வியாழன், 31 மே, 2018

தமிழர் முழக்கம்! நூல் ஆசிரியர் : ‘தேசிய நல்லாசிரியர்’ கவிஞர் சி. சக்திவேல் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
தமிழர் முழக்கம்!

நூல் ஆசிரியர் : ‘தேசிய நல்லாசிரியர்’ 
கவிஞர் சி. சக்திவேல் !

அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

******
நூலாசிரியர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். விவேகானந்தா கல்வியியல் கல்லூரி (கும்மங்குடி) முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  ஓய்வுக்குப் பின் ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு ஓய்வின்றி தமிழ்ப்பணி செய்து வருபவர்.  மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கில் பாடிய கவிதைகளையும் மற்ற கவிதைகளையும் தொகுத்த "தமிழ் முழக்கம்" நூலாக வழங்கி உள்ளார்.

நூலின் தலைப்பிற்கு ஏற்ப நூல் முழுவதும் தமிழ் முழக்கம் கவிதைகளே உள்ளன.  இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் தேவைப்படும் கவிதைகள் இவை.  எங்கும் எதிலும் தமிங்கிலம் பரவி வரும் இக்காலத்தில் உலகத்தமிழர்களுக்கு விழிப்புணர்வு விதைக்கும் கவிதைகள் மிகச்சிறப்பு. 

அன்னைத் தமிழ் வாழ்த்து!

அன்னைத் தமிழே ஆரமுதே 
அகிலம் காக்கும் ஒளிவிளக்கே
முன்னை விதித்த பரம்பொருளே 
மூச்சாய் உயிராய் இருப்பவளே!

     நூலாசிரியர் பேராசிரியர் கவிஞர் சி. சக்திவேல் அவர்களின் தமிழ்ப்பற்றைப் பறைசாற்றும் விதமாக கவிதைகள் உள்ளன.

     மம்மி எனும் போதினிலும் 
     டாடி எனும் போதினிலும்
     இம்மியேனும் மகிழ்வுண்டா ?
     இனியதமிழ் ஒலியுண்டா
     மம்மிதானே சடலமென்ற 
     மதி தானும் நமக்குண்டா ?
     வம்படியாய் ஆங்கிலத்தை 
     வந்தவாறு பேசுகிறார்.

     பெற்ற தாயை செத்தப் பிணமே என்று அழைக்கும் மடமையைச் சாடி உள்ளார்.  பலமுறை எடுத்துரைத்தும் பலர் இன்னும் மம்மி டாடி விடவில்லை.

     தமிழைக் காக்கும் தகுந்த வழி!

     இன்றே எழுக தமிழர் கூட்டம் 
 இனிக்கும் தமிழை எடுத்துக் கொள்க !
     ஒன்றே கருதுக; ஒன்றே செயக !
 ஊர்கள் தோறும் தமிழைச் சொல்க !

நூல் முழுவதும் மரபுக் கவிதைகளின் மூலம் மாண்புகள் மிக்க கனித்தமிழை உயர்த்திப் பாடி உள்ளார்.  பாராட்டுக்கள்.

நற்றமிழின் நாயகன்!

சிறுகூடற்பட்டி தந்த கண்ணதாசன்
          செப்பு கவிதத்துவத்தில் தமிழின் அரசன்
     மருவில்லா வளர் தமிழின் கவிமாமல்லன்
           மாசற்ற தெள்ளுதமிழ் உரைத்த ஈசன் !

உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதிலும் ஒப்பற்ற பாடல்களால் மக்களின் உள்ளங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசு கண்ணதாசனுக்கு வழங்கிய பாமாலை, அவர் புகழ் பரப்பும் புகழ்மாலை.

வள்ளுவரும் வாழ்வியலும்!

கனிந்துள பழத்தை உண்டு 
 காய்களை ஒதுக்குதல் போல்
     இனித்திடும் சொற்கள் கூட்டி 
 இயம்பலாம் கசப்பை விட்டு
     தனிமிகு சொற்கள் கொண்டு 
 நயம்படப் பேசச்சொன்ன
     த்னிப்பெரும் தெய்வப்புலவன் 
 தமிழ்மறை அய்யன் வாழ்க!

‘கனியிருப்ப காய் கவர்ந்தற்று’ என்ற திருக்குறளையும் அதன் பொருளையும் ஆங்கிலத்தில் படித்துவிட்டு மூல்மொழியான தமிழில் படிக்க, செக்கோசுலேவியாவிலிருந்து ஓர் அறிஞர் வந்தார்.  அவ்வளவு பெருமைமிக்க திருக்குறளை அழகாக கவிதையில் வடித்தது சிறப்பு.

தமிழாலே உயரும் நாடு!

சிங்கப்பூர்ப் பேரழகைச் சொன்னா லின்பம்
      சிந்தைகவர் அந்நாட்டில் வாழ்ந்தா லின்பம்
      மங்காத விளக்காகச் சுடரும் நாடு
      மாசில்லா உழைப்பாலே உயரும் வீடு !

சிங்காரமிக்க சிங்கப்பூர் தமிழ் ஆட்சிமொழியாகக் கொண்ட நாடு.  அதன் சிறப்பை கவிதையால் விளக்கியது சிறப்பு.

தடைகளை உடைத்துத் தமிழை உயர்த்து !

     தமிழ்நாட்டில் தமிழுக்குத் தடையா தொல்லை
     தகராத அவற்றிற்கு விடையா இல்லை
     தமிழ்நாட்டில் செம்மொழிக்கு இன்னல் என்றால்
     தள்ளாத முதுமையிலும் எதிர்த்து நிற்போம்!

உடல் முதுமை கண்டாலும், உள்ளம் போராடும் குணம் உண்டு.  தமிழுக்கு ஒரு தடை என்றால் அதனை உடைப்போம் என தமிழ்க்குரல் உரிமைக்குரல் தந்துள்ளார்.  உயர்நீதிமன்றத்திலும் கடவுளின் கருவறையிலும் ஒப்பற்ற தமிழ் ஒலிக்கும் நாளே தமிழருக்கு வாழ்வில் சிறந்த நாளாகும்.  இப்படி பல சிந்தனைகளை விதைக்கும் விதமாக கவிதைகள் பல உள்ளன.  பாராட்டுக்கள்.

தமிழா, உன் தமிழ் தமிழா?

     தாயினமுத மொழி மறந்தால் – நீ
     தரிகெட்டலைந்து மடிந்திடுவாய்!
     ஆயிரம் சொற்கள் இருக்கையிலே – நீ
     ஆங்கிலம் சேர்த்துப் பேசுகிறாய்!

ஆயிரக்கணக்கான சொற்களின் சுரங்கம் களஞ்சியம் நம் தமிழ்மொழி.  வளமான இலக்கிய இலக்கணம் உள்ள மொழி தமிழ்.  இல்லாதவன் கடன் வாங்கலாம்.  இருப்பவன் எதற்கு டன் வாங்க வேண்டும்.  ஆங்கிலச் சொற்கள் கலப்பின்றி நல்ல தமிழில் அனைவரும் பேசிட முயல வேண்டும்.  தமிங்கிலத்தைத் தொடர விடுவது தமிழ் மொழிக்கு இடராகவே அமையும்.

தேமதுரத் தமிழோசை ...

     முத்தான சொல்லெடுத்து முழங்கு கவி வடித்தெடுத்து
     வித்தான தமிழ் பரப்ப வேண்டும் – அதன்
     சொத்தான தமிழ் காக்கத் தூண்டும்.

மரபுக்கவிதைகளை பல்வேறு வகை மரபுகளைக் கையாண்டு மரபுக்கவி விருந்து வைத்துள்ளார். மரபுக் கவிதை காலத்தால் அழியாமல் நிலைத்து இருக்கும், படிக்கும் வாசகர்கள் மனதில் நன்கு பதியும்.  புது எழுச்சியை உருவாக்கும் தமிழ்ப்பற்றை வளர்க்கும்.  தமிழ்இனஉணர்வை ஊட்டும்.

நற்றமிழில் வேற்றெழுத்தைக் கலக்கல் நன்றா?

     மாற்றுமொழி எழுத்துக்களை 
 மதிகெட்டுத் திணிக்கின்றாய்!
     ஏற்றமிகு தாய்த்தமிழை 
 எடுத்தெறிந்து சிதைக்கின்றாய்!
     போற்று தமிழ் பொன்னெழுத்தைப் 
 பிழையென்று தள்ளுகிறாய்!
     துள்ளுமடா தமிழுலகம் 
 துணிந்தாயோ பழியேற்க!

உலக மொழிகளில் அதிக எழுத்துக்கள் உள்ள் மொழி தமிழ்மொழி.  எழுத்துக்கா பற்றாக்குறை தமிழில். எதற்காக தமிழில் பிறமொழி எழுத்துக்களை கலக்க வேண்டுமென்ற கேள்வியை எழுப்பி அழகு தமிழில், அமுதத் தமிழில் சுத்தமான தமிழில் பிறமொழி எழுத்து எனும் நஞ்சை கலப்பதை நிறுத்துங்கள் என்று சொல்லி வடித்த கவிதை நன்று.

பெருமைமிகுதமிழ்மொழியா? 
பிற எழுத்துக் குப்பைமேடா?

     கனிச்சுவை சிந்தும் நற்றமிழில் 
 கலப்படம் செய்வதை நிறுத்தி விடு 
தனித்துவம் மிளிரும் மொழிவிட்டு 
 தரமில் சொல்லை எறியெடுத்து !

உணவில் கலப்படம் உயிருக்குக் கேடு தரும்.  மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும் என்பதை கவிதையால் உணர்த்தியது சிறப்பு.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போல தமிழ் முழக்கம் செய்து, உறங்கிடும் தமிழரை மரபுக் கவிமுரசால் எழுப்பி உள்ளார்.  நூலாசிரியர், தேசிய நல்லாசிரியர், கவிஞர் சி. சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்!

நூல் ஆசிரியர் : பேராசிரியர் 
தமிழ்த்தேனீ இரா. மோகன் !
!
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 

வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி,
இரண்டாம் முதன்மைச் சாலை, தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600 113. 
பக்கம் : 156, விலை : ரூ. 100.

******
வாழும் தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு அவர் வாழும் காலத்திலேயே சூட்டப்பட்ட மணிமகுடம் இந்நூல். நூலாசிரியர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் பன்முக ஆற்றலை, ஆளுமையை நவரத்தினம் போல ஒன்பது தலைப்புகளில் படம்பிடித்துக் காட்டி உள்ளார் பாராட்டுக்கள்.

 இந்நூலை இந்த நூலின் நாயகர் ஔவை நடராசன் படித்து முடித்ததும் அவரது வாழ்நாளில் இன்றும் பல ஆண்டுகள் கூடி விடும் என்பது உண்மை.  படிக்கும் வாசகர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி சம்பந்தப்பட்ட படைப்பாளிக்கு கூடுதல் மகிழ்ச்சி கிட்டும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்களின் அணிந்துரையும், மருத்துவர் கவிஞர் நரம்பியல் வல்லுநர் ஔவை மெய்கண்டான் இருவரின் அணிந்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகுசேர்ப்பதாக உள்ளன, பாரட்டுக்கள்.

நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் பயின்றபோது பேராசிரியராக இருந்தவர் ஔவை துரைசாமிப்பிள்ளை.  ஔவை நடராசன் அவர்களுடன் பல இலக்கிய மேடைகளில் இருந்தவர் அவரது மகன் முனைவர் ந. அருள் அவர்களுடனும் நட்பு உண்டு.  ஆக மூன்று தலைமுறையை அறிந்தவர் என்பதால் இந்நூல் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. 

 நூலில் உண்மை உள்ளது.  இந்திரன், சந்திரன் என்று துதி பாடாமல் உள்ளது உள்ளபடி சான்றுகளுடன் நிறுவி பதமஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் தமிழ்ப்புலமையை ஆற்றலை உயர்ந்த பண்பை புலப்படுத்தி உள்ளார்.

வரலாறு தொடங்கி தமிழ்த்தொண்டு வரை நூலில் உள்ளது.  நூலிலிருந்து சிறு துளிகள்.  “திருவண்ணாமலை மாவட்ட்த்தைச் சேர்ந்த செய்யாற்றில் ஔவை துரைசாமி – உலகாம்பாள் இணையரின் மூன்றாவது மகனாக 24-04-1936இல் ஔவை நடராசன் பிறந்தார்.  அவருடன் பிறந்த ஆண்மக்கள் அறுவர் ; பெண்மக்கள் நால்வர், ஆண்மக்களுள் இருவர் பிறந்த சில நாட்களிலேயே இறந்து போயினர் ; பாலகுசம், திருஞானசம்பந்தன், நெடுமாறன் ஆகியோரும் மறைந்தனர்.  இப்போது ஆண்மக்களுள் திருநாவுக்கரசு, மெய்கண்டான் ஆகியோரும் பெண்மக்களுள் மணிமேகலை திலகவதி , தமிழரசி ஆகியோரும் வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்”.

நூலின் நாயகர் பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் பற்றி எழுதும் போது அவர் எங்கு பிறந்தார்? பெற்றோர் யார்? உடன்பிறந்த சகோதர சகோதரி என எல்லா விபரங்களும் சேகரித்து பாங்குற பதிவு செய்துள்ளார்.  அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்த்தி பின் அதனையே நூலாக்கி வடித்துள்ளார். பேசிய உரையை கட்டுரையாக வடிக்கும் உத்தி நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு கைவந்த கலை.  அக்கலையால் மலர்ந்த சிலையே இந்நூலாகும்.

முனைவர் ஔவை நடராசன் அவர்கள் தம் பணிக்காலத்தில் கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மையார் ஆகிய மூன்று முதல்வர்களை கண்டவர், மூவரிடமும் இசைந்து நின்று பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்-தக்கது.

மூன்று முதல்வர்களுடன் இசைந்து நின்று பணியாற்றியதே அளப்பரிய சாதனை தான்.  அதிசயம் தான்.  இதுபோன்ற பல அரிய தகவல்கள் நூலில் உள்ளன.

ஔவை நடராசன் அவர்கள், மனைவியை மதிக்கும் பாங்கு நூலில் உள்ளது.  "தாராவுக்கு ஈடாக இன்னொரு பெண்மகளை நான் காண முடியவில்லை.  தாராவைப் போல நூறு பேர் இருந்தால் தமிழகம் முழுவதும் மாற்றங்கள் பெற்று விடும்."இப்படி மனைவியை மனதாரப் பாராட்டி உள்ளார்.

பொருத்தமான திருக்குறளை தேர்வு செய்தமைக்கு எம்.ஜி.ஆர். பாராட்டிய நிகழ்வு. இப்படி நிகழ்வுகள் நூலில் உள்ளன.

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களுக்கு, கர்ணனுக்கு கவச குண்டலம் போல நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்று கூறி அவர்து நகைச்சுவைகளையும் விளக்கி உள்ளார்.

சங்க இலக்கியங்களில் வரும் 41 பெண்பாற் புலவர்கள் பற்றி ஔவை நடராசன் அவர்கள் தொகுத்து எழுதிய விளக்கங்கள் நூலில் உள்ளன.

சங்க இலக்கியப் பாடல்களின் விளக்கம் ஒப்பீடு என ஔவை நடராசன் அவர்களின் ஆய்வு நூல்களை ஆய்வு செய்து கனிச்சாறாக வழங்கி உள்ளார்.  ஔவை நடராசன் அவர்கள் பகுத்தறிவாளர் என்ற போதும் தமிழின் சுவைக்காக கம்ப இராமாயணத்தையும் ஆய்வு செய்து நூலில் வடித்துள்ள விதத்தை மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ளார்.  கம்பர் காட்டும் மந்தரை, கம்பர் காட்டும் குகன் என்று கம்பரின் பாத்திரப் படைப்புகளின் சிறப்பை, சிறப்பியல்பை எடுத்து இயம்பிய விதத்தை எழுதி உள்ளார்.

வள்ளலார் பாடிய பாடல்களை மேற்கோள் காட்டி ஔவை நடராசன் வடித்திட்ட இலக்கிய விருந்தின் சிறப்பை விளக்கி உள்ளார்.

சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமையின்றி வாழ்ந்த மகாகவி பாரதியார் பற்றி ஔவை நடராசன் அவர்கள் காட்டிய இலக்கியச் சோலையை நமக்குக் காட்சிப்படுத்தியது சிறப்பு. பாரதியாரின் ஆங்கிலப் புலமையையும் பாராட்டி உள்ளார்.  பாரதியார் பன்மொழி அறிஞர். அதனால் தான் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்குமில்லை" என்று பாட முடிந்தது.

அடுக்குமொழி உரையால் அடித்தட்டு மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அறிஞர் அண்ணாவைப் பற்றி ஔவை நடராசன் அவர்கள் வசனங்களின் சிறப்பை எடுத்து இயம்பியதை எடுத்துக் காட்டி வடித்துள்ளார்.

வாழும் தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்க்கு அவர் வாழும் காலத்திலேயே அவரது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மட்டுமல்ல, தமிழ் கூறும் நல்லுலகமே அறிந்து கொள்ள வடிக்கப்பட்ட அற்புத நூல் இது.

செவ்வாய், 29 மே, 2018

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்களின் " உன்னுள் ஒரு உன்னதம் " என்ற தலைப்பில் உன்னத உரை கேட்டு மகிழுங்கள்

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்களின் " உன்னுள் ஒரு உன்னதம் " என்ற தலைப்பில் உன்னத உரை கேட்டு மகிழுங்கள்-- https://www.youtube.com/watch?v=vL_6tP6NAh8

Iraiyanbu I A S = Unnul ore unnatham = 02

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் தி இந்து தமிழ் நாளிதழில் செவ்வாய் தோறும் எழுதி வரும் காற்றில் கரையாத நினைவுகள் படித்து மகிழுங்கள் .

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் தி இந்து தமிழ் நாளிதழில் செவ்வாய்  தோறும் எழுதி வரும் காற்றில் கரையாத நினைவுகள் படித்து மகிழுங்கள் .

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி


திங்கள், 28 மே, 2018

.தமிழர்களின் போராட்ட குணம் உலகம் அறிந்தது .வெற்றி தமிழர் ஒற்றுமைக்கு .கவிஞர் இரா .இரவி !

சல்லிக்கட்டு போலவே தமிழர்கள் போராட்டம் வென்றது .அண்டை மாநிலங்கள் வட மாநிலங்கள் அயல் நாடுகள் என உலகம் முழுவதும் உலகத் தமிழர்களின் உரிமைக்குரல் ஓங்கி ஒலித்ததால் கொடிய ஆலை அரசு ஆணையிட்டு மூடப்பட்டது .இப்போது செய்த செயலை துப்பாக்கிச் சூடு நடத்தும் முன்பு செய்து இருந்தால் உயிர்கள்   பலி நேர்ந்திருக்காது .எப்படியோ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு .இந்த ஒற்றுமை தொடர வேண்டும் .தமிழர்களின் உரிமைக்குரல் தொடர்ந்து ஒழிக்க வேண்டும் .தமிழர்களின் போராட்ட குணம் உலகம் அறிந்தது .வெற்றி தமிழர் ஒற்றுமைக்கு .கவிஞர் இரா .இரவி !

EASY HAPPY LIFE MAKER: 27.5.18 - மாமதுரைக் கவியரங்கம் - தமிழைக்காக்க ... ...

EASY HAPPY LIFE MAKER: 27.5.18 - மாமதுரைக் கவியரங்கம் - தமிழைக்காக்க ... ...: மாமதுரைக் கவியரங்கம் நிகழ்ச்சி - 27.5.18 - தமிழைக்காக்க...  மின்படங்கள்  இடம் : மணியம்மை மழலையர் பள்ளி , மதுரை . அன்று நான் வாசி...

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! என்றும் என் இதயத்தில்! கவிஞர் இரா. இரவிதினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

என்றும் என் இதயத்தில்!
கவிஞர் இரா. இரவி
முதல் காதல் மூச்சு உள்ளவரை நினைவிருக்கும்
முகம் இதயத்தில் கல்வெட்டாக பதிந்திருக்கும்!

நிறைவேறாமல் தோற்றாலும் அழிவதில்லை
நினைவுகளில் என்றும் வாழ்ந்திருக்கும்!

பசுமரத்து ஆணி போல நன்கு நெஞ்சத்தில்
பதிந்து இருக்கும் பசுமையான நினைவுகள் !

இசைஞானியை இருவருக்கும் பிடித்திருந்தது
இசைஞானி பாடல் இருவரும் ரசித்தோம் !

கவிதை இருவருக்கும் பிடித்திருந்தது
கவிதை வாசிக்கையில் உன் நினைவு!

மலர்கள் நம் இருவருக்கும் பிடித்திருந்தது
மலர்கள் பார்க்கையில் உன் நினைவு!

உனக்குப் பிடித்தவை எனக்கும் பிடித்தன
எனக்குப் பிடித்தவை உனக்கும் பிடித்தன!

நாம் இணைவது சிலருக்குப் பிடிக்கவில்லை
நம் வாழ்க்கையில் விளையாடிப் பிரித்தனர்!

வருடங்கள் பல கடந்திட்டப் போதும்
வளமான நினைவுகள் வந்து போகின்றன!

கண்கள் காதலுக்கு முன்னுரை எழுதின
கண்கள் காதலுக்கு முடிவுரையும் எழுதின !

கண்ணீர் விட்டு கதறிடப் பிரிவு வந்தது
காலங்கள் கடந்தும் நினைவுகள் அகலவில்லை!

காதலில் தோற்றாலும் கவிதையில் வென்றேன்
காரணம் உன்னைப் பற்றிய உயர்ந்த நினைவு !

ஏதோ ஒரு மூலையில் நீ வாழ்ந்திட்ட போதும்
இதோ மூளையின் ஒரு மூலையில் நிரந்தரமாய் நீ !

மறந்து விட்டதாக உதடுகள் உரைத்திட்ட போதும்
மறக்கவில்லை உள்ளம் என்பதை உண்மை!

நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது என்றும்
நின்னைப் பற்றிய பசுமையான நினைவுகள் !

என்றும் என் இதயத்தில் நிரந்தரமாய் இருப்பவளே
என் மூச்சு இருக்கும் வரை உன் நினைவிருக்கும்!

மாமதுரைக் கவிஞர் பேரவையின்தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு ! தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி


மாமதுரைக் கவிஞர் பேரவையின்தலைவர்
கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு !

தமிழைக் காக்கத்  தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !


மொகஞ்சதாரோ  அரப்பா  நாகரிகத்திற்கும்
முந்தைய நாகரிகம் தமிழன் நாகரிகம் !

உலகின் எந்த  மூலையில் தேடினாலும்
உடன் தென்படுவது தமிழ் எழுத்துக்களே !

மனிதன் தோன்றியபோது தோன்றிய மொழி
முதல் மனிதன் உச்சரித்த மொழி  தமிழ் !

ஒப்பற்ற தமிழ் மொழியை உருக்குலைய விடலாமா ?
உலகம் முழுவதும் ஒலிக்கும் மொழி சிதையலாமா !

சில நுறு ஆண்டுகள்  வரலாறு உள்ள மொழிகள்
சதிராட்டம் போட்டு குதியாட்டம் போடுகின்றன !

பல்லாயிரமாண்டு வரலாறு உள்ள தமிழ் மொழியை
பாதுகாக்க வேண்டியது உலகத்தமிழரின் கடமை !

இலக்கண இலக்கியங்களின் இமயம் தமிழ் மொழி
இனிக்கும் கேட்க  கேட்க  இனிக்கும்  நம் தமிழ் !

தமிழர்களே தமிழர்களோடு தமிழில் மட்டும் பேசுங்கள்
தமிழர்களே ஆங்கில மோகத்தை அறவே அழியுங்கள் !

தமிங்கில உரையாடலுக்கு முடிவுரை எழுதுங்கள்
தமிழை தமிழாக மட்டும் பேசிப் பழகுங்கள் !

சிங்கப்பூரில் ஆட்சிமொழியாயாக சிங்காரத் தமிழ்
சிங்களத்தோடு தமிழும் ஆட்சிமொழி இலங்கையில் !

பன்னாட்டு மொழி என்ற தகுதி உள்ள தேசிய மொழி
பண்பாட்டை பலருக்கும் பயிற்றுவிக்கும் மொழி !

உலகம் உருவானபோது உருவான மொழி
உலகம் உள்ளவரை காப்பது நமது கடமை !

தமிழ் படித்ததால் தரணியில் சிறந்தோர் பலர்
தமிழைக் கற்போம் குழந்தைகளுக்கும் கற்பிப்போம் !

முதல்மொழிக்கு முதலிடம் கொடுப்போம் உள்ளத்தில்
மற்ற மொழிக்கு இரண்டாமிடம் கொடுப்போம் மனதில் !

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நடைமுறைப் படுத்துவோம்
எவர் தமிழை எதிர்த்தாலும் பாடம் புகட்டிடுவோம் !  

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...