ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஆரம்பமானது 
கர்னாடகத்திலும் 
குதிரைபேரம் !

எண்ணிக்கை குறைந்து 
எண்ணம் பொய்த்தது 
எல்லோருக்கும்  !

தாமரைப்பூ 
மொட்டானது 
கர்னாடகத்தில் !

கோட்டையைப்   பிடிக்கும் 
மனக்கோட்டை தகர்ந்தது 
தேர்தல் முடிவு !

வாரியம் அமைக்காமல் 
வாரலாம்   வாக்கு 
பொய்த்தது கனவு !

செய்வார்கள் 
பஞ்சமாபாதகம் 
பதவி வெறி !

மக்கள் வைத்தனர் 
அரசியல்வாதிகளுக்கு ஆப்பு 
தேர்தலில் !

இரண்டும் ஒன்றுதான் 
முன்விட்டை பின்விட்டை
கட்சிகள் !

வேண்டும் கவனம்  
நடக்கிறது விபத்து 
இமைக்கும் நேரத்தில் !

கேப்பையில் நெய்
நம்பும் மூடராக 
வாக்காளர்கள் !

தர வேண்டாம் மீன் 
கற்றுக் கொடுங்கள் 
மீன்பிடிக்க ! 

வந்தது சிரிப்பு 
சுவரொட்டியைப் பார்த்து 
வருங்கால முதல்வரே !


வருந்துவதில்லை 
சுமைக்காக 
சுமைதாங்கிக்கல் !   

மாறுபடுகிறது 
அன்றும் இன்றும் 
பாசம் !

சாதி மத ஆராய்ச்சி வேண்டாம் 
தாருங்கள் தண்டனை 
குற்றவாளிக்கு !


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்