சனி, 30 ஏப்ரல், 2016

பெங்களூரு அல்சூர் பகுதியில் டாக்டர் எம் .வி .ஜெயராமன் கல்வி நிறுவனம் சார்பில் நடந்த கருத்தரங்கில் நாவல் ஆசிரியர் ,கவிஞர் திருமதி ஜெய சத்தி வள்ளலார் பற்றி பேசினார் .கவிஞர்கள் இரா .இரவி ,கே .ஜி .இராஜேந்திர பாபு ,இராம இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .படங்கள் கவிஞர் இரா .இரவி

பெங்களூரு அல்சூர் பகுதியில் டாக்டர் எம் .வி .ஜெயராமன் கல்வி நிறுவனம் சார்பில் நடந்த கருத்தரங்கில் நாவல் ஆசிரியர் ,கவிஞர் திருமதி ஜெய சத்தி  வள்ளலார் பற்றி பேசினார் .கவிஞர்கள் இரா .இரவி ,கே .ஜி .இராஜேந்திர பாபு  ,இராம இளங்கோவன்  உள்ளிட்ட பலர்  கலந்து  கொண்டனர் .படங்கள் கவிஞர் இரா .இரவி

பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள ஆரோக்கிய மாதா தேவாலயம் .இங்குதான் எம் ,ஜி ,ஆரின் நாம் திரைப்படம் எடுக்கப்பட்டது .படங்கள் கவிஞர் இரா .இரவி !

பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள ஆரோக்கிய மாதா தேவாலயம் .இங்குதான் எம் ,ஜி ,ஆரின் நாம் திரைப்படம் எடுக்கப்பட்டது .வழி காட்டும் வள்ளுவம் ! நூல் ஆசிரியர்கள் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !வழி காட்டும் வள்ளுவம் !

நூல் ஆசிரியர்கள் :  தமிழ்த்தேனீ இரா. மோகன் !
                        தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வானதி பதிப்பகம், 27, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கம் 266.  விலை : ரூ. 170. 
*****
      " வழிகாட்டும் வள்ளுவம் " நூலின் பெயரே முதல் எழுத்து ஒன்றி வரும் மோனையோடு அமைந்தது சிறப்பு.  இலக்கிய இணையர் தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன், இருவரும் இணைந்து எழுதிய நூல்.  இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல.  அதனால் தான் இலக்கிய இணையர் என்று அழைக்கப்படுகின்றனர்.  இலக்கிய இணையரின் இலக்கியத் தரமான உயர்ந்த படைப்பு இந்நூல்.

       திருக்குறள் என்ற தங்கத்தை உருக்கி வைரக்கற்கள் பதித்து அழகூட்டி தமிழ்த்தாய்க்கு அணிகலன் அணிவித்து உள்ளனர்.  உலகப்புகழ்ப் பெற்ற திருக்குறளுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வண்ணம் வடித்திட்ட ஆராய்ச்சி நூல், ஆய்வு நூல், வழிகாட்டி நூல், திருக்குறளுக்குப் பெருமை கூட்டும் நூல். கூட்டு முயற்சியில் விளைந்த நல் முத்து நூல்.

       முனைவர் எஸ். ஸ்ரீதரன்  சென்னை மாநிலக் கல்லூரியின் இந்தித்துறைத்தலைவர் (ஓய்வு) அவர்ககளின்  அணிந்துரை தோரண வாயிலாக வரவேற்கின்றது.  அணிந்துரை எழுதும் பேறு கிடைத்தது என்று பெருமை கொள்கிறார்.

       இந்நூலில் திருக்குறளில் முப்பால் இருப்பது போலவே ஒப்பியல், உரையியல், நோக்கியல் என மூன்று பகுதிகளாக கட்டுரைகளை வரிசைப்படுத்தி உள்ளனர்.  திருக்குறள் பற்றி எத்தனையோ நூல்கள் வந்துள்ளன.  இந்த மூன்று கோணத்தில் இதுவரை ஒரு நூல் வரவில்லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.  ஆகச்சிறந்த நூலாக வந்துள்ளது.

       இந்நூல் வெளியீட்டு விழாவில் எழுத்துவேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் குறிப்பிட்டது போல இந்நூலிற்கு பரிசு விருது உறுதியாகக் கிடைக்கும்.

       நாம் சுற்றுலா செல்லும் போது, உடன் ஒரு வழிகாட்டி வருவார்.  அவர்  அந்த இடம் வரலாறு அனைத்து நன்கு அறிந்து இருப்பார் நமக்கு எடுத்து இயம்புவார்.  அதுபோல திருக்குறள் என்பது நமக்கு வழிகாட்டி.  அது காட்டும் வழியில் பயணித்தால் நாம் வாழ்வு சிறக்கும்.  வழிகாட்டும் வள்ளுவம் என்பது முற்றிலும் உண்மை. 

