர்வோராகிய நாமும் வாழைஇலையில் தாருங்கள் என்று கோரிக்கை வைப்போம்.     கணக்கில்லா குழந்தை வரம்
     உயிர்ப்பு நிற்கும் வரை
     ஆசிரியப் பணி!     ஆசிரியர்கள் தனது மாணவர்களை தன் குழந்தைகளைப் போலவே அன்பு செலுத்துவார்கள்.  ஒருவேளை குழந்தை இல்லாவிட்டாலும் மாணவர்களையே தன் குழந்தைகளாக நினைத்து மனதைத் தேற்றி வாழ்ந்து வரும் ஆசிரியப் பெருந்தகைகளின் உயர்ந்த குணம் கூறும் ஹைக்கூ நன்று.     ஆச்சர்யக்குறி
     உயிர் உறவைப் பறித்தது
     காதல்!     காதல் பற்றி வித்தியாசமான ஹைக்கூ. இதற்கும் பல பொருள் கொள்ளலாம்.  உயிர் போன்றவள் உயிர் பறிக்கிறாள். உயிர் பரிமாறுகின்றன்ர்.  இன்னும் சாதி ஆணவக்கொலைகளின் காரணமாக காதலர்கள் உயிர் பறிக்கும் அவலங்களும் அரங்கேறி வருகின்றன. உயிர் உள்ள வரை நினைவு இருக்கும் காதல்.  இப்படி பல பொருள் உண்டு ஒரு ஹைக்கூவிற்கு.     கரையுடன் கலவரம்
     நடுமடியில் அமைதி
     பரதவர் வாழ்வாதாரம்!     மீனவர்கள் கடலுக்குச் சென்றால் திரும்ப வருவார்கள் என்று உறுதி இல்லை.  மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை சிங்களன் பிடித்துச் செல்கிறான் அல்லது சுட்டுத் தள்ளுகிறான். வலையை அறுத்து மகிழ்கிறான்.  படகுகளையும் பிடுங்கி விடுகிறான்.  தட்டிக்கேட்க நாதியில்லை என்ற துணிச்சலில் ஆட்டம் போடுகிறான்.  இந்திய இராணுவம் ஒரு நாள் கூட சிங்களனை அடக்க முற்பட்டதே இல்லை.  இப்படி பல சிந்தனைகளை விதைத்தது ஒரு ஹைக்கூ.     நம் இடத்தில்
     நான் மட்டும்
     வெறுமை!     தலைவனும் தலைவியும் வாழுமிடத்தில், இல்லத்தில் தலைவன் இல்லை, தலைவி மட்டுமே இருக்கிறாள்.  நம் இடத்தில் நான் மட்டும் தலைவி மட்டும். தலைவன் இல்லாததால் வாழ்க்கை வெறுமையாகி வருகின்றது. பிரிவை, பிரிவின் சோகத்தை, வலியை குறைந்த சொற்களை வைத்து நிறைந்த கருத்தை உணர்த்தியது சிறப்பு.     மருத்துவமனை
     நொடிதோறும் கொண்டாட்டம்
     மகப்பேறு பிரிவு!     உண்மை தான். மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் குழந்தைகள் பிறந்த வண்ணம் இருக்கும். அதனால் அங்கே குடும்பங்களின் கொண்டாட்டமும் இனிப்பு வழங்கலும் நடந்து கொண்டே இருக்கும். அக்காட்சியினை வாசகர்களுக்கு படம்பிடித்துக் காட்டியது சிறப்பு.     தனித்து நிற்கிறது
     மலர்க்கொடி
     தலைவி !     சங்ககாலத்துப் பாடல்களில் தலைவன், தலைவி ஊடல் கூடல் பிரிவு பற்றி விரிவாகப் பாடி இருப்பார்கள்.  ஆனால் இவரோ ரத்தினச் சுருக்கமான சொற்களில் பாடி உள்ளார்.  கொடி படர கொம்பு வேண்டும், தலைவன் என்ற கொம்பின்றி மலர்க்கொடி தனிமையில் வாடுகின்றாள்.  பிரிவு சோகத்தை அழகாக ஹைக்கூ வடித்துள்ளார்.     தலைவர் மரணம்
     தீக்குளிப்பு
     பச்சை மரங்கள்!     தலைவர் இறந்ததற்காக தொண்டர்கள் தீ எரிப்பு நடத்தும் வன்முறையை உணர்த்தி உள்ளார்.  ஒருவர் சாவுக்கு ஓராயிரம் மரங்களும் எரிவதுண்டு.     இப்படி பல்வேறு பொருள்களில் மிக அழகிய ஹைக்கூ வடித்த கவிதாயினி சி.ஆர். மஞ்சுளா அவர்களுக்கு பாராட்டுக்கள்.  ஒரு வேண்டுகோள். முன்னெழுத்தில் உள்ள ஆங்கிலத்தை நீக்கி தமிழாக்குங்கள்.

புதன், 28 மார்ச், 2018

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி் !


சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! 

அடி கொள்ளை 
தா பங்கு 
அரசியல் கொள்கை !

அசந்தால் 
கடவுளை விழுங்கிடும் 
மகாதேவன்கள் !

மன்னர்களை மிஞ்சினார்கள் 
துணை வேந்தர்கள் 
சொத்துச்  சேர்ப்பதில் !

துச்சம்தான் சிலருக்கு 
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 
மேலாண்மை வாரியம் ?

ஒன்று செய் நன்று செய் 
இன்றே செய் 
காலம் கடத்தாதே !

காற்றுள்ளபோது துற்று 
பதவியிலிருக்கும்போதே அடித்திடு 
அரசியல் வேதம் ! 

ஏழைகளின் பழம்
பணக்காரர்களின் பழமானது 
கொய்யா  !

இழவைத் தடுக்க வேண்டினால்
திருமணம் செய்து வைக்கின்றனர் 
அரசியல் கூத்து !

உருவம் ஒன்று 
சுவை வேறு 
பூசணி  தர்பூசணி ! 

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி் !


சிறைத்துறை துணைத்தலைவர் திரு.பழனி அவர்கள் , திரைப்படப் பாடல் ஆசிரியர் இனிய நண்பர் சிநேகனுடன் கவிஞர் இரா.இரவி

சிறைத்துறை துணைத்தலைவர் திரு.பழனி அவர்கள் , திரைப்படப் பாடல் ஆசிரியர் இனிய நண்பர் சிநேகனுடன் கவிஞர் இரா.இரவி.செவ்வாய், 27 மார்ச், 2018

சென்ரியு கவிதைகள் - இரா. இரவி | Sentruyu Kavithaikal

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் ராணி வார இதழில் எழுதி வரும் கேள்வியும் நானே ! பதிலும் நானே ! படித்து மகிழுங்கள்

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் ராணி வார இதழில் எழுதி வரும்கேள்வியும் நானே ! பதிலும் நானே ! படித்து மகிழுங்கள்


சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !சென்ரியு  !  கவிஞர் இரா .இரவி !

இருக்காது சும்மா 
ஆடிய காலும் பாடிய வாயும் 
ஊழல்வாதி கையும் !

மிதந்தபோதும் 
ஒட்டுவதில்லை தண்ணீர் 
தாமரையிலை !

செய்யவில்லை நன்மை 
தமிழகத்திற்கு 
தாமரையும் இலையும் !

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் 
சரி கைது செய்யலாமா ?
போராடும் மன்னர்களை !

இந்தா ! அந்தா  !என்றே 
ஏமாற்றுகின்றனர் 
பெண்கள்  இடஓதுக்கீடு !

நல்ல சாதனை 
தடுக்கி விழுந்தால் 
மதுக்கடை !

நீந்தியது 
பிறந்ததும் 
மீன் !

தன் குஞ்சு 
பொன் குஞ்சு 
அரசியல்வாதிகளுக்கு !

வெந்து தணிந்தது காடு 
பல உயிர்களைக் கொன்று 
குரங்கணி !

மேலாண்மை வாரியம் அமைக்காமல் 
மேலாண்மை செய்யும் 
நடுநிலையற்ற நடுவணரசு !

வேட்டைக்காடானது 
அந்நியர்களுக்கு 
தமிழகம் !

தீதும் நன்றும் 
அமையும் 
நாக்கால் !

நேரம் இருப்பதில்லை 
பொல்லாங்கு பேசிட 
உழைப்பாளிக்கு !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...