வியாழன், 30 ஜூன், 2016

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  !    கவிஞர் இரா .இரவி !

அம்பு இல்லா வில்லுக்கும் 
மதிப்புண்டு 
வானவில் !

பிரிய மனமில்லை 
பிரித்தது காற்று 
மரத்திலிருந்து இலை !

நதி நடந்ததால் 
பளபளப்பானது 
கூழாங்கல் !

சுமை அல்ல 
உயர உதவும் 
சிறகு !

பேசும் பேச்சை விட 
வலிமையானது 
மவுனம் !

பஞ்ச பூதங்களை 
கொள்ளையடிக்கும் பூதம்
மனிதன் !

எடுத்தால் திருட்டு 
நாமாக வழங்கினால் 
வரதட்சணை !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

தமிழகத்தில் ஹைக்கூ கவிதையை அறிமுகம் செய்து வைத்தவன் மகாகவி பாரதி .அறிமுகம் செய்து நூற்றாண்டு ஆவதை முன்னிட்டு மகாகவி பாரதி நினைவு நாள் அன்று பெங்களூருவில் ஹைக்கூ நூற்றாண்டு விழா !

தமிழகத்தில் ஹைக்கூ கவிதையை அறிமுகம் செய்து வைத்தவன் மகாகவி பாரதி .அறிமுகம் செய்து நூற்றாண்டு ஆவதை முன்னிட்டு மகாகவி பாரதி நினைவு நாள் அன்று 

பெங்களூருவில் ஹைக்கூ நூற்றாண்டு விழா !

நாள் 11.9.2016. நேரம் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை .

இடம் ; பாவாணர் பாட்டரங்கம் ஐ .டி .ஐ . காலனி தமிழ் மன்றம் . பெங்களூரு.

மாபெரும் ஹைக்கூ கவியரங்கம் , ஹைக்கூ கருத்தரங்கம் .

சிறப்புரை ;  தமிழ்த்  தேனீ முனைவர் இரா .மோகன் !

                    தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் !
                     
                   , 
                     பேராசியர் முனைவர் இராம குருநாதன் !

கருத்துரை ;  கவிஞர்அமரன் , கவிஞர்பொன் குமார் (சேலம் ) , கவிஞர் கே .ஜி .இராஜேந்திர பாபு .

மாபெரும் ஹைக்கூ கவியரங்கம்  
தலைமை ;பாவலர் புதுவைத்  தமிழ்நெஞ்சன் 


 பங்குபெறும் கவிஞர்கள் ;

கவிஞர் பல்லவி குமார் ,கவிஞர் இரா .இரவி ,நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன், கன்னிக் கோவில் இராஜா , சேகர் ,மற்றும் பெங்களூத்  தமிழ்ச் சங்கத்தின் கவிஞர்கள் 

--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area

பெங்களூரு மெட்ரோ தொடர் வண்டி பாதை போடும் இயந்திரங்கள் . படங்கள் கவிஞர் இரா .இரவி !

மெட்ரோ தொடர் வண்டி பாதை போடும் இயந்திரங்கள் . படங்கள் கவிஞர் இரா .இரவி !









பெங்களூருவில் ஹைக்கூ நூற்றாண்டு விழா நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் சந்திப்பு . கவிஞர் கே .ஜி .இராஜேந்திர பாபு ,நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் ,கவிஞர் இரா .இரவி .

பெங்களூருவில் ஹைக்கூ நூற்றாண்டு விழா நடத்துவது தொடர்பான  கலந்துரையாடல்  சந்திப்பு  . கவிஞர் கே .ஜி .இராஜேந்திர பாபு ,நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் ,கவிஞர் இரா .இரவி .

மதுரை மாநகர் இலக்கிய தேனீக்கள் முனைவர் இரா .மோகன் ,முனைவர் நிர்மலா மோகன் வழங்கும் சொல்லாடல் மன்றம் .

மதுரை மாநகர் இலக்கிய தேனீக்கள் முனைவர் இரா .மோகன் ,முனைவர் நிர்மலா மோகன் வழங்கும் சொல்லாடல் மன்றம் .

புதன், 29 ஜூன், 2016

என் இனிய பகைவனுக்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

என் இனிய பகைவனுக்கு நன்றி !  கவிஞர் இரா .இரவி !

தீங்கு செய்வதாய் நினைத்து நீ செய்த 
தீங்கு எனக்கு தீங்கே அல்ல !

புதிய அனுபவத்தைக் கற்றுத்  தந்தது
புதிய மனிதர்களைச்  சந்திக்க முடிந்தது !

திறமை உள்ளவன் எங்கும் வெல்வான் 
திறமை உள்ளதால் வென்றேன் நான் !

முத்திரைப் பதித்தேன் கொண்ட கடமையில் 
மேடைகள் கண்டேன் பரிசுகள் வென்றேன் !

சென்ற இடமெங்கும் சிறப்புகள் பெற்றேன் 
சிந்தித்துப் பார்த்தேன் சிறிது மகிழ்ந்தேன் !

காணாத இடங்கள் கண்டு மகிழ்ந்தேன் 
கண்டதை முகநூலில் பகிர்ந்து மகிழ்ந்தேன் !

தெரியாதவற்றைத் தெரிந்துக் கொண்டேன் 
தெளிவான சிந்தனைக்கு நேரம் கண்டேன் !

வீழ்வேன் என்று நினைத்து   தீங்கு செய்தாய் 
வளமாக வாழ்வேன் என்று எண்ணவில்லை நீ! 

படைப்புகள் பல படைத்து  மகிழ்ந்தேன் 
பலரும் என்னைப் பாராட்டி மகிழ்ந்தனர் !

நான் உனக்கு செய்த உதவிகளை 
நீ நன்றி மறந்தாய் அது உன் இயல்பு !

நீ நெஞ்சில் குத்தி இருந்தால் மகிழ்ச்சி ஆனால் 
நீ முதுகில் குத்தியதுதான் வடுவானது !

பதிலுக்கு உனக்கு தீங்கு செய்ய நீ அல்ல நான் 
பதில் உனக்கு எனது வளர்ச்சியும் வெற்றியும் !

சூரியனின் சுடரை நீ சிறுபிள்ளைத்தனமாய் 
சிறு கைகளால் மறைந்திட நினைத்தாய் !

தீங்கையும் நன்மையாக்கி மகிழ்ந்தேன் 
தீங்கு செய்த என் இனிய பகைவனுக்கு நன்றி !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

குழந்தைகள் நிறைந்த வீடு .


நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் 
கவிஞர் நா. முத்துக்குமார்.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

மதி நிலையம், பிருந்தாவன் அடுக்க்கம், 4(39) தணிகாசலம் சாலை,
தி.நகர், சென்னை – 600 017.  
*****
       இன்று திரை உலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வந்து கொண்டிருக்கும் கவிஞர் நா. முத்துக்குமார் அவர்கள் தொடக்கக் காலத்தில் ஹைக்கூ கவிஞர்.  பல்வேறு இதழ்களில் பிரசுரமான ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து ‘குழந்தைகள் நிறைந்த வீடு’ என்ற பெயரில் நூலாக்கி டிசம்பர் 2000-ல் வெளியிட்ட இந்நூல் சமீபத்தில் தான் என் கவனத்திற்கு வந்தது.  இன்றும் பொருந்துவதாக சிறப்பாக உள்ளது.  பாராட்டுகள்.

       ஹைக்கூ கவிதைகளை முனைவர் பட்ட ஆய்வு செய்த  நிர்மலா சுரேஷ், திரு. அ. எக்பர்ட் சச்சிதான்ந்தம் ஆகியோரின் அணிந்துரையுடன் வந்துள்ளது.

       இந்நூலை கீஸ்லோ வஸ்க்கி, பாலு மகேந்திரா, மணிரத்னம் மூவருக்கும் காணிக்கையாக்கி உள்ளார்.  இந்நூல் கவிஞர் முத்துக்குமாரின் நான்காவது நூல்.  ஹைக்கூ கவிதையில் காட்சிப்படுத்துதல் என்பது ஒரு யுத்தி.  அந்த வகையில் அமைந்த ஹைக்கூ.

       பரட்டைத் தலையுடன் இலந்தை மரம்
       முடி வெட்டுகின்றன
       ஆடுகள்!

       ஆடுகள் இலந்தை மரத்தை மேய்வதை, உண்பதை வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்.

       பிரபலமானவர்களின் வீடுகளுக்கு சென்று பார்த்தவர்களுக்குத் தெரியும், புரியும். படித்தவுடன் சிரிப்பு வரும் வகையில் எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று.

       பிரபலமானவர்களின் வீடு
       வரவேற்பறையில் பரிசுக் கடிகாரங்கள்
       எதுவும் ஓடவில்லை!

       (வரவேற்பரையில்) என்று அச்சாகி உள்ளது.அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடுங்கள் .

       அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஹைக்கூவில் ஒரு வகை.  படைப்பாளில் உணர்ந்த அனுபவத்தை வாசகருக்கும் உணர்த்துவது.

       நீலகிரித் தைலம் தீர்ந்து விட்டாலும், அந்தப் புட்டியில் தைல வாசனை இருந்து கொண்டு தான் இருக்கும். இவை நாம் அறிந்த, பார்த்த, நுகர்ந்த உண்மை. இதனை ஒரு ஹைக்கூவாக்கி உள்ளார்.

       காலியான தைல புட்டி
       நிரம்பியிருக்கிறது
       வாசனையால்!

       இயற்கை பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானியர்கள் கை தேர்ந்தவர்கள் என்று ஒரு கருத்து உண்டு.
       தமிழக ஹைக்கூ கவிஞர்கள் இயற்கையைப் பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானியக் கவிஞர்களை மிஞ்சி விட்டார்கள் என்றால் மிகையன்று.

       காற்று பறித்து போட்டது
       தரையெல்லாம் நட்சத்திரங்கள்
       வேப்பம் பூக்கள்!

       வேப்பம் பூக்களை நட்சத்திரங்களாகப் பார்த்த கவிப்பார்வை தான் இன்றைக்கு திரைப்படப்பாடல்கள் எழுதுவதற்கும் உதவி வருகின்றது என்றால் மிகையன்று.

       குழந்தைகள் அழும், ஏன்? என்று கேட்டால் கூடுதலாக அழும், யாரும் கவனிக்காமல் விட்டு விட்டால் அழுவதை நிறுத்தி விடும்.  இந்தக் காட்சியை ஹைக்கூவாக்கி உள்ளார் பாருங்கள்.

       யாரும் கவனிக்காததை
       உணர்ந்த சிறுவன்
       அழுகையை நிறுத்துகிறான்!

       ஏழைக்குடிசையை, கிராமத்தை, வறுமையை நினைவூட்டும் விதமாக வடித்த ஹைக்கூ, மிக நன்று.

       இறந்த பாட்டியின் மருந்து புட்டியில்
       மண்ணெண்ணெய் விளக்கு
       ஞாபகங்கள் எரிகின்றன!

       ஆறுகள் எல்லாம் பாலைவனங்கள் ஆகி வருகின்றன. வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய காலம் இருந்ததாக சங்க இலக்கியம் சொல்கின்றது.  ஆனால் இன்று வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழாவிற்கு லாரியில் கொண்டு வந்து தண்ணீர் ஊற்றும் நிலையும் வந்தது.அந்த நிகழ்வை நினைவூட்டிய ஹைக்கூ. 

       பறவைகள் முகம் பார்க்க
       கண்ணாடியின்று திரும்பின
       வறண்டு போனது நதி!

       இக்கால நகரத்துப்  பாட்டிகள் யாரும் பாம்படம் அணிவதில்லை.  ஆனால் அக்காலப் பாட்டிகள் பாம்படம் அணிந்தார்கள்.  அதனைப் பார்த்தவர்கள் உணர்வார்கள்.  காதை ஆட்டி ஆட்டி பேசும் பழக்கம் உண்டு.இன்றும் சில கிராமங்களில் பாட்டிகளின் காதில் பார்க்கலாம் 

       ஆயிரத்து சொச்ச அசைவுகளுக்குப் பிறகு
       அடகுக் கடையில் முடங்கி விட்டது
       பாட்டியின் பாம்படம்.

       இக்காலத்து குழந்தைகள் பாம்படம் என்றால் என்ன என்று கேட்பார்கள்.  பாம்படத்திற்கு தண்டட்டி என்ற பெயரும் உண்டு.

       உழவனின் நண்பன் மண்புழு என்று படித்து இருக்கிறோம். அப்படிப்பட்ட  நண்பனையே நிலத்தை உழும் போது கொன்று விடுகிறோம் என்பதை உழவன் அறிவதில்லை.  அதனை மண்புழு நேயத்தோடு ஹைக்கூவாக வடித்துள்ளார் பாருங்கள்.

       உழுது முடித்த வயல்.
       அங்கங்கே துடித்துக் கொண்டிருக்கின்றன
       உடல் அறுந்த மண்புழுக்கள்!

       பேப்பர் வெயிட், கேமிராமென், லிப்ட், ஷாக்ஸ் இப்படி பல ஆங்கிலச்சொற்கள் ஹைக்கூ கவிதைகளில் வந்துள்ளன.  அடுத்த பதிப்பு வெளியிட்டால் தமிழ்ச் சொற்களாக்கி வெளியிடுங்கள்.

     ஹைக்கூ கவிதை இலக்கணத்தில் சொற்க்களின் சிக்கனம் மிகவும் முக்கியம் .அந்த வகையில் அமைத்த ஹைக்கூ .மீன் பற்றி ரத்தினச் சுருக்கமாக வடித்த ஹைக்கூ நன்று.

       கடலுக்குள் தொடங்கி
       குடலுக்குள் முடித்தது
       வாழ்க்கையை மீன்!

நூலின் தலைப்பில் உள்ள கவிதை

       குழந்தைகள் நிறைந்த வீடு
       சத்தமாக ஒலியெழுப்புகிறது
       ஐஸ் வண்டி!

       உண்மை தான்.  குழந்தைகள் உள்ள வீடு அருகே வந்தால் விற்பனையாகும் என்ற ஆர்வத்தில் ஒலிஎழுப்புவார்கள்.

       ஹைக்கூ கவிதையின் மூலம் பகுத்தறிவுக் கருத்துக்களையும் விதைக்க முடியும்.  நானும் பல ஹைக்கூ கவிதைகள் எழுதி உள்ளேன்.  இதோ கவிஞர் நா. முத்துக்குமாரின் ஹைக்கூ.

       நண்பன் அடிபட்ட
       லாரியின் நெற்றியில்
       விநாயகர் துணை!

       மலையிலிருந்து அருவி பற்றி பலரும் கவிதை எழுதியுள்ளனர்.   நீர்வீழ்ச்சி அல்ல நீர் எழுச்சி என்பார்கள்.  அருவி பற்றிய ஹைக்கூ மிகநன்று.

       வயதான மலைக்கு
       தாடி நரைத்திருக்கிறது
       அருவி!

       தொலைக்காட்சி அயல் நாடுகளிலும் உண்டு.  அவர்கள் ஊறுகாய் போல பயன்படுத்துகின்றனர்.  ஆனால் நம் நாட்டில் தொலைக்காட்சியை சோறு போல பயன்படுத்துகின்றனர். விடுமுறை என்றால் காலையிலிருந்து இரவு வரை ஓடும்.  இன்றைய இளைஞர்களுக்கு தனிஅறை கிடைத்து விட்டால் விடிய விடிய தொலைக்காட்சியில் தவம் இருக்கிறார்கள்.

       தூக்கமற்ற இரவு
       சுவர்க்கோழி கத்த
       தொலைக்காட்சியை நிறுத்தினேன்.

       திரைப்படப் பாடலாசிரியரின் இன்னொரு முகமான ஹைக்கூ கவிஞர் என்பதும் சிறப்பாக உள்ளது.  பாராட்டுகள், வாழ்த்துகள்.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

உள்ளதைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள் . தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் . நன்றி தினமணி , தமிழ்மணி

உள்ளதைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள் .
தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் .
நன்றி தினமணி , தமிழ்மணி

செவ்வாய், 28 ஜூன், 2016

தினமணி இணையம் தந்த தலைப்பு ! குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு ! 
குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி !     கவிஞர் இரா .இரவி !

குடையின்றி நின்று இருந்தபோது 
குடையோடு வந்தால் என்னவள் !

வருக என்று கண் அசைத்தாள் 
விழாக்கோலமானது மழைக்காலம் !

இருவரையும் இணைத்து ரசித்தது மழை
இனிதே பேசிக்கொண்டே பயணம் !

நெற்பயிர் வளர  மட்டுமல்ல மழை 
நல்காதல் வளரவும் உதவியது மழை !

யாருக்கும்  கேட்காதவாறு  பேசினோம் 
யாரும் பார்க்காதவாறு  மறைத்தது குடை !

மழையில் நனையவில்லை நாங்கள் 
மகிழ்ச்சியில் நனைந்தோம்  நாங்கள் !

குடைக்குள் இடம் தந்து பாரியானாள்
குமரியின் பார்வை குளிருக்கும் இதமானது !

சிக்கி முக்கி கற்கள் உரசல்போல 
சின்ன வெப்பம் வந்து போனது !

குடைக்கு வெளியே சாரல் மழை 
குடைக்கு உள்ளே மகிழ்ச்சி மழை !

சின்னத் தீண்டல் சிலிர்ப்பானது 
சிரிப்பும் முகத்தில் எட்டிப் பார்த்தது  !

வேகநடை நடந்துப் பழக்கப்பட்டவன் 
வஞ்சிக்காக மெல்ல நடந்து மகிழ்ந்தேன் !

பெண்கள் குடை அளவில் சிறிதானது
பெரு மகிழ்ச்சிக்கு காரணமானது !

இடி மின்னல் வந்த போது அவள் 
இன்னும் கொஞ்சம் நெருங்கினாள் !

குடையின்றி   நின்றபோது நான் 
கொடுமை மழை என்று சபித்தேன் !

குடையோடு அவளுடன் செல்கையில் 
அருமை மழை என்று பாராட்டினேன் !

வானுக்கும் நன்றி வான்மழைக்கும் நன்றி 
வஞ்சிக்கும் நன்றி வஞ்சியின் குடைக்கும் நன்றி ! 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

தினமணி இணையம் ! கவிதை மணி !கவிஞர் இரா .இரவி

-- 
தினமணி இணையம் ! கவிதை மணி !கவிஞர் இரா .இரவி
.
முகப்பு > கவிதைமணி
எப்படி மறப்பேன்: கவிஞர் இரா .இரவி
By dn
First Published : 27 June 2016 03:02 PM IST
எம் தமிழினத்தை கூண்டோடு அழித்தான்
இந்த உலகமே வேடிக்கைப் பார்த்தது !
போரில்லாப்பகுதி என்று அறிவித்து விட்டு
போய் மக்கள் குவிந்ததும் குண்டுப் போட்டான் !
விடுதலை கேட்டது குற்றமெனக் கூறி
வீதியில் விட்டு சுட்டு மகிழ்ந்தான் !
குழந்தைகள் பெண்கள் முதியோர் என்று பாராமல்
கண்மூடிதனமாகக் கொலைகள் புரிந்தான் !
மருத்துவமனை பள்ளி விடுதி என்று பாராமல்
மனம் போனபடி கொன்று குதூகலித்தான் !
சரண் அடைபவர்களை சுடக் கூடாது என்று
சட்டம் சொல்கிறது சுட்டுக் குவித்தான் !
எட்டு நாட்டுப் படைகளின் உதவியுடன்
சொந்த நாட்டு மக்களை பலியிட்டுச் சிரித்தான் !
கொன்று குவித்த கொடூரன் இலங்கையில் இன்று
கோலாகலமாக சுதந்திரமாக வலம் வருகிறான் !
ஐ .நா .மன்றம் உள்ளிட அனைவரும் குற்றவாளிகள்
அநீதி இழைத்தவன் மீது நடவடிக்கை இல்லை !
மடிந்தது தமிழினம் என்ற காரணத்தால்
மனமில்லை தட்டிக் கேட்க யாருக்கும் !
தூக்குத்தண்டனைக்குகுரிய குற்றவாளியை
குறைந்தபட்சம் கைது கூட செய்யவில்லை !
எம் தமிழினம் அழித்தவனை எப்படி மறப்பேன் ?
இனவெறி பிடித்த மிருகத்தை எப்படி மன்னிப்பேன் ?
மறக்க முடியாத வடு நெஞ்சில் உள்ளது
மன்னிக்க முடியாத வெறி மனதில் உள்ளது !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

திங்கள், 27 ஜூன், 2016

படத்திற்கு கவிதை கவிஞர் இரா .இரவி !

படத்திற்கு கவிதை கவிஞர் இரா .இரவி !

நன்றி கவிஞர்பாப்பனப்பட்டு முருகன் .பாக்யா வார இதழ் 


சித்திரமும் கை பழக்கம் சரி 
செந்தமிழும் நா பழக்கம்
பேசுக !

வீட்டுக்கொரு மரம் 
வளர்க்க முடியவில்லை   
ஓவியத்தில் வளர்க்கிறான் மரம் !

குடிசை வீடு 
வரைத்து மகிழ்கிறான் 
மாளிகை !

வருங்கால அப்துல் கலாம் 
வரைந்துப் பார்க்கிறான் 
வானத்தைத் தரையில் !


.தரையில்
வரைந்து பழகுகிறான் 
வருங்கால ரவிவர்மா !

நன்றி .பாக்யா வார இதழ் ! அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

நன்றி .பாக்யா வார இதழ் !

அட்டைப்படத்திற்கு கவிதை !

கவிஞர் இரா .இரவி !

அன்றும் இன்றும் என்றும் 
அழகோ அழகு 
சேலைதான் !

பாரம்பரிய ஆடை முன்னே 
தோற்கும் 
பரவச ஆடை !

இயல்பாக வந்துவிடுகிறது 
சேலை அணிந்ததும் 
வெட்கம் !

மண் பார்க்கும் பெண் 
கண் பார்க்கும் பெண் 
உயரத்தில்  அவள் !

உடை எதுவானாலும் 
உச்சத்தில் 
பெண்கள் ! 

நடனமங்கை நிற்கிறாள் மனதில் 
நாகரிக மங்கை நிற்கவில்லை 
மனதில் !

உயர்ந்த கட்டிடங்களுக்கு மேலும் 
உயர்ந்து நிற்கிறாள் 
தமிழச்சி !

கண்ணியம் மகிழ்ச்சி  
கவர்ச்சியோ 
கவுச்சி ! 

பெண் விடுதலை வேண்டியது 
உரிமைக்குத்தான் 
உடைக்கு அல்ல !

பணம் சிக்கனம் நன்மை 
உடை சிக்கனம் 
ஆபத்து !

பார்க்கவில்லை அவள் பிடிக்கிறது 
பார்க்கிறாள் இவள் 
பிடிக்கவில்லை !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் " காலத்தை வென்ற கண்ணதாசன்" என்ற தலைப்பில் திரையிசைக் கலைஞர் தனம் A..வேளாங்கண்ணி தலைமையில் கவிதை வாசித்த படங்கள்

பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் " காலத்தை வென்ற கண்ணதாசன்" என்ற தலைப்பில் திரையிசைக் கலைஞர் தனம் A..வேளாங்கண்ணி தலைமையில் கவிதை வாசித்த படங்கள் .நன்றி இனிய நண்பர் கவிஞர் கல்யாண் குமார்( பெங்களூரு)



மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் 26-06-2016 அன்று ஹெலன் கெல்லர் 137வது பிறந்த நாள் நிகழ்ச்சி

மூன்றாம் பார்வை அறக்கட்டளை  நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் 26-06-2016 அன்று ஹெலன் கெல்லர் 137வது  பிறந்த நாள்  நிகழ்ச்சியில் கலந்து சிறப்புரை ஆற்றியவர்கள் உயர்திரு I. அபூதகிர் MC.,  மாமன்ற உறுப்பினர் , 45வது  வர்ர்டு , மதுரை மாநகராட்சி மற்றும் சிறப்பு விருந்தினராக  டாக்டர். M. ராஜசேகரன்   M.Sc., Ph.D., Assistant professor, Department of Chemistry Sourastra college, மற்றும் உயர்திரு முன்னவர் பாலகிருஷ்ணன் (தமிழ்த்துறை  பேராசிரியர் ) முன்னிலையாக உயர்திரு . கவிஞர் இராசி சேவியர் (காலை அருவி ),  உயர்திரு. சா . வேலுசாமி DME (முன்னாள் படை வீரர்),  வாழ்த்துரை  விடுதி மாணவர் ஆர் . கார்த்திக் , தொகுப்புரை ராஜா விடுதி மாணவர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

அகவிழி பார்வையற்றோர் விடுதி 
1, ராமவர்மா நகர் , 3வது தெரு 
கோ .புதூர், மதுரை -7
மொபைல் நம்பர் : 9865130877







தினமணி 28.6.2016 பெங்களூரு ! நன்றி திரு. வே .அரசு , ஆசிரியர் குறள் ஒலி மாத இதழ் !

தினமணி 28.6.2016 பெங்களூரு !
நன்றி திரு. வே .அரசு , ஆசிரியர் குறள் ஒலி மாத இதழ் !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அறிந்தது உலகம் 
அறியவில்லை தமிழர் 
திருக்குறள் அருமை !

ஒரே வரியில் 
ஒப்பற்ற அறம் 
ஆத்திசூடி !

நான்கே வரிகளில் 
நல்லபல கருத்துக்கள் 
நாலடியார் !

ஒழுக்கம் உணர்த்தும் 
ஒப்பற்ற வரலாறு 
சிலப்பதிகாரம் !

தமிழ்மொழி பாட்டி வடமொழி பெயர்த்தி 
பெயர்த்திக்குப் பிறந்தால் பாட்டி என்று 
பிதற்றுகின்றனர் கோமாளிகள் !

தண்டனை என்று 
அறிவிப்போம் 
தமிங்கிலம் பேசினால்  !

நான் இங்கு இருக்கையில் 
யார் நினைப்பது உங்களை 
தலையில் தட்டும் மனைவி !

இந்நாட்டு மன்னர்கள் 
தேர்தல் மறுநாள்  
சாதாரண குடிமக்கள் !

பணம் பத்தும் செய்யும் 
உணர்த்தியது 
தேர்தல் !

தாமதமானாலும் 
இறுதியில் வெல்வது 
அறம் !

மூச்சு இருக்குவரை 
நினைவில் இருக்கும் 
முதல் காதல் !

தோல்வி 
வெற்றிக்கான படிக்கட்டு சரி 
படிக்கட்டு எத்தனை ?

மழை விட்ட பின்னும் 
சாரல் 
மரத்திலிருந்து !

நவீனகாலம்  
மாணவனைக் கண்டு 
அச்சத்தில் ஆசிரியர் !

தூண்டில் புழு மீன் 
மனிதன் புழு
வாழ்க்கை ஒரு வட்டம் !

ஆட்டம் ஆர்ப்பாட்டம் 
அனைத்தும் அடக்கம் 
கல்லறை !

கடன் வாங்கக் 
கற்றுத் தருகிறார் 
கணக்கு ஆசிரியர் !

பூச்சென்டாக ஒன்று
மலர்வளையமாக மற்றொன்று 
ஒரு செடிப் பூக்கள் !

வயப்பட்டவர்கள் மட்டும் 
உணரும் உன்னதசுகம் 
காதல் !

உட்கார்ந்த இடத்தில் 
ஓடாமல் விளையாடியது 
கணினியில் குழந்தை !

குறைத்தது
வாழ்நாள் 
நவீன உணவு !



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...