கடலில் தத்தளிப்பவனுக்கு திசை காட்டும் கலங்கரை விளக்கம் போல துன்பத்தில், இருளில் தத்தளிப்பவனுக்கு வழிகாட்டி ஒளியூட்டும் திருக்குறள்.  பெயர் பொருத்தமாக சூட்டியது மட்டுமன்றி கட்டுரைகளின் மூலம் வள்ளுவம் எப்படி எல்லாம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றது என்பதை நன்கு விளக்கி உள்ளனர்.

       தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கியத் துறைத் தலைவராக இருந்தவர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள், செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர்.  தற்போது காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்கள்.  இருவருக்கும் தமிழின்பாலும் ஒப்பிலக்கியத்தின் பாலும் திருக்குறளின் பாலும் தோய்ந்த அறிவு உள்ள காரணத்தால் மற்றவர்களோடு திருக்குறளை ஒப்பிட்டு ஒப்பிலக்கியம் படைத்துள்ளனர்.நூல் ஆசிரியர்கள் இருவருமே பேச்சு எழுத்து என்ற இரண்டு துறையிலும் இலக்கிய இணையராக  தனி முத்திரைப் பதித்து வருபவர்கள் .இருவரும் காதலித்துக்   கரம் பிடித்து மணி விழாக் கண்ட இலக்கிய இணையர்கள் 

       முதல் கட்டுரையிலேயே, “திருவள்ளுவர் – ஓர் உடன்பாட்டுச் சிந்தனையாளராக” என்று தான் தலைப்பு வைத்துள்ளனர்.  உண்மை திருக்குறளில் எந்த ஒரு இடத்திலும் எதிர்மறையான கருத்தையே பார்க்க முடியாது.  இன்றைய தன்னம்பிக்கை எழுத்தாளர்கள் அனைவருக்கும் ஆசான்.  நமது திருவள்ளுவர்.

 இந்நூல் வெளியீட்டு விழாவில் எழுத்துவேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் குறிப்பிட்டது நினைவிற்கு வந்தது.  மகாகவி பாரதி கூட கோபத்துடன் விரக்தியுடன் எதிர்மறை கருத்துக்கள் பாடி உள்ளனர். ஆனால் திருவள்ளுவர் எந்த ஒரு இடத்திலும் எதிர்மறை கருத்தை எழுதவில்லை என்றார்கள்.

       நேர்மையாளர்கள், நேர்மறை சிந்தனையாளர்கள், அறவோர், நல்லோர் அனைவரும் விரும்புவது திருக்குறள்.  காரணம், திருக்குறாள் படித்த்தோடு நின்று விடாமல் அதன்வழி வாழ்ந்த காரணத்தால் வாழ்வாங்கு வாழ்கின்றனர்.  மாமனிதர் அப்துல் கலாம் திருக்குறள் காட்டிய வழி நடந்தார்.  உலகம் போற்றியது.  இந்த நூல் படிப்பதுடன் நின்று விடாமல் வாழ்வில் கடைபிடித்து நடந்தோமானால் நம் வாழ்வு சிறக்கும்.  மார்க்கஸ் அரேலியகம், கன்பூசியஸ், கபீர் மட்னு, சர்வக்ஞர் ஆகியோருடன் திருவள்ளுவரை ஒப்பிட்டு வடித்த முதல் பகுதி கட்டுரைகள் அருமை.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். ஒரே கல்லில் ஆறு  மாங்காய்கள். ஒரே நூலில் 6 அறிஞர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள உதவும் நூல்.

       இருவரின் கடின உழைப்பை உணர முடிகின்றது.  ஒப்பீடு என்பது மேம்பாடுக்காக இல்லாமல் ஆழமாக சிந்தித்து படித்து ஆய்வுரை நல்கி உள்ளனர்.  திருக்குறளுக்கு பலர் உரை எழுதி விட்டனர்.  அவற்றில் தேர்ந்தெடுத்து கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார், திரு.வி.க., நாமக்கல் கவிஞர், பாவேந்தர், தேவநேயப் பாவாணர், வா.சுப. மாணிக்கம், தமிழண்ணல், சிற்பி, முத்தாய்ப்பான முத்திரை உரைகளை தேர்ந்தெடுத்து கட்டுரை வடித்தது சிறப்பு. 

 மறைந்தும் மக்கள் மனங்களில் வாழும் வ.உ.சி. தொடங்கி இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் சாகித்ய அகதெமி விருதாளர் கவிஞர் சிற்பி வரை தேர்ந்தெடுத்த உத்தி மிக நன்று.  ஆய்வு மாணவர்களுக்கு இந்நூல் ஒரு கலைக்களஞ்சியம். 100 நூலகளுக்கு சம்மான நூல். திருக்குறள்  தொடர்பான அய்யங்களை தெளிவிக்கும் நூல். முதுகலை மாணவர்களுக்கு பாடநூலாக தகுதி பெற்ற நூல். 

 இந்நூல் விமர்சனம் எழுதிய அன்று, நாளிதழில் நீதியரசர் மகாதேவன் அவர்கள், “திருக்குறளை இன்பத்துப்பால் தவிர்த்து மற்ற இருபாலையும் மாணவர்களுக்கு முழுமையாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்று” வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு படித்து மகிழ்ந்தேன். எனது பாராட்டையும் முக நூலில் பதிவு செய்தேன் . 

       நாடறிந்த நல்ல சிந்தனையாளர், பேச்சாளர், எழுத்தாளர், நேர்மையான முதன்மைச் செயலர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், திருக்குறளில் மனிதவள மேம்பாடு, திருவள்ளுவரும், ஷேக்ஸ்பியரும் என்று இரண்டு முனைவர் பட்ட ஆய்வு முடித்து, மூன்றாவதாக கம்ப இராமாயணத்தில் சொல்லாட்சி என்ற மூன்றாவது முனைவர் பட்டம் முடித்துள்ளார்.அறவழி நடக்கும் சான்றோர்கள் அனைவரும் விரும்பும் நூல் திருக்குறள் .திருக்குறள் விரும்பி விட்டால் அதன் வழியே நடப்பார்கள் .அறம்  தவற மாட்டார்கள் .சுமுதயம் அறவழி வாழ வழிகாட்டுவது திருக்குறள் .திருக்குறளின் சிறப்பியல்பு அனைத்தையும் எடுத்து இயம்பிடும் நூல் இது

       வல்லவர்கள், நல்லவர்கள் எல்லோரும் போற்றிடும் திருக்குறள்.  இந்த நூல் படித்தால் இன்னும் போற்றுவார்கள்.  திருக்குறள் என்ற மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது இந்நூல்.

       நூலின் மூன்றாம் பகுதியான நோக்கியல் கட்டுரைகளும் முத்தாய்ப்பானது. மனித சமுதாயம் சண்டை சச்சரவுகளின்றி அமைதியாக, மகிழ்வாக, நிம்மதியாக வாழ வழி சொன்ன வள்ளுவத்தின் நோக்கம் போற்றுதற்குரியது.  நூலில் இருந்து பதச்சோறாக சில வரிகள்.

       மனிதனுக்கு இயல்பாக அமைந்த முயற்சியைப் படிப்படியாகப் பயற்சியால் பயன்படுத்தினால், உழை சகித்துக் கொள்ளுதல், அமைதியாக நுகர்தல் ஆகியவற்றின் வாயிலாக அதனைப் புறங்கண்டு உயர்வு அடையலாம். வள்ளுவர் நோக்கில் ஊழையும்  .உப்பக்கம் காணும் வழிமுறை இதுவே ஆகும். 

       விதி என்று ஒன்று இல்லை, ஒருவேளை அப்படி ஒன்று இருந்தாலும், உன் உழைப்பால், முயற்சியால், மதியால் மாற்றி எழுதலாம் என்கிறார் வள்ளுவர்.  இந்நூலின் இறுதியில் நூலாசிரியர்கள் இருவரைப் பற்றிய குறிப்பும், எழுதிய நூல்கள் பட்டியலும், முக்கியமான விமர்சங்களும், நான் எழுதிய இணைய விமர்சனமும் இடம் பெற்றுள்ளது.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! . மே தினக் கவிதை ! கவிஞர் -ப.கண்ணன்சேகர், திமிரி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
.
மே தினக் கவிதை !
                            கவிஞர் -ப.கண்ணன்சேகர், திமிரி
                                 9894976159


வேர்வையின் துளியது விழுகின்ற மண்ணெல்லாம்
      வெற்றியின் தேவதை வசிக்கின்ற தலமாகும்!
போர்த்திட்ட பசுமையாய் பூத்திடும் பூமியில்
      பொதுமையின் சித்தாந்தம் பொங்கிட நலமாகும்!
கார்முகில் உழைப்பினால் கடும்மழை பொழிவாக
      கருத்தோடு உழைத்திடு காண்பது வளமாகும்!
ஏர்முனை பிடித்திடும் ஏழ்மையின் தோழனும்
      இவ்வுலக அச்சாணி இயக்கத்தின் பலமாகும்!

நாள்தோறும் உழைப்பினால் நலிவுற்ற தொழிலாளி
      நலமுடன் வாழ்ந்திட நடத்தினர் போராட்டம்
தோள்தட்டி துவங்கிய தோழர்கள் கோரிக்கை
      தொடர்ந்திட உலகெலாம் துளிர்த்தன ஆர்ப்பாட்டம்!
கேள்விகள் கேட்டிட கிடைத்தது வெற்றியே
       கேடில்லா வாழ்வாலே கண்டனர் நீரோட்டம்!
நாள்தோறும் எட்டுமணி நலமுடன் பணியாற்றி
       நாட்டுயர்வை கொண்டது தொழிலாளர் தேரோட்டம்!


செந்நிற குருதியே செழுமையின் அடையாளம்
        ஜெகமெலாம் செழிக்கட்டும் சிரித்தாடும் கொடியோடு!
சிந்தனை மின்னல்கள் சிறகென அசைந்திட
        சந்தன  வாசமாய் சரித்திர நடைபோடு!
உந்திடும் செய்கையே உழைப்பென நின்றாட
        உன்னாலே உருவாகும் உயர்வாக நம்நாடு!
முந்தைய காலத்து முழுமையின் உழைப்பாலே
        முன்னேற்றம் கண்டிட மேதினம் கொண்டாடு!

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

29.4.2016 இன்று பாவேந்தர் ,புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பிறந்த நாள் !
பாரதிதாசனுக்கு இணை ஒருவர் உள்ளார் ! கவிஞர் இரா .இரவி ! 

புரட்சிக் கவிஞர் என்றால் பாரதிதாசன் ! 
பாரதிதாசன் என்றால் புரட்சிக்கவிஞர்! 
தந்தை பெரியாரின் புரட்சிக்கருத்துக்களை 
தனது பாடல்களில் வடித்துக் காட்டியவர்! 
தமிழ் ஆசிரியராகப் பணியினைத் தொடங்கியவர்! 
தமிழ் ஆசு கவியாக வாழ்வில் உயர்ந்தவர்! 
கொள்கையில் குன்றாக என்றும் நின்றவர்! 
குணத்தில் அன்பின் சிகரமாகத் திகழ்ந்தவர்! 
கனக சுப்புரத்தினம் என்ற இயற்பெயரை பாரதிக்காக 
பாரதிதாசன் என்று மாற்றிய உண்மைச் சீடர்! 
பாரதிதாசன் ஆத்திசூடி அழகாக வடித்தவர்! 
பாரினில் அனைவரும் விரும்பிடும் பாடல் படைத்தவர்! 
பாடல்களால் பரவசம் படிப்பவர்களுக்குத் தந்தவர்! 
பார் போற்றும் பாடல்கள் புனைந்தவர்! 
பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்தவர்! 
பகுத்து உணர பாடலால் உணர்த்தியவர்! 
தமிழ் இன உணர்வை கவிதையில் ஊட்டியவர்! 
தமிழுக்காக குரல் தந்த புதுவைக் குயில் அவர்! 
‘இருண்ட வீடு’ தந்து ‘குடும்ப விளக்கு’ ஏற்றி 
‘எதிர்பாராத முத்தம்’ தந்து ‘அழகின் சிரிப்பு’க் கண்டவர்! 
‘தமிழச்சியின் கத்தி’யை ‘பாண்டியன் பரிசாக’த் தந்தவர்! 
‘குயில்’ ‘இசையமுது’ ‘குறிஞ்சித் திட்டு’ வடித்தவர்! 
‘பெண்கள் விடுதலை’யை ‘பிசிராந்தையார்’க்கு யாத்தவர்! 
படைப்பால் ‘தமிழ் இயக்கம்’ கண்ட பாவலர்! 
புதுவையில் பிறந்திட்ட புதுமைக் கவிஞர்! 
பிரஞ்சு படித்த போதும் தமிழை நேசித்தவர்! 
பண்டிதர்களிடம் தமிழைக் கற்றவர்! 
பைந்தமிழை அமுதமென்று புகழ்ந்தவர்! 
பாடாத பொருள் இல்லை எனுமளவிற்கு 
பல்வேறு பொருள்களில் பாடிய பாவலர்! 
கவிதை கதை வசனம் கட்டுரை என 
கணக்கிலடங்காத படைப்புகள் படைத்தவர்! 
சகலகலா வல்லவராக வாழ்ந்து சிறந்தவர்! 
சரித்தியம் படைத்து கவிஉலகில் உயர்ந்தவர்! 
குடும்பக்கட்டுப்பாடு பேசுகிறோம் இன்று 
குடும்பக்கட்டுப்பாடு பற்றி அன்றே பாடியவர்! 
தமிழின் அருமை பெருமை உணர்த்தியவர்! 
தமிழருக்கு மானமும் அறிவும் கற்பித்தவர்! 
பாரதிதாசன் கவிதைகள் படித்தால் போதும் 
பைந்தமிழ்ச் சொற்கள் யாவும் தெரியும்! 
தமிழ் எனும் கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்! 
தமிழ் முத்துமாலை தொடுத்து வழங்கியவர்! 
கவிதையின் சுவையை பாமரருக்கும் உணர்த்தியவர்! 
கவிதையில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர்! 
புதுவையின் பெருமைகளில் ஒன்றாக மாறியவர்! 
புதுமைகள் படைப்புகளில் புகுத்தி வென்றவர்! 
சொற்களைச் சுவைபட பாட்டில் யாத்தவர்! 
சுந்தரத்தமிழை சொக்கிடும் வண்ணம் தந்தவர்! 
பாரதிதாசனுக்கு இணை ஒருவர் உள்ளார்! 
பாரதிதாசன் தான் அந்த ஒருவர்!

புரட்சிக்கவிஞர் ! கவிஞர் இரா .இரவி !

புதுவையின் புதுமை 
பகுத்தறிவின் செழுமை 
புரட்சிக்கவிஞர் !

குடும்பவிளக்கு ஏற்றிய 
கவிதைச் சுடர் 
புரட்சிக்கவிஞர்  !

அன்றே உரைத்தவர் 
அளவான குடும்பம் 
புரட்சிக் கவிஞர்  !

பெரியாரின் போர் முரசு 
பார் போற்றும் பா அரசு 
புரட்சிக் கவிஞர்  !

தமிழை நேசித்தவர் 
தன்னுயிருக்கும் மேலாக 
புரட்சிக் கவிஞர்  !

மகாகவி பாரதியை மதித்தவர் 
மட்டற்ற கவிகளை வடித்தவர் 
புரட்சிக் கவிஞர்  !

சங்கநாதம் முழங்கியவர் 
சங்கத்தமிழ் வளர்த்தவர் 
புரட்சிக் கவிஞர்  !

கனக சுப்பு ரத்தினம் 
கவிதைகள் யாவும் ரத்தினம் 
புரட்சிக் கவிஞர்  !

சூழ்ச்சிகள் கழித்து 
எழுச்சிகள் விதைத்தவர் 
புரட்சிக் கவிஞர்  !

அஞ்சாத சிங்கம் 
பாடல்கள் தங்கம் 
புரட்சிக் கவிஞர்  !
Attachments area

தென் இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவில் இன்று சுரங்கப் பாதை தொடர் வண்டி தொடங்கப்பட்டது

தென் இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவில் இன்று சுரங்கப் பாதை தொடர் வண்டி தொடங்கப்பட்டது .நாளை முதல் பயணிகள் பயணிக்கலாம் நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை . சுற்றுலாப் பயணிகள் தொடர் வண்டியில் பயணித்து சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களை அடையலாம் . தகவல் படம் கவிஞர் இரா .இரவி

"ஹைக்கூ முதற்றே உலகு" நூல் ஆசிரியர் ;கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் ;கவிஞர் ஆனந்தி !


"ஹைக்கூ முதற்றே உலகு"

நூல் ஆசிரியர் ;கவிஞர் இரா.இரவி !

நூல் விமர்சனம் ;கவிஞர் ஆனந்தி !

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17.  
பக்கங்கள் : 154, 
விலை : ரூ. 100 .
044-24342810. vanathipathippakam@gmail.

"ஹைக்கூ முதற்றே உலகு" - கவிஞர் இரா.இரவி அவர்களின் ஹைக்கூ கவிதை நூல் தொகுப்பு..."முதற்றே உலகு" தலைப்பு மட்டும் அல்ல... நூலில் இடம்பெற்றுள்ள கருத்துகளும் திருக்குறளுக்கு, நிகரானவைகளாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.... நூலின் பெரும் பகுதியில் ஹைக்கூ வடிவமே நிறைந்திருக்கிறது..முப்பது பக்கங்களில் சொல்ல வேண்டிய செய்திகளை மிக தெளிவாக மூன்று அடிகளுக்குள் சொல்லியிருப்பது.....வியப்பை தருகிறது....படிக்கையில், வாசகர் மனதிலும் நிலைத்து நின்று சிந்திக்கத் தூண்டுகிறது...கூடுதலாக துளிப்பா, லிமரைக்கூ, லிமர்புன், பழமொன்ரியு போன்ற பல வடிவங்களிலும் கவிதைகள் படைத்திருக்கிறார்கள்......பல்சுவைகளிலும் தனது எழுத்தாளுமை திறனை நிரூபித்திருக்கிறார்கள்.....சிகரத்தின் சிகரம் கலாம் அவர்களை பெருமைபடுத்தும் விதமாக, நூலின் தொடக்கமே ('கலாம் 40')மிக அருமையாய், 40 ஹைக்கூகள் அமைந்துள்ளது...அடுத்தடுத்து பல்வேறு கோணங்களில் நூல் பயணித்தாலும், இறுதியில் கவிஞரின் நாட்டுப்பற்றும், சமூக அக்கறையுமே வெளிபட்டு, மேலோங்கி நிற்கிறது...

"அவர் மூச்சு மட்டுமே நின்றது
அவர் பற்றிய பேச்சு நிற்காது
கலாம்"

-கலாம் அவர்கள், தனது கடைசி நொடி வரை நாட்டிற்காகவே வாழ்ந்தவர்கள்...மாணவர்களிடம் அறிவை விதைத்தவர்கள்...எளிமையான மனிதர்....பெக்ரானஅணு சோதனைகள் மூலம் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கென்று தனி இடத்தை பெற்று தந்தவர்கள்....இறந்தாலும்...அவரது புகழ் நின்று நிலைத்து வாழும்...என்பதை தான் கவிஞர் அழகாய் மூன்று அடிகளுக்குள் சொல்லியிருக்கிறார்கள்...

கைகளின்றியும் வாழலாம்
கால்களின்றியும் வாழலாம்
வாழ இயலாது தன்னம்பிக்கையின்றி!

- தன்னம்பிக்கையூட்டும் அருமையான வரிகள்...நேர்மறை எண்ணங்களை விதைத்து சென்றிருக்கிறார்கள்....

பானையில் கற்கள் போடவில்லை உறிஞ்சியது குழல் வைத்து
கணினி யுகத்தின் காகம்!

-மாறி வரும் நவீன உலகத்திற்கு ஏற்ப, கவிஞர் காக்கையையும் நவீன படுத்தியிருப்பது வியக்கத்தக்கது....

காயமில்லை வானிலிருந்து
விழுந்தும்
மழை!

- நேர்த்தியான சிந்தனை...முதல் இரண்டு அடிகளை படிக்கும் போதே....இறுதி வாக்கியம் என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிறது ...அருமை...

இயற்கையின்
கஞ்சத்தனம் 
வறட்சி....

-வறட்சிக்கே புது இலக்கணம் வகுத்திருக்கிறார்கள்....வெகு சிறப்பான சிந்தனை பாராட்டத்தக்கது....

முடிவாகிறது
நிதியால்
சில நீதி....

-கையூட்டுக்கு எதிராக சாட்டையை சுழற்றியிருக்கிறார்கள்... 

வெகு நாட்களாகி விட்டன
நேர்மை விடைபெற்று
அரசியல்!

-அரசியல் பற்றிய, தனது ஆதங்கத்தை பதிவிட்டு இருக்கிறார்கள்....

வயது அறுபது
கல்லூரி மாணவர்
கதாநாயகன்!

-சமகால நிகழ்வுகளை அழகாய் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்...

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்
எல்லாப் பிள்ளைக்கும் வாயுண்டு
பேசத் தெரிந்த பிள்ளை பிழைக்கும்!

-எதார்த்தம்...காலத்திற்கு ஏற்றார் போல, பழமொழிகளை மாற்றியிருக்கிறார்கள்....அருமை...

தூரப்போனது
தூய்மை
அரசியல்...

-தற்கால அரசியலுக்கு எதிராய் சாட்டையை சுழற்றி இருக்கிறார்கள்....

பூங்கொத்து, கலங்கரை விளக்கம், விழிகள், பகுத்தறிவு, கண்ணீர் போன்ற பல வித்தியாசமான பாடுப்பொருள்களை ஹைக்கூவோடு இணைத்திருப்பது வெகு சிறப்பு....

அனைவரும் வாசிக்க வேண்டிய பொக்கிஷம்....

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

வியாழன், 28 ஏப்ரல், 2016

dr.Iraianbu IAS speaks about Ervadiyar

பெங்களூரு ஓம் சக்தி பேலஸ் விடுதியில் உள்ள அழகிய விளக்கு ! படம் கவிஞர் இரா .இரவி

பெங்களூரு ஓம் சக்தி பேலஸ் விடுதியில் உள்ள அழகிய விளக்கு ! 


தென் இந்தியாவில் முதல் முறையாக இன்று பெங்களூருவில் தொடங்க உள்ள சுரங்கப் பாதை தொடர் வண்டி நிலையம்( கெம்பேகௌடா )முன்பு கவிஞர் இரா .இரவி !

தென்  இந்தியாவில் முதல் முறையாக இன்று பெங்களூருவில் தொடங்க உள்ள சுரங்கப் பாதை தொடர் வண்டி நிலையம்( கெம்பேகௌடா )முன்பு கவிஞர் இரா .இரவி !

புதன், 27 ஏப்ரல், 2016

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு .உலகப்பொது மறைக்கு உச்சம் தந்த தீர்ப்பு. நன்று .பாராட்டுகள் .நீதியரசர் மகாதேவன் அவர்களை பாராட்டுவோம்

.வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு .உலகப்பொது மறைக்கு உச்சம் தந்த தீர்ப்பு. நன்று .பாராட்டுகள் .நீதியரசர் மகாதேவன் அவர்களை பாராட்டுவோம்

பெங்களூருவில் அந்தி மாலையிலும் நடக்கும் கட்டிடப்பணி படம் கவிஞர் இரா .இரவி !

பெங்களூருவில் அந்தி மாலையிலும் நடக்கும் கட்டிடப்பணி படம் கவிஞர் இரா .இரவி !

அழகுதான் ரசனையோடு பார்த்தால் பட்டமரமும் ! கவிஞர் இரா .இரவி !

அழகுதான்
ரசனையோடு பார்த்தால்
பட்டமரமும் !
கவிஞர் இரா .இரவி !

பெங்களூருவில் உள்ள தனம்பிக்கையின் சின்னம் விவேகானந்தர் சிலை ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

பெங்களூருவில் உள்ள தனம்பிக்கையின் சின்னம் விவேகானந்தர் சிலை ! படங்கள் கவிஞர் இரா .இரவி !


படத்திற்கு எழுதிய கவிதை ! கவிஞர் இரா .இரவி !படத்திற்கு எழுதிய கவிதை ! கவிஞர் இரா .இரவி !

என்ன சாதி என்ன மதம் 
எதுவும் தெரியாது 
நானும் நீயும் நண்பர்கள் !

கள்ளம் கபடம் அறியாத 
குழந்தைகள் மலரும் நினைவுகளை
மலர்வித்தனர் !

காலில் காலணி இல்லை 
வறுமை வாட்டியபோதும் 
பஞ்சமில்லை மகிழ்ச்சிக்கு !

வறுமையிலும் செம்மை 
வனப்பான புன்னகை 
இருவரிடமும் !

திரும்பி வராது 
குதூகலமான 
குழந்தைப் பருவம் !

ஓடி விளையாடு பாப்பா 
பாரதி வரிகளுக்கு 
செயல் வடிவம் !

எங்களுக்கு சிரிப்பா வருது 
அரசியல்வாதிகளை 
நினைத்தால் !

வருங்கால கலாமும் 
வருங்கால கல்பனா சாவுலாவும் 
வருகின்றனர் அரசுப்பள்ளிக்கு ! 

கவலையா
அப்படினா   என்ன ?
கேட்கும் குழந்தைகள் !

இணைந்த கரங்கள் 
அடையும் சிகரங்கள் 
சாதிக்கும் தங்கங்கள் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

இலக்கிய இணையர் அறக்கட்டளை விழாவில் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் கவிஞர் இரா .இரவிக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டிய போது ! இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்

இலக்கிய இணையர் அறக்கட்டளை விழாவில் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் கவிஞர் இரா .இரவிக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டிய போது ! 
இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்.

பெங்களூரு சுரங்கப் பாதை சுவற்றில் வரைந்துள்ள ஓவியங்கள் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

பெங்களூரு சுரங்கப்  பாதை சுவற்றில் வரைந்துள்ள ஓவியங்கள் .படங்கள்  கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! ஏபரல்-29. உலக நடன தினக் கவிதை ! கவிஞர் ப.கண்ணன்சேகர், திமிரி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

ஏபரல்-29. உலக நடன தினக் கவிதை !
கவிஞர் ப.கண்ணன்சேகர், திமிரி.  kavisooriyan@gmail.com
                  பேச 9894976159.

இசைக்கு அசையும் இனிய கலையென
    இறைவன் காட்டிய எழில்மிகு நடனம்!
அசைவில் சொல்லும் அபிநய காட்சி
     ஆடிடும் போது அழகிய வதனம்!
திசைகள் தோறும் நாட்டிய கலைகள்
     தமிழர் கூத்தை தந்திடும் புவனம்!
தசைகள் முதலாய் தருவது பயிற்சி
     தனக்குத் தானே தியானிக்கும் மனமும்!

கண்ணில் அசைவை காட்டிடும் ஜாலம்
      காண்போர் மனதை கவர்ந்திடும் வென்று!
விண்ணில் வில்லென வளைந்திட நடனம்
      வியக்க செய்யும் விருந்தென ஒன்று!
மண்ணில் உயிர்களும் மகிழ்ந்தே ஆடிட
       மலரும் நாட்டியம் மயக்கிடும் நின்று!
பண்ணிசை மீட்டிட பாதங்கள் ஆடிட
       பண்பாட்டுக் கோலம் பார்த்திட நன்று!

மணிப்பூரி கதகளி மோகினி ஆட்டம்
        மரபினை காட்டும் குச்சுப்பிடி நடனம்!
தனிதன்மை கொண்ட தமிழர் பரதம்
        தன்னிக ரில்லா இந்தியக் கலைகள்!
புனிதம் நிறைந்த புண்ணிய நடனம்
        பூத்திட செய்தாள் பூமகள் தாசி!
கனியின் சுவையென கருத்தில் வைத்து
        கலைமிகு நடனம் காத்திட நேசி!

           

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

அழகிய வெள்ளைக் குதிரை பெங்களூரு . படம் கவிஞர் இரா .இரவி !

அழகிய வெள்ளைக் குதிரை  பெங்களூரு . படம் கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு ! வானமே எல்லை ! கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு !
வானமே எல்லை !                 கவிஞர் இரா .இரவி !

எண்ணம் மிக மிக உயர்வாக இருக்கட்டும் 
இனிய செயலும் மிக உயர்வாக மாறும் !

இலட்சியம் பெரிதினும் பெரிதாக இருக்கட்டும் 
இலட்சியதிற்கான பயணம் தொடரட்டும் !

தெரியாது நடக்காது முடியாது விட்டுவிடுக ! 
தெரியும் நடக்கும் முடியும் என்றே முயன்றிடுக !

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்திடுக 
தன்னம்பிக்கை மூன்றாவது கையாகட்டும் !

ஆம்சுட்ராங் முடியாது என்று நினைத்திருந்தால் 
அவரால் நிலவில் கால் பதித்திருக்க முடியாது !

எடிசன் முடியாது என்று ஒதுங்கி இருந்தால் 
இன்றும் மின்சாரம் உலகில் இருந்திருக்காது !

வாசுகோடகாமா பயணிக்காமல் திரும்பி இருந்தால்
வழியை இந்தியாவிற்கு கண்டு இருக்க முடியாது !

காந்தியடிகள் நடக்காது  என்று நினைத்திருந்தால் 
கண்களால் விடுதலையைப் பார்த்திருக்க முடியாது !

தந்தை பெரியார் முடியாது என்று சோர்ந்திருந்தால் 
தமிழ்நாட்டில் சமுகநீதி மலர்ந்திருக்க முடியாது !
.
அறிஞர் அண்ணா இயலாது என்று நினைத்திருந்தால் 
அடுக்குமொழியால் அனைவரையும் கவர்ந்திருக்க முடியாது !

மாமனிதர் அப்துல் கலாம்  சோர்ந்து இருந்தால் 
மாணவர்களிடையே  தன்னம்பிக்கை விதைத்திருக்க  முடியாது !

தயக்கம் முன்னேற்றத்தின்  தடைக்கற்கள் அறிந்திடுக 
தன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதற்படி தெரிந்திடுக !

வானமே எல்லையாகக் கொள் காரணம் 
வானத்திற்கு  எல்லையே இல்லை  புரிந்திடுக !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

வழிகாட்டும் வள்ளுவம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் நன்றி தினத்தந்தி நாளிதழ்

வழிகாட்டும் வள்ளுவம் !

நூல் ஆசிரியர்கள் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன்
 
நன்றி தினத்தந்தி நாளிதழ் .

இலக்கிய இணையர் அறக்கட்டளை விழா படம் . நன்றி . தினமணி நாளிதழ் !

இலக்கிய இணையர் அறக்கட்டளை விழா படம் .

நன்றி . தினமணி நாளிதழ் !

இலக்கிய இணையர் அறக்கட்டளை விழா படங்கள் . இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்

இலக்கிய இணையர் அறக்கட்டளை விழா படங்கள் .
இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது