ஏன் இந்த நிலை ? கவிஞர் இரா .இரவி !




ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி !

வறட்சியின் பொது தூர்  வாரி இருந்தால்
வளமாக தண்ணீர் தேங்கி இருக்கும் !

தூர் வார மறந்திட்ட காரணத்தால்
துர் மரணங்கள்   நேர்ந்தது சோகம் !


மழைநீர் சேகரிப்பு வீடுகளுக்கு மட்டுமல்ல
மடை ஓடை கண்மாய்களும் சேமிக்கட்டும் !

தண்ணீர் வரும் வழியில் வீடு கட்டலாமா ?
தண்ணீர் வந்தால் தவிக்க நேரிடும் உணரலியே !

மழை இல்லை என்று வேண்டியது  போய்
மழையே நில் என்று வேண்டும்படி ஆனது !

தண்ணீரின் அவசியத்தை தமிழகம் உணரவில்லை
தண்ணீரை வீணாய் கடலில் கலக்க விட்டோம் !

அண்டை மாநிலங்களிடம் கையேந்தி ஏமாந்தும்
அறியவில்லை தண்ணீரின் பயனை !
.
வெள்ளமாக   வந்த தண்ணீரை  சேமித்து இருந்தால்
வறட்சி வராமல்  வளமாக வாழ்ந்திருக்கலாம் !

மழைத்துளி என்பது உயிர்த்துளி படித்திருந்தும்
மழைநீரை காக்காமல் அலட்சியம் செய்தோம் !

கைஇருப்புப் பணத்தை ஊதாரியாக செலவழித்து விட்டு 
கையேந்திப் பிச்சை எடுபதைப் போலவே !

வந்த மாமழையை கடலுக்கு அனுப்பி விட்டு 
வருமாண்டில் கையேந்த வேண்டும் கல் நெஞ்சத்தாரிடம் ! 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்