இடுகைகள்

August, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கணினி யுகமா ? காட்டுமிராண்டிக் காலமா ? கவிஞர் இரா .இரவி !

படம்
கணினி யுகமா ? காட்டுமிராண்டிக் காலமா ? கவிஞர் இரா .இரவி !
ஊடங்கங்களில் தொடர்ந்து ஒருதலைக் காதல் கொலைகள் பற்றிய செய்திகள் பார்க்கும்போது ,படிக்கும்போது இது கணினி யுகமா ? காட்டுமிராண்டிக் காலமா ?  என சந்தேகம் வருகின்றது .காட்டுமிராண்டிகள் இன்று இல்லை .அவர்கள் கூட மாறி விட்டனர்.
.
பகுத்தறிவு இல்லாத விலங்குகள் கூட ஒற்றுமையாக வாழ்கின்றன. பகுத்தறிவு உள்ள மனிதன்தான் மோதி வீழ்கிறான் .பகுத்தறிவு என்பது பயன்படுத்திடத்தான் .பயன்படுத்தினால்தான் மனிதன் .
ஒருதலைக் காதல் என்பது காதலே இல்லை .'ஒருதலைக் காமம்' என்று எழுதுங்கள் அல்லது 'ஒருதலை மோகம்' என்று எழுதுங்கள். இனி ஒருதலைக் காதல் என்று எழுதி ,பேசி காதலைக் கொச்சைப் படுத்தாதீர்கள் .
இருதலையாக இருவரும் விரும்பினால்தான் அது காதல்.ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் ஒரு தலையாக விரும்புதல் காதலே அன்று .சுவாதி கொலையில் இரு வேறு கருத்துக்கள் வருகின்றன. அது இருக்கட்டும் .உண்மை ஒரு நாள் வெளியில் வந்தே தீரும் .
தற்போது கல்லூரியின் வகுப்பறைக்குள் சென்று முன்னாள் மாணவன், சக மாணவியைக் கொன்றுள்ளான் .தேவாலயத்தின் உள்ளே சென்று ஒருவன் கொலை செய்துள்ளான் .இ…

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம்
கோடி வாழும் பறவைகள்
மோதி வீழும் மனிதர்கள்
உயர்திணை எது ?
கவிஞர் இரா .இரவி !

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. அவர்கள் எழுதிய "இலக்கியத்தில் மேலாண்மை" நூல் மதுரை புத்தகத் திருவிழாவில் ,என் .சி .பி .எச் . அங்காடியில் சலுகை விலையில் கிடைக்கும் .

படம்
முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. அவர்கள் எழுதிய "இலக்கியத்தில் மேலாண்மை"  நூல்  மதுரை  புத்தகத் திருவிழாவில் ,என் .சி .பி .எச் . அங்காடியில் சலுகை விலையில் கிடைக்கும் .

http://www.tamilauthors.com/04/392.html -- 

நன்றி . பாக்யா வார இதழ் ! அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

படம்
நன்றி . பாக்யா   வார இதழ் !

அட்டைப்படத்திற்கு கவிதை !  கவிஞர் இரா .இரவி !

மனதில் இல்லை கவலை
முகத்தில் மலர்ந்தது மகிழ்ச்சி
அகத்தின் அழகு முகத்திலும் !

ஒரு தவளை சிறு இலைகள்
இரு மழலைகள் அருகே
புன்னகை அரசி !

குமரியின் வருகைக்காக
காத்திருந்த குழந்தைகள்
குதூகலம் அடைந்தன !

ஆபாசமில்லாத அழகிய ஆடை
அணிகலன் ஆகின்றது
பெண்களுக்கு !

புன்னகையை விட  சிறந்தது
புன்னகை என்பது புரிந்ததால்
புரிகிறாள் புன்னகை !

கழுத்தில் தங்க நகை அணியாது
இதழில் புன்னகை அணிந்து
பூவாக மலர்த்திருக்கிறாள் பூவை !.

ஆடம்பரமில்லாத அழகு
அனைவருக்கும் பிடிக்கும்
அறிந்திருக்கிறாள் நங்கை !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நெல்லுக்கு கிறைத்த நீர் ! கவிஞர் இரா .இரவி !

படம்
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
நெல்லுக்கு கிறைத்த நீர்  ! கவிஞர் இரா .இரவி !
நெல்லுக்கு கிறைத்த நீர் வீணாவதில்லை  நெல் மணிகளாக விளைந்து செழிக்கும் !
முப்போகம் கண்டா விவசாயம் இன்று  முழுவதும் பொய்த்து ஒரு போகத்திற்கு வழியில்லை !
கர்நாடகமோ காவிரியைத்  திறக்க மறுக்கிறது  கேரளமோ முல்லை பெரியாற்றில் உயர்த்திட தடுக்கிறது !
ஆந்திரமோ பாலாற்றின் குறுக்கே உயர்த்தி விட்டது  அண்டை மாநிலங்கள் வஞ்சித்து மகிழ்கின்றன !
இரண்டு வெவ்வேறு நாடுகள் கூட தண்ணீரை   இருவரும் அன்பாகப் பகிர்ந்து கொள்கின்றனர் !
ஒரே நாடான இந்தியாவில்  தண்ணீர் பகிர்வதில்  ஒருவருக்கொருவர் எந்நாளும் சண்டை !
பகிர்ந்து உண்ணும் பழக்கம் புரியவில்லை  படிக்கவில்லை ஒப்பற்ற நம்  திருக்குறள் !
வடக்கே ஆறுகளில்  வெள்ளம்  ஓடுகின்றன  தெற்கே  ஆறுகள் பாலைவனம் ஆகின்றன !
ஒரே நேரத்தில் வெள்ளமும் வறட்சியும்  ஒரே நாட்டில் வருவது முறையோ சிந்திப்பீர் !
நெல்லுக்கு இறைக்க தண்ணிர் தாருங்கள்  நாளும் இரக்கத்தோடு நடந்து கொள்ளுங்கள் !
வீணாக்க கடலில் கலக்கும் தண்ணீரை  விவேகமாகப் பயன்படுத்திட முன்வாருங்கள் !
இருக்கின்ற அணைகள் இந்தியாவிற்கு போதும்  இனி புதிதாக யார…

பாடகர் திருவுடையான் ! கவிஞர் இரா .இரவி !

படம்
பாடகர் திருவுடையான் ! கவிஞர் இரா .இரவி !
பெயரிலேயே திரு உடைய திருவுடையான் பாட்டாலே உள்ளம் கொள்ளை கொண்டவன் !
மதுரை புத்தகத்த திருவிழாவில் வருடாவருடம்  மதுர கானம் இசைத்திட்ட இனியவன் !
வெண்கலக் குரலால் ஓங்கி ஒலித்து வெள்ளமென பாடல்கள் வடித்தவன் ! 
சொந்தமாகவே இயற்றி பல பாடல்கள்  சொந்தக்குரலில் இசைத்திட்ட இசைக்  கலைஞன் !
உணர்ச்சிக்  கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகளை  உணர்ச்சியோடு  உச்சரித்துப் பாடியவன் !
தமிழா நீ பேசுவது தமிழா என்ற பாடலை  தரணியில் உனக்கு நிகராக வேறு யாரும் பாடவில்லை !
த.மு.எ.க .ச   காலை  இரவு நிகழ்வுகளில்  தவறாமல் வந்து இருந்து பாடியவன் !
செந்தூரன் இல்லத்  திருமண வரவேற்பில் நீ  செந்தமிழால் பாடல்கள் இசைத்து மகிழ்வித்தாய் !
இயற்றுவது பாடுவது இசைப்பது வரைவது என எண்ணிலடங்காத திறமைகள் பெற்ற பெருமகன்  !
கர்வம் ஏதுமின்றி எல்லோரிடமும் மிகமிக  கண்ணியமாகவும் எளிமையாகவும் இருந்த எளியன் !
தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டியை   தன்னம்பிக்கையுடன் என்றும் அணிந்து வாழ்ந்தவன் !
நெசவாளர் குடும்பத்தில் பிறந்த எளியவன்  நாளும் பாடல் நெசவு செய்து மகிழ்வித்தவன் !
கொண்ட பொதுவுடைமைக்  கொள்கையில்  குன்…

எழுத்தாளர்களை , கவிஞர்களை ஒருங்கிணைக்கும் உலகப் புகழ் இணையத்தில் முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. அவர்கள் எழுதிய "இலக்கியத்தில் மேலாண்மை" நூலிற்கு கவிஞர் இரா .இரவி எழுதிய மதிப்புரை படித்து மகிழுங்கள்

படம்
எழுத்தாளர்களை , கவிஞர்களை ஒருங்கிணைக்கும் உலகப் புகழ் இணையத்தில் முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. அவர்கள் எழுதிய "இலக்கியத்தில் மேலாண்மை" நூலிற்கு கவிஞர் இரா .இரவி எழுதிய மதிப்புரை படித்து மகிழுங்கள் .

-- 
http://www.tamilauthors.com/04/392.html


முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. அவர்கள் எழுதிய அச்சம் தவிர் !

படம்
முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. அவர்கள் எழுதிய அச்சம்  தவிர் !  நூல் விலை ரூபாய் 60. மாணவர்கள் படிப்பை திருவிழாவாக்க ;பரீட்சையை பட்டாடையாக்க ; மதிப்பெண்களை  மத்தாப்பாக   மாற்ற உதவிடும் உன்னத நூல் .மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் நூல் அறிமுக விழா அழைப்பிதழ் !

படம்
இனிய நண்பர் கவிஞர் புதுயுகன்   நூல் அறிமுக விழா அழைப்பிதழ் !

நன்றி . தினமணி கவிதைமணி . இணையம் . கவிஞர் இரா .இரவி !

படம்
நன்றி . தினமணி கவிதைமணி . இணையம் .   கவிஞர் இரா .இரவி !
http://www.dinamani.com/kavithaimani/2016/08/28/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE/article3601111.ece
.

முகப்பு > கவிதைமணி வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி ! By dn First Published : 28 August 2016 10:36 AM IST
நீரின்றி அமையாது உலகு உரைத்தார் திருவள்ளுவர்  நீயின்றி அமையாது என் வாழ்வு என்பேன் நான் !
வானிலிருந்து வரும் அமுதம் மழை என்றார்  வஞ்சி நீ என்னை வாழ்விக்கும் அமுதம் என்பேன் !
மூன்று பக்கம் கடலால் சூழ்ந்தது இந்தியா  முழுவதுமே உன்னால் சூழப்பட்டவன் நான் !
வான்மழை பொய்த்தால் பூமி வாடி வதங்கிவிடும்  வடிவழகி உன் பார்வை பொய்த்தால் நான் வாடிடுவேன் !
மண்ணில் பயிர்கள் வளர்ந்திட வேண்டும் வான்மழை  மண்ணில் நான் வாழ்ந்திட வேண்டும் உன் பார்வைமழை !
மழை பொய்த்தால் எங்கும்  வறட்சி வந்துவிடும்  மங்கை நீ வராது பொய்த்தால் மனக்கவலை வந்துவிடும் !
நல்ல மழை ப…

மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடந்த கவியரங்கம் .தலைமை கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் .முன்னிலை புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி. வரதராசன் .படம் கவிஞர் அழகையா.

படம்
மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடந்த கவியரங்கம் .தலைமை கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் .முன்னிலை புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர்  பி. வரதராசன் .படம் கவிஞர் அழகையா.

பெங்களூரு தமிழ்ச் சங்கம் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
பெங்களூரு தமிழ்ச் சங்கம் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

பெங்களூரு அல்சூர் ஏரி . படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
பெங்களூரு அல்சூர் ஏரி . படங்கள் கவிஞர் இரா .இரவி !பெங்களூரு பிரமாண்ட கட்டிடங்கள் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
பெங்களூரு பிரமாண்ட கட்டிடங்கள் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் திங்கள் தோறும் நடத்தும் 278 ஆம் ஏரிக்கரை கவியரங்கம் !

படம்
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் திங்கள் தோறும் நடத்தும் 278 ஆம் ஏரிக்கரை கவியரங்கம் !
28.8.2016 அன்று மதியம் 3.30 மணிக்கு பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் கவியரங்கம் தொடங்கியது .பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தின் செயலர் ஸ்ரீதரன் கவியரங்கைத் தொடங்கி வைத்தார் .. கவியரங்க  பொறுப்பாளர்கள்  பேராசிரியர் சு .கோவிந்தராசன் முன்னிலை உரையாற்றினார்.கவிஞர் அமுதபாண்டியன் அறிமுக உரையாற்றினார்.கவிஞர் கொ.சி .சேகர்  நன்றி  கூறினார் .
கவிஞர் இரா .இரவி தலைமையில்  கவியரங்கம் நடந்தது. பெங்களூரு வாழ் புகழ் பெற்ற மரபுக் கவிஞர்கள் புதுமைக்கு கோமான் ,இராம இளங்கோவன் ,சு .முத்துச்சாமி ,ரமேசு ,மூர்த்தி, கார்த்தி ,நம்பி ராஜன் ,தனம் .வேளாங்கண்ணி ,புண்ணிய மூர்த்தி, சேகர் ,கல்யாண் குமார் ,வீணை தேவி உள்ளிட்ட பலர் "எழுந்து நிற்க எழுது "என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்கள் .
திருவாளர்கள் ராசு ,அன்புநிதி ,மலர்மன்ன ,ரசனி முருகன்  ,திருமதி ஜெயா உள்ளிட்ட பலர் கவியரங்கில் சுவைஞர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

படித்ததில் பிடித்தது . கவிஞர் இரா .இரவி ! நன்றி தினத்தந்தி நாளிதழ் !

படம்
படித்ததில் பிடித்தது . கவிஞர் இரா .இரவி !
நன்றி தினத்தந்தி நாளிதழ் !

பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர் சிலை ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர் சிலை ! படங்கள் கவிஞர் இரா .இரவி !இந்த நாள் இனிய நாள் இன்று 28.8.2016 பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் என் தலைமையில் கவியரங்கம் நடந்தது .படங்கள் . கவிஞர் இரா .இரவி !

படம்
இந்த நாள் இனிய நாள் இன்று 28.8.2016 பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் என் தலைமையில் கவியரங்கம் நடந்தது .படங்கள் . கவிஞர் இரா .இரவி !
பெங்களூருவில் இன்று 28.8.2016 . மலர்ந்த மலர்கள் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
பெங்களூருவில் இன்று  28.8.2016 . மலர்ந்த மலர்கள் ! படங்கள் கவிஞர் இரா .இரவி
!