திங்கள், 30 நவம்பர், 2015

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தனக்கு வெயில் பட்டாலும்
தன் குழந்தைக்கு படக்கூடாது
தாயுள்ளம் !

தன்னலம் கருதாது 
சேய்நலம்  கருதும்  
தாயுள்ளம் !

சேய் சுமையை
தாய் சுமக்கும் காட்சி
மாட்சி ! 

பிஞ்சு தாங்காது வெயில்
பாசத்தோடு குடை தாங்கும்
அன்னை ! 


முல்லைக்கு தேர் தந்தவன் மகள்
மகளுக்குக் குடை ஏந்தி
மகிழ்வோடு பயணம் !

பாடசாலைக்கு செல்லும்
பாசமகளுக்கு
நேசக் குடைபிடிப்பு !

ஆயிரம் உறவுகள்
பூமியில்  இருந்தாலும்
ஈடாகாது அன்னைக்கு ! 


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

காவல்துறை உதவி ஆணையர் ,கவிஞர் ,முனைவர் ஆ .மணிவண்ணன் அவர்கள் சிறப்புரையாற்றிய படம்

இனிய நண்பர் கவிஞர் வாசகன் எழுதிய " எல்லோர்க்கும் பிடிக்கும் " நூல் வெளியீட்டு விழாவில் காவல்துறை உதவி ஆணையர் ,கவிஞர் ,முனைவர் ஆ .மணிவண்ணன் அவர்கள் சிறப்புரையாற்றிய படம். இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்.


கனவெல்லாம் கலாம் நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் .நூல் மதிப்புரை பேராசிரியர் ஏ.எம் ஜேம்ஸ் ஆசிரியர் மனிதநேயம் !

"கனவெல்லாம் கலாம்"
 நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் .
நூல் மதிப்புரை பேராசிரியர் ஏ.எம்  ஜேம்ஸ் ஆசிரியர் மனிதநேயம் !


"உலக உத்தமர் கலாம் " நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் !ஞாயிறு, 29 நவம்பர், 2015

இலக்கிய இணையரின் இல்ல நூலகம் ! முனைவர் அ.கோவிந்தராஜூ

.http://iniangovindaraju.blogspot.in/2015/11/blog-post_30.html

இலக்கிய இணையரின் இல்ல நூலகம்! 

முனைவர் அ.கோவிந்தராஜூ


இலக்கிய இணையரின் இல்ல நூலகம்

    இரண்டு மாத விடுப்பில் அமெரிக்கா சென்று வந்து, பயணக்களைப்பு தீர்வதற்குள்ளாகவே மீண்டும் பள்ளிப்பணியில் மூழ்கிவிட்டேன். தேங்கிக் கிடந்தக் கோப்புகள், சோம்பிக்கிடந்த மாணவர்கள் அனைத்தையும் அனைவரையும் ஒழுங்குபடுத்த ஒரு மாத காலம் ஆயிற்று.

   தொடர்ந்து அமெரிக்கப் பயண அனுபவங்களை அன்புள்ள அமெரிக்கா என்னும் தலைப்பில் நூலாக்கும் பணியில் ஈடுபட்டேன். இதன் காரணமாக ஒவ்வொரு ஞாயிறன்றும் மடிக்கணினியும் கையுமாகக் கிடப்பேன். ஒருவழியாக தட்டச்சு செய்து முடித்து, நூல் வடிவம் கொடுக்கும் கணினி வல்லுநர் மதுரை இராம்குமாருக்கு அனுப்பியபின் தான் பெருமூச்சு விட்டேன்.

    அவ்வப்போது எனது தமிழாசான் மதுரை வாழ் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள் தொலைபேசி மூலம் நெம்புகோல் போட்டதால் இந்த நூல்பணி உரிய காலத்தில் நிறைவடைந்தது. தானும் உரிய நேரத்தில் பணிமுடிப்பதோடு, தன்னைச் சார்ந்தவர்களும் அவ்வாறே செய்து முடிக்க வேண்டும் என்னும் கண்டிப்புடையவர் அப் பேராசிரியர்.

  இராம்குமாரும் சிறந்தமுறையில் நூல்வடிவம் கொடுத்து, அச்சுக்கு அனுப்புமுன் நேரில் வந்து பார்த்து ஒப்புதல் தருமாறு என்னை மதுரைக்கு வரச்சொல்லி அழைத்திருந்தார். நேற்று முன் தினம் மதுரை சென்று பேராசிரியரின் பேருதவியுடன் அப் பெரும்பணியை முடித்துவிட்டு அவரருடைய இல்லம் நோக்கிச் சென்றோம். இந்த நூலை சென்னை வானதி பதிப்பகம் அடுத்த மாதம் வெளியிடுகிறது.

    செல்லும் வழியில் திரு இராம பெரியகருப்பன் இல்லத்திற்குச் சென்றோம். இவர் யார் என வினவுகிறீர்களா?? வாழும் மு.வ எனச் சொல்லத்தக்க பேராசிரியர் முனைவர் தமிழண்ணல் அவர்கள்தான். தன் எண்பத்து எட்டாவது அகவையில் அடி எடுத்து வைக்கும் அகவை முதிர்ந்த தமிழறிஞர். முதுகலையில் நான் தமிழ்ப் பயின்ற போது எனக்கு ஒப்பிலக்கியம் நடத்திய ஒப்பற்றப் பேராசிரியர் இவர். அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினேன்; வாயார  வாழ்த்தினார். திருவருளைவிட குருவருள் சிறப்புடையதாகும்.

     இரு பெரும் பேராசிரியர்களும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இணைந்து பணியாற்றி இனிதே பணிநிறைவு பெற்றவர்கள். இவர்களுடைய மாணவன் நான் என்பதில் ஒருவிதமான செருக்கு என்னிடத்தில் எப்போதும் உண்டு.

   அறிவகம் எனப் பெயரமைந்த பேராசிரியர் மோகன் அவர்களுடைய இல்லம் அடைந்ததும் பேராசிரியை நிர்மலா மோகன் அவர்கள் உற்சாகத்துடன் என்னை வரவேற்று அளவளாவினார். அவர் தந்த சுவைமிகு தேநீரை அருந்தியபின் இலக்கிய இணையரின் இல்ல நூலகத்தைச் சுற்றிப் பார்த்தேன்.

  “நூல்களெல்லாம் ஒழுங்கின்றிக் கிடக்கும்” என்றார் பேராசிரியரின் துணைவியார். ஒளவையாரின் பாடல்தான் என் நினைவுக்கு வந்தது. “தொண்டைமானே! உன் படைக் கருவிகள் நெய்தடவி அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதியமானின் படைக்கருவிகள் கூர் உடைந்து கிடக்கின்றன” என்று அதியன் போர்மேல் செல்வதில் பெருவிருப்பு உடையவன் என்பதை சொல்லாமல் சொல்லும் வகையில் அவனை இகழ்வதுபோல புகழ்ந்து பேசுவார். சிலர் நூல்களைச் சேகரித்து அடுக்கில் அழகுற அடுக்கி வைத்திருப்பர். அவற்றை வாசித்திருக்கமாட்டார்கள். இத் தகைய தொண்டைமான் நூலகத்தால் ஒரு பயனும் இல்லை.

    பேராசிரியர் மோகனின் இல்ல நூலகம் அதியன் நூலகமாகும். அடிக்கடி எடுத்துப் படிப்பதால் நூல்கள் மேசை மீது கலைந்து கிடக்கின்றன. பரண்மீது காணப்படும் நூல்கள் சாய்ந்து கிடக்கின்றன.
    மூன்று அறைகளில் பன்னிரண்டாயிரம் நூல்களைத் தொகுத்து வைத்துள்ளார்கள். நூறாண்டு பழமையுடைய நூல்களோடு, அண்மையில் வெளியான கனவெல்லாம் கலாம் போன்ற பல நூல்களும் ஒருங்கே காணப்படுகின்றன. இலக்கிய இணையர் இடைவிடாது படிப்பவர்கள். அதனால்தான் ஆண்டுக்குப் பத்து நூல்கள் என எழுதிக் குவிக்கிறார்கள்.

   விடை பெற்றபோது, பேராசிரியர் அவர்கள்  தன்னுடைய கனவெல்லாம் கலாம் என்னும் நூலின் முகப்புப் பக்கத்தில் வாழ்த்துக் கையொப்பம் இட்டு எனக்களித்தார்.

   இந்த நாள் இனிய நாள் என்னும் உணர்வோடு எனது மகிழ்வுந்தில் ஏறி அமர்ந்து கரூரை நோக்கிச் செலுத்தினேன்.

இனிய நண்பர் கவிஞர் வாசகன் எழுதிய " எல்லோர்க்கும் பிடிக்கும் " நூல் வெளியீட்டு விழா ! படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அத்தை கண்டு
சிரிக்காதவள் சிரிக்கிறாள்
நத்தை கண்டு !

பார்க்கப் பரவசம்
நத்தை ரசிக்கும்
தத்தை !

குழந்தையைக் கவரும்
வித்தைக் கற்றுள்ளது
நத்தை !

நத்தையோடு பேசுகிறாள்
நமக்குப் புரியாது
நத்தைக்குப் புரியும் !

அழகிய நத்தையை
இமைக்காமல் ரசிக்கின்றாள்
குட்டி தேவதை !

மலேசியா வெளியிட்டுள்ள காமராசர் அஞ்சல் தலை ! கவிஞர் இரா .இரவி !

மலேசியா வெளியிட்டுள்ள காமராசர் அஞ்சல் தலை !
கவிஞர் இரா .இரவி !

சனி, 28 நவம்பர், 2015

படத்திற்குப் பாக்கள் !கவிஞர் இரா .இரவி !

பார்க்காமலே
கவர்ந்து இழுக்கின்றாய்
பார்த்தால் ?


நிலம் பார்த்தது போதும்
நிலவே
என்னைப் பார் !


பாவையின் பற்கள் தெரியாத
புன்னகையும்
பரவசம்தான்


வஞ்சி
வெட்கத்தைக்  கற்ப்பிக்கிறாள் 
கட்டணமின்றி  

இமை திறந்து பார்
வந்துவிட்டேன்
கனவு நாயகன் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

உலகத் திருக்குறள் பேரவை விழாவில் பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லுரி தாளாளர் மலேசிய பாண்டியன் கவிஞர் இரா .இரவிக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்.

உலகத் திருக்குறள் பேரவை விழாவில் பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லுரி தாளாளர் மலேசிய பாண்டியன் கவிஞர் இரா .இரவிக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்.

கவிச்சுடர் காரைக்கிழார் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி, தான் எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூலை பரிசளித்த போது

உலகத் திருக்குறள் பேரவை விழாவில் " மலேசிய நண்பன் " இதழ் துணை ஆசிரியர் கவிச்சுடர் காரைக்கிழார் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி, தான் எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூலை பரிசளித்த போது எடுத்த படம் !  இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்.

உலகத் திருக்குறள் பேரவை விழா !

உலகத் திருக்குறள் பேரவை விழா !
நன்றி .நக்கீரன்


உலகத் திருக்குறள் பேரவை விழா ! படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்
திருக்குறளில் வினாக்கள் ! உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி !

திருக்குறளில் வினாக்கள் !
உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி !
தொகுப்பு :
கவிஞர் இரா. இரவி !

இடம் : மதுரை திருவள்ளுவர் கழகம்
*****
       திருக்குறளில் 142 வினாக்கள் உள்ளன.  ஒரு குறளில் ஒரு வினா, ஒரு சில குறளில் இரண்டு வினாக்கள், ஒரு சில குறளில் மூன்று வினாக்களும் உள்ளன.

       பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்கு
       அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு                                    148
       பிறன்மனைவியை விரும்பிப் பார்க்காத பெரிய ஆண்மை சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று, நிறைந்த ஒழுக்கமும் ஆகும்.

       திருவள்ளுவர், இராமாயணம், மகாபாரதம் படித்தவர்.  நன்கு கற்றவர்.  இராவணன் சிவபக்தன், அறநெறியாளன், நல்ல மன்னன் என்ற பல நற்குணங்கள் இருந்த போதும் சீதையை கவர்ந்த காரணத்தால் மரணம் அடைந்தான்.  அதனை உணர்த்திடும் திருக்குறள் இது.

       ஒழுக்கத்தில் சிறந்த ஒழுக்கம் பிறன் மனைவி நோக்காது இருத்தல்.  ஆண்மை என்பது போரிடுவது, வெற்றி காண்பது.  பேராண்மை என்பது பால்உணர்ச்சி அடக்குவது.  காமக்கண்ணுடன் பிறன்மனைவியைப் பார்க்காது இருத்தலே பேராண்மை. 

பேராண்மை என்ற பெயரில் ஒரு திரைப்படம் வந்தது. பார்த்து இருப்பீர்கள்.  அதில் வரும் கதாநாயகனும் பெண்களுடன் பேராண்மையுடன் திகழ்வான்.  ஜீலியட் சீசர் கிளியோபாட்ரா போன்ற கதைகளிலும் பல நாடுகளிலும் பல துன்பங்களுக்கு காரணமாக இருந்தது பிறன்மனைவி நோக்கியது ஆகும்.

       ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
       வைத்துஇழக்கும் வன்க
ணவர் .                                   228
       தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்கும் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் இரக்கமில்லாதவர்கள், பிறருக்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறிய மாட்டார்கள்.

       புரட்சிக்கவிஞர் பாடினார், பசி என்று வந்தவனை புசிக்க செய் என்பார்.

       மதுரை கோட்சு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர் வரதராச நாயுடு.  தனுஷ்கோடி புயல் வந்து மக்கள் துன்பம் அடைந்த போது, மதுரை கோட்சு பண்டகசாலையில் தொழிலாளர்களுக்கு வைத்திருந்த அரிசி, பருப்பு பண்டங்களை அனுப்பி வைத்த செய்தி அறிந்தேன்.

       திருவள்ளுவர் மகாபாரதமும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்.
       கர்ணன், கவசம் குண்டலத்துடன் பிறந்தவன். குண்டலம் எதிரே எதிரி வாள் சுழட்டும் போது கண் கூசுமாம்.  கர்ணன், கனவில் சூரியன் தோன்றி நாளை கவசகுண்டலம் கேட்பான் கொடுக்காதே என்கிறான்.  அதற்கு கர்ணன் சொல்கிறான் என் கொடை தரும் கொள்கைக்கு எதிரானது நீங்கள் சொல்வது.  என்னிடம் கேட்டு வந்தால் எதையும் மறுக்கும் பழக்கம் எனக்கில்லை என்கிறான்.  கேட்டு வந்தவுடன் கவசத்தையும், குண்டலத்தையும் அறுத்துத் தருகிறேன். புறத்தே வலி இருந்த போது அகத்தே மகிழ்ச்சி இருந்தது கர்ணனுக்கு.

       தருமன், சூது விளையாடுகிறான், தன்னை இழக்கிறான், சகோதரர்களை இழக்கிறான், மனைவியை இழக்கிறான், புறத்தே இழந்த போதும் அகத்தே வலி இருந்திருக்கும்.

       கர்ணனையும், தருமனையும் நினைத்து இந்த திருக்குறளை திருவள்ளுவர் வடித்து இருக்க வேண்டும்.

       அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
       புன்கண்நீர் பூசல் தரும்.                                            71
       அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் ஏதேடும் உண்டோ? அன்புடையாரின் சிறிதளவு கண்ணீரை அவர் அன்பைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும்.

       உற்றார் உறவினர் நண்பர் இறந்த போது பலருக்கு கண்ணீர் வரும்.  ஆனால் சங்க இலக்கியத்தில் புறத்திணையில் ஒரு பாடல் வரும்.  இரண்டு கைகளை வெட்டி விட்டு பார்த்துக் கொள் என்பது போல.  பாரிக்கு இரண்டு மகள்கள்.  பாரி தோல்வியுற்று நாட்டை விட்டு விரட்டி விட்டனர். பரம்புமலை பற்றி அற்றைத்திங்கள் பாடல் வரும்.  தந்தை இல்லை, நாடு இல்லை – சென்ற முழு நிலவு நாளில் இவையாவும் இருந்தது.  இந்த முழு நிலவு நாளில் எதுவும் இல்லை. 

பாரியின் நண்பன் கபிலர் கண்ணீர் விட்டு அழுகிறார்.  கபிலர் இரண்டு பெண் குழந்தைகளைப் பார்த்து அழுகிறார்.  கம்ப இராமாயணத்திலும் அழும் காட்சி வருகின்றது.  அவை கற்பனை.  ஆனால் நண்பனுக்காக, நண்பனின் குழந்தைகளுக்காக கபிலன் கண்கலங்கி நின்றான். 

       அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை
       மாதர்கொல் மாலும் என்
நெஞ்சு!                       (காமத்துப்பால் 1081)

       அடர்ந்த அழகிய கூந்தலை உடைய இப்பெண் தேவமகளோ? மயிலோ? மானிடப் பெண்ணோ?  என என் நெஞ்சம் மயங்குகின்றது.

       ஒரே திருக்குறளில் மூன்று வினாக்கள் வரும்.  ஆனால் விடை இல்லை.

       யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
       யாரினும் யாரினும் என்று.                                         1314
       மற்றவர்களை விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேன்.  யார் அந்த மற்றவர் என்று கேட்டு ஊடல் கொண்டாள்.

       வினாக்கள் இந்த குறளிலும் உண்டு.

அறிவினான் ஆவேது உண்டோ பிறிதின்நோய்
        
தம்நோய் போல்போற்றாக்கடை                                  315
       மற்றோம் உயிர்க்கு உண்டாகும் துன்பத்தைத் தமக்குற்ற துன்பமாகக் கருதி அதனை நீக்கிக் காக்க முற்படாவிட்டால், ஒருவர் பெற்ற அறிவினால் வரக்கூடிய பயன் உண்டோ?

       மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டிய திருக்குறள்.

       ரமணா திரைப்படத்தில் வருவது போல நடந்து கொள்ளும் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.  சர்க்கரை அளவு பார்க்க வந்த நோயாளியை உள்நோயாளியாக்கி பணம் பறிக்கின்றனர்.  திருவள்ளுவர், மனிதன் என்று சொல்லாமல் உயிர் என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துக என்கிறார்.

       மனித வாழ்க்கை வளமானதாக நலமானதாக அமைந்திட இயற்கை, மரம், மலர், செடி, கொடி எல்லாம் வாழ வேண்டும்.  விலங்குகள், பூச்சிகள் என்று எல்லா உயிர்களும் வாழ வேண்டும்.  பிராணிகள் நல வாரியம் அமைத்து உள்ளனர்.  நாகரிகம் தோன்றிய இடத்தில் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள் என்கிறார் திருவள்ளுவர்.  மற்ற உயிர்களின் துன்பத்தை தன் துன்பமாகக் கருதி உதவி செய் என்கிறார்.  
நன்றி


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

பேராசிரியர் ,முனைவர் .இ .கி .இராமசாமி அவர்கள் "திருக்குறளில் கேள்விகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

 மதுரை மீனாட்சியம்மன் கோயில் வடக்கு ஆடி வீதியில் உள்ள மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் இன்று ( 22.11.2015 )இரவு 7 மணிக்கு மதுரை யாதவர் கல்லூரியின் முன்னை தமிழ்த்துறைத் தலைவர் ,பேராசிரியர் ,முனைவர் .இ .கி .இராமசாமி அவர்கள் "திருக்குறளில் கேள்விகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

திருவள்ளுவர் மன்றம் அழைப்பிதழ் !

திருவள்ளுவர் மன்றம் அழைப்பிதழ் !

புரட்சிக் கவிஞர் மன்றம் மதுரை அழைப்பிதழ் ! கவிஞர் இரா .இரவி


உலகத் திருக்குறள் பேரவை மதுரை அழைப்பிதழ் ! கவிஞர் இரா .இரவி


கலந்துரையாட கவிஞர்கள் வருக ! கவிஞர் இரா .இரவி !

கலந்துரையாட கவிஞர்கள் வருக ! கவிஞர் இரா .இரவி !

பொது மருத்துவ முகாம் ! கவிஞர் இரா .இரவி !

பொது மருத்துவ முகாம் !               கவிஞர் இரா .இரவி !

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது