மழை ! கவிஞர் இரா .இரவி !

மழை !      கவிஞர் இரா .இரவி !

மழைக்காக வேண்டிய காலம் போய்
மழை நிற்க வேண்டும் காலம் வந்தது !

வானிலை அறிவிப்பில் இன்னும் மழை என்று
வாய் திறக்கும்போது  நெஞ்சம் பதறுகின்றது !  

வானிலிருந்து வரும் அமுதம் என்றனர்
வான்அமுதே பலரின்  உயிர் பறித்தது !

சேமிக்க இடமில்லாக் காரணத்தால்
சென்றன வீணாகக் கலக்க கடலுக்கு !

அளவோடு பெய்திருந்தால் நன்று
அளவுக்கு அதிகமாக பெய்தது நன்றன்று !

வறட்சி வெள்ளம் மாறி மாறி வந்து வந்து
வேதனையில்  வாட்டுகிறது விவசாயிகளை !

நதிகளை இணைப்போம் என்பார்கள்
நாதி இல்லை நல்ல மனமும் இல்லை !

நிவாரணங்கள்  ரணங்களை ஆற்றாது
நிவாரணத்தில் கை வைத்தல் அநீதி !

நிரந்தரத்   தீர்வுக்கு வழி வகுப்போம்
நீர் நிலைகளை நன்கு பராமரிப்ப்போம் !

இனியாவது கவனமாக இருப்போம்
ஏரி குளம் கண்மாய் நன்கு காப்போம் !

பெய்த மழையை வீணாக்கி விட்டோம்
பெய்யும் மழையை இனியாவது  காப்போம் !


தூர் வாருவதைக் கடமையாக்கிடுவோம்
துயரங்கள் இனியாவது  வராமல் காப்போம் !

எந்த மழை வந்தாலும் ஏற்கும் வண்ணம்
ஏரிகளை புதிதாக வடிவமைப்போம்
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



கருத்துகள்