வெள்ளி, 27 மே, 2011

சுற்றுச் சுழல் விழிப்புணர்வு ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


சுற்றுச் சுழல் விழிப்புணர்வு ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

முயன்றால் சாத்தியமே
மரணமில்லாப் பெருவாழ்வு
சுற்றுச் சுழல் பேணல்

வீடு தெரு ஊர்
சுத்தமானால்
ஓடிவிடும் நோய்கள்

தீமையின் உச்சம்
மக்காத எச்சம்
பாலித்தீன்

உணர்ந்திடுக
மரம் வெட்ட
மழை பொய்க்கும்

கரும் புகை
பெரும் பகை
உயிர்களுக்கு

கண்ணுக்கு
ப் புலப்படாது
புலன்களை முடக்கும்
கிருமிகள்

தெரிந்திடுக
காற்றின் மாசு
மூச்சின் மாசு

இயற்க்கை வரத்தை
சாபமாக்கிச் சங்கடப்படும்
மனிதன்

அறிந்திடுக
சுத்தம் சுகம் தரும்
அசுத்தம் நோய் தரும்

புரிந்திடுக
செயற்கை உரம் தீங்கு
இயற்க்கை உரம் நன்கு

கட்சிக் கொடிகளை விட்டு
பச்சைக் கொடிகளை வளருங்கள்
பசுமையாகும்

மதிக்கத் தக்கது
ரசனை மிக்கது
ரசாயணமில்லா விவசாயம்

வேண்டாம் வேண்டாம்
பூச்சிக் கொல்லி மருந்து
மனிதனையும் கொல்கிறது

தாய்ப்பால் இயற்க்கை உரம்
புட்டிப்பால் செயற்க்கை உரம்
வேண்டாம் உலகமயம்


--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

செவ்வாய், 24 மே, 2011

படித்ததில் பிடித்ததுநூலின் பெயர்:பொற்றாமரை
நூலாசிரியர்:முனைவர் அம்பை மணிவண்ணன்
பதிப்பு:ஏ.ஆர்.பதிப்பகம்
மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
கோபுர நுழைவாயில்:
இமயம் வடதிசையில் தீர்த்து வைக்காத இந்திரனின் பிரம்மகத்தி தோஷத்தை
தெற்கில் மாமதுரை நிவர்த்தி செய்ய ,பூத்தது பொற்றாமரை!அது புராண காலம்! 'கடையெழு
வள்ளல்கள்'-என்ற கூற்றைப் பொய்யாக்கி,எட்டாவது வள்ளலாகச் சுடர்விடும்
ஏ.ஆர்.அவர்களின் நல்லாசியுடன் முகிழ்ந்தது பொற்றாமரை!அது இக்காலம்!பொன்னான
அரும்பை,அறிவுக்கதிர் கொண்டு மலரச் செய்தவரோ அம்பை மணிவண்ணன்.பகலவனும் பால்மதியும்
விண்ணுலகில் தம் கடமையைச் சரிபாதியாய்ப் பிரித்துக் கொண்டு காலையிலும் மாலையிலும்
ஒளிர,பூவுலகிலோ பொற்றாமரையானது அல்லும் பகலுமாக அங்கயற்கண்ணி ஆலயத்தில் ஆன்மீக
ஒளியைப் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றது
.கண்ணுக்கு விருந்தளிக்கும் பொற்றாமரையைத்
தங்கள் செங்கரங்களின் குவிப்பால் வாசகர்களின் கரங்களுக்கு கொண்டு சேர்த்த பெருமை
டாக்டர் ஏ.ஆர்.சீனிவாசன் தம்பதியரைச்சாரும்.பொற்றாமரை மலருக்குள் புகுந்து,இதழ்
பிரித்து, மகரந்தத் தூளில் பரவி, இனி அதன் நறுமணத்தை நுகர்வோமா?

கலைக்களஞ்சியமா?ஆன்மீகக்களஞ்சியமா?
கலை பாதி கதை மீதி;வரலாறு பாதி வாழ்வியல் மீதி;சிற்பம் பாதி- சீரிய
தத்துவங்கள் மீதி;நிழற்படம் பாதி- வரைபடம் மீதி;புள்ளிவிபரம் பாதி-புவியியல்
மீதி;ஓவியம் பாதி-காவியம் மீதி;ஆய்வியல் பாதி-அழகியல் மீதி-என ஆண்டாள் திருக்கோவில்
நெடுந்தேரின் வடம்போல் நூலின் பக்கங்கள் யாவும் ஆசிரியரின் திறத்தினால் சீராக
நகர்ந்து செல்கின்றது.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்
அமைக்கப்பட்டிருக்கும் மண்டபம்,கோபுரம்,சிற்பம்,ஓவியம்-இவையெல்லாம்
எக்காலத்தில்,எந்த வம்சத்தினரால்,எச்சூழலில்,எந்தக்கலைப்பாணியில்,என்னென்ன
அளவில்,எவருடைய உறுதுணையுடன் எதற்காக உருவாக்கப்பட்டன -என்று அவை தோன்றிய ரிஷி
மூலம்,நதிமூலம் அனைத்தையும் ஓர் ஆய்வியல் அறிஞரின் கண்ணோட்டத்துடன் அழகுறச்
சொல்லிச் செல்கின்றார் முனைவர் அம்பை மணிவண்ணன்.

தொலை நோக்கியா?நுண்ணோக்கியா?
குமரகுருபரர்,'தொடுக்கும் கடவுள்’- என்றுப் பாடத்துவங்கும் பொழுது
மீனாட்சியம்மை குழந்தை வடிவில் உருமாறி, எடுத்து வைத்த சின்னஞ்சிறு அடிகள் போல்
நூலாசிரியரின் மொழிநடை சிறு சிறு தொடர்களாயிருப்பதனால் வாசிப்போரின் மனதில்
நிற்கின்றது.ஆசிரியர் அம்பையின் விழிகள் சில வேளைகளில் தொலை நோக்கியாக,பல வேளைகளில்
நுண்ணோக்கியாகச் செயல்பட,கரங்களோ நீள அகல உயரங்களை அளக்கும் பொழுது அடிக்கோலாக மாறி
நகர்ந்து செல்ல,மனமோ ஒரு கதை சொல்லியாக மாறி மீனாட்சியின் செவிக்கருகில் இன்மொழி
பேசும் பசுங்கிளி போல் நூலை வாசிப்போர் காதருகே வந்து உரையாடத் துவங்கிவிடுகின்றது.

பிரமிப்பும் பிரமாண்டமும்:
*மீனாட்சியம்மன் தன் வலதுகாலை முன்னோக்கி வைத்து நிற்கும்
காட்சி,பக்தர்களுக்கு வெகுவிரைவில் வந்து அருள்பாலிக்கவே என்ற செய்தி
*மூர்த்திநாயனார் தன் முழங்கையினால் சந்தனம் அரைத்த நிகழ்வும்,அச்
சந்தனக்கல்லின் தோற்றமும்

*தர்மர் தன் சகோதரன் பக்கம் தீர்ப்பு கூறாமல் எதிராளி பக்கம் நியாயம் கூறிய
புருசா மிருகம் கதை

*தலைவலி தீர நாயக்கர் தலைநகரத்தை மாற்றிய செய்தி
*மனதில் கல்வெட்டாய்ப் பதியும் வரைபடங்களின் அமைப்பு(ப.30,35,41,110)
*கண்ணுக்கு குளுமையான திருக்கல்யாண மண்டப விதானம்(262-263),புஷ்ப அங்கி
அலங்காரத்தில் அன்னை மீனாட்சியின் கருவறைக் காட்சி(ப.88),அம்மனின் பட்டாபிஷேக
காட்சி(ப.78)


*இரு புராணக்கதைகளை அடக்கிய குதிரைச் சேவகன் சிற்பம்(ப.183),ஆயிரங்கால்
மண்டபத்திலும்(ப.179)வடக்கு ஆடி வீதியிலும்(ப.215)இடம்பெறும் இசைத்தூண்கள்

எனப் பட்டியலிட முடியாத அளவிற்கு நூலாசிரியர் அங்கயற்கண்ணி ஆலயத்தில்
அமைந்துள்ள சிற்பம்,ஓவியம் போன்றவற்றை ஆகமவிதிகள் குறித்த அறிவோடு சொல்லிச்
செல்லும்பாங்கு வியக்கத்தக்கது.

மனதார...
நூலில் இடம்பெறும் அளவியல் படங்கள் பதிப்பாசிரியரை ஒரு பொறியியல்
வல்லுனராக,சிற்பங்கள் ஒவ்வொன்றும் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞனாக,மண்டபங்களும்
விதானங்களும் பன்னாட்டு அளவில் விருது பெற்ற ஒளிப்பதிவாளராக எண்ணிப் பார்க்க
வைக்க,நுழைவாயில் தொடங்கி புது மண்டபம் வரை ஆசிரியர் தன் மொழிநடையால் தன்னோடு
வாசகரை அழைத்துச் செல்ல,பதிப்பாசிரியர் டாக்டர் ஏ.ஆர்.சீனிவாசன் ,ஆன்மீகத்தில் அதீத
ஆர்வம் மிக்க நூலாசிரியர் முனைவர் மணிவண்ணன் ஆகிய இவ்விருவரும் பொற்றாமரை நூல் வழி
வாசிப்போர் இதயத் தாமரையிலும் மலர்வது உறுதி!இவர்களிருவரது இலக்கிய வாழ்வு
மீனாட்சியம்மனது மாம்பழக்கொண்டையின் முத்துக்கள் போல் ஒளிர, என்போன்ற ஆன்மீகப்
பிரியர்களின் வாழ்த்துக்கள்!

திங்கள், 16 மே, 2011

நர்த்தகி இயக்கம் G.விஜயபத்மா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா ,இரவி


நர்த்தகி
இயக்கம் G.விஜயபத்மா

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா ,இரவி

அதிசயம் ஆனால் உண்மை .திரை அரங்குகளில் ரூ 200,ரூ 150,ரூ 100வாங்கும் காலத்தில் ,மதுரை ஷா .திரைஅரங்கில் வெறும் ரூ20
மட்டும் பெற்றுக்கொண்டு நுழைவுச் சீட்டு வழங்கினார்கள் .மிகக் குறைந்த கட்டணம் .அதற்காகவே முதலில் நன்றி சொல்ல வேண்டும்.
திருநங்கைகளின் உள்ளத்து உணர்வுகளை உண்மையை அப்படியே படம் பிடித்து காட்டிய முதல் திரைப்படம் .கல்கி என்ற திருநங்கையின் கதையை அப்படியே மலரும் நினைவுகளாகப் படம் பிடித்து உள்ளனர் .இந்தப்படத்தை மிக தையிரியமாகத் தயாரித்த புன்னகை பூ கீதாவைப் பாராட்ட வேண்டும் .திருநங்கைகளின் வாழ்க்கைப் போராட்டத்தை, மன வலியை,வேதனையை விளக்கும் மிக நல்ல திரைப்படம் நர்த்தகி .
கதை ,திரைக்கதை, வசனம் இயக்கம் G.விஜயபத்மா . மிகச் சிறப்பாக ஒரு திருநங்கை எப்படி? உருவாகுகின்றனர் .என்பதை மிக விளக்கமாக திரையில் காட்டி உள்ளார் .G.V.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளது .பாடல் ஆசிரியர் நர். முத்துக்குமார் பாடல் வரிகள் சிந்திக்க வைக்கின்றது .ஒளிப்பதிவாளர் M.கேசவன் படத்திற்கு பலம் சேர்த்து உள்ளார் .இதுவரை வந்த பெரும்பாலான திரை ப்படங்களில் திருநங்கைகளை கேலியாகவே சித்தரித்து உள்ளனர் .முதன் முறையாக இந்தப் படத்தில்தான் திருநங்கையை கதையின் நாயகியாகச் சித்தரித்து உள்ளனர் .முதல் முயற்சியில் வெற்றிப் பெற்றுள்ளனர் .இந்தப் படத்திற்கு விருது வழங்கலாம் .
சிறுவன் சிறுமியாக இருக்கும் போதே ,இவன்தான் உன் கணவன் ,இவள்தான் உன் மனைவி என்று சொல்லி வளர்க்கும் கிராமத்து மூடநம்பிக்கையைச் சாடி உள்ளனர் .ரத்த சொந்தகளுக்குள் திருமணம் செய்ய வேண்டாம் என்று இன்று ஆய்வுகள் சொல்கின்றன .பல விழிப்புணர்வை விதைக்கும் விதமாக படம் உள்ளது .பாராட்டுக்கள் .
குழந்தைகளிடம் தேவையற்ற ஆசைகளை வளர்த்து விடாதீர்கள் என எச்சரிக்கை செய்கின்றது படம் .

சிறுவனுக்கு ஜோடியாக மாமா மகளைச் சொல்லி வளர்க்கின்றனர் .நாளைடைவில் அவனுக்குள் அவள் என்ற உணர்வு வருவதை மாமா மகளிடம் சொன்னால் அவள் ஏற்க மறுக்கிறாள் .சிறு வயதில் இருந்த காதலித்த அவளுக்கு ஏமாற்றம் .தந்தை சிலம்பம் ஆசிரியர் .அவர் மகனுக்கு சிலம்பம் சொல்லித் தருகிறார் . ஆனால் அவனோ சிலம்பம் சொல்லிதரும் போது நாட்டியம் ஆடுகிறான் .அப்பா சினம் கொள்கிறார். அம்மா ஆடும் போது உடன் ஆடிப் பழகுகின்றான் .வீட்டில் சகோதரிகளின்
சட்டை ,பாவாடையை போட்டுப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறான் .பாஸ்கர் என்ற நண்பன் தொட்டபோது பெண்ணாக உணர்கிறான் .தன்னுள் உள்ள பெண்மையை அம்மா ,அப்பாவிடம் சொன்னபோது ஊருக்குப் பயந்து அவனை அடித்து விரட்டுகின்றனர்.மாமா மகளிடம் பணம் பெற்று ஊரை விட்டுச் செல்கின்றான் . திருநங்கைகளின் உதவியுடன் மும்பை செல்கிறான் .அங்கு சென்று அவன் அவளாக மாறுகின்றாள் .அவள்தான் கல்கி .மும்பையில் திருநங்கையாக மாறுவதற்கு அங்கு நடக்கும் சடங்குகள் மிக விரிவாக படமாக்கி உள்ளனர் .மும்பை திருநங்கைகள் இந்தியில் பேசுவதை தமிழாக்கம் செய்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் .
அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியதும் பாலியில் கொடுமை நடக்கின்றது .மனம் வெறுத்து பக்கத்துக்கு வீட்டு மலையாளப் பெண்ணிடம் நாட்டியம் பயில்கின்றாள்.பின் அவள் ஆலோசனையின் பெயரில் திருவையாறு வருகிறாள் .நாட்டிய ஆசிரியரை தந்தையாக மதித்து அவரிடமும் நாட்டியம் பயில்கின்றாள்.அவர் இறந்து விடுகிறார் .மில் அதிபர் மகன் வருகிறான் கல்கியைக் காதலிக்கிறான் .தாலி கட்டி மனம் முடிக்கிறான் .தங்கி சுகம் கண்டுஏமாற்றி செல்கிறான் .அவனைத் தேடிச் சென்று அவன் அப்பாவை சந்திக்கும் போதுதான் உண்மை தெரிகின்றது .வருடமாகக் குழந்தை இல்லை.சோதிடர் பரிகாரம் சொல்கிறார் குழந்தை பிறக்க திருநங்கையை அணைந்தால் பிறக்கும் என்று சொன்னதற்காக கல்கியை ஏமாற்றியது அறிந்து கவலை கொள்கிறாள் கல்கி .
கல்கி பாரத நாட்டிய கலைஞராக வளர்ந்து விடுகிறாள் .
கல்கியின் குழந்தைப் பருவத்து சிறுவர்களாக நடித்த இருவரும் ,மாமா மகளும் ,மாமாவும் அப்பாவும் அம்மாவும் அனைவரும் போட்டிப் போட்டு நடித்து உள்ளனர் .உள்ளதைக் கொள்ளை கொள்கின்றனர் .பாராட்டுக்கள்.
திருநங்கையை பெற்றோர்களே வெறுக்காதீர்கள் ஒதுக்காதீர்கள் அன்பு செலுத்துங்கள் என்று புத்தி புகட்டும் சிறந்த படம் . திருநங்கைகள் பற்றி விழிப்புணர்வு விதைக்கும் விதமாக வந்து உள்ள நல்ல படம் ..படம் பார்த்த வந்தவுடன் ஒரு ஹைக்கூ வந்தது எனக்கு .

குழந்தை பிறத்தது
திருநங்கையை ஏமாற்றியவருக்கு
திருநங்கையாக

ஞாயிறு, 15 மே, 2011

ஈழத்து சிறுகதைகள்: ரூபம்

ஈழத்து சிறுகதைகள்: ரூபம்: "ஷோபாசக்தி இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார..."

Thaalam --- இலக்கியம் - ஹைக்கூ ...

Thaalam --- இலக்கியம் - ஹைக்கூ ...

Thaalam --- இலக்கியம் - ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள்

Thaalam --- இலக்கியம் - ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள்

Thaalam --- இலக்கியம் - மாவீரன் நேதாஜியே நீயே பதில் சொல்

Thaalam --- இலக்கியம் - மாவீரன் நேதாஜியே நீயே பதில் சொல்

Thaalam --- இலக்கியம் - மாவீரன் நேதாஜியே நீயே பதில் சொல்

Thaalam --- இலக்கியம் - மாவீரன் நேதாஜியே நீயே பதில் சொல்

Thaalam --- இலக்கியம் - மாவீரன் நேதாஜியே நீயே பதில் சொல்

Thaalam --- இலக்கியம் - மாவீரன் நேதாஜியே நீயே பதில் சொல்

Thaalam --- இலக்கியம் - மாவீரன் நேதாஜியே நீயே பதில் சொல்

Thaalam --- இலக்கியம் - மாவீரன் நேதாஜியே நீயே பதில் சொல்

Thaalam --- இலக்கியம் - சிந்தையில் ஹைக்கூ

Thaalam --- இலக்கியம் - சிந்தையில் ஹைக்கூ

Thaalam --- இலக்கியம் - சிந்தையில் ஹைக்கூ

Thaalam --- இலக்கியம் - சிந்தையில் ஹைக்கூ

Thaalam --- இலக்கியம் - சிந்தையில் ஹைக்கூ

Thaalam --- இலக்கியம் - சிந்தையில் ஹைக்கூ

Thaalam --- இலக்கியம் - இதயத்தில் ஹைக்கூ

Thaalam --- இலக்கியம் - இதயத்தில் ஹைக்கூ

வெள்ளி, 13 மே, 2011

படித்ததில் பிடித்தது


நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம்
நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன்
திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா
தோரண வாயில்:
வேதம் நான்கு;உறுதிப்பொருள் நான்கு;படைப்புக்கடவுள் பிரம்மன் முகம்
நான்கு;பேரா.இரா.மோகனின் படைப்புலகச் செய்திப்பகுதிகளும் நான்கு.நாம் அறிந்தவரை
ஆன்மீக இணையர் பரமஹம்சர் சாரதா தேவி;அறிவியல் இணையர் மேரி கியூரி;சமூக நல இணையர்
காந்திஜி கஸ்தூரி பாய்.நாமெல்லாம் வாழும் காலத்தில் இலக்கியத்துறையில் இணையராகத்
திகழ்ந்து கொண்டிருப்பவர்கள்இரா.மோகன் - நிர்மலா மோகன் எனலாம்.வியாசமுனிவருக்கு
,விநாயகரே முன்வந்து,தன் தந்தம் ஒடித்து, மஹாபாரதம் எழுதியது இதிகாச
காலம்!இரா.மோகனின் படைப்புக்களை தமிழறிஞர் சேதுபாண்டியனின் உறுதுணையுடன்
மோகனப்பிரியையான நிர்மலா அம்மையார் பகுத்து தொகுத்திருப்பது இக்காலம்.
நவரத்தின மாலை:
இலக்கியமுத்துக்களா?சிந்தனைத்து
ளிகளா?கருத்துக்குவியலா?தத்துவ
மழையா?ஆய்வுச்சுரங்கமா?வரலாற்று
க் கோர்வையா?தகவற் களஞ்சியமா?நவீனத்தின்
பிரதிபலிப்பா?பொது அறிவு பெட்டகமா?- என உய்த்துணர முடியாத அளவிற்கு,மோகனக்
குவியலிலிருந்து வைரம்,பவளம், வைடூரியம், ,கோமேதகம்,நீலம் எனத் தேர்வு செய்து
,அவற்றை அன்பெனும் அற்புத இழை கொண்டு கோர்த்து தமிழன்னைக்கு நவரத்தின
மாலையைச்சூட்டியிருக்கின்றார் நிர்மலா மோகன்.
பிறைநிலவும் நிறை நிலவும்:
நாற்பது ஆண்டுகால இலக்கிய வாழ்வில் எண்பது நூல்கள் படைத்த இரா.மோகனின்
நூல்களுக்கு பெருங்கல்வியாளர்களும்,அருங்கவி
ஞர்களும்,மூதறிஞர்களும்
வழங்கியிருக்கும் அணிந்துரைகள் விண்ணை அழகூட்டும் முகில் கூட்டங்களின் ஊர்வலமாய்
நூலின்முதற்பகுதியை கவின்பெறச் செய்கின்றன. ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் மாணிக்கப்
பரல்கள் அனைத்தையும் எடுத்து,பசும்பொன் சிலம்பில் இட்டு அதனை
இரா.மோகன்,தமிழன்னையின் கமலத்திருவடிகளுக்கு அணிவித்து அழகு பார்த்த பகுதியே
தொகுப்பாசிரியர்களால் நூலின் இரண்டாம் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. தற்கால
இலக்கியங்களான சிறுகதை,நாவல்,கட்டுரை-இவற்றில் தலைசிறந்த
புதுமைப்பித்தன்,மு.வரதராசனார்,
கு.ப,ரா-போன்றவர்களின் படைப்புக்களை பேரா.மோகன்
உள்வாங்கி,உணர்ந்து,அவற்றைப் பகுத்து,தொகுக்க,பின் பதிப்புச் செம்மல் திரு.
மெய்யப்பன்,இலக்கியப்பண்ணைக் காவலர் திரு அருணாசலம் இவர்களது சீரிய துணையுடன் இவரே
பதிப்பிக்க, இவையே படைப்புலகம் எனும் இந்நூலில் இரண்டாம் பகுதியாக இழையோடுகிறது.
தராசும் தட்டும்:
மோகன் அவர்களின் இலக்கிய அனுபவப்
பகிர்வுகளையும்,பத்திரிகைப்பதி
வுகளையும் நூலை வாசிப்போர் அலுக்காத வண்ணம்
தொகுப்பாசிரியர்கள், நூலின் இடைப்பட்டப் பகுதியாக வைத்திருப்பது
பாராட்டுக்குரியது.தன் வரலாறோடு,தமிழறிஞர்களின் வரலாறும் கூறுகின்ற இப்பகுதி
அடிக்கரும்பின் இன்சுவையை ஒத்துள்ளது. இரட்டையர்களில் துவங்கி இணையரில்
முடியும்மதிப்புரை மாலை பகுதி மூத்தப்பத்திரிகையாளர்களும் ,சாகித்ய அகாதமி,
உயராய்வு மைய உறுப்பினர்களுமான தமிழன்னையின் பூரண ஆசி பெற்றவர்கள் முனைவர் மோகனது
நூலை இலக்கிய தராசில் இட்டு எடை போட்ட பகுதியாகும்.
இரசித்ததும் ருசித்ததும்:
தொல்காப்பியர் துவங்கி துளிப்பா வரை,ஆத்திச்சூடி முதல் அக்னி சிறகு
வரை,கம்பன் தொடங்கி கந்தர்வன் வரை,குமரகுருபரர் முதல் கு.ப.ரா வரை,மு.வ. முதல்
முனைவர் இறையன்பு வரை ,பண்டிதமணி முதல் பரந்தாமனார் வரை ,கல்கி தொடங்கி கலைஞர் வரை
-என மூத்த தலைமுறையினர் தொடங்கி முனைவர் பட்ட ஆய்வாளர் வரை அலசி ஆராயும் இலக்கிய
அமுதசுரபி என்று இரா.மோகனின் படைப்புலகம் நூலைக் கூறலாம்.முனைவர் மோகனது
கட்டுரைகள் அனைத்தும் கற்கண்டு!ஆய்வுரைகளோ கோலார்த்தங்கச் சுரங்கம்!நூலில்
இடம்பெறும் இவரது நேர்காணல்களோ பாயாசத்தில் இடையிடையே பரவிக்கிடக்கும்
முந்திரிப்பருப்பு!மேற்கோள்களா
ய் சுட்டப்படும் உள்,அயல்நாட்டு அறிஞர்களின்
பழமொழி,புதுமொழிகள் எல்லாம் பச்சைக்கற்பூரமாய் நூல் முழுவதும் நறுமணம்
பரப்புகின்றன.
தோற்றமும் ஏற்றமும்:
இரா.மோகனின் படைப்புலகம் எனும்இந்நூலின் வழி குமரிக்கடலில்
கொலுவிருக்கும் ஐயன் வள்ளுவன் சிலை போல் கம்பீர நடை, காஞ்சிப் பட்டின் இழையோட்டமாய்
மொழியோட்டம்,செட்டி நாட்டு சமையலாய் நகைச்சுவை நறுமணம்,பழனி பஞ்சாமிர்தமாய் சொல்
இனிமை -என ஆசிரியரின் எழுத்தாற்றலைஉணரலாம்..ஒருவருக்
கொருவர் போட்டியாய் இருக்கும்
எழுத்துலக சமூகத்தில் இரு நூற்றாண்டு இலக்கியவாதிகளோடு நேசத்துடன் கை குலுக்கும்
முனைவர் மோகனின் பெருந்தன்மை பாராட்டத்தக்க ஒன்று.அறுபது அகவையிலும் எண்பது நூல்கள்
படைத்துவிட்டோம் என்ற ஏற்றம் சிறிதுகூட இன்றி,இன்னும்ஏகலைவன் போல் மோகன் அவர்கள்
குருவணக்கமும் பணிவும் கொண்டிருப்பது இலக்கிய உலகம் வியக்கத்தக்க ஒன்று.
மனதார..
ஓராயிரம் நூல்களைக் கற்று ,அவற்றை அமிர்தமாய்க் குழைத்து,அழகியப் பளிங்கு
குவளையில் இட்டு, இலக்கிய ஆர்வலர்களுக்கு ஊட்டியிருக்கும் முனைவர் மோகன்
அவர்களுக்கு முதலில் நன்றி.மூன்றாம் பிறையாய் மிளிரும் மோகனப் படைப்புக்களை, நிறை
நிலவாம் நிர்மலா அம்மையார் அறிஞர் சேதுபாண்டியனின் துணையுடன் தொகுத்து,
படைப்புலகம் நூலை வெளியிட்டிருப்பதற்கு அடுத்த நன்றி.ஒரு கும்பாபிஷேகம் பார்த்தால்
பன்னிரு ஆண்டுகள் திருக்கோவில் தரிசனம் செய்த புண்ணியம் உண்டு என்பர்.இரா.மோகனின்
படைப்புலகம் நூலைப் படித்தால் அவரின் எண்பது நூல்களையும் வாசித்துணர்ந்த அனுபவம்
உறுதியாக கிட்டும் என்பது மறுக்க முடியாத உண்மை!இந்த இணையரின் இலக்கிய வாழ்வு
முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் எழுந்தருளியிருக்கும் பகவதிஅம்மனின் மூக்குத்தி
போல் ஒளிர என்போன்ற இலக்கிய வாசகர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தேர்தல் முடிவு ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


தேர்தல் முடிவு ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஈழத்தில் மரித்த உயிர்கள்
பழித் தீர்த்தன
தேர்தல் முடிவு

அதிக ஆட்டம்
அழிவுக்கு வழிவகுக்கும்
தேர்தல் முடிவுநாட்டை இருட்டாக்கியவர்களை
நாடு இருட்டாக்கியது
தேர்தல் முடிவு

பேராசை
பெரும் நஷ்டம்
தேர்தல் முடிவு

உன்னால் நான் கெட்டேன்
என்னால் நீ கெட்டாய்
தேர்தல் முடிவு

அதீத நம்பிக்கை
ஆபத்தில் முடியும்
தேர்தல் முடிவு

சுனாமியை வென்றது
எதிர்ப்பு அலை
தேர்தல் முடிவு

கோடிகள் இரைத்தும்
முடிவு சோகம்
தேர்தல் முடிவு

குடிமகன்கள் மட்டுமல்ல
குடி மகன்களும் கைவிட்டனர்
தேர்தல் முடிவு

பொது மக்களின்
மவுனப் புரட்சி
தேர்தல் முடிவு
மனிதநேயம் மறந்ததால்
கிடைத்தத் தண்டனை
தேர்தல் முடிவு

இன நலம் பேணாததனால்
பெற்ற த் தண்டனை
தேர்தல் முடிவு

சேரக் கூடாதவர்களுடன்
சேர்ந்ததால் வந்தது
தேர்தல் முடிவு

செவ்வாய், 10 மே, 2011

தீர்ப்பு கவிஞர் இரா .இரவி


தீர்ப்பு கவிஞர் இரா .இரவி

அன்று திருத்த முடியாதது
இன்று திருத்த முடிந்தது

அன்று நியாயத்தின்படி
இன்று ஆளுக்கு ஏற்றபடி

குரங்கிடம் அப்பம் பறிக் கொடுத்த
பூனைகளாக மக்கள்

நீதி தேவதையின் கண்களின்
கறுப்புத் துணியை
கறுப்புப் பணம் அவிழ்த்து விடுகின்றது

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com

eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

ஞாயிறு, 8 மே, 2011

பட்டிமன்றத்தில் கவிஞர் இரா.இரவி

பட்டிமன்றத்தில் கவிஞர் இரா.இரவி

http://www.youtube.com/watch?v=v5OxSKdtjGg

நன்றி www.tamilauthors.com

அன்னை கவிஞர் இரா .இரவி


அன்னை கவிஞர் இரா .இரவி

மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்
மாதாவைத்தான் முதன்மையாகச் சொன்னார்கள்

அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் என்றார்கள்
அன்னையைத்தான் முதன்மையாகச் சொன்னார்கள்

தாய் நாடு என்றுதான் அன்றே சொன்னார்கள்
தந்தை நாடு என்று எங்கும் சொல்வதில்லை

தாய் மொழி என்றுதான் எங்கும் சொல்கிறார்கள்
தந்தை மொழி என்று எங்குமே சொல்வதில்லை

நூலைப் போல சேலை தாயைப்போல பிள்ளை
தாயால் சிறந்தோர் தரணியில் மிகுந்தோர்

மாமனிதர் அப்துல் கலாம் முதல்
மண்ணில் பிறப்போர் சிறக்க காரணம் அன்னை

அன்பை விதைக்கும் அன்புச் சின்னம் அன்னை
அகிலம் போற்றிடும் அற்புத உறவு அன்னை

அன்னை இன்றி யாரும்பிறப்பதில்லை உலகில்
அன்னைக்கு இணையான உறவு இல்லை உலகில்

தாயுக்குத் தலை வணங்கினால் உலகம்
தலை வணங்கும் உன்னிடம்

--
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

தாய் கவிஞர் இரா .இரவி


தாய் கவிஞர் இரா .இரவி

தன்னலம் கருதாது சேய் நலம் கருதும்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் தாய்

தன்னை வருத்தி சேயை வளர்க்கும் இமயம்
தரணியில் நிகரற்ற புனித உறவு தாய்

தாய் நெடிலில் தொடங்கி மெய்யில்
முடியும் மெய்யான மெய்
தாய்

எந்தத் தாயும் சேய்களை மறப்பதில்லை
இந்தச் சேய்களதான் தாயை மறக்கின்றனர்

உடலில் உயிர் உள்ளவரை என்றும்
ஒருபோதும் மறப்பதில்லை சேய்களை
த் தாய்

மகன்கள்தான் மணமானதும் மறக்கின்றனர்
மகள்கள் மணமானாலும் மறப்பதில்லை

மனைவி வந்ததும் தாயை மதிப்பதில்லை
தாயோ மகனையே நினைத்து வாடுகின்றாள்

உறவுகள் ஓராயிரம் இருந்தாலும்
ஒப்பற்றத் தாயுக்கு ஈடு இணை எதுவுமில்லை

உலகில் யாரை மறந்தாலும் மகன்களே
உலகிற்கு வரக் காரணமான தாயை மறக்காதீர்கள்


--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

சனி, 7 மே, 2011

அம்மா ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

அம்மா ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

காணிக்கை
க் கேட்காத
கண் கண்ட கடவுள்
அம்மா

நடமாடும்
தெய்வம்
அம்மா

கருவறை உள்ள
கடவுள்
அம்மா

உயிர் தந்த உயிர்
உயிர் வளர்த்த உயிர்
அம்மா

மனதில் அழியாத ஓவியம்
மறக்க முடியாத காவியம்
அம்மா

ஆடுகளும் மாடுகளும் கூட
உச்சரிக்கும் உயர்ந்த சொல்
அம்மா

வாய் பேசாத ஜீவன்களும்
பேசிடும் ஒரே சொல்
அம்மா

மகனின் வாழ்வு ஒளிர்ந்திட
உருகிடும் மெழுகு
அம்மா

உச்சங்களின் உச்சம்
உலகின் உச்சம்
அம்மா

அன்பின் சின்னம்
அமைதியின் திரு உருவம்
அம்மா

திசைக் காட்டும்
கலங்கரை விளக்கம்
அம்மா

கரை சேர்க்கும் தோணி
உயர்த்திடும் ஏணி
அம்மா

நேசம் பாசம் மிக்கவள்
வேசம் அறியாதவள்
அம்மா

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com

eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

அன்னையர் தினத்தை முன்னிட்டு


அன்னையர் தினத்தை முன்னிட்டு 8.5.2011 இன்று இரவு 10.30 மணி முதல் 2.30 மணி வரை உலகத்தமிழர் வானொலியில் www.wtrfm.com http://www.thaalam.lk/ கவிஞர்கள் இரா .இரவி ,சந்திரன் பங்கு பெரும் நேரலை நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் .நேயர்கள் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்குபெறலாம் .உடன் உரையாடுபவர் உங்கள் அன்பு அறிவிப்பாளர் ஸ்ரீ .சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து நேரடியாக ஒலிபரப்பாகின்றது .
--

செவ்வாய், 3 மே, 2011

மனதில் ஹைக்கூ

நூல் அறிமுகம்

நவம்பர் 01-15_2010

நூல் : மனதில் ஹைக்கூ

ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி

வெளியீடு : ஜெயசித்ரா


வடக்கு மாசி வீதி, மதுரை - 625 001.

பக்கங்கள் : 64 விலை: ரூ 40

நடைமுறை வாழ்க்கையில் காணுகின்ற காட்சிகளைக் கருத்தோவியமாய் - ஹைக்கூவாய் ஒளிரச் செய்துள்ளார் கவிஞர். சூழல், சமுதாயச் சிந்தனை, நிருவாகக் கோளாறு.... என்று வாழ்க்கை யின் ஒவ்வொரு அங்கமும் அலசி ஆராயப் பட்டுள்ளது.

விளைவித்தன கேடு/

கண்களுக்கும் மனதிற்கும்/

தொ(ல்)லைக்காட்சிகள்


யாரும் பார்க்கவில்லை கடவுளை /

எல்லோரும் பார்க்கின்ற சாத்தான்/

தொ(ல்) லைக்காட்சி

என்று சிறுவர் முதல் பெரியவர்வரை அனைவரையும் அடக்கி ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிபற்றிய வரிகள் மக்களைச் சிந்திக்க வைப்பன.

ஜோதிடம் என்ற போர்வை மக்களை மூடநம்பிக்கையினுள் மூழ்கடித்திருப்பதை,

எதிர்காலம் அறிவதாக /

நிகழ்காலம் வீணடிப்பு/

சோதிடம்,


மடக்கட்டங்கள் கணித்து/

மனக்கட்டடங்கள்தகர்ப்பு/

சோதிடம்


என்று குமுறியுள்ளார் கவிஞர்.


படிக்காவிட்டாலும்/

பாடமாகுங்கள் மருத்துவ மனைக்கு/

உடல்தானம்


விழி இழந்தவருக்கு /

விழி ஆகுங்கள் /

ஒளி ஏற்றுங்கள்


என்று சமுதாய விழிப்புணர்வுக்கு வித்திட்டுள்ளார்.

பரபரப்பான உலகில் பெற்றோரின் மீது பிள்ளைகள் காட்டும் வெறுப்பினை,

குஞ்சுகள் மிதித்து/

கோழிகள் காயம்/

முதியோர் இல்லம்

என்ற புதுமொழி படைத்து துணுக்குற வைத்துள்ளார்.

மொத்தத்தில், மனதின் உள்ளக் குமுறல்களை மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாய் முத்திரை பதித்து படிப்போர் மனதினைத் தென்றலாகத் தீண்டி மகிழ்ச்சியுற வைப்பதே மனதில் ஹைக்கூ.


--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்

திருநங்கைகள் கவிஞர் இரா .இரவி


திருநங்கைகள் கவிஞர் இரா .இரவி

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கலந்த
உயிர் மெய் எழுத்துகள் திருநங்கைகள்

உயிர்மெய் இன்றி தமிழ் மொழி இல்லை
திருநங்கைகள் இன்றி சமுதாயம் இல்லை

ஆற்றலும் அறிவும் மிக்கவர்கள்
அன்பு செலுத்துங்கள் அப்புறம் பாருங்கள்

அவர்களைப் போல நல்லவர்கள்
அகிலத்தில் இல்லை என்பதை உணர்வீர்கள்

நடனத்தில் சாதனை புரிந்த நர்த்தகி நடராஜ்
ஊடகத்தில் சாதனை புரிந்த ரோஸ்

ஆண்பால் பெண்பால் இரண்டும் இல்லாத
மூன்றாம் பால் இவர்கள் திருநங்கைகள்

ஆண் இனத்திலும் சேர்ப்பதில்லை
பெண் இனத்திலும் சேர்ப்பதில்லை

தனி ஒரு இனமாகஎல்லோரும் பார்க்கிறார்கள்
தனிப்படுத்தப் பட்டதை எண்ணி வருந்துகிறார்கள்

குடும்பத்தில் தொடங்கியப் புறக்கணிப்பு
குமுகாயத்திலும் தொடர்வது வெறுப்பு

திரைப்படங்களில் காட்டிய கேலி கிண்டல்
தெருவெங்கும் தொடர்கையில் வேதனை

பார்ப்பவர்கள் சிரிக்கையில் உள்ளத்திற்குள்
அழுகிறார்கள் என்பதை யாரும் உணர்வதில்லை

ஏன்? இப்படி ஆனோம் என்று தினமும்
எண்ணி எண்ணி வருந்துகின்றனர்

திருநங்கையாகப் பிறந்தது அவர்கள் பிழையன்று
இயற்கை செய்த பிழைதான் இன்று

ஆதியில் தெரிவதில்லை திருநங்கை என்று
பாதியில் வந்த மாற்றம்தான் இது

உழைத்து வாழ விரும்பினாலும்
உழைக்க வாய்ப்பு வழங்குவதில்லை

மனிதநேயம் மனிதர்களுக்கு வேண்டும்
மனிதநேயம் மறந்தால் மனிதனே அன்று

சங்கடப் படும் படி தயவுசெயதுப் பார்க்காதீர்கள்
சக மனுசியாக எல்லோரும் நேசியுங்கள்
--

திங்கள், 2 மே, 2011

பின்லேடன் படுகொலை சில சிந்தனை கவிஞர் இரா .இரவி


பின்லேடன் படுகொலை சில சிந்தனை கவிஞர் இரா .இரவி


ஒழிக்கப்படவேண்டியது தீவிரவாதம்தான் .தீவிரவாதி அல்ல .பின்லேடன் ஏன்? தீவிரவாதியானான் என்ற காரணத்தையும் ஆராய வேண்டும் .உலக ரவுடியான அமரிக்கப் படை எங்கு சென்றாலும் ,எந்த நாட்டிற்குள் நுழைந்தாலும் வெளிய வருவது இல்லை . .வியாட்னாமிலும்அமரிக்கப் படை இன்னும் உள்ளது .ஆப்கானிஷ்தானிலும்,ஈராக்கிலும் அமரிக்கப் படை இன்னும் உள்ளது . அமரிக்கப் படையின் தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் பல்லாயிரம் மாண்டு உள்ளனர் .
அணு ஆயுதம் வைத்துள்ளார் என்று சதாமைக் கொன்றார்கள் .கடைசிவரை அணு ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. வல்லரசு நாடு என்பதற்காக எதுவும் செய்யலாம் என்பது தவறு .தவறு யார்? செய்தாலும் தவறுதான் .சில ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான பின்லேடனைக் கொன்றார்கள் .ஆனால் சில லட்சம் பேர் சாவுக்கு காரணமான ராஜபட்சேயை கொல்ல அமெரிக்க முன் வருமா ?வராது .காரணம் அமெரிக்காவில் இறந்தது அமெரிக்கர் .இலங்கையில் இறந்தது தமிழர் .ஏன் ?
ந்தப் பாகுபாடு .இலங்கையில் பெட்ரோல் கிணறுகள் இல்லை பின்லேடன் படுகொலையோடு இது முடிந்துவிடுமா? யோசிக்க் வேண்டும் ?பின்லேடன் ஆதரவாளர்கள் இருப்பார்கள் அவர்களை மூளைச் சலவை செய்து வன்முறைக்கு வழி வகுப்பார்கள். அமெரிக்காவின் இந்த பலி வாங்கும் செயலால் உலக அமைதி கேள்விக் குறியானது .பின்லேடனை கொல்லாமல் சிறைபிடித்து இருக்கலாம். அமெரிக்கா வினை விதைத்துவிட்டது .
சரிந்து வந்த ஓபாமாவின் செல்வாக்கை உயர்த்த பின்லேடன் படுகொலை பயன்படலாம் .ஆனால் இதையும் வன்முறையாகவே பார்க்கிறேன் நான் . உலக அளவில் மனிதநேய ஆர்வலர்கள் யாரும் பின்லேடன் படுகொலையை விரும்பவில்லை .இதற்காக அமரிக்க மக்கள் மகிழ்வதும் தவறு .ஓபாமா இந்தியா வந்த போது காந்தியத்தை மதிப்பவன் என்று சொன்ன சொல் பொய்யானது .

Thaalam --- செய்திகள் - உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு உண்மை � கவிஞர் இரா.இரவி

Thaalam --- செய்திகள் - உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு உண்மை � கவிஞர் இரா.இரவி

ஞாயிறு, 1 மே, 2011

என்னவள் – நூல்விமர்சனம்


என்னவள் – நூல்விமர்சனம்- முனைவர் ச. சந்திரா

என்னவள் நூல்ஆசிரியர்-(இரா.இரவி)
இளைய தலைமுறையினரின் இதயத்தை ஈர்க்கும் இலக்கிய முத்துக்கள்…

கோபுர வாயில்:

கவிஞர் இரா.இரவியின் ஐந்தாவது மைல் கல்லான இந்த தொகுப்பு அழகியலும் அன்பியலும் கலந்த அபூர்வ படைப்பு. பாசத்தின் தன்மையை வாசகர்க்கு வலியுறுத்த வந்த பாங்கான நூல் எனலாம். ஒன்றைச் சொல்வதன் வழி மற்றொன்றை வலியுறுத்த வந்த உளவியல் சார்ந்த நூல் என்றும் இதனைக் கூறலாம். உடலியல் மறுத்து, உலகியல் கூற வந்த உயிரோட்டமான படைப்பு இந்த |என்னவள்|. இயலாமையை மறைமுகமாகச் சொல்லி, இருப்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வரவழைக்கும் மனோதத்துவ நூலை சிறிது புரட்டிப் பார்போமா? புரட்டும் முன்…

முன் அட்டைப்படம் சொல்லும் செய்தி:

|உலக மாந்தர்களை அகக்கண் கொண்டு நோக்கும் பொழுது அனைத்தும் நிஜமாகும்! புறக்கண் கொண்டு நோக்கினால் போக்கிரித்தனமே மிஞ்சும்! ஏந்தக் கண் கொண்டு பார்த்தாலும் உன்னைக் கண்காணிக்க உன் பின்னால் எவரேனும் இருப்பர்| என்று மணியடித்து எச்சரிக்கின்றது முன் அட்டைப்படம்!

பின் அட்டைப்படம் சொல்லும் செய்தி:

||நீங்களும் நானும் வௌ;வேறு திசைகளில் வெகு தூர இடைவெளியில் இருப்பினும் நம்மிருவரையும் என்றேனும் ஒரு நாள் |கவிதாதேவி| நெருக்கத்திற்கு உள்ளாக்குவாள்|| என வித்தக கவிஞரிடம் மெல்லிய குரலில் கவிஞர் இரா.இரவி சொல்வது போல் அமைந்துள்ளது பின் அட்டைப்படம்.

கைதியா? நீதிபதியா?

கவிஞர் இரா.இரவியின் “என்னவள்” -எனும் கவிதை தொகுப்பில் நிழல் நிஜமாகின்றது ; நிஜம் நிழலாகின்றது. ஏக்கமும் தாக்கமுமாய், வேண்டுதலும் விடைபெறுதலுமாய், அன்பும், பன்புமாய், உயர்ச்சியும், வீழ்ச்சியுமாய், வினாவெழுப்பி விடை கூறி, நினைவுகளோடு வாழ்ந்து கனவுகளோடு கைகோர்த்து உலவுகின்றார் கவிஞர். இந்த நூலில் இடம் பெறும் கதாநாயகி கவிதைக்கு கருவாகி, இடையிடையே காந்தமாகி, சில நேரம் ஏணியாக, பல நேரம் வாழ்வெனும் சமுத்திரத்தைக் கடக்க உதவும் தோணியாக உருவெடுக்கின்றாள். நாயகனோ – நாயகியின் கட்டளைக்குச் செவி சாய்த்து, சில வேளை நீதிபதியாய், பல வேளை நினைவுச் சிறைக்குள் அகப்பட்ட கைதியாய், மனம் இலயித்தும் தொலைத்தும், உருகியும் மருகியும் இறுதியில் எங்கு செல்வது எனத் தெரியாமல், புரியாமல் எழுதுகோலுக்குள் புகந்து கவிதை வானில் பயணிக்கத் துவங்கி விடுகிறார். வாசகர்களைச் சிந்திக்க வைத்துவிட்டு, தான் மட்டும் சிறகடித்துப் பறக்க முற்படுகிறார் கவிஞர்.

கல்வெட்டாய் பதிந்த காவியக் கவிதை: “என்னவளே!
காதலுக்கும் நட்புக்கும்
இடைவெளி ஒரு நூல் தான்
அந்த நூல் அறுந்தால்
காதலும் மலரலாம்
நட்பும் முறியலாம்
நட்பு முறியுமென்றால்
காதல் வேண்டாம்
நண்பர்களாகவே இருப்போம்”!

மனமார…

அதீத பாசக் கடலில் அமிழ்ந்து கிடைக்கும் இளைய தலைமுறையினர் – வெறுப்பும் விரக்தியும் ஒரு சிறிதும் இல்லாத இந்த “என்னவள்” – நூலை வாசித்து உணரும் வேளையில் அவர்களுக்கெல்லாம் உலக உண்மைகள் தெரியவரும் ; உளவியல் புரிய வரும் ; உடலியல் தெளிவு வரும்! வாழ்வை வெல்லும் வல்லமையைப் பெருக்கின்ற ஆற்றல் உச்சக்கட்டப் பாசத்திற்கு உண்டு என்ற உயர் தத்துவம் மனதில் புரியும் ! வாழ்வில் இழப்பையும் தவிப்பையும் ஒதுக்கி விட்டு, இதயத்திற்கு மரியாதை அளிக்கக் கற்றுதரும் இனிய நூலாம் என்னவளைப் படித்துப் பயன் பெறுங்கள் ! பண்போடு வாழலாம். கவிஞர் இலக்கியப் பயணம் இடைவிடாது கவிதைச் சாலையில் பயணிக்க உளமார்ந்த வாழ்த்துக்கள்.
என்னவள்

என்னவள்,நூல் விமர்சனம்: கவிஞர்
ரா.பரிமளாதேவி

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.ரவி

வெள்ளைத்தாளை கல்வெட்டுக்களாய் சித்தரித்த கவிஞரின் ஓவிய வரிகளை தீட்டுவதற்கு
தூரிகைதாம் என்ன தவம் செய்ததோ?

ஓய்வறியா சிந்தனையில் உதித்திட்ட வார்த்தைகளுக்கு வசந்தம் வந்து விட்டதோ?!

இப்படிக் கவிதைப் பூக்களை(பாக்களாய்) பூப்பதற்கு வார்த்தைகளை
எளிமையாக்கி,வாசிப்பாளனை கனமாக சிந்திக்க செய்கிறது. இவரது கவிப்பூக்கள்.

காதலின் வெற்றியே இது தான் தனது துணையின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்பதை
சிறப்பிக்கிறார் கவிஞர் இப்படி.

“உன் மகிழ்ச்சி பாதிக்குமென்றால் இணைப்பை விட
பிரிவே எனக்கு சம்மதம்” என்று.

“பட்டாம்பூச்சி அழகா” எனும் கவிதையில் வாய்மொழி கூறும் அந்த வண்ணத்துப் பூச்சி
தான் ( பெண்) என்ன தவனம் செய்ததோ! கவிஞரின் தீர்ப்பு சரி தான்.

காதலில் தோற்றவர்களே அதிகம். அதிலும் தோல்வியாளர் பட்டியலில் சேர்த்தற்கு நன்றி
என்கிறார். *கவிஞரின் பார்வையில் தோல்வியும் சுகமோ*….

மறந்தால் தானே நினைப்பதற்கு. என்பதை மறைமுகமாக சொல்லும் விதம் அருமை.

காதலில் கூட தேசப்பற்றுடன் இருக்கிறார். கவிஞர்
“தினமும் என்னைப் பாராட்டு,நாடு செழிக்கட்டும் “என்கிறாரே…

புரிந்ததும்,புரியாதது போல இருப்பது தானே காதலில் சுவராஸ்யம் என்கிறார் கவிஞர்

தன் இணை எதற்கும் இணையில்லை என்பதை இப்படியும் சொல்லலாமோ..

உள்ளத்தைப் போலவை உருவமும் பிரதிபலிக்கிறதோ?(அக) கண்ணாடியில்.

உள்ளம் கவர்ந்தவளே உந்து சக்தியாக இருக்கும் போது சுறுப்பிற்குக் குறைவுண்டோ?

“காதலியர் கடைக்கண்ணால் பார்த்து விட்டால்,மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர்
கடுகாம்” என்ற பாரதியின் வரிகளை நினைவுபடுத்துவதைப் போல் உள்ளது. இக்கவிதை

“காதலின் சக்தி வலிமையானது தானே”

(மனதில்) இளமையும்,புதுமையும் கொண்டது தான் காதல். மேலும் இவ்வுலகில் காதல்
மட்டுமே மாறாதது என்பதை கூறுகிறார் கவிஞர்.

பாவையின் பார்வையில் வீழ்ந்து விபத்து உள்ளமான மனம் பஞ்சுத்தூவியினால்
(சிறகு)ஆன உணர்வு ஏற்படுவது சகஜம் தானே…

“காதலில் இழப்பு இல்லை. இனிய உணர்வு உண்டு” காதலின் மென்மையைச் சொல்ல இதைவிட
வேறு வாத்தையும் வேண்டுமோ?

தன் காதலியிடம் ஆயள் நீடிப்பதற்கு “நேச” மருந்து கேட்கும் காதல் நோயாளியாகிப்
போனாரோ-காதலன்.

“மணம்” புரியாவிட்டாலும்,”மனம்” புரிந்து கொண்டவர்கள் “நாம் இணையாததால் தான்
இருவரும் இறுதி வரை நினைத்திருப்போமே” இப்படி சொல்கிறார் கவிஞர்.

இதயத்தின் வாசல் கண்கள் தானே….இதற்கு விளக்கமும் தேவையயோ…

மைனசை பிளஸாக மாற்றி யோசிக்கும் மரியாதைக்குரிய கவிஞர் தான் இவர்.

காதலர் உலகதே தனி தானே உரியவரிடம் “உள்மன” உடையாடலில் ஈடுபட்ட காதலர் இப்படித்
தான் சுற்றுச் சூழல் மறந்து தானாகப் பேசிக் கொள்வார் என்கிறார் கவிஞர்.

காதலனின் நெஞ்சூஞ்சலில் சதா ஆடிக் கொண்டிருக்கும் அவள் நினைவுகள் அப்டினு
சொல்லலாம் தானே.

வருத்தத்தைக் கூட வசந்தமாக்கி வாழ்ந்து காட்டும் தன்னம்பிக்கை வரிகள் “எத்தனை
முறை முயன்றும் கிடைக்கவி;ல்லை நீ எனக்கு. வருந்தவில்லை. நான் வசந்ததமாக்கினேன்
வாழ்க்கையை” மிக அற்புதம்.

பூவையர் பூச்சூடினாலே பூக்கள் பெருமை கொள்ளும். ஆதிலும் தன் தலைவியின் கூந்தல்
ஏறியதால் பூக்கள் அத்தனை அழகு பெறுகிறது.

இதயமெல்லாம் காதலியின் நினைவாக இருக்கும் போது,யாராவது அவளின் “திருநாமத்தை”
உச்சரிக்கும் போது,உடனே கவனிப்பதில் வியப்பில்லை…….

தலைவியிடம் தன்னை சமர்பித்தபின் அவனை அடையாளம் காட்ட அவள் ஒருத்தியினால்
மட்டுமே முடியும் என்பதுதானே உண்மை.

ஆம் ஏற்கனவே மனச் சட்டத்தில் அவளின் உருவம் மாற்றப்பட்டு விட்டதே… மீண்டும்
எதற்கு.

அகத்தையும்,புறத்தையும் அழகுபடுத்த அவள் ஒருத்தியினால் தானே முடியும்.

“நீ எது பேசினாலும்,நீ பேசுவதே அழகு” என்று ஒரு ரசிகனாக மாறிய காதலனை அடைவதற்கு
தலைவி செய்த தவம் என்னவோ… என்று வியக்க தோன்றுகிறது.

நேசம் அதிகரிக்கும் போது தோல்வியும் சுகமே.

“சகியும்” சமுதாயமும் ஒன்றாகவே தெரிகிறதோ!நம் கவிஞர்களுக்கு.
காதல்ர்களுக்கு கற்றுத் தரும் புது வகை கணக்காக உள்ளதே…..

“நினைவு முழுவதும் நீயாய் இருக்கும் போது நினைவுப் பரிசு எனக்கு எதற்கு? என்ற
வரிகள் நினைவுகளை நினைவிழக்க செய்து விட்டதே..

காதலை விட நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் நமது கவிஞரின் நட்பிற்கு நன்றிகள்
பல…சொல்லலாம்.

ஓரு பொய் உயிர் வளர்ந்து உண்மையாகி விடுமே…

மொத்தத்தில் எல்லாவற்றிலும், ‘நீயே” என்கிறாரோ…

எல்லாவற்றையும் …--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...