செவ்வாய், 31 ஜூலை, 2012

நட்பின் நாட்கள் ! நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


நட்பின்   நாட்கள் !

நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

குமரன் பதிப்பகம்
19.கண்ணதாசன் சாலை ,தி .நகர் ,சென்னை .17
விலை ரூபாய்  60


நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்கள் "ஒவ்வொரு பூக்களுமே " பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் .திரைப்படப் பாடல் ஆசிரியர் என்பதையும் தாண்டி, சிறந்த படைப்பாளி  அவரது பல்வேறு படைப்புகளை படித்து இருக்கிறேன் .அதில் என்னை மிகவும் கவர்ந்த இந்த நூலான நட்பின்   நாட்கள் ! நட்பின்  மேன்மையை பறை சாற்றுகின்றது.. நூலின் அட்டைப்படம் மிக நன்று. கவிதைகளுக்கான ண்பர்கள் புகைப்படம் ,அச்சு, வடிவமைப்பு மிக நேர்த்தியாக உள்ளது குமரன் பதிப்பகத்தாருக்கு பாராட்டுக்கள்.காதல் கவிதைகளுக்கு தபூ சங்கர் என்றால் நட்பு கவிதைகளுக்கு பா .விஜய் என்று  சொல்லலாம் .

நூலில் அணிந்துரை ,ஆசிரியர் என்னுரை என்று வழக்கமான மரபுகள்  இன்றி  நேரடியாக கவிதையுடன் தொடங்குகின்றது .நூலில் சிறு கவிதைகளாக 62 கவிதைகள் உள்ளது .நூலில் தேவையற்ற சொற்கள் எதுவுமின்றி மிக நேர்த்தியாக உள்ளது .
நூலில் முதல் கவிதையே முத்தாப்பாக உள்ளது .உங்கள் பார்வைக்கு இதோ கவிதை !

நண்பன் ஒரு கண்ணாடி 
நாம் முகம் பார்க்க ..
நாம் கோபப்பட்டால் உடைக்க ..!
நண்பன் ஒரு போதிமரம்
நாம் ஊஞ்சல்  ஆட
நாம் கிடந்து தூங்க !
நண்பன் ஒரு புத்தகம்
நாம் படிக்க ..
நாம் கிழிக்க ..!


இனிய  நண்பர் பா .விஜய் அவர்கள் எழுதிய கவிதைகள் முழுவதையும் முக்கியமான கவிதைகள் என்று அனைத்து பக்ககங்களையும் மடித்து வைத்து விட்டேன் .நூல் விமர்சனத்தில் எல்லா கவிதையையும் மேற்கோள்  காட்டக் கூடாது  என்பதால் மிக, மிக முக்கியமான கவிதைகளை மட்டும்  மேற்கோள் காட்டி உள்ளேன் .நட்பை விரும்பாதவர்கள் யாரும் இல்லை .நட்பை விரும்பும் அனைவரும் இந்த நூலையும் விரும்புவார்கள் எனபது உறுதி .நண்பர்களுக்கு பரிசாகத் தர சிறந்த நூல் இது .இந்த நூலை எனக்கு பரிசாகத் தந்தது இனிய நண்பர் தன்னம்பிக்கை  எழுத்தாளர் மெர்வின் அவர்கள் .

பள்ளியில் மாணவர்கள் மதிய உணவை பகிர்ந்து உண்ணும் காட்சியை நம் மனக் கண் முன் கொண்டு வந்து, நாம் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட ,மலரும் நினைவுகளை  தோற்றுவிக்கும் கவிதை இதோ !

மதியவேளை
வீட்டிலிருந்து
கொண்டுவந்த உணவை
கொண்டு வந்தவனே
உண்ட வரலாறு
ஈராயிரம் ஆண்டு
இரைப்பைகளிலும்
இல்லை ..!


இளம் ஆண்  நண்பர்கள் குழுமினால் பெண் பற்றிய பேச்சு இல்லாமல் இருக்காது .அந்த இயல்பான உணர்வை நன்கு பதிவு செய்துள்ளார்..

அகில உலகமெங்கும்
நண்பர்கள் சபையில்தான்
முதன் முதலில் துவங்குகிறது
ஆய்வரங்கம் !
தலைப்பு - பெண்
.

இந்தக் கவிதையைப் படிக்கும் எல்லா ஆண்களுக்கும் அவர்களது பழைய தோழியை நினைவூட்டும் விதமாக நாம் கேட்க விருபும்  கேள்வி போல ஒரு கவிதை  .  

சொல்லியிருக்கிறாயா ...?
உன் கணவனிடம்
என்னைப் பற்றி !
எப்படி முடியும் ?
ஒரு உறவு
வளையமே இருக்குமே
உன்னைச் சுற்றி ..!


உன் படுக்கையறையின்
ஏதாவதொரு கண
உறக்கப் பிசிறுகளில் ..
உனக்கும் நினைவில்
வருமா ?
நாம் முதல்நாள் சிரித்ததும்
கடைசிநாள் அழுததும் ...!

இதில் பல கவிதைகள் நமது பள்ளி,மற்றும் கல்லூரிப்  பருவத்து பெண் தோழிகளை நினைவூட்டும் விதமாக உள்ளது .
சில கவிதைகள் நண்பர்களை  நினைவூட்டும் விதமாக உள்ளது .

கபடியில் விழுந்த
காயத்திற்கு மருந்து
உற்ற நண்பன் தூவும்
ஒருபிடி மண் !

அகோரப் பசிக்கு
அதிருசி விருந்து
உயிர்த் தோழி வீட்டு
அகத்திக்கீரை சாதம் !

நண்பர்கள் சிரித்துப் பேசுவது ஒரு சுகம்தான் .அம்மா ,அப்பா ஏன் மனைவியிடம் சொல்ல முடியாததைக்  கூட  நண்பனிடம் சொல்லி ஆலோசனை கேட்பதுண்டு .நட்புக்கு உயர்ந்த இடம் என்றும் உண்டு .

பள்ளிக்கூடங்களில்
பெல் சத்தங்களைப் போலவே
எத்தனை இனிமையானது 
நண்பர்களின் கூட்டுச்  சிரிப்பு !


நண்பனுக்கு ஒரு ஆபத்து என்றால் துடித்து விடுவோம் .நமக்கு ஒரு ஆபத்து என்றால் நண்பன் துடிப்பான். தன்னால் முடிந்த உதவிகளை நாம் செய்வோம் .அவனால் முடிந்த உதவிகளை நண்பான் செய்வான் .நட்பு என்பது மிகவும் உயவ்ர்வானது .உன்னதமானது .

ஒரு புள்ளியாய்தான்
உருவானது நட்பு ..
வானமாய் அது
வியாபிக்கிறது ...!
காலத்தின் சக்கரத்தில்
நட்பொரு
ஞாபக அச்சு ..!


நட்பில் நம்பிக்கை மிக முக்கியம் .நண்பனை சந்தேகிப்பது தவறு .என்பதை உணர்த்தும் வைர வரிகள் இதோ !

நட்பில் பொய்யில்லை
நண்பனிடம்
பொய்கூற  தேவையில்லை ..!
ஏனெனில்
நட்பில்
அவநம்பிக்கை இல்லை .


நமது பள்ளி நண்பனை எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் முகம் மறக்காது .கல்வெட்டாக முகம் பதிந்து இருக்கும் .ஆசிரியர்கள் முகமும் மறப்பதே இல்லை .

உருவம் திரிந்து
உறவுகள் பிரிந்த
எண்பது வயசின்
சுருக்கத்திலும்
மறப்பதே இல்லை .
நண்பனின் முகங்கள் ..!
தோழிகளின் முகவரிகள் ..! 


நூல் முழுவதும் பிடித்த கவிதைகள் .எதை எழுதுவது ? எதை விடுவது ? குழப்பத்தில் ஆழ்ந்தேன் .நூலை படித்து முடித்ததும் ,கவிஞர் பா .விஜய் உள்பட என்னுடைய அனைத்து  நண்பர்களின் நட்பு பற்றி அசை போட்டு மகிழ்ந்தேன்  .இனிய நண்பர் ,நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய்அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!
திங்கள், 30 ஜூலை, 2012

மொழியின் கதவு நூல் ஆசிரியர் கவிஞர் மஞ்சுளா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மொழியின் கதவு

நூல் ஆசிரியர் கவிஞர் மஞ்சுளா

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

பாவை பதிப்பகம் ஜானி ஜான் கான் சாலை ,இராயப்பேட்டை ,சென்னை .14    விலை ரூபாய் 40


நூலின் அட்டைப்படம் வடிவமைப்பு மிக நன்று .அட்டையைப் பார்த்ததும் நூல் வாங்க வேண்டும் .என்ற எண்ணம் விதைக்கும் விதமாக உள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர் மஞ்சுளாஅவர்கள் மதுரையில் கவியரங்கங்களில் கவிதை பாடுபவர் .சிறந்த படைப்பாளி .கலை  இலக்கியப் பெருமன்றம் மதுரையில் பொறுப்பில் உள்ளவர் .தேநீர்  காலம் ,தீ மிதி என்ற இரண்டு கவிதை நூல்களின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் .மூன்றாவது கவிதை நூலாக   மொழியின் கதவு வடித்துள்ளார் .மொழி பெயர்ப்பு படைப்புக்காக சாகித்ய அகதமி விருது பெற்ற  முனைவர். பா .ஆனந்தகுமார் அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக அழகு சேர்க்கின்றது .  

மொழியின் கதவு என்ற நூலின் பெயரே சிந்திக்க வைக்கின்றது .

வரையப்படாத சித்திரம் !
குதிரைகளின் குளம்படிகளாக உன்னை
என்னுள் பதிந்திருக்கும் படைப்புப் பிம்பமாய் நீ ...
காமப் படாத கண்களில்
ஒளித்து வைத்திருக்கும் ரகசியப் பாடல் .

சில பெண் கவிஞர்கள் உடல் மொழி என்று பச்சையான, கொச்சையான சொற்களைப் பயன்படுத்தி எழுதி விட்டு அதனை
நியாயப்படுத்தி பேசியும் வருகின்றனர் .பெண்ணுரிமையை தவறாகப்புரிந்து கொண்டவர்கள் அவர்கள் .ஆனால் நூல் ஆசிரியர் கவிஞர் மஞ்சுளா காதலை மிக கண்ணியமாகவும், மென்மையாகவும், மென்மையாகவும் கவிதையில் பதிவு செய்துள்ளார் .பாராட்டுக்கள் .

சமுதாய சாடல்களும், இயற்கை நேசமும் ,பாசமும் கவிதைகளில் பதிவாகி உள்ளது .

அந்நியன் !
ஈன்று புறம் தரும்
ஒப்பில்லா 
இயற்கையை புறம் தள்ள
நான்கு
சுவர்களுக்குள்
வாலாட்டும் நாயாய்
இன்றைய மனிதன் .

பயணித்து இயற்கையை ரசிக்க வேண்டும் .ருசிக்க வேண்டும் என்ற உணர்வை உணர்த்துகின்றது கவிதை .

நுரைகள் !
கூடாரங்கள்  போட்டு
குழுமியிருக்கின்றன
வாழ்வின் வண்ணங்கள்
ஒவ்வொரு
கூடாரமும்    
தன் வண்ணம் விற்க .

இந்தக் கவிதையை
கூர்ந்து  படித்தால் அரசியல்வாதிகளின் சாயம் வெளுக்கும் வண்ணம் உள்ளது. இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் வியாபாரிகள் ஆகி விட்ட அவலத்தை உணர்த்துகின்றார் .
பிள்ளைப்பிராயம் என்ற கவிதை படிக்கும் போது படிக்கும் வாசகர்களை  பிள்ளைப்பிராயம் அழைத்து  செல்வதாக உள்ளது .பாராட்டுக்கள் .

லிப்புலம்பல்கள் !
நீண்ட தன்னிச்சையான 
லிப்புலம்பல்களுக்குள்
இறுகிக் கெட்டித்திருக்கும்
மவுனம்      தாண்டி புறப்படுகின்றன
எல்லா குரல்களும் .


சில கவிதைகள் இரண்டாம் முறை படித்தால்தான் நன்கு விளங்கும் .அடுத்த நூல்களில் சற்று எளிமைப் படுத்தி எழுதுங்கள் . புதுக்கவிதை என்றால் இலக்கணம் தேவை இல்லை ,ஆனால் எதுகை மோனை இருந்தால் படிக்க சுவை கூடும்.
வாசகருக்கு எழுதியவரே வந்து விளக்கம்  சொன்னால் மட்டுமே விளங்கும் .புரியாத புதிராக ஒரு சில கவிஞர்கள்  கவிதை எழுதி வருகின்றனர் .ஆனால் உங்கள் கவிதை அப்படி  இல்லை .புரிந்து விடுகின்றது .


காதல் கவிதைகளில் எளிமை இளமை இனிமை புதுமை உள்ளது .
தூரத்துப் பச்சை !
உன் காதல் பிரிவின் கணங்களில்
எரியும் கங்குகளாய் கனன்று
வெதும்பித் திரிகிறது எனக்குள்
தூண்டில் மீனாய்
துடித்திருக்கும் உயிர் உலர்ந்து
உலகம் நழுவிப் போகிறது .


இமயமலை செல்லும் போலிச் சாமியார்களின் முகத்திரை கிழிக்கும் கவிதை ஒன்று

கடவுளின் நிறுவனங்கள் !

மலைகளை உடைத்து கற்களை சுமந்து வந்த
மனிதர்கள் மாண்டு போனார்கள்
உளியில் விழிகளைப் பொறுத்தியவர்கள்
அவைகளைப் போலவே சிதைந்து போனார்கள்
கல்லில் தெய்வத்தை கண்டவர்கள்
இன்று கல்லையே காணமல் தேடுகிறார்கள்
இருந்த மலை
களையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு
இன்று இமய மலைக்குப் பயணம் போகிறார்கள் .
கடவுளை  புராணம் உருவாக்க
கடவுளை   காதைகள் வளர்க்க
கடவுளை   நிறுவனங்கள்  தொழிலாக்க .

பகுத்தறிவு போதிக்கும் விதமாக, விழிப்புணர்வு விதைக்கும் விதமாக , மூடநம்பிக்கைகளை சாடும் விதமாக கவிதை உள்ளது .பாராட்டுக்கள் .பகுத்தறிவு பாடும் பெண் கவிஞர் என்பதால் கூடுதல் பாராட்டுக்கள் .

வாழ்க்கையில் பார்த்த ,உணர்ந்த, பாதித்த விசயங்களை உற்று நோக்கி கவிதைகள் வடித்துள்ளார் .
கவிஞர் மஞ்சுளா போன்று பல கவிஞர்கள் உருவாக வேண்டும் .பெண் கவிஞர்களின் எண்ணிக்கை  உயர வேண்டும் .கவிஞர் மஞ்சுளா வளரும் கவிஞர் .வளரும் கவிஞரை வளர்த்து விடும் நோக்கத்துடன் இந்த நூலை தரமாக பதிப்பித்த பாவை பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள் . கவிஞர் மஞ்சுளா அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் .வாழ்த்துக்கள் .சனி, 28 ஜூலை, 2012

புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி ! கவிஞர் இரா .இரவி


புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி !   கவிஞர் இரா .இரவி

ஆசையே அழிவுக்குக் காரணம் !என்றேன்
அகிலத்தில்
பேராசைப்  பிடித்து அலைகின்றனர் 

என் போதனைகளை மறந்து  விட்டு 
எனக்கு பிரமாண்ட சிலைகள்  எதற்கு ?


என் பொன்மொழிகளை கொன்று விட்டு
எனக்கு
பெரிய ஆலயம் கட்டி என்ன பயன் ?
வாழ்க்கையின் நோக்கம் உதவுவதே ! என்றேன்
வாழ்கையில் பலர் கடைபிடிக்க  வில்லை

எல்லாம் தெரியும் என நினைப்பவன் மூடன் ! என்றேன்
எல்லாம் தெரியும் என இறுமாப்பு கொள்கின்றனர்

பிறருக்கு துன்பம் தரக் கூடாது ! என்றேன்
பிறரை துன்புறுத்தி இன்புறுகின்றனர்


தீய செயலை செய்தவர் தப்பிக்க முடியாது ! என்றேன்
தீய செயலை செய்து விட்டு தப்பிக்கப் பார்க்கின்றனர்

தீங்கு செய்யாதவனுக்கு தீங்கு நேராது என்றேன்
தீங்கு செய்யாதவனுக்கு தீங்கு செய்கின்றனர்

தன்னை அடக்கத் தெரியாதவன் மனிதனன்று ! என்றேன்
தன்னை அடக்கத் தெரியாமல் விலங்காகி விட்டனர்

நேர்மையும் நம்பிக்கையும் இரு விழிகள் ! என்றேன்
நேர்மையை மறந்து நம்பிக்கை துரோகம் புரிகின்றனர்

ஒழுக்கம் உள்ளவர்களுடன் உறவாடுங்கள் ! என்றேன்
ஒழுக்கம்  கெட்டவர்களுடன் உறவாடுகின்றனர்

பகைமையை பகைமையால் தணிக்க முடியாது ! என்றேன்
பகைமை வெறி பிடித்து அலைகின்றனர்

அதர்ம வழியில் அடையும்  வெற்றி வெற்றியன்று ! என்றேன்
அதர்ம வழியில் அடைந்த வெற்றிக்கு கூத்தாடுகின்ற்னர்

செய்யும் நன்மையை யாராலும்
அழிக்க முடியாது ! என்றேன் நன்மை செய்தவர்களை அழித்து மகிழ்கின்றனர்
அறநெறி தவறியவர்களுக்கு அழிவு உறுதி ! என்றேன்
அறநெறி தவறியே நடந்து வருகின்றனர்

மரணமே வந்தாலும் இரக்கம் காட்டுங்கள் !
என்றேன்
மரணமே மற்றவருக்குத் தந்து இரக்கம் மறந்தனர்


மனிதர்களுக்கு மதம் பிடிக்கலாம் தவறில்லை
மனிதர்கள் யானைக்கான மதம் பிடித்து அலைகின்றனர்


என்னை வணங்குவதில் நேரம் செலவழிப்பது வீண் வேலை
என்னை வணங்காவிட்டாலும் நல்லவராய் வாழ்ந்தால் போதும்

தீயவர்களை நீங்கள் என்னை வணங்க வேண்டாம்
தீங்கு செய்த நீங்கள் என்னை வணங்குவது எனக்கு களங்கம்

புத்தப்பிட்சுகளும்  கடைப்பிடிக்கவில்லை என் போதனை 
என்பதுதான் எனக்குள்ள வேதனை மாபெரும் சோதனை

என் சிலைகளை
வணங்குவதை முதலில் நிறுத்துங்கள்
என் போதனைகளை கடைப்பிடிக்க முயலுங்கள்     

மனிதர்களே மனிதனாக வாழுங்கள் மனிதனை மதியுங்கள்
மனிதநேயத்தோடு வாழுங்கள் விலங்கு குணம் அகற்றுங்கள்


என்னை வணங்கும் உங்களின் இழி செயல்களால்
என் மனக் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள்

இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள்
கவிதைகள் http://www.eraeravi.com/home/kavithai.php
கட்டுரைகள் http://www.eraeravi.com/home/katturai.php
நூல் விமர்சனங்கள் http://www.eraeravi.com/home/noolvimarsanam.php
புகைப்படங்கள் http://www.eraeravi.com/home/album.html
வீடியோ http://www.eraeravi.com/home/video.html
விருதுகள் http://www.eraeravi.com/home/awards.html
இதயத்தில் ஹைக்கூ http://www.kavimalar.com/eh/index.htm
உள்ளத்தில் ஹைக்கூ http://www.kavimalar.com/uh/index.htm
நெஞ்சத்தில் ஹைக்கூ http://www.kavimalar.com/nh/index.htm
விழிகளில் ஹைக்கூ http://www.kavimalar.com/vh/index.htm
என்னவளே http://www.kavimalar.com/ennavale/index.htm
நகைச்சுவை http://www.kavimalar.com/jokes.htm
கவியரங்கக் கவிதைகள் http://www.kavimalar.com/arkavi/arkavi.htm
புகைப்படத் தொகுப்பு http://www.kavimalar.com/picgal/
புதிய கவிதைகள் http://www.kavimalar.com/14407/index.htm
கவிதைகள் http://www.kavimalar.com/kavithaigal.htm
ஆங்கிலத்தில் ஹைக்கூ http://www.kavimalar.com/vh/enhycoo.htm
இந்தியில் ஹைக்கூ http://www.kavimalar.com/hindi/index.htm
விருந்தினர் புத்தகம் http://users.smartgb.com/g/g.php?a=s&i=g18-05299-71

கன்னிமாரா பொது நூலகத்தில் கவிஞர் இரா .இரவி நூல்கள்

வெள்ளி, 27 ஜூலை, 2012

தமிழ்நாடு சுற்றுலாத்துறை வண்ண சுவரொட்டிகள்

முனைவர் வெ.இறையன்பு . இ.ஆ.ப .அவர்கள் சுற்றுலாத்துறை செயலராக இருந்த  போது வடிவமைத்த வண்ண சுவரொட்டிகள்  .சுற்றுலாத்துறை  துணை இயக்குனர் ( ஒய்வு )திரு சா .சுப்ரமணியன் M.A.3 அவர்களின்  கை வண்ணத்தில் பார்த்த மகிழுங்கள்.

http://www.youtube.com/watch?v=6Z5yKamG8QY&feature=youtube_gdata_player

உங்கள் கருத்தை அனுப்ப
முனைவர் வெ.இறையன்பு . இ.ஆ.ப.  மின்னஞ்சல்  iraianbuv@hotmail.com
திரு சா .சுப்ரமணியன்   மின்னஞ்சல் subramanian.tourism@gmail.com

மாற்றுத்திறனாளி கோ .கிருஷ்ணகுமார் மடல்

மாற்றுத்திறனாளி  கோ .கிருஷ்ணகுமார் மடல்

செவ்வாய், 24 ஜூலை, 2012

தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை ! உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன் தொகுப்பு கவிஞர் இரா .இரவி

தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்

தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

ஏற்பாடு திரு பி .வரதராசன்  புரட்சிக் கவிஞர் மன்றம்
.மதுரை.1

உவமைக் கவிஞர் சுரதா உவமைக் கவிஞர் சுரதாவிற்கு தேநீர் கடைக்காரர் பாரதி தாசனின் நூல் ஒன்று படிக்கத் தந்தார். அந்நூலைப் படித்ததில் இருந்து பாரதிதாசனை சந்திக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார் .வேலைப் பார்த்துக் கிடைத்தப் பணத்தில் பாரதிதாசனை பார்க்க சென்றார் .பெற்றோரிடம் சொல்லி விட்டு வந்தாயா ? என்றார். இல்லை என்றதும் ,20 ரூபாய்  கொடுத்து ஊருக்கு சென்று    பெற்றோரிடம் சொல்லி விட்டு  வா! என்று அனுப்பி வைத்தார் .பின் சொல்லி விட்டு வந்து உதவியாளராக இருந்தார் . 

ராஜகோபாலன் என்ற பெயரை பாரதி தாசன் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது இயற்ப்பெயரான கனக சுப்பு ரத்தினம் என்பதால்  சுப்பு இரத்தின தாசன் என்று வைத்தார் .அஞ்சல் அட்டையில் ஒரு முறை
சு .ர .தா . என்று சுருகொப்பம் இட்டார் .பின் அதனை சேர்த்துப் படிக்க சுரதா என்று வரவும் ,அதனையே பெயராக்கிக் கொண்டார் .

"முல்லை மலர் மேலே " "ஆடி அடங்கும் வாழ்க்கையடா  " போன்ற புகழ் மிக்க திரைப்படப் பாடல்கள் எழுதியவர் சுரதா .

திருமண வாழ்த்தில் இரட்டைக் கிழவி போல பிரிந்தால் பொருள் இன்றி வாழுங்கள் என்று வாழ்த்தினார் .
சொல்வதிற்கு புதிதாக இருந்தால் சொல் .இல்லாவிட்டால் வாய் மூடு என்ற பொன்மொழிக்கு ஏற்ப புதிதாகப் பாடியவர் சுரதா .

சுரதாஅவர்களுக்கு அன்றைய  சங்க இலக்கியம் முதல்  இன்றைய புதுக் கவிதை வரை இயல்பான நீச்சல் குளம்.
சுரதா பற்றி அவ்வை நடராசன் சொன்னது "நாத்திகம் அவர் பாடலில் நாக்கு நீட்டிக்  கொண்டு இருக்கும் "சுரதா பல நூல்கள் எழுதினார் அவற்றில் குறிப்பிடத் தக்கவை அமுதும் தேனும் ,தேன் மழை .
பாரதிதாசன் பரம்பரை உருவானது .முடியரசன் ,நாச்சியப்பன் ,
சுரதா உள்ளிட்ட பலர் வந்தார்கள் .
பாரதிக்கு ஒரே ஒரு தாசன்தான் அது பாரதிதாசன் மட்டும்தான் .ஆனால் பாரதிதாசனுக்கு பல தாசன் கிடைத்தார்கள் அவர்களில் நானும் ஒருவன் என்றார் சுரதா அடக்கமாக . ஆனால் தாசன்களில்  முதலிடம் பெற்றவர் சுரதாதான் .
தண்ணீரின் ஏப்பம் கடல்அலை ,பறக்கும் நாவற்பழம் வண்டு .இப்படி வித்தியாசமாக சிந்தித்தவர் சுரதா .
பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தவர் .மறைமலை பிறக்காவிட்டால் மாவட்டம் என்றா சொல்வோம் .என்றார் சுரதா .
22 வயதில் வசனம் எழுதியவர் வசனத்திலும் புதுமை செய்தவர். 
 
காதலன் சொல்லும் வசனம்  "உன்னைப்பார்த்தால் மதுவுக்கும் கூட மயக்கம் வரும் ."
பெண் பேசுவது  போன்ற வசனம்  ஒன்று ."பாவிகளே அக்கிரமக்காரர்களே  கனவில்
கூட சோரம் போகாத நானா விலைமகள் ?. 1960 ஆண்டில் வந்த நூலுக்கு குட்ட ரோகியிடம்  தன் கவிதைகளை படித்துக் காட்டி கருத்துக் கேட்டு அதனை நூலிற்கு அணிந்துரையாக்கியவர் சுரதா.
 
  யாரும் அச்சிட முன் வரவில்லை எனவே எனக்கு நானே போட்டுக் கொள்ளும்  மாலை என்பார் .கோவிலுக்கு உள்ளேயே குடுமி சேவலை சமைத்து உண்டதாக கேள்விப் படுகிறோம் .வருத்தப் படுகிறோம். என்று எழுதியவர்
அந்தகாலத்தில் முதன் முதலில் குடும்பக் கட்டுப்பாடு பற்றி கவிதை எழுதிய முதல் கவிஞர் பாரதிதாசன் "காதலுக்கு வழி வைத்து கருப்பாதை சாத்த "என்று எழுதினார் .அதன் வழியில் அந்தக் காலத்தில் அரசாங்கம்  மூன்று  குழந்தை போதும் என்றார்கள் .அதனை வழி மொழிந்து சுரதா எழுதினார் .
முக்கனி போல்
முத்தமிழ் போல்
அணில் முதுகில் உள்ள கோடு போல்
மூன்றே போதும் !
எக்களிக்க வேண்டுமென்றால்
இரண்டே போதும் !

இரண்டு விழி போதாதா ?பாடல்களில் சங்க இலக்கியத்தையும், இலக்கணத்தையும் புகுத்தியவர் .பகுதி விகுதி பற்றி பாடலில் புகுத்தியவர் .
பகுத்தறிவாளர் சுரதா .கடவுள் நம்பிக்கை இல்லாதவர் .பாடலில்
பகுத்தறிவு கருத்துகளும் புகுத்திவர் .

பகுத்தறிவு  வந்தால் மதம் ஓடிவிடும் .என்றவர் .

தாய் நாடே உனக்காக
தவிட்டையும் தின்பேன் .
சொந்த மொழியில் பெயரிடுக ! என்று எழுதியவர் ."அமுதும் தேனும் எதற்கு "என்ற பாடல் நாடா மாதிரி மற்ற  பாடல் பாவாடை மாதிரி என்றவர் .

உமைகள் எழுதுவதில் சுரதாவிற்கு நிகர் சுரதாதான் .அதனால்தான் உவமைக் கவிஞர் என்ற புகழ்ப்  பெற்றார் .

இழுத்துவிட்ட மூங்கில் போல நிமிர்ந்தான் .
ஆயுத எழுத்தை தலை  கீழாகப் போட்டது போன்ற தமிழகத்தின் நிலப்பரப்பு .
வலம் சுளித்து எழுது
கின்ற தமிழ் எழுத்து.
நெய்யும் தறியில் நூல் நெருங்குதல் போல
ஈரோட்டுப் பெரியாரின் சட்டைப் போல இருண்ட கடல் .
அண்ணாவின்
பேச்சைப் போல நீரோட்டம்   
சாண்டில்யன் கதைப் போல சூழ்ந்திருக்கு .


இன்றைக்கும்  சுரதாவின் தேவை உள்ளது .இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் உவைமைக் கவிஞர் சுரதாவின் தேவை உள்ளது .
 

--

ஞாயிறு, 22 ஜூலை, 2012

சின்னச் சின்னப் பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

சின்னச் சின்னப் பூக்கள்

நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வெளியீடு சங்கரி 16/4c.சொக்கம்பட்டி ,பாரதியார் புரம் ,மேலூர்
.625106

நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்அவர்கள் கல்வித்துறையில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்ற பின்பு, மாமதுரை கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் நடைப்பெற்ற  பல்வேறு கவியரங்களில்  கலந்துக் கொண்டு வாசித்த
கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன்  அணிந்துரைக்  கவிதை அற்புதம் . நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம் அவர்களுக்கு முன் எழுத்து பூ.  பூ போன்ற உள்ளதைப் பெற்றவர் இவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை .புன்னகை பூத்த   முகத்தைப் பெற்றவர் . ஆனால் கவிதைகளில் கோபப்பட்டு ஏழுதி உள்ளார் .மகாகவி பாரதி பாடியதுப் போல சினத்துடன் பாடி உள்ளார் . 


மதுரையில் நடைப்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில்
காவல் துறை துணை ஆணையாளர்
இரா .திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிட்டார் .
நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம் அவர்கள் நூலில் தன்னுரையில்   "அரச மரத்தடியில் முளைத்த அருகம்புல் அதுவாம் இந்த சிறிய நூல் "
என்று  குறிப்பிட்டதை   
அருகம்புல் ஆரோக்கியமானது ,ஆண்டவன் சிலையில் இருப்பது எனவே  அருகம்புல் உயர்வானது .என்றார்கள் உண்மைதான் .இந்நூல் உயர்வான  நூல்தான் .பாராட்டுக்கள் .

மனம்
நிறை
மனம்  குறை காணாது
குறை
மனம் நிறையாக
ஈர
மன மென்றும் காயாது
வீர
மன மிங்கு சாயாது .

நேர்மறை சிந்தனை விதைக்கும் கவிதைகள் நூலில் நிறைய உள்ளது . நிறைவாக உள்ளது .


சினம்
மனம் விட்டு பேசின்
சினம் விட்டுப் போகும்
மூக்கில் வந்த கோபம்
நாக்கில் வந்தாலது சாபம் .
 
கோபத்தோடு எழுந்தவன் இழப்போடு அமருவான்   என்ற பொன்மொழியை வலி மொழிந்து கவிதை வடித்துள்ளார் .


இலக்கியம்
வாழ்க்கையின் வழிகாட்டித் திருக்குறள்
வார்தையி லுண்டோ அதற்க்கு மறுகுரல்
முப்பாலுடைத்  
திருக்குறள் கடலுக்கு
அப்பாலும் ஒலிக்கும் மாமதன் குரல்

உலகப்  பொது  மறையான   ஒப்பற்ற திருக்குறள் உயர்வு பற்றி மிக உயர்வாக உள்ளார்.
நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்.
காதல் பாடாத கவிஞர் இல்லை .காதல் பாடதவர் கவிஞரே இல்லை .ஆம் நூல் ஆசிரியர் காதலையும் பாடி உள்ளார் .ஒய்வு பெற்ற வயதிலும் மலரும் நினைவுகளாக காதலைப் பாடி உள்ளார் .

காதல்
காதலொரு பறவை ,வானத்தில் பறந்தாலும்
மறவாதாம்; தன் உறவை  
அகம் ,புறம் சொல்லும்
சங்கத் தமிழன்றோ 
எங்களுக் கெல்லாம் காதல் .

இன்று விலைவாசி விசம் போல ஏறி வருகின்றது .ஏறும் விலைவாசி ஒருபோதும் இறங்குவதே இல்லை. மக்கள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் . அரசியல் வாதிகளோ விலைவாசியை குறைப்பதை விட்டுவிட்டுஅவர்களுக்குள்  சண்டை இட்டுக் கொள்வதிலேயே நேரம் விரயம் செய்து வரும் அவலத்தைப் பற்றி ஒரு கவிதை .

மக்கள் வழங்குவதோ அருளாசி
மக்களை விழு
ங்குவதோ  விலைவாசி .

சிதறிக் கிடக்கும் உதிரிப் பூக்கள் என்ற தலைப்பில் சித்தர்களின் பாடல்கள் போல ,ஜென் தத்துவங்கள் போல அரிய பல  கருத்துக்களை மிக எளிமையாக கவியாக்கி உள்ளார் .
எள்ளல் சுவையுடன் உள்ள வரிகள் .

குடும்ப மொருத் தேன்
கூடு அதிகம் பெற்றால்
அதுவு  மோருப் பேன் 
கூடு .

தத்துவம் சொல்லும் வைர வரிகள் இதோ !
வாழ்க்கை யென்றால் எல்லாம் இருக்கும் .
வாடிப் போனால் எப்படியது சிறக்கும் .
கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை வழி மொழிந்து   வடித்துள்ளார் .


மனிதனின் ஆணவம் அகற்றும் வரிகள் .
எல்லாம் தெரிந்தவர் எவருமில்லை
ஒன்றும் தெரியாதவர் ஒருவருமில்லை .

வாழ்வியல் நெறி போதிக்கும் வைர வரிகள் இதோ !
குறை சொல்லும் நாக்கினை உடையார்
நிறை செய்யும் போக்கினை அடையார் .

கவிதைகளில் எதுகை ,மோனை ,இயைபு வந்து இயல்பாக  வந்து விழுந்துள்ளது .
வாழ்க்கையில் தினம்தோறும் சந்திக்கும் அவலத்தை எள்ளல் சுவையுடன் வடித்துள்ளார் .
விசுவ ரூபம் எடுப்பினும் மானிடர்
கொசுக் கடியன்றோ அவர்க்கும் பேரிடர் .

உலகே சிரிக்கும்    நம் அரசியல்வாதிகளின்  ழல் பற்றிய கவிதை ஒன்று.
லெனும் தேரு
ரெல்லாம்  உருகுதாம் பாரு
ழலை நாம் ஒழிப்போமா
லால் நாமே ஒழிவோமா !
   

இப்படி பல கருத்துக்களை கவிதையாக வடித்துள்ளார் . .கவிஞர்  பூ.வைத்தியலிங்கம் அவர்கள் உருவத்தால் மெலிந்து இருந்தாலும் அவருடைய கவிதையின் கருத்துக்கள் வலிமை மிக்கதாக உள்ளது .நூல் வெளியீட்டு விழாவில் ஒரு நிமிடம் என் தந்தை பற்றி பேச வேண்டும் என்று அனுமதி வாங்கி விஞர்  பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மகள் பேசினார்கள் ."இந்த விழாவில் இவ்வளவு பேர் பாராட்டிய இன்றுதான் என் தந்தைக்கு கவிதை ஆற்றல் இருப்பதாய் உணர்ந்தேன்பெருமையாகவும் மிக மகிழ்ச்சியாகவும் உள்ளது . " .என்றார்கள் .இப்படித்தான் பல படைப்பாளிகளை   ஆரம்பத்தில் குடும்பத்தினர் கண்டு கொள்வதில்லை. விழா முடிந்து பேசிய அவர் மகள் ஒரு ஆசிரியர். நான் அவரிடம் சொன்னேன் ."அய்யாவிடம் கவித் திறமை நிறைய உள்ளது. தொடர்ந்து நூல்கள் எழுதிடஅவருக்கு  ஊக்கம் கொடுங்கள் "அவர்களும் சரி என்றார்கள் .

நூல் ஆசிரியர் கவிஞர்  பூ.வைத்தியலிங்கம்  அவர்களுக்கு இது முதல் நூல் .முத்தாய்ப்பான நூல்.பாராட்டுக்கள் .தொடர்ந்து நூல் எழுதி வர வாழ்த்துக்கள்

--

காவல் துறை துணை ஆணையாளர் இரா .திருநாவுக்கரசு அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி யின் பாராட்டு மடல்

காவல் துறை துணை ஆணையாளர் இரா .திருநாவுக்கரசு அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி யின் பாராட்டு மடல்

சனி, 21 ஜூலை, 2012

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கவிஞர் இரா .இரவி


நினைவு நாள் 21.7.2012

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கவிஞர் இரா .இரவி

தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நாயகன் நீ
தமிழென அழியாப் புகழைப் பெற்றவன் நீ

பராசக்தி திரைப் படத்தில் அறிமுகமானவன் நீ
பாராத சக்திகளையும் பார்க்க வைத்தவன் நீ

நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவன் நீ

நல்ல வசன உச்சரிப்பைப் புகுத்தியவன் நீ

நாடகத்தில் நடித்துப் பயின்றுத் திரைப்படம் வந்தவன் நீ
திரைப்படத்தில் நடித்து வாழ்க்கையில் நடிக்காதவன் நீ

கூட்டுக்குடும்பப் பெருமையைக் கட்டிக் காத்தவன் நீ
குடும்பத்தின் ஒற்றுமையை பெரிதும் வலியுறுத்தியவன் நீ

அன்பில் பலரை வென்று அரசியலில் தோற்றவன் நீ
நடிப்பில் நிலையாக நின்றுதிரை உலகில் வென்றவன் நீ

ஒன்பதுப் பாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டியவன் நீ
ஒன்பது மணி என்றால் எட்டு முப்பதுக்கே இருந்தவன் நீ

தாமதத்தை என்றும் வெறுத்துத் தவிர்த்தவன் நீ

சமாதானத்தை என்றும் எப்பொதும் விரும்பியவன் நீ

போலிப் பிம்பங்கள் மீது நம்பிக்கை இல்லாதவன் நீ
பாத்திரங்கள் எதுவென்றாலும் ஏற்று நடித்தவன் நீ

முகபாவத்தில் நாதஸ்வர வித்துவான்களையே வென்றவன் நீ
முகம் முதல் நகம் வரை நடிப்பைக் காட்டியவன் நீ

வீரபாண்டிய கட்டபொம்மனை அறிமுகம் செய்தவன் நீ
கப்பல் ஒட்டியத் தமிழனைக் கண் முன் நிறுத்தியவன் நீ

பகுத்தறிவுப் பகலவனிடம் சிவாஜிப் பட்டம் பெற்றவன் நீ
படிக்காதப் பாமரர்களுக்கும் தமிழ்க் கற்பித்த ஆசான் நீ

உணர்ந்தோம் கள்ள வாக்கு அளிப்போரின் திறனை

உனது வாக்கையே வாக்களித்துச் சென்றனர் அன்று

இந்திய தேசத்தில் உன்னைப் போல நடிகர் இல்லை
இந்தியாவோ உனக்கு தேசியவிருதை தரவே இல்லை

செவாலியர் விருதுத் தந்து அயல் நாடுப் பாராட்டியது உன்னை
செந்தமிழனின் திறமையை உலகிற்கு பறை சாற்றியவன் நீ

--

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

 

வெள்ளி, 20 ஜூலை, 2012

இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம்! கவிஞர் இரா .இரவி

இலக்கிய முற்றம்

நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வானதி பதிப்பகம்      23.தீனதயாளன் தெரு, தி .நகர் .சென்னை .
17     விலை ரூபாய் 120

நூலின் அட்டைப்படம் மிக அருமை .அற்புதம் .இயற்கைக் காட்சிகளை கண் முன் நிறுத்துகின்றன ."இலக்கிய முற்றம் "  என்ற நூலின் பெயர் கவித்துவம் .நூலின் உள்ளே நுழைந்தால் இலக்கிய விருந்து .நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன்அவர்களின் என்னுரையின் தலைப்பு "நல்லன எல்லாம் தரும் " என்பது உண்மை .இந்த நூலைப் படித்தால் நல்லன எல்லாம் தரும்.நூலின் பயனை குறிப்பிடுவதாக உள்ளது .பாராட்டுக்கள்

கவிதைஉறவு,புதுகைத்தென்றல் ,மனிதநேயம் ,ரசனை ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .இந்த கட்டுரைகளை மாதாமாதம் தொடர்ந்து படித்து வருகிறேன். மொத்தமாக நூலாக வந்தபின் மறு வாசிப்பு செய்த பின் நூல்  ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர்
இரா. மோகன் அவர்களின் ஓயாத
உழைப்பை  எண்ணி வியந்தேன் .

வரலாற்று சிறப்பு மிக்க மதுரை காமராசர் பலகலைக் கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணி புரிந்துக் கொண்டே ,பல்வேறு இலக்கிய மேடைகளில் இலக்கிய உரை நிகழ்த்திக் கொண்டு ,பட்டிமன்ற நடுவராக முத்திரைப் பதித்துக் கொண்டு ,பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருக்கிறார். எழுதிய கட்டுரைகளை உடனுக்குடன் நூலாக்கி விடுகின்றார் .இவர் எப்போது படிக்கிறார் , எப்போது எழுது
கிறார் .எபோதாவதுதான் தூங்குவார் போலும் .முனைவர் வெ.இறையன்பு அவர்கள் குறிப்பிடுவதுப் 
தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் மிகச் சிறந்த ஆளுமையார்  பேராசிரியர்
இரா .மோகன்.அவருடைய திறனாய்வுப் புலமையைப் பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .
நேரத்தை  திட்டமிட்டு  ஒதுக்கி வெற்றி முத்திரை பதித்து வருகிறார் .பேராசிரியர் இரா .மோகன்.அவர்கள் சக எழுத்தாளர்களையும் ,கவிஞர்களையும் மனம் திறந்து பாராட்டும் உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர். இந்த நூலிற்கு அணிந்துரை என்று யாரிடமும் வாங்காமல் .இவரது கட்டுரைகளை இதழ்களில் பாராட்டிய வாசகர்களின் கடிதங்களின் சுருக்கத்தை அணிந்துரையாக வைத்து இருப்பது புதிய உத்தி .பாராட்டிய வாசகர்களுக்கும் மகுடம் வைத்துள்ளார் .

 
நூலில் 30 கட்டுரைகள் உள்ளது .முத்தமிழ் போல மூன்று  பகுதிகளாகப் பிரித்து வழங்கி உள்ளார் .முதல் பகுதியில் வாழும் படைப்பாளிகளுக்கு புகழ் கீரிடம் .

இரண்டாம் பகுதி வாழ்ந்து உடலால் மறைந்து பாடாலால் இன்றும் 
வாழும் சங்கப் புலவர்களுக்கு புகழ் கீரிடம் .
மூன்றாம் பகுதி  வாழ்வியல் இலக்கணம்  விளக்கும் பகுதி .


மு .வ .அல்லது முன்னேற்ற வரலாறு தொட
ங்கி தமிழுக்குக் கிடைத்து இருக்கும் திறமான சென்ரியு கவிஞர் அமுதன்  வரை 11 கட்டுரைகள் ,இலக்கிய முற்றம்  12  கட்டுரைகள்,சிந்தனை மன்றம் 7கட்டுரைகள்.மூன்று பகுதியாக உள்ள 30 கட்டுரைகளும் முத்தமிழாக இனிக்கின்றது படித்து முடிக்கும் வாசகர்களை பண்படுத்தும் விதமாக ,பக்குவப்படுத்தும் விதமாக நெறிப்படுத்தும் விதமாக  நூல் உள்ளது .பாராட்டுக்கள் .

கவிதைஉறவு இதழில் ஆசிரியர்   கலைமாமணி ஏர்வாடி எஸ் .ராதா கிருஷ்ணன் அவர்களின் கவிதையில் இருந்து திறனாய்வாகக் காட்டி உள்ள கவிதை இதோ !

மகாத்மா காந்தி
மீண்டும் பிறக்க வேண்டும்
ராட்டையோடு அல்ல
ஒரு சாட்டையோடு !

(யாரும் யாராகவும்          பக்க எண் 45   )

நூலின் பெயர் பக்க எண் குறிப்பிட்டு எழுதுவது நூல் ஆசிரியர் வழக்கம் .பக்க எண் வரை குறிப்பிட்டு பக்காவாக எழுதுவது தனிச் சிறப்பு .
படைப்பாளிக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி  தமிழ்த்தேனீ பேராசிரியர்
இரா. மோகன் போன்ற திறனாய்வாளர்கள் மேற்கோள் காட்டி பாராட்டுவதில்தான் உள்ளது .

படைப்பாளிகளின் திறமைகளை திறனாய்வின் மூலம் பறை சாற்றி வருகின்றார் .

கவிஞர் கல்யாண்ஜி கவிதைகள் பற்றிய கட்டுரையில் 

இருந்து என்ன ஆகப் போகிறது செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன 
ஆகப் போகிறது இருந்து தொலைக்கலாம்
(கவிஞர் கல்யாண்ஜி கவிதைகள்  பக்க எண் 45 )

இந்தக்  கவிதையை மேற்கோள் காட்டியதோடு  நின்று விடாமல் நூல் ஆசிரியர் ஒப்பு இலக்கித் துறை வல்லுநர்  என்பதால், ஆங்கில இலக்கியத்தில் இருந்து ஒப்பிட்டு  அசத்துகின்றார் .
 
TO BE OR NOT TO BE THAT IS THE QUESTION

சேக்ஸ்பியரின்  புகழ் பெற்ற வரிகளோடு ஒப்பிட்டு மேற்கோள் காட்டி படைப்பாளி சிந்திக்காத கோணத்திலும் சிந்தித்து வியப்பை வரவழைக்கிறார் .

திரைப் பாடல்கள் மூலம் முத்திரை பதித்த கவிஞர் பழனி பாரதி பற்றிய கட்டுரையில்  .

காலமே என் இளமைச்
சீட்டாடித் தோற்காதே !
செலவழி ஒரு போராளியின்
கடைசீ துப்பாக்கி ரவையாக
( வெளிநடப்பு பக்க எண்  21 )


இந்தக் கவிதையை மேற்கோள் காட்டி உவமையில்  மிளிரும் பழனி பாரதியின்  தனித்துவம் என்று பாராட்டி உள்ளார் .
நூல் ஆசிரியர் மேற்கோள் காட்டி உள்ள கவிஞர் அமுதனின் சென்ரியு கவிதைகள் அனைத்தும்  அற்புதம்.
"இழுக்க இழுக்க இன்பம்  " என்று புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சொல்லும் பொய் மொழி கேட்டு இருக்கிறோம் .அந்து பொய் மொழியை சற்று மாற்றி எழுதியுள்ள
சென்ரியு இதோ !

ழுக்க இழுக்கத் துன்பம்
இறுதிவரை
மெகா தொடர் 
( காற்றின் விரல்கள்  பக்க எண்  25 )


தொலைக்காட்சித் தொடர்கள் என்ற பெயரில் நாட்டில் நடக்கும் அவலத்தைச் சுட்டும்  சென்ரியு மிக நன்று .

நூலின் இரண்டாம் பகுதியில்  திருக்குறள் , ,குறுந்தொகை ,கலித்தொகை ,
சங்க இலக்கியங்களிலிருந்தும், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம்  போன்றவற்றிலிருந்தும் புகழ்ப்பெற்ற பாடல்களை எல்லோருக்கும் எளிதில் புரியும் விதமாக மிக மிக எளிமையாகவும் இனிமையாகவும் கட்டுரை வடித்து உள்ளார் .

 வாழ்வில் நெறிப்  போதிக்கும் மூன்றாம்
பகுதியில் புத்தர் பொன் மொழிகள் ,மகாகவி பாரதியின் வைர வரிக் கவிதைகள் ,சேக்ஸ்பியர் பொன் மொழிகள் ,காண்டேகர்   பொன் மொழிகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி ,நூல் வழங்கி  உள்ளார்கள் .ஒரு மனிதன் செம்மையாக வாழ்வதற்கு வழிக்காட்டும் ஒளி விளக்காக அற்புதக் கருத்துக்களின் சுரங்கமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .படித்துவிட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது .படித்து விட்டு பாதுகாத்து வைத்து இருந்து மனச் சோர்வு வரும்போதெல்லாம் மறு வாசிப்பு செய்து புத்துணர்வு பெறும் நூல் இது .

திறம்பட தொடர்ந்து நூல்கள் எழுதிவரும் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் அவர்கள் விரைவில் சதம் அடிக்க வாழ்த்துக்கள் .மிகச் சிறப்பாக அச்சிட்டு வெளிக் கொணர்ந்த வானதி பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .

செவ்வாய், 17 ஜூலை, 2012

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !
   

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம்    நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை  உரையாற்றினார்  . திரு .ஜோதி மகாலிங்கம் , திரு .ராமமூர்த்தி , திரு .சரவணன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,விஸ்வநாதன் , சந்துரு ஆகியோர் தன்னம்பிக்கை தொடர்பான கவிதை வாசித்தனர் .மதுரை கலைஞர்கள் கவிஞர் வாசகன் "தன்னம்பிக்கையே மூலதனம்" என்ற தலைப்பில் தோல்விக்குத் துவளாமல் தொடந்து முயன்று வெற்றிப்  பெற்றவர்களின் வரலாறு சொல்லி தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .திரு தினேஷ் நன்றி கூறினார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர்   பலர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

--

ஞாயிறு, 15 ஜூலை, 2012

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகிழுங்கள் .

சுற்றுலாத்துறை  துணை இயக்குனர் ( ஒய்வு )திரு சா .சுப்ரமணியன் அவர்கள் கை வண்ணத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்  மகிழுங்கள் .
உங்கள் கருத்தை அனுப்ப திரு சா .சுப்ரமணியன்   மின்னஞ்சல் subramanian.tourism@gmail.com


http://www.youtube.com/watch?v=TXcjYEg49s4&feature=youtube_gdata_player

http://www.youtube.com/watch?v=lqklZf1WtQQ&feature=relmfu

http://www.youtube.com/watch?v=tGLyoPpoS2M&feature=relmfu

http://www.youtube.com/watch?v=frzEt5k2Uvs&feature=relmfu

--

சனி, 14 ஜூலை, 2012

உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! கவிஞர் இரா .இரவி

உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை !     கவிஞர் இரா .இரவி

குமாரசாமி சிவகாமிக்குப் பிறந்து சிறந்த  குழந்தை
குழந்தைகளுக்கு  கல்வியோடு
உணவும் தந்த தந்தை

அன்னையைக்
கூட சென்னைக்கு அழைக்காதவர்
அரசுப் பணத்தை வீணாக்க விரும்பாதவர்
காமராசர்

நானில
ம்  போற்றிட தமிழகத்தில் ஆட்சிப் புரிந்தவர்
நேர்மையின் சின்னம் நாணயத்தின் மறுபெயர்  காமராசர்

கல்விப் புரட்சி  பசுமைப் புரட்சி  தொழில் புரட்சி
புரட்சிகள் பல புரிந்த  புரட்சியாளர்
காமராசர்

அணைகள் பல கட்டி விவசாயிகளை வளர்த்தவர்
பாலங்கள் பல கட்டி மக்களைக் காத்தவர் 
காமராசர்

முதல்வர் பதவி
யில் பெருமைகள்சேர்த்து முத்திரைப்  பதித்தவர்
முதல்வர்களில் முதல்வராய் திகழ்ந்தவர் காமராசர்

கருப்பு காந்தி என்று மக்களால் அழைக்கப் பட்டவர்
வெள்ளை உள்ளத்திற்குச் சொந்தக்காரர்
காமராசர்

கதராடை மட்டுமே அவர் சேர்த்து வைத்த  சொத்து
கல்வி கற்பித்
தால்  கற்றவர்கள்  யாவரும் சொத்து

குப்பனும் சுப்பனும் கல்வி கற்றது அவராலே
உயர் பதவிகள் பெற்றதும் காமராசராலே

பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப் படுத்தியவர்
பெரியாரே நேசித்த பச்சைத் தமிழர் காமராசர் 

உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை !   
உனக்கு நிகர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை !

ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார்

ஹைக்கூ ஆற்றுப்படை

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார்


ஹைக்கூ தமிழகத்தில் பிரவேசித்து ஒரு நூற்றாண்டு எட்டப் போகிறது .முதல் தொகுப்பு வெளி வந்து கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிறது .முந்நூறுக்கும்  மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கக் கூடும் .ஹைக்கூ மீது எதிர்ப்புகள் கிளம்பின .ஏராளமான கடும் விமர்சனங்கள் எழுந்தன .எல்லாவற்றையும் மீறி ஹைக்கூ வளர்ந்தது .தொகுப்புகள் வந்தன .ஹைக்கூ என்ன சொல்கிறது .எப்படி இருக்கிறது .எதை பேசுகிறது  என விமர்சனங்கள் அதிகம் இல்லை .முதன் முதலில்  விமர்சனங்களை  எழுதி தொகுப்பாக்கி ஹைக்கூ அனுபவங்கள் என்ற பெயரில் தந்தவர் பொன் .குமார் .நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவிஞர் இரா .இரவி வெளியிட்டிருக்கும் தொகுப்பு ஹைக்கூ ஆற்றுப்படை .

தொகுப்பில் இருபத்தாறு ஹைக்கூத் தொகுப்புகளின் மீதான விமர்சனம் உள்ளது .மூத்தவரான அமுத பாரதியையும் விமர்சித்துள்ளார் .பூத்தவரான  புதுவை ஈழனும் இடம் பெற்றுள்ளார் .தொகுக்கப்பட்டதும்  உண்டு .கூட்டுத் தொகுப்பும் இருக்கிறது .பாகுபாடற்று வாசிக்கக் கிடைத்தவற்றை எல்லாம் விமர்சித்துள்ளார் .    

விமர்சனத்தை தொடங்குமுன் கவிஞர் பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளார் .புகழ் பாடி உள்ளார் .கவிஞர் அமுத பாரதியை ஹைக்கூ கவிஞர்களின் முன்னோடி என்கிறார் . கவிஞர் மு .முருகேசை ஹைக்கூ பொது மக்களிடையே பரவியதற்குக் காரணம் என்கிறார் .மிகச் சிறந்த மரபுக் கவிஞர் ,இலக்கணம் நன்கு அறிந்தவர் என சி .விநாயக மூர்த்தியைக் குறிப்பிடுகிறார்.புகழ் பெற்ற ஹைக்கூக்களை   எழுதுவதில் வல்லவர் என கவிமுகிலை  அறியச் செய்கிறார் .வித்தியாசமாகவும் புதுமையாகவும் சிந்திப்பவர் கன்னிக் கோயில் ராஜா என்கிறார் .புதுவை தமிழ் நெஞ்சனைப் பற்றிக் குறிப்பிடும் போது   ஒரு பகுத்தறிவுவாதி என்றும் இன உணர்வு மிக்கவர் என்றும் அடையாள படுத்துகிறார் .சோர்வில்லாத உழைப்பாளி ,சிறந்த சிந்தனைவாதியாக வசீகரனைக் காட்டியுள்ளார் .ஹைக்கூ உலகில் தனி இடம் பிடித்தவர் நந்தவனம் சந்திரசேகரன்  என்கிறார் .ஒவ்வொரு ஹைக்கூவாளர்களின் தனித் தன்மையை அறிந்து கூறியுள்ளார். ஹைக்கூத் தொகுப்புகள் மீதான பற்றுடன்  ஹைக்கூவாளர்களுடனான தொடர்பையும் வெளிப் படுத்தியுள்ளார் .ஒரு விமர்சனத்தில் ஹைக்கூக்களை பட்டிமன்றம் மூலம் பிரபலப் படுத்தியவர் முனைவர் இரா .மோகன் என்கிறார் . 

தொகுப்பை விமர்சிக்கும் கவிஞர் ஹைக்கூக் குறித்தத் தன் சிந்தனைகளை விமர்சனங்கள் ஊடாக விரவியுள்ளார் .ஹைக்கூவிற்கான இலக்கணங்களையும் எழுதிஉள்ளார் அவை .
1.ஹைக்கூவில்    தேவையற்ற சொற்கள் இருக்கக்
கூடாது .
2.ஹைக்கூ மிக நேர்த்தியாகவும் நுட்பமாகவும் இருக்க வேண்டும் .
3.ஹைக்கூ வாசிக்கும் போதே காட்சியாக விரிய வேண்டும் .
4.ஹைக்கூ வாசகன் மனத்தில் எண்ண அலைகளை ஏற்படுத்த வேண்டும் .மாற்றத்தை உண்டாக்க வேண்டும்.
5.ஹைக்கூ  சின்னதாக  இருக்கும் பெரிய அற்புதம் .
6.ஹைக்கூ  வாசகனையும் பாடைப்பாளியாக்கும் ஆற்றல் பெற்றது .
7.ஹைக்கூ  வியப்பை உண்டாக்க வேண்டும் .
8.ஹைக்கூ  மூன்று வரியில் மட்டுமே இருக்க வேண்டும் .
  

ஹைக்கூவின் சிறப்புகளையும் பண்புகளையும் எடுத்துக் கூறியவர் ஹைகூவாளரைப்  பாராட்டியதுடன் சில ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார் .
1.ஹைக்கூ
க்களை இன்றைய  நவீன  உலகத்தில் அனைவரும் உணர வேண்டும் .
2.எழுதியதெல்லாம் தொகுப்பாக்காமல் தேர்ந்து எடுத்து
த் தொகுக்க வேண்டும் .
3.செலவு அதிகம் எனினும் ஒவ்வொரு ஹைக்கூ விற்கும் ஒவ்வொரு புகைப்படம் வைக்க வேண்டும் .
4.பட்டாம்
பூச்சி ,பனித்துளி  தவிர்த்து ஹைக்கூ எழுத வேண்டும் .
(வண்ணத்துப் பூச்சியும் ,நிலாவும் இல்லாமல் ஒரு ஹைக்கூத் தொகுப்புத் தர வேண்டும் என்னும் தீர்மானத்துடனே வெளி வந்தது .மீண்டும் என பொன் .குமார் முன்னுரையில் குறிப்பிட்டு அளித்த தொகுப்பு மீண்டும் ஆண்டு 2004 )

தொகுப்பில் உள்ள ஹைக்கூக்களில் தனக்குப்  பிடித்ததை,  தான் ரசித்ததை எடுத்துக் காட்டியுள்ளார்.ஹைக்கூ என்ன சொல்கிறது .எதைக் குறிக்கிறது என விளக்கமளித்து வாசகர்களையும் ரசிக்கத் தூண்டியுள்ளார் .கவிஞர் எடுத்துக் காட்டியவைகளில் சில எடுத்துக் காட்டுகள்.  

கவியும் இருட்டு
கடைசி
ச்   சொட்டில்
மெழுகின் உயிர்  ( மு .முருகேஷ் )

விற்
காத பூக்களில்
தொலையும் மனம்
சருகாகும் வாழ்வு  ( பொள்ளாச்சி குமார ராஜன் )

நிசப்தமான வீதி
அதிர்ந்து பரவுகிறது
இராப் பிச்சைக்காரன் குரல் (சிபி )

விரலில் மாட்டியிருந்தது
அதிட்டக் கல் மோதிரம்
துண்டிக்கப் பட்ட கை (ம .
ஞானசேகரன்)

பவளத்தில் படகு
ஏறத்தான் ஆளில்லை
பிறை நிலா ( சி .வினையாக முர்த்தி )


முடிகின்றது 
அறியும் முன்
வாழ்க்கை ( புதுவை ஈழன் )

மணமக்கள் தேவை
விளம்பரத்தில்
சாதி தேடும் விழிகள் (கன்னிக் கோயில் ராஜா )

பொதிக் காளை
லாடம் கழற்றப் பட்டது
அடிமாட்டுச் சந்தை (அருணாசலச் சிவா)

சுள்ளென்ற வெயில்
வரிசையில் குழந்தைகள்
எப்ப வருவார் அமைச்சர் (வசீகரன் )

உடைக்க முயல்கிறாள் 
வறுமைக் கல்லை
கல்குவாரியில் அம்மா (நந்தவனம் சந்திர சேகரன் )   
 

படைப்பாளிக்கு மரணம் இல்லை படைப்புகள் நிலைக்க படைப்பாளி நிலைப்பான்  .கவிஞர்கள் என்றால் வானத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் அல்ல .தங்கம் விலை ஏற ஏற நாட்டில் கொலை, கொள்ளை, வன்முறை எண்ணிக்கையும் உயருகின்றது என்பன போன்ற பொதுவான கருத்துகளையும் விமர்சனத் தினிடையே பதிவித்துள்ளார் .

ஹைக்கூவை எதிர்த்தவர்களுக்கு ,விமர்சித்தவர்களுக்கு, வெறுத்தவர்களுக்கு ,குறை சொன்னவர்களுக்கு இந்தத் தொகுப்பில் உள்ள விமர்சனங்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் .ஹைக்கூ விற்கு ஓர் அந்தஸ்துப்  பெற்றுத் தந்துள்ளார்  .ஹைக்கூ எழுதப் பட வேண்டியதே என்கிறார் .ஹைக்கூத்
தமிழுக்கு அவசியம் என்கிறார் .அ
ச்சாக்கத்தையும் ,வடிவமைப்பையும் நன்றாக செய்துள்ளது மின்னல் கலைக்கூடம்  .

ஹைக்கூ ஆற்றுப்படைஎன்னும் இத் தொகுப்பு ஹைக்கூ விமர்சனங்கள் என்று அடையாளப் படுத்தப்  பட்டுள்ளது .  கவிஞர் எவ்விடத்திலும் எந்த ஹைக்கூ வையும் விமர்சனம் செய்ய வில்லை மாறாக வரவேற்றுள்ளார் .வாழ்த்தியுள்ளார் .போற்றியுள்ளார் .புகழ்ந்துள்ளார் .எல்லாவற்றையும் பாராட்டுக் கண்ணாடி யோடே பார்த்துள்ளார் .ஹைக்கூவை வளர்க்க வேண்டும் . ஹைக்கூவாளர்களை க்குவிக்க வேண்டும் என்னும் கவிஞரின் எண்ணமே வெளிப்பட்டுள்ளது .அணிந்துரை  முன்னுரை வழங்கியவர்களையும் பாராட்டி உள்ளார் .விமர்சனத் தொகுப்பான  இத் தொகுப்பில் விமர்சனம் என்பது இல்லை என்பதே  இத் தொகுப்பின்  மீதான விமர்சனம் .முனைவர் இரா .மோகன் முன்னுரையில் குறிப்பிட்டது போல் படைப்பில் குணங்களையே கண்டு வானளாவ போற்றும் பாராட்டு முறைத் திறனாய்வு வகையினையே பின்பற்றியுள்ளார் .ஹைக்கூப்  படை தோற்கின் எப்படி வெல்லும் என்னும் கோசத்தை முன் வைக்கிறது கவிஞர் இரா .இரவியின் ஹைக்கூ ஆற்றுப்படை வெல்ல வாழ்த்துக்கள் .

--

இதழ்கள் தோற்றன . கவிஞர் இரா .இரவி

சனி, 7 ஜூலை, 2012

வருகை பற்றிய அறிவிப்பு.நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வருகை பற்றிய அறிவிப்பு

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    vaduvursivamurali@gmail.com

 விமர்சனம் கவிஞர் இரா .இரவி     eraeravik@gmail.com

விலை ரூபாய் 50
வெளியீடு
இருவாட்சி
41.கல்யாணசுந்தரம் தெரு
பெரம்பூர் .சென்னை  .11 


நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி தமிழாசிரியராக மேல் நிலைப் பள்ளியில் பணி புரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு கவிதைகள் படைப்பது பாராட்டுக்குரிய பணி.  
நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி அவர்களின் முதல் தொகுப்பு நூல். முத்தாய்ப்பான  நூலாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .அட்டைப் படத்தில்  வருகை பற்றி அறிவுக்கும் விதமாக கத்தும் காகம் புகைப்படம் வருகை பற்றிய அறிவிப்பு என்ற தலைப்பிற்கு  பொருத்தம்.நூலை  தந்தைக்கு காணிக்கை
ஆக்கிய விதம் சிறப்பு .தஞ்சாவூர் நா .விச்வநாதன் அணிந்துரை மிக நன்று .
பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .பிரசுரம் செய்த அனைத்து இதழ்களின் பெயரை மறக்காமல் குறிப்பிட்டு நன்றியைப்  பதிவு செய்துள்ளார் .

முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .

எல்லோருக்கும் பெய்யும் மழை !

ஏந்திக் கொள்கிறார்கள் சிலர் .வரமாக
ஏற்றுக்கொள்கிறார்கள் சிலர் .
வேறு வழியின்றி
ஒதுங்கிக் கொள்கிறார்கள் 
சிலர்.
ஒத்துக் கொள்ளாதென
பாறையில் விழுந்து
பயன்படாமலே போகின்றன
சில துளிகள் .
சாக்கடையில் விழுந்து சங்கமமாகின்றன சில .
ஆனாலும் எபோதும்போல
இன்னமும்    
எல்லோருக்குமாகப்
பெய்துகொண்டுதான் 
  இருக்கிறது
மழை
!

திறமை பற்றி எள்ளல் சுவையுடன் வடித்த கவிதை மிக நன்று ரசித்துப் படித்தேன் .

திறமை !
வருடக்கணக்கில் பழகியும்
வாய்க்கவில்லை எனக்கு .
ஒற்றை ரூபாயைப்
பெற்றுக் கொண்டு
மனிதர்களை
எடைபோட்டு விடுகிறது
எந்திரம் .


பகுத்தறிவு பற்றி சிறப்பான கவிதை நூலில் உள்ளது .

முளைக்கும்  விஷம் !

ஈரோட்டுக் களைக்
கொல்லியை
மீறி மீண்டும்    மீண்டும்   
முளைத்துக் கொண்டுதான்
இருக்கின்றன
விஷச்செடிகள்.

ஓரிரு
முள் களைதல் அல்ல
வேரடி மண்ணோடு
ஆணிவேரை
அகழ்தலே
அறிவுடைமை !


முள்வேலியில் வாடும் நம்  உறவுகளுக்காக மிகச் சிறந்த கவிதை கடவுளை பார்த்து கேள்வி கேட்கும் பாணியில் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .கொடுமை கண்டு கொதிப்பவனே உண்மையான படைப்பாளி . நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி உண்மையான படைப்பாளி என்பதை மெய்ப்பிக்கும் கவிதை இதோ !

இதற்கு மேலும் !
கல்லுக்குள் இருக்கும்  தேரைக்கும்
கருவுக்குள் 
இருக்கும் சிசுவுக்கும்
உணவளிப்பதாய்ச் சொல்லப்படுபவனே !
முள்வேலிக்குள் இருப்பவர்களை
உனக்குத் தெரியா
தா ?
ஒவ்வொரு தானியமணியிலும்
உண்பவர் பெயரை
எழுதுபவனே !
இவர்கள் பெயர் எழுதுகையில்
உன் பேனா மை
தீர்ந்துவிட்டதா ?
ஏழையின்  சிரிப்பில்     
இருப்பாயாமே
நாங்கள் கண்டதில்லை
மனித மிருகத்துடன்
கைகுலுக்கிச்
சிரிப்பவர்கள் முகங்களில்தான்
குரூ
ரமாய்க் காட்சியளிக்கிறாய் நீ .
அறியாமல் செய்கிறவர்களை
மன்னிப்பவனே
அறிந்தே செய்பவர்களை
என்ன செய்யப் போகிறாய் ?
அநியாயம்
நடக்கும் போதெல்லாம்
அவதாரம் செய்பவனே !
இதற்குமேலும்
என்ன நடக்கவேண்டுமென
எதிர்பார்க்கிறாய் நீ ?
  

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி  கவிதை உலகிற்கு தன் வருகை பற்றிய அறிவிப்பு செய்யும் விதமாக இந்த நூல் வந்துள்ளது .உள்ளத்தில் உள்ளது கவிதை .உள்ளத்து உணர்வு கவிதை .உண்மை கவிதை என்று பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .

முரண் !
ஒவ்வொரு ஊரிலும்
தென்படவே செய்கிறது
மாடி வீடுகளுக்கு
நடுவே
ஒரு குடிசை
அல்லது
குடிசைகளுக்கு
நடுவே
ஒற்றை மாடி வீடு .


அரசியல் பற்றி நாட்டு நடப்பு  பற்றி தேர்தல் பற்றி மிக நுட்பமாக சிறு கவிதை மூலம் சிந்திக்க வைக்கிறார்.  
தேர்தல் காற்று !
நேற்று  வீசிய
தேர்தல் காற்றில்
குப்பைகள் எல்லாம்
கோபுர உச்சியில்
அடுத்த காற்றுக்குக்
காத்திருந்தோம்
இப்போது
வேறு 
குப்பைகள் .

புற்று நோய் வரவழைக்கும் சிகரெட் பற்றி சிந்திக்க வைக்கும் கவிதை இதோ !

சிகரெட் !
தொட்டவனைத்
தொலைத்துவிடத்
தன்னையே
எரித்துக் கொள்கிகிறது
இந்தத் 
தற்கொலைப்படை !    


 நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி  அவர்கள் தான் கண்ட உணர்ந்த அனுபவங்களை கவிதையாகி வாசகர்களை சிந்திக்க வைத்துள்ளார் .முதல் நூலோடு பலர் நின்று விடுகின்றனர் .தொடர்ந்து எழுதி அடுத்த அடுத்த நூல்களை வெளியிட வேண்டும் .பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .


செவ்வாய், 3 ஜூலை, 2012

தாஜ்மகால் ! கண்டவர் கவலைகள் காணாமல் போகும் கவிஞர் இரா .இரவி

தாஜ்மகால் ! கண்டவர் கவலைகள்  காணாமல் போகும்    கவிஞர் இரா .இரவி

இந்தியாவில் உள்ள உலக அதிசயம்
இந்தியா வருவோர் பார்க்கும்  அதிசயம்

பளிங்கி கற்களால் ஆன மாளிகை
பார்ப்பவர்களுக்கு பிறக்கும் உவகை 

காதலர்கள் செல்ல விரும்பும் இடம்
காதலர்கள் பரிசளிக்கும் பொருள்

பிரமாதம் பிரமாண்டம் பிரமிப்பு
பார்த்தவர்கள் பிரமிக்கும் வனப்பு    

இது போல் ஒரு மாளிகை
இந்த உலகில்
எங்கும் இல்லை

இது போல் மாளிகை யாராலும் 
இனி யாராலும் எழுப்ப முடியாது 

ஷாஜகான் உயிரோடு இல்லை
மும்தாஜ் உயிரோடு இல்லை

அவர்களின் காதல் சின்னம் வாழ்கின்றது
அனைத்து காதலர்களின் உள்ளங்களில் 


புகைப்படத்தில்  திரைப்படத்தில்
பார்த்தாலே பிரமிக்கும் விழிகள்

நேரில் பார்த்தால் அடையும் பரவசம்
வார்த்தைகளில் வடிக்க இயலாது

காதல் சின்னத்தை எல்லோரும்
கட்டாயம் சென்று பாருங்கள்

பார்த்தவர்கள் உள்ளம் பறிப்போகும்     

கண்டவர் கவலைகள்  காணாமல் போகும்நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

ஞாயிறு, 1 ஜூலை, 2012

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                கவிஞர் இரா .இரவி

மூலதனமின்றி  
அமோக லாபம்
சாமியார் !

மூளைச்சலவையால்
மூளைஆக்கிரமிப்பு  
சாமியார் !

பொருளுக்கு விற்பனை
ஆன்மிக அருளுரை
சாமியார் !

பாவிகளின் புகலிடம்
காவிஅணியும்
சாமியார் !

உதட்டில் ஆன்மிகம்
உள்ளத்தில் காமம்
சாமியார் !

மோட்சம் தருவதாக
மோசடி செய்பவர்
சாமியார் !

வித்தைக் காட்டி
கத்தையாகப் பணம் சேர்ப்பு
சாமியார் !


நினைவூட்டியும்  
மறந்து விடுகின்றனர்
பகுத்தறிவை !

துருப்பிடித்தது
பயன் படுத்தா
தால்
பகுத்தறிவு !


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                கவிஞர் இரா .இரவி

சிறந்தது
கடவுளைத்  தொழுவதை  விட
பிறர் கண்ணீர் நிறுத்துவது !

போட்டிப் போட்டு
பண்பாடு சிதைப்பு
ஊடகங்கள் !

கிராமத்தில் குற்றம்
நகரத்தில் விருது
ஆபாச நடனம் !

இறந்த பின்னும்
இறக்காமல் வாழ்கின்றது
செய்த தொண்டு !

புசிக்க மறந்தேன்
ரசிக்க   ரசிக்க 
இயற்கை அழகு !

கூடல் அங்கீகாரம்
ஊர்
கூடி
திருமணம் !

விண்ணில் அல்ல
மண்ணில் சொர்க்கம்
உணர்த்தியது பெண்மை !

என்று மாறும்
கோடிகள் பெறும் நடிகர்கள்
கொடிகள் கட்டும் ரசிகர்கள் !


தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